24 Sept 2025

வில்லியம் டிண்டேல் (William Tyndale):ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை

ஆரம்பக் கிறிஸ்தவ சபைக்கு எபிரேய வேதாகமமே ஒரே வேதாகமமாக இருந்தது.  கி.மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் கிரேக்க மொழி ஆதிக்கம் செலுத்தும் lingua franca  சர்வதேச தொடர்பு மொழி ஆனது. அந்நேரத்தில் யூத பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை கிரேக்கத்திற்குத் மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்கினர். அந்தப் பணி நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது.  இஸ்ரவேலரின்  பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து தலா ஆறு பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர் என நம்பப்படுகிறது.  

யூத வேதாகமத்தின் கிரேக்க மொழி பதிப்பு பின்னாளில் செப்துவஜிண்ட் (Septuagint ) லத்தீன் மொழியில் செப்டுவஜிண்டா, அதாவது "70" என்று அழைக்கப்பட்டது. கிரேக்க மொழி உலகில் பரவ ஆரம்பித்த போது  புதிய மதத்தவரான கிறிஸ்தவர்கள் செப்துவஜிண்டை ஏற்றுக்கொண்டனர். அதே சமயத்தில் கிறிஸ்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாடு நூல்களில் பல  கிரேக்கத்தில் எழுதப்பட்டு இருந்தன.  சிலவை அராமியத்திலும் எழுதப்பட்டு இருந்தன.

கிறிஸ்தவம் விரைவில் பரவியதால், பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை காப்டிக், எத்தியோப்பிய, கோத்திக், மேலும் முக்கியமாக லத்தீன் மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கி.பி. 405 ஆம் ஆண்டு, புனித ஜெரோம் (St. Jerome) செப்துவஜிண்டை ஒரு பகுதியாகக் கொண்டு லத்தீன் மொழிபெயர்ப்பை முடித்தார்.  இது வல்கேட் (Vulgate) என அழைக்கப்பட்டது. ஒருசில பிழைகள் இருந்தாலும், மேற்கு கிறிஸ்தவ உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அது நிலையான பதிப்பாக இருந்து வந்தது.


கி.பி. 6ஆம் நூற்றாண்டில், பாலஸ்தீனமும் பாபிலோனியாவிலும் இருந்த தால்மூது பாடசாலைகளின் எபிரேய பண்டிதர்கள் எபிரேய வேதாகமத்தை மீட்டெடுத்து முறையாக ஒருங்கிணைக்கத் தொடங்கினர். பல நூற்றாண்டுகள் கடின உழைப்பின் பின் உருவான மசோரெடிக் உரை (Masoretic Text), கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நிறைவடைந்தது. பின்னர் அது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது. 15ஆம் நூற்றாண்டில் அச்சுக்கலை கண்டுபிடிக்கப்படும் வரை, மசோரெடிக் உரை  நம்பகத்தன்மையுடனும் பண்டிதர்களால் கையெழுத்துப் பிரதிகளாக பரவியது.

15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உருவான புதிய கல்வி இயக்கம், பண்டைய கிரேக்க மொழி ஆய்வை மீண்டும் உயிர்ப்பித்தது.  இதனால் புதிய மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. 

முக்கியமானதாக, நெதர்லாந்து மனிதநேய அறிஞர் டெசிடீரியஸ் எராஸ்மஸ் (Desiderius Erasmus) 1516-ல் கிரேக்க உரையும் தன் சொந்த லத்தீன் மொழிபெயர்ப்பும் அடங்கிய புதிய ஏற்பாட்டு பதிப்பை வெளியிட்டார். 

முழுமையான முதல் ஆங்கில வேதாகமம் 1382-இல் வெளியானது. இது ஜான் வைக்ளிஃப் (John Wycliffe) மற்றும் அவருடைய சீடர்களால் செய்யப்பட்டது எனக் கருதப்படுகிறது.  ஜெரோமின் வல்கேட், சிரியக், அரபிக், ஸ்பானிஷ், மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்புகளுக்கான அடிப்படையாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவான டுவாய்-ரெயிம்ஸ் வேதாகமம் (Douai–Rheims Bible) (புதிய ஏற்பாடு 1582; பழைய ஏற்பாடு 1609–10) 20ஆம் நூற்றாண்டு வரையிலும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வேதாகமமாக இருந்து வந்தது.

