Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

27 May 2020

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!

கிளாடீஸ் ட்யூஷன் டீச்சர் வீடு!
நேற்றைய பொழுதுகளை பலதும் மறந்திருப்பேன், இருந்தாலும் நான்கு வயது ட்யூஷன் வகுப்பு நினைவுகள் பலதும் அழியாதே என்னிடம் உண்டு.
அப்படியான பல நினைவுகளை தருவது தான் இந்த தெருவு குடிநீர் பைப்பும், அதன் பின் இருக்கும் கிளாடிஸ் டீச்சர் வீடும்.
மெலிந்து உயரமான எப்போதும் இருமிக்கொண்டிருக்கும் டீச்சருடைய கணவர், ஷேர்லிச் சேச்சி, ஷிபு அண்ணா, ஜெய்ம்ஸ் சார் , உயரமான அழகான எப்போதும் சிரித்த முகத்துடனுள்ள மேரி டீச்சர், துணி தைத்து கொண்டிருக்கும், குடை பிடித்து நடக்கும் டீச்சரின் தங்கை, அந்த வீட்டில் ஒரு வாகன விபத்தை தொடர்ந்து நெடு நாளாக படுக்கையில் கிடந்த தங்கச்சன் சேட்டன் , சட்டையும் முண்டும் அணிந்து கோழிகளை பராமரிக்கும் இவர்களுடைய அம்மா , வல்யம்மச்சி( பாட்டி).
எங்க ஊரில் அப்போதிருந்த ஒரே ஒரு ட்யூஷன் பள்ளி இது தான். சொல்லப்போனால் எங்கள் பள்ளியை விட கட்டுக்கோப்பாக வகுப்புகள் நடந்தது இங்கு தான். நான் என் வீட்டில் இருந்ததை விட இந்த வீட்டில் வளர்ந்ததுதான் நிறைய பொழுதுகள்.
மேக்கப் போட்டு, அழகான உடுப்புகள் உடுப்பித்து, கல் ஸ்லேட்டும்( பலகையும்), குச்சியுடன் காலை 10 மணிக்குள்ளாக கடையிலுள்ள உதவியாளர் பையன்களுடன் அனுப்பி விடுவார்கள்.
காலை தமிழ் படிக்க வேண்டும், மதியம் முதல் மாலை வரை மலையாளம். மாலை என்னை அழைத்து போக பையன்கள் வருவார்கள். அதற்குள் மதியமே நான், டீச்சர் தலை தப்பி வீடு வந்து சேர்ந்திடுவேன்.
வீட்டு கதவு அரைக்கதவு. அந்த கதவை திறக்கும் உயரவுமில்லை , வலுவுமில்லை.
அம்மா என்னை கண்டதும் எப்படி வந்தாய் , ஏன் தனியாய் வந்தாய்,என திட்ட ஆரம்பிப்பார்கள்.
கதவை திறக்காதே.... கடை பசங்களிடம் இவளை வகுப்பில் கொண்டு விடு என்று கட்டளை பிறக்கும்.
நானும் போக விருப்பமில்லை, தூக்கம் வருது,வயிற்று வலி என்ற சகல வித்தைகளையும் துணைக்கு அழைத்து போராடினாலும் அம்மாவின் மனம் இறங்காது.
சோம்பேரி, பொய் பேசாதே, வீட்டில் இருந்து என்ன செய்ய போறாய், இந்த சின்னப் பிள்ளைகளுடன் வம்பு சண்டை பிடிக்க தானே? போய் படி என்பார்.
கண்ணீர் மாலை மாலையாக விழும். கடைசி ஆயுதத்தை எடுப்பேன். 'போண்டா' வாங்கி தந்தால் பள்ளிக்கு போறேன்.
உடனே போண்டாய் வாங்கி தந்து , கையில் மிட்டாயும் சொருகி அனுப்பி விடுவார்கள்.
நாலு மணி எப்போது வரும் என காத்திருப்பேன். வீடு போய் சேர.
என் வீட்டில் பொறுப்பான மூத்த பிள்ளை,ட்யூஷன் வீட்டில் தான் நான் செல்லப்பிள்ளை !. டீச்சர் வீட்டில் உப்பிலிட்ட நெல்லிக்காய், மாங்காய் தின்ற ஞாபகம் உண்டு.
ஒருக்கா மாங்காய் பங்கு தருகையில் எனக்கு குறைத்து தந்தார்கள் என்று கையிலிருந்த ஸ்லேட்டை வைத்து அடுத்தவன் மண்டையில் ஒரு அடி. ஏன் அடித்தாய்? என விசாரித்து தண்டனையாக கூட்டத்தில் இருந்து தனித்து இருத்தி வைக்கப்பட்டேன். அங்கிருந்து அழுததும் நினைவிலுள்ளது.
தமிழ் குட்டி என்பதால் சத்ததில் தான் சண்டை இடுவதும் ஏன் கதைப்பதும் கூட. உள் அறையில் இருந்து தங்கச்சன் சேட்டன் என் பெயரை அழைத்தும் கப்- சிப் ஆகிடுவது வழமை.....
இந்த படி வழியே ஏறிச் சென்றால் என் துவக்கப் பள்ளியை அடைந்து விடலாம்.
இப்போதும்; அன்றைய என் நண்பர்கள் சபீர் ,
Abbas Abbas
, ராஜன், பஃமீஜா, பிந்து, லதா, ஜெயா நினைவிற்கு வருகின்றனர்.
ഗ്ലാഡിസ് ട്യൂഷൻ ടീച്ചർ വീട് !
ഞാൻ ഇന്നലെത്തെ കാര്യം പലതു മറക്കും, പക്ഷേ നാല് വയസുള്ളപ്പോലുള്ള ട്യൂഷൻ ക്ലാസിന്റെ നിരവധി ഓർമ്മകളുണ്ട് എനിക്ക്.
തെരുവ് കുടിവെള്ള പൈപ്പും പിന് ഭാഗത്തുള്ള ഗ്ലാഡിസ് ടീച്ചറുടെ വീടും ആണ്.
മെലിഞ്ഞതും എപ്പോഴും ചുമക്കുന്നതുമായ ടീച്ചറുടെ ഭർത്താവ്, ഷേർളി ചേച്ചി , ഷിബു ചേട്ടൻ , ജെയിംസ് സർ, ഉയരവും സുന്ദരവുമായ പുഞ്ചിരിക്കുന്ന മുഖംമുള്ള മേരി ടീച്ചർ, വസ്ത്രം തുന്നുന്ന , കുടയുമായി നടക്കുന്ന ടീച്ചറുടെ സഹോദരി, വീട്ടിൽ ഒരു വാഹനാപകടത്തെ തുടർന്ന് കിടക്കയിൽ കിടക്കുന്നു തങ്കച്ചൻ ചേട്ടൻ, കോഴികളെ വളർത്തുന്ന ആ വീട്ടിലെ , അമ്മ, വാല്യമ്മച്ചി (മുത്തശ്ശി).
ഞങ്ങളുടെ പട്ടണത്തിലെ ഏക ട്യൂഷൻ സ്കൂൾ ഇതാണ്. വാസ്തവത്തിൽ, ഞങ്ങളുടെ സ്കൂളിനേക്കാൾ കൂടുതൽ അച്ചടക്കമുള്ള ക്ലാസുകൾ ഇവിടെയുണ്ടായിരുന്നു . എന്റെ വീട്ടിലേക്കാൾ കൂടുതൽ സമയം ഞാൻ ഈ വീട്ടിൽ വളർന്നു.
ഒരുങ്ങി കെട്ടി , മനോഹരമായ വസ്ത്രം ധരിച്ചു , കല്ല് സ്ലേറ്റ് (ബോർഡ്) എം കല്ല് പെന്സിലുമായ് കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടന്മാരോടൊത്തു രാവിലെ 10 ന് മുൻപേ ക്ലാസിൽ എത്തും .
രാവിലെ തമിഴ്, ഉച്ച മുതൽ വൈകുന്നേരം വരെ മലയാളം പഠിക്കുകയായിരുന്നു പതിവ് . കടയിലെ ജോലിക്കാരായ ചേട്ടൻ വൈകുന്നേരം എന്നെ വിളിച്ചു കൊണ്ടു പോകാൻ വരും. ഉച്ചകഴിഞ്ഞ് ഞാൻ ടീച്ചറുടെ കണ്ണും വെട്ടിച്ചു വീട്ടിലെത്തും.
വീട്ടു വാതിൽ അരക്കതവ് ആണ് . ആ വാതിൽ തുറകാനുള്ള ഉയരമോ ശേഷിയോ ഇല്ലാ. അമ്മ എന്നെ കാണുപ്പോൾ തന്നെ , നീ എങ്ങനെ വന്നു, എന്തിനാണ് ഒറ്റയ്ക്ക് വന്നത്, ഇന്നിങ്ക്നേ വഴക്കു പറയാൻ തുടങ്ങും, വാതിൽ തുറക്കാതെ തന്നേ കട ചേട്ടൻമാറോടു 'ഇവളെ കൊണ്ടു വിടൂ' എന്ന് ആവശ്യയപ്പടും.
ഞാൻ പോകില്ലാ, ഉറക്കാം വരുന്നു, വയറു വേദന എന്ന പല പല നുണ കഥകളുടെ അകമ്പടിയാണ് പിന്നീട് . പക്ഷേ അമ്മ സമ്മതിക്കില്ലാ.
മടിച്ചി, നുണ പറയരുത്, നീ വീട്ടിൽ നിന്ന് എന്തുചെയ്യും?
കണ്ണുനീർ ധാര ധാരയായി വീഴുന്നു. ഞാൻ അവസാന ആയുധം എടുക്കും. നിങ്ങൾ 'പോണ്ട' വാങ്ങി തരുമെങ്കിൽ , സ്കൂളിൽ പോകാം .
ഉടൻ പോണ്ടാ വാങ്കി തന്നു, മിഠായി കൈയിൽ വച്ച് അയക്കും.
.
ഞാൻ പിന്നീട് ആ നാല് മണികായ് കാത്തിരിപ്പാണ് . വീട്ടിൽ ചുമതലയുള്ള മൂത്ത കുട്ടി, ഞാൻ ട്യൂഷൻ സ്‌കൂളിൽ ഇഷ്ട മകളാണ്
ട്യൂഷൻ വീട്ടിൽ ഉപ്പിട്ട നെല്ലിക്കയും മാങ്ങയും ടീച്ചരിൽ നിന്ന് വാങ്ങിച്ചു കഴിച്ചത് ഓർമ്മിക്കുന്നു.
ഒരിക്കേ എനിക്ക് ഉപ്പിലിട്ട മാങ്ങ തരാൻ കളിപ്പിച്ചതിനാൽ സ്ലേറ്റ്ട്ടു കൊണ്ട് ഒറ്റ അടി. . നീ എന്തിനാണ് അടിച്ചത്? എന്ന് ചോദിച്ചു ശിക്ഷയായി എന്നെ കൂട്ടത്തിൽ നിന്ന് മാറ്റി നിർത്തി. അവിടെ നിന്ന് കരഞ്ഞതും ഞാൻ ഓർക്കുന്നു.
ശബ്ദത്തിൽ സംസാരിക്കുകയും വഴക്കു കൂടുകയും ചെയ്യുന്നതിന് . അകത്തെ മുറിയിൽ നിന്ന് തങ്കച്ചൻ ചേട്ടൻ എന്റെ പേര് വിളിക്കുന്നതും
പിന്നെ പേടിച്ചു മിണ്ടാതിരിക്കും.
ഈ പടികളിലൂടെ കയറി ചെന്നാൽ എന്റെ പ്രാഥമിക വിദ്യാലയത്തിൽ എത്താൻ കഴിയും.ഇപ്പോൾ; അന്നത്തെ എന്റെ സുഹൃത്തുക്കൾ സഫീർ, അബ്ബാസ് അബ്ബാസ്, രാജൻ, ഫാമിജ, ബിന്ദു, ലത, ജയ എന്നിവരെ ഓർക്കുകയാണ്. .

ஜார் அரச குடும்பம்

If I die or you desert me, you will lose your son and your crown within six months.- Rasputin.
ரஷியாவிற்கு சைபீரியாவில் இருந்து ரஸ்புடின் வராதிருந்தால் மன்னரின் மகனுக்கு ஹீமோபீலியா என்ற நோய் இல்லாதிருந்தால் 300 வருட ஜார் மன்னரை போல்ஷிவிக் படைகள் கொன்றிருக்க இயலுமா? முதல் கம்யூனிஸ்ட் தேசமாக மாறியிருக்கத் தான் செய்யுமா?
ஜார் அரச குடும்ப கொலையில் லெனினுடைய நேரடி தொடர்பு கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் குடும்பத்துடன் கொல்ல அனுமதித்திருக்க மாட்டார் என்ற ஊகவும் உண்டு‌ இருந்தாலும் லெனின் பற்றிய ரஷிய அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு அவர் பயங்கரவாதத்தை பயண்படுத்தினவர் , பொய் சொல்ல மிகவும் திறமையானவர், பெரும்பான்மை மனநிலையை உருவாக்க தெரிந்தவர், அவருக்கான ஒரு நன்றியுள்ள குழுவை கட்டமைக்க தெரிந்திருந்தார்.
உண்மையில் ரஷியாவில் ஒரு மக்கள் போர் ( civil war) மூண்டதை விரும்பாதவர். ஒரு கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் அதன் மூலம் ஒரு அச்சத்தை ராஜ பரம்பரைக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டுமே ஸ்டாலினுக்கு இருந்தது.
எதற்கு கிளர்ச்சியை ஏற்படுத்த
வேண்டும்? 300 வருஜார் ராஜ குடும்பத்திற்கும் அவருக்குமான பகை தான் என்ன?
தற்போதைய ஜார் மன்னரின் தாத்தாவின் கொலை வழக்கில் கைதாகி 1881 ல் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட Ulyanove குடும்பத்தை சேர்ந்த லெனினுடைய சகோதரன் அலெக்ஸ்சாண்டரில் இருந்து வர வேண்டும் வரலாறு.
ஜார் மன்னர் இறந்ததும் அவர் மகன் நிக்காளோஸ் III பதவிக்கு வந்தார். தனது 49 வது வயதில் சிறுநீரகப் பிரச்சினையால் இறந்து விட்டார். அடுத்து தந்தை வழி பதவி நிக்கோளஸ் II க்கு கிடைக்கிறது. அவர் அரசியல் அறிவில் பூஜ்ஜியமாக இருந்துள்ளார். ஜப்பானிடம் தோல்வியுற்றது மக்களின் நம்பிக்கையை இழக்க காரணமாகிறது.
நாலு மகள்கள் இருக்க ஐந்தாவதாக பிறந்த மகன் அலெக்ஸி ஹீமோபீலியா என்ற நோயுடன் மல்லிடுகிறார். இந்த காலயளவில் தான் ரஸ்புடின் அரண்மனை குடும்பத்திற்கு அறிமுகம் ஆகிறார். எப்படி என்று தெரியாது சிறுவனை குணப்படுத்தினார் அதுவே உண்மை.
தாயாரான மகாராணிக்கு மகன் சுகம் பெற்றதால் ரஸ்புடின் மேல் அளவு கடந்த மரியாதை அன்பு வருகிறது. இது மற்றைய ராஜகுடும்ப உறுப்பினர்களுக்கு கண்டபடி பேச வழிவைக்கிறது.
ஒரு கட்டத்தில் ராணிக்கும் மாந்திரீக சாமியாருக்கும் உறவு என்ற பரப்புதல் ராஜகுடும்பம் மேல் மக்களுக்கு இருந்த மரியாதையை இழக்க செய்கிறது. ( இந்தியாவில் நேரு குடும்பத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சி அவமதிப்பது அவதூறு பரப்புவது போல).
சாமியார் ஜெர்மனி தரகர் என்பது வர செய்திகள் பரவுகிறது. 1916 ல் சாமியார் அரச குடும்ப ஆட்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.
மக்கள் புரட்சியில் ஆளும் தற்காலிக அதிகார அரசும் மன்னரும் ஒரு பக்கம், படையும் மக்களும் எதிர்பக்கம்.
வெளிநாட்டு பயணத்தில் இருந்த ஸ்டாலின் ஓடோடி வருகிறார்.
மன்னர் குடும்பத்தை பாதுகாப்பதாக கூறியே ஆறு மாதங்களுக்கு மேலாக மாஸ்கோவில் இருந்து பல மைல்கள் பயணிக்க வைத்து பல வீடுகளிலாக தங்க வைக்கின்றனர்.
கடைசி நாள் 1917 வருகிறது. உங்களுக்கு பாதுகாப்பு என்று கூறி, மேல் மாடியில் இருந்தும் கீழ் மாடிக்கு வர வைத்து வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொல்கின்றனர்.
மன்னரின் உறவினர்கள் இங்கிலாந்து , ஜெர்மெனி ராஜகுடும்பத்தில் இருந்தனர்.
பல வருடங்கள் அவர் கொல்லப்பட்டதையே பலரும் நம்பவில்லை . பின்பு அவர்கள் உடலை புதைத்திருந்த சுரங்கத்தில் இருந்து எடுத்து மரியாதையாக புதைக்கின்றனர். அதிலும் மன்னரின் மகன், மரியா என்ற மகளுடைய உடல் கிடைத்ததாக தகவல்கள் இல்லை.
அப்படியாக ஒரு conspiracy theory இந்த ஆட்சி மாற்றத்தில் பெரிதும் பங்கு பெற்றது. இத்துடன் 300 வருட ஜார் மன்னராட்சி முடிவிற்கு வந்தது. உலகின் முதல் கம்யூனிஸ்ட் தேசம் உருவாகிறது.
1917 ல் ஆட்சியை பிடித்த ஸ்டாலினும் 1924 ல் நோய்வாய்பட்டு இறந்து விட்டார். அடுத்து தான் கொடும் கோலன் ஜோசப் ஸ்டாலின் ஆட்சி மலருகிறது.
இந்த நூற்றாண்டில் மக்கள் உயிரை பறித்த, பல மில்லியன் மரணங்களுக்கு காரணமான மாவோ, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின் பற்றி பின்னொரு பதிவில் காண்போம்.

26 Oct 2011

தீ….வலி!


தமிழர்களின் பண்டிகையே அல்லாத தீபாவளி தற்கால வியாபார கலாச்சாரத்தால்  தமிழர்களின் பண்டிகை ஆகிவிட்ட சூழலில் பண்டிகை வந்ததோ வந்தது பல வீடுகளில் இத்துடன் தீராத சண்டைகளும் வலிகளும் சேர்ந்து வந்து விட்டது.

