Showing posts with label Social-Youth. Show all posts
Showing posts with label Social-Youth. Show all posts

30 Apr 2015

பாலி 9 ! Bali Nine!


Image result for myuran sukumaran painting
பாலி 8 குற்றவாளிகளுக்கு இந்தோநேஷியா அரசு நிறைவேற்றிய தண்டனை உலக மனசாட்சியை  உலுக்கிய கொடும் துயர் நிகழ்வாகும். மரணம் என்பது உலகில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவானது என்ற உண்மை ஒரு புறம் இருக்க அம்மரணத்தை சில மனிதர்களுக்கு தண்டனையாக கொடுத்து தங்கள் அதிகாரத்தை நியாயத்தை நிறுவியது ஏற்று கொள்ள தகுந்தது அல்ல. தன் இள,ம் வயதில் புரிந்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைத்தணடனை பெற்ற பின்பும்;  குற்ற மனநிலையை விட்டு விலகி, தான் வாழும் சமூகத்திற்கு தன்னால் ஆன மிகவும் ஆக்கபூர்வமான செயல்கள் ஆற்றி  திருந்தி வாழ முடிவெடுத்த  நபர்களுக்கு தண்டனை கொடுத்தது மிகவும் கண்டிக்க தக்கது.

அதில் ஒருவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த தமிழர் என்பதால் அவருடைய உடல் மொழியில் இருந்து புரிந்து கொண்ட ஒவ்வொரு உணர்வுகளும் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தான் எதிர் கொள்ள வேண்டிய மரணத்தை மிகவும் மனம் நொறுங்கிய நிலையில்  ஏற்றுகொண்டு தன் நண்பர்களுக்கும் தாயார், உற்றார் உறவினர்களுக்கும் விடை கொடுத்து கொடிய மரண வேதனையுடன் மரணதண்டனையை ஏற்று கொண்ட நிகழ்வு 2000  வருடங்களுக்கு முன் சிலுவை மரத்தில் கொல்லப்பட்ட யேசுவில் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுப்படுத்தியது. மனிதன் அடிப்படையில் எந்த மாற்றத்திற்கும் உள்ளாகவில்லை. சக மனிதனை கொன்று இன்பம் காணும் மனநிலையில் தான் இருபதாம் நூண்டாண்டிலும் உள்ளான்.( மயக்கு மருந்து கடத்தினவர்களை யேசுவுடன் ஒப்பிடுவதா என்ற விவாதம் இங்கு தேவையில்லை. மனிதம் ஏதோ ஒரு வகையில் காலாகாலாமாக கொல்லப்படுகின்றது என்றே சொல்ல வந்துள்ளேன்). குற்றவாளிகளை அல்ல குற்றத்தை வெறுப்பதே மனிதநேயம் , அனைத்து மதங்கள் போதிப்பதும். .
Bali Nineஇந்த இளைஞர்கள்  மற்றொரு மனிதனின் உயிரை எடுக்கவில்லை. இன்னொருவன் சொத்தை அபகரிக்கவில்லை.  விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்ற அளவுக்கதிகமான பேராசையால் இவர்கள் தேர்ந்தெடுத்தது மோசமான வழிக்கு கிடைத்த தணடனையோ அதையும் விட மனித மனசாட்சியை வெட்கப்படவைத்த தண்டனை முறை ஆகும்.
மயூரன் சுகுமார் என்பர்  ஒரு சிறந்த உழைப்பாளி, தலைமை பண்பு கொண்டவர் என்பதை அவருடைய  கடந்த 10 வருட சிறைச்சாலை வாழ்க்கை அனைவருக்கும் எடுத்து காட்டியது. சிறைச்சாலையிலும் வியாபாரம், கலை, கல்வி சார்ந்த சேவைகள் புரிந்து  சக மனிதர்களுக்கு உதவும் பண்பிலே இருந்துள்ளார். பொதுவாக குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்பு கொள்வதில்லை. இவரோ தன் குற்றத்தை ஏற்று தன் வாழ்க்கையை திருத்தி வாழ்ந்த  ஈர இதயம் கொண்ட மனிதராக தான் வாழ்ந்து வந்துள்ளார்.. “நான் என்னை பற்றி மட்டுமே நினைத்திருந்தேன். இப்போது அப்படியல்ல, என்னை வாழ அனுமதியுங்கள் எனக்கு இன்னும் நிறைய விடையங்கள் சிறைவாசிகளுக்காக செய்து முடிக்க வேண்டியுள்ளது என்று தன் உயிருக்காக கெஞ்சியும் எந்த காதுகளும் கேட்டு கொள்ளவில்லை.. தன் மன போராட்டத்தை தன் ஓவியங்கள் ஊடாகவே வெளிப்படுத்தியிருந்தார். கொலைக்களத்திற்கு கொண்டு போகும் முன் அவரின் கடைசி பார்வை ஒவ்வொரு இதயத்தையும் ஊடுருவி தாக்க செய்வது.  சட்டம் என்ற பெயரில் உன்னதமாக வாழ முடிவு செய்த ஒரு மனிதனை கொன்று போட்டது. அவர் தாயார் சகோதரி சகோதரன் துயர் சொல்லி மாளாதது. 
Image result for mayur sugumaran painting workசீன வம்சாவளியை சேர்ந்த சான் தன் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைத்து கொண்டவர். இறை சேவையில் தன்னை இணைத்து கொண்டு தன் வாழ்க்கை மிகவும் மோசமான முன்னுதாரணம் என தன் வாழ்க்கையை பள்ளி குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் ஆவணப்படமாக எடுக்க அனுமதித்தார். தான் வந்த வழியில் இளம் தலைமுறை வரக்கூட்டாது என்று எண்ணினவர். இப்படியாக ஒவ்வொருவரும் இளம் மனிதர்கள். ஏதோ வகையில் திருந்தி வாழ முடிவு செய்தவர்கள்.
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வதை போன்றே அவனை காப்பாற வேண்டிய அரசே  திட்டமிட்டு மிகவும் கொடூரமாக மனிதர்களை படுகொலை செய்ததை எந்த வகையிலும் நியாயபடுத்த இயலாது. இந்த 8 மனிதர்களை படுகொலை செய்ததால் மயக்கு மருந்து விற்பனை அழியாது என அரசுக்கு தெரியும்.