மறுசீர்திருத்தம் (Reformation)

மறுசீர்திருத்தம் (Reformation) என்பது 16ஆம் நூற்றாண்டில் மேற்கு தேவாலயத்தில் நிகழ்ந்த மதப் புரட்சி ஆகும். இதன் தலைசிறந்த முன்னோடிகள் மார்ட்டின் லூத்தர் (Martin Luther) மற்றும் ஜான் கல்வின் (John Calvin) ஆவார்கள். மிகப் பெரிய அரசியல், பொருளாதார, சமூக விளைவுகளை ஏற்படுத்திய இந்த மறுசீர்திருத்தம், கிறிஸ்தவத்தின் முக்கிய கிளைகளில் ஒன்றான பிராட்டஸ்டண்டிசத்தின் (Protestantism) அடிப்படையாக அமைந்தது.

16ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தக்காரர்கள் தோன்றிய காலத்தில், நூற்றாண்டுகளாக, ரோமன் கத்தோலிக்க தேவாலயம்  குறிப்பாக போப்பரசரின் அலுவலகம் மேற்கத்திய ஐரோப்பாவின் அரசியல் வாழ்வில் ஆழமாக ஈடுபட்டு வந்தது. அதன் காரணமாக ஏற்பட்ட சதி முயற்சிகளும் அரசியல் சூழ்ச்சிகளும், தேவாலயத்தின் அதிகரித்த அதிகாரமும் செல்வமும் சேர்ந்து, அதனை ஆன்மீக ஆற்றலற்ற ஒன்றாக மாற்றின என்றுமட்டுமல்ல சபை மிகவும் சிக்கலான நிலையிலிருந்தது.

சபையின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு பாதிரியார்கள் விற்கும் indulgences ஆன்மீக சலுகைகள் அல்லது பாவ மன்னிப்புச் சீட்டுகள்  போன்ற தவறான பழக்கவழக்கங்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் இணைந்து தேவாலயத்தின் ஆன்மீக ஆட்சியைத் தளர்த்தின. இருப்பினும்    பெரும்பாலான மக்களுக்குப் தேவாலயம் ஆன்மீக ஆறுதலை வழங்கிக் கொண்டிருந்தது. சில இடங்களில் பாதிரியர்களுக்கு எதிரான மனநிலை இருந்தாலும், மொத்தத்தில்,  தேவாலயத்தில்  மக்கள் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்து இருந்தனர், ஆனால், எதிர்ப்பாளர்களின் தாக்கத்தில் இவை அதிகப்படுத்தப்பட்டு பேசப்பட்டும் கொண்டிருந்தன என்றும் ஒரு குழுவினர் நம்பினர். அரசியல் அதிகாரிகள் தேவாலயத்தின்  செயல்பாடுகளை கட்டுப்படுத்த முயன்றது. அரசிற்கும் சபைக்குமிடையில் பதற்றத்தை உருவாக்கியது. 


இதற்கிடையில், ஜெர்மனியில் மார்ட்டின் லூத்தர், கிரேக்க மற்றும் எபிரேய அசல் உரைகளிலிருந்து முழுமையான வேதாகமத்தை ஜெர்மன்  மொழிக்கு மொழிபெயர்த்தார். அவரது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாடு 1522-ல், முழு வேதாகமம் 1534-ல் வெளிவந்தது. இது ஜெர்மன் பிராட்டஸ்டண்டுகளுக்கான அதிகாரப்பூர்வ வேதாகமமாக இருந்ததோடு, டானிஷ், சுவீடிஷ் மற்றும் பிற மொழிகளுக்கான அடிப்படையாகவும் அமைந்தது.

1611-இல் வெளியான கிங் ஜேம்ஸ் பதிப்பில் (King James Version  இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு என அழைக்கப்பட்டது இது கிங் ஜேம்ஸ் I நியமித்த 54 அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. சொற்சொற் பொருள் மட்டுமல்லாமல், பல மரியாதைச் சொற்களையும் பயன்படுத்தியதால், அது ஜேக்கோபியன் ஆங்கிலத்தின் சிறந்த படைப்பாகும். 270 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலம் பேசும் பிராட்டஸ்டண்டுகளின் முக்கிய வேதாகமமாக இருந்து வந்தது.


வில்லியம் டிண்டேல் (William Tyndale) கி.பி. 1494 ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் கிளாஸ்டர்ஷயர் அருகே பிறந்தார் .  வில்லியம் டிண்டேல் (William Tyndale) மார்ட்டின் லூத்தரின் காலத்தில் வாழ்ந்த ஒரு ஆங்கில அறிஞர் ஆவார்.  டிண்டேல் ஒரு திறமையான மொழியாளர்; லத்தீன், எபிரேய, கிரேக்க மொழிகளைச் சேர்த்து ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் ஒரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர், மனிதநேய அறிஞர், மற்றும் பிராட்டஸ்டண்ட் தியாகி என அறியப்படுகிறார்.


டிண்டேல், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றினார். 1521-ல், அவர் வைட் ஹார்ஸ் இன் (White Horse Inn) எனப்படும் இடத்தில் கூடிக் கொண்டிருந்த மனிதநேய அறிஞர்களின் குழுவுடன் தொடர்பு கொண்டார். வேதாகமமே தேவாலயத்தின் போதனைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தமது சொந்த மொழியில் வேதாகமத்தைப் படிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பினார்.


அந்தக் காலத்தில் அச்சுத்தொழிலின் தாக்கமும், தாய்மொழிகளில் வேதாகமத்திற்கு ஏற்பட்டிருந்த தேவையும் காரணமாக, வில்லியம் டிண்டேல் 1523 ஆம் ஆண்டு கிரேக்க மொழியிலிருந்து நேரடியாக புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் விரும்பினார். 1523-ஆம் ஆண்டு, டிண்டேல் லண்டனுக்குச் சென்று புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அனுமதி கோரினார்.  காரணம், அக்கால இங்கிலாந்து அதிகாரிகள்  ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்திருந்ததால்; அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  கத்தோலிக்கர்கள் வேதாகமத்தை லத்தீன் மொழியிலேயே வைத்திருக்க விரும்பினர். இங்கிலாந்தில் தேவாலய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தியதால், 1524-ல் அவர் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தார்; அங்கு லண்டன் வணிகர்களின் நிதியுதவியுடன் மொழிபெயர்க்க ஆரம்பித்தார்.


அவரது புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு 1525 ஜூலையில் நிறைவுபெற்றது, கேலோன் (Cologne) நகரில் அச்சிடப்பட்டது. தன்னுடைய பாதுகாப்புக்காக, அந்தப் பதிப்பில் தனது பெயரையோ அடையாளத்தைக் காட்டும் விவரங்களையோ சேர்க்கவில்லை.  ஆனால் அந்நகரின் அதிகாரிகளின் அழுத்தத்தினால் அவர் அங்கிருந்து வெளியேறி, வோர்ம்ஸ் (Worms) நகரில் தஞ்சமடைந்தார். 



ஆனால், 1525 முதல் 1535 வரை வில்லியம் டிண்டேல் (William Tyndale)
மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டின் ஒரு பகுதி, பிந்தைய ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக அமைந்தது.  அங்கு 1525-ல் இன்னும் இரண்டு பதிப்புகள் வெளியிடப்பட்டன. புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பை முடித்த பின், டிண்டேல் பழைய ஏற்பாட்டில் பணியாற்றத் தொடங்கினார். 1530-இல் மார்பர்க் (Marburg) நகரில் பெந்தட்யூக் (Pentateuch) முதல் ஐந்து நூல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது. டிண்டேல் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்.  1526-ல் முதல் பிரதிகள் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டன;  அதன் பிரதிகள் விரைவில் இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டு மக்களிடையே பிரபலமடைந்தன. டிண்டேல் உருவாக்கிய மொழி நடை, சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், அது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளுக்கான பாணியை நிலைநிறுத்தியது. இருப்பினும்  அதிகாரிகளால் அவை தடைசெய்யப்பட்டன; மேலும்  அவரை மதவெறுப்பு குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர் .


அதிக கடனில் சிக்கியிருந்த ஹென்றி பிலிப்ப்ஸ் (Henry Phillips) என்ற நபரிடம் வில்லியம் டிண்டேலைத் தேடி பிடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.  பிலிப்ப்ஸ்  டிண்டேலைக் கண்டுபிடித்தால் பெரும் தொகை பணம் வழங்கப்படும் என அவருக்குச் சொல்லப்பட்டது.  1535-ஆம் ஆண்டு, பிலிப்ப்ஸ் அந்த்வெர்ப் (Antwerp) நகரின் வணிகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தத் தொடங்கினார். ஏராளமான சூழ்ச்சி மற்றும் ஏமாற்றுக்களின் மூலம், டிண்டேலின் இருப்பிடத்தை தேடி கண்டுபிடித்தார். டிண்டேலின் நெருங்கிய வட்டாரத்திற்குள் நுழைந்து, அவரோடு நண்பனாகவும் ஆனார்.

