Showing posts with label Travel- பயணம். Show all posts
Showing posts with label Travel- பயணம். Show all posts

28 Jan 2018

கிறிஸ்தவம் மதமல்ல மனிதநேயம்- ஆமி வில்சன் கார்மைக்கேல்

 சமூக சூழலால் கெடுதிக்குள்ளான  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கு  அம்மையாக  இருந்த  ஆமி கார்மைக்கேல்  அம்மாவின்  வாழ்விடம்  கண்டு  வரும்  வாய்ப்பைப்  பெற்றேன்.  டோனாவூர்  ஃபெலோஷிப் என்ற பெயரில் 50 வருடங்கலுக்கு மேலாக தென் தமிழகத்தின் எல்லையருகே  பணங்குடிக்கு  அருகே அமைந்திருக்கும் சிற்றூர்  டோனாவூரை  உலக  பார்வைக்கு எட்ட வைத்தவர்  ஆமி அம்மையார்..

ஆமி கார்மைக்கேல்அயர்லாந்தை சேர்ந்த டேவிட் - காத்தரின் தம்பதியரின் ஏழு பிள்ளைகளில் முதல் குழந்தையாக   செல்வந்த குடும்பத்தில் 1867 ஆம்  ஆண்டு பிறந்து   செல்வச்செழிப்புடன்  வளர்க்கப்பட்டவர்.  கல்விக் கூடங்களை  நம்பி  குழந்தைகளை  படிப்பிப்பதை  விரும்பாமல்;  வீ ட்டில்  ஆசிரியர்களை வருவித்து  இசை, நடனம், குதிரை  ஓட்டம்  மற்றும்  நீச்சல்  பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளார்.

ஆமிக்கு 16 வயதுள்ள போது  துரஷ்டவசமாக, நிமோணியா  காச்சலில்  தந்தையார்  இறந்து  விட  குடும்பம் வறுமையில் பிடியில்  சிக்கி தவித்தது.  இருப்பினும் மூத்த மகளாக, தாய்க்கும் உதவியாக  இருந்து  வந்துள்ளார்.  தனது  24 வது வயதில் கிருஸ்தவ மிஷினரியாக சேவையாற்றும் விருப்பத்தை தன் தாயாரிடம் தெரிவித்தார்.  

ஆங்கிலிக்கன் சபை மிஷனரிகளின் சார்பில் தனது முதல் பயணத்தை ஜப்பான் நோக்கி புறப்பட்டாலும் நரம்பு தளர்ச்சி நோய்  காரணமாக  தன்  சொந்த தேசம் திரும்ப வேண்டிய  கட்டாயம்  வந்தது.  உடல் தேறியதும் சீனா நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஆமி பின்பு சிலோணிலும்  தனது தலைமை  மிஷினரியின் கட்டளைக்கு இணங்கி பங்கலூரில்  தன் சேவையை தொடர்கிறார்.  வெயில் காலத்தில் குன்றூருக்கும் ஊட்டிக்கும் பயணிக்கும் வேளையில் தமிழ் கற்கும் ஆவலில் பண்ணவிளையில் ஊழியம் செய்து வந்த மிஷனரி உவாக்கரை சந்தித்த கார்மைக்கேல் ,  உவாக்கருடைய வேண்டுகோளுக்கு  இணங்க பண்ணைவிளையில் தங்கி தன் சேவையை ஆற்றி வருகின்றார்..

