19 Jun 2026

சிறந்த பேராசிரியர் யார்?

சிறந்த பேராசிரியர் யார்?
ஒரு நாட்டின் உயர்கல்வி அமைப்பின் தரத்தை நிர்ணயிப்பவர்கள் பேராசிரியர்கள். அவர்கள் வெறும் பாடங்களை கற்பிப்பவர்களாக மட்டுமல்ல; எதிர்கால தலைமுறையின் சிந்தனை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வடிவமைப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, ஒரு சிறந்த பேராசிரியர் என்பது பட்டங்களும் கல்வித் தகுதிகளும் கொண்டவராக மட்டும் இருப்பதில்லை. அறிவு, கற்பித்தல் திறன், நேர்மை, பரிவு மற்றும் மாணவர்களும் சமூகமும் முன்னேற வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வை ஒருங்கே கொண்டவராக இருப்பார்.
ஒரு சிறந்த பேராசிரியர் தனது பாடத் துறையில் ஆழ்ந்த அறிவும் தொடர்ச்சியான கற்றல் மனப்பான்மையும் கொண்டிருப்பார். சிக்கலான கருத்துக்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கும். மாணவர்களை பாகுபாடின்றி, நேர்மையுடன் நடத்துவதோடு, அவர்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்படுவார்.
கல்வி என்பது ஒருவழிப் போதனை அல்ல. மாணவர்களின் கருத்துக்களைக் கவனமாகக் கேட்டு, அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தும் கற்றல் சூழலை உருவாக்குவதே சிறந்த ஆசிரியரின் அடையாளமாகும். மாணவர்கள் அச்சமின்றி கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிப்பார். என்ன சிந்திக்க வேண்டும் என்பதை அல்ல, எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை கற்பிப்பதன் மூலம் சுயசிந்தனையையும் விமர்சனப் பார்வையையும் வளர்ப்பார்.
உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியரின் பணி வகுப்பறைக்குள் மட்டுப்படுவதில்லை. ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் ஈடுபட்டு புதிய அறிவை உருவாக்குவதிலும் அவர் பங்காற்ற வேண்டும். மாணவர்களிடையே ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் தூண்டி, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பொறுப்பும் அவருக்கே உரியது.
அதேவேளை, கல்வி என்பது சமூகத்திற்குச் சேவை செய்வதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை உணர்ந்திருப்பார். ஒழுக்கநெறிகள், குடிமைப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் பல்வகைமையை மதிக்கும் பண்புகளை மாணவர்களிடம் வளர்க்க முயற்சிப்பார்.
கல்வித் துறையில் பரவலாக மேற்கோள் காட்டப்படும் ஒரு கூற்று இதனைச் சுருக்கமாக விளக்குகிறது: “சாதாரண ஆசிரியர் கூறுவார்; நல்ல ஆசிரியர் விளக்குவார்; சிறந்த ஆசிரியர் செய்து காட்டுவார்; மகத்தான ஆசிரியர் ஊக்குவிப்பார்.”
எனவே, ஒரு சிறந்த பேராசிரியர் என்பது மாணவர்களை அறிவாளிகளாக மட்டுமல்லாமல், ஒழுக்கமிக்கவர்களாகவும், சுயசிந்தனை கொண்டவர்களாகவும், சமூகப் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களாகவும் உருவாக்கத் தூண்டுபவராக இருப்பார். அவர்களின் பங்களிப்பே ஒரு நாட்டின் அறிவுசார் மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அமைகிறது.
இப்படி நினைத்து ஆகா மாபெரும் பணி செய்ய போகிறோம் என நினைப்போம். அதற்கான பயிற்சி என பலரை வைத்து பேச வைத்து உற்சாகப்படுத்துவார்கள்.
ஆனால் நிஜத்தில் பேராசிரியர் பாடத்திட்டம் சார்ந்து பாடங்களை கற்பிக்க மட்டும் செய்தால் போதும்.
மாணவனை படி என்று கட்டாயப்படுத்த கூடாது
மாணவன் வகுப்பை கவனிக்காவிடிலும் பேராசிரியர் கண்டு கொள்ளக் கூடாது. துணை முதல்வர்கள் என்ற பெயரில் உள்ள கண் காணிகளிடம் அனுப்பி விட வேண்டும்.
இதில் இரண்டு பிரச்சினை
ஒரு மாணவனை இன்னொரு நபரிடம் புறணி குற்றம் கூறி அனுப்புதல் என்பது ஆசிரியரின் இயலாமையை மாணவரிடமே சொல்வது போலவே இருக்கும். மாணவன் துணை முதல்வரிடம் செல்லும் போது அந்த நபருக்கு குறைந்த பட்ஷம் தன் அதிகாரம் சார்ந்த ஈகோ பூர்த்தியாகும்.
சொல்லப்போனால் ஒழுங்கீன மாணவனும் துணை முதல்வரும் பிற்காலம் தோளில் கை போடும் அளவிற்கு நட்பாகி விடுவார்கள். திரும்பி வகுப்பிற்குள் வரும் மாணவன் ஆசிரியையை மதிக்கவே மாட்
டான்.அப்போது ஆசிரியைக்கு ஒரே வழி மட்டுமே மிஞ்சும்.மாணவன் ஒழுங்கீனத்தை கண்டு கொள்ளாமல் தன் சுயமரியாதையை காப்பாற்றி கடந்து போவார்.
தொடரும்......
See less

பேராசிரியர்களுக்கான மரியாதையை குறைப்பது மாணவர்களா, நிர்வாகமா?

இன்றைய கல்விச் சூழலில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு குற்றச்சாட்டு என்னவெனில், "மாணவர்கள் பேராசிரியர்களை மதிப்பதில்லை" என்பதாகும். ஆனால் இந்தக் கருத்தின் பின்னால் இருக்கும் உண்மையை ஆராய்ந்தால், பல கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களை மாணவர்கள் மதிக்கும் சூழலையே கல்லூரி நிர்வாக அமைப்புகள் அனுமதிப்பதில்லை என்பதாகும்.
ஒரு பேராசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அந்த நேரத்தில் வகுப்பின் ஒழுங்கும், கற்றல் சூழலும் அவருடைய பொறுப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். ஆனால் பல கல்லூரிகளில், நிர்வாக அதிகாரிகள் துணை முதல்வர் கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை வகுப்பு தோழர்கள் முன்னிலையில் கண்டித்து , வெளியே அழைத்துச் செல்வது நடைபெறும். இதனால் வகுப்பை நடத்திக் கொண்டிருக்கும் பேராசிரியரின் அதிகாரமும் மதிப்பும் மாணவர்களின் பார்வையில் பாதிக்கப்படுகிறது. வெறும் ஒரு வேலைக்காரி ஆசிரியை என்று தான் மாணவர்கள் மனதில் பதியும்.
இத்தகைய தருணங்களில், மாணவரின் நலனுக்காகவோ அல்லது வகுப்பின் ஒழுங்கைக் காக்கவோ பேராசிரியரால் கருத்து தெரிவிக்க முடியாத நிலை உருவாகிறது. தனது வகுப்பறைக்குள் தனது அனுமதியின்றி நடந்த தலையீட்டின் முன் அவர் அமைதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் விளைவாக, மாணவர்கள் கல்வி அதிகாரத்தை விட நிர்வாக அதிகாரமே மேலானது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.
பல தனியார் கல்லூரிகளில் முதல்வர், துணை முதல்வர், டீன், இயக்குநர், ஒருங்கிணைப்பாளர் என பல அடுக்குகளைக் கொண்ட நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் கற்பித்தலே மையப் பொறுப்பாக இருந்தாலும், பேராசிரியர்கள் நிர்வாக வரிசையில் கீழ்நிலையிலேயே இருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. கல்வி நிறுவனத்தின் அறிவுசார் அடித்தளமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள், நிர்வாகத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர்.
இதன் தாக்கம் மாணவர்களின் மனநிலையிலும் பிரதிபலிக்கிறது. ஒரு ஆசிரியரின் அறிவு, கற்பித்தல் திறன், ஆராய்ச்சி பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படையில் அல்லாமல், அவர் பயன்படுத்தும் வாகனம், அணியும் உடை, சமூகப் பின்னணி, பொருளாதார நிலை, சாதி அல்லது பிற வெளிப்புற அடையாளங்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடும் மனப்பான்மை உருவாகிறது. இந்தப் பார்வை தன்னிச்சையாக உருவாகவில்லை; கல்வியை விட அதிகாரத்தையும் பதவியையும் முன்னிறுத்தும் நிறுவன கலாச்சாரத்தின் விளைவாகவே அது வளர்க்கப்படுகிறது.
ஒரு கல்வி நிறுவனத்தின் உண்மையான வலிமை அதன் கட்டிடங்களிலும் நிர்வாகப் பதவிகளிலும் இல்லை; அறிவை உருவாக்கி பரப்பும் ஆசிரியர்களிடமே உள்ளது. பேராசிரியர்களின் சுயமரியாதை, கல்விசார் சுதந்திரம் மற்றும் வகுப்பறை அதிகாரம் பாதுகாக்கப்படாத இடங்களில், பாதிக்கப்படுவது ஆசிரியர்களின் நிலை மட்டுமல்ல; கல்வியின் தரமும் மாணவர்களின் கற்றல் அனுபவமும் ஆகும்.
எனவே, மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன், ஆசிரியர்களின் மரியாதையையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் சூழலை கல்வி நிறுவனங்கள் உருவாக்குகிறதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
See less
Ananthakumar Susaimanickam
வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் தனித்து இயங்குகிறார்கள். இங்கு நிர்வாகம் என்ன சொன்னாலும் மறுப்புத் தெரிவிக்காமல் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

