Showing posts with label குற்றம். Show all posts
Showing posts with label குற்றம். Show all posts

27 May 2020

ஆண்- பெண் குடிகாரர்கள்

கொரோனா காலத்தில் மக்களுக்கு அரிசி கிடைக்கிறதா இல்லையா என்பதை விட டாஸ்மாக் திறப்பார்களா இல்லையா என்பதை உற்று நோக்கி கொண்டிருந்தனர்.
டாஸ்மாக்கை அடைக்க வேண்டும் என்பது குடிகாரர்கள் செத்து போய் விடக்கூடாது என்பதை விட கொரோனா இடரில் அரசை முடக்கும் ஒரு வார்த்தையாகவும் முன்வைக்கப்பட்டது. ஒரு நாள் வியாபாரம் 180 கோடி என்பது அதன் மார்க்கட் நிலையும் கண்டு உணர்ந்தோம்.
குழந்தைகள் பிறந்த நாள் துவங்கி கல்யாணம், தேர்வில் வெற்றி , வேலை உயர்வு என எல்லா நிகழச்சிகளிலும்
மதுவும் விருந்தாக ஊற்றப்படுகிறது .
இதன் பயண்பாடு என்பதை உடல் பராமரிப்பு, ஆரோக்கியம், மனிதனின் தோற்றப் பொலிவையும் முன்நிறுத்தி விழிப்புணர்வு கொடுத்தால் இளம் தலைமுறையாவது தப்பிக்கும்.
இன்றைய தினம் , 10 ஆம் வகுப்பு மாணவன் துவங்கி பல்லு போன கிழவன் வரை குடிக்கிறார்கள் என்பதே உண்மை.
மதமோ,கலையோ, கலாச்சாரமோ, கல்வியோ எதுவும் கட்டுப்படுத்த இயலா வண்ணம் மது பழக்கம் பெருகி விட்டது.
மதுபானங்களால் என்ன தீமை என்னவென்று தெரியாதவர்களா? குடிக்கிறார்கள் அதுவுமில்லை.
மதுவால் உடல் நீர் சத்து குறைந்து
கிட்னி,
லிவர்,
ஈரல்,
பான்கிரியாஸ்,
நரம்பு மண்டலம்,
செமிப்பு தன்மை
உடல் இயக்கம்,
உளவியல்
என எல்லா வகையிலும் பாதிக்கப்படுவார்கள். மேலும் உடலுக்கும் மூளைக்குமான தொடர்பாடல் தடை , பல வகை கேன்சருக்கு காரணம் என தெரிந்தே குடிக்கிறார்கள்.
மதுக்கடையை மூடுவது சாத்தியமா என்றால்; மது தயாரிப்பில் தரம் பேணுக , விற்பதில் ஐரோப்பிய நாடுகளில் என்பது போன்று வயது நோக்கி கொடுக்குக, அளவை குறைத்து, விலையை கூட்டுதல் மட்டுமே சாத்தியம்.
இன்று குடிப்பது என்பது கர்வத்தின், பணக்காரத்தனத்தின், சமூக அங்கீகாரத்தின் , நாகரிகத்தின், பாகமாக விளம்பரம் ஊடாக இளம் தலைமுறை தலையிலும் புகுத்தியுள்ளார்கள்.
இளம் தலைமுறைக்கு புரிதல் தருவது மட்டுமே தீர்வாகலாம்.
அவ்வகையில் அதன் அளவு சார்ந்து தெரிவிப்பது காலத்தின் அவசியமாகும்.
ஒரு ஆணின் ஒரு நாளைய குடி அளவாக " 1 ட்ரிங்( 1 drink) என்கிறார்கள்.
ஒரு ட்ரிங்
12 அவுன்ஸ் பீர்
5 அவுன்ஸ் வைன்
ஒன்றரை அவுன்ஸ் ஸ்பிரிட்( விஸ்கி, ஜின்)
ஒரு அவுன்ஸ் என்பது 14 மில்லி.
இன்றைய ஆண்கள் ஒரு நேரம் குறைந்தது 500 மிலி குடிப்பதாக அறிகிறோம். 21 மி.லிக்கும் 500 மி.லி க்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் போன்றதே.
குடியின் காரணமாக ஏதேதோ சொல்கிறார்கள். மனச்சோர்வாம், கெத்தாம், சமூக நிர்பந்தமாம், பலர் ஐரோப்பியா நாட்டை பின்பற்றுவதாக சொல்கிறார்கள். ஐரோப்பியா காலநிலை தான் என்ன? -மைனஸ் () டிகிரிக்கு மேல் இங்கு + 35 டிகிரிக்கு மேல்.
குடியை குடிகார்கள் தானாக நிறுத்த வேண்டும். கொரோனா நேரம் மிகவும் சிக்கலான நேரம் குடிகாரர்களை விடுத்து வாழ வேண்டிய குழந்தைகள், ஏழை தொழிலாளர்களை நினைத்து உதவுவோம்.


