வீட்டருகில் வரும் கத்திரிக்காய் கிலோ 10 ரூபாய், வெண்டைக்காய் கால் கிலோ 10 ரூபாய், எலுமிச்சை கால் கிலோ 30 ரூபாய் வாங்கி விட்டு 100 கொடுத்தேன். காய்கறி வியாபாரி தன்னிடம் சில்லறை இல்லை நாளை மீதம் 50 ரூபாயை தருகிறேன் என்றார். அடுத்த நாள் காலையில் காய் கறி வாங்கக்க 50 ரூபாயை நினைவுப்படுத்தினால் உங்களுக்கு நான் தர வேண்டியது இல்லை. அந்த வீட்டு அம்மாவிற்கு தான் கொடுக்க இருந்தது என்றார்.
பயங்கர ஏமாற்றமாகி போய் விட்டது.
நான் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளாது, இல்லை நீங்கள் நினைவுப்படுத்தி பாருங்கோ, நீங்கள் 50 ரூபாய் தர வேண்டியுள்ளது என்றதும் இல்லை, எனக்கு நல்ல நினைவு உண்டு நீங்கள் நினைவுப்படுத்துங்கள் என்றார்.
நான் அன்றைய காய்கறி பணத்தை கொடுத்து விட்டு வீட்டிற்குள் வந்து, மகனாரிடம் 50 ரூபாய் ஏமாந்து விட்டேன் எனக்கூறி என் சோகத்தை தீர்த்துக்கொண்டேன்.
இன்று காலையில் கத்திரிக்கடைக்காரர் மன்னித்துக்கொள்ளுங்கள் . எனக்கு நினைவு வந்து விட்டது எனக்கூறி 50 ரூபாய்க்கு இன்று காய்கறிகள் தந்து விட்டார்.
...........இது படிக்காதவர்கள் உலகம். நினைவு வந்ததும் தங்களது தவறை உணர்ந்து சமரசப்பட்டுக் கொள்கின்றனர்.
இதே போன்று பணம் சம்பந்தமாக, படித்த மேதாவிகளிடம் பேணவேண்டிய சில இடபாடுகளில் எவ்வளவு எளிதா,எந்த கூச்சமும் இல்லாது நம்மை ஏமாற்ற துணிகின்றனர்.
இப்போதெல்லாம் கல்வி கற்றவன் , படித்து பதவிகளில் உள்ளவர்கள் என்றாலே தன்னுடன் ஆயிரம் திருடர்களையும், பதினாயிரம் நம்பிக்கை துரோகங்களையும் வைத்து கொண்டு தான் அலைகின்றனர்.
0 Comments:
Post a Comment