திராவிட அரசியல் நாடார்களுக்கு எதிராக இருப்பது போன்று தான் இன்றைய கிறிஸ்தவ சபைகள் நாடார் சபையா என திராவிட கொள்கை பரப்பு எழுத்தாணிகளை வைத்து எழுதி வரும் கட்டுரைகள் மற்றும் நேர்முகங்கள்.
26 Dec 2025
3 Jul 2025
"சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக வேண்டும்" "The law doesn't see, and we have to be its strong eyes .F. V அருள் IG
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வாழையடி பூர்வீகமாக கொண்ட
F. V அருள் (பிரெடெரிக் விக்டர் அருள்) 1917 நவம்பர் 24 அன்று யாங்கூனில் (ரங்கூன்) பர்மாவில் பிறந்தார்.
In 1970, Frederick Victor Arul, also called as F.V.Arul IPS became the first Indian to serve the interpol as the vice president of Asia.— at Tamilnadu Police Museum.
லயோலா மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படித்த இவர் பிரிட்டிஷ் ஆட்சி காலம் 1942 ஆம் ஆண்டு இந்திய போலீசில் தேர்ச்சி பெற்றார். F.V அருள் ஹாக்கி விளையாட்டு வீர ராகவும் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
1968 மே 31 முதல் 1971 மே 6 வரை மத்திய விசாரணை பணியகத்தின் (CBI) இயக்குநராக
பணியாற்றியுள்ளார். CBI-யில் பணியாற்றும் காலத்திலேயே, இவர்
இண்டர்போல் அமைப்பின் செயற்குழுவில் ஆசியாவிற்கான துணைத் தலைவராக பதவி வகித்து, அந்த உலக
அமைப்பில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியராகவும் இருந்தார்
1973 முதல் 1976 வரை மாநில காவல்துறையில் கடைசி இன்ஸ்பெக்டர்
ஜெனரல் IG பதவியை வகித்தவர். 1976-ல் அவரின் ஓய்வுவிற்கு பிறகு, அப்
பதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (DGP) என மாற்றப்பட்டது.
பிரெடெரிக் விக்டர் அருளின் போலிஸ் காவல் பணிகள் குறித்த அவரின் அறிவு அளவிட
முடியாதது. அவருடைய கொள்கைகள் ஆளும் அரசியல் வசதிக்கேற்ப
அமையவில்லை, அரசியல் விளைவுகளை
எதிர்கொள்ளும் தைரியம் அவரிடம் இருந்தது.
அவர் சிலருக்கு 'விருப்பமானவர்' என்று
சொல்லப்படும் வகையிலோ சலுகைகள் நாடுபவர்களுக்கு அவர் எளிதில் அணுகக்கூடியவராக
இல்லாமல் இருந்தார். அருளின் வாழ்க்கை
இந்திய காவல் துறையினருக்கு ஒரு பேருதாரணம் ஆகும்.
சிறந்த உடற்தகுதி, நீண்டநேர திடமான பணி, தூய்மையான
வாழ்க்கைமுறை ஆகியவற்றால் அவர் தனக்கென ஒரு முத்திரை பதித்திருந்தார். 1956ல் சென்னை
துறைமுக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1965ல் ஆங்கில எதிர்ப்பு இயக்கம் போன்ற
நிகழ்வுகளை அவர் தைரியமாக கையாண்டார். சட்ட
ஒழுங்கு காவலாளி ஆக செயல்பட்டுள்ளார்
இரண்டு முக்கிய வழக்குகள் அருளுடன் நெருக்கமாக தொடர்புடையவையாக இருந்தன
1. 1950களில் நடந்த நியூயார்க் காடன் சூதாட்டம்: மதராசில் ஒரு கும்பல் காடன் விலைகள் அடிப்படையில் சூதாடி, போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு பெற்றனர். அருள் விசாரணை செய்து பலரை குற்றவாளிகளாள் என நிரூபித்தார்.
2. 1959ல் கோயம்புத்தூரில் நடந்த ரூ.100 கள்ளநோட்டு வழக்கு: சுமார் ஒருவர் – கோயம்புத்தூரின் துணியதொழில் முதலாளி கிருஷ்ணன் – பணச் சிக்கல்களை சமாளிக்க கள்ளநோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டதாக அவர் கண்டுபிடித்தார். நேரடி விசாரணைகள், சாட்சிகள் என்று மிகவும் காத்திரமான எச்சரிக்கையுடன் விசாரணையை மேற்கொண்டவர்.
இந்த வெற்றிகள் அவரை 1968-ல் CBI இயக்குனராக உயர்த்தின.
அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றியபின், Interpol-இன்
செயற்குழுவில் ஆசியாவுக்கான துணைத் தலைவராக (Vice-President) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர்
ஆனார். அவரது அறிவும், பண்பும், மற்றும் சர்வதேச குற்றவியல் விசாரணைத் துறையில்
நிபுணத்துவமும் பெரும் மதிப்பை பெற்றன.
Interpol செயலாளர் ரேமண்ட் கெண்டல் இவரை பற்றி உருக்கமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.
”தொழில்நுட்பம் இன்று வளர்ந்திருந்தாலும், அவரது தொழில் நிபுணத்துவம் என்றும் நினைவில் இருக்கும்." அருளுடன் எனது முதல் சந்திப்பு 1965ல், IPS பயிற்சியை முடித்தபின் சென்னை காவல் தலைமையகத்தில் நடந்தது. அவர் நேரத்தையும், வார்த்தையையும் வீணாக்காதவர். அடக்கம் மற்றும் ஆளுமையுடன் பேசுவார். மாவட்ட காவல் பணிக்கேற்றவர் நான் இல்லை என உணர்ந்ததும், நேரடியாக டெல்லிக்கு, உளவுத்துறை பணிக்கு என்னை அனுப்பிவைத்தார்”.
இந்திய காவல்த் துறையில் நேர்மை கொண்டவராக பெயர் பெற்றவர் எப். வி. அருள். இந்தியாவின்
மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) தலைவராக இருந்த காலத்திலும், அதற்கு
முன்னர் அவர் கொண்டிருந்த பணிக்காலத்திலும், பல முக்கிய
விசாரணைகளில் அவரது பங்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவருடன் பணியாற்றியவர்கள், அவர் மிகுந்த
கவனத்துடன் திட்டமிட்டு செயல்படுத்துபவராக
இருந்தார் என்கின்றனர். நீதிக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு, அவர்
வழிநடத்திய முக்கியமான விசாரணைகளில் தெளிவாக இருந்தது என்கின்றனர். எப்போதும் நேர்மையானவராக
இருந்த எப். வி. அருள், "சட்டத்திற்கு பார்வையில்லை, நாம் அதன் வலுவான கண்கள் ஆக
வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள், எவருக்கும் பயமின்றி, தைரியமாக நியாயத்தை நிலைநாட்ட அவருக்கு இருந்த உறுதியைக்
காட்டுகின்றன.
தனிப்பட்ட விசாரணைகளைத் தவிர, CBI-யின் தலைவராக
இருந்தபோது அவர் புதிய புலனாய்வு முறைகளை உருவாக்கவும், மற்றும் முறையான பணிச்சூழலை வளர்க்கவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்.
எஃப். வி. அருள் சிக்கலான தருணங்களில் கூட மிகவும் விரைவாக முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார். அவருடைய வேலையின் அடிப்படைத் தன்மைகளாக நேர்மைக்கும் நியாயத்திற்கு உறுதி அளித்துள்ளார். பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ச்சியாக நல்ல தொடர்பாடலுடனும் இருந்துள்ளார்.
அவரது பணியின் பாங்கு
மிகுந்த ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு கொண்டது என்பதைச்
சுட்டிக்காட்டுகிறது. மத்திய புலனாய்வு
இயக்கத்தின் (CBI) முன்னாள் இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும்
குற்றவியல் விசாரணை முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டு இருந்துள்ளது.
" Mr F.V. Arul, IP, Director CBI and Mr. E.L. Stracey, IP, Chief of Tamil Nadu Police, Prof Dr P. Chandra Sekhara
துறைக்கு செய்த பங்களிப்பு
மத்திய புலனாய்வு இயக்கத்தின் (CBI) முன்னாள்
இயக்குநராக இருந்தபோது, இந்தியாவின் சட்ட அமலாக்கம் மற்றும் குற்றவியல் விசாரணை
முறைகளில் பெரிதும் முன்னேற்றம் காணப்பட்டது. அவரது பதவிக்காலத்தில் CBI-யின்
விசாரணைத் திட்டங்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு
வகித்தார்.
அவர் அனைத்து நிலைகளிலும் ஊழலை எதிர்க்கும் தனது
அர்ப்பணிப்பு காரணமாக, பல முக்கிய வழக்குகள் வெற்றிகரமாக நீதிமன்றத்தில்
கொண்டு வரப்பட்டன. அவரது தலைமையின்போது, CBI-யில் நேர்மை மற்றும் நியாயத்திற்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, அது காவல் அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை
அதிகரிக்கச் செய்தது.
