22 Jun 2020

கெ. டி எ கறுப்பத்துரை( K.D. (a) Karuppu Durai)


பாலுமகேந்திராவின் வீடு திரைப்படத்திலுள்ள தாத்தாவை நினைவுப்படுத்தியது இத்திரைப்படத்திலுள்ள கறுப்பதுரை கதாப்பாத்திரம்

இத்திரைப்படத்தில் நாம் சந்திக்கும் இரு கதாப்பாத்திரங்கள், மகன்களால் கொல்லப்பட இருக்கையில் தப்பித்து வீட்டைவிட்டு வெளியேறி, அனாதமாக சுற்றிக்திரிந்து கொண்டிருக்கும் கறுப்புத்துரை என்ற 80 வயது தாத்தா, பிறந்த போதே அனாதையாக புரக்கணிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வளரும் குட்டி என்ற 8 வயது சிறுவன். இருவருக்குமான உண்ர்வு பூர்வமான உற்வைப்பற்றி சொல்லியத்திறைப்படம் தான் கெ. டி கறுப்பத்துரை ( K.D. (a) Karuppu Durai)

.

தாத்தா மதுரைப்பக்கம் இருந்து தப்பித்து தென்காசி , செங்கோட்டை வந்தடைகிறார் அங்குள்ள ஒரு கோயிலில் தஞ்சம் புகிர்கிறார். அங்கு தான் கரடுமுரடாக வளர்ந்து வரும்  குட்டியும், கறுப்பு துரையும் சந்திப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. சிறுவனின் துடுக்குத்தனமான பேச்சில் கறுப்பத்துரை ஆள்கொள்ளப்பட்டாலும் சிறுவனின் அடாவடிப்பேச்சை சற்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் பின்பும் ரசிக்கவும் ஆரம்பிக்கிறார்.

 

இருவரும் சேர்ந்து ஒரு குடிசையில் வசிக்க வேண்டிய சூழல் எழுகிறது. பின்பு இவர்களுக்கும் கூத்து கலைஞர் கோழிக்கடைக்காரருக்குமான நட்பு, கூத்துக்காண சிவகிரி போவது, குற்றாலம் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வது, தாத்தாவின் 10 விருப்பம் என கேட்டு எழுதி வைத்து விட்டு ஒவ்வொரு விருப்பமாக செய்து முடிக்க வைக்கும் சிறுவனின் கரிசனை , இப்படியாக கதை சுவாரசியமாக நகர்கிறது.

 

இரு தலைமுறையின் மனநிலை, ஒரே சூழலை இரு தலைமுறையும் எவ்வாறு எதிர்கொள்கிறது என சமகால சமூக சூழல் குழந்தைகள் மனநிலையுடன் கதை சொல்கிறார்கள்.  ஒரு இடத்தில், தாத்தா கேட்பார் "நீ குழந்தையா, இல்லை நான் குழந்தையா எனத் தெரியவில்லையே என்று. பல போதும் குழந்தைகளுடன் நட்பாக பழுகுகிறவர்கள் உணருவதும் இதுவே.

குழந்தைகள் பெரியவர்களை விட பிரச்சினைகளை கையாளுவதில் மிடுக்காக இருப்பார்கள். குட்டியும் அப்படித்தான். தாத்தாவிற்கு தன் பால்யகால ஸ்னேகிதியை காண வேண்டும் என ஆசை துளிர்கிறது. அங்கைய சுவாரசியமான நிகழ்வுகள், வயதாகும் தோறும் மனிதர்கள் தங்கள் பால்ய காலத்திற்குள் போகும் விருப்பம் இதை எல்லாம் கவனமாக அவதானித்து திரைக்கதையில் எழுதப்பட்ட விதம் அதை காட்சி மொழியாக பகிர்வது சிறப்பு.

 

வயதானவர்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்குதல் கூடாது, பெற்றவர்கள் முதியவர்கள் ஆகி விட்டார்கள் என கொல்லும் அதிகாரம் பிள்ளைகளுக்கு இல்லை, இவர்களால் தான் கிராம விவசாயம், பல மனித வாழ்வியிலுக்கான விழுமியங்களை, விவசாயத்திற்கான நுணுக்கங்களை கற்று தர இயல்கிறது. வயதானவர்கள் இளையவர்கள் வாழ்க்கையில் ஆற்றும் பங்கும் வயதானவர்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு இளையவர்களின் பங்கும், அதன் தேவையும் பற்றி சொல்லி நகர்கிறது கதை.