ஆண்கள் குடியை பற்றி எழுதிவிட்டு பெண்கள் குடியை பற்றி எழுதாவிடில் சமத்துவம் இல்லை என்றாகி விடும்.
பெண்கள் குடியை ஒழுக்க, நெறிகளுடன் பலர் பார்த்து தடுக்க பார்க்கையில் விற்பனையாளர்கள் கவரவத்தின், பெண் ஆளுமையின் , சுதந்திரத்தின்,ஆண் சமத்துவத்தின், துணிவின் தன்னம்பிக்கையின், அடையாளமாக பார்க்கிறோம் என க்கூறி மோமி டைம்ஔட், மாட் ஹவுஸ் வைஃப் போன்ற செல்ல பெயருகளில் லேபல் செய்து சந்தைப்படுத்துதலை பெருக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
18 வயதிற்கு கீழ் உள்ள பெண் பிள்ளைகள் குடிக்கும் படி இனிப்பு பீர், சிவப்பு வைன் போன்றவை சின்ன சின்ன பெட்டிக்கடையில் கூட வாங்கும் படி வசதி செய்து கொடுத்துள்ளனர்.
அதிக அளவு குடியால் ஆண்களுக்கு என்னன்ன பிரச்சினை வருமோ, அதே பிரச்சினைகள் ஒரு படி மேலே பெண்களை பாதிக்கும். காரணம் ஆண்களை விட தண்ணீர் சத்து குறைந்தது பெண்கள் உடல்வாகு. அதனால் குடிக்குகையில் ஆண்களை விட உடல் நீர் சத்து குறைந்து இருப்பதால் கறக்கம் மயக்கம் என பாதிப்பு அதிமாகவே பாதிக்கும் .
ஒவ்வொரு 96 நிமிடத்திற்கு ஒராள் குடியால் சாகிறதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் தலைநகரம் தில்லியில் மட்டும் 15 லட்சம் பெண் குடிகாரிகள் உண்டாம். இதில் பெருவாரி பெண்கள் ஒரே நேரம் 5 டிரிங்ஸ் எடுப்பவர்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதில் 5000 வழக்கு பதிவாயுள்ளது.
20 சதவீதம் பெண்கள் சமூக நிர்பந்தம், 44 சதவீதம் தங்கள் விருப்பத்தால், 42 சதவீதம் தொழில் நிமித்தமாக,53 சதவீதம் தங்கள் உணர்வு தேவையால் எனக்கூறுகிறது சர்வே.
ஆக மொத்தம் தேசத்தில் 57 சதவீதம் ஆண் குடிகாரர்கள் ஒன்றால் 28 சதவீதம் பெண் குடிகாரிகள்.
குடியில் குடிக்கும் அளவு தான் பிரதானம். ஒரு நாள் ஒரு டிரிங்க் அதுவே கணக்கு எனக்கூறுகிறது ஆரோக்கிய த்துறை.
பெண்கள் குடிப்பதால் ஆண்களை போன்றே கேன்சர்,லிவர், கிட்னி , மூளை பாதிப்பபிற்கு ஆளாகுவார்கள்.
அதையும் கடந்து
குழந்தைகளை போன்று பாலியலாக துன்புறுத்தும் சூழலில் எதிர்க்க வலுவற்று போக வாய்ப்பு.
பெண்கள் மூளை ஆண்கள் மூளையை விட சென்சிட்டிவ் என்பதால் பாதிப்பும் அதிகம்.
பெண்கள் குடியையும் நோயாக கணக்கிலெடுத்து உளவியல் சிகித்சைக்கு, கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதும் அவசியம்.
கலாச்சாரம் நெறியோடு இணைத்து பார்ப்பது அறிவீனம்.
இதை உடல் ஆரோக்கியத்துடன் இணைத்து பார்ப்பதே அவசியம்..

19 Apr 2018

பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய்



குழந்தைகள் பாலியலாக துன்புறுத்தப்படுத்தும் சூழல் வளர்ந்த நாடு, வளராத நாடு, ன்றில்லை பெண் என்ற பாலினம் இருக்கும் இடத்தில் எல்லாம் தாக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு 6.2 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்புணர்வு நடப்பதாக தெரிகின்து. அந்த தேசத்திலும் 4 வயது பச்சிளம் குழந்தை முதல்  83 வயோதிக பெண் வரை பாலியவல்லுறவிற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு வருடவும் 63,000 குழந்தைகள் பாலியல் வல்லுவு செய்யப்பட்டதாக அமெரிக்காவில் வழக்கு பதிவாகியுள்ளது. குழந்தைகள் கொல்லப்படுவதில் அமெரிக்க முன் நிலையில் நிற்கின்றது. கிடைத்த தரவுப்படி வளர்ந்த நாடான ஸ்வீடன் முன்னித்தில்  நிற்கின்றது. மேற்கு நாடுகளில்  இந்தியாவை போன்று அல்லாது பெரும்வாரியான வழக்குகளும் பதிவாகின்றது கணவர் அனுமதி மீறி பாலியல் உறவு கொண்டு இருப்பினும் வழக்காக பதியப்படுகின்றது..


இந்தியாவை எடுத்து கொண்டால் பெண்கள் முன்னேற்ற கழகத்தின் செயலர் கவிதா கிருஷ்ணன் கூற்றுப்படி இந்தியாவில் பாலியல் வல்லுறவு மிகவும் குறைவாகவே பதிவாகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நலன் கருதியும் தங்கள் குடும்ப கவுரவம் கருதியும்  வெலியே சொல்வதில்லை. இது போன்ற சட்டத்தின் முன் கொண்டுவருவதும் இல்லை.

இந்தியாவின் ண் ஆதிக்க சமூக கட்டமைப்பு,   காலாகாலாமாக புராண இதிகாசங்கள் மத நம்பிக்கைகள் ஊடாக ண்களுக்கான சுகிக்கும்  பொருளாகவே பெண்ள் சித்தரிகரிக்கப்படுதல், பெண்கள் ஆண்களின் அடிமை என்பவை ஆண்கள் மனதில் ஆழத்தில் பதிந்ததால் பெண்களை துன்புறுத்துவது ஒரு வழக்கமாக, வாழ்க்கை பாகமாகவே பார்க்கப்படுகின்றது.  பெண் உடலை, அவள்  விருப்பத்தையும்  மீறி ஆட்சி செய்யும் உரிமையாக எடுத்து கொள்கின்னர்.

ஒரு பெண் சுயசார்பாக, சுதந்திரமாக வாழ்கின்றார் என்றால் அவர் மோசமான பெண் என  ஆண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றார். தன் விருப்பத்திற்குளிதாக வளைத்து விடலாம் என நினைத்து நற்பாசை கொள்கின்றனர், அல்லது அவளை ஆட்கொள்வது தங்கள் ஆண்மையின் இலக்காக நினைத்து கொள்கின்றனர். சமூகம் பாலியல் படங்களின் வயது வரம்பற்ற மீறிய பயண்பாடு  , மதுபானங்கள், பொறுப்பற்ற சமூக வாழ்க்கை, இரவு கேளிக்கை விடுதிகளின் பெருக்கம் போன்றவையும்  பெண்கள் மீதான  அத்து மீறல்களுக்கான  காரம் என்பதையும் மறுக்கல் ஆகாது. வாழ்க்கை நெறியிலுள்ள பார்வையிலுள்ள மாற்றங்களும் காரணமாகின்றன

2012, ல் குழந்தை  பாதுகாப்பிற்கு என முதல் சட்டம் வகுக்கப்பட்டது. டைமுறைப்படுத்த  மேலும் இரண்டு ஆண்டுகள் எடுத்து கொண்டனர். இந்த சட்டத்தின் கீழ்  13,766  குழந்தை வல்லுறவு, 11,335 குழந்தைகள் மாண்பை கெடுக்கும் விதம் நடந்து கொள்ளுதல் 4,593 பாலியலாக துண்புறுத்தப்படுதல் 711திட்டமிட்டு சமூக  குற்றவாளிகளால் குழந்தைகளை தாக்குவது; 88 பாலியல் இச்சைக்காக படம் பிடித்து  பயன்படுத்துவது  மேலும் 1,091 தொல்லை தருவதாக.பதியப்பட்டுள்ளது.

WHO உலக ஆரொக்கிய மையத்தின் கருத்துப்படியும் பெண்கள் பாலியலாக துன்புறுத்தப்படுவது ஒரு உலகலாவிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது. குழந்தைள் பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய் என அறியலாம். 70 % குழந்தைகள்  தங்கள் சொந்த குடும்ப உருப்பினார்களாலே பாதிக்கப்படுகின்றனர்.  கடந்த வருடம் பதிவான வழக்கில் 15,000 வழக்கில்  4 % குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
 சமூக சீர்கேட்டுப் பிரச்சனைகளினால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப பாலியல் வல்லுறவுகள் கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் சொந்த தந்தையாலே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாற்றான் தந்தை, உறவினர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

ஆஸ்தேரிலியா நாட்டில் 2014 வாக்கில் பாலியல் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில்  மத காரியங்களுக்கான கட்டாய பிரம்மசரியம்,  குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கான முக்கியமான  காரணமா என கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த விசாரண முடிவு இப்படியாக வெளிவந்தது.  60 % மேல் பாதிக்கப்பட்ட பாலகர்கள் 10க்கும் 14 க்கு இடையிலுள்ள ஆண் குழந்தைக்ளாகவே இருந்துள்ளனர். இதில் பெரும்வாரியோனர் மதகாரியங்களுக்கு உதவிய ஆண் குழந்தைகள் ஆவர்.  அதில்  36 % பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.  கிறிஸ்தவ மதத்தலைமை, குழந்தைகளை வல்லுவில் இருந்து காப்பாற் தவறியதாகவும் தெரிவித்துள்து.

