கதை வரி பேச்சாற்றல் திறனை வைத்து ’மதம்’ என்ற மயக்க மருந்தை மக்களுக்கு புகட்டி எளிதாக பணம் ஈட்டலாம் என்ற கருத்தாக்கத்தை மையக்கருத்தாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். பிப்வரி மூன்றாம் வாரம் 2020ல் வெளி வந்த படமிது. கொரோனாவால் இரண்டு வாரம் மட்டுமே தியேட்டரில் ஓட இயன்றது.
முதல் காட்சி ஏரியல் ஷாட்; அப்படியே கன்யாகுமரி கடல் விவேகானந்தப்பாறை வரை காட்சிகள் விரிகிறது. கடற்கரையில் ஒரு வீட்டில் விஜு பிரசாத் என்ற வாலிபன் தனது ஒரே தம்பியுடம் வசித்து வருகிறார். ஒரு பன்னாட்டு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டு பகுதி நேர ஆளுமை பயிற்சியாளராக தனது கஷ்ட ஜீவனததை நடத்தி வருகிறார்.
மின்சாரக் கட்டணபபணத்தை,”அண்ணா மன்னித்துக் கொள், பிரியாணி சாப்பிட்டு விட்டேன்” என்று குழந்தைத்தனமாக சொல்லும் மனநோயாளியான தம்பி, மருந்துகள் எடுத்தும் மனஅழுத்த நோயில் இருந்து மீண்டு வர இயலாத தம்பியை ஒரு தாயைப்போல் கருதலாக நோக்கும் அண்ணன். தற்கொலை செய்து கொண்ட தாய். இது தான் விஜுவின் குடும்ப சூழல்.
விஜு பிரசாத், தன்முனைப்புடன், தன்னுடைய மனப்பிளர்வை துறந்து, தன்னுடைய இயலாமையை படிகளாக மாற்றி ஒரு சாற்றிதழ் படிப்புடன் தனது வாழ்க்கையை நகத்தும் நிலையில், ஒருநாள் ஒரே தம்பியும் தற்கொலை செய்து கொள்கிறான். அதன் பின் விஜுவால் தன்னுடைய மன அழுத்தத்தில் இருந்து விடுபடாத நிலையில் தமிழகத்தை விட்டு மும்பை நோக்கி பயணம் ஆரம்பிக்கிறான்.
அங்கிருந்து கதை ஆரம்பமாகிறது. அந்த நேரம் இரு நபர்கள் தங்களுடைய மத நிறுவனத்திற்கு பேச்சாற்றல் கொண்ட ஒரு ஆள்தேடும் படலத்தில் விஜுவை சந்திக்கிறனர். விஜுவின் பின்புலத்தை அறிந்து, தேர்ந்து எடுக்கின்றனர்.
இந்த நபர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்து முன்னுக்கு வந்தப் புதுப்பணக்காரர்கள். கல்வி, அறிவு என எந்த தகுதியும் அற்று, வெறும் பேச்சாற்றலை மூலதனமாக கொண்டு கோடிகள் சம்பாதிக்கும் மத நிறுவன வியாபாரத்தை ஆரம்பிக்க திட்டமிடுகின்றனர்.
பக்கத்து ஆலையங்களில் இருந்து காலை காற்றுடன் வரும் ஜெப ஆராதனைகளை தன்னுடைய வேலைக்கிடையில் கேட்கும் வழக்கம் உள்ளவன் விஜு. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இந்நிலையில் தன்னால் கடவுளை பற்றி பறைசாற்ற இயலுமா என் சந்தேகிக்கிறான்.
விஜுவிற்கு வகுப்பு ஆரம்பமாகிறது. பைபிள் என்பது 60 புத்தகங்கள் சேர்ந்த ஒரு பெரும் வரலாற்று படைப்பு. வாழ்க்கை, வரலாறு, சட்டங்கள், மன்னர்கள், நீதிவசனங்கள், கதைகள் உள்ளடங்கிய பரந்து விரிந்த பைபிளில் இருந்து குறிப்பிட்ட பேய், நோய், அற்புதங்கள்,காணிக்கை சார்ந்த சில பகுதிகளை மட்டும் எடுத்து போதிப்பதில் இருந்து பாஸ்டர் அங்க உடை, நடை கூட பயிற்சி தரப்படுகிறது. தாய் பாசம் கூட விற்பனைக்கு என்ற நிலையில் ஊழியம் செழித்து வளர்கிறது. மத விளம்பரம், ஜெப எண்ணை விற்பனை, மக்களை சந்திப்பது, நேர்முகம் , உரையாடல்கள், பாடல்கள் பாடுதல், ஆடப்படும் நடனம், பணியாளர்கள்உடை என எல்லாமே கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவன அமைப்பிற்குள் இயங்குகிறது.
விஜுவிற்கு வகுப்பு ஆரம்பமாகிறது. பைபிள் என்பது 60 புத்தகங்கள் சேர்ந்த ஒரு பெரும் வரலாற்று படைப்பு. வாழ்க்கை, வரலாறு, சட்டங்கள், மன்னர்கள், நீதிவசனங்கள், கதைகள் உள்ளடங்கிய பரந்து விரிந்த பைபிளில் இருந்து குறிப்பிட்ட பேய், நோய், அற்புதங்கள்,காணிக்கை சார்ந்த சில பகுதிகளை மட்டும் எடுத்து போதிப்பதில் இருந்து பாஸ்டர் அங்க உடை, நடை கூட பயிற்சி தரப்படுகிறது. தாய் பாசம் கூட விற்பனைக்கு என்ற நிலையில் ஊழியம் செழித்து வளர்கிறது. மத விளம்பரம், ஜெப எண்ணை விற்பனை, மக்களை சந்திப்பது, நேர்முகம் , உரையாடல்கள், பாடல்கள் பாடுதல், ஆடப்படும் நடனம், பணியாளர்கள்உடை என எல்லாமே கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவன அமைப்பிற்குள் இயங்குகிறது.
தகுந்த பயிற்சி கொடுக்கப்பட்டு பேச்சாளராக மாற்றி மத வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. பாஸ்டர் பெயரில் வியாபாரம் கொடிகட்டி பறந்தாலும் கட்டமைக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தில் பாஸ்டரும் ஒரு அடிமை தான் என ஒரு கட்டத்தில் புரிந்து கொள்ளுகிறான். பாஸ்டருக்கும் தன்னுடைய முன்னுள்ள ஆயிரம், பதினாயிரம் லட்சம் பக்தர்கள் கூட்டம் பாஸ்டருக்கு ஒரு போதை! மனச்சாட்சிக்கும் எப்படியும் முன்னேற வேண்டும் என்ற ஆசைக்கும் இடையில் தத்தளிக்கிறார்.
குழுவில் போதகராகவோ அல்லது பக்தராக மாறின பின்பு விடுதலை பெறா வண்ணம் ஒரு தனி நபர், பக்தி என்ற மாயவலைக்குள் எப்படி மாட்டப்படுகின்றனர், தங்களுடைய சுய விருப்பத்தை பேண நினைக்கும் போது தாக்கப்படவும் நிறுவனங்கள் கொலைகாரர்களாகவும் மாறத் தயங்குவதில்லை என காட்சிகளூடாக காண்கிறோம்......
பணத்தை மக்களில் இருந்து ஈடாக்க நவீன தொழில்நுட்பங்களை பயண்படுத்தும் ஊழியக்கூட்டங்களில் அதி நவீன மனிதர்கள் வீழ்ந்து கிடக்கும் அவலம் என இரு முனைகளையும் காணலாம். அரசு ’மதமாற்றம்’ செய்யும் நிறுவனங்களாக வகைப்படுத்தி பல சட்டதிட்டங்கள் வகுக்குகையில் பணம் ஈட்டும் கார்ப்பரேட்டுளாக வளர்ந்த இவைமேல் எந்த அதிகாரவும் செலுத்த இயலாது தன் போக்கில் வளர விட்டுள்ளனர். அரசிற்கும் தனி நபர்கள் மாட்டுப்பட்டு சிக்குண்டு தவிப்பதை நோக்கவோ, சட்டங்களால் தடுக்கவோ , தண்டிக்கவோ வலுவற்றே உள்ளனர்.