அங்கிருக்கவே  சாயபுரம் மற்றும்  சமீப பிரதேசங்களில்  மதம், பண்பாடு என்ற பெயரில் இருந்த தேவதாசி, குழந்தைத் திருமணம், விதவைகள் நிலை கண்டு அதிற்சியடைகின்றார்.  இந்நிலையில். 1901 ல் கோயில் குழந்தையாக சேர்க்கப்பட்ட ஏழு வயது சிறுமி ப்ரீணா கார்மைக்கேல் இல்லத்தில் தஞ்சம் அடைகின்றார்.  இக்குழந்தைகளைகோயில் பணியுடன் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்படுவதை அறிந்த ஆமி அம்மையார்  இனி தன் சேவை புரக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கானது என கண்டு கொள்கிறார்.  இக்குழந்தைகளை காப்பாற்றி தன் பொறுப்பில் வளர்க்க முடிவெடுக்கின்றார்


 1913 க்குள் 130 பெண் குழந்தைகள் கார்மைக்கேல் இல்லத்தில் அடக்கலம் புகிர்கின்றனர். குழந்தைகளை பராமரிக்க என்றே கத்தோலிக்கத்தில் சபையில் அருட் சகோதரிகள் கூட்டமைப்பு இருப்பது  போன்று  சகோதரிகள் சங்கம்  என்ற அமைப்பை சீர்திருத்த தெற்கிந்தியா சபையின் அதிகார வரம்பின் கீழ் 1916 ல்நிறுவுகின்றார்தேவதாசிகளாக  பாதிப்படைந்து மீட்கப்பட்ட  பெண்களுக்கு பிறந்த  ஆண் குழந்தைகளுக்கும்  1918 இல்லம் அமைக்கின்றார்.  இங்கிலாந்து அரசியிடம்  பெற்ற நன்கொடை கொண்டு  டோனாவூரில் 400 ஏக்கர் இடம் வாங்கி, இவர்களுக்கு என காப்பகம், கல்வி நிலையம், மருத்துவமனை  அமைத்து . தன் பொறுப்பில் கல்வி மற்றும் கைத்தொழில் கற்று கொடுத்து காத்து வந்துள்ளார்.


1920 வாக்கில் தென்னகத்தின் ராபின் ஹுட் என அறியப்பட்ட வடலிவிளை செம்புலிங்கம், சில வஞ்சகர்களால் சிக்கவைக்கபட்டு, போலிசாரால் தீவிரமாக தேடபட்டவர் . செம்புலிங்கத்தின் (சுயம்பு லிங்கம்) வேண்டுதலுக்கு இணங்க; செம்புலிங்கத்தின் குழந்தைகளையும் காப்பாற்றி தன் பராமரிப்பில் கல்வி கொடுத்துள்ளார்.  செம்புலிங்கம் போலிசில் சரண் அடைந்து அரசால் மன்னிக்கப்பட்டு வாழ முயற்சி மேற்கொண்டும்  நடக்காது போனதில் பெரும் வருத்தம் கொண்டவர் . அரசால் கொடும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டசெம்புலிங்கத்தை;  பாளையம் கோட்டை ஜெயிலிலும், ஒளிந்து வாழ்ந்த போது காடுகளிலும் சென்று சந்தித்து வந்துள்ளார்

சமூகத்தில் பண்பாடு என்ற பெயரிம், மக்கள் பின்பற்றும் வழக்கத்தை எதிர்ப்பதும் இல்லாது  பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு காப்பாற்றி வந்தமையால்  ஆதிக்க  அதிகாரமிக்க மக்களின் எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். . அரசியல்  குற்றவாளியிடம் பரிவு  காட்ட  ஆங்கிலேய அரசை  பரிந்துரைத்ததால் ஆமி அம்மையார் ஆங்கிலேய அரசின் எதிர்ப்பையும் பல முறை சந்தித்திதுள்ளார்.

தன்னுடைய உடல் உபாதைகள் மத்தியிலும் பெண்கள்  சமூக கெடுதியில் இருந்தும் ஆண்களின் ஆதிக்கத்தில்  இருந்தும்  காப்பாற்றப்பட  வேண்டும் என போராடினவர். தனது 61 வது வயதினில் 1931 ஆம் ஆண்டு  விழுந்தமையால் கால் முறியப்படுகின்றது.  பின்பு எழுந்த நடக்க  இயலா வண்ணம் 20 வருடங்கள் படுத்த படுக்கையிலானார்.
தன்னுடைய உடல் இயலாமையையும்  பொருட்படுத்தாது 1951 ஆம் வருடம் தான்  83 வது வயதில் இறக்கும் மட்டும் 36 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  அதில் கொள்ளைக்காரர்  செம்புலிங்கத்தை பற்றி எழுதிய ஒரு புத்தகவும் அடங்கும்.

கிறிஸ்தவம் மதமல்ல மனிதநேயம் என வாழ்ந்து காட்டிய பெண்மணியவர். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுவதிலே பெருமை கண்டவர்.  ஆண் குழந்தை என்றால் பெயருடன் ஆனந்த் என்றும் பெண் குழந்தை என்றால் காருண்யா என்றும் சேர்த்து பெயரிட்டு வந்துள்ளார்.  ஆமி அம்மையாரும் தனது உடையாக சேலையை தேர்ந்து எடுத்து அணிந்து வந்துள்ளார்.

ஜப்பான் கட்டிடகலையும் கேரளா கட்டிடக்கலையும் இணைத்து  தன் இருப்பிடங்களை கட்டி முடித்துள்ளார்மார்த்தாண்டத்திலுள்ள பத்மநாபா அரண்மனையை பல முறை சென்று கண்டு,  தனது இல்லத்தையும்  அரண்மனை பாணியில் கட்டியுள்ளார். நமது கலாச்சாரத்தின் அடையாளமான முற்றம் , கொல்லம் ஓடு, அடுக்கு மாடியல்லாது வரிசை வீடுகளாகவே கட்டியுள்ளார். . அவர் கட்டின தேவயவும் பொதுவான கிருஸ்தவ  ஆலய அமைப்பை  விடுத்து  ஜப்பான்  கட்டிட கலையுடனே திகழ்கின்து.

கோயில்  மணி கோபுரத்தில் டுயூப் இசைக்கருவி பொருத்தியுள்ளனர். ஒரு சுற்றிகை போன்ற கட்டையால்  அடித்து இனிமையான  இசை இசைத்தார் மேமா என்சகோதரி.
 அம்மையாரின் வீட்டு முற்றத்தில் தங்களுக்கு வேண்டாத குழந்தகளை தொட்டிலில் இட்டு செல்ல  தொட்டிலும் ஒலி எழுப்ப மணியும் நிறுவியுள்ளார்கள்தொட்டில் குழந்தை திட்டம் கார்மைல் அம்மையார் காலத்தில் இருந்தே இருந்துள்ளது என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. குழந்தை பிறந்ததும் தாய் இறந்தாலோ கவனிக்க ஆள் இல்லாத சூழலில்  குழந்தைகளை  தொட்டிலில் இட்டு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. அக்கா, சித்தி,பெரியம்மா பாட்டி என்ற உறவில் ஒரு முதிய பெண்ணுக்கு 12 குழந்தைகள் என்ற கணக்கில் 1000 குழந்தைகளுக்கு வரை அடக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.tube music

இந்தியாவின் தேசிய மலராம் தாமிரைப்பூவிடம்  அலாதி பிரியம் கொண்ட அம்மையார் கோயில் கட்டளை, முன் வாசல் கதவு , முகப்பு, பீடம் என தாமிரையும் அதன் மொட்டுமாக  கொத்தி வடித்து அலங்கரித்துள்ளார்.  தாமிரை மொட்டுக்கள் என்ற புத்தகவும் எழுதியுள்ளார். கோயில் அருகில் அழகான தாமரைக்குளம் உள்ளது. நீலத்தாமரை மலர்களால் நிரம்பி வழிந்த காட்சி கண்கொள்ளா காட்சி ஆகும்க்ஷ்



அம்மாவின் ஏற்பாட்டில் விரும்பின கல்வி பெற்று செவிலயர்களாகவும், ஆசிரியைகளாகவும் வேலையில் இருந்துள்ளனர், திரும வாழ்க்கைக்குள் செல்ல விரும்பினோரை திரும ணம் செய்து வைத்துள்ளார். ஆசிரமத்தில் வளர்ந்து வயோதிக நிலையில் அங்கு மகிழ்ச்சியுடன் வசிக்கும் பல தாய் மார்களை சந்தித்தோம்.காவி சேலை அல்லது நீல சேலை உடை அணிந்து தற்போதும் சேவையாற்றி வருகின்றனர்.

