2 Sept 2025

கத்தோலிக்க திருச்சபை (நிழல் அரசு) – குருத்துவ கட்டமைப்பில்














குருத்துவம் என்பது கடவுளுக்கான முழுமையான அர்ப்பணம். கடவுள் பணிக்காக, கடவுளின் மக்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, அதற்காக தன் முழு ஆற்றலையும் கொடுப்பது.. குருத்துவம்  கடவுள் அருளின்றி யாரும் வாழ்ந்துவிடவும் முடியாது. அதன் மகிமை போற்றப்பட வேண்டும்.  அந்த பணியை ஏற்றிருக்கிறவர்களுக்கு, நமது முழு ஒத்துழைப்பையும்,  அதன் மாண்பு காப்பாற்றப்படுவதற்கு உதவியையும் செய்ய வேண்டும். அதன் புனிதத்தன்மை உணர்த்தப்பட வேண்டும்  இப்படியான கோட்பாடுகளை கூறி முழு அதிகாரத்தையும் ஆண் தலைமையினால் கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும் குருத்துவ நிறுவனம் .


அவ்வகையில்  திருச்சபை என்ற கட்டமைப்பின் நிறுவனத்தில் தலைமையில் இருப்பது கிறிஸ்து.  இதற்கு  அப்போஸ்தலர் பவுலின் கூற்று கவனிக்க வேண்டும்.  சபை என்பது  கிறிஸ்துவின் உடல்என்பன விவிலிய வசனங்கள் . 1 கொரிந்தியர் 12- அதேபோல் ரோமர் 12, எபேசியர் 1 மற்றும் கொலோசெயர் 1- என  உருவகத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.  


ஆனால் இன்னும் வேறுபட்டு சிலர் இயேசு கிறிஸ்துவையே தலைவனாகவும் இதயமாகவும் கொண்ட ஒரு ஆன்மீக நிறுவனம் என்றும் இன்னொரு  விளக்கமும் தருகின்றனர்.  இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்துவின் உடலாக உள்ளனர்; ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பங்கு உண்டு. உடலில் பல அங்கங்கள் உள்ளன; அவற்றில் ஒவ்வொன்றும் உடலின் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அதன் சிறந்த செயல்பாடுக்கும் அவசியமானது போலவே, திருச்சபையும் அப்படித்தான். இந்த உருவகத்தில் எவருக்கும் உயர்வு  தாழ்வு கிடையாது; ஆனால் தலை (இயேசு கிறிஸ்து) மட்டும் மிகவும் கௌரவமான இடத்தில் உள்ளார். மற்ற எல்லா அங்கங்களும் சமமாக அவசியமானவை; அவையில்லாமல் முழுமை நிகழாது என்றும் வரையறைத்துக் கொள்கின்றனர்.


இந்த தத்துவ விசாரங்களை புரிந்து கொள்ள இயலாத உலகப்பிரகாரமான ஆட்டு குட்டிகளுக்கு இன்னொரு கதையும் சொல்கின்றனர்.

  1. 1.    திருச்சபை மனித நிறுவனம் என்பதும் உண்மை.
  2. 2.    அது தன்னைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்;
  3. 3.    சமூக வாழ்வின் அடிப்படை அம்சங்களைப் பேண வேண்டும்;
  4. 4.    தனது போதனைகள், பணி குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும்;
  5. 5.    தனது செயல்களுக்கு நிதியளிக்க வேண்டும்;
  6. 6. அந்தச் செயல்களை மேற்கொள்ளும் நபர்களின் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும்.

 இந்த கடைசி இரண்டும்  கத்தோலிக்க திருச்சபையின் மக்களின் ஆதரவு வேண்டும். எப்படி என்றால் அது தான் பணம் ஆதரவு.

 

பணம் கொடுத்து விட்டு அதிகாரம் பேண இருமாப்பு கொண்டால் அதற்கும் ஒரு பதில் உண்டு அது தான்  படிநிலைக் கட்டமைப்பு (hierarchy). இந்த படிநிலையில் பணம் கொடுக்கும் மக்கள் எங்கு உள்ளார்கள் என்பதற்கு முதலாக இங்குள்ள பணிகள் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

எல்லா மனித நிறுவனங்களிலும் போல,

இங்கும் வழிநடத்தல்,

திட்டமிடல்,

ஒருங்கிணைப்பு அவசியம்.

அதற்காகவே அதிகாரம் தெளிவாகக் காணப்பட்டுமுடிவுகள் எளிதில் எடுக்கப்படுவதற்காக ஒரு படிநிலைக் கட்டமைப்பு (hierarchy) தேவையாக உள்ளது.

 

இது பவுலின் "உடல்" என்ற உருவகத்துக்கு முரண்போலத் தோன்றினாலும், அவரது போதனைகளிலிருந்தே இதுவும்  உருவானது தான் . 1 கொரிந்தியர் 12 மற்றும் எபேசியர் 4-ல், திருச்சபையின் அமைப்புகள் மற்றும் பணி ஒழுங்குகள் பற்றி நாம் வாசிக்கிறோம்; அவற்றில் ஒவ்வொன்றும் திருச்சபையின் வாழ்வுக்கும் பணி நோக்கத்துக்கும் தனித்தனி பங்களிப்பு செய்கின்றன.

 

திருச்சபையின் அமைப்பு பொதுவாக ஒரு பிரமிட் வடிவிலான படிநிலை (hierarchy) ஆகக் காணப்படுகிறது

  1. அதன் உச்சியில் போப்,
  2. கரிதுனாலுகள்
  3. பின்னர் ஆயர்கள்,
  4. குருக்கள்,
  5. அரசியல்வாதிகள்(சக்கரவர்த்திகள் (diacons))
  6. பெண் துறவியர்,
  7. இறுதியில் பொதுமக்கள் (laity)

 

இயேசு கிறிஸ்துவின்அடிமைத் தலைமை” (servant-leadership) (யோவான் 13 எடுத்துக்காட்டாக இருப்பதால், திருச்சபையில் தலைமை வகிப்பவர்கள், உலகின் தலைவர்கள் நடப்பது போன்று நடக்கக்கூடாது . (மத்தேயு 20:24–26). இயேசுவிடம் வந்த யாக்கோபும் யோவானும், தங்கள் தாயின் மூலம், அவருடைய இராச்சியத்தில் அதிகாரம் மிக்க இடத்தில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு அமர்த்தும்படி யேசுவிடம் கேட்கிறார்கள்அதற்கு இயேசு, "இராச்சியங்களில் பெரியவனாகிறவன் உங்களைச் சேவிக்கிறவனாக இருக்க வேண்டும்; முதன்மையாகிறவன் உங்களை அடிமையாயிருக்கிறவனாக இருக்க வேண்டும்" என்று கூறி, பெரியவர்களாக இருக்க மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்

 

திருச்சபை தனது தலைவனான கிறிஸ்துவின் போதனைகளுக்கு உண்மையாக இருந்தால், அந்தப் பிரமிட் தலைகீழாக  (inverted pyramid) இடம் பெறுகிறதாம்.   அதில் பொதுமக்கள் (laity) மேலே இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் உலகில் சென்று சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டவர்கள். அவர்களை ஆதரித்து சேவையாற்றும் பணியில் துறவியர், சக்கரவர்த்திகள், குருக்கள், ஆயர்கள், போப் ஆகியோர் கீழே இருக்கிறார்கள். இது பணம் கொடுப்பவர்களை அப்பப்போ குஷிப் படுத்த சொல்லும் பொய் ஜோக்குகள்.

 

சரி இந்த  நிலைகள் செயல்பட அடிப்படை உறுப்பினர்கள் உருவாக்கத்தில் இருந்து ஆரம்பிப்போம்.  முதலில் ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பெற்றோர் 30 நாட்களுக்கு முன்னால் கரித்தரின் முன் வைத்து பாப்டிசம் (Baptism) மூலம், திருச்சபையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.  

தமிழகத்தில் கத்தோலிக்க திருச்சபை 18 மறைமாவட்டங்களாக இயங்கிவருகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் ஆயர் (bishop) அல்லது பேராயர் (archbishop) தலைமையில், குருக்களின் நேரடி ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது. குருக்களுள், இயேசு சபை,கப்புச்சின் சபை,சலேசிய சபை போன்ற துறவறசபைக்குருக்கள் மறைப்பணி,கல்விப்பணி,சமூகப்பணி போன்ற பணிகளை ஆற்றிவருகின்றனர்.

 


ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அருட்சகோதரிகள் என்று அழைக்கப்படும் பெண்துறவியர் பலர் பல துறவற  பிரிவுகளாக இயங்கி வருகின்றனர். கல்விக்கூடங்களை நடத்துவதோடு, மருத்துவ மனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற பிறரன்புப்பணி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகின்றனர்.

 

 

  1. மதுரை உயர்மறைமாவட்டம்
  2. கோட்டாறு மறைமாவட்டம்
  3. திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
  4. தூத்துக்குடி மறைமாவட்டம்
  5. பாளையங்கோட்டை மறைமாவட்டம்
  6. சிவகங்கை மறைமாவட்டம்
  7. திண்டுக்கல் மறைமாவட்டம்
  8. குழித்துறை மறைமாவட்டம்
  9. சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்
  10. வேலூர் மறைமாவட்டம்
  11. செங்கல்பட்டு மறைமாவட்டம்
  12. உதகை மறைமாவட்டம்
  13. கோவை மறைமாவட்டம்
  14. புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்
  15. குடந்தை மறைமாவட்டம்
  16. சேலம் மறைமாவட்டம்
  17. தர்மபுரி மறைமாவட்டம்
  18. தஞ்சை மறைமாவட்டம்

மேற்கூறிய 18 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்கள் தவிர, கீழ்வரும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க மறைமாவட்டங்களும் தமிழகத்தில் செயல்படுகின்றன. அவை:

 

  1. சீரோ-மலபார் தக்கலை மறைமாவட்டம்
  2. சீரோ-மலபார் இராமநாதபுரம் மறைமாவட்டம்
  3. சீரோ-மலங்கரை மார்த்தாண்டம் மறைமாவட்டம் உள்ளன.

மறைமாவட்டம் பாரிஷ் அல்லது பங்கு என பிரிக்கப்பட்டு பாதிரியார் மற்றும் உதவி பாதிரியார் தலைமையில் செயல்படுகிறது. பாரிஷின் கண்காணிப்பில் பல நிறுவனங்கள் செயல்படும்.

 

பங்கையும் அன்பியல் என பல பிரிவுகளாக பிரித்து அப்பகுதி குடும்பங்களை இணைக்கின்றனர்.

 

அன்பியம் என்பது ஒர்  ........................

  • இறை வாழ்வு.
  • உறவு வாழ்வு
  • அன்பு வாழ்வு
  • பகிர்வு வாழ்வு
  • குணமளிக்கும் வாழ்வு
  • ஆறுதல் தரும் வாழ்வு
  • ஒற்றுமை தரும் வாழ்வு
  • மகிழ்ச்சி தரும் வாழ்வு
  • இன வாழ்வு

அன்பியக் கூட்டங்களில் கலந்து கொள்வது குடும்பங்களுக்கு நல்லது. உங்கள் இல்லங்களில் அன்பியக் கூட்டம் நடத்த முன்வருவது உங்கள் இல்லங்களுக்கு சிறந்த ஆசீர்வாதம் என்பதை அறிந்து கொள்ளவும். உங்கள் இன்பம், துன்பம் அனைத்தையும் அன்பியத்தில் பகிர்ந்து கொள்வது என்பது உங்களுக்கு அன்பும், சமாதானமும் மற்றும் உதவிகளும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும். அன்பியம் ஒரு கோயில், நமது சாட்சிய வாழ்வின் வெளிப்பாடு, அன்பின் உறைவிடம், தியாகத்தின் அடையாளம். தூய அன்னை மரியா அவர்கள் நெடுந்தூரம் நடந்தே பயணம் செய்து எலிசபெத்துக்கு கடவுளின் அன்பைக் காட்டி பணிவிடை செய்தார்கள். இதுபோல் நாம் நெடுந்தூரம் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றாலும், உங்கள் தெருவில் உள்ள அன்பிய குடும்பங்களை அறிந்து, அன்பின் மூலம் உதவிகளை பகிர்ந்து, வாழ்ந்து தூய அன்னை மரியாவின் பிள்ளைகள் என்பதை மற்ற பிரிவினை சபைகளுக்குக் காட்டுவோம். உங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் உங்கள் உறவுகளை அழைப்பது போல அன்பிய உறவுகளையும் சேர்த்து அழைப்பது என்பது மிகவும் நல்லது. இது கிறிஸ்தவ வாழ்வுக்கு உகந்தது. இயேசுவிற்கு பிடித்தது. இதுவே உறவு வாழ்வு!! 

 



அன்பியங்கள் திருஅவையின் வாழ்வில் இன்றியமையாத அமைப்பாகும். ஆதித் திருச்சபையில் நாம் காணும் ஒன்றிப்பும், சகோதரத்துவமும், பகிர்வும்இன்று நமது காலத் திருச்சபையிலும் வளர வேண்டும் என்னும் உயரிய எண்ணத்தோடு உருவாக்கப்பட்டவை தான் அன்பியங்கள். பொதுநிலையினரிடையே விசுவாச வாழ்வில் புது உத்வேகத்தைக் கொணரவும், நாம் வாழும் சமுதாயத்திற்கு உண்மையான கிறிஸ்தவ சாட்சிகளாக வாழ்வதற்கும் அன்பியங்களே சிறந்த வழி. அன்பியம் சக்தி வாய்ந்த இறை இயக்கம். அன்பியம் சிறந்த வேளாண்மை விளை நிலம். அன்பியத்தினால் கடவுளைச் சந்திக்கவும், உண்மையான அன்புறவில் வளரவும், சமத்துவம்சகோதரத்துவத்திலும் மலரவும், அறிதலும், புரிதலும், மன்னிப்பும், பகிர்வும் செயல் வடிவம் பெறுகிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் இறைமக்கள் ஒன்றுகூடி உறவில் இணைந்து இறைவேண்டலில் ஈடுபட்டு ஒருவரோடு ஒருவர் தோழமையில்  பகிர்ந்து வாழும் அடித்தள உறவு வாழ்வுதான் அன்பியத்தின் சிறப்பு.







 





0 Comments:

Post a Comment