இரக்த சாக்ஷிகள்,வெள்ளானகளுடை நாடு, சந்தேஷம், பத்ரம், வெள்ளி மூங்கா, சர்வகலாசாலா போன்ற அரசியல் படங்களின் காலமாக இருந்தது 80-20
காலகட்டம். அரசியல் நிகழ்வுகளை ஆதாரமாக கொண்டு பல படங்கள் வெளிவந்ததன. 1990 ல் வெளிவந்து வெற்றி நடைபோட்ட அப்படியான ஒரு படம் தான் ’லால் சலாம்’. லால் சலாம் என்றால் ’சிவப்பு சலாம்’. அந்த காலத்தில் தான் சகாவு, (தோழர்) என்ற வார்த்தைகள் நமது சமூகத்தில் குடியேற
துவங்கியது. கேரளாவில் கல்லூரி, பள்ளிகளில் சிவப்பு இரத்ததை பாய்ச்சிய படங்கள் இது.
இப்படத்தின் இயக்கம் , திரைக்கதை, உரையாடல்கள் ம்றைந்த வேணுநாகவள்ளி, கதை கேரள கம்னீஸ்டு
இயக்கத்தின் முதன்மை தலைவர்களில் ஒருவரான வர்கீஸ் வைத்தியர் மகன் செறியான் கல்பகாவாடி எழுதினது . ஒளிப்பதிவு கெ.பி நம்பியாதிரி, எடிட்டர் என் . கோபாலக்கிருஷ்ணன்.
அன்றைய பிரதான நடிகர்கள் மோகன்லால்,மறைந்த முரளி, கீதா , ஊர்வசி, மது, , ககதிஸ்ரீகுமார், ரேகா ,காலம் சென்ற சுகுமாரி ,லாலு அலெக்ஸ் ,கரமன ஜனார்த்தனன் நாயர், திக்குறிஷி போன்றோர் இயல்பான தங்கள் நடிப்பால் இப்படத்தை வெற்றி பெற செய்திருப்பார்கள்.
இரு நண்பர்கள் ஒருவர் கம்யூனிஸ்டு ஆக இருந்து குடும்ப வாழ்க்கைக்குள் திரும்பியவர். இன்னொரு நண்பர் தனது திருமண வாழ்க்கையை அரசியல் வாழ்க்கைக்காக இழந்தவர்.
கதை மூன்று கதாப்பாத்திரங்களை சுற்றி சுழன்று முடியும். ஸ்டீபன் நெட்டூரனும், அந்தோணியும் நண்பர்கள். அந்தோணியின் மனைவி சேது. கேரளாவில் நம்பூதிரிப்பாடு தலைமையில் முதல்
கம்னீஸ்டு ஆட்சி வந்த போது அந்தோணியும் சேதுவும் அமைச்சர்களாக இருந்தவர்கள், முதல்கட்ட போராட்டங்களில் ஈடு பெற்று
சிறைச்சாலை சென்று வந்திருப்பார்கள்.
இரு பெண் ஆளுமைகள், இரு நண்பர்களின்
மனைவிகளாக
வந்ததும் அவர்கள் செலுத்திய் தாக்கம், அரசியல் திருமண உறவில்புகுந்த போது எதிர் கொண்ட துயரும், அழிவையும் இப்படத்தில் விவாதித்து இருப்பார்கள்.
சேது தன் கணவரும் மந்திரியுமாக இருந்த அந்தோணி மேல் செலுத்திய மூர்க்கத்தனமான பிடிவாதம்,
அந்தோணி வாழ்க்கையை அழித்து கொண்டு இருக்கிறது.
இவர்கள் சேர்வதற்காக முயன்று தோற்று போன நண்பர் ஸ்டீபன், கடைசி வரை எந்த சூழலிலும் நண்பனுக்கு துணையாக இருந்ததை, நட்பின் சிறப்பை இந்த படத்தில் காணலாம்.
அந்தோணியும் சேதுவும் கேரளா மந்திரிகளாக இருப்பார்கள். அந்தோணிக்கு ஒரு பெண்ணுடன் இருந்த தொடர்பும் அதில் இருக்கும் மகனும் இவர்கள் திருமண வாழ்க்கையை பிரித்து விடும். அந்தோணி ஒரு விபத்தில் மரிப்பதுடன் அந்தோணி மகன் சிறந்த கம்னீஸ்டாக வருவார் என்ற நம்பிக்கையுடன் படம் முடிந்திருக்கும்.
ஒரு காலகட்டத்தில் ஒன்றாக செயல்பட்ட கன்யூனிஸ்டு தோழர்கள் கட்சி உடையும் போது அவர்களுக்குள் பிரிவனை உருவாகுவதும், ஏழை எளிய மக்களுக்காக பல தியாகங்கள் ஊடாக உருவாகின ஒரு இயக்கம் தனி நபர்கள் ஈகோவால், போட்டியால் அதன் நோக்கத்தை இழந்து நிற்பதை சொல்லிய படமாகும் லால் சலாம் கதை. கம்யூனிஸ்டு கட்சியிலுள்ள பேதமைகளும், கம்யூனிஸ்டு கொள்கையில் அதீத நம்பிக்கை உள்ளவர்களையே புறம்தள்ளும் அதன் நிலைபாட்டையும் விமர்சித்து படம்.
கம்யூனிஸ்டு கட்சி என்பதின் ஆழமான கொள்கையும், அது அதிகாரத்தில் வந்த போது தொழிலதிபர்கள்
மேல் கொண்ட அதீத வெறுப்புணர்வும், உழைத்து தனக்கான பணத்தை
சம்பாதிக்க வேண்டிய தேவைகளை கட்சி உணராது இருப்பதும் , மனிதர்கள் போராளிகளாக இருந்து கொண்டு தங்கள் தனி நபர் வாழ்க்கையில் சந்திக்கும் பிரயாசங்களையும் கட்சி தெரிந்து கொள்ளாது இருப்பதும் காணலாம்.
அந்தோணி கன்யூனிஸ்டு கொள்கையில் திளைத்து இருக்கும் போது, பெண் உடலை பொது உடமைபோல் பாவிக்கும் தாராளப்போக்கும் அதனால் அந்த நபர் கடைசி வரை பெண்ணால் நேசிக்கப்படாது , பெண்ணாலே வேட்டையாடப்பட்டு அழிந்து போனதையும் சொல்லியுள்ளது இப்படம்
கேரளா கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆலையம், பாதிரியார்கள், சபை மறுக்க இயலாத தாக்கத்தை குடும்பங்களுக்கு தருவது,. அவ்வகையில் ஸ்டீபன், கதாப்பாத்திரம் ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை கல்யாணம் செய்ய அழைத்து வரும் போது தவிற்க இயலாத சூழல் கருதி திருச்சபை
சட்டங்களையும் பொருட்படுத்தாது பாதிரியார் கல்யாணம் செய்து வைப்பதும், கடவுளையும் ஆலையத்தையும் நம்பாத ஸ்டீபன், பணப்பிரச்சினையில் பாதிரியாரிடமே கடன் வாங்குவதும், பாதிரியார் உதவுவதும் அன்றைய கிறிஸ்த சபைகள், பாரபட்சமில்லாது மக்களிடன் கனிவாக நடந்து கொண்ட விதத்தினை பதிவு செய்துள்ளனர்.
இந்த திரைப்படம் வெளிவந்த போது பல விமர்சனங்களை எதிர் கொண்டது. அன்றைய கேரளா அமைச்சர், கேரளாவின் முதல் சட்டக்கல்வி மாணவி கவுரி அம்மா,சுதந்திர
இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் பெண் அமைச்சர் கவுரி அம்மா அவர்களுக்கும், டிவி தோமஸ் என்ற கம்யூணிஸ்டு தலைவருக்கும் நிகழ்ந்த திருமணம். பிற்பாடு கட்சி இரண்டாக ’ ஐ’ என்றும் ’எம்’ என்றும் உடைந்த போது கணவரும் மனைவியும் இரு அணிக்குள் வெவ்வேறு திசைக்குள் பிரிவதும், அதை தொடர்ந்து அவர்கள் குடும்ப வாழ்க்கையும் பிரிவுற்று, கடைசியில் தோமஸ் கேன்சர் நோயால் மரணப்படுக்கையில் இருக்கையில் கட்சி அனுமதி பெற்று இரண்டு வாரம் அருகில் இருந்து கவனித்துக்கொண்ட கவுரி அம்மா கதாப்பாத்திரம் தான் சேது.
கவுரி அம்மாவிடம் இப்படத்தை பற்றி கேட்டபோது இது வர்கீஸ் வைத்தியர் மனைவியை பற்றிய படம் தனக்கும் இப்பாடத்திற்கும் சம்பந்தம் இல்லை என முகத்தில் அடித்தது போல் கருத்து பகிர்ந்திருந்தார்.
இப்படத்தின் கதை ஆசிரியர் செறியான் தன் தகப்பனார் வர்கீஸ் வைத்தியரை மனதில் வைத்து தான் ஸ்டீபன் என்ற கதாப்பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். வர்கீஸ் வைத்தியர் என்ற தொழிலதிபருக்கும் அன்றைய தொழில்த்துறை அமைச்சர் டி வி தோமஸும் கொண்ட நட்பின் இலக்கணமாகும் இப்படம்.
முதல் தலைமுறை கம்யூனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை இல்லாது இருப்பதை தங்கள்
கட்சி கொள்கையாகவே வைத்திருந்தனர். தற்போது 101 வயதை எட்டியிருக்கும் கவுரி அம்மா கடவுள் பக்தியில் மாறி இருப்பது தெரியவருகிறது. தனது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த கணவர் மரணமடைந்த போது எரிக்க வேண்டும் எனவும் கேட்டு மறுக்கப்பட்டிருந்தது, தோமஸும் இறக்க போகும் முன் கிறிஸ்தவத்திற்கு திரும்ப விரும்புவதாகவும் பேச்சு உண்டு.
அக்கால கம்யூனிஸ்டு தலைவர்
ஸ்டீபன் மகன் ஒருவர் தொழிலதிபரும் மற்றும் திரைத்துறையில் செயலாற்றுவதும் இன்னொரு
மகன் காங்கிரஸ் தலைவராக மாறினது காலத்தின் கட்டாயம் தான்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கம்யூனிஸ்டு கொள்கையிலும் காலத்திற்கு ஏற்ப நிகழ்ந்த மாற்றங்களையும் சொல்லிய படம் லால் சலாம்.
0 Comments:
Post a Comment