மத நிறுவங்களின் அடிப்படையே மனிதனின் முரண் கொண்ட சூழல்களும் அவலங்களும் குழப்பங்களுமே. இதனாலே மனிதர்கள் இதுபோன்ற மத நிறுவனங்களால் வேட்டையாடப்படுகின்றர். இது போன்ற கூட்டங்கள் வளர்ச்சிக்கு சொல்லப்படும் பரிசுத்தம், நெறி, பாவம் மன்னிப்பு, ரட்சிப்பு, என சொல்லிக்கொண்டு மயக்கு மருந்து, பெண்கள் என எல்லா கெட்ட வழிகளையும் ஏவி விட்டு மனிதர்களை அழிக்கும் அவலத்தையும் சொல்லிய படம் இது.
உண்மையான ஆன்மீக வழிகள், சட்டங்கள், அரசு, எதனாலும் கட்டுப்படுத்த இயலாத சூழலில் இவர்கள் முன் மீடியாவும் தன்னுடைய பணம் ஆசையால் பின் வாங்கி போகிறது.
இவர்களால் பாதிப்படைந்த, தன் ஒரே மகளை இழந்த ஒரு எளிய மனிதன், இரு நபர்களையும் வெட்டி கொல்வதுடன் நிறுவனம மூடப்படும். அந்த மனிதன் வைத்திருக்கும் கொடுவாள் தென் இந்தியா கோயிலுகளின் சாமியாடுபவர்கள் பயண்படுத்தும், தெய்யம் என்ற கலை நிகழ்வுகளில் கலைஞர்கள் பயண்படுத்தும் மிகவும் பழைமையான ஆயுதம் ஆகும். புது வரவுகளான கார்ப்பரேட் மதவாதத்தை அழிப்பது அல்லது மக்களை மீட்டெடுப்பது நமது கலாச்சாரம், பண்பாட்டோடு இணைந்த நம்பிக்கைகள், கலைகள் பாரம்பரியமான சிந்தனை வளங்களை மெருகேற்றுவது வழியாக மட்டுமே சாத்தியம் எனப் புரிந்து கொள்ளலாம்.
இந்த திரைப்படம் உளவியலாக மென்மையான வலுவற்ற மனிதர்களை மனப்பிளர்வால் பாதித்த மனிதர்களை வைத்து மதம் என்ற பெயரில் எப்படியாக பணம் ஈட்டுகின்றனர் என்பதை விருவிருப்பான திரைக்கதை, இசை, நடிப்பால், எடுத்திருப்பதே இப்படத்தின் சிறப்பு.
ரசூல் பூக்க்குட்டியின் இசை இந்த படத்திற்கு உயிரூட்டியுள்ளது. அவ்வளவு தத்துவரூபமாக படக்கதையுடன் இணைந்த இசைக்கோர்வை. கதைத்தளம் கிறிஸ்தவமாக இருந்தாலும் பெரும்வாரியான கலைஞர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். இதே உண்மையுடன் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் பற்றியும் ஒரு படம் வந்தால் சிறப்பாக இருக்கும்.
உலகாமயமாக்குதல் நாடுகளை கிராமங்களாக தங்களுக்குள் ஸ்வீகரித்து கொண்ட போது மதங்களும் உலகமயப்படுத்தப்பட்டு கார்ப்பரேட்டுகளாக உருமாறியது. ஆறுதல் தருகிறேன் என மெதுவாக புகுந்த மதங்கள் மனிதர்களின் இயல்பை கெடுத்து, மக்கள் துயர்களையும் கண்ணீரையும் தங்களின் தளமாக அமைத்து வளர்ந்துள்ள கொள்கையற்ற அல்லேலூயா கிறிஸ்தவ அடிப்படவாதத்தின் தோலை உரித்த சிறந்த படம். நமது காலாச்சாரம், பண்பாடு மேல் தொடுக்கும் தளங்களை தோலுரித்து காட்டும் இது போன்ற திரைப்படங்களை மதம் கடந்து எல்லாரும் பாராட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
இது போன்ற படம் தமிழில் வர வேண்டும் என நினைப்பது பேராசை தான். ஆனால் வருவது மிகவும் கடினம். இதே படத்தை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்யலாம். இதில் நடித்திருக்கும் நடிகர்கள் தமிழர்களுக்கு அன்னியர்கள் அல்ல. கேரளாவில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினரல்ல, இருந்தாலும் இதுபோன்ற படங்களின் உண்மைத்தன்மையை ஏற்று கொள்ள தயங்க மாட்டார்கள்.
பகத் பாஃசில் அங்கீகரிக்கப்பட வேண்டிய மிகவும் தனித்துவமான நடிகர். பகத் நடிப்பிற்கு ஒரு ஆஸ்கார் விருது கிடைத்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. அவ்வளவு கச்சிதமான நடிப்பு. எந்த மிகைப்படுத்தலும் இல்லாது கதாப்பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி தனது உடல்மொழியால் அப்படியே வெளிப்படுத்தியிருப்பார். பாசமான அண்ணன், வாழ்க்கையில் போராடும் இளைஞன், பாஸ்டர், காதலன் என அந்தந்த கதாப்பாத்திரமாக உருமாறி கொண்டுருப்பார்.
கவுதம் வாசு மேனோன்,செம்பன் போத்தன் மத கார்ப்பரேட்களாக நடித்திருப்பார்கள். பாஸ்டரின் பயிற்சியாளராக வரும் டிலீஷ் போத்தன், விநாயகன், பத்திரிக்கையாளராக நடித்திருக்கும் சௌபின் சாகிர், எஸ்தர் கதாப்பாத்திரம் நஸ்ரியா(பகத் பாஃசில் மனைவி), ஒவ்வொருவரும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர்.
முதல்ப்பகுதி திரைக்கதை இயக்குனர் அன்வர் எழுத்தில் தேவையான வேகம் விருவருப்புடன் செல்கிறது. இரண்டாம் பகுதி வின்சன்று வடக்கன் எழுத்தில் கொஞ்சம் தொய்வு தட்டுவதை மறுக்க இயலாது. அமல் நீரட்ன் ஒளிப்பதிவு அருமை. BGM சுஷின் ஷ்யாம் மற்றும் ஜாக்சன் விஜயனும் சேர்ந்து செய்துள்ளனர்.
அல்லேலூயா கூட்டங்களில் வேகமான இசை, தேர்ந்தெடுத்த குத்துப்பாட்டு, இசை, நடனம் கைதட்டுதல் ஊடாக ஒரு மின்சாரப்பாய்ச்சலை நாம் உணருவோம். அதே மின்சார அதிர்வை இந்த படவும் தந்துள்ளது.
இந்தியாவில்
உள்ள
பிராதன
சில கார்ப்பரேட் சாமியார்களின்
இந்திய பணமதிப்பில் வருமாகக் கணக்கு கொடுத்துள்ளேன். அப்போது இப்படத்தின் நோக்கம், தாக்கம் தேவை நீங்களும் புரிந்து கொள்வீர்கள்.
Paul
Dhinakaran Baba - 5000 crore,
Mata Amritanandamayi -1500
crore, Baba Ramdev -1500 crore,Sri Sri Ravishankar
- 1000 crore,
Asaram Bapu -350
crore,Gurmeet Ram Rahim Singh Insaan 300 crore, Acharya
Balkrishna - 94.84
crore, Avdhoot Baba Shivanandji Maharaj -40 crore, Satguru
Jaggi Vasudev 16
crore
இந்த திரைப்படத்திற்கு Trance என்ற பெயர் எதனால் வைத்திருக்கிறார்கள் என சிந்தித்திருப்பீர்களே. அதன் பொருள் சமாதி நிலை. அல்லது தன் நினைவிழந்த நிலை. சரியான பெயரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர் படக்குழுவினர்.
Nice
ReplyDelete