இந்ததிரைப்படம் 2019 ல்
Premios del Audiovisual Valenciano வின் சார்பில் ஆறு விருதுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில், 3 act திரைக்கதை பாஃர்முலா கையாண்டுள்ளது எடுத்துச்சொல்ல வேண்டும்.
எமிலோ ஓய்வு பெற்ற ஓர் கணித பேராசிரியர். கணக்கு விளையாட்டு, வாசிப்புடன், தனிமையில் தன் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர்.
ஒரு தெருவோரக்கடையில் காப்பி குடிப்பது, திரும்பி அதே வழியில் தன் வீடு வந்து சேர்வது என நாட்களை கடத்திக்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் தனது நினைவாற்றல் குறைவதை கண்டு உணர்ந்து கொள்கிறார். உடன் மருத்துவ உதவியையும் நாடுகிறார். இருந்தாலும் தனது நோயை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இல்லை.
தனக்குள்ள நோய் யாருக்கும், மகள் கூட தெரியக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக மருத்துவ மனையில் வைத்து சந்தித்த மகள் அறிந்து கொள்கிறார்.
தன் தந்தையை தன் வீட்டில் வைத்து பராமரிக்க விரும்புகிறார்.
பிடிவாதக்காரரான தந்தையோ அதை விரும்பவில்லை, மகள் குடும்பத்தை சந்தித்து விட்டு மாலைக்கு முன் தன் வீடு திரும்பும் மனநிலையில் தான் உள்ளார்.
குறிப்பாக எப்போதும் கைபேசியும் கையுமாக இருக்கும் ப்ளாங்காவை எமிலியோ தாத்தா விரும்பவில்லை, வெறுப்பாக பார்க்கிறார். அதை விட அந்த குழந்தைக்கு தன் தாத்தா தன் வீட்டில் தங்குவது பிடிக்கவில்லை.
தாத்தா தனது பால்ய கால ஸ்னேகிதியை பார்க்கப்போக ஒரு பயணம் மேற்க்கொள்ள போவதையும் அறிந்து கொள்கையில் தானாகவே எமிலியோவிற்கு உதவ வருகிறாள். பால்யகால ஸ்னேகிதி பெயரை மட்டும் அறிந்திருக்கும் தாத்தாவிடம் தகவல்களை பெற்று இணையத்தில் தேட ஆரம்பிக்கிறாள்.
ஒரு நாள் பாடசாலையில் வைத்து, தனது அப்பா இன்னொரு பெண்ணுடன் உறவு பேணுவதை கண்டு கொள்கிறாள்.
அன்று மாலை தன் வீட்டிற்கு போய் தன் தந்தையின் முகத்தில் விழிப்பதை விட தன் தாத்தா வீட்டிற்கு போக விரும்புகிறாள். அங்கு செல்கையில் தாத்தா ஒரு பயணத்திற்கு கிளம்புகிறார். தானும் வருகிறேன் என்று பிடிவாதமாக தாத்தாவுடன் பயணிக்கிறார். பின்பு தாத்தாவிற்கும் பேத்திக்குமான அன்பான உறவு சுவாரசியமாக நகருகிறது. சாலை பாதைகளை கண்டடைய நவீன தொழில்நுட்பத்தை பயண்படுத்தி தாத்தாவிற்கு உதவுகிறார். இருவருக்குமான நட்பு மலர ஆரம்பிக்கிறது. கண்க்கில் புலியான தாத்தா எமிலியோவும் புது தொழில்நுடப்த்தில் கரை கண்ட ப்ளாங்கா அன்பும் ரசிக்க தகுந்ததாகவும் இனிமையானதாகவும் உள்ளது.
பயணித்து கொண்டிருக்கையில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப வேண்டி வருகிறது. அங்கு சென்றால் முதியவர் பணம் சுரண்டும் அட்டையில் எண்ணை மறந்திருப்பார். இது பிரச்சினையாக காவல்த்துறையால் கட்டுப்படுத்தப்பட்டு எமிலியோவின் மகள் ஜூலியாவை வருவித்து இரண்டு பேரையும் ஒப்படைப்பார்கள்.
வாழ்க்கையின் முரண், ஒரு காலத்தில் சிறந்த பேராசிரியாராக இருந்த அறிவாளியான எமிலியாவும் தற்போது 10 வயது ப்ளாங்காவும் ஒரே நிலையை அடைகின்றனர்.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஸ்னேகிதி வேலை செய்த இடத்தை கண்டு பிடிப்பதுடன் தாத்தாவிற்கும் கைபேசி பயண்படுத்தும் வித்தையும் கற்றுக்கொடுக்கிறாள் ப்ளாங்கா.
