மலையாள
இயக்குனர்
லிஜோ
ஜோஸ்
பெலிச்சேரியின்
இன்னொரு
திரைப்படம்
ஜல்லிக்கட்டு!
கதைத்தளம்
மலங்காடு,
இடுக்கி
மாவட்டம்..அங்குள்ள
வாழ்வியல்
காடு,
ஏலைக்காய்
தோட்டம்
, கோயில்
பாதிரியார்,
பணக்காரன்,
ஏழைகள்,
ஹிப்பிகள்
அவர்கள்
உணவு,
காதல்,
போட்டி
பொறாமை.
"அடிப்படையில்
மனுஷங்க
எவ்வளவு
சல்லிப்பயல்கள்,
வெறும்
வேட்டையாடும்
காட்டுவாசிகள்"
என
முடித்துள்ளனர்.
இதில் மனிதனுக்கும் விலங்குக்குமான போராட்டமாக புறமே தோன்றினாலும் மனிதனின் இருபக்கங்கள் மனிதவும் தன்னுள் ஒளிந்து கிடக்கும் அரக்கத்தனத்திற்குமான போர் இதுவே மைய்யக்கருத்து.
இதில் மனிதனுக்கும் விலங்குக்குமான போராட்டமாக புறமே தோன்றினாலும் மனிதனின் இருபக்கங்கள் மனிதவும் தன்னுள் ஒளிந்து கிடக்கும் அரக்கத்தனத்திற்குமான போர் இதுவே மைய்யக்கருத்து.
இறச்சிக்கடையில்
இருந்து
ஒரு
எருது
தப்பித்து
போவதுடன்
கதை
ஆரம்பிக்கிறது.
எருதை
விரட்டுகின்றனர்.
வழியில் காண்பவை எல்லாம் உடைத்து போட்டு அது பாய்கிறது. பணக்காரன்,
கோயில்காரன்,
பணியாளன்,
அரசு இயந்திரம் என எதுவும் அதற்கு பொருட்டல்ல. எதிரில்
காண்பவர்களை
அழித்து
கொண்டு
அது
மரணப்பாச்சில்
எடுக்கிறது.
நாம்
இப்போது
எதிர்
கொள்ளும்
கொரோனாவை
இந்த
எருதுடன்
பொருத்தி
பார்க்கலாம்.
முதலில்
எருதின்
உடமையாளனை
திட்டுவார்கள்,
அடிக்க
போவார்கள்
"நீ
ஏன்
இது
போன்ற
எருதை
அவுத்து
விட்டாய்"
என
கேட்டு
ஊரே பஞ்சாயித்து
கூடும்.
சீனாக்காரனை திட்டுதோமே அது போலத்தான்.
ஒரு
கட்டத்தில்
இந்த
எருதை
யாராலும்
கட்டுப்படுத்த
இயலாது
என்றதும்
ஒரு
தோக்கு
வைத்திருக்கும்
வேட்டைக்காரன்
குட்டப்பன்,
அந்த
ஊரிலுள்ள
சட்டம்பிகள்
கும்பலிடவும்
உதவியை
நாடுவார்கள்.
இப்போதைக்கு பொது எதிராளி எருது இதை எப்படி ஆகினும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள். நாம் கைதட்டி, விளக்கு வைத்த மனநிலையில். நம்ம நாடுகள் மாறி மாறி மருத்துவ உதவி நாடுவது மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.
எருது
ஓட
அதன்
பின்னால்
ஊரே
ஓட………..
காலையில்
ஆரம்பித்த
ஓட்டம்,
இரவு
ஆன
பின்பும்
முடியவில்லை.
நான் அதை செய்வேன், இதைச் செய்வேன் என பெருமை பேசும் மனிதர்கள், எருதுவின் ஒரு பார்வையிலே கீழே விழுந்து கிடப்பான். இயற்கையை மனிதர்களால் மீற இயலாது என்று நினைவுப்படுத்தி கதை
நகர்கிறது.
ஒரு
அதிஷ்டம்,
எருது
நடுக்காட்டில்
ஒரு
கிணற்றுக்குள்
விழுந்து
விட்டது.
அப்பாடா…..
ன்னு
ஆறுதலடைந்து மூச்சுவிட்ட
மக்கள்
கூட்டம்;
எருதுவை
கிணற்றினுள்ளில்
வைத்தே
துப்பாக்கியால்
சுட்டு
கொல்ல
திட்டமிடுகின்றனர்.
மனிதன்
தன்
நோக்கத்தை
அடைந்ததும்,
அவன்
குணம்
வந்த
வழிகளும்
மறந்து,
அகம்பாவம்
எடுத்து,
அவனை
எங்கு
விட்டது
துயர்கள்.
