4 Jan 2026

உலக பெண் தெய்வங்களுடன் யேசுவின் தாய் மரியாள்


உலகிலுள்ள அனைத்து பெண் தெய்வங்களