சமீபத்தில் ஆர்வத்துடன் வாங்கின புத்தகம் இது. சில புத்தகங்கள்
புதிய தகவலை புதிய அறிவத் தர உதவும். ஆனால் இப்புத்தகம் வாசித்த பின்பு புத்தக
உள்ளடக்கத்தை விட எதனால் இப்புத்த்கம்
எழுதியிருக்க கூடும் . இதன் பின்புலன் பற்றி தான் ஆராய தோன்றியது.
புத்தக எழுதியவர் எஸ் செண்பகப்பெருமாள். ஓய்வு பெற்ற
ஆசிரியர்... சமூகநல்லிணக்கத்தை பேணும் விதம்
பணியாற்றுவதாகவும், இந்திய ஆன்மீகத்தை குறித்து பேசி வருவதாகவும், இறையியல்
கல்லூரியில் பைபிள் வகுப்பு எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பதிப்பாசிரியர் கிழக்குப்பதிப்பகம். வாழ்த்துரை
வழங்கியுள்ளவர் அருட் திரு ஜோயேல் செல்லத்துரை, தனியார்ச் சபைபிஷப். வாழ்த்துரை
எழுதிய மதத்தலைப்வரும் எழுத்தாளரும் சேர்ந்து விவிலியம் கற்றுள்ளார்கள். ஆய்வு நூல் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தகத்தின் உள்ளடக்கம். கிறிஸ்தவத்தின் வரலாறு, கிறிஸ்தவம் உருவான இஸ்ராயேல் நாட்டின் அரசியல், யூதர்கள் வரலாறு, ஆட்சி செய்த மன்னர்கள், அவர்களின் வாழ்வியல், கத்தோலிக்கம் மற்றும் ப்ரொட்டஸ்டன்டு பைபிளில் உள்ள வேறுபாடு, கிறிஸ்துவின் வளர்ப்பு, மரணம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் நூற்றாண்டு காலத்தில் யூதக் கிறிஸ்தவம், பவுல் கிறுஸ்தவம், குணாஸ்டிசிச என மூன்று பிரிவுகள் இருந்தது. பின்பு இது கத்தோலிக்கம் என்ற ஏகோபித்த சபையின் கீழ் செயல்பட்டது. இதற்குள் 20 க்கு மேற்பட்ட சுயாட்சி சபைகள் உள்ளன்.
1517 ல் மார்ட்டின் லூதர் என்ற பாதிரியாரின் மாறுபட்ட கொள்கை புரோட்டஸ்டண்ட் என்று புது கொள்கை கொண்ட கிறிஸ்தவம் வளர கத்தோலிக்கம் புரஸ்டண்ட என இரண்டாயிற்று. இதில் 19 பிரிவுகள் உள்ளன். தமிழகத்தில் சி. எஸ்.ஐ பிரதான மதப்பிரிவாகும்.
பெந்தேகோஸ்து மதத்தில் மட்டும் 80 க்கு மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன்.
இந்துக்களுக்கு வேதாந்தம் என்பது போல கிறிஸ்தவ் எல்லா பிரிவு சபைகளுக்கும் பைபிள் எனும் ஒரே நூலை அடிப்படையாக கொண்டது.
பழைய ஏற்பாட்டு நூல்கள் எபிரேய் மொழியில் (ஹீப்ரூ) எழுதப்பட்டு , அலெக்சாண்டருக்கு பின் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல் ஹீப்ரு மற்றும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. ரோமானியர்கள் ஆட்சியில் லத்தீன் மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகின்றன.1324 ல் இங்கிலாந்தை சேர்ந்த ஜான்வைக்க்ளிப் ல்த்தின் மொழ்ஹியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயற்க்கின்றார்.
போகப்போக கிறிஸ்து ஜாதி வெறியர், பெண்களுக்கு அதிகாரம் கொடுக்க வில்லை, கிறிஸ்து யூதர்களை மட்டுமே நல் வழிப்படுத்தினார். பவுல் என்ற ரோம் யூதர் தான் கிறிஸ்தவத்தை யூத மக்களில் இருந்தும் புறம் மக்களுக்கு ( யூத மக்களல்லாதவர்க்கு ) கொண்டு சேர்த்தார் இதில் கிறிஸ்துவின் நேரடி சீடர்களுக்கும் பவுலுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.
கடைசி பகுதியில் அல்லேலூயா கிறிஸ்தவர்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். அல்லேலூயா கிறிஸ்தவம் கிறிஸ்தவத்தின் பாணி அல்ல என்பதும் கிறிஸ்து சிலுவையில் கொல்லப்பட்ட பின்பே பரிசுத்த ஆவி என்ற கருத்தாக்கம் உருவாகியதாக கூறுகிறார்.
பவுலுக்கும், பேருதுவிற்கும் இருந்த கருத்து வேற்றிமை விவிலியத்தில்
அவதானிக்கலாம். முதல் நான்கு சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் அறிவுரை கிறிஸ்து கூறின
கதைகள் உவமைகள் அடங்கினது. அடுத்த சில புத்தகங்கள் கிறிஸ்துவின் இறப்பிற்கு பின்பு
உலகம் முழுக்க சிதறி ஓடின கிறிஸ்துவின் நேரடி சீடர்களால், மற்றும் பவுலால்
எழுதப்பட்டது என நம்பப்படுகிறது.
புத்தக ஆசிரியர்
சொல்ல வந்த கருத்தில் தெளிவு இல்லை. இவர் பவுல் பேதுரு இருவரின் முரண்கள் பற்றி
எழுதினாரா அதிலும் தெளிவில்லை. புதிய ஏற்பாடு
விவிலிய நாயகன் யேசுவை பற்றியும் பெரிய மதிப்பில்லை.
சுயசார்பான
சபை நடத்தும் பிஷப்பின் ஆதரவுடன் எழுதியதால் கட்டமைப்புக்குள் இருக்கும் கத்தோலிக்க மற்றும் புரொட்டஸ்டன்ற சபைகளை எதிர்க்க வேண்டும்.
யகோவா சாட்சிகள் என்ற இன்னொரு கும்பல் உண்டு. அவர்கள் யேசுவையே மறுதலித்து ய்கோவா தான் கடவுள் ஒருவரே தேவன் என்பார்கள். அப்படியெனில் அதையாவது ஊன்றி எழுதி இருக்க வேண்டும். ஒருவித சிறுபிள்ளைத்தன குறிப்புகளை நிகழ்வுகளை வைத்து எழுதியுள்ளார்.
யகோவா சாட்சிகள் என்ற இன்னொரு கும்பல் உண்டு. அவர்கள் யேசுவையே மறுதலித்து ய்கோவா தான் கடவுள் ஒருவரே தேவன் என்பார்கள். அப்படியெனில் அதையாவது ஊன்றி எழுதி இருக்க வேண்டும். ஒருவித சிறுபிள்ளைத்தன குறிப்புகளை நிகழ்வுகளை வைத்து எழுதியுள்ளார்.
ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இணங்க, கிறிஸ்து பெண் சீடர்களை
நிறுவில்லை என்கிறார். புது ஏற்பாடு விவிலியத்தை வாசித்தால் கிறிஸ்விற்கு பல
பெண் சீடர்கள் இருந்ததை அறியலாம். வேசி என்ற பெண்ணிடம் பேசுவது ஒரு பெண்ணை யூத
சட்டத்தில் தண்டிக்கும் தயார் ஆன போது உங்களில்
தவறு இல்லாதவன் முதல் கல் எறியுங்கள் என தடை செய்வார். மேரி, மார்த்தாவை சந்திக்க
சென்றிருப்பார். மத்லேன் மரியாள் கூட உருகி கேட்டிருப்பார் நீங்கள் போய் விட்டால்
நான் என்ன செய்வது. இதை எல்லாம் இந்த புத்தக ஆசிரியர் மறந்து விட்டார். கிறிஸ்து
உயிர்த்த போது அவர் கல்லறையில் போய் அவரை தேடுவதும் அவர் இல்லை என கண்டடைவதும்
மத்லேனா மரியாள் என்ற பெண் மணி தான். இதை கேள்வி எழுப்பியிருப்பார். எப்படி ஒரு
வேசிய பெண்மணிக்கு கிறிஸ்துவின் உயிர்ப்பை தெரிவிக்கலாம் என்று.
அட்டையை
பார்த்து, பதிப்பகம் நோக்கி இது போன்ற புத்தகங்களை வாங்கக்கூடாது என்ற புரிதல்
இருந்திருக்க வேண்டும்.
ஒரு மதத்தை பற்றி எழுதுகையில் ஒரு ஆன்மீகப்பார்வை இல்லாது விதண்டாவாதம் பேசும் புத்தகம்.
ஒரு மதத்தை பற்றி எழுதுகையில் ஒரு ஆன்மீகப்பார்வை இல்லாது விதண்டாவாதம் பேசும் புத்தகம்.
கடவுள் என்ற
கதாப்பாத்திரங்களை அவதானிக்குகையில் அதில் சில உயர்ந்த உருவகம் நோக்கம் இருக்க
வேண்டும். எதுவும் அற்று ஏதோ சில தருவுகளை வைத்து பவுலின் கிறிஸ்தவம் என்ற தலைப்பில் கருத்தாக்கம் அற்ற புத்தகம்.
Book review by the colonial religions fanatics trival religions fanatics one and only one way ticket...
ReplyDelete