தன் முன் இருக்கும் ஆபத்து விலகியதும் மூளை குடிலமாக சிந்திக்க ஆரம்பிக்கிறது.
நான்
தான்
எருது
கிணற்றில்
தள்ள
காரணமாக
இருந்தேன்.
வெளியே
எடுத்து
நான்
தான்
கொல்லுவேன்
என
ஆண்டனி
பிடிவாதம்
பிடிக்கிறான்.
எருதை
சுட்டு
போட
வந்த
குட்டப்பனை
தடுக்கிறான்.
அப்புறம் எருதை கொன்று ஊர் மக்களை காப்பாற்றின பெருமை குட்டப்பனுக்கே போய் சேர்ந்து விடும், அது தன் ஆளுமைக்கு குறைச்சில் என நினைக்கிறான். நம்ம அமெரிக்கா ட்ரம்பு குணம் என வைத்து கொள்வோம்.
இதனிடையில்
சுவாரசியமான
சில
சம்பவங்கள்.
அப்பனுக்கு
விடிந்தா
மகள்
திருமண
நிச்சயத்தை
நடத்த
விருந்து
வைக்க
வேண்டும்.
அவரோ
யாரை
அழைப்பது,
எந்தந்த
உணவு
பரிமாறுவது
, எருது
7 கிலோ
வாங்க
வேண்டும்
அதை
எண்ணை
ஊற்றி
எப்படி
வழற்றி
கொடுப்பது என்று திட்டம் போட்டுக்கொண்டு இருப்பார். புள்ளை எவனோடோ தன்னை மறந்து கைபேசியில் கதைத்து கொண்டு திரியும்.
விடியப்
போவுது எருது கிடைக்குமா என்ற நம்பிக்கை இல்லை. அப்போ
நாட்டு
கோழியாவது
வாங்குவோம்
என
பக்கத்து
வீடு
கோழி
விற்பவரிடம்
போவார்.
தகாத நேரம் வந்ததால் யாரும் இவர் கோழி வாங்க வந்தார் என நம்பமாட்டார்கள். பெண்
கோழி
பிடிக்க
வந்தார்
என்ற
நிலையில்
இவரை
பிடித்து
கட்டி
வைத்து
அவமதிப்பார்கள்.
மகள்
இதனிடையில்
காதலனுடன்
ஓடிப் போவதற்கு
திட்டம்
போட்டு
அவனுடன்
தப்பி
போய்
கொண்டிருப்பாள். எருது விரட்ட இரவில் நடமாடின மக்கள் இவளை கண்டு தகப்பன் வீட்டில் கொண்டு சேர்ப்பார்கள். அப்பனுக்கு மகளை கேள்வியும் கேட்க இயலாது........
இன்னொரு
பக்கம்
எருதை
தொலைத்து
சாவா-வாழ்க்கையான்னு
போராடிக்
கொண்டிருக்கும் இறச்சிக் கடைக்காரனின் தாத்தாவை பற்றி, இந்த ஊருக்கு வந்த வரலாற்றை பற்றி நையாண்டி செய்து கொணடு இருப்பார்கள் ஊர் மக்களில் சிலர்.
பெண்
மேல்
கொண்ட
அதீத
காதல்
ஆண்டனியை
வெறியனாக
மாற்றி
விடும்.
அந்த
இக்கட்டான
தத்திர
கட்டத்திலும்,
தனக்கு
முன்
குட்டப்பன்
அவளை
அடைந்து
விட்டானோ
என்று
ஓடி
போய்
அவள்
வீட்டில்
பார்ப்பான்.
நான்
தான்
எருதை கிணற்றில் தள்ளி போட்டேன். இறச்சியோடு வருகிறேன் என்றதுமே பெண் மனதில் ஆண்டனி வலியவனாக தெரிய ஆரம்பிக்கிறான்.
நம்ம
கிணற்றுக்குள்
விழுந்த
எருது
என்னாச்சுன்னு
பார்ப்போம்.
குட்டப்பனுக்கும், ஆண்டனிக்கும் ஒரு முன் பகை உள்ளது. இருவரும் மாடு வெட்டும் கடைக்காரரின் ஒரே தங்கையை காதலிக்கின்றனர். இந்த சூழலை பயண்படுத்தி அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும், கல்யாணம் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்டனிக்கு . பெண்ணோ ஆண்மையின் அடையாளமான குட்டப்பன் மேல் தான் மையல் கொண்டிருப்பாள்.
குட்டப்பனுக்கும், ஆண்டனிக்கும் ஒரு முன் பகை உள்ளது. இருவரும் மாடு வெட்டும் கடைக்காரரின் ஒரே தங்கையை காதலிக்கின்றனர். இந்த சூழலை பயண்படுத்தி அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும், கல்யாணம் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்டனிக்கு . பெண்ணோ ஆண்மையின் அடையாளமான குட்டப்பன் மேல் தான் மையல் கொண்டிருப்பாள்.
