15 Jun 2020

ஒரு யாழ்ப்பாணத்து வீடு.


ஒரு யாழ்ப்பாணத்து வீடு. தங்கராசு சைக்கிள்க்கடை; தங்கராசிடம் படம் எடுக்க ஆர்வமுள்ள நண்பன் ஜெயப்பிராகாசும் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். கதையின் பிறப்பிடம் என்றால் , யாரைப் பற்றிய கதை, கதைகள் நிரம்பிக்கிடக்கும் தனது ஊர்த்திருவிழா, தெருவுகள், மனிதர்கள் இப்படி கதைகளை பற்றி கதைத்துக்கொண்டு போவார்கள். அவர்கள் பேச்சினிடை ஈழத்து திரைப்பட வரலாறு முதல்த்திரைப்படம் என நீள , எதிர் வீட்டு பாக்கியா அக்கா வீட்டைப்பற்றியும் கதைக்கிறார்கள். பாக்கியம் அக்காவிற்கு இரு பிள்ளைகள் பொறுப்பான மகள் கமிலினி, அவள் தம்பி செந்தில். அவன் பொழுது போக்கு, பெட்டைகளுடன் ஊர் சுற்றுவதும், இப்போது நார்வேயில் இருந்து வந்துள்ளவருடன் ஊர் சுற்றிக் கொண்டு, பல பொருட்களை இலவசமாக பெற்று சுகமாக வாழ்ந்து வருகிறான். நார்வேயில் இருந்து வந்தவனுக்கு கமிலினியை கண்டதும் காதல் தொற்றிக் கொள்கிறது. கமிலினிக்கு அந்த ஊர் தபால் அலுவலக குமஸ்தாவுடன் காதல் உண்டு என அறிந்தும், பணவும் பொருட்கள் கொடுத்து, நார்வேக்கு செந்திலை அழைத்து போகிறேன் என்று ஆசை காட்டி பெண்ணை திருமணம் முடித்து கொள்கிறான். இந்த சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் கறுப்பு- வெள்ளையில் நடக்க அதே நேரம் கலரில் நார்வேயிலுள்ள ஒரு குடும்ப காட்சிகள் வந்து கொண்டிருக்கும். ஒரு குடும்பத்தில், கணவர், தனது தாய், வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் ஒரு பெண் திடீர் என தன் கணவரை பிரியும் முடிவை எடுப்பார். கணவருக்கு பெரும் கவலை. சமூகத்தில் கவுரவமான பல பதவிகள் உள்ள ஆள் . தன் மனைவி தன்னை பிரிந்தால்,இந்த சமூகம் என்ன நினைக்கும் என கலங்குகிறார். மனைவிக்கு தான், என்ன குறை வைத்தேன் என வருந்துகிறார். தனது காதலன் கனகு விரும்பாத வாழ்க்கை வாழ்ந்து குடியில் ஆட்பட்டு, மனைவியை பிரிந்து, நான்கு நாட்கள் அனாதமாக செத்து கிடந்தார் என்று அறிவதுடன் கமிலினியின் மனசாட்சி வருந்த ஆரம்பிக்கிறது. .....தன் மனப்போராட்டத்தில் தன் கணவரை பிரிய முடிவு எடுக்கிறார். மூத்த மகள் அம்மா எடுத்த முடிவை ஆமோதிப்பதும் இளைய மகளோ, தன் தாய் தன் தகப்பனாருக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்றும் தாயிடம் முரண்பட்டுக் கொண்டிருப்பார். பின்பு அக்கா தன் அம்மா , அப்பாவின் நிலையையும் தங்கைக்கு விளங்கப் பண்ணுகிறார். தங்கை இப்போது அம்மாவை தான் விரும்புவதாகவும் அப்பாவை வெறுப்பதாகவும் கூறுகிறாாள். அக்காவோ "இல்லை.... நீ தவறாக நினைக்கிறாய். அப்பாவும் பாவம். அவர் நிலையும் வருத்தததிற்குரியது. தன்னை அன்புச் செய்யாத அம்மாவுடன் 25 வருடம் வாழ்ந்திருக்கார்"என்பார் ஆனால் அம்மாவின் ஏழ்மை நிலையை தனக்கு சாதகமாக எடுத்து அம்மா காதலை பிரித்தவர். அம்மா இதுவரை தன் குடும்பத்திற்காக தன் தாய் தம்பியின் நலனுக்காக, பின்பு தனது மகள்களுக்காக வாழ்ந்து வருகிறவர் என விவரிக்கிறார். இனியாவது தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும். 26 வருடமாக பிடிக்காத நபருடன் வாழ்ந்து வரும் அம்மாவையும் 26 வருடமாக மனைவியின் அன்பு கிடைக்காத தங்கள் அப்பாவையும் நினைத்து வருந்துகின்றனர். இருவரையும் அன்பாக ஏற்றுக்கொள்கின்றனர். தனது அம்மாவின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த தங்கள் மாமாவையும் , பாட்டியாரையும் வீட்டில் இருந்து போகப்பணிகின்றனர். மகள்கள் தங்கள் அம்மாவின் விருப்பத்தை மதிப்பதுடன், அம்மா தனக்க 25 வது வயதில் இழந்த வாழ்க்கையை மீட்பது மாதிரி கதை முடிந்துள்ளது. ஒரே திரைப்படத்தில் ஈழ மக்களது தங்கள் நிலத்திலுள்ள எளிமையான வாழ்க்கை, வெளிநாடுகளிலுள்ள பகிட்டான வாழ்க்கை. பிடிக்காத நபருடன் வாழும் பெண்ணின் மனச்சுமை, பணத்தால் எதையும் குறிப்பாக பெண் மனதை வாங்கலாம் என நினைத்த ஆணின் அறியாமை, காதலின் உண்மையும் அதன் பிரிவால் உண்மையாக காதலித்த இரு நபர்கள் வாழ்க்கை சென்றடைந்த துயர்கள், வறுமையில் கமிலினியின் அம்மாவின் செயல்பாடுகள் பின்பு வசதியான மருமகன் கிடைக்க போகிறான் என்றரிய அவருடைய குணத்தில் வந்த மாற்றம், பெண் பிள்ளைகள் என்ன தான் படித்திருந்தாலும் , பொறுப்பான பிள்ளைகளாக இருந்தாலும் தங்கள் உடன் பிறந்த சகோதரன் சுகமான வாழ்க்கைக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டி வரும் அவலம், பெண்ணின் துயரை பெற்ற தாயே கண்டு கொள்ளாது மகளை, தங்கள் வளமான வாழ்க்கைக்காக பயன்படுத்தும் கொடூர குணம், ஒரு தீருமானங்கள் எடுக்கையில் தாய்மார்கள் ஒழுங்கீனமான மகன் என்றால் கூட மகன்களின் அறிவுரை கேட்டு நடப்பதும், ஈழத்தில் அம்மனையும் தமிழ் இந்து கடவுளை வணங்கியவர்கள் சிங்கிடி பாபா போன்ற கடவுள்களிடம் போனது என உண்மையான உலகத்தை கண் முன் நிறுத்து உள்ளனர். நார்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம். குறுகிய பட்ஜெட் படம் என்றிருந்தால் கூட அதன் கதை, திரைக்கதையில் கையாண்டுள்ள நுட்பம், திரை வசனத்தில் பயண்படுத்தியிருக்கும் வார்ததைகளின் கட்டமைப்பு, கலைத்துவமான ஒளிப்பதிவு என திரைப்படத்தின் தரத்தை நோக்கினால் ஒரு ஓவியமாக ஒரு முழு நேரத்திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்கள். படத்தின் கதை , திரைக்கதை, படத்தொகுப்பு, இயக்கம் இந்த பிரதான வேலைகளை சிவசாமி ப்ரேம் ராஜ் செய்துள்ளார். ஒளிப்பதிவு நல்லைய்யா ஸ்ரீகந்தன், சுரேஷ் குமார் இணைந்து பதிவு செய்துள்ளனர். இசை ரவிக்குமார் செய்துள்ளார். பாக்கியமாக சாந்தி மகேந்திரன், நவமதி பிராபாகரன், மற்றும் மாயந்தி யோகேஸ்வரன் கமிலியாக நடித்துள்ளனர், ஆதவன் மகேந்திரன் மற்றும் நல்லையா யோகேஸ்வரன் கமிலினியின் கணவராக நடித்துள்ளார். கனகுவாக யோகி சிவா தெய்வேந்திரன். சைக்கிள் கடை தங்க ராசு அண்ணன் துவங்கி ஜெயப்பிராகாஷ், அவர் மனைவியாக நடித்தவர் என எல்லோரும் படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். ஒரே கதையில் மூன்று தலைமுறை மாந்தர்களின் குண நல மாற்றங்கள், கனகு சகோதரி குடும்பம் வன்னியில் போரில் இறந்தது, சைக்கிள்க்கடை தங்கராசு அண்ணன் இந்தியாவில் அகதிமுகாமில் இறந்தது. கமிலினிக்கு நீதி கிடைக்க 26 வருடம் ஆனது என கதை விரிவடைந்துள்ளது. ஈழத்தவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதிக்காக எத்தனை வருடம் காக்க வேண்டுமோ என ஒரு கதைக்குல் பல அடுக்கு கதையாக அந்த மண்ணின் மாந்தர்கள் அவர்களின் தொடர் துயர்கள், சொந்த நாட்டு அரசியல், புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள் சட்டம் ,வாழ்க்கை என யாழ்ப்பாணத்து சாதாரண குடும்ப கதை அயல்நாடுகள் என்று எப்படி பரந்து விரிந்து கிடக்கிறது என்று இத்திரைப்படம் அழகாக காட்சிகளை பகிர்கிறது. ஒரு நல்ல திரைப்படம் கண்ட உணர்வு. மனதில் மாயாது கிடக்கும் பல காட்சிகள் . க்ளாசிக் திரைப்பட வரிசையில் சேர்க்கக்கூடிய திரைப்படம் இது.
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DhT8ohmP-Q9E%26feature%3Dshare%26fbclid%3DIwAR2oe8yKzOeIWpXgp9cpVYXcT-vQIW1rp3IswqLdlZx6kHs2pkMIKxfjV04&h=AT3Vgj_9KVhXzFqH77O6RDUrupjXArNky4OQLRNJUxxwBA-Fg2udFfTckexAsXnr6Pv9hqDUX-cA7i-eNy464VH2HVuloS05aj5vYk8sLBjkGh8k-BNxT6EL28FZNbuIxJNpwvWjH8YYEUtBPk8e&__tn__=%2CmH-R&c[0]=AT0EMEzBEnaK1UIT-5iTGLfzwertoePyxpkfp1koVHHJ0Hr8BP1NYPZNnwtDafUFRMxPZTEmDZhJDyQl4lL77YH4FtwoOQNs4BOR8vVuRccLEkmwrWcaLtCuMbc-7NjRtKAZysuq_NAF2-IK6cd_







2 comments: