30 Sept 2025

பைபிளின் வரலாறு, புராட்டஸ்டண்ட் பைப்பிள் , பதிப்பு வகைகள் !

 பைபிளின் வரலாறு

1500 ஆண்டுகளாக, பைபிளின் 66 புத்தகங்கள் 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு சுமார் 330 ஆண்டுகள் முன் முடிக்கப்பட்டது. புதிய ஏற்பாடு இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஆரம்பக் கிறிஸ்தவ சபையை மையமாகக் கொண்டது. இது கி.பி. 90-ம் ஆண்டில் முடிவடைந்தது.

இன்று காணப்படும் பைபிளின் அமைப்பு கி.பி. 400-ம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு ஆங்கிலத்தில் கிடைக்க ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்த பின் தான் சாத்தியமானது. நூற்றாண்டுகளாக பைபிள்கள் அனைத்தும் லத்தீன் மொழியில் கையெழுத்துப் பிரதிகளாக மட்டுமே இருந்தன. ஆனால் 15-ம் நூற்றாண்டில் அச்சுக்கலை கண்டுபிடிப்பு மற்றும் பைபிளை பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் ஆர்வம் அனைத்தையும் மாற்றியது.
கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான புத்தகம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் பலரால் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விருப்பம் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட முதல் புதிய ஏற்பாட்டுப் பிரதியை தயாரித்த #வில்லியம் டிண்டேல், தன் பணிக்காகவே கொலை செய்யப்பட்டார். பலர் பைபிளைத் தடைசெய்யப்பட்ட நாடுகளில் கடத்திச் சென்றதற்காக #சிறைச் தண்டனையை சந்தித்தனர்.


பழைய ஏற்பாட்டின் வரலாறு
பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள் யூத மதத்தின் அடித்தளம் கொண்டது. இவற்றின் பிரதான எழுத்தாளர் மோசே என்று கருதப்படுகிறது. அவர் யூதர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்தி வந்த தலைவராக இருந்தார். அவரே தேவன் வழங்கிய சட்டங்களையும் (பத்துக் கட்டளைகள் உட்பட) எழுதிக் கொடுத்தார் என நம்பப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் பின்னர் வரும் யோசுவா புத்தகம் “மோசேயின் நியாயப்பிரமாணப் புத்தகம்” என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. தலைமுறைகள் கடந்து வாய்மொழியாக வந்த கதைகளும் பின்னர் எழுதி, பைபிளின் முதல் அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்கள் நூற்றாண்டுகள் கடந்த பின்னரே எழுதப்பட்டன.
வரலாற்றுச் சம்பவங்கள் மட்டுமின்றி கவிதைகள், பாடல்கள், நீதிமொழிகள், தீர்க்கதரிசனங்களும் இடம் பெற்றன. ஆசிரியர்கள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மிருகத்தோல்களில் மை கொண்டு எழுதினர். அவை சுருட்டுப் பிரதிகளாகச் சேமிக்கப்பட்டன. காலப்போக்கில் சுருட்டுகள் சேதமடைந்ததால், எழுத்தர்கள் (சிரைப்பர்கள்) அவற்றின் பிரதிகளை மிகச்சரியாக நகலெடுத்து பாதுகாத்தனர்.

யூதர்கள் பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பின், #எழ்ரா என்ற யூதத் தலைவர் இவ்வனைத்தையும் தொகுத்ததாக நம்பப்படுகிறது. நூற்றாண்டுகளாக பழைய ஏற்பாட்டின் பழமையான பிரதிகள் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக மட்டுமே இருந்தன. ஆனால் 1947-இல், இறந்த கடலின் வடக்குப் பகுதியில் கும்ரான் குகைகளில் நூற்றுக்கணக்கான தோல்சுருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கி.மு. 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என சொல்லப்பட்டன. சில முழு பிரதிகளும் இருந்தன. அவை பின்னர் வந்த பிரதிகளுடன் ஒப்பிடுகையில் பெரிதாக வேறுபாடு இல்லை என்பதால், பிரதிகள் மிகத் துல்லியமாக நகலெடுக்கப்பட்டதாக அறிஞர்கள் கூறினர்.

#புதிய ஏற்பாட்டின் வரலாறு
பைபிளின் கடைசி 27 புத்தகங்கள் புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன. இவை குறுகிய காலத்திலேயே, குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. முதல் புத்தகம் கி.பி. 50-இல் தொடங்கப்பட்டு, கடைசி கி.பி. 90-இல் முடிவடைந்தது. இன்றைய நான்கு நற்செய்திகளே அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட வேண்டும் என்ற ஒற்றுமை உருவானது. கி.பி. 2-ம் நூற்றாண்டில், நற்செய்திகள், அப்போஸ்தலர் செயல்கள், பவுலின் 13 கடிதங்கள் அனைத்தும் கிறிஸ்தவ சபைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.


பின்னர் பிற எழுத்துக்களும் வேதாகமப் புத்தகப்பட்டியலில் சேர்க்கப்படுவதற்காகக் கருதப்பட்டன. சுமார் கி.பி. 200-இல் புத்தகப் பட்டியல் உருவானது. கி.பி. 400-ம் ஆண்டளவில் சபைக் கூட்டங்களில் அது உறுதி செய்யப்பட்டது. அப்போது சுருட்டுகளை விட புத்தக வடிவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதால், 27 புத்தகங்களும் பழைய ஏற்பாட்டுடன் இணைக்கப்பட்டன.