பின்பு முகநூல் வழியாக தாத்தாவின் ஸ்நேகிதிய தேட முயல்கிறாள் ஓரளவு வெற்றியும் கண்டு விட்டதால் தனது தாத்தா எமிலியோ மற்றும் பெற்றோருடன் தாத்தா எமிலியோவின் காதலி மாரகரித்தாவை தேடிய பயணம் தொடர்கிறது.
அங்கு சென்று சேருகையில் இவர்களுக்கு ஒரு துயரான செய்தி காத்து கிடக்கிறது. எமிலியோவின் தோழி மார்கரித்தா, வீட்டை விற்று விட்டு வேறு இடம் நோக்கி புலம்பெயர்வதை அறிந்து கொள்கிறார்கள்.
எமிலியோ மகள் ஜூலியா மற்றும் பேத்தியுடன் இன்னொரு பயணத்தில் மார்கரித்தாவை கண்டடைந்து விடுகிறார்.இருந்தாலும் மார்கரித்தாவும் அல்சைமர் நோயால் பாதித்திருப்பதால் எமிலியோவை அடையாளம் கண்டு பிடிக்க இயலவில்லை. இருந்தாலும் மர்கரித்தாவின் சில சங்கேத செயல்களால் மார்கரித்தாவும், எமிலியோவை சந்தித்த காலத்தில் தான் உள்ளார் என புரிந்து கொள்கிறார்.
நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகம் ஆகிறது. கடைக்கு போன வழியை மறந்து வீட்டுக்கு திரும்ப இயலாது இருக்கிறார்.
பின்பு மகள் வீட்டில் தங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். எமிலியோ தன் நிலையை எண்ணி வருந்து கோபம் கொள்கிறார். மகளை விட பேத்தி ப்ளாங்கா தாத்தாவை இன்னும் புரிந்து பரிவாக பார்த்து கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் வீட்டிலும் வைத்து பார்க்க இயலா சுழல். ஒரு முதியோர் மருத்துவ இல்லத்தில் சேர்க்கின்றனர். அங்கு மர்கரித்தாவை காண்கிறார். இருவரும் அவர்கள் பதின்ம வயதின் நினைவுகளுடன் அங்கு வாழ்க்கையை தொடர்கின்றனர்.
மகளான ஜூலியா அவர் கணவர் பிலிப் பேத்தி ப்ளாங்கா; மூவரும் வயோதிகரான அல்சைமர் நோயாளியான எமிலியாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நடித்துக்காட்டி சமூகத்திற்கு விழிப்புணர்வு நல்கிய திரைப்படம்.
ப்ளாங்காவாக மபல்மா கார்போநெல் திறம்பட நடித்துள்ளார்.
மரிய மினகசி எழுத்தில், மரிய றிப்போள் இயக்கத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய ஸ்பானிஷ் திரைப்படம் இது.
ஜனுவரி 2020 ல் வெளியாகி மனிதத்தை போதித்த திரைப்படம் இது.
முதுமையின் அதுவும் அல்சைமர் நோயின் தாக்கத்தாலுள்ள வயோதிக த்தின் நிலை துயருரைச்செய்தாலும் என்னுடைய பாட்டியாருக்கு அல்சைமர் நோய் பாதித்த நாட்களை நினைத்து பார்த்தேன்.
அப்பாவும் இதே போன்ற பார்க்கின்சன் நோயுடன் கடந்து போவதை கண்டேன்.
அப்பாவின் தன் நல்ல வயதில் கம்பீரமாக கல்லாவில் அமர்ந்து புத்தகம் படிப்பது, வியாபாரம் செய்வது பின்பு கல்லூரி விடுதிக்கு காண வந்து கண்ணீருடன் திரும்ப சென்றது, கல்யாண நேரம் நாங்கள் உடை நகை அலங்காரத்தில் திளைத்து நின்ற போது அப்பா ஓடி நடந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தது பின்பு என் வீட்டிற்கு இரு செடிகள் வாங்கி வந்து குழி தோண்டி நட்டு தந்தது , ஒரு முறை விடுமுறைக்கு சென்ற போது, இரு நடுங்கும் கைகளை காட்டி, என்ன இப்படி என பரிதபித்தது, அடுத்த விடுமுறைக்கு சென்ற போது நிலம் குத்தி விழுந்து அடிபட்ட காயங்களை காட்டினது , தங்கை வீட்டு நிகழ்ச்சியில் எங்குள்ளோம் எதைச் செய்கிறோம் என அறியாது கூட்டத்தை கண்டு பயந்து கூட்டத்தில் தொலைந்த குழந்தை போல் திருதிருவென முழித்து, அம்மாவை தேடிக்கொண்டு சோபாவின் கரைகள் பிய்த்து கொண்டு இருந்தது, இப்போது நடக்க இயலா படுக்கையில் என அறிகிறேன்.
அப்பாவின் நினைவை அப்பாவின் இயலாமையான முகத்தை எமிலியோ முகத்தால் கண்ட திரைப்பட
0 Comments:
Post a Comment