ஒரு நாள், டிண்டேலிடம் 40 ஷில்லிங்குகளை கடனாக வாங்கிய பின், பிலிப்ப்ஸ் அவரை உணவுக்கு அழைத்தார்.   இருவரும் ஒரு குறுகிய தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது, டிண்டேல் அரச படையினரால் முற்றுகையிடப்பட்டு கைது செய்யப்பட்டார்.  பின்னர், அவர் 500 நாட்களுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டார். பெல்ஜியம் அருகிலிருந்த ஒரு கோட்டையில், குளிரும் இருளும் நிறைந்த சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். இரவில் மெழுகுவர்த்தி வேண்டியும், குளிரைத் தாங்குவதற்குத் துணி வேண்டியும் காவலர்களுக்கு கடிதம் எழுதினார்:  “இருட்டில் தனியாக உட்கார்வது மிகவும் சிரமமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் விண்ணப்பித்தது; எனது நேரத்தை  படிப்பில் செலவிட விரும்புகிறேன்.எனக்கு என் எபிரேய வேதாகமம், எபிரேய இலக்கணம், மற்றும் எபிரேய அகராதி பயன்பட அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.; என்று வேண்டியிருந்தார்.   அதாவது, தண்டனைக்கு காத்திருக்கும்போதே, அவர் தனது வேதாகமப் பணியைத் தொடர விரும்பினார். 18 மாதங்கள் கழித்து, தேவாலயத்தினால்  மதவெறுப்பாளி (heretic) என அறிவிக்கப்பட்டு,  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

டிண்டேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்:

  • “நம்பிக்கை தான் நீதிமானாக்கும்” என்ற அவர் நம்பிக்கை.  பாவ மன்னிப்பில் விசுவாசிக்காது, சுவிசேஷம் வழங்கும் இரக்கத்தை ஏற்றுக்கொள்வதே இரட்சிப்பிற்கு போதுமானது என்ற அவரது நம்பிக்கை முக்கிய குற்றமாக கணக்காக்கப் பட்டது.  

 மதச்சார்பற்ற கருத்துக்களுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, பில்வோர்டே (Vilvoorde) நகரில்  1536 அக்டோபர் 6 அன்று, அவரைத் தூக்குத் தண்டனை மற்றும்  எரித்துக் கொல்லவும் கொண்டுசென்றனர். கூட்டம் முன்னிலையில், அவரை ஒரு தூணில் கட்டினர்; கால்களின் சுற்றிலும் மரக்கட்டைகளும் வைக்கோலும் அடுக்கப்பட்டன; மேலாக துப்பாக்கி மையம் (gunpowder) தூவப்பட்டது. சங்கிலியும் கயிறும் அவரது கழுத்தில் பிணைக்கப்பட்டது.

அந்தக் கடைசி நொடியில், டிண்டேல் தனது இறுதி வார்த்தைகளைச் 
“கர்த்தாவே, இங்கிலாந்து அரசனின் கண்களைத் திறந்தருளும்!” என்று சொன்னார்: 

பின்னர் கயிறு இறுக்கப்பட்டது. டிண்டேல் உயிரிழந்தார். அவரது உடல் தீயில் எரிக்கப்பட்டது; துப்பாக்கியும் வெடித்ததால் காட்சி இன்னும் கொடூரமானதாகியது. தேவனுடைய வார்த்தையை இங்கிலாந்திற்குக் கொண்டுவந்த குற்றத்திற்காகவே, “கடவுளின் சட்டவிரோதன்” என்று அழைக்கப்பட்ட வில்லியம் டிண்டேல் தியாக மரணத்தைச் சந்தித்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இறுதி ஜெபம் நிறைவேறியது. இங்கிலாந்தின் ஹென்றி எட்டாம் (Henry VIII) அரசன் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஆங்கில மற்றும் லத்தீன் வேதாகமப் பிரதிகள் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.

டிண்டேலின் மொழிபெயர்ப்பு, அவரது காலத்திலிருந்து வந்த அனைத்து ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளிலும் காணப்படுகிறது. கிங் ஜேம்ஸ் (King James) புதிய மொழிபெயர்ப்பை ஏற்படுத்த 50 சிறந்த அறிஞர்களை நியமித்தார். ஆயினும், அவர்கள் கூட டிண்டேலின் பணியை மேம்படுத்த முடியவில்லை. கிங் ஜேம்ஸ் பதிப்பில் (1611), புதிய ஏற்பாட்டின் சுமார் 84% மற்றும் பழைய ஏற்பாட்டின் 76% டிண்டேலின் மொழிபெயர்ப்பே உள்ளது!

பல வழிகளில், வில்லியம் டிண்டேல் நவீன ஆங்கில மொழியின் தந்தை, அதேபோல் ஆங்கில வேதாகமத்தின் மற்றும் ஆங்கில மறுசீர்திருத்தத்தின் தந்தை ஆவார். இங்கிலாந்தின் அரசனிலிருந்து எளிய உழவன் வரை அனைவரும் தேவனுடைய வார்த்தையை அறியும்படி செய்வதற்காக ,பைபிளை ஆங்கில மொழிக்குத் மொழிபெயர்க்கும் பணிக்காக வில்லியம் டிண்டேல்  தனது உயிரை இழந்தார். 

அவர் மரணமடைந்த காலத்தில், அவரது 18,000  புதிய ஏற்பாட்டு பிரதிகள்   அச்சிடப்பட்டிருந்தன.  முழுமையான இரண்டு பிரதிகளும் ஒரு சிதைந்த பிரதியும்  லண்டனின் பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் உள்ளன.  அவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தொடர்ந்தும் உயிர்வாழ்ந்து வருகிறது.


டிண்டேலின் மிகப் பெரிய சாதனை, ஆழமான கல்வி, எளிமையான நடையைப் பயன்படுத்தும் திறன், இலக்கிய அழகியைக் காக்கும் திறன் ஆகியவற்றை ஒரே பாணியில் இணைத்துச் செய்த மொழிபெயர்ப்பு. இது ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கியது. எபிரேய பாணியின் சுவையைத் தக்கவைத்த அந்த ஆங்கில நடை, கிங் ஜேம்ஸ் பதிப்பு (1611) தொடங்கி அடுத்த 400 ஆண்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கான மாதிரியாக இருந்தது.






7 Sept 2025

வகுப்பறை dirty அரசியல்!

 கல்விக்கூட சூழலில் ஆசிரியர்களுக்குள் பதவி அதிகாரத்திற்கான போட்டி அரசியலில் மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் இழிய நிலை தொடர்கிறது. .

ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை எதிர்க்க நேரடியாக எதுவும் செய்ய மாட்டார். வெகிளி மாணவர்களை தூுண்டி விடுவார்கள்.
அம்மாணவர்கள் நமக்கு எதிராக ஒரு மன்றத்தில் புகார் எழுதி கொடுக்க வைப்பார்கள்.
நமது ஜாதியை அம்மாணவர்களுக்கு குறிப்பிட்டு
உசுபேத்தி விடுவார்கள்.
நாம் வகுப்பு எடுக்கும் போது எழுந்து நின்று பாடத்திற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளை எழுதி கொடுத்து மாணவர்களை வைத்து கேட்க வைப்பார்கள்.
நாம் ரொம்ப பணிவாக இளித்து பதில் சொல்ல நமது பதவி , வயது, கல்வி அனுமதிக்காது. ஆனால்.கோபத்தில் உரைத்தால் கைபேசியில் ஒலி, காணொளியாக பதிந்து இன்னொரு பேராசிரியருக்கு அனுப்பி விட்டால் அவர் யார் யாரிடம் அதை கொண்டு சேர்க்க வேண்டுமோ போய் வேலையை முடித்து விடுவார்கள்.
அல்லது நண்பன் போல இருந்து கொண்டே மாணவர்களுக்கு பணம் கொடுத்து வக்கீலை கொண்டு வந்து கெட்ட வார்த்தை பேச வைப்பார்கள்.
ஆண் ஆசிரியர்கள் என்றால் மாணவிகளை வைத்து பாலியல் ரீதியாக பெண் ஆசிரியர் என்றால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படைய
வைத்ததாக புகார் கொடுக்க வைப்பார்கள்.
மாணவர்கள் ஆசிரியர்கள் சம்பந்தமான பாலியல் வழக்குக்களுக்கு பெருவாரி பின்னில் இருப்பது உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் தான்.
இத்தனையும் மீறி நாம் தப்பித்து போக வேண்டும் என்றால் 75 degree@ க்கு மேல் உயர்அதிகாரி முன் வளைந்து நெளிந்து நிற்க வேண்டும்.
எனக்கு எவ்வளவு முயன்றாலும் 5 degree க்கு மேல் வளைய இயலாது.
ஆனால் பணியிடத்தில் 25 degree வளைந்தால் தான் வேலைையை தக்க
வைக்க இயலும் என்பது காலத்தின் கட்டாயம்.
மறுபடியும் பண்ணையார் அடிமை நிலையை கொண்டு வந்து விட்டனர் கல்வி கூடங்களில்..

மாணவர்களிடம் நான் சொல்வது Media Law, Journalism ,பாடம் எடுக்கும் போது சில கருத்துக்கள் சொல்லி இருப்பேன். அதுவே public figures conspirancy என குற்றத்தில் வந்துள்ளது.
என் உழைப்பை நேர்மையை நீங்கள் பின்பற்றலாம் ஆனால் 25 degree வளைவு என்பது காலத்தின் கட்டாயம்.
நேர்மை உழைப்பு என்பது எல்லாம் நானே என்னை பீற்றி கொள்ளலாம். ஆனால். நடைமுறைக்கு உதவாது.
வேலையிடத்தில் எவனுக்கும் குழி பறிக்காதீர்கள் ஆனால். குழியில் விழவும் செய்யாதீர்கள் .
மேலும் கல்வி கூடத்தில் கற்றது போல சொந்த ஆசிரியரை அவமதிக்க ஜாதி, மதம் , ரீதியாக கற்றுக் கொண்டதை வேலையிடத்தில் பயன்படுத்தாதீர்கள். அது உதவாது.
ஆசிரியர் களம் என்பது ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது.
கல்வியாளர் என்ற நிலையில் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய எந்த அறவும் இல்லை. அதுவும் ஒரு வேலை பெறும் சந்தைக்காடாக மாறிவிட்டது.

2 Sept 2025

கத்தோலிக்க திருச்சபை (நிழல் அரசு) – குருத்துவ கட்டமைப்பில்














குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது.. குருத்துவம்  கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும்.  அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு, நமது முழு ஒத்துழைப்பையும்,  அதன் மாண்பு காப்பாற்றப்படுவதற்கு உதவியையும் செய்ய வேண்டும். அதன் புனிதத்தன்மை உணர்த்தப்பட வேண்டும்  இப்படியான கோட்பாடுகளை கூறி முழு அதிகாரத்தையும் ஆண் தலைமையினால் கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும் குருத்துவ நிறுவனம் .


அவ்வகையில்  திருச்சபை என்ற கட்டமைப்பின் நிறுவனத்தில் தலைமையில் இருப்பது கிறிஸ்து.  இதற்கு  அப்போஸ்தலர் பவுலின் கூற்று கவனிக்க வேண்டும்.  சபை என்பது  கிறிஸ்துவின் உடல்என்பன விவிலிய வசனங்கள் . 1 கொரிந்தியர் 12- அதேபோல் ரோமர் 12, எபேசியர் 1 மற்றும் கொலோசெயர் 1- என  உருவகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  


ஆனால் இன்னும் வேறுபட்டு சிலர் இயேசு கிறிஸ்துவையே தலைவனாகவும் இதயமாகவும் கொண்ட ஒரு ஆன்மீக நிறுவனம் என்றும் இன்னொரு  விளக்கமும் தருகின்றனர்.  இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்துவின் உடலாக உள்ளனர்; ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பங்கு உண்டு. உடலில் பல அங்கங்கள் உள்ளன; அவற்றில் ஒவ்வொன்றும் உடலின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அதன் சிறந்த செயல்பாடுக்கும் அவசியமானது போலவே, திருச்சபையும் அப்படித்தான். இந்த உருவகத்தில் எவருக்கும் உயர்வு  தாழ்வு கிடையாது; ஆனால் தலை (இயேசு கிறிஸ்து) மட்டும் மிகவும் கௌரவமான இடத்தில் உள்ளார். மற்ற எல்லா அங்கங்களும் சமமாக அவசியமானவை; அவையில்லாமல் முழுமை நிகழாது என்றும் வரையறைத்துக் கொள்கின்றனர்.


இந்த தத்துவ விசாரங்களை புரிந்து கொள்ள இயலாத உலகப்பிரகாரமான ஆட்டு குட்டிகளுக்கு இன்னொரு கதையும் சொல்கின்றனர்.

  1. 1.    திருச்சபை மனித நிறுவனம் என்பதும் உண்மை.
  2. 2.    அது தன்னைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்;
  3. 3.    சமூக வாழ்வின் அடிப்படை அம்சங்களைப் பேண வேண்டும்;
  4. 4.    தனது போதனைகள், பணி குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும்;
  5. 5.    தனது செயல்களுக்கு நிதியளிக்க வேண்டும்;
  6. 6. அந்தச் செயல்களை மேற்கொள்ளும் நபர்களின் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

 இந்த கடைசி இரண்டும்  கத்தோலிக்க திருச்சபையின் மக்களின் ஆதரவு வேண்டும். எப்படி என்றால் அது தான் பணம் ஆதரவு.

 

பணம் கொடுத்து விட்டு அதிகாரம் பேண இருமாப்பு கொண்டால் அதற்கும் ஒரு பதில் உண்டு அது தான்  படிநிலைக் கட்டமைப்பு (hierarchy). இந்த படிநிலையில் பணம் கொடுக்கும் மக்கள் எங்கு உள்ளார்கள் என்பதற்கு முதலாக இங்குள்ள பணிகள் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

எல்லா மனித நிறுவனங்களிலும் போல,

இங்கும் வழிநடத்தல்,

திட்டமிடல்,

ஒருங்கிணைப்பு அவசியம்.

அதற்காகவே அதிகாரம் தெளிவாகக் காணப்பட்டுமுடிவுகள் எளிதில் எடுக்கப்படுவதற்காக ஒரு படிநிலைக் கட்டமைப்பு (hierarchy) தேவையாக உள்ளது.