இந்த மயக்கு மருந்து வியாபாரம் பல நாடுகளின் உதவியுடன் தான் நடைபெறுகின்றது. .மயக்கு மருந்து என்பது அவரவர் தேர்வு. தனிநபர்களால் குடும்பங்களால் தீர்க்க வேண்டிய உலகலாவிய பிரச்சினை இது.  இந்த சமூக அமைப்பில் நிலவும் பணம் பற்றிய மனிதனின் மனநிலை மாற வேண்டும்,  அந்த வியாபார கண்ணிக்குள் நுழைவது மனிதனின் மனநிலை தான்

வருடம் தோறும் 30 ஆயிரம் பேர் மயக்கு மருந்து கடத்தல் விற்பனை என்ற குற்ற செயல் புரிவதாக கைது செய்யப்படுகின்றனர். இதில் 32% குற்றவாளிகள் அமெரிக்கா தேசத்தை சார்ந்தவர்கள். அமெரிக்கா அரசாங்கம் மயக்கு மருந்து கடத்தலை தடுக்க வேண்டும் என 1970 துவங்கியே திட்டம் தீட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் உளவாளி அமைப்பு மயக்கு மருந்து வியாபாரத்தில் உள்ளது என அந்நாட்டு எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாக பல நாடுகளில் தங்கள் இளைஞர்கள் கேள்வி கேட்கா மடைமை குடிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்களே மறைமுகமாக மயக்கு மருந்து போன்ற போதை பொருட்கள் பயண்படுத்த மறைமுகமாக உதவது உண்டு என பல சமூக ஆவலர்கள் குற்றசாட்டியுள்ளனர். இந்தியாவில் சீக்கிய இன இளைஞர்களுக்கு மயக்கு மருந்து தடை இல்லாது கிடைக்க அரசு உதவுகின்றது என எழுத்தாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதே போல் மிசோராம் போன்ற மாநில இளைஞர்களும் திட்டமிட்டு மயக்க நிலையில் வைத்துள்னர் என்ற குற்ற சாட்டும் உள்ளது. இது இந்தியாவின் நிலை!



மயக்கு மருந்து பயன்பாட்டாளர்கள், வியாபாரிகள் அவர்களுக்கு உதவும் கடத்தல்காரர்கள் மற்றும் உற்பத்தி செய்கின்றவர்கள் என மூன்று நிலைகள் சேர்ந்து ஒன்றாக இயங்குவது தான் மயக்கு மருந்து உலகம். உற்பத்தியை தடை செய்தால் தான் அதன் வியாபாரிகளும் /ஏஜன்றுகளும், பயன்பாட்டாளார்களும் மறைய வழியுண்டு. உற்பத்தியாளர்களை விட்டு விட்டு கடத்தலுக்கு உதவும் குருவி போன்றோரை தண்டிப்பது ஒரு வகையில் அநீதி தான்.
மயக்கு மருந்து கடத்தலால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகும் மெக்ஸிக்கோ. இங்கு 2006 முதலுள்ள  காலயளவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மயக்கு மருந்து சார்ந்த வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்..
பெரு நாட்டில் 60, ஆயிரத்தி 400 ஹெக்டர் நிலைத்தில் கொகா பயறிடுகின்றனர்  கொளம்பியாவில் ஆகட்டும் 1,63,000 ஹெக்டர் நிலத்திற்கு மேல் மயக்கு மருந்து பயிறிடுகின்றனர்,  99% கஞ்சா போன்ற மயக்கு மருந்து ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தியாகின்றது. அமெரிக்காவின் கட்டுபாட்டிலும் உற்பத்தியில் எந்த குறைவும் இல்லை என்பது தீவிரவாத ஒழிப்பு என்பது கூட மயக்கு மருந்து வியாபாரத்தை மறைக்கும் முகமூடியோ என சந்தேகிக்க உள்ளது. கொக்கய்ன் பயிறுடுவதில்  போல்வியா  உலக அளவில் முன் நிலையில் உள்ளது. பர்மாவிலும் மயக்கு மருந்து பயறிடப்படுகின்றது. நாட்டின் வருமானத்தை வளப்படுத்துவதால் இதன் உற்பத்தியை நிறுத்த எந்த நாடுகளும் முன் வருவதில்லை.  இப்படியாக சில நாடுகள் உற்பத்தியை நம்பி இருக்கும் போது இந்தியா மெக்ஸிக்கோ, க்யூபா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடத்தல் பொருள் விற்பனை தளங்களாகவும் விளங்குகின்றது.




நம்ம ஊரில் அரசே டாச்மார்க் கடை வைத்து விட்டு நாடு முழுக்க கிட்னி மருத்துவ மனைகள் மற்றும் காப்பீடுகள் தந்து ஏழைகளுக்கு உதவுவது  போல் நாடகமாடுவதை கண்டு வருகின்றோம். அதே போல் பிளாடிக் விற்கும் கடைக்காரர்களை தண்டித்து விட்டு உற்பத்தியாளர்களை விட்டு வைத்திருக்கும் அரசியலும் நாம் கண்டதே. உற்பத்தியை நிறுத்தாது விற்பனையை அழிக்க இயலாது. விற்பனை இருக்கும் மட்டும் பயணாளர்கள் இருக்க தான் செய்வார்கள். விற்க ஏஜன்றுகளும் இனியும் வரத்தான் போகின்றனர்.


Ben Quilty greets Myuran Sukumaran's family at the I Stand For Mercy concert and vigil for Bali Nine death row inmates Myuran Sukumaran and Andrew Chan, at Martin Place in Sydney, on January 29உலக மக்களின் பார்வையை திசை திருப்ப அல்லது நாடுகளின் பணப்பேராசையை மறைக்க இது போன்ற தனி நபர்களூக்கு தண்டனை வழங்கி சட்டம் விழித்திருப்பது போல் காட்டி கொள்ளலாம்.  எளிதில் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கையின் மோகத்தில் இருந்து இளம் தலைமுறையை திசை திருப்புவது வழியாக தான் இந்த குற்ற செயலில் ஏற்படுவதை தடுக்க இயலும். இது போன்ற கொடிய மரணம் மேலும் நடக்காது இருக்கட்டும் தண்டனை என்பது மனிதனை திருத்த அல்லாது அழிக்க அல்ல என்று அதிகாரம் படைத்தோர் உணரும் காலம் மட்டும் இது போன்ற சோகங்களுக்கு சாட்சியாகத்தான் நாம் இருக்க உள்ளோம். இந்த வ்வொரு குற்றவாளிகளை மட்டுமல்ல அவர்கள் பெற்றோர்கள் நண்பர்கள் என பல மக்களை கொலை செய்துள்ளது இந்தாநேஷ்யா அரசு. மரண தண்டனை ஒழிய வேண்டும் என மனித நேயர்கள் குரல் மறுபடியும் உயர்ந்துள்ளது.  மொழி இனம் கடந்து  மரண தண்டனை என்பது ஒழிக்க வேண்டியது இது ஒரு காட்டுமிராண்டித்தனம் என நாம் நிச்சயமாக கூறலாம். பல இன்னல்கள் வருத்தங்கள் சோகங்கள் மத்தியிஉம் அவர்களுக்கு என குரல் உலகின் நாலாப்பக்கம் இருந்து எழுப்பபட்டது. பாலி 9 குற்றவாளிகளின் ஆத்ம சாந்தியை நாடி கனத்த மனதுடன் நம் அஞ்சலியை செலுத்த கடமைப்பட்டுள்ளோம். 

27 Feb 2014

பெண்ணே உன் நிலை தான் என்ன?


உமா மகேஸ்வரி மரணம் பெண்கள் உலகை நடுங்க வைப்பது சிந்திக்கவைக்க வேண்டியது. ஒரு புறம் கொடூரத்தின் உச்சம் மறுபுறமோ கொடும் புறக்கணிப்பின் நிலை!  சமூக பண்பாட்டு சூழல், லாபம் மட்டுமே கண்ணோக்கும் வர்த்தக நிறுவனக்களின் அலட்சியம் என இந்த நிகழ்ச்சி மனித மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டியது; சிறப்பாக தமிழக அரசின்  கண்ணை திறக்க வேண்டியது.

இப்பெண் காணாமல் போய் விட்டார் என்ற போது காவலர்கள் காதலர்களை தேடவும் அலுவலம் உடன்பணியாற்றுபவர், தெரிந்தவர் தான் செய்திருக்க கூடும் என பல ஊகாபோகங்களுடன்  ஒரு இளம் பெண்ணை சந்தேகப் பார்வையும் இளக்கார தொனியிலும் தான் நோக்கினர். ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறவர்; தந்தையில் புகார் பெற்றும் போலிஸ் துரிதமான தேடுதலை முடுக்கவில்லை. அவர்கள் சந்தேகம் முழுதும் இளம் பெண், அதுவும் வேலைக்கு போகும் பெண், திருமணம் ஆகாதவர் என்ற குறுகிய பார்வையிலே இருந்தது. குற்றத்தை தடுக்க இயலாது போயிருந்தாலும் அந்த உடலைக்கூட கண்ணியமான முறையில் பெற்று கொடுக்க இயலவில்லை என்பது நம் சமூக பாதுகாப்பு அற்ற தன்மையை தான் காட்டுகின்றது. எல்லாம் முடிந்து 10 நாட்களாகி விட்ட நிலையில் இவர்கள் புலணாய்வு திறமையை பறக்கும் ஆளில்லா விமானம், ஏடிம் வங்கி என புல்லரிக்கும் கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கின்றனர். பெற்றோருள்ள, கல்வியறிவு பெற்ற வேலையிலுள்ள பொறியாளரான பெண் நிலையை இவ்வகை என்றால் சாதாரண தெருவோர பெண்கள் நிலை என்னவாக இருக்கும்!

 இரவு நேரம் தனியாக பாதுகாப்பாக செல்ல தகுந்த வழியா? என்று சிந்தித்து அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்று கிளம்பி இருக்கலாம். அல்லது  இவர் நண்பர்களிடமோ பெற்றோரிடமோ தன் நிலத்தகவலை சரியான நேரம்  அறிவித்திருந்தால் தேவையற்ற ஊகங்களை தவிர்த்து தேட இயன்றிருக்கலாம்.  இளம் வயதில் வேலைக்கு போகும் இவ்வித பொறியாளர் பெண்களுடன் சில காலம் தங்கியிருந்து அவர்கள் தினசரி வாழ்க்கையை காணும் சூழல் எனக்கிருந்ததால் என்னை இச்சம்பவம் மிகவும் நிலகுலைய செய்தது. 

பொறியாளர் படிப்பே மிகவும் கடினமானது. மிகவும் அறிவாற்றலுள்ள பெண்கள் குழைந்தைகளை, பொறியாளர்களாக உருவாக நேரடியான விருப்பம் இவர்களுக்கு உள்ளதோ இல்லையோ காளான் போன்று முளைத்த பொறியல் கல்லூரியில் இவர்களை சேர்த்து கொள்ளவும் குடும்ப கவுரவத்திற்கு என பெற்றோரும் படிப்பிக்க ஆவல் கொள்கின்றனர். பல பெண் குழந்தைகளால் இந்த படிப்பை எளிதாக படித்து கரையேற முடிவதில்லை. மேலும் இவர்கள் பாடத்திட்டத்திலும் இவர்களை சிறந்த இயந்திர மனிதர்களாக மாற்ற கொடுக்கும் உற்சாகம் அவர்கள் உடல் உளவியல் நலனில் கொடுப்பதில்லை. பல பொறியாளர் பெண்களுக்கு சமூகத்தை பற்றிய பெரிய புரிதல் இல்லை. இதனால் தான் பாட்டு பாடி கிண்டல் அடித்தவன் அவன் தரம் என்ன எச்சூழலில் வாழ்பவன் என பார்க்காது  செருப்பை கழற்றி அடிக்கும் உளவியல் கொடுத்ததும். என்ன தான் பொறியியல் வல்லுனர்கள் ஆகினும் சாதாரண மனிதர்களுடன் வாழ தகுந்த சில பாட திட்டங்கள் அவர்களுக்கு புகுத்துவதும் நல்லது.


இக்கால பெண் உடை நடையில் "மாடேன்" ஆக இருந்தாலும் அவர்கள் அவர்களாக வளருவதற்கான தளங்களும் குறைவு. பல பொறியாளர் பெண்கள் பெற்றோர்களும் படித்தவர்கள் வசதியானவர்கள்  என்பதால் இவர்களை கைபேசி ஊடாக 'ரிமோட் controll' போன்று தங்கள் வளையத்திற்குள் வைத்துள்ளனர். ஒரு சிறு நோய் வந்தாலோ ஏன் தங்கள் துணி மணிகளை கூட சுத்தமாக வைக்க தெரியாதவர்களாக குழந்தைகள் போன்றே வளர்க்கப்படுகின்றனர். இவர்களாக தங்களை வளர்த்து கொள்ளவும் நேரமோ பொறுமையோ இல்லை.  வாரம் ஒரு தேற்வு அதன் போட்டி என இவர்கள் 4 வருடம் உருண்டு ஓடுகின்றது. 5 வருடம் முன் 30-40 ஆயிரம் என்று ஆசை காட்டி ஆள் பிடித்து வேலை கொடுத்த நிறுவனங்களும் இவர்கள் எண்ணம் பெருகப் பெருக 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முதலே கொடுக்கின்றனர்.  வேலையில் கொஞ்சம் சோடை போனாலும் வேலை போய் விடும் என்ற சூழலில் தினம் 10 முதல் 14 மணி நேரம் உழைக்கின்றனர். இவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளோ உணவோ போதிய சத்தோ சுகாதாரமோ ஆனது அல்ல. இவர்களுக்கு விடுமுறை என்பது ஞாயிறு மட்டுமே. இவ்வளவு சிக்கலிலும் வேலையை விட மனம் வருவதில்லை என்று மட்டுமல்ல முடிவதில்லை. மிக பெரும் கல்லூரி கட்டணத்தில் படித்த இந்த இளம் பெண்கள் தலையில் படிப்பு கடனும் இருக்கும். இவையும் மீறி சில பெற்றோர்கள் இவர்கள் இங்கு கஷ்டப்படுவதை ஊருக்கு வரும் போது கரைவச்ச சேலை வாங்கி வா, தம்பிக்கு பீஸ் கட்டனும் என்ன போனே எடுக்க மாட்டுதே என்ற திட்டு வேற.

உற்றோர் உறவினர் இல்லாத இந்த சென்னை பட்டிணத்தில் அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு சரவண ஸ்டோரில் போய் பர்சேஸ் பண்ணுவது இன்னும் பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது. . வயதில் திருமணம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்கா இயலாத அளவிற்கு சூழலின் விதியில் தள்ளப்படுகின்றனர்.

ஒரு காலம் 6 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியில் அனுமதிக்காத பெற்றோர் இன்று  சமூக அந்தஸ்து கருதி ”என் பொண்ணும் வேலைக்கு போறா”, ”அதும் சென்னையில் வேலையில் இருக்கிறா” என்பதை பெருமையான உள்ளத்துடன் ஏற்று கொள்கின்றனர். இங்கோ வேலையிடத்தில் நெருக்கம், தங்கும் இடத்தில் நெருக்கம், தனிப்பட்ட மனப்போராட்டம் என பாலாவில் படத்தில் காணும் தேயிலை தோட்ட கல்வியறிவு அற்ற பெண்களை விட கொடும் துயரில் இக்கட்டில் வாழ்கின்றனர்.