அடுத்து
எருதை
கிணற்றில்
இருந்து
மேலே
எடுக்க
வேண்டும்.
ஒரு
எருதை
எடுக்க
ஊர்
ஆண்களே
தங்கள்
வலிமையை
பயண்படுத்தி
கொண்டு
இருப்பார்கள்.
ஒரு மகன், தன் தாயின் மரணப்படுக்கை அருகே இருந்து கவனித்து கொண்டு இருப்பார். சத்தம் கேட்டதும் என்ன நடக்கிறது என்று கூட்டத்தோடு வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருப்பார். எருதை ஊரே சேர்ந்து மேலே கொண்டு வரும் நேரம், மழையும் ஆரம்பிக்க எருது குதறி தப்பித்து ஓடிடும். மறுபடியும் எருது பின்னால் ஓடுக் கொண்டு இருக்கும் கூட்டம்.
ஒரு அருவியில் ஆண்டனியும், குட்டப்பனும் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். அந்த எருதால் வந்த உயிர் அச்சம் , ஊர், மக்கள் பிரச்சினை எல்லாம் மறந்து அந்த பெண் பெயரைச் சொல்லி கட்டி புரண்டு சண்டை போட்டு கொண்டிருப்பார்கள். எருது அங்கே வந்திடும் குட்டப்பன் ஆணியை கொடுத்து எருதை குத்துடா; என்றால் இப்போது ஆண்டனிக்கு எருதை விட குட்டப்பன் தான் பிரச்சினை. குட்டப்பனை குத்தி போட்டு தப்பி ஓடிக்கொண்டு இருப்பான்.
ஆக்கள் குட்டப்பனை கண்டு ”எருது குத்துன மாதிரி இல்லையே, யார் குத்தினது” என்றதும் எருது தான் எனக்கூறி ஆண்டனியை காப்பாற்றுவான்.
ஒவ்வொரு பிரச்சினைக்கு இடையில் காவல்த்துறை வந்து பஞ்சாயத்து வைக்கும் வழக்கை தீர்த்து விடும். ஆனால் போலிஸ்காரனுக்கும் அவர் பெண்டாட்டிக்கும் தீராத தீர்க்கப்படாத வழக்குகள்.
எந்த
துன்பவும்,
எந்த
உருவில்
வந்தாலும்
கடந்து
போயிடும்.
இந்த
போராட்டத்தில்
யார்
அழியுவார்கள்
என்று
தான்
தெரியாது. நேரடி
தொடர்பு இல்லாத குட்டப்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில், தன் வயதான அம்மாவை பார்த்து கொண்டிருந்த மகன் மரணம் பக்கம் . எருதின் உடமையாளரின் பிரச்சினை தான் இது. ஆனால் அவர் அறியாதே பிரச்சினை அவர் கைவிட்டு போய் ஆண்டனி, அடுத்து குட்டப்பன் பிரச்சினையுமாகி, ஊரே பின்ன தனக்க
பிரச்சினை
மாதிரி
எடுத்து
போராடிக்
கொண்டிருக்கும்.
கொரோனா,
ஏதாவது
ஒரு நாட்டின்
பிரச்சினை
அல்ல,
எல்லா
நாட்டின் பிரச்சினை ஆவது மாதிரி.
ஹ்ரீஷின் கதை, எஸ் ஹரீஷ் (S. Hareesh) மற்றும் ஆர் ஜெயக்குமாரின் ( R. Jayakumar) சிறப்பான
திரைக்கதை, மிகவும்
குறைந்த
உரையாடல்கள்,
யதார்த்தமான
சண்டை
காட்சிகள். கிரீஷ் கங்காதரனின் (Girish Gangadharan) ஒளிப்பதிவு
அட்டகாசம் பல காட்சிகள் இரவு இருட்டில் தான். ஒலி, பிராஷந்த் பிள்ளையின் பின்னனி
இசை அருமையிலும்
அருமை.
பாடல்கள்
தான்
ஒன்று
கூட
இல்லை. பின்னனி இசையிலும் , எடிட்டிங்கிலும் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
ஒன்றேகால் மணி நேரம்; எருது கிடைக்குமா கிடைக்காதா? நாமும் இந்த ஊர்க்காரர்களுடன் காடு, மலை தோட்டம் என ஓடி ஓடி அந்த சதுப்புல எருது பிடிபடுவதுடன் நேரம் போனதே தெரியவில்லை. நடிகர்களை நம்பாது கதைக்கருவை முன்னிலைப்படுத்தி எடுத்த இயக்குனர் படம்.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருப்பதாகத் தோன்றியது.
ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருப்பதாகத் தோன்றியது.
0 Comments:
Post a Comment