 

இது பவுலின் "உடல்" என்ற உருவகத்துக்கு முரண்போலத் தோன்றினாலும், அவரது போதனைகளிலிருந்தே இதுவும்  உருவானது தான் . 1 கொரிந்தியர் 12 மற்றும் எபேசியர் 4-ல், திருச்சபையின் அமைப்புகள் மற்றும் பணி ஒழுங்குகள் பற்றி நாம் வாசிக்கிறோம்; அவற்றில் ஒவ்வொன்றும் திருச்சபையின் வாழ்வுக்கும் பணி நோக்கத்துக்கும் தனித்தனி பங்களிப்பு செய்கின்றன.

 

திருச்சபையின் அமைப்பு பொதுவாக ஒரு பிரமிட் வடிவிலான படிநிலை (hierarchy) ஆகக் காணப்படுகிறது

  1. அதன் உச்சியில் போப்,
  2. கரிதுனாலுகள்
  3. பின்னர் ஆயர்கள்,
  4. குருக்கள்,
  5. அரசியல்வாதிகள்(சக்கரவர்த்திகள் (diacons))
  6. பெண் துறவியர்,
  7. இறுதியில் பொதுமக்கள் (laity)

 

இயேசு கிறிஸ்துவின்அடிமைத் தலைமை” (servant-leadership) (யோவான் 13 எடுத்துக்காட்டாக இருப்பதால், திருச்சபையில் தலைமை வகிப்பவர்கள், உலகின் தலைவர்கள் நடப்பது போன்று நடக்கக்கூடாது . (மத்தேயு 20:24–26). இயேசுவிடம் வந்த யாக்கோபும் யோவானும், தங்கள் தாயின் மூலம், அவருடைய இராச்சியத்தில் அதிகாரம் மிக்க இடத்தில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு அமர்த்தும்படி யேசுவிடம் கேட்கிறார்கள்அதற்கு இயேசு, "இராச்சியங்களில் பெரியவனாகிறவன் உங்களைச் சேவிக்கிறவனாக இருக்க வேண்டும்; முதன்மையாகிறவன் உங்களை அடிமையாயிருக்கிறவனாக இருக்க வேண்டும்" என்று கூறி, பெரியவர்களாக இருக்க மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்

 

திருச்சபை தனது தலைவனான கிறிஸ்துவின் போதனைகளுக்கு உண்மையாக இருந்தால், அந்தப் பிரமிட் தலைகீழாக  (inverted pyramid) இடம் பெறுகிறதாம்.   அதில் பொதுமக்கள் (laity) மேலே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் உலகில் சென்று சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டவர்கள். அவர்களை ஆதரித்து சேவையாற்றும் பணியில் துறவியர், சக்கரவர்த்திகள், குருக்கள், ஆயர்கள், போப் ஆகியோர் கீழே இருக்கிறார்கள். இது பணம் கொடுப்பவர்களை அப்பப்போ குஷிப் படுத்த சொல்லும் பொய் ஜோக்குகள்.

 

சரி இந்த  நிலைகள் செயல்பட அடிப்படை உறுப்பினர்கள் உருவாக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம்.  முதலில் ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பெற்றோர் 30 நாட்களுக்கு முன்னால் கரித்தரின் முன் வைத்து பாப்டிசம் (Baptism) மூலம், திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபை 18 மறைமாவட்டங்களாக இயங்கிவருகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயர் (bishop) அல்லது பேராயர் (archbishop) தலைமையில், குருக்களின் நேரடி ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. குருக்களுள், இயேசு சபை,கப்புச்சின் சபை,சலேசிய சபை போன்ற துறவறசபைக்குருக்கள் மறைப்பணி,கல்விப்பணி,சமூகப்பணி போன்ற பணிகளை ஆற்றிவருகின்றனர்.

 


ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அருட்சகோதரிகள் என்று அழைக்கப்படும் பெண்துறவியர் பலர் பல துறவற  பிரிவுகளாக இயங்கி வருகின்றனர். கல்விக்கூடங்களை நடத்துவதோடு, மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற பிறரன்புப்பணி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகின்றனர்.

 

 

  1. மதுரை உயர்மறைமாவட்டம்
  2. கோட்டாறு மறைமாவட்டம்
  3. திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
  4. தூத்துக்குடி மறைமாவட்டம்
  5. பாளையங்கோட்டை மறைமாவட்டம்
  6. சிவகங்கை மறைமாவட்டம்
  7. திண்டுக்கல் மறைமாவட்டம்
  8. குழித்துறை மறைமாவட்டம்
  9. சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
  10. வேலூர் மறைமாவட்டம்
  11. செங்கல்பட்டு மறைமாவட்டம்
  12. உதகை மறைமாவட்டம்
  13. கோவை மறைமாவட்டம்
  14. புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்
  15. குடந்தை மறைமாவட்டம்
  16. சேலம் மறைமாவட்டம்
  17. தர்மபுரி மறைமாவட்டம்
  18. தஞ்சை மறைமாவட்டம்

மேற்கூறிய 18 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தவிர, கீழ்வரும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்களும் தமிழகத்தில் செயல்படுகின்றன. அவை:

 

  1. சீரோ-மலபார் தக்கலை மறைமாவட்டம்
  2. சீரோ-மலபார் இராமநாதபுரம் மறைமாவட்டம்
  3. சீரோ-மலங்கரை மார்த்தாண்டம் மறைமாவட்டம் உள்ளன.

மறைமாவட்டம் பாரிஷ் அல்லது பங்கு என பிரிக்கப்பட்டு பாதிரியார் மற்றும் உதவி பாதிரியார் தலைமையில் செயல்படுகிறது. பாரிஷின் கண்காணிப்பில் பல நிறுவனங்கள் செயல்படும்.

 

பங்கையும் அன்பியல் என பல பிரிவுகளாக பிரித்து அப்பகுதி குடும்பங்களை இணைக்கின்றனர்.

 

அன்பியம் என்பது ஒர்  ........................

  • இறை வாழ்வு.
  • உறவு வாழ்வு
  • அன்பு வாழ்வு
  • பகிர்வு வாழ்வு
  • குணமளிக்கும் வாழ்வு
  • ஆறுதல் தரும் வாழ்வு
  • ஒற்றுமை தரும் வாழ்வு
  • மகிழ்ச்சி தரும் வாழ்வு
  • இன வாழ்வு

அன்பியக் கூட்டங்களில் கலந்து கொள்வது குடும்பங்களுக்கு நல்லது. உங்கள் இல்லங்களில் அன்பியக் கூட்டம் நடத்த முன்வருவது உங்கள் இல்லங்களுக்கு சிறந்த ஆசீர்வாதம் என்பதை அறிந்து கொள்ளவும். உங்கள் இன்பம், துன்பம் அனைத்தையும் அன்பியத்தில் பகிர்ந்து கொள்வது என்பது உங்களுக்கு அன்பும், சமாதானமும் மற்றும் உதவிகளும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும். அன்பியம் ஒரு கோயில், நமது சாட்சிய வாழ்வின் வெளிப்பாடு, அன்பின் உறைவிடம், தியாகத்தின் அடையாளம். தூய அன்னை மரியா அவர்கள் நெடுந்தூரம் நடந்தே பயணம் செய்து எலிசபெத்துக்கு கடவுளின் அன்பைக் காட்டி பணிவிடை செய்தார்கள். இதுபோல் நாம் நெடுந்தூரம் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும், உங்கள் தெருவில் உள்ள அன்பிய குடும்பங்களை அறிந்து, அன்பின் மூலம் உதவிகளை பகிர்ந்து, வாழ்ந்து தூய அன்னை மரியாவின் பிள்ளைகள் என்பதை மற்ற பிரிவினை சபைகளுக்குக் காட்டுவோம். உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் உறவுகளை அழைப்பது போல அன்பிய உறவுகளையும் சேர்த்து அழைப்பது என்பது மிகவும் நல்லது. இது கிறிஸ்தவ வாழ்வுக்கு உகந்தது. இயேசுவிற்கு பிடித்தது. இதுவே உறவு வாழ்வு!! 

 



அன்பியங்கள் திருஅவையின் வாழ்வில் இன்றியமையாத அமைப்பாகும். ஆதித் திருச்சபையில் நாம் காணும் ஒன்றிப்பும், சகோதரத்துவமும், பகிர்வும்இன்று நமது காலத் திருச்சபையிலும் வளர வேண்டும் என்னும் உயரிய எண்ணத்தோடு உருவாக்கப்பட்டவை தான் அன்பியங்கள். பொதுநிலையினரிடையே விசுவாச வாழ்வில் புது உத்வேகத்தைக் கொணரவும், நாம் வாழும் சமுதாயத்திற்கு உண்மையான கிறிஸ்தவ சாட்சிகளாக வாழ்வதற்கும் அன்பியங்களே சிறந்த வழி. அன்பியம் சக்தி வாய்ந்த இறை இயக்கம். அன்பியம் சிறந்த வேளாண்மை விளை நிலம். அன்பியத்தினால் கடவுளைச் சந்திக்கவும், உண்மையான அன்புறவில் வளரவும், சமத்துவம்சகோதரத்துவத்திலும் மலரவும், அறிதலும், புரிதலும், மன்னிப்பும், பகிர்வும் செயல் வடிவம் பெறுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் இறைமக்கள் ஒன்றுகூடி உறவில் இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் தோழமையில்  பகிர்ந்து வாழும் அடித்தள உறவு வாழ்வுதான் அன்பியத்தின் சிறப்பு.