19 Jun 2026

சிறந்த பேராசிரியர் யார்?

சிறந்த பேராசிரியர் யார்?
ஒரு நாட்டின் உயர்கல்வி அமைப்பின் தரத்தை நிர்ணயிப்பவர்கள் பேராசிரியர்கள். அவர்கள் வெறும் பாடங்களை கற்பிப்பவர்களாக மட்டுமல்ல; எதிர்கால தலைமுறையின் சிந்தனை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வடிவமைப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, ஒரு சிறந்த பேராசிரியர் என்பது பட்டங்களும் கல்வித் தகுதிகளும் கொண்டவராக மட்டும் இருப்பதில்லை. அறிவு, கற்பித்தல் திறன், நேர்மை, பரிவு மற்றும் மாணவர்களும் சமூகமும் முன்னேற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வை ஒருங்கே கொண்டவராக இருப்பார்.
ஒரு சிறந்த பேராசிரியர் தனது பாடத் துறையில் ஆழ்ந்த அறிவும் தொடர்ச்சியான கற்றல் மனப்பான்மையும் கொண்டிருப்பார். சிக்கலான கருத்துக்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கும். மாணவர்களை பாகுபாடின்றி, நேர்மையுடன் நடத்துவதோடு, அவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்படுவார்.
கல்வி என்பது ஒருவழிப் போதனை அல்ல. மாணவர்களின் கருத்துக்களைக் கவனமாகக் கேட்டு, அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் கற்றல் சூழலை உருவாக்குவதே சிறந்த ஆசிரியரின் அடையாளமாகும். மாணவர்கள் அச்சமின்றி கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிப்பார். என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அல்ல, எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை கற்பிப்பதன் மூலம் சுயசிந்தனையையும் விமர்சனப் பார்வையையும் வளர்ப்பார்.
உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியரின் பணி வகுப்பறைக்குள் மட்டுப்படுவதில்லை. ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் ஈடுபட்டு புதிய அறிவை உருவாக்குவதிலும் அவர் பங்காற்ற வேண்டும். மாணவர்களிடையே ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் தூண்டி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொறுப்பும் அவருக்கே உரியது.
அதேவேளை, கல்வி என்பது சமூகத்திற்குச் சேவை செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை உணர்ந்திருப்பார். ஒழுக்கநெறிகள், குடிமைப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் பல்வகைமையை மதிக்கும் பண்புகளை மாணவர்களிடம் வளர்க்க முயற்சிப்பார்.
கல்வித் துறையில் பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஒரு கூற்று இதனைச் சுருக்கமாக விளக்குகிறது: “சாதாரண ஆசிரியர் கூறுவார்; நல்ல ஆசிரியர் விளக்குவார்; சிறந்த ஆசிரியர் செய்து காட்டுவார்; மகத்தான ஆசிரியர் ஊக்குவிப்பார்.”
எனவே, ஒரு சிறந்த பேராசிரியர் என்பது மாணவர்களை அறிவாளிகளாக மட்டுமல்லாமல், ஒழுக்கமிக்கவர்களாகவும், சுயசிந்தனை கொண்டவர்களாகவும், சமூகப் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களாகவும் உருவாக்கத் தூண்டுபவராக இருப்பார். அவர்களின் பங்களிப்பே ஒரு நாட்டின் அறிவுசார் மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அமைகிறது.
இப்படி நினைத்து ஆகா மாபெரும் பணி செய்ய போகிறோம் என நினைப்போம். அதற்கான பயிற்சி என பலரை வைத்து பேச வைத்து உற்சாகப்படுத்துவார்கள்.
ஆனால் நிஜத்தில் பேராசிரியர் பாடத்திட்டம் சார்ந்து பாடங்களை கற்பிக்க மட்டும் செய்தால் போதும்.
மாணவனை படி என்று கட்டாயப்படுத்த கூடாது
மாணவன் வகுப்பை கவனிக்காவிடிலும் பேராசிரியர் கண்டு கொள்ளக் கூடாது. துணை முதல்வர்கள் என்ற பெயரில் உள்ள கண் காணிகளிடம் அனுப்பி விட வேண்டும்.
இதில் இரண்டு பிரச்சினை
ஒரு மாணவனை இன்னொரு நபரிடம் புறணி குற்றம் கூறி அனுப்புதல் என்பது ஆசிரியரின் இயலாமையை மாணவரிடமே சொல்வது போலவே இருக்கும். மாணவன் துணை முதல்வரிடம் செல்லும் போது அந்த நபருக்கு குறைந்த பட்ஷம் தன் அதிகாரம் சார்ந்த ஈகோ பூர்த்தியாகும்.
சொல்லப்போனால் ஒழுங்கீன மாணவனும் துணை முதல்வரும் பிற்காலம் தோளில் கை போடும் அளவிற்கு நட்பாகி விடுவார்கள். திரும்பி வகுப்பிற்குள் வரும் மாணவன் ஆசிரியையை மதிக்கவே மாட்
டான்.அப்போது ஆசிரியைக்கு ஒரே வழி மட்டுமே மிஞ்சும்.மாணவன் ஒழுங்கீனத்தை கண்டு கொள்ளாமல் தன் சுயமரியாதையை காப்பாற்றி கடந்து போவார்.
தொடரும்......
See less

0 Comments:

Post a Comment