இந்த திரைப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நகர்கிறது.
கோஷி ஒரு முன்னாள் ராணுவவீரர். கோஷி கட்டப்பனையில் இருந்தும் அங்கமாலிக்கு நண்பர்களை சந்திக்க செல்கிறான். பயணித்த வாகனத்தில் சாராயம் இருந்தது என்று கைதுச் செய்யப்படுகிறார்.
பல பெரும் புள்ளிகளுடன் தொடர்பு இருப்பதை கண்ட போலிஸ் பிற்பாடு சில வசதிகளை செய்து கொடுக்கிறது. பத்து நாள் ஜெயிலில் இருந்தே ஆக வேண்டிய சூழல்.
வன்மம் கொண்ட கோஷி, இன்ஸபக்டரான ஐய்யப்பனிடம் வன்மம் தீர்கக ஆரம்பிக்கிறான்.அப்புறம் எவ்வொரு நிகழ்வாக தொடருகிறது. கோஷிக்கு தான் செய்தது தவறு எனத்தெரிந்தாலும் பணத்திமிர் தன்னுடைய தவறை ஏற்க மறுக்கிறது. மேன்மேலும் அங்கு சிக்கலை உருவாக்குகிறது. பணத்திமிருடன் ஒரு ரவுடி தகப்பன் வேற. அத்துடன் ஒரு பயந்தாம் கொள்ளி மனைவியும்.
இந்த பக்கம் பார்த்தால் ஐய்யப்பன் ஏதோ அமானுஷிக சக்தி இருப்பவன் போல மாடன்! பாண்டிகளை அழித்தவன் என்ற புனைவு வேறு. அந்தாளுக்கு ரிட்டய்டு ஆக இன்னும் ஓரிரு வருடங்கள் தான் உள்ளதாம். குற்றவாளி தெளிவா கைபேசியால் படம் புடிப்பதை கவனிக்காது இருந்தாராம். ஒரு ஆதிவாசிப்பெண்ணை திருமணம் முடித்து 2 வயது குழந்தை. சரி எத்தனை வயதிலும் கல்யாணம் பண்ணி போடட்டும். ஒரு போலிஸ்காரன் அளவிற்கு மீறி நல்லவனும் அப்புறம் கெட்டவனாகுவது தான் லாஜிக்கை இடிக்கிறது.
திரைக்கதை , ஒளிப்பதிவு , பாடல்கள் , இசை , நடிப்பு எல்லாம் நன்கு தான். இந்த இருவரும் கொழுப்பெடுத்து போய் சண்டை போடுவதை பார்க்கவா நாம் மூன்று மணிநேரம் செலவழிக்கிறோம். பேசும் போதும் ஒழுங்கா பேசி தெரிந்து கொள்ளமாட்டானுகள். சப்போர்ட்டு கதாப்பாத்திரங்கள் தான் விவரித்து கொண்டு இருக்கும்.
போலிஸ் துறையே ஒருவனுக்கு எதிர். அப்பன் கிழவன் அட்டகாசம் அதிலும் சல்லித்தனம். அந்த கிழவனை பிடித்து ஜெயிலில் போட்டிருந்தாலே பல நிகழ்வுகள் நடக்காது படம் இன்னும் சுவாரசியமாக நகந்திருக்கும்.
ஆர்மிக்காரனுக்கு ஒரு மோடேர்ன மனைவி இருப்பா. எப்போதும் பயம் தான். இந்த காலத்தில இப்படி ஒரு மனுஷியா கட்டபப்னையில் இருந்து? சிலை தான் வைக்கனும்.
'பாண்டி' கான்சபட் கதைகளை இன்னும் விடவில்லையா இந்த மலையாளத்து திரையுலகம். இப்போதும் பாண்டிகள் அவர்களிடம் அடி வாங்கி ஓடுவது மாதிரி ஒரு நினைப்பு போலும்.
அவன் பணக்காரன்னு போலிஸ்காரங்களை எடோ போடோன்று அழைப்பது , தனக்க தகப்பன் வயதுடைய கார் ஓட்டுனரை எடா குமாரான்னு அழைப்பது, போலிஸ் நிலையத்திற்கு உள்ளே கையெழுத்து போட வரும் கிரிமினலை தொப்பியை கழற்றி மரியாதை தருவது. மொத்தத்தில் ஜமிந்தார் காலத்தில் எடுப்பது போலய மொக்கப்படம்.
இந்த காலத்தில் ஈகோவாம் ....பகையாம். உரையாடல்கள் அருமை. மற்றபடி இந்த மாதிரி படங்கள் கார் வைத்து கொண்டு, கழுத்து- கையுலை நகை போட்டுக்கொண்டு அடாவடித்தனம் செய்யும் ரவுடி மனநிலையை வளர்க்கும்.
பழங்குடி மக்களை வேற ஒரு சீனில். எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை. சும்மா வெற்று வேட்டு..சாரமற்ற கதைக்கரு. வன்மத்தை எவ்வளவு நேரம் தான் பார்த்து கொண்டு இருப்பது. நல்ல நடிகர்கள் உழைப்பை பாழ்படுத்தி விட்டனர்.
0 Comments:
Post a Comment