 

 

இப்படி இருக்க சிறுவனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கறுப்பதுரைக்கு சிறுவனை பிரிய மனமில்லை என்பதால் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லாது தவிக்கிறார்.  ஒரு பக்கம் சிறுவனை சென்னைக்கு அனுப்ப தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர், அதே நேரம் முதியவரையும் கூலிக்கு ஆள் வைத்து சொத்தில் கையெழுத்து வாங்குவதற்கு என  மகன்களும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

 

 

பெரியவரும் சிறுவனும் பிரிகையில் பெரும் துயர் காண்பவர்களையும் பற்றிக் கொள்கிறது.  யாரும் இல்லை என இருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவராக மாறினதும், அங்கு இரத்த உறவை விட அழகான நேசம் கொண்ட உறவு மலர்ந்ததும் நம்மை நெகிழ்ச்சி கொள்ளச் செய்பவை.

ஒரு வழியாக முதியவரை பிடித்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். மகன்கள் உணர்வுப் பெருக்கான உரையாடல்களை நம்பாது, உங்களுக்கு என்ன தேவை சொத்து, கையெழுத்து போட்டு தருகிறேன் என்பார். கையெழுத்து வாங்கின பின்பு முதியவரை வைத்து பார்த்துக்கொள்வார்கள் என்றால், அப்போதும் கொலை செய்யத்தான் திட்டம் போட்டுக் கொண்டு இருப்பார்கள். முதியவர் தப்பித்து வீட்டைவிட்டு போய் விடுவார்.

 

வீட்டை விட்டு வெளியேறினாலும் அழகான வாழ்க்கை வெளியிலும் உண்டு என முதியவர்களுக்கும் நம்பிக்கையூட்டிய திரைப்படம் இது.

உறவுச்சிக்கலில் வீட்டில் அல்லல்ப்படும் முதியவர்களை வரவேற்கும் படி சமூக தேவை இருப்பதால், காத்திரமான வசதிகளை முதியவர்களுக்கு செய்யவேண்டியது சமூகத்தின் பாரிய கடமையாகும் என உணரவைத்த திரைப்படம் இது.

 

 

பல போதும் திருநெல்வேலியின் நகர்புறங்களை திரைப்படங்களில் கண்ட கண்களுக்கு, திருநெல்வேலியின் முதுகெலும்பான கிராமங்கள், திருநெல்வேலியின் அடையாளமான திருவிழாக்கள், கோயில்கள், கொண்டாட்டங்கள், விவசாய வயல்கள் என கிராமங்களை படம் பிடித்து காட்டிய அருமையான திரைப்படம் இது.

 

 

இது போன்ற படங்கள் தான் சமூகத்திற்கு தேவை. பாரம் போன்ற திரைப்படங்கள் வீட்டிலுள்ள 'முதியவர்கள் கொலை' பற்றிய கதையை மட்டும் சொல்லிய போது முதியவர்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டு, எப்படி கொலையில் இருந்து தப்பிப்பது, முதியவர்கள் மனநிலை எப்படியாக வகுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைத்த திரைப்படம் இது.  உறவுகள் என்பது இரத்த பந்ததால் மட்டுமல்ல, அன்பாலும், நேசத்தாலும் புது உறவுகளை மலரச்செய்ய இயலும் எனக்கூறிய திரைப்படம்.

 

பல விருதுகள் பெற்றுள்ள திரைப்படம். இதன் இயக்குனர் சென்னையை பிறப்பிடமாக கொண்டு, சிங்கப்பூர் வாழ்விடமாக கொண்ட மதுமிதா என்ற பெண் என்பது மிகவும் சிறப்பு. இவருடைய நாலாவது படமாகும்.

Asian American International Film Festival மற்றும் Jagran Film Festival ல் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை நாக விஷால் பெற்றுள்ளார்.

UK Asian Film Festival மற்றும்

Indian Film Festival of Cincinnati ல் மதுமிதா சிறந்த இயக்குனர் என்ற விருதை பெற்றுள்ளார்.

Singapore South Asian Film Festival ல் சிறந்தத் திரைப்படம் என்ற விருது பெற்றுள்ளது.

New York Indian Film Festival சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திர விருதிற்கு தேர்வாகியுள்ளது.

கறுப்புதுரை கதாபபாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபல நாடக செயல்பாட்டாளரும் நாடகத்துறை பேராசிரியருமான மு ராமசாமி என்பது சிறப்பு. கறுப்ப துரையாக நடித்த பேராசிரியர் ராமசாமியின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவிற்கு கதாப்பாத்திரமாகவே உருமாறியிருந்தார்.

இசை கார்த்திகேய மூர்த்தியால் படத்தின் கதைக்கு ஏற்ற முறையில் இசைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு மெய்யீந்திரன் மற்றும் கெம்புராஜ்.

நவம் 2019 ல் வெளியான சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்று இப்படம்.


0 Comments:

Post a Comment