2 Apr 2020

'ஈ.ம,யௌ/ഈ.മ.യൗ-மலையாளத்திரைப்படம்

கடற்கரை லத்தீன்கத்தோலிக்க குடும்ப பின்னனியில் 2018ல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் '.,யௌ' (ஈஷோ மறியம் ஔசேப்(யேசு மரி சூசை, Malayalam: ..യൗ.,Jesus Mary Joseph)

இந்த படத்தை இயக்கியது Lijo Jose Pellissery, திரைக்கதை P. F. Mathews. . வினயன், செம்பன் வினோத் ஜோஸ், பாலி வல்சன், பிரிட்டோ டேவிஸ் போன்றோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்குனர் லிஜோ ஜோஸ் 48 வது கேரளா மாநில திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளாார். 49 வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த இயக்கம் சிறந்த நடிகருக்கான விருது இப்படம் பெற்றுள்ளது. NETPAC க்கின் சிறந்த ஆசிய திரைப்படம் மற்றும் the Golden Crow Pheasant விருதும் கிடைக்கப்பட்ட படமிதுசோகத்தில பகடியை வைத்து ஆழமான பார்வையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஒரு வயதான தகப்பனார் பல நாட்களுக்கு பின்பு சொந்த வீட்டிற்கு வந்து கொண்டிருகிறார். மனைவி, ஒரு மகன், மருமகள், திருமணம் ஆகாத ஒரு மகள் அடங்கிய அன்பான ஏழ்மைக் குடும்பம். வரும் வழியில் ஒரு குடிகார நண்பன் முதியவரின் மகளைப்பற்றி தகாத வார்த்தைகளால் "உன் மக கடற்கரையில் ஒருவனோடு பழகுகிறாள். ஏதும் கர்பம் ஆயிடாம பார்த்துக்கோ' எனக்கூற வயதானவர் ஒரே அடி நண்பன் முகத்தில்.

வீட்டை சென்றடைந்ததும் தன் கையிலுள்ள வாத்தை மனைவியிடம் கொடுக்கிறார். தாயும் மருமகளும் கறிக்குழம்பை வைத்து கொண்டு இருக்கின்றனர். மகள் கடும் சாயா(தேனீர்) கொண்டு கொடுக்கிறார். தகப்பனுக்கு, மகளிடம் கடற்கரையில் கேட்ட விடயத்தை கேட்கலாம் என்று இருக்கும் ஆனால் மகள் வருந்துவார் என கேட்க மாட்டார்.

மகன் வந்து சேருகிறான். மகன் வழியில் வருகையிலே நண்பர்கள் வழி தகப்பனுக்கும் நண்பருக்கும் சண்டை என அறிந்து கொள்கிறான்.
கையில் வைத்திருந்த பிராந்தியை அப்பனும் மகனுமாக குடிக்கின்றனர். தகப்பன் கையில் சாராயம் உள்ளது. அதையும் மகனுக்கு தெரியாது அப்பன் குடித்து கொண்டு, தகப்பனும் மகனும் சுவாரசியமாக ஆடிப்பாடி பேசிக்கொண்டிருக்க மகனுக்கு ஒரு போன் வருகிறது. கதைத்து விட்டு வருகையில் காண்பது தகப்பனார் தறையில் செத்து கிடக்கிறார்.

அந்த மரணத்தை மகனால் ஏற்று கொள்ள இயலவில்லை. சற்று முன்வரை கதைத்து தன் கடைசி கிரியை வரை எப்படியாக செய்ய வேண்டும் என சொல்லிக்கொண்டிருந்த மனிதர் செத்து விட்டாரா?

கதையின் முதல் முடிச்சு அங்கு விழுகிறது. இரண்டாம் பாகம் ஆரம்பமாகிறது.
இறந்து விட்டார் என அறிந்ததும் பக்கத்து வீட்டுக்காரர்கள் , நண்பன் ஐயப்பன் , சம்பந்தக்காரர்கள் குடும்பம், பஞ்சாயத்து மருத்துவரின் உதவியாளர் சாறா என்ற நர்சு கிறிஸ்தவர்கள் வாழ்க்கையில் பிராதான நபரான பங்கு தந்தை கடைசியாக தன் தந்தையிடம் சண்டையிட்ட நண்பன் என எல்லோரும் வந்து சேருகின்றனர்.

இறந்த தகப்பன் கிறிஸ்தவ ஆலய பீடத்தை நிறுவுன ஆசாரி என்பதால் தனிப்பெரும் பெருமையுடன் பார்க்கப்படுகிறார் .தான் செத்தால் தன்னை பாட்டு திருப்பலியுடன் பேண்டு பாட்டுகளுடன் ஆடம்பரமாக அடக்க வேண்டும் என கூறியுள்ளார் மகனிடம்.

ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பங்களின் மேல் கொண்டுள்ள பங்கு பாதிரியார்களின் தாக்கம், நண்பர்களின் அன்பும் கருதலும், அடக்கத்திற்கு வரும் சொந்தக்காரர்களின் மனநிலை, மரணத்திற்கு சொந்த சகோதரனை அழைக்கும் போது நேரில் வந்து அழைத்தால் தான் வர இயலும் என பிடிவாதம் பிடிப்பது. ஒரு நபர் இறந்து போனால் அந்த வீட்டு மருமகளின் நகை கூட நகைக்கடைக்கு போக வேண்டிய அவலம், மரணம் சந்தேக மரணம் எனப்படுகையில் போலிசின் செயல்பாடுகள், அரசு ஊழியர் சாறாவின் அடாவடித்தனம் கிறிஸ்த மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் பாதிரியார்கள் இப்படியாக ஒரு சாதாரண கிறிஸ்தவன் வீட்டில் செத்தது முதல் குழிக்குள் போகுமட்டும் நடக்கும் சம்பவங்களை திறம்பட இயல்பான உரையாடல்களூடன் கச்சிதமாக திரைமொழிக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இறந்த வீட்டிற்கு வீட்டு பெண்ணின் காதலன் வந்திருப்பான்.அத்தருணத்திலும் வாய்ப்பு கிடைத்ததும் காதலி மேல் மோகம் கொண்டு செயல்புரிவது,அப்போது காதலி சந்தேகம் வெறுப்பு கொண்டு காதலனை பார்ப்பது, கணவன் செத்துக்கிடக்கிற போதும் மரண ஓலங்களிலும் சம்பந்நக்காரர்களை குத்தி பேசும் மாமியார் கிழவி, செத்தவரிடம் அடிபட்ட மனிதன், கடைசி கிரியகளை மனமுகுந்து செய்வது, பாதிரியாரின் வன்மம் கொண்ட செயல், அச்செயலால் பைத்தியமாக மாறும் இறந்தவரின் மகன்....

கடைசியில் தகப்பனின் இறுதிச்சடங்கை பாதிரியார் தலைமையில் ஆலய வளாகத்தில் நடத்தப்பட்டதா? மகனால் 'ராஜா' மாதிரி தன் தகப்பனை வழியனுப்ப முடிந்ததா, நண்பன் ஐயப்பனின் முயற்சி வெற்றியில் முடிந்ததா? பாதிரியார் மன்னித்தாரா, வீட்டில் இருந்து துரத்தப்பட்ட வெட்டியான் என்னவானார் ? எல்லா பதில்களுடன் கதை முடிகிறது.

ஒரு கிறிஸ்தவன் மரணத்தில் சவப்பெட்டி முதற்கொண்டு நடக்கும் ஊழல் கதை நீளுகிறது. சாதாரண மனிதர்கள் தங்களுக்குள் முரண்களை மன்னித்து நகர்வதும் கடவுளுக்கு என பிரத்தியேகமாக சேவையாற்றும் மனிதர்கள் தங்கள் அதிகாரத்தை பயண்படுத்தி சாதாரண மனிதர்களிடம் வன்மமாக நடந்து கொள்வதும் மற்றவர்களீன் சிறு தவறுகளை கூட மன்னிக்க இயலாது செயல்புரியும் தற்கால வாழ்க்கையை மிகவும் துல்லியமாக படமாக்கியுள்ளனர். நேற்று மாலை அடிபட்டவன் நண்அன் இறந்து விட்டான் என் அறிந்ததும் காண வருவதும் தேவை அறிந்து நண்பனை குளிப்பித்து வழியனுப்பும் மட்டும் உடன் இருப்பது, தகப்பனுக்கு வேறு உறவு உண்டு என் அறிந்தும் தகப்பனை அன்பாக நடத்துவது என் மனிதர்கள் தங்கள் அன்பால் ஒருவர் இன்னொருவரை தாங்குகின்றனர். மிகவும் சாந்தமான மனிதன் கடைசியில் தனது தகப்பனின் கடைசி கிரியையை தன்னால் சரிவரை செய்ய இயலவில்லை என்ற நிலையில் தானே குழிவெட்டி புதைப்பதுடன் கதை நிறைவு பெறுகிறது. மக்கள் மதம் அதன் சார்ந்த சில நம்பிக்கைகளில் சார்ந்து நின்று தங்கள் சுய்சார்பை இழந்து அடிமையாக நடத்தப்படுவதையும் புலப்படுத்தவைத்த திரைப்படம். 

  படம் தயாரிப்பு , இயக்கம், இசை, திரைக்கதை எல்லாம் புதியவர்கள். புதிய தலைமுறை கைகளில் மலையாளத்திரைப்பட உலகம் புதுமையுடன் மனித வாழ்க்கையோடு இணைந்து பயணிப்பது அருமை.




0 Comments:

Post a Comment