அம்மா, தான் இறந்தால்  தனக்காக  நினைவுச்சின்னம்  எழுப்ப வேண்டாம்  என்றும் பறவைகளின் தாகம் தீர்க்க  ஒரு சிறு தண்ணீர் தொட்டி மட்டும் மைக்க கூறியுள்ளார்.  அதற்கு இணங்க அன்பே உருவான அம்மாவின் நினைவுடன் பறைவகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் ஸ்தூபி மட்டுமே அன்பின் அடையாளமாகஅம்மைஎன்ற குறிப்புடன் உள்ளது.

அம்மாவின் காலத்தில் ஆயிரம் பேருக்கும் அடக்கலம் கொடுத்த  இடத்தில்  . தற்போது  400 ஏக்கர் நிலப்பரப்பளவில் 500 பேருடன் 16 குழந்தைகள்  குடியிருப்புகள்  ஒரு மருத்துவ மனை மிஷனரி குழந்தைகளுக்கான உறவிட பள்ளியும் உள்ளது. 1982 க்கு பின்பு அனாதை ஆண் குழந்தைகளுக்கு இடம் கொடுப்பது இல்லை. மிஷனரி குழந்தைகள் மட்டுமே அங்கு தங்கி படித்து வருகின்றனர்.

மக்களின் தேவையும் சூழலும் மாறியிருப்பினும் இப்போதும் அனாதர்களான புரக்கணிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளும் பெண்களும் தன்னலமற்ற சேவை பெறும் படியே உள்ளனர். தற்போது  500 குழந்தைகளுடன்  ஆமி அம்மையார் இருக்கும் போது அடைக்கலம் கொடுத்த பெண்களுக்கு மட்டுமே சேவை பெறும் இல்லமாக சுருங்கி  போனதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

வெளிநாட்டு மிஷனரிகளின்  இடத்தை  இந்திய வம்சாவளி மிஷனரிகள் பிடித்த போது சேவை இல்லங்களின் சமூக அக்கறையும் நோக்கவும் மாறி போய் விட்ட்தையும் மறுக்கல் ஆகாது.

கிருச்தவம் மதமல்ல யேசுநாதர் மதத்தை உருவாக்கவில்லை  அவர் மனிதத்தையே போதித்து சென்றுள்ளார் . ஆமி கார்மைல் என்ற யேசுவின் சீடையும் செய்த்து அதுவே. அத்தாயின் சேவை கனவு ஆயிரமாயிரம் ஆண்டு தொடர வேண்டும்  என் எண்ணத்துடன்  அழகிய ச்சை தோப்பாக காட்சி ளிக்கும் அந்த பூங்காவை விட்டு, ஏதேன் தோட்டத்தை விட்டு நகர்ந்து வந்தோம்.

ஆசிரமத்தின் முன் பிச்சைக்காரர்கள் கையேந்தும் ஓடு காய்க்கும் மரவும் கண்ணில் பட்டது.  வாழ்க்கை ஒரு பிச்சை தான் என உணர்த்தவோ என்னவோ!

    

1 Apr 2013

பாண்டவர்கள் வாழ்ந்த பாஞ்சாலிமேடு!