மேலும், புலனாய்வு முறைகளை மேம்படுத்த அவர் வலியுறுத்தினார். அதில்
நவீன தொழில்நுட்பங்களும், நீதிக்கான விஞ்ஞானம் (forensic science)
பற்றிய ஆதரவும் அடங்கும். இந்தியாவிற்குள்
மட்டுமல்லாது, உலகளாவிய பாதுகாப்புத் துறைகளுடனான ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் பணி அவரால்
முன்னெடுக்கப்பட்டது.
இதேபோல், CBI அதிகாரிகளின் பயிற்சி முறைகளையும் மேம்படுத்தினார். சிக்கலான
குற்றங்களை எதிர்கொள்ள தேவையான திறன்கள் மற்றும் அறிவைப் பெறும்படி அதிகாரிகளை
தயார்படுத்தும் பணியும் இவர் வழிநடத்தினார்.
மத்திய புலனாய்வு இயக்கத்தின் இயக்குநராக இருந்த போது, விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் வழியாக நியாயத்தை நிலைநாட்ட அவரால் முக்கிய பங்களிப்பு செய்யப்பட்டது. இது சட்ட அமைப்பை வலுப்படுத்தவும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநாட்டவும் உதவின
இவருடைய மனைவி எவி தாமசின் மகள் ஆவார். மைக்கேல் என்ற ஒரு மகன் மற்றும் டேவிட் என்ற பேரன் உண்டு. கிறிஸ்தவ நாடார் இனத்தில் பிறந்து ஒரு போலிஸ் அதிகாரியாக பெயர் பெற்று விளங்கியவர்.
இதே இனத்தில் தற்போது உள்ளவர்கள் போலிஸ் அதிகாரிகளாக மக்கள் விரோத செயல்களுக்கு பெயர் எடுத்து மக்களின் வெறுப்பிற்கும் இனதுவேஷத்திற்கு காரணமாகும் போது இவரை போன்ற போலிஸ் அதிகாரிகளை வரலாற்றில் பதிவது அவசியம் ஆகிறது.
இவர் 2006 ஆம் ஆண்டு மறைந்தார். ஆனால் இன்றும் மக்கள் மனதில் உள்ள போலிஸ் அதிகாரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
9 Oct 2022
திராவிடக் கோவில்களின் கட்டுமானம் - நெல்லையப்பர் கோயில் ஓர் பார்வை !
இந்தியாவின் கோயில்களின் - கட்டிடக்கலைப் மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. அவை நாகரா, வேசரா மற்றும் திராவிட கட்டிடக்கலை ஆகும். இந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது. தென் பகுதிகளில் திராவிட பாணி கட்டிடக்கலை பின்பற்றப்பட்டது. திராவிட கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது.
திராவிட கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள், அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள்(பிரதக்ஷிண பாதைகள்) மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள், கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை ஆகும்.
ஆலய கட்டிட அமைப்பு என்பது, நிகழ்த்தப்படும் சடங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும் இதில் உள்ளடங்கும்.
கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.
நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர மேடு கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை.
நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள் உள்ளன.
கிழக்கு தாழ்வாரத்தில் நந்தி, பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..
கி.பி 1155 இல் கட்டப்பட்டது நந்தியும், கொடிமரமும். நந்திமண்டபத்திற்கு அருகில் சூரியதேவர் உருவம் நிறுவப்பட்டுள்ளது.
நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப் பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி ராவணனும் உள்ளனர்
பள்ளிகொண்டபெருமாள் சன்னதி
ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளது. இதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன.
மேலும் தொடர்ந்தால், இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல நாதர் உருவங்களை காணலாம்.
ஊஞ்சல் விழா
இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம் ஆகும். இது 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டது ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது ஊஞ்சல் விழா. எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும்.
ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர். முக்கியமாக காற்றின் திசையில் உள்ள தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல பல்வேறு தாவரங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.
அற்புதமான இசைக் குறிப்பு மூலம்
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.
சோமவர மண்டபம் அல்லது நவராத்திரி மண்டபம்.
கோவில் வண்டி வீதிகள்.
ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.
பொது இடங்கள் கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் மற்றும் 28% திறந்தவெளிகள் ஆகும். இவை திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெருகின்றனர். இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார்.
1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும் கட்டிடக் கலைஞரின் பணித் திறனின் எடுத்துக்காட்டுகள் ஆகும்
.jpg)



