#பேராசிரியர்கள் ஏன் மதிப்பிழக்கிறார்கள்?

#பேராசிரியர்கள் ஏன் மதிப்பிழக்கிறார்கள்?

இன்றைய தமிழக உயர்கல்வி அமைப்பில் பேராசிரியர்களின் சமூக மதிப்பு குறைந்து வருவதாக அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் இந்த நிலைக்கு மாணவர்களையோ ஆசிரியர்களையோ மட்டும் குற்றம் சாட்ட முடியாது. #கல்வி அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாடுகளும் இதற்குக் காரணமாக உள்ளன.

தமிழகத்தில் இன்று நூற்றுக்கணக்கான பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பல கல்லூரிகளில் அரசு நிதி உதவி பெறும் பிரிவுகளும், சுயநிதி பிரிவுகளும் ஒரே வளாகத்தில் இயங்குகின்றன. ஆனால் இந்த இரு பிரிவுகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கிடையே மிகப்பெரிய ஊதிய வேறுபாடு நிலவுகிறது.

அரசு நிதி உதவி பெறும் பிரிவில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியரே மாதம் பல ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், சுயநிதி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதற்குக் குறைவான ஊதியத்தில் வேலை செய்யும் சூழல் உள்ளது. இந்த வேறுபாடு ஆசிரியர்களுக்குள்ளேயே இரண்டு தனித்துவமான உலகங்களை உருவாக்குகிறது.

#அரசு ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பும், தொழில்முறை சுதந்திரமும் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் கற்பித்தல் மற்றும் கல்விசார் பொறுப்புகளை நிறைவேற்றி விட்டு இயல்பாக செயல்பட முடியும். ஆனால் #சுயநிதி பிரிவில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலை பெரும்பாலும் வேறுபட்டதாக இருக்கிறது.

பல இடங்களில் கற்பித்தலைத் தாண்டி பல்வேறு நிர்வாகப் பணிகள், தரவு சேகரிப்பு, ஆவணத் தயாரிப்பு, தரச்சான்று ஆய்வுகளுக்கான ஏற்பாடுகள், அங்கீகார நிறுவனங்களின் மதிப்பீட்டுப் பணிகள் போன்ற கூடுதல் பொறுப்புகள் சுயநிதி பிரிவு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. குறிப்பாக அங்கீகார மற்றும் தரமதிப்பீட்டு காலங்களில், வேலை நேரம் என்ற எல்லையே இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலையும் உருவாகிறது.