எதிர்வீட்டு பக்கத்து வீட்டு பெண்கள் போன வாரமே வாய் சண்டை ஆரம்பித்து விட்டனர்.  பால் வாங்கி கொண்டே ..
என்ன அக்கா மக என்னிக்கு வாரா எவ்வளவு உங்க முறை? 
உடனே பரிமளாக்காவுக்கு பண்ணையார் திமிறும் ஒன்று சேர
நீங்க எவ்வளவு கொடுக்குறீக என்ற மறுகேள்வி!
  நாங்க 3 ஆயிரம் ரூபாய் தான்.  மருமகன் எதிர்பாக்க மாட்டார் ஆனா முறை இருக்கில்லே…..
நாங்க 5 ஆயிரம் எங்க வீட்டிலும் மருமகன் தங்கமானவரு ஆனா நம்ம வீட்டு பிள்ளைக்கு பட்டு சேலை எடுத்து கொடுக்க வேண்டாமா?
நீங்க கொடுங்க… கொடுங்க…எங்க மக கலியாணம் முடிந்து தான் 11 வருஷம் ஆச்சில்லே!  போதும்……….3 ஆயிரம் ரூபாய்..
பரிமளம் அக்காவுக்கு ஆத்திரம் தீரவில்லை.  வந்திட்டா என்னையை கணக்கு போட.  என் மகளுக்கு நாங்க எல்லா பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கொடுப்போம் என்று சொல்லி கொண்டே வாயை சரித்து வைத்து கொண்டு ஒரு பக்க பார்வையும் பார்த்து  விட்டு வீட்டிக்குள்ள போய்டாக.

திருவிழாக்கள், மகிழ்ச்சியாக குடும்பமாக கொண்டாடி மகிழ்வதற்க்கு என்றால் வீட்டு முற்றத்தில் ஆரம்பிச்சு வீட்டுக்குள் ஒரே கும்மி அடி சண்டை வேற.  போத்தீஸ், ஆரெம்கெவி சேலை விளைப்பரம் வந்த  அன்று முதல் ஆரம்பித்த சண்டை பரிமளாக்கா வீட்டுகார்  தலையை பிச்சுகிட்டு வீட்டை விட்டே போகும்  மட்டும் தொடர்ந்தது.   

அடுத்த நாள் தாய் மகன்களிடம் பேசுவது கேட்டது, அதான் அப்பவே சொன்னேன் அப்பாகிட்ட நீங்க  சண்ட போடாதீங்கன்னு.  அக்காவும் வந்திட்டா அவளுக்கு 5 ஆயிரம் கொடுக்கனும் துணிமணி எடுக்க 4 நாள் தானே இருக்கு…

மகள் முந்தின நாள் மதியம்  தன் கணவர் வீட்டில் இருந்து தன்னோட மகளை இடுப்பில் வைத்து கொண்டு காரை விட்டு இறங்கினா.  அம்மாவிடம் அலைபேசியை வாங்கி "அப்பா நீ எப்ப வர போறே உன் பேத்தி தேடுதா"ன்னு அன்பு மொழியில்  பாசமழை பொழிந்தா.   அவரும் நேற்று காலை வீடு வந்து சேர்ந்தார். மக தன் மகளிடம் தாத்தா கிட்ட வெடி வாங்கி கேளுடா….ன்னு கொஞ்சும் சத்தம் கேட்டுது. எப்பவும் நாய் மாதிரி குலைச்சு பேசுதவரு பேத்திட்ட தாத்தா கண்ணு குட்டிக்கு மத்தாப்பு வாங்கி தாரேன்னு கதைக்கும் சத்தம் கேட்டுது.  நேரம் போக போக மக அப்பாவை திட்டுத சத்தம் கேட்க தொடங்கியது “நீ என்ன அப்பன், நீ எதற்க்கு என்னை பெத்து போட்டே”… அவரும் விட்ட பாடில்ல “போ நாயை நான் செத்தாலும் என் சொத்தில ஒரு பங்கும் தர மாட்டேன்”.  “நீ ஒன்னும் தர வேண்டாம் நீ தந்தாலும் விடிஞ்சுது போ”…ன்னு மகளும் ….. ஒரு வழியா மக தன் காரில் வீடு போய் சேந்திட்டா போல் இப்போ சத்தம்  இல்லை.

நல்ல தூக்கம் நடு இரவில் சண்டை இடும் சத்தம்!! மகன் அப்பனை திட்ட, அப்பன் மகனை அடிக்க போக, பரிமளா அக்கா “போக்கத்தவனை கட்டிக்கிட்டு அழ வேண்டியது, தான் என்ன பாவம் செய்தேனோ” என்று கூக்குரல் இட... நாங்க நல்ல தூக்கத்தில் இருந்தவக விழித்து விட்டோம். சத்தம் குறைவது போல் தெரியவில்லை அது பார்லிமென்று கூட்ட தோடர் போல் போய் கொண்டே இருந்தது.  நேரம் ஆக ஆக அசந்து விட்டார்கள் போல  சத்தம் குறைந்து குறைந்து ஓய்ந்தது. மறுபடியும் அசந்து  தூங்கி விட்டோம். இப்போது அதிகாலை 3 மணி ஆகியிருக்கும் கார் திறக்கும் சத்தம். கார் ஹாண் அடித்து கொண்டே இருக்கின்றது.  ஒரே மண்டைக்கனம்… ஆரம்பம்மாகி விட்டது மறுபடியும் போர்க்களம்!   நாங்க எழுந்து ஒரு கட்டன் காப்பி போட்டு குடிச்சிட்டு  அவரவர் வேலையை ஆரம்பித்து விட்டோம்.  அங்கு தூவனம் வந்து இடி மின்னலுடன் சண்டை மழை பெய்து கொண்டிருந்தது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு  வேலையை முடித்தும் முடிக்காமலும் பகல் 11 மணிக்கு ஒரு குட்டி தூக்கம் பிடிச்சா, மத்தாப்பு வெடி அல்ல புஸ்வானமும் இல்லை வானவெடி மாதிரி சண்டை தொடங்கி விட்டது மறுபடியும்!  ஆவேரி விழித்து பார்த்தா; பிள்ளைக இல்லை போல், பரிமளாக்கவும் அவுக வீட்டுகாரரும் சண்டை  போடுராக.  பிள்ளைக இருந்தாலும் ஒரு பலனும் இல்லை.  ஒரு பையன் இயந்திர துறையில் பொறியாளர் பட்டம் முடிச்சிருக்கானாம், பொண்ணு கணிணி துறையில் பொறியாளராம் இளைய பையன் மருத்துவம் படிக்கானம் . சண்டைன்னு வந்திட்டா அப்பறும் அவக வீடு ரங்கநாதன் தெரு சந்டை தான்!!!

வாய் சண்டை பெருத்து பெருத்து வீட்டுகாரம்மா சொல்றாக “ எலே நாயை உன்னை கட்டி என்னத்த கண்டேன், செத்து தொலையேன் நானாவது நிம்மதியா இருப்பலே…”, வீட்டுகாரர் சத்தம் தேங்கா சிரட்டையை பாறையில் உரசினாப்பிலே கேக்குது பதிலா பரிமளா அக்காச் சத்தம் “செருப்பு பிஞ்சிடும், தீபாவளிக்கு கேட்ட பட்டு சேலை எடுத்து தர வக்கில்ல பேச்சாக்கும்” ….வீட்டுகாரர் என்ன சொன்னார்ன்னு தெரியல செருப்பு வைத்து அடிக்கும் சத்தம் கேட்டது…..சப்சப்சப்ப்ப்…யார் யாரை அடித்தாங்கன்னு பார்க்க இயலவி\வில்லை….!

http://www.youtube.com/watch?v=TOOTnRxNjc0&noredirect=1 எதிர்வீட்டில மக வந்திட்டா  வெடி சத்தம் விட தாயும் மகளும் பேசும் சத்தம் தெருவை சுழற்றி அடிக்குது! நான் பாட்டு பெட்டியில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணனுடைய நாட்டுப்புற  பாடலை சத்தமா  போட்டு விட்டுட்டேன்.

பக்கத்து வீட்டு பரிமளா அக்கா வீட்டிலே சத்தமே காணும் . கூடு கலஞ்ச கிளி மாதிரி பிள்ளைகள் எங்கயோ போய் விட்டார்கள். அண்ணாச்சி இருமல் சத்தம் மட்டும் அப்பப்ப கேக்குது.  மயான அமைதியாக வீடு!  தீபாவளி கொண்டாடுகிறார்கள் போல!!!!

6 Aug 2011

அம்மாவுக்கு ஓர் கடிதம்!


அன்புள்ள அம்மா, உன் பாச மகள் எழுதி கொள்ளும் கடிதம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                      அம்மா இன்றும் கொடும் துர்-கனவு கண்டு எழுந்து விட்டேன்.  என் இதயம் ஈட்டியால் குத்தியது போல் வலிக்கின்றது.  நான் என்ன தவறு செய்தேன்.  உன்னை மறக்க நினைக்கும் தோறும் நினைவுகளில் தினம் வந்து என்னை கொல்லுகின்றாய்.    அதன் காரணம் தான் என்னால் உணர இயலவில்லை .  2 வயதில் 4 வயது குழந்தையாக வளர்க்கப்பட்டேன். 14 வயது வந்த போது நீ என்னை 20 வயது மங்கை ஆக்கினாய், திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன் கண் அசைவில் தானே நான் சிந்தித்தேன், இருந்தேன், நடந்தேன், வளர்ந்தேன்.  உன் முன் கோபத்தால் தேவையற்று தண்டித்து விட்டு தேவைக் கதிகமான பாசத்தால் நீ அருகில் வரும் போது நான் எல்லாம் மறந்தேன். ஆனால் அதுவெல்லாம் இன்று என்னை இப்படி வதைத்து சாம்பலாக்கவா ?
                                                                                                                                                                   நீ சுந்தரம் டெய்லரிடம் ஒரு மாபெரும் டிசைனர் போல் எனக்கென துன்னிய சிவப்பு நிற கவுண் இட்டு   முதலாம் வகுப்புக்கிற்க்கு சென்றது நினைவு வருகின்றது.   உன் பிரிவை தாங்காது பள்ளி திரும்பி வீடு வந்து நீ பூட்டி இட்ட அரை வாசல் கதவில் பிடித்து தொங்கி அழுததும் நினைவு வருகின்றது.   பின்பு நீ வாங்கி கொடுத்த எனக்கு பிடித்த தின் பண்டம் போண்டாவை அல்லது பண் ரொட்டியை வாங்கி தின்று விட்டு நீ எனக்கு முகம் கழுகி பவுடர் இட்டு, பொட்டு,பூ வைத்து முத்தம் இட்டு அனுப்பும் பள்ளி நாட்கள் மட்டுமல்ல;  10ஆம் வகுப்பு வரையிலும் இரட்டை சடை பிண்ணி,  சோற்றை வாயில் ஊட்டி விடும்  நாட்களும் தான் நினைவில் வந்து மறைகின்றதுதேவை இல்லாத இடத்தில் சிரித்தேன், பேசினேன் என்று உன்னிடம் திட்டு வாங்கி அழுத்ததும் நினைவில் உள்ளது.
                                                                                                                                                               முதல் முதலாக  உயர்நிலை- பள்ளி படிப்புக்கு என உன்னை பிரிந்த நாட்கள் ஓடி வருகின்றது என் நினைவில். வாரம் 7 நாட்களும் உனக்கு நான் கடிதம் எழுதினேனே, அந்த கடித எழுத்து என் மகன் பிறக்கும் மட்டும் என்னை தொடர்ந்த்து வந்தது. நீயும் நானும் தாய்- சேயா, தோழிகளா என்று நம் உறவுகள் பொறாமைப் படும் மட்டும் நீ அன்பை பொழிந்து வளர்த்தாய்.  ஆனால் விடுதியில் இருக்கும் போது ஒரு கடிதம் வழியாக  “உனக்கு மாப்பிள்ளை முடிவெடுத்துள்ளோம் தட்டும் மாற்றி விட்டோம்  இனி எங்கள் வாக்கை காப்பாற்றுவது  உன் விருப்பம்என்று நீ கொடுத்த சுதந்திரவும் நினைவில் இருக்கின்றது.   
                       கல்யாண பந்தலில் அனுப்பும்போது கூட நீ என்னை வேட்டைக்கு என்பது போல் உன் பணம் நகை பறி போகின்றது என்று அழுது சாபம் இட்டு அனுப்பி விட்டாய்.  நான் ஏதும் மறுபேச்சு கேட்டேனா?  "என்னை மறந்தால் நீ விளங்க மாட்டாய்" என்று உன் அன்பு மிகுதியால் நீ ஆசிர்வதித்த வார்த்தைகள் தான் என் நெஞ்சில் இப்போது மிதக்கின்றது .  அந்த சாபத்திற்க்கு ஆளாகும் நாள் என் வாழ்வில் ஒரு போதும் வராது என்று நான் நினைத்தது இன்று பொய்யாகி விட்டதே என்று தான் இன்று பரிதபிக்கின்றேன்.
                    எனக்கு கிடைத்த வாழ்க்கையில் சிறப்பாக ஓட நான் துடித்து கொண்டிருக்கின்றேன். இன்றும் உன்னை கட்டி பிடித்து அம்மா என்று உன் அருகில் வர ஆசிக்கின்றேன் நீயும் மக்களே என்று அழைத்து முத்தமிடுவாய் என்று நினைப்பது உண்டு.  ஆனால் நீ என்னை காணும் போது உன் கணவருக்கு இப்போது வருமானம் எவ்வளவு, உனக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வி மட்டும் தான் வரும் என்பதும் எனக்கு தெரியும்

                           தம்பி வெளியூரில்  சென்று படிக்க மாட்டேன் என்ற போது என் படிப்பையையும் சேர்த்து மட்டுப்படுத்தியதும், நம் குடும்ப சொத்தை காப்பாற்ற என்னை அடி மாடு போல் விற்றதும் கூட இப்போது தான் புரிந்து வருகின்றது. இனி உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் என்ன தவறு நான் செய்தேன் என்று நான் கேட்டு கொண்டே இருக்கின்றேன் தற்போது.

திருமணம் என்ற பெயரில் கடலுக்கும் பேய்க்கும் நடுவில் கொண்டு விட்டு விட்டு நீயும் சேர்ந்து வேடிக்கை பார்க்கின்றாய்.   என்னை வைத்து தாய் பாலில் விஷம் கலந்து விட்டது என்று சொல்ல வைத்தாய்.  தாய் பாசத்திலும் வேஷம் உண்டு என்று என்னை நம்ப வைத்தாய்.  எனக்கு என்று ஒரு உலகம் தந்தாயா? உன் கையிலும், கண்ணிலும் வளர்ந்த என்னால் யாரிடமும்  நட்பு பேணி பழகவும் தெரியவில்லைஎனக்கு சுற்றும் உன்னை தவிற வேறு உலகம் ஏன் தரவில்லை நீஇன்றும் சுற்றும் முற்றும் யாரும் இல்லாத உலகில் நான் என்னுடன் கதைத்து கொண்டே இருக்கின்றேன், தூக்கத்திலும் எனக்கு நிம்மதி தருகின்றாயா? அழுது விழிக்கின்றேன் என் கனவில் கூட எனக்கு நீ விடுதலை  தரவில்லை! 300 கி.மீ உன்னை விட்டு பிரிந்து வரும் போது தனிமையில் அழுது புலன்பினேன் இன்றோ 3000 கி.மீ உன்னை விட்டு போய் விட மாட்டேனா என்று துடிக்கின்றேன்.

அப்பா சொன்னார்கள் உனக்கு பிடிக்காத அத்தை வீட்டிற்க்கு சென்றது தான் கோபம் என்று நான் வந்ததோ  3 வருடம் கடந்து உனக்கு ஒவ்வொரு முறை நான் வரும் போதும் ஒவ்வொரு அத்தையுடன் ஊடலில் இருப்பாய். நான் என்ன பிழை செய்தேன் அவர்களிடம் பேசக் கூடாது என்று. அடுத்த முறை நான் வரும் போது நீ இந்த அத்தையிடம் கூடலிலும் இன்னொரு அத்தையிடம் ஊடலிலும் இருப்பாய் என்றும் எனக்கு தெரியும். எனக்கு யாரும் சத்திருவுமில்லை உற்றவர்களும் இல்லை என்றும் தெரியும். இதற்க்கு என அப்பாவையும் என்னிடம் கதைக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உண்டு.  அல்லது இந்த காரணம் சொல்லி உன் மகனுக்கு அப்பா சொத்தை முழுதுமாக சேர்க்கும் வேலையின் இதுவும் ஒரு சதி வேலையா?

                 இன்றும் உன் பெருமைக்காகவும் உன் ஆசைக்குமாக தான் வாழ்கின்றேன்நீ ஆசைப்படுவது போல் கழுத்து, காது, கை நிறைய நகை அணிந்து என் பங்களாவில் இருந்து என் காரில் உன்னை பார்க்க வருகின்றேன், என் மக்களே என்று ஓடி வருவாயா என்று  நான் பார்க்க வேண்டும்.   அன்றாவது நம் உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வாயா, நம் கோயில் திருவிழா சப்பரம் காண தான் அழைத்து செல்வாயா?


                  இது எல்லாம் காலம் செய்த கோலமா அல்லது என் ஜென்ம பாபமா ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. உனக்கு புரிந்தால் என்னை போல் ஒரு கடைசி கடிதாசு எழுதி தெருவித்து விடு அம்மாஇதை விட நான் பிறந்த போதே அழகு இல்லை என்று கம்பிளிக்குள் ஒளித்து வைத்திருந்த போதே  கொன்றிருக்கலாம் தானே.

ஒரு துளி கூட நிம்மதியான தூக்கம் இல்லை எனக்கு!  நீ வளர்த்த உன் மகிமையா அல்லது என் எல்லா இழப்பிலும் நான் உன்னை தேடுகின்றேனாஎன் மனசாட்சிக்கு ஒரே ஒரு கவலை நீ என்னை விட்டு முன்னே போய் நான் உன் சாபத்தில் வாழ்வதை விட,  நீ  வந்து மக்களே என்று விடும் ஒரு சொட்டு கண்ணீரில் என்  ஆன்ம சாந்தி அடைய வேண்டும் என்பது தான்.

(என்னிடம் தன் கவலையை பகிர்ந்த என் உயிர் தோழிக்கும் அவர் அம்மாவுக்கும் இந்த கடிதம் சமர்ப்பணம்!!! )