போர்த்துகீசியர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து தெற்கே பயணித்து, நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக இந்தியாவை அடைந்தனர்.
இந்த கடல்சார் முயற்சி 1415 ஆம் ஆண்டு மொராக்கோவிலுள்ள செஉட்டா (Ceuta) நகரைக் கைப்பற்றியதன் மூலம் தொடங்கியது. பின்னர் 1420–களிலும் 1430–களிலும் போர்த்துகீசியர்கள் மடெய்ரா மற்றும் அசோர் தீவுகளில் குடியேற்றங்களை அமைத்தனர். 1434 ஆம் ஆண்டு, கடலோடிகளுக்குப் பேராபத்தானதாகக் கருதப்பட்ட கேப் போஜடார் முனையைச் சுற்றிப் பயணம் செய்யும் சாதனையும் அவர்கள் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, 1488 ஆம் ஆண்டு பார்தலோமியு டயாஸ் தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் சென்றார். அதன் பின்னர் சிறிது காலம் அமைதி நிலவியது.
பின்னர் 1497 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வாஸ்கோ ட காமா தனது மூன்று சிறிய கப்பல்களுடன் லிஸ்பனில் இருந்து கடல்பயணத்தைத் தொடங்கினார். சுமார் ஒரு வருடம் நீண்ட பயணத்தின் முடிவில், 1498 மே 20 அன்று அவர் காலிக்கட்டிற்கு(Kozhikodu) அருகில் இந்தியத் தரையை அடைந்தார். இது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவுடனான வணிகத்தையும் எதிர்கால கடற்பயணங்களையும் ஊக்குவிக்க லிஸ்பனில் அரசர் பல நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். இரண்டாவது கடற்பயணத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் தலைமையில் 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 13 பெரிய கப்பல்களும் 1200 பேரும் கொண்ட படை அனுப்பப்பட்டது.
அதே காலத்தில், லிஸ்பனின் புறநகரான டாகஸ் நதிக்கரையில், இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் புறப்பட்ட இடத்திலேயே 1499 இறுதியில் மிகப்பெரிய ஜெரோனிமோஸ் மடாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த மடாலயம் முழுமையாக முடிவடைய சுமார் ஐம்பது ஆண்டுகள் எடுத்தது. இந்தக் கட்டுமானம் போர்த்துகீசியர்களின் கடற்பயண வெற்றிக்கான நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலித்தது.
அந்தப் பகுதி “பெலெம்” (பெத்லகேம்) எனப் பெயரிடப்பட்டது. பின்னாளில் அங்கேயே போர்த்துகீசிய பேரரசு பிறந்ததாகக் கருதப்பட்டது.
போர்த்துகீசியக் கடற்பயணங்களின் நோக்கங்கள்
இந்த கடற்பயணங்களின் காரணங்களைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர். மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கரையை அடைய போர்த்துகீசியர்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் எடுத்தனர். மேலும் இந்தப் பெரிய முயற்சியை வேறு எந்த ஐரோப்பிய சக்தியும் மேற்கொள்ளாமல், போர்த்துகீசியர்களே முன்னெடுத்தனர்.
இதற்கான விளக்கமாக ஒரு சம்பவம் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. காலிக்கட்டில் வாஸ்கோ ட காமாவின் குழுவில் ஒருவரிடம்,
“உங்களை இங்கு கொண்டு வந்தது என்ன?”
என்று கேட்டபோது,
“நாங்கள் கிறிஸ்தவர்களையும் மசாலாவையும் தேடி வந்தோம்”
என்று அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
போர்த்துகீசிய அரசர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் “இறைவனைச் சேவிப்பதற்கும் தமக்கே லாபம் சம்பாதிப்பதற்குமானவை” என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
போர்த்துகலின் புகழ்பெற்ற கவிஞர் லூயிஸ் டி காமோயிஸ் தனது தேசியக் காவியமான லூசியாட்ஸ் நூலில் இதை இவ்வாறு கூறுகிறார்:
“முன்பு எவரும் கடந்து செல்லாத பெருங்கடலை நாம் கடந்தோம்;
இந்தஸை அடையவும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவும்.”
கடலை நாம் கடந்தோம், இந்தஸைத் தேடுவதற்காக. எங்கள் நோக்கம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதே." (வில்லியம் சி. அட்கின்சன் மொழிபெயர்ப்பு, The Lusiads, பெங்குவின், 1952, பக்.166).
வரலாற்று எழுதுதல் எப்போதும் அந்நேரத்தின் தேவைகளையும் மனோபாவத்தையும் பிரதிபலிக்கிறது. அதனால் தான் 1955 முதல் 1985 வரை போர்த்துகீசிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பொருளாதார நோக்கங்களால் நடத்தப்பட்டதாகவே விளக்கப்பட்டன.
பொருளாதாரத் தேவைகளும் விரிவாக்கமும்
15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகல் சிறியதும் வறியதுமான நாடாக இருந்தது. தானியங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்ததால், உணவுத் தேடல் அவர்களின் விரிவாக்கத்தின் முக்கிய காரணமாக இருந்தது.
இதன் விளைவாக அசோர் மற்றும் மடெய்ரா தீவுகளில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு தானியமும் சர்க்கரையும் பெருமளவில் பயிரிடப்பட்டது. வட ஆப்பிரிக்காவிலும் போர்த்துகீசியக் குடியேற்றங்களில் தானிய உற்பத்தி நடைபெற்றது.
மேலும் அவர்கள் புதிய மீன்பிடித் தளங்களையும் கண்டுபிடித்தனர். இது உணவுத் தேவையை மட்டுமல்ல, கடற்படை பயிற்சிக்கும் உதவியாக இருந்தது.இதற்கிடையில் வணிகம் வளரத் தொடங்கியபோது தங்கத்தின் தேவை அதிகரித்தது. 1450-களிலிருந்து மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் தங்கம் போர்த்துகலுக்கு கொண்டு வரப்பட்டது.
அதே சமயம் சர்க்கரைத் தோட்டங்களில் வேலை செய்ய தொழிலாளர்களின் தேவை அதிகரித்ததால், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் பெருமளவில் கொண்டு வரப்பட்டனர். 1443-க்குப் பிறகு இவர்கள் அட்லாண்டிக் தீவுகளுக்கும் போர்த்துகலுக்கும்கூட கொண்டு செல்லப்பட்டனர்.
அரசியல் மற்றும் சமூக காரணங்கள்
அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் நிலப்பிரபுக்களின் வருவாய் குறைந்து கொண்டிருந்தது. இதனால் இளைய மகன்கள், உரிமையிழந்த அரசவாசிகள் போன்றோருக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதற்காக அட்லாண்டிக் தீவுகளில் நிலங்கள் வழங்கப்பட்டன.
அவர்கள் அங்கு செல்வமும் வீரப் பட்டங்களும் பெறும் வாய்ப்பைப் பெற்றனர்.
போர்த்துகல் அரச குடும்பமான அவிஸ் வம்சம் (1385–1580) ஆட்சியில் இருந்த காலத்தில் அரசவாசிகள் அரசருக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் புதிய நிலங்களையும் புகழையும் தேடும் முயற்சி அவர்களுக்கு மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.
கடல்சார் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
போர்த்துகீசியர்கள் கப்பல் வடிவமைப்பிலும் வழிகாட்டும் நுட்பங்களிலும் முக்கிய முன்னேற்றங்களைச் செய்தனர்.
1440 களில் “கரவேல்” (Caravel) எனப்படும் புதிய வகை கப்பல் உருவாக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட முக்கோண lateen பறக்கைகள் அரபு கடலோடிகளிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை.
இந்த வடிவமைப்பின் முக்கிய நன்மை என்னவென்றால், கப்பல்கள் காற்றை எதிர்கொண்டு முன்னேறவும், காற்றின் திசையைப் பயன்படுத்தி பயணிக்கவும் முடிந்தது.
வழிகாட்டும் கருவிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. 1456 ஆம் ஆண்டு முதல் குவாட்ரன்ட் கருவியின் உதவியால் நட்சத்திரங்களின் உயரத்தை அளந்து அகலாங்கை கணக்கிடத் தொடங்கினர். 1480-களில் சூரியக் கணக்கீடுகளும் மேம்பட்ட அட்டவணைகளும் வழிகாட்டுதலை மேலும் துல்லியமாக்கின.
மதம், செல்வம், அரசியல் – மூன்றின் இணைப்பு
போர்த்துகீசியக் கடற்பயணங்களை மத காரணங்களால் மட்டும் விளக்க முடியாது; பொருளாதார நோக்கங்களாலும் மட்டும் விளக்க முடியாது.
அந்தக் கால மக்களுக்கு மதம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து பார்க்கும் மனப்பான்மை இல்லை.
போர்த்துகீசிய அரசர்களுக்கு “இறைவனைச் சேவித்தல்” மற்றும் “செல்வம் தேடுதல்” ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
1565 ஆம் ஆண்டு மன்னர் டோம் செபாஸ்டியன், கோவாவில் இருந்த வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் அம்போன் தீவில் கிறிஸ்தவத்தை ஊக்குவிக்கும்படி கூறினார். ஏனெனில் அது அந்த நாட்டைப் பாதுகாப்பதற்கும் அங்கிருந்து கிடைக்கும் லாபத்தை அதிகரிப்பதற்கும் உதவும் என்று அவர் நம்பினார்.
இதனால், இறைவன் (God), அரசாட்சி (Caesar), செல்வம் (Mammon) ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைந்த சிக்கலான அமைப்பாக போர்த்துகீசிய விரிவாக்கம் இருந்தது
உலக வரலாற்றில் அதன் முக்கியத்துவம்
பொருளாதார அறிஞர் ஆடம் ஸ்மித் கூறுவதுபோல்:
“அமெரிக்காவின் கண்டுபிடிப்பும், நன்னம்பிக்கை முனை வழியாக கிழக்கு இந்தியாவிற்குச் செல்லும் பாதையின் கண்டுபிடிப்பும் மனித வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள்.”
1487 முதல் 1500 வரையிலான காலப்பகுதியில் போர்த்துகீசியர்கள் செய்த கடல்சார் சாதனைகள் உண்மையிலேயே அபூர்வமானவை. வாஸ்கோ ட காமா தனது 1497–1499 கடற்பயணத்தில் இரண்டு முறை தொடர்ந்து 90 நாட்கள் நிலம் தெரியாமல் கடலில் பயணித்தார்.
1500 ஆம் ஆண்டு கப்ரால் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு முதலில் பிரேசிலை கண்டுபிடித்தார்; பின்னர் ஆப்பிரிக்காவைச் சுற்றி ஆசியாவிற்குச் சென்றார்.
ஆனால் இந்தச் சாதனைகள் முற்றிலும் புதிதானவை அல்ல. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பியர்கள் வணிகப் பயணங்களையும் ஆராய்ச்சிப் பயணங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
ரோமப் பேரரசு காலத்திலேயே அதன் வணிகர்கள் அரேபியக் கடலில் பரவலாக வணிகம் செய்தனர். பின்னர் மார்கோ போலோ போன்றவர்கள் நிலம் மற்றும் கடல் வழியாக நீண்ட தூரங்கள் பயணித்தனர். நோர்ஸ்மென் மற்றும் வைகிங்குகள் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேலும் வட அமெரிக்காவிலும் குடியேற்றங்களை அமைத்திருந்தனர்.
1385 ஆண்டில் போர்த்துகீசிய மன்னன், கஸ்டீலியர்களின் தாக்குதலை வெற்றி கொண்டார், இதன்மூலம் புதிய வம்சத்தை நிறுவினார். பெரும்பாலான அரசவாசிகள் வெளிநாட்டவர்களின் பக்கம் நின்றதால், அவர்கள் தங்களின் தவறான தேர்வுக்காகத் தூக்கிலிடப்பட்டனர் அல்லது துரத்தப்பட்டனர். இதனால் போர்த்துகீசிய அரசவாசிகள் அரசருக்கு கீழ்ப்படிய வேண்டிய தவிர்க்க முடியாத சூழலிலும் நெருக்கடியை எதிர்கொண்டனர். இந்த அடக்குமுறையை 1484 இல் அவர்கள் வலுவாக உணர்ந்தனர்; அப்போது மிகப் பெரிய அரசவாசியான பிரகன்சா டியூக், துரோக குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். எனவே விரிவாக்கமும், புதிய நிலங்களும், புதிய மகிமைப் பாதைகளும் இயற்கையாகவே அவர்களுக்கு ஈர்ப்பாக இருந்தன.
டி. ஜோவான் I (1385–1433) என்பவரின் இளைய மகனான “நாவிகேட்டர்” இளவரசர் ஹென்றி என்ற உருவம் நீண்ட காலமாகவே ஆதிக்கம் செலுத்தி வந்தது. செவுட்டாவில் வீரப் பட்டம் பெற்றார். தனது வாழ்நாளை முழுவதும் முஸ்லீம்களை ஒடுக்கும் “சிலுவைப் போர்” என்பதை கண்டுபிடிப்பதற்கு செலவிட்டார் என்று கூறப்படுகிறது. நாட்டின் தென்மேற்குத் தூரமான சாக்ரெசில், அவர் ஒரு கடற்படை மற்றும் வழிகாட்டுநர் பள்ளியை நிறுவி, மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கரைக்கு மீண்டும் மீண்டும் பயணங்களுக்கு அனுப்பினார். அவர்களின் படகுகளின் பறக்கும் திரைகளில் சிலுவையின் சின்னம் கண்ணுக்குத் தெரியாமல் மறையும் வரை அவர் கவனித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் அந்த இளவரசர் பெரிதாகக் கற்றவர் அல்ல; மேலும் அவர் வழிகாட்டிகளுக்கும் விஞ்ஞானிகளுக்கும் “பள்ளி” ஒன்றைத் தொடங்கவில்லை என்பதையும் குறிப்பிடு கின்றனர்.. எனினும் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களைப் போலவே அவருக்கும் போர்த்துகலில் பெரிய நிலங்களும் பொருளாதார நலன்களும் இருந்தன சோப்புத் தயாரிப்பில் அவர் ஒரே உரிமையைப் பெற்றிருந்தார் பயணங்களுக்கு அவர் அளித்த ஆதரவின் பின்னணியில் மத அல்லது ஆன்மீகக் கூறுகள் இருந்திருக்கலாம்; ஆனால் தங்கம், அடிமைகள் போன்றவற்றின் இறக்குமதியிலிருந்து அவர் மிகுந்த லாபம் பெற்றார். இங்கேயும், பொருளாதார நோக்க ஆதிக்கம் செலுத்தி உள்ளது.
எதுவாக இருந்தாலும், இளவரசர் ஹென்றியின் நடவடிக்கைகள் ம்ற்றும் கண்டுபிடிப்புகளில் அரசின் மையப் பங்கு uண்டு என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன: . போர்த்துகீசியர்கள் வணிகர்கள் போன்றோர்களுக்கு பணமும் கப்பல்களையும் வழங்கியிருந்தாலும், வழிநடத்தல் மற்றும் உந்துதல் பெரும்பாலும் அரசிலிருந்துதான் வந்துள்ளது. இந்த உந்துதல், 1460 இல் இளவரசர் ஹென்றி இறந்தபிறகு, மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அந்த நேரத்தில் போர்த்துகீசியர்கள் தங்கள் நிலையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கக்கூடியதாக இருந்தது. அட்லாண்டிக் தீவுகள் விளைச்சல்களை வழங்கிக் கொண்டிருந்தன; ஆப்பிரிக்க வர்த்தகம் செழித்து வந்தது.
ஆப்பிரிக்காவின் தென்புற முனை இன்னும் எட்டாக்கனியாகவே இருந்தது. புதிய அரசரான ஜோவான் II (1481–95) ஊக்கப்படுத்துதல் தெற்குத் திசையில் மேலும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.
1469 ஆம் ஆண்டு துவங்கியே வணிகர்களுக்கு பரந்த அளவிலான சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. தங்கம் மற்றும் அடிமை வர்த்தகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கான தனியுரிமைக்குப் பதிலாக, மேற்கிந்திய ம்ற்றும் ஆப்பிரிக்கக் கரையை ஆராய்ந்து கண்டுபிடிக்க ஆண்டுக்கு 100 லீக்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வணிகரின் லாபத் தேடலும், அரசின் விரிவாக்கத் திட்டங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருந்தன. போர்த்துகீசிய கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தையும் வெற்றியையும் விளக்குவதற்காக வரலாற்றாசிரியர்கள் பல துணை காரணிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பாவின் தென்மேற்குத் தூரத்தில் போர்த்துகல் அமைந்திருப்பதால் சிறிய அளவில் மட்டுமே முன்னுரிமை கிடைத்திருக்கலாம். போர்த்துகல் கிட்டத்தட்ட 15ஆம் நூற்றாண்டு வரை அமைதியாக இருந்தது; அதன் சக்திகளை விரிவாக்கத்திற்குச் செலுத்த முடிந்தது. ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் போலவே, கண்டுபிடிப்பு, வெளிநாடு பயணம் ஆகிய எண்ணங்கள் பொதுவாகப் பரவலாக செலுத்த பட்டன; சில போர்த்துகீசியர்களுக்கு கடலோடிகளாக இருந்த பாரம்பரியமும் இருந்தது; அது கடற்கரை மீன்பிடி மற்றும் வட அட்லாண்டிக்கிலும் கூட மிகுந்த தூரம் செல்லும் கடலோட்ட அனுபவத்திலிருந்து வந்தது.
ஆனால் கடலோடிகளின் இனமாகக் கருத இயலாது பெரும்பாலான போர்த்துகீசியர்கள் கடலைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத விவசாயிகளே. 1415 ஆம் ஆண்டு செஉட்டாவைப் பிடிக்கச் சென்ற போர்த்துகீசியக் கப்பற்படைக்கு, ஜிப்ரால்டர் நீரிணையை கடப்பதிலேயே பெரிய சிரமம் ஏற்பட்டது. அதுவே அப்போது அவர்களுடைய கடல் வழிகாட்டும் திறமையின் நிலையைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. ஆனால் விரைவில் அது மாறியது. போர்த்துகீசியர்கள் கப்பல்களிலும் வழிகாட்டும் நுட்பங்களிலும் சோதனைகள் செய்து, அவற்றை மேம்படுத்தி, அறியாத கடல்களில் தெற்கே ஆழமாகச் செல்லக்கூடியதாக மாற்றினர்.
15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை போர்த்துகீசியர்கள் சிறிய, சதுரப்பறக்கை கொண்ட, மத்தியதரைக் கடலின் வணிகக் கப்பல்களுக்கு ஒத்த கப்பல்களையே பயன்படுத்தினர். இவை காற்றோட்டத்தோடு செல்ல ஏற்றதாக இருந்தாலும், எதிர்மறை காற்றைச் சந்தித்து போர்த்துகலுக்கு திரும்புவதில் சிரமப்பட்டன.
1440ஆம் ஆண்டு காலத்தில் கரவேல் (Caravel) எனப்படும் கப்பலின் முழுமையான வடிவமைப்பே மிக முக்கியமான முன்னேற்றமாக இருந்தது. இக்கப்பல்களில் பொருத்தப்பட்டிருந்த முக்கோண (lateen) பறக்கைகள் அரபு முறையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவை. இதன் நன்மை என்னவென்றால், கப்பல்கள் காற்றைச் சந்தித்தே முன்னேற முடிந்தது; காற்றின் திசையுடன் பயணிக்கவும் முடிந்தது. உண்மையில், 15ஆம் நூற்றாண்டில் மேற்கிந்திய ஆப்பிரிக்கக் கடற்கரை அருகிலும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்குக் கரையோரத்திலும், கப்பல்கள் முதலில் சதுரப்பறக்கைகளுடன் (favourable wind-க்கு) பயணித்துள்ளனர், பின்னர் எதிர் காற்றைச் சந்திக்கும்போது lateen அல்லது இரண்டையும் இணைத்த வடிவில் மாற்றிப் பயன்படுத்தப்பட்டன.
வழிகாட்டும் திறமைகளிலும் போர்த்துகீசியர்கள் முன்னேற்றம் கண்டனர்; இது அவர்களுக்கு நிலத்தைத் விட்டு தொலைவில் கடலோடச் செய்ய முடிந்தது. 1456-இல் அவர்கள் குவாட்ரன்ட் (quadrant) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி நட்சத்திர உயரத்தை அளந்து, அதன்படி அகலாங்கை கணக்கிடத் தொடங்கினர். 1480-களில் சூரியக் கணக்கீடுகளும் மேம்பட்ட அட்டவணைகளும் அவர்கள் அகலாங்கை கணக்கிடும் திறனை மேலும் மேம்படுத்தின. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய வழிகாட்டுதல் பல சமயங்களில் முற்றிலும் வெற்றி—தோல்வி அடிப்படையில் இருந்தது. பல அனுபவமிக்க பழைய கடலோடிகள் புதிய கருவிகளைப் புறக்கணித்து, காற்றின் தன்மை, அலைகள், கடலோட்டத்தின் இயல்பு ஆகிய தங்களின் அனுபவங்களை மட்டுமே நம்பி வழி கண்டறிந்தனர்.
உண்மையில், “மதமே காரணமாகக் கூறப்பட்டாலும், தங்கமே உண்மையான நோக்கம்” என்பதுதானா? அல்லது “செல்வத் தேடலே கண்டுபிடிப்பை உருவாக்கியது. அதன் வெளிப்படையாக அது ஆன்மாக்களுக்கான ஒரு சிலுவைப் போராகக் கூறப்பட்டது; ஆனால் போர்த்துகீசியர்கள் தேவாலயங்களை அமைக்கவில்லை; அதற்குப் பதிலாக...” அவர்கள் பாரக்கூன்களில் (அடிமைகளை அடைத்து வைக்கும் கூடங்களில்) அடிமைகளை வைக்காமல், ஆன்மாவுகளை அடிமையாக்காமல் மதமாற்றம் செய்திருந்தால், அவர்கள் உண்மையாக மதபரப்புதலில் இருந்தார்கள் என்று நம்பப்பட்டிருக்கலாம். ஆனால், மிஷனரி வேலை அடிமை கடத்தலுக்கு அரை நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது.
இன்னொரு பார்வையில் கண்டால் 15ஆம் நூற்றாண்டின் மக்களுக்கு மதம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து பார்க்கும் வழக்கமில்லை போர்த்துகீசிய அரசர்களுக்கு “இறைவனைச் சேவித்தல்” மற்றும் “தமக்கே லாபம் சம்பாதித்தல்” ஒன்றோடொன்று முரணானவை என்று இருக்கவில்லை.
1565 ஆம் ஆண்டு, மன்னர் டி. செபாஸ்டியன், கோவாவில் இருந்த வைஸ்ராயை இந்தோனேஷியாவின் அம்போன் தீவில் கிறிஸ்தவத்தை ஊக்குவிக்கும்படி அறிவுறுத்தினார். ஏனெனில், “இது அந்த நாட்டை பாதுகாப்பதற்கான முக்கியமான வழியாகவும், அங்கிருந்து கிடைக்கும் லாபங்களை அதிகரிக்கக் காரணமாகவும் இருக்கும்” என்று நம்பினார் எனவே, பொருளாதார நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது கூட, இந்தக் கடிதத்தில் வெளிப்பட்டிருக்கும் இறைவன் (God), அரசாட்சி (Caesar), செல்வம் (Mammon) ஆகிய மூன்றின் சிக்கலான இணைப்பை கண்டு உணரலாம் .
போர்த்துகீசியக் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி “அமெரிக்காவின் கண்டுபிடிப்பும், தொடுப்பு முனை (Cape of Good Hope) மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு சென்ற பாதையின் கண்டுபிடிப்பும், மனித குலத்தின் வரலாற்றில் பதிவான மிகப்பெரிய, மிக முக்கியமான இரண்டு நிகழ்வுகள் ஆகும். என்கிறார்.
1487–1500 காலப்பகுதியில் நடந்த போர்த்துகீசியர்களின் கடல்சார் சாதனைகளுக்கு மரியாதை செலுத்த வேண்டி உள்ளது. வாஸ்கோ ட காமா தனது இரண்டு வருட 1497–99 கடற்பயணத்தில் இரண்டு முறை தொடர்ந்து 90 நாட்கள் நிலம் தெரியாமல் கடலில் பயணித்து உள்ளார். 1500 இல் கப்ரால், ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு பிரேசிலை கண்டுபிடித்தார், பின்னர் ஆப்பிரிக்காவையும் கடந்து ஆசியாவிற்குச் சென்றார்.
இந்தப் பயணங்களை முற்றிலும் புதிதானவையாகவும், தனித்துவமிக்கவையாகவும் பார்க்கக் இயலாது. ஏனெனில், போர்த்துகீசியர்களும் மற்ற ஐரோப்பியர்களும் பல நூற்றாண்டுகளாகவே வணிகம் செய்தும், ஆராய்ச்சிப் பயணங்களையும், நீண்ட கடல்பயணங்களையும் மேற்கொண்டு வந்தனர். அதற்கு முன் ரோமப் பேரரசின் உச்சகட்டத்தில் அதன் வணிகர்கள் அரேபியக் கடலில் பரவலாக வணிகம் செய்தனர். பின்னர் மார்கோ போலோ போன்ற ஐரோப்பியர்கள் நிலம் வழியாகவும் கடல் வழியாகவும் மிக நீண்ட தூரங்கள் பயணித்தனர். நோர்ஸ்மென் மற்றும் வைகிங்குகள் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வட அமெரிக்காவில்கூட குடியேற்றம் செய்தனர்..jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)