1066-ம் ஆண்டு நோர்மன் படையெடுப்புக்கு முன்பே மிஷனரிகள், இன்றைய இங்கிலாந்து எனப்படும் பகுதிக்கு கிறிஸ்தவத்தை கொண்டு வந்தனர். ஆனால் பைபிள்கள் அனைத்தும் லத்தீன் மொழியிலேயே கையெழுத்துப் பிரதிகளாக இருந்ததால், கல்வியுள்ளவர்களுக்கே மட்டுமே அவை கிடைத்தன. வடக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த #பீடு என்ற துறவி, 7-ம் நூற்றாண்டில் முதன் முதலாக யோவான் நற்செய்தியை பழைய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலத்தில் முழுமையான முதல் பைபிளை, 14-ம் நூற்றாண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆசானான #ஜான் விக்லிஃப் தயாரித்தார். இது அதிகாரிகளுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியது. #1408-இல் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு, #அனுமதி இல்லாமல் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதும், வைத்திருப்பதும் தடைசெய்யப்பட்டது.

அச்சுக்கலையின் கண்டுபிடிப்பு ஒரு பெரிய திருப்புமுனையானது. #வில்லியம் டிண்டேல் ஆங்கிலத்தில் பைபிளைத் தயாரிக்க உறுதியெடுத்தார். ஆனால் இங்கிலாந்தின் கட்டுப்பாடுகள் காரணமாக அவர் ஜெர்மனியில் அச்சிட்டு, பைபிள்களைத் துணிப்பொதிகளில் மறைத்து இங்கிலாந்திற்குக் கடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு #கொலை செய்யப்பட்டார்.

#ஹென்றி எட்டாம் மற்றும் #கிங் ஜேம்ஸ் பைபிள். #ஹென்றி எட்டாம் ஆட்சிக்காலத்தில், இங்கிலாந்தில் ஆங்கிலப் பைபிள்களை அச்சிட அனுமதி வழங்கப்பட்டது. #1538-இல் அவர் ஒவ்வொரு சபைக்கும் முழு பைபிள் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். 1603-இல் #ஜேம்ஸ் முதல் மன்னராக ஆன பிறகு, புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 50 அறிஞர்கள் அதில் ஈடுபட்டனர். அதன் விளைவாக அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு – அல்லது கிங் ஜேம்ஸ் பதிப்பு உருவானது. இது இன்றும் கிடைக்கிறது; மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது.

இப்போது பைபிளின் பல பதிப்புகள் உள்ளன. அறிஞர்கள் பழைய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு மிகத் துல்லியமான மொழிபெயர்ப்புகளை உருவாக்கியுள்ளனர். சில புதிய பதிப்புகள் இன்றைய எளிய மொழிநடையிலும் தயாரித்துள்ளது. #பைபிள் தற்போது 2500-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் தாய்மொழியில் பைபிளைப் படிக்கின்றனர். இணையத்தில் பல பதிப்புகளும், பதிவிறக்கக்கூடிய ஒலி வடிவங்களும் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் மட்டும் 450-க்கும் அதிகமான பைபிள் பதிப்புகள் உள்ளன.


கத்தோலிக்கரும் #புராட்டஸ்டண்ட்களும் பயன்படுத்தும் புனித நூல் பைப்பிள் எவ்வாறாக வேறுபடுகிறது!

ஏன் கத்தோலிக்க வேதாகமத்தில் அதிக நூல்கள் உள்ளன?
இது, பைபிளின் வரலாற்றில் அதிக ஆர்வத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் கேள்விகளில் ஒன்றாகும். #கத்தோலிக்க வேதாகமத்தில் அதிக நூல்கள் உள்ளன, #புராட்டஸ்டண்ட் வேதாகமத்தில் இல்லை,என்பதற்கான விடையைப் புரிந்துகொள்ள, #கேனோன் வரலாறையும், #நூல்களின் இடத்தைப் பற்றிய ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் அணுகுமுறையைஅறிய வேண்டும்.

இருவரும் தங்கள் போதனைகளுக்கான பைபிளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் வேதாகமத் தொகுப்புகள் வேறுபடுகின்றன. புதிய ஏற்பாட்டு 27 நூல்களை கத்தோலிக்கரும் புராட்டஸ்டண்ட்களும் ஒரே போலவே பயன்படுத்திகிறார்கள். ஆனால் வேறுபாடு, பழைய ஏற்பாட்டில் கொண்டுள்ளனர்.

#கத்தோலிக்க பைபிள் 73 நூல்கள் அடங்கியவை. #புராட்டஸ்டண்ட் பைபிள் 66 நூல்கள் மட்டுமே உள்ளன. அதாவது, கத்தோலிக்கர்களிடம் 7 கூடுதல் நூல்கள் உள்ளன:
#சிராக்/எக்ளீசியாஸ்டிகஸ், #1–2 மக்கபேயர், பரூக், மேலும் #தானியேல்,
எஸ்தர் ஆகியவை நூல்களில் கூடுதல் பகுதிகள் ஆகும்.


புராட்டஸ்டண்ட்கள் இவற்றை “ஆப்போகிரஃபா” என்று அழைக்கின்றனர். கத்தோலிக்கர்கள் “Deuterocanon” என்று அழைக்கின்றனர். இங்கு Deuterocanon என்றால் அதிகாரத்தில் இரண்டாம் நிலை அல்ல, வரலாற்றில் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே.

கேனோன் வரலாறு
உண்மையில், கிறிஸ்தவக் காலத்தின் தொடக்கத்திலிருந்து 16-ம் நூற்றாண்டு வரை, பழைய ஏற்பாட்டு #கேனோன் குறித்த வரலாறு மிகவும் சிக்கலானது. #ஆரம்ப கிறிஸ்தவ வரலாறு (100–400 AD) “பழைய ஏற்பாடு எது?” என்ற கேள்விக்கு ஆரம்ப கிறிஸ்தவர்கள் வெவ்வேறு பதில்கள் அளித்தனர்.

இயேசுவும் அப்போஸ்தலர்களும் கேனோன் பட்டியலைக் கொடுக்கவில்லை. நான்காம் நூற்றாண்டின் முழுமையான கிரேக்க பைபிள் கோடிஸ்கள் (Vaticanus, Sinaiticus, Alexandrinus) பல Deuterocanonical நூல்களையும் மற்ற நூல்களோடு சேர்த்து வைத்திருந்தன. இதனால், அவை பழைய ஏற்பாட்டு நூல்களோடு ஒருங்கிணைந்த நிலையில் இருந்தன.

நான்காம் நூற்றாண்டின் கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு கேனோன் குறித்து விதிமுறைகளில் ஒன்றுபட்டிருக்கவில்லை. சிலர், #எபிரேய வேதாகம கேனோன் அடிப்படையில் தங்கள் கேனோனைத் தீர்மானித்தனர். மற்றவர்கள், #தேவாலயங்களில் பொதுவாக வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்களைப் பொறுத்தே கிறிஸ்தவ பழைய ஏற்பாட்டை நிர்ணயித்தனர்.

இருவரும் எபிரேய கேனோனை ஏற்றுக்கொண்டாலும், Deuterocanonical நூல்களின் நிலைமையில் வேறுபாடு ஏற்பட்டது. சிலர் அவற்றை படித்து நன்மை பெறும் இரண்டாம் நிலை என்பதற்குள் வைத்தார்கள். மற்றவர்கள் அவற்றை நேரடியாகவே மற்ற கேனோன் நூல்களோடு இணைத்தார்கள். இந்த விவகாரம் திருத்தந்தை #டிரெண்ட் பேரவையின் (1546) காலத்திலும், #மறுமலர்ச்சி (Reformation) காலத்திலும் தொடர்ந்தது.

1445-ம் ஆண்டு நடந்த #ஃப்ளாரன்ஸ் பேரவை (Council of Florence), Deuterocanonical நூல்களையும் உள்ளடக்கிய பழைய ஏற்பாட்டு பட்டியலைக் கொடுத்தது. ஆனால் அதற்கு அடிப்படைமான #கொள்கைத் தீர்மானம் (dogmatic definition) இருக்கவில்லை. இதனால், டிரெண்ட் பேரவைக்கு முன்பும், கத்தோலிக்கர்களுக்குள் பழைய ஏற்பாட்டு கேனோன் குறித்து விவாதங்கள் இருந்தன.

உதாரணமாக, #கார்டினல் சிமெனஸ் (Grand Inquisitor), மற்றும் #கார்டினல் காயேட்டன் (1518-ல் லூத்தரின் போதனைகளை ஆய்வு செய்தவர். பிரபல கத்தோலிக்க அறிஞர் #எராசுமஸ், இவர்கள் அனைவரும், பழைய ஏற்பாட்டின் உள்ளடக்கம் குறித்தும், கேனோன் நூல்கள் மற்றும் படிப்பதற்குப் பயனுள்ள Deuterocanonical நூல்கள் குறித்த வேறுபாடு பற்றியும் ஆரம்ப கால புராட்டஸ்டண்ட்களுடன் ஒத்துப்போனவர்கள் ஆவர்.

ஆனால், மற்ற சில கத்தோலிக்க தத்துவஞானிகள், #போப் இன்னொசென்ட், #போப் யூஜீனியஸ், மற்றும் #ஃப்ளாரன்ஸ் பேரவை போன்றவர்கள் Deuterocanonical நூல்களை கேனோனில் சேர்த்தே ஆன வேண்டும் என நம்பினர். 1546-ல் டிரெண்ட் பேரவை , ஃப்ளாரன்ஸ் பேரவை வெளியிட்ட பட்டியலை அச்சிட்டு வெளியிட முடிவு செய்தது. ஆனால் அவர்கள் அகஸ்டீன் மற்றும் ஜெரோம் இடையிலான கேனோன் விவாதத்தை முடித்துவிடுவதாக நினைக்கவில்லை. அந்நேரத்தில், மனிதவாதிகள், புராட்டஸ்டண்ட்கள், மற்றும் கத்தோலிக்கர்கள் இடையே இந்த விவாதம் உயிரோடு இருந்தது.

ரோமர் 3:2-இல் பவுல், “யூதருக்கே தேவனுடைய வசனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று கூறியது, ஆரம்ப கால கிறிஸ்தவர்களை, “சபையின் பழைய ஏற்பாட்டு கேனோன், யூதரின் கேனோனோடு பொருந்த வேண்டும்” என்று முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இதனால், மெலிட்டோ ஆஃப் சார்டிஸ், ஒரிஜன், சிரில் ஆஃப் ஜெருசலேம், அதனாசியஸ் ஆஃப் அலெக்சாண்ட்ரியா, கிரிகொரி ஆஃப் நாசியான்சஸ் ஆகியோரின் பட்டியல்கள் (2-ம், 3-ம், 4-ம் நூற்றாண்டு) பெரும்பாலும் Deuterocanonical நூல்களைத் தவிர்த்தன. சில சமயங்களில் பரூக் மட்டும், எரேமியாவின் ஓர் பகுதியாகக் கொண்டிருந்தது.

இவர்கள் Deuterocanonical நூல்களை முற்றிலும் நிராகரிக்கவில்லை. அவற்றை விசுவாசிகளுக்குப் பயனுள்ள வாசிப்புக்கு ஏற்றதாகக் கருதினர்; ஆனால் போதனைக்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக கருதவில்லை. அதாவது, முதல் நிலை கேனோன் நூல்கள் #சபையின் போதனைகளை நிறுவின; இரண்டாம் நிலை நூல்கள் #விசுவாசிகளுக்குப் பக்தியை வளர்த்தன. இது இன்று பெரும்பாலும் மறந்து போகும் முக்கிய வேறுபாடு ஆகும்.



#பைபிளின் பதிப்பு வகைகள் ?
#பைபிளின் பதிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் 450-க்கும் மேற்பட்ட பைபிள் பதிப்புகள் உள்ளன. பைபிள் என்பது ஒரே ஒரு புத்தகம் அல்ல, மாறாக குறைந்தது 66 புத்தகங்கள் , ரோமன் கத்தோலிக்க பைபிள்களில் பிரொட்டஸ்டன்கள் ஏற்றுக்கொள்ளாத மேலும் ஏழு புத்தகங்கள் சேர்த்து இணைக்கப் பட்டு உள்ளன .

பைபிளில் உள்ள ஒவ்வொரு உரைக்கும் பல தொன்மையான கையெழுத்து பிரதிகள் உள்ளன; கிடைத்துள்ள கையெழுத்துகள் சுமார் 98% ஒரே மாதிரி உள்ளன என்று கூறலாம். #முழு பைபிளும் 700-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; அதில் #சில பகுதிகள் 3,000-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சில மொழிகளில் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே இருக்கும்; சிலவற்றில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன.

பழமையான உரைகளில் பெரும்பாலனவை, யூதர்களின் மறைநூல்கள் ஆகும். ஆரம்பத்தில் இஸ்ரவேலியர்களின் சொந்த மொழியான எபிரேய மொழியில் எழுதப்பட்டவை . பழைய எபிரேயத்தில் உயிரெழுத்துகள் இல்லை; அது வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக எழுதப்பட்டது; மேலும் “நிக்கூத்” எனப்படும் சில குறியீடுகள் (diacritics) ஒரு சொல்லின் அர்த்தத்தை தெளிவுபடுத்த பயன்படுத்தப்பட்டன.

பழைய எபிரேயம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. ஆனால் பாபிலோனிலிருந்து (கி.மு. 583) திரும்பிய பின், அது யூதர்களின் பிரதான பேசுமொழியாக இல்லை. Hebrew-க்கு அருகாமை கொண்ட ஒரு மெடிடெரேனிய மொழியான #அராமியம் அவர்களின் பிரதான மொழியாகியது. பழைய ஏற்பாட்டின் சில பகுதிகள் அராமியத்தில் எழுதப்பட்டுள்ளன.

#முதல் நூற்றாண்டில், அராமியம் சாதாரண மொழியாக இருந்தது; இயேசுவும் அவருடைய சீடர்களும் அதையே பேசியிருக்கலாம். ஆனால் புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும், இயேசுவின் வாழ்வும் மரணமும் முடிந்த பின், கிழக்கு ரோம பேரரசின் பொதுமொழியாக இருந்த #கொய்னே கிரேக்கத்தில் எழுதப்பட்டன. #எபிரேயம் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதால், பல யூதர்கள் தங்கள் சொந்த மறைநூல்களைக் கூடப் படிக்க முடியவில்லை.

ஆகவே, கி.மு. 3ஆம் நூற்றாண்டில், யூத அறிஞர்கள் எபிரேய மறைநூல்களை # கிரேக்கத்தை #கொய்னே மொழியில் மொழிபெயர்த்தனர். இது, #செப்டூஅஜின்ட் உரை என அழைக்கப்பட்டது. #செப்டூஅஜின்ட் தான் ஆரம்ப கிறிஸ்தவ சமுதாயங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பழைய ஏற்பாடு.
இதன் அடிப்படையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்கர் மறைநூல்களை #லத்தீனில் மொழிபெயர்த்தனர். இன்றைய கத்தோலிக்க பைபிள்கள் அனைத்தும் செப்டூஅஜின்ட் அடிப்படையிலானவை. ஆனால் #பிரொட்டஸ்டன்கள் பழைய எபிரேய உரைகளையே பின்பற்றினர். ஆனால் இருவரும் புதிய ஏற்பாட்டுக்கான அதே கிரேக்க உரைகளைப் பயன்படுத்துகின்றனர்.

#மொழிபெயர்ப்பின் சிக்கல்கள்
ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது எளிதல்ல. ஒரு மொழிபெயர்ப்பாளர் வார்த்தை வார்த்தையாக நேரடி மொழிபெயர்ப்பைச் செய்யலாம். இது மூல எழுத்தாளரின் சொற்களை மிகவும் நெருக்கமாகக் காக்கும். ஆனால், இது சிலபோது அசிங்கமாகவும் சிக்கலாகவும் இருக்கும்; சில நேரங்களில், அசல் அர்த்தத்திற்குப் புறம்பான பொருளையும் தரக்கூடும்.
மற்றொரு வழி, எழுத்தாளரின் உண்மையான நோக்கத்தை எடுத்துரைப்பது. அந்த மொழியையும், எழுத்தாளரின் சிந்தனையையும், உரையின் ஓட்டத்தையும் ஆழமாக ஆய்ந்து, இன்றைய வாசகர்களுக்குப் பொருந்துமாறு மாற்றுவது. #இது சொற்களை விட அர்த்தத்தை முக்கியமாகக் கருதும் முறை.
சில மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டு, #வாசிப்புக்கு ஏற்ற மாதிரி, நவீன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, பைபிளில் உள்ள “தாலந்த்” என்பதை “டாலர்” என்று மொழிபெயர்ப்பது. இத்தகைய மொழிபெயர்ப்புகள் நேரடி அல்ல; அவை சீரிய ஆய்வுக்கு பொருந்தாது. ஆனால் அவை எளிதில் வாசிக்கக்கூடியவையாக இருக்கும்.
சிலவை “ மறுவிளக்கம்பராபிரேஸ் மட்டுமே; அதில் மொழிபெயர்ப்பாளரின் தனிப்பட்ட பாரபட்சங்களும் கலாச்சாரங்களும் கலந்து இருக்கும்.
பல புதிய வாசகர்கள் இப்படியான பிரபல பராபிரேஸ் பதிப்புகளிலிருந்து தொடங்கி, பிறகு துல்லியமான மொழிபெயர்ப்புகளுக்குச் செல்வார்கள். பைபிள் பதிப்புகள், மொழிபெயர்ப்புகள், மற்றும் வேரியன்ட்கள்

YouVersion எனப்படும் பிரபலமான ஒரு செயலியில் 67 ஆங்கில பைபிள் பதிப்புகள் உள்ளன. ஒரு வசனத்தை The Message (நவீன பைபிள்) மூலம் படித்துவிட்டு, உடனே அதே வசனத்தை King James Version, American Standard Version, அல்லது Good News Translation வழியாக ஒப்பிட்டு பார்க்கலாம்.
பல்வேறு வாசகர்கள் அவர்களை தேவனிடம் கொண்டு செல்லும் மொழிபெயர்ப்புகளை விரும்புகிறார்கள்; அது பிரபலமானதா, எளிதானதா என்பது முக்கியமில்லை.
மேலும், “பதிப்புகள்” மற்றும் “மொழிபெயர்ப்புகள்” வேறுபட்டவை. பல பதிப்பகங்கள் ஒரே மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு, அதில் விளக்கங்கள், பிரார்த்தனை உதவிகள், வரைபடங்கள், படங்கள், சுருக்கங்கள், டைரி எழுத இடம் போன்றவற்றைச் சேர்த்து வேரியன்ட்களை வெளியிடுகின்றன.
உதாரணமாக, New International Version (NIV) பைபிள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பல்வேறு வாசகர்களுக்காக பல பதிப்புகளை வழங்குகிறது. ஆனால் அவற்றின் பைபிள் உரை ஒரே மாதிரியாகவே இருக்கும்; கூடுதல் உள்ளடக்கம் மட்டுமே மாறும்.

24 Sept 2025

வில்லியம் டிண்டேல் (William Tyndale):ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை

ஆரம்பக் கிறிஸ்தவ சபைக்கு எபிரேய வேதாகமமே ஒரே வேதாகமமாக இருந்தது.  கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் கிரேக்க மொழி ஆதிக்கம் செலுத்தும் lingua franca  சர்வதேச தொடர்பு மொழி ஆனது. அந்நேரத்தில் யூத பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை கிரேக்கத்திற்குத் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கினர். அந்தப் பணி நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது.  இஸ்ரவேலரின்  பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து தலா ஆறு பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர் என நம்பப்படுகிறது.  

யூத வேதாகமத்தின் கிரேக்க மொழி பதிப்பு பின்னாளில் செப்துவஜிண்ட் (Septuagint ) லத்தீன் மொழியில் செப்டுவஜிண்டா, அதாவது "70" என்று அழைக்கப்பட்டது. கிரேக்க மொழி உலகில் பரவ ஆரம்பித்த போது  புதிய மதத்தவரான கிறிஸ்தவர்கள் செப்துவஜிண்டை ஏற்றுக்கொண்டனர். அதே சமயத்தில் கிறிஸ்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாடு நூல்களில் பல  கிரேக்கத்தில் எழுதப்பட்டு இருந்தன.  சிலவை அராமியத்திலும் எழுதப்பட்டு இருந்தன.

கிறிஸ்தவம் விரைவில் பரவியதால், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை காப்டிக், எத்தியோப்பிய, கோத்திக், மேலும் முக்கியமாக லத்தீன் மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கி.பி. 405 ஆம் ஆண்டு, புனித ஜெரோம் (St. Jerome) செப்துவஜிண்டை ஒரு பகுதியாகக் கொண்டு லத்தீன் மொழிபெயர்ப்பை முடித்தார்.  இது வல்கேட் (Vulgate) என அழைக்கப்பட்டது. ஒருசில பிழைகள் இருந்தாலும், மேற்கு கிறிஸ்தவ உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அது நிலையான பதிப்பாக இருந்து வந்தது.


கி.பி. 6ஆம் நூற்றாண்டில், பாலஸ்தீனமும் பாபிலோனியாவிலும் இருந்த தால்மூது பாடசாலைகளின் எபிரேய பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை மீட்டெடுத்து முறையாக ஒருங்கிணைக்கத் தொடங்கினர். பல நூற்றாண்டுகள் கடின உழைப்பின் பின் உருவான மசோரெடிக் உரை (Masoretic Text), கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. பின்னர் அது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படும் வரை, மசோரெடிக் உரை  நம்பகத்தன்மையுடனும் பண்டிதர்களால் கையெழுத்துப் பிரதிகளாக பரவியது.

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உருவான புதிய கல்வி இயக்கம், பண்டைய கிரேக்க மொழி ஆய்வை மீண்டும் உயிர்ப்பித்தது.  இதனால் புதிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. 

முக்கியமானதாக, நெதர்லாந்து மனிதநேய அறிஞர் டெசிடீரியஸ் எராஸ்மஸ் (Desiderius Erasmus) 1516-ல் கிரேக்க உரையும் தன் சொந்த லத்தீன் மொழிபெயர்ப்பும் அடங்கிய புதிய ஏற்பாட்டு பதிப்பை வெளியிட்டார். 

முழுமையான முதல் ஆங்கில வேதாகமம் 1382-இல் வெளியானது. இது ஜான் வைக்ளிஃப் (John Wycliffe) மற்றும் அவருடைய சீடர்களால் செய்யப்பட்டது எனக் கருதப்படுகிறது.  ஜெரோமின் வல்கேட், சிரியக், அரபிக், ஸ்பானிஷ், மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்புகளுக்கான அடிப்படையாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவான டுவாய்-ரெயிம்ஸ் வேதாகமம் (Douai–Rheims Bible) (புதிய ஏற்பாடு 1582; பழைய ஏற்பாடு 1609–10) 20ஆம் நூற்றாண்டு வரையிலும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வேதாகமமாக இருந்து வந்தது.

மறுசீர்திருத்தம் (Reformation)

மறுசீர்திருத்தம் (Reformation) என்பது 16ஆம் நூற்றாண்டில் மேற்கு தேவாலயத்தில் நிகழ்ந்த மதப் புரட்சி ஆகும். இதன் தலைசிறந்த முன்னோடிகள் மார்ட்டின் லூத்தர் (Martin Luther) மற்றும் ஜான் கல்வின் (John Calvin) ஆவார்கள். மிகப் பெரிய அரசியல், பொருளாதார, சமூக விளைவுகளை ஏற்படுத்திய இந்த மறுசீர்திருத்தம், கிறிஸ்தவத்தின் முக்கிய கிளைகளில் ஒன்றான பிராட்டஸ்டண்டிசத்தின் (Protestantism) அடிப்படையாக அமைந்தது.

16ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக்காரர்கள் தோன்றிய காலத்தில், நூற்றாண்டுகளாக, ரோமன் கத்தோலிக்க தேவாலயம்  குறிப்பாக போப்பரசரின் அலுவலகம் மேற்கத்திய ஐரோப்பாவின் அரசியல் வாழ்வில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட சதி முயற்சிகளும் அரசியல் சூழ்ச்சிகளும், தேவாலயத்தின் அதிகரித்த அதிகாரமும் செல்வமும் சேர்ந்து, அதனை ஆன்மீக ஆற்றலற்ற ஒன்றாக மாற்றின என்றுமட்டுமல்ல சபை மிகவும் சிக்கலான நிலையிலிருந்தது.

சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு பாதிரியார்கள் விற்கும் indulgences ஆன்மீக சலுகைகள் அல்லது பாவ மன்னிப்புச் சீட்டுகள்  போன்ற தவறான பழக்கவழக்கங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இணைந்து தேவாலயத்தின் ஆன்மீக ஆட்சியைத் தளர்த்தின. இருப்பினும்    பெரும்பாலான மக்களுக்குப் தேவாலயம் ஆன்மீக ஆறுதலை வழங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பாதிரியர்களுக்கு எதிரான மனநிலை இருந்தாலும், மொத்தத்தில்,  தேவாலயத்தில்  மக்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்து இருந்தனர், ஆனால், எதிர்ப்பாளர்களின் தாக்கத்தில் இவை அதிகப்படுத்தப்பட்டு பேசப்பட்டும் கொண்டிருந்தன என்றும் ஒரு குழுவினர் நம்பினர். அரசியல் அதிகாரிகள் தேவாலயத்தின்  செயல்பாடுகளை கட்டுப்படுத்த முயன்றது. அரசிற்கும் சபைக்குமிடையில் பதற்றத்தை உருவாக்கியது. 


இதற்கிடையில், ஜெர்மனியில் மார்ட்டின் லூத்தர், கிரேக்க மற்றும் எபிரேய அசல் உரைகளிலிருந்து முழுமையான வேதாகமத்தை ஜெர்மன்  மொழிக்கு மொழிபெயர்த்தார். அவரது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாடு 1522-ல், முழு வேதாகமம் 1534-ல் வெளிவந்தது. இது ஜெர்மன் பிராட்டஸ்டண்டுகளுக்கான அதிகாரப்பூர்வ வேதாகமமாக இருந்ததோடு, டானிஷ், சுவீடிஷ் மற்றும் பிற மொழிகளுக்கான அடிப்படையாகவும் அமைந்தது.

1611-இல் வெளியான கிங் ஜேம்ஸ் பதிப்பில் (King James Version  இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு என அழைக்கப்பட்டது இது கிங் ஜேம்ஸ் I நியமித்த 54 அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. சொற்சொற் பொருள் மட்டுமல்லாமல், பல மரியாதைச் சொற்களையும் பயன்படுத்தியதால், அது ஜேக்கோபியன் ஆங்கிலத்தின் சிறந்த படைப்பாகும். 270 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலம் பேசும் பிராட்டஸ்டண்டுகளின் முக்கிய வேதாகமமாக இருந்து வந்தது.


வில்லியம் டிண்டேல் (William Tyndale) கி.பி. 1494 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் கிளாஸ்டர்ஷயர் அருகே பிறந்தார் .  வில்லியம் டிண்டேல் (William Tyndale) மார்ட்டின் லூத்தரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கில அறிஞர் ஆவார்.  டிண்டேல் ஒரு திறமையான மொழியாளர்; லத்தீன், எபிரேய, கிரேக்க மொழிகளைச் சேர்த்து ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ஒரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர், மனிதநேய அறிஞர், மற்றும் பிராட்டஸ்டண்ட் தியாகி என அறியப்படுகிறார்.


டிண்டேல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். 1521-ல், அவர் வைட் ஹார்ஸ் இன் (White Horse Inn) எனப்படும் இடத்தில் கூடிக் கொண்டிருந்த மனிதநேய அறிஞர்களின் குழுவுடன் தொடர்பு கொண்டார். வேதாகமமே தேவாலயத்தின் போதனைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தமது சொந்த மொழியில் வேதாகமத்தைப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பினார்.


அந்தக் காலத்தில் அச்சுத்தொழிலின் தாக்கமும், தாய்மொழிகளில் வேதாகமத்திற்கு ஏற்பட்டிருந்த தேவையும் காரணமாக, வில்லியம் டிண்டேல் 1523 ஆம் ஆண்டு கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் விரும்பினார். 1523-ஆம் ஆண்டு, டிண்டேல் லண்டனுக்குச் சென்று புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதி கோரினார்.  காரணம், அக்கால இங்கிலாந்து அதிகாரிகள்  ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்திருந்ததால்; அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  கத்தோலிக்கர்கள் வேதாகமத்தை லத்தீன் மொழியிலேயே வைத்திருக்க விரும்பினர். இங்கிலாந்தில் தேவாலய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதால், 1524-ல் அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தார்; அங்கு லண்டன் வணிகர்களின் நிதியுதவியுடன் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.


அவரது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு 1525 ஜூலையில் நிறைவுபெற்றது, கேலோன் (Cologne) நகரில் அச்சிடப்பட்டது. தன்னுடைய பாதுகாப்புக்காக, அந்தப் பதிப்பில் தனது பெயரையோ அடையாளத்தைக் காட்டும் விவரங்களையோ சேர்க்கவில்லை.  ஆனால் அந்நகரின் அதிகாரிகளின் அழுத்தத்தினால் அவர் அங்கிருந்து வெளியேறி, வோர்ம்ஸ் (Worms) நகரில் தஞ்சமடைந்தார். 



ஆனால், 1525 முதல் 1535 வரை வில்லியம் டிண்டேல் (William Tyndale)
மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதி, பிந்தைய ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக அமைந்தது.  அங்கு 1525-ல் இன்னும் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பை முடித்த பின், டிண்டேல் பழைய ஏற்பாட்டில் பணியாற்றத் தொடங்கினார். 1530-இல் மார்பர்க் (Marburg) நகரில் பெந்தட்யூக் (Pentateuch) முதல் ஐந்து நூல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது. டிண்டேல் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.  1526-ல் முதல் பிரதிகள் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டன;  அதன் பிரதிகள் விரைவில் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டு மக்களிடையே பிரபலமடைந்தன. டிண்டேல் உருவாக்கிய மொழி நடை, சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், அது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளுக்கான பாணியை நிலைநிறுத்தியது. இருப்பினும்  அதிகாரிகளால் அவை தடைசெய்யப்பட்டன; மேலும்  அவரை மதவெறுப்பு குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர் .


அதிக கடனில் சிக்கியிருந்த ஹென்றி பிலிப்ப்ஸ் (Henry Phillips) என்ற நபரிடம் வில்லியம் டிண்டேலைத் தேடி பிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.  பிலிப்ப்ஸ்  டிண்டேலைக் கண்டுபிடித்தால் பெரும் தொகை பணம் வழங்கப்படும் என அவருக்குச் சொல்லப்பட்டது.  1535-ஆம் ஆண்டு, பிலிப்ப்ஸ் அந்த்வெர்ப் (Antwerp) நகரின் வணிகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தத் தொடங்கினார். ஏராளமான சூழ்ச்சி மற்றும் ஏமாற்றுக்களின் மூலம், டிண்டேலின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்தார். டிண்டேலின் நெருங்கிய வட்டாரத்திற்குள் நுழைந்து, அவரோடு நண்பனாகவும் ஆனார்.

ஒரு நாள், டிண்டேலிடம் 40 ஷில்லிங்குகளை கடனாக வாங்கிய பின், பிலிப்ப்ஸ் அவரை உணவுக்கு அழைத்தார்.   இருவரும் ஒரு குறுகிய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது, டிண்டேல் அரச படையினரால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.  பின்னர், அவர் 500 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டார். பெல்ஜியம் அருகிலிருந்த ஒரு கோட்டையில், குளிரும் இருளும் நிறைந்த சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். இரவில் மெழுகுவர்த்தி வேண்டியும், குளிரைத் தாங்குவதற்குத் துணி வேண்டியும் காவலர்களுக்கு கடிதம் எழுதினார்:  “இருட்டில் தனியாக உட்கார்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் விண்ணப்பித்தது; எனது நேரத்தை  படிப்பில் செலவிட விரும்புகிறேன்.எனக்கு என் எபிரேய வேதாகமம், எபிரேய இலக்கணம், மற்றும் எபிரேய அகராதி பயன்பட அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.; என்று வேண்டியிருந்தார்.   அதாவது, தண்டனைக்கு காத்திருக்கும்போதே, அவர் தனது வேதாகமப் பணியைத் தொடர விரும்பினார். 18 மாதங்கள் கழித்து, தேவாலயத்தினால்  மதவெறுப்பாளி (heretic) என அறிவிக்கப்பட்டு,  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

டிண்டேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்:

  • “நம்பிக்கை தான் நீதிமானாக்கும்” என்ற அவர் நம்பிக்கை.  பாவ மன்னிப்பில் விசுவாசிக்காது, சுவிசேஷம் வழங்கும் இரக்கத்தை ஏற்றுக்கொள்வதே இரட்சிப்பிற்கு போதுமானது என்ற அவரது நம்பிக்கை முக்கிய குற்றமாக கணக்காக்கப் பட்டது.  

 மதச்சார்பற்ற கருத்துக்களுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, பில்வோர்டே (Vilvoorde) நகரில்  1536 அக்டோபர் 6 அன்று, அவரைத் தூக்குத் தண்டனை மற்றும்  எரித்துக் கொல்லவும் கொண்டுசென்றனர். கூட்டம் முன்னிலையில், அவரை ஒரு தூணில் கட்டினர்; கால்களின் சுற்றிலும் மரக்கட்டைகளும் வைக்கோலும் அடுக்கப்பட்டன; மேலாக துப்பாக்கி மையம் (gunpowder) தூவப்பட்டது. சங்கிலியும் கயிறும் அவரது கழுத்தில் பிணைக்கப்பட்டது.

அந்தக் கடைசி நொடியில், டிண்டேல் தனது இறுதி வார்த்தைகளைச் 
“கர்த்தாவே, இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்!” என்று சொன்னார்: 

பின்னர் கயிறு இறுக்கப்பட்டது. டிண்டேல் உயிரிழந்தார். அவரது உடல் தீயில் எரிக்கப்பட்டது; துப்பாக்கியும் வெடித்ததால் காட்சி இன்னும் கொடூரமானதாகியது. தேவனுடைய வார்த்தையை இங்கிலாந்திற்குக் கொண்டுவந்த குற்றத்திற்காகவே, “கடவுளின் சட்டவிரோதன்” என்று அழைக்கப்பட்ட வில்லியம் டிண்டேல் தியாக மரணத்தைச் சந்தித்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இறுதி ஜெபம் நிறைவேறியது. இங்கிலாந்தின் ஹென்றி எட்டாம் (Henry VIII) அரசன் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஆங்கில மற்றும் லத்தீன் வேதாகமப் பிரதிகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

டிண்டேலின் மொழிபெயர்ப்பு, அவரது காலத்திலிருந்து வந்த அனைத்து ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் காணப்படுகிறது. கிங் ஜேம்ஸ் (King James) புதிய மொழிபெயர்ப்பை ஏற்படுத்த 50 சிறந்த அறிஞர்களை நியமித்தார். ஆயினும், அவர்கள் கூட டிண்டேலின் பணியை மேம்படுத்த முடியவில்லை. கிங் ஜேம்ஸ் பதிப்பில் (1611), புதிய ஏற்பாட்டின் சுமார் 84% மற்றும் பழைய ஏற்பாட்டின் 76% டிண்டேலின் மொழிபெயர்ப்பே உள்ளது!

பல வழிகளில், வில்லியம் டிண்டேல் நவீன ஆங்கில மொழியின் தந்தை, அதேபோல் ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை ஆவார். இங்கிலாந்தின் அரசனிலிருந்து எளிய உழவன் வரை அனைவரும் தேவனுடைய வார்த்தையை அறியும்படி செய்வதற்காக ,பைபிளை ஆங்கில மொழிக்குத் மொழிபெயர்க்கும் பணிக்காக வில்லியம் டிண்டேல்  தனது உயிரை இழந்தார். 

அவர் மரணமடைந்த காலத்தில், அவரது 18,000  புதிய ஏற்பாட்டு பிரதிகள்   அச்சிடப்பட்டிருந்தன.  முழுமையான இரண்டு பிரதிகளும் ஒரு சிதைந்த பிரதியும்  லண்டனின் பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் உள்ளன.  அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து வருகிறது.


டிண்டேலின் மிகப் பெரிய சாதனை, ஆழமான கல்வி, எளிமையான நடையைப் பயன்படுத்தும் திறன், இலக்கிய அழகியைக் காக்கும் திறன் ஆகியவற்றை ஒரே பாணியில் இணைத்துச் செய்த மொழிபெயர்ப்பு. இது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியது. எபிரேய பாணியின் சுவையைத் தக்கவைத்த அந்த ஆங்கில நடை, கிங் ஜேம்ஸ் பதிப்பு (1611) தொடங்கி அடுத்த 400 ஆண்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக இருந்தது.






7 Sept 2025

வகுப்பறை dirty அரசியல்!

 கல்விக்கூட சூழலில் ஆசிரியர்களுக்குள் பதவி அதிகாரத்திற்கான போட்டி அரசியலில் மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் இழிய நிலை தொடர்கிறது. .

ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை எதிர்க்க நேரடியாக எதுவும் செய்ய மாட்டார். வெகிளி மாணவர்களை தூுண்டி விடுவார்கள்.
அம்மாணவர்கள் நமக்கு எதிராக ஒரு மன்றத்தில் புகார் எழுதி கொடுக்க வைப்பார்கள்.
நமது ஜாதியை அம்மாணவர்களுக்கு குறிப்பிட்டு
உசுபேத்தி விடுவார்கள்.
நாம் வகுப்பு எடுக்கும் போது எழுந்து நின்று பாடத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுதி கொடுத்து மாணவர்களை வைத்து கேட்க வைப்பார்கள்.
நாம் ரொம்ப பணிவாக இளித்து பதில் சொல்ல நமது பதவி , வயது, கல்வி அனுமதிக்காது. ஆனால்.கோபத்தில் உரைத்தால் கைபேசியில் ஒலி, காணொளியாக பதிந்து இன்னொரு பேராசிரியருக்கு அனுப்பி விட்டால் அவர் யார் யாரிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டுமோ போய் வேலையை முடித்து விடுவார்கள்.
அல்லது நண்பன் போல இருந்து கொண்டே மாணவர்களுக்கு பணம் கொடுத்து வக்கீலை கொண்டு வந்து கெட்ட வார்த்தை பேச வைப்பார்கள்.
ஆண் ஆசிரியர்கள் என்றால் மாணவிகளை வைத்து பாலியல் ரீதியாக பெண் ஆசிரியர் என்றால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படைய
வைத்ததாக புகார் கொடுக்க வைப்பார்கள்.
மாணவர்கள் ஆசிரியர்கள் சம்பந்தமான பாலியல் வழக்குக்களுக்கு பெருவாரி பின்னில் இருப்பது உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தான்.
இத்தனையும் மீறி நாம் தப்பித்து போக வேண்டும் என்றால் 75 degree@ க்கு மேல் உயர்அதிகாரி முன் வளைந்து நெளிந்து நிற்க வேண்டும்.
எனக்கு எவ்வளவு முயன்றாலும் 5 degree க்கு மேல் வளைய இயலாது.
ஆனால் பணியிடத்தில் 25 degree வளைந்தால் தான் வேலைையை தக்க
வைக்க இயலும் என்பது காலத்தின் கட்டாயம்.
மறுபடியும் பண்ணையார் அடிமை நிலையை கொண்டு வந்து விட்டனர் கல்வி கூடங்களில்..

மாணவர்களிடம் நான் சொல்வது Media Law, Journalism ,பாடம் எடுக்கும் போது சில கருத்துக்கள் சொல்லி இருப்பேன். அதுவே public figures conspirancy என குற்றத்தில் வந்துள்ளது.
என் உழைப்பை நேர்மையை நீங்கள் பின்பற்றலாம் ஆனால் 25 degree வளைவு என்பது காலத்தின் கட்டாயம்.
நேர்மை உழைப்பு என்பது எல்லாம் நானே என்னை பீற்றி கொள்ளலாம். ஆனால். நடைமுறைக்கு உதவாது.
வேலையிடத்தில் எவனுக்கும் குழி பறிக்காதீர்கள் ஆனால். குழியில் விழவும் செய்யாதீர்கள் .
மேலும் கல்வி கூடத்தில் கற்றது போல சொந்த ஆசிரியரை அவமதிக்க ஜாதி, மதம் , ரீதியாக கற்றுக் கொண்டதை வேலையிடத்தில் பயன்படுத்தாதீர்கள். அது உதவாது.
ஆசிரியர் களம் என்பது ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது.
கல்வியாளர் என்ற நிலையில் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய எந்த அறவும் இல்லை. அதுவும் ஒரு வேலை பெறும் சந்தைக்காடாக மாறிவிட்டது.