பயணங்கள் எப்போதும் சிறப்பானதும் நம் நிதம் வாழ்க்கையின் இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற்று  புத்துணற்சி தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.  நான் பிறந்த ஊர் மேற்கு தொடற்சி  மலைய்யின் அடிவாரத்தில்  நிலைகொண்டிருப்பதால் மலைகள் என் வாழ்க்கையுடன் இணைந்தவை.  மஞ்சு மலை, பட்டுமலை, என எங்கள் ஊர் பெயர்களுடன் இணைந்து இருப்பதும் மலைகளாகத் தான் இருக்கும். இந்த முறை பாஞ்சாலிமேடு என்ற மலையை தேடி எங்கள் பயணம் ஆரம்பித்தது. மலையாளத்தில் மேடு என்றால் குன்றையை குறிக்கின்றது. பாஞ்சாலி பெயர் ஒட்டி கொண்டிருப்பதால் இந்த மலையை கண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு தொற்றி கொண்டது. பாஞ்சாலி தன் கணவர்களுடன் வசித்த மலை என்பதால் பாஞ்சாலி மேடு என்று அறியப்படுகின்றது என அறிந்து கொண்டோம். .

குமளி - கோட்டயம் பாதையில் குட்டிக்கானம் என்ற இடத்தில்  இருந்து  ஐந்து கி.மீ பயணித்தால் புல்லுப்பாறை என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து இடப்புறம்  நோக்கி 4 கி.மீ நெடிய குறுகிய பாதையினூடாக மேல் நோக்கி பயணிக்கும் போது  பாஞ்சாலிமேட்டை அடைகின்றோம். வழியில் வழி கேட்க கூட மனிதர்களை காண்பது அரிதே. ஐஸ் விற்பவர்கள் மட்டுமே காண இயலும். கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் உள்ளது. மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பயணம் இது. உள்ளூர் ஓட்டுனர்களின் வாகனத்தில் பயணிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும். சர்கஸ் வித்தகன் கயிற்றில் நடப்பது போலவே மலைப்பாம்பு போன்று வளைந்து நெளிந்து கிடக்கும் ரோட்டின் வழியான நம் பயணம்,  சவாலான பயணமாகத்தான் உள்ளது.

பின் நோக்கினால் இவ்வளவு தூரம் பின்னிட்டு வந்துள்ளோமா என்று மலைப்பாக  உள்ளது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பாஞ்சாலி மலை நோக்கி நடக்க ஆயத்தமானோம்துவக்கமே ஆச்சரியமாக இருந்தது. ஒரே இடத்தில் சில அடிகள் மட்டும் இடைவெளியில் இரு சமையங்களின் வழிப்பாடு தலங்கள் இயற்கையின் பாதுகாப்பில் அமைதியாக நிலைகொள்கின்றது. யேசு நாதரின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும்  வண்ணம்  சிலுவைகள் வரிசையாக பதிக்கப்பட்டு ஒரு திசை நோக்கி செல்ல அடுத்த திசையில்  ஹிந்து-ஆரிய சமய கோயில்கள் புராதன அடையாள சின்னங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. புவனேஸ்வரி தேவியின் கோயில் இங்கு காணலாம்பழைய கல்-மண் கோயில், புதிப்பித்து கட்டிய சிறு கோயில், பக்கத்தில் சிவலிங்கம், சூலம் மற்றும் பல அடையாள சின்னங்கள் என அங்கு கண்ட காட்சிகள் நம்மை வரலாற்றை  உற்று நோக்க வைக்கின்றது! பாஞ்சாலி தன் கணவருடன் இங்கு வசித்திருந்தாகவும் அவர் வணங்கிய ஆலயம், அவர் குளித்த குளம் என பல வரலாற்று சின்னங்கள் கொட்டி கிடக்கின்றன. குகையில் பீமனின் கால் தடவும் பதிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த மலை முகப்பில் கூடாரம் போட்டு ஆராய்ச்சி மேற்கொண்ட அடையாளங்களும் காணலாம். இந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் சபரி மலையில் எரியும் ஜோதியை காணலாம் என்கின்றனர். இதன் இன்னொரு பகுதியில்  பாண்வர்மேடு என்ற இடவும் உண்டு.

மேல் நோக்கி செங்குத்தான பாதையில் நடக்க  மூச்சு வாங்கினாலும் ஆட்கள் அரவம் அற்ற,  இயற்கையின் அரவணப்பில் புல் வெளிப்பாதையில் மலை உச்சியை நோக்கி  நடக்க நடக்க ஒரு வித பரவசம்  நம்மை பற்றி கொள்கின்றது. கொடும் வனத்தில்  மொட்டை புல் வெளிகளின் அழகு அலாதியானது. கையில் எடுத்தால் அரிக்கும் ஆனால் ஒருவித  வாசமுள்ள எழில் கொண்ட புல் செடியின் பூக்கள் நம் கண்களுக்கு விருந்தாகின. சுத்தமான காற்று இதமான கால சூழல் என இயற்கையுடன் ஐக்கியமாக்கும் ரம்மியமாகும் பொழுதுகள் நமக்கு அலாதியானது. அந்த சூழலை நீங்கள் கண்டு அனுபவித்து உணரலாம் பாஞ்சாலிமேட்டில்! கடல் கரையில் நின்று ஆற்பரிக்கும் அலைகளை கண்டு ரசிப்பது போல் கைநீட்டினால் தொட்டு விடலாம் என்று நற்பாசை தரும் பரந்து விரிந்து கிடக்கும் நீல வண்ண மேகங்கள், கிடந்து உருண்டு வா என அழைக்கும் பச்சை புல் வெளிகள், காட்டு புஸ்பங்கள் என கொள்ளை அழகு கொள்ளும் இயற்கையை கண்டு வெளிச்சத்துடன் திரும்ப வேண்டும். பனி மூடும் பிரதேசம் என்பதால் இரவு பயணம் உகுந்தது அல்ல. மழை நேரம் இங்கு பயணம் மேற்கொள்ளுவதும் முற்றும் தவிற்க வேண்டியது.

இயற்கைய்யின் வளப்பில் சொக்கி நிற்க மழை வர ஆரம்பித்தது. பனிநீராக விழுந்த மழையில் நனைவதும் சுகமாகவே இருந்தது. பனி கூடுவதும் பிரிவதுமாக கண்ணாமூச்சி விளயாட்டு ஆடி கொண்டிருந்தது. மழை விடாது இனி நகர இயலாது. அந்த மேகங்கள் போட்டி போட்டி ஓடி மறைவதும் வானம் தெளிவதும் மழை வருவதும் பின்பு பனி மூடுவதுமாக ஒரே இயற்கை அன்னையின்  புன்சிரிப்பாகத்தான் இருந்தது. நல்ல வேளை இடிமின்னலுடன் அவள் சத்தமாக சிரிக்கவில்லை. அப்படியே நடுங்கிய படி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சாயக்கடையை வந்து அடைந்தோம். சூடா ஒரு கட்டன் சாயாவுடன்  சூடாக பச்சி வடை வாங்கி சாப்பிட்டு விட்டு மழை விட காத்திருந்தோம். 

 மலை ஏறினால் இறங்கி தானே ஆக வேண்டும். இறக்கம் என்பதால் திரும்பும் பயணம் எளிதாக இருந்தது. இருப்பினும் பிரிய மனம் இல்லாது அந்த குளிர்தரும் துளிர் நினைவுடன் பிரியா மனம் கொண்டு பாஞ்சாலி மேட்டிடம் விடை பெற்று அடுத்த மலை நோக்கி பயணம் ஆனோம். (குறிப்பு: சமீபத்தில் வெளிவந்த பலத்திரைப்படங்கள் காட்சிகள் இங்கு அமைத்துள்ளனர். உதாரணம்: மலையாளப்படம். சார்லி














தங்குமிடம் இங்கு விசாரித்து கொள்ளலாம்.                                               
1) paradise plantation retreat(Murinjapuzha, Kerala Dist 0469 2701311)                                                2)Dream land hill resort : (Kuttikanam P.O, Peermedu, Near Thekkady
Kuttikanam 09447304467)