மேற்குலகு நாடுகள் 30 வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் மேல் நடந்த அத்துமீறல்களை  ஆற அமர ஆராய்ந்து உண்மையான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 அந்த நாடுகளில் சுதந்திரமாக விசாரிக்கவும் அறிக்கை வெளியிடவும் சுதந்திரவும்,  சமூக சூழலும் இப்போது தான் கூடி வந்துள்ளது. ஆனால் இந்தியா போன்ற பன்முகதன்மை கொண்ட சமூக சூழலில், குழந்தை உரிமை பற்றியே புரிதல் இல்லா சமூகத்தில் அவ்விதம் விசாரணை எல்லாம் எதிர்பார்க்கவே இயலாது. மத சண்டைகளுக்கும் சமூக பிரச்சினைகளுக்குமே வழி வகுக்கும். இவ்விதமான சமூக சூழலில் தான் சமூக விழிப்புணர்வு அற்ற பெற்றோர்கள்; குழந்தைகளை மதவாதிகளை நம்பி மடங்களுக்கு குழந்தைகளை எந்த உத்தரவாதத்தில் அனுப்பி வைக்கின்றனர் என சிந்திக்க வேண்டி உள்ளது.

சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாதி குழந்தை நலன் சார்ந்து விழிப்புணர்வு கொடுக்கும் நோக்குடன் இந்தியா முழுக்க ஒரு பயம் மேற்கொண்டார்.  கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் சமரசமற்ற ண்டனைகள் கொடுப்பது ஊடாக மட்டுமே குழந்தைகளை கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற இயலும் என தெரிவித்திருந்தார்.

குடும்ப பொருளாதாரம் நிலையற்றதாகவும், வலுவிழந்தும் இருக்கும் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மிக எளிதாக பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

வட கிழக்கில் ஆகட்டும் பாலியல் தொழிலுக்கு, வீட்டு வேலைக்கு, குழந்தை திருமணம் என பல காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படும் கொடிய சூழல் நிலவுகின்றது.

அதுவரையிலும் பெற்றோர் குழந்தைகளுக்கு தகுந்த விழிப்புணர்வு தருவது, குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தகாத தொடுதல் பற்றி புரிய வைப்பது, வெளி நபர்களுடன் பழகும் போதும் கருதலாக செயல்படுவது, தங்கள் பார்வைக்குள் தங்கள் கட்டுபாட்டுக்குள் குழந்தைகளை பேணுவதே அவர்கள் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும்.

சமீபத்தில் என் தோழி வசிக்கும் குடியிருப்பில் நடந்த சம்பவம் இப்படியாக இருந்த்து.  விளையாடி கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை பாலியல் செயலுக்கு உட்படுத்த  ஒருவன் துணிந்துள்ளான். இரு குழந்தைகளின் தகப்பன், படித்தவன், நல்ல வேலையில் உள்ளவன் இருந்தும் குடித்திருந்தேன் அதனால் சபலப்பட்டு விட்டேன் என கூறியுள்ளான், குழந்தை வீட்டில் சென்று தெரிவித்ததும் அந்த நபர் மனைவிக்கு தெரிவித்ததுடன் அந்த நபரை அந்த குடியிருப்பை விட்டு வெளியேற்றினர். இது போன்ற சமூக புரக்கணிப்பு மட்டுமே தவறு செய்யும் நபர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.

இது போன்ற ஈனச்செயல்களில் ஈடு படும் நபர்கள் நிச்சயமாக மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள். அவ்விதம் கண்டு அறியும் நபர்களுக்கு சரியான சிகித்சை அளிக்க வேண்டும் அல்லது சமூகத்தில் இருந்து வெளியேற்றி தனி தீவுகளில் குடியேற்றி விட வேண்டும். அல்லாது ஆசீபா, கோயம்பத்தூர் குழந்தை, சென்னை குழந்தை என யாராலும் காப்பாற்ற இயலாது
 
போரில், குடும்ப சண்டைகள், இனச்சண்டை குழுச்சண்டை என எல்லா வன்மச்செயலுக்கும்  பெண் குழந்தைகள் உடலை போர்க்களமாக கருதும் நிலையும் மாற வேண்டும்.


டுத்த பதிவில் குழந்தைகளை பாலியல் துன்பத்திற்கும் உள்ளக்கும் நபர்களின் உளவியல் பற்றி பார்ப்போம்