இந்த சூழலில் சில ஆசிரியர்கள் நிர்வாகத்தின் நல்லெண்ணத்தைப் பெறுவதன் மூலம் தங்களது எதிர்காலம் மேம்படலாம் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றனர். இதனால் கல்விசார் சுதந்திரத்தை விட நிர்வாகத்திற்கு இணங்கிச் செயல்படுவது முக்கியமானதாக மாறுகிறது. #ஆசிரியரின் அறிவு, ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் திறனை விட நிர்வாக உறவுகள் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவாகும்போது, பேராசிரியர் என்ற பதவியின் கண்ணியமும் பாதிக்கப்படுகிறது.

இந்த அனைத்தையும் மாணவர்கள் தினசரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். #ஆசிரியர்கள் சுயமாக முடிவெடுக்கும் அறிவாளிகளாக அல்லாமல், நிர்வாக அமைப்பின் கீழ் செயல்படும் பணியாளர்களாகக் காட்டப்படும் போது, மாணவர்களின் பார்வையிலும் ஆசிரியரின் அதிகாரமும் மதிப்பும் குறையத் தொடங்குகிறது.

எனவே பேராசிரியர்களின் மதிப்பு குறைவதற்கான காரணத்தை மாணவர்களின் அணுகுமுறையில் மட்டும் தேட முடியாது. ஆசிரியர்களுக்கிடையேயான #ஊதிய ஏற்றத்தாழ்வுகள், #வேலை பாதுகாப்பின்மை, #நிர்வாக ஆதிக்கம் மற்றும் #கல்வியை விட ஆவண நிர்வாகத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்ற கட்டமைப்புச் சிக்கல்களும் இந்த நிலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

ஒரு சமூகத்தில் ஆசிரியர்களின் மதிப்பை உயர்த்த விரும்பினால், முதலில் அவர்களின் #தொழில்முறை சுதந்திரம், பொருளாதார பாதுகாப்பு மற்றும் கல்விசார் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். 

உயர்கல்வி வளாகங்களில் பேராசிரியர்களின் #சுதந்திரம் மற்றும் #பாதுகாப்பு


உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களின் மதிப்பு குறைவதற்கான காரணங்களை ஆராயும்போது, ஊதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக ஆதிக்கம் மட்டுமல்லாமல், ஆசிரியர்களைக் #கண்காணிக்கும் மற்றும் #கட்டுப்படுத்தும் சில #நடைமுறைகளையும் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பல கல்லூரிகளில் மாணவர்களிடம் இருந்து ஆசிரியர்களைப் பற்றிய கருத்து மற்றும் மதிப்பீடுகள் பெறப்படுகின்றன. இதன் நோக்கம் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது எப்போதும் அப்படியே செயல்படுவதில்லை. மாணவர்கள் வழங்கும் மதிப்பீடுகள் பல நேரங்களில் கல்வித் தரத்தின் அடிப்படையில் அல்லாமல், தனிப்பட்ட விருப்பங்கள், கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது பிற காரணிகளால் பாதிக்கப்படுகிறது . இதனால் ஆசிரியர்களின் உண்மையான கற்பித்தல் திறனை அளவிட முடியாத சூழல் உருவாகிறது.மேலும் இது போன்ற தரப்படுத்தால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அசுர பலம் கொடுக்கிறது. அவர்கள் ஏற்கனவே வாங்கி வைத்து இருக்கும் அதிகாரம் எந்த நெறியும் இல்லாது எந்த விசாரணையும் இல்லாது ஆசிரியரை மாணவரின் கருத்து என்று பொய் ஆவணத்துடன் வெளியேற்ற இயலும்.

அதேபோல், பல கல்வி நிறுவனங்களில் மாணவர் குறைதீர்ப்பு மையங்கள், புகார் பரிசீலனை அமைப்புகள் மற்றும் ஆலோசனை அமைப்புகள் செயல்படுகின்றன. இவை மாணவர்களின் நலனுக்காக அவசியமானவை என்றாலும், சில நேரங்களில் உரிய விசாரணை நடைமுறைகள் இல்லாது நிர்வாகத்தின் தன்னலம் சார்நது தவறாகப் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது. நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் கூட ஒரு ஆசிரியரின் நற்பெயரையும் தொழில் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். மேலும் ஆசிரியரை உயர் அதிகார வட்டத்தில் உள்ளவர்களின் பாலியல் அச்சுறுத்தலுக்கும் கொண்டு செல்கிறது. தமிழகத்தில் 50 சதவீதம் பேராசிரியர்கள் விவாகரத்து ஆகிறதின் சமூக சூழல் கவனித்தால் கல்வி நிலையங்களும் பாலியல் அச்சுறுத்தல்களும் வெளிச்சத்திற்கு வரும்.

#வேலைப் பாதுகாப்பு குறைவாக உள்ள ஆசிரியர்கள் இத்தகைய சூழல்களில் அதிகமான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக தனியாக குடும்பப் பொறுப்புகளை ஏற்றிருக்கும் பெண் ஆசிரியர்கள் மற்றும் தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் கூடுதல் பாதுகாப்பின்மையை உணர்வத்தால் எல்லா நிலையிலும் பணிந்து போகும் சுழலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வேலை இழக்கும் அச்சம் காரணமாக அவர்கள் பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கும் நிலையும் உருவாகிறது.

மேலும், முனைவர் பட்டம் உள்ளிட்ட உயர்கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தாலும், பல கல்லூரிகளில் வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவாக இருப்பதால், ஓரளவு சிறந்த ஊதியம் உள்ள கல்வி நிறுவனங்களில் வேலை பெற கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி ஆரோக்கியமான கல்விசார் வளர்ச்சியாக அமையாமல், சில நேரங்களில் குழு அரசியல், ஆதிக்கப் போட்டி, ஜாதி வன்மம் மற்றும் தொழில்முறை மோதல்களாக மாறிவிடுகிறது.

சில கல்வி நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை குறைவாக இருப்பதும் ஒரு சிக்கலாகும். ஆசிரியர்கள் சுயமாக சிந்தித்து செயல்படும் கல்வியாளர்களாக அல்லாமல், முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய பணியாளர்களாகக் கருதப்படும் சூழல் உருவானதால், கல்விச் சூழலின் தரத்தையே பாதிக்கிறது.

ஒரு பேராசிரியர் தனது கல்வி, அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் கருத்து தெரிவிக்கவும், நிர்வாகத்துடன் தொழில்முறை உறவுகளை வைத்திருக்கவும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.ஆனால் இயல்பில் அதிகாரம் உள்ளவர்களின் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது.

கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி என்பது கட்டிடங்கள், தரவரிசைகள் அல்லது அங்கீகாரங்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் சுதந்திரம், பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவற்றினால்தான் உண்மையான கல்வித் தரம் உருவாகிறது.

எனவே, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த விரும்பினால், ஆசிரியர்களை கட்டுப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குவதை விட, அவர்களின் திறமையை வளர்க்கும், நியாயமான மதிப்பீட்டை உறுதி செய்யும், பாதுகாப்பான மற்றும் மரியாதையான பணிச்சூழலை உருவாக்குவதே முக்கியமாகும்.

பேராசிரியர்களின் #ஆளுமையும் கல்விச் சூழலின் #சவால்களும்

 

உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் தங்களது மதிப்பை நிர்வாகத்திடம் உயர்த்திக் காட்டுவதற்கான சிறந்த வழி, தங்களது கற்பித்தல் மற்றும் மாணவர் மேம்பாட்டு பணிகளில் சிறந்து விளங்குவதுதான். ஒரு ஆசிரியரின் உண்மையான பெருமை, அவரால் எத்தனை மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுகின்றனர், எத்தனை மாணவர்கள் ஒழுக்கமான மற்றும் மேம்பட்ட வாழ்க்கை நோக்கிச் செலுத்தப்படுகின்றனர் என்பதில்தான் இருக்க வேண்டும்.

ஆனால் சில கல்வி நிறுவனங்களில், கற்பித்தல் மற்றும் கல்விசார் பங்களிப்புகளை விட மேலிடத்தின் கவனத்தைப் பெறுவதற்கான தனிப்பட்ட முயற்சிகளே முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருப்பதற்காக சிலர் தேவையற்ற புகழ்ச்சிகளிலும், #தனிப்பட்ட உறவுகளை வளர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்துவற்காக பல பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் #பிராந்தி விருந்து வரை அமைத்துக் கொடுக்கின்றனர் என்பது கல்வி சூழலில் உள்ள ஒரு அவலமாகும். இத்தகைய பண்பாடு கல்வி நிறுவனங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது.

சில இடங்களில், நிர்வாகத்தை அணுகும் நோக்கில் #சக ஆசிரியர்கள் குறித்த வதந்திகள் மற்றும் தேவையற்ற தகவல்களை பரப்பும் போக்கும்
உள்ளன. குறிப்பாக ஆசிரியர்–மாணவர் உறவுகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உருவாக்குவது, கல்விச் சூழலை பாதிப்பதோடு, தனிநபர்களின் தொழில்முறை நற்பெயருக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது .

கற்பித்தல் பணியில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, அறிவு, திறன் மற்றும் மனிதநேய வளர்ச்சியை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் ஏராளமாக இருந்தாலும், கல்விப் பணிகளை விட நிர்வாக கவனத்தை ஈர்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடும் ஆசிரியர்கள் உண்டு. இதில் பெண் ஆசிரியர்கள் சிலர் செய்யும் ஈனச் செயல் சொல்லி மாளாது.

கல்லூரி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களைவிட மாணவர்களின் கூர்மையான கவனிப்புக்கும் விமர்சனங்களுக்கும் உட்படுகின்றனர். அவர்களின் நடத்தையும், வாழ்க்கை முறையும், பேச்சும், பழக்கவழக்கங்களும் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நல்ல முன்னுதாரணமாக இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்த முடியும்; அதேபோல் தவறான முன்மாதிரிகளும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

சில ஆசிரியர்கள் பணியிடத்தை தங்களது தனிப்பட்ட புகழ் மற்றும் தங்களை காட்சிப்படுத்தலுக்கான இடமாகக் கருதும் நிலையும் காணப்படுகிறது. அதே நேரத்தில், பெரும்பாலான ஆசிரியர்கள் குடும்பப் பொறுப்புகளையும் தொழில்முறை கடமைகளையும் சமநிலைப்படுத்தி அமைதியாகப் பணியாற்றியும் வருகின்றனர். சிலரின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முழு ஆசிரியர் சமூகத்தையும் மதிப்பிட முடியாது. ஆனால் முறையற்ற அடிப்படை அறமற்ற ஆசிரியர்கள் பெருகி வருவதை மறுக்க இயலாது.

கல்வி நிறுவனங்களில் மாணவர்களைப் பயன்படுத்தி சக ஆசிரியர்களை ஒடுக்க முயற்சிப்பது, குழு அரசியலை வளர்ப்பது அல்லது மாணவர்களுடன் தேவையற்ற நெருக்கங்களை உருவாக்கி தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு சக ஆசிரியருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் கல்வி நெறிமுறைகளுக்கு முரணானவை. மாணவர்கள் கல்விக் காலத்தில் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், பின்னர் தங்கள் ஆசிரியர்களின் ஆளுமை மற்றும் நடத்தை குறித்து தெளிவான மதிப்பீடுகளை வைத்து இருப்பார்கள் அதை வெளியில் இகழுச்சியக்க சொல்லவும் செய்வார்கள்.
.

எனவே, பேராசிரியர் என்ற நிலையில் அறிவாற்றலோடு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆளுமை, தொழில்முறை ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் முன்னுதாரணமான நடத்தை ஆகியவற்றையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு ஆசிரியரின் தாக்கம் வகுப்பறையைத் தாண்டி மாணவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது என்பதை கல்விச் சமூகமும் நிர்வாகங்களும் உணர வேண்டும்.

4 Jun 2026

கல்லூரிக் காலம்

இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் கல்லூரிகளும் திறக்கப்படும். கல்லூரி சேர்க்கை காலம் வந்துவிட்டால், பல நேரங்களில் மாணவர்களை விட பெற்றோர்களே அதிக உற்சாகத்துடனும் பெருமையுடனும் இருப்பதை காணலாம். ஆனால் இந்தக் காலகட்டத்தில் சில உண்மைகளை அமைதியாக புரிந்துகொள்வது அவசியம்.

தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியான அடிப்படையில் அமைந்துள்ளன. எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும், மாணவர்கள் கற்பது  ஒரே பாடம் தான். ஆனால் தாங்களாகவே படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். வகுப்பறை கற்றலுடன் சேர்த்து நூலகப் பயன்பாடு, தனிப்பட்ட வாசிப்பு, சுய முயற்சி ஆகியவையே உயர்கல்வியின் உண்மையான அடித்தளங்கள்.

இன்றைய தேர்வு முறைகளும் பழைய காலத்தைப் போல கடினமானவை அல்ல. வகுப்புகளில் பங்கேற்பு, ஆய்வகப் பணிகள், திட்ட அறிக்கைகள் (Project), ஒப்படைப்புகள் (Assignments) ஆகியவற்றை முறையாகச் செய்தால், கட்டிடனமும் முறையாக கட்டி தேர்வு எழுதி விட்டால் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிக்க முடியும். ஆனால் கல்லூரி வாழ்க்கையை வெறும் பொழுதுபோக்கு, நிகழ்ச்சிகள், அமைப்புகள், குழுக்கள் போன்றவற்றில் மட்டுமே செலவழித்துவிட்டால், அது வேலைவாய்ப்பிற்கோ வாழ்க்கை முன்னேற்றத்திற்கோ பெரிய பலன் தராது.

பட்டப்படிப்பு படிக்கும் காலத்திலேயே அரசு வேலைத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், தொழில்துறை திறன்கள் போன்றவற்றிற்கான தயாரிப்புகளைத் தொடங்குவது நல்லது. அடிப்படைப் பாட அறிவை புறக்கணித்துவிட்டு, பட்டப்படிப்பு முடிந்த பிறகு வேலைக்காக மட்டும் தயாராகத் தொடங்குவது பல நேரங்களில் சிரமத்தை ஏற்படுத்தும்.

கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பல்வேறு உடைகள், அழகுசாதனப் பொருட்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றைக் கோரலாம். ஆனால் பெற்றோர் முதன்மையாக ஒரு நல்ல @#கணினி அல்லது மடிக்கணினி வாங்கிக் கொடுப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். இன்றைய சூழலில் கணினி அறிவும் இணையவழி கற்றலும்  சேர்ந்து இல்லாமல் பட்டப்படிப்பை முழுமையாகப் பயன்படுத்துவது கடினம்.

மேலும், கல்லூரி வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே காதல், மனஅழுத்தம், போதைப்பொருள் பழக்கம் போன்றவற்றால் சில மாணவர்கள் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் செல்கின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் தொடர்ந்து உரையாடி, கல்வியின் முக்கியத்துவத்தையும் குடும்பப் பொறுப்புகளையும் உணர்த்த வேண்டும்.

முன்னொரு காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் வழங்கினர். இன்று பல காரணங்களால் மாணவர் ஆசிரியர் இடைவெளி கூடி உள்ளது.  மணாவர்கள் மேல் அக்கறை எடுப்பதும் பல ஆசிரியர்கள் வேலையை துறக்கவும் சிலர் போக்சோ வழக்குகளை வர சந்தித்து வருகின்றனர். எனவே குடும்பங்களின் பங்கு இன்னும் அதிகரித்துள்ளது. பெற்றவர்கள் பிள்ளைகள் மேலுள்ள அக்கறை வலுப்படுத்த வேண்டும். கல்லூரி வகுப்புக்கு செல்லாமல் ஊர் சுற்றுகிறார்கள் என அறிந்தால் ஒரு வருடம் வேலைக்கு விட்டு மறு வருடம் கல்லுரிக்கு சேர்த்து விட்டால் பொறுப்பாக படிப்பார்கள்.

மாணவர்கள்: கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள், நண்பர்கள், மாணவர் அமைப்புகள் ஆகியவற்றுடன் பழகும்போது சமநிலையுடன் இருக்க வேண்டும். எந்தத் தனிப்பட்ட பிரச்சினையிலும் உணர்ச்சி வசப்படாமல், தங்கள் கல்வி இலக்கை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரிகளில் மாணவர் ஆலோசனை மையங்கள் (Counselling Centres) அமைக்கப்பட்டிருக்கும். அவை மாணவர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டவை. இருப்பினும், மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்களை பகிரும் போது தேவையான விவேகத்தையும் எல்லைகளையும் கடைப்பிடிப்பது நல்லது.

குறிப்பாக பெற்றோர், தங்கள் மகன்களுக்கும் மகள்களுக்கும் கல்லூரி என்பது முதன்மையாக கல்வி கற்கும் இடம் என்பதை தொடர்ந்து நினைவூட்ட வேண்டும். சமூக வலைத்தளங்கள், reels  போன்றவை பயன்படுத்த  கட்டுபாடு இருக்க வேண்டும். பல பெண் பிள்ளைகள் reels மோகத்தில் பல தவறான வழியில் போவதை அவதானிக்கலாம்.

ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனி கல்விச் சூழலும் நிர்வாக அணுகுமுறையும் இருக்கும். சில கல்லூரிகள் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஒழுக்கத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் சில இடங்களில் மாணவர் வாழ்க்கையில் ஏற்படும் காதல், தனிப்பட்ட உறவுகள் மற்றும் பிற கவனச்சிதறல்களை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதோடு , நகைச்சுவையாகப் பேசுவதோ, அல்லது அவற்றை மறைமுகமாக ஊக்குவிப்பதோ போன்ற சூழல்கள் காணப்படலாம். பிரச்சினைகள் பெரிதாகும் வரை அவற்றை கண்டும் காணாதது போல இருந்து, பின்னர் பொறுப்பைத் தவிர்த்துக் கொள்வதும் நடக்கிறது. . அதன் விளைவுகளைச் சந்திப்பது பெரும்பாலும் மாணவர்களும் அவர்கள் பெற்றோர்கள் மட்டுமே. சில நேரங்களில் அது கல்வி இடைநிறுத்தம் அல்லது எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகிறது.

மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வது கல்வி கற்கவும், திறன்களை வளர்த்துக்கொள்ளவும், எதிர்கால வாழ்க்கைக்குத் தயாராகவும் தான் என்பதை மறக்கக் கூடாது. காதல் அல்லது தனிப்பட்ட உறவுகள் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்த விஷயம்; அதற்காக  கல்லூரிக்குச் செல்லவில்லை என்ற புரிதல் மாணவர்களிடம் இருக்க வேண்டும்.

மேலும், சில பெற்றோர்கள் அக்கறையால் "என் மகனை அல்லது மகளை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என்று ஆசிரியர்களிடம் அல்லது நிர்வாகத்திடம் மிகுந்த நெருக்கத்துடன் கூறுவார்கள். அன்பும் அக்கறையும் நல்லவைதான். ஆனால் அதே நேரத்தில், மாணவர்களின் தன்மானம், சுயமரியாதை மற்றும் தனிப்பட்ட எல்லைகள் பாதுகாக்கப்படுவதும் முக்கியம்.

கல்வி நிலையங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள். இருப்பினும், எந்தத் துறையிலும் இருப்பது போல சில விதிவிலக்கான நபர்கள் தங்களது பொறுப்பின் எல்லைகளை மீறி நடந்து கொள்ளக்கூடும். அத்தகைய சூழல்கள் மாணவர்களின் மனநிலையையும் கல்விப் பயணத்தையும் பாதிக்கக்கூடும். எனவே பெற்றோர்களும் மாணவர்களும் விழிப்புணர்வுடன் இருந்து, தேவையான இடங்களில் மரியாதையுடனும் விவேகத்துடனும் எல்லைகளைப் பேணுவது நல்லது.

கல்லூரி வாழ்க்கை என்பது சுதந்திரத்தையும்
பொறுப்பையும் சமநிலைப்படுத்திக் கற்றுக்கொள்ளும் பருவம்.
கல்லூரி வாழ்க்கை என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான காலம் அல்ல. அது ஒருவரின் சிந்தனை, திறன், பொறுப்பு உணர்வு மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கியமான பருவம். அந்த வாய்ப்பை மாணவர்களும் பெற்றோர்களும் சரியாகப் பயன்படுத்தினால், கல்வி உண்மையான முன்னேற்றத்திற்கான பாதையாக அமையும்.