இந்த கொலையை நிகழ்த்தியிருக்கும் அன்னிய மாநில அந்த மனித மிருகங்கள் வாழ்க்கை அதை விட கொடுமையானது. தொழிலுக்காக தன் சொந்தம் பந்தம் வீடு உறவு எல்லாம் விட்டு வந்த இவர்கள் சென்னையிலுள்ள 50 ஆயிரம் தெருவோர மனிதர்களுடன்  இவர்களும் சென்னையை நிரப்பி விடுகின்னர். கேரளாவில் தமிழனை நடத்துவதையும் ஈழத்தை நம் சகோதர்கள் நடத்தப்படுவதையும் கண்டு இரத்த கண்ணீர் வடிக்கும் மனித நேயர்கள் கொண்ட மாநிலத்தில் பீகார், வங்காளக்காரர்களை மனிதர்களாகவே பார்ப்பதே இல்லை. மற்று மாநிலத்தான் வீட்டில் வளர்க்கும் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றான். பல உணவங்களில்  இதே மாற்று மாநில சிறுவர்கள் வேலை செய்கின்றனர். இந்தியனுக்கு துபாய் போல தமிழகம் துபாயாக  தெரிவதால் வந்து சேரும் இந்த மனிதர்கள் இங்கு மனிதர்களாக நடத்தப்படாது மிருங்களாக நடத்தி மிருகமாகவே மாறி போனவர்கள். சென்னையில் நடக்கும் கட்டிடப்பணியில் ஏற்பட்டிருக்கும் இவர்கள் வேலை நேர விபத்தில் இறந்தால் சொந்த தேசத்தை திரும்ப காண முடியாதவர்கள் என்று மட்டுமல்ல இங்கே அனாதை பிணங்களாக புதக்கப்படுகின்றவர்கள்.வழியோரங்களிலும் ஒதுக்குபுறங்களிலும் தங்கி தங்களுக்கான ஜீவனை நடத்துவர்கள்.

ஒன்று தமிழக அரசு இவர்களுக்கான மனித உரிமைகளை பெற்று தந்து  சகமனிதனாக வாழ வழி செய்ய வேண்டும்.  அல்லது இவர்கள் எல்லோரையும் தமிழக எல்கையை விட்டு விரட்ட வேண்டும். அல்லாது இது போன்ற துயருக்கு முடிவில்லை. இங்குள்ள தமிழர்கள் அனாதமாக அன்னிய நாட்டில் வேலை செய்ய எங்கோ இருந்து இங்கு அகதியாக இன்னும் சில மனிதர்கள் வேலை செய்ய என்பது முதளித்துவ சுரண்டல் மட்டுமே நாம் காணும் சமூகமெங்கும். அரசியல், சமூக, பொருளாதார என எல்லா சுரணலும் ஒன்றாய் ஆட்டிப்படைக்க பாவம் ஒன்றுமறியா பெண்கள் உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.Migrated labour

இதில் மிகவும் என்னை வருந்தச் செய்தது இந்த மீடியாவின் செய்தி ஆக்கமாகும். அந்த பெண்ணுக்கு நேர்ந்தது தன் உடன் பிறந்தவருக்கு அல்லது தனக்கு தெரிந்தவருக்கு நேர்ந்திருந்தால் வரிக்கு வரி விடாது எழுதி அவரின் மாண்பை கெடுக்க முனையுவார்களா? அப்பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தோர், அறிந்தவர்கள் எல்லோரையும் அவமதிக்கின்றனர் விளாவாரியான செய்தியூடாக. செய்தியை நோக்கும் போது ஒரு கொடியவன் இன்னும் தூண்டப்பட்டு பெண் உடல் இவ்வளவு மலிவானதா என்ற எண்ணத்தில் தான் எட்டுவான். பத்திரிக்கை செய்திகளுக்கும் ஒரு  மனித நேயம் வேண்டும். அச்சடிப்பது இயந்திரமாக இருந்தால் கூட அதில் பணி செய்யும் தோழனே உனக்கும் அந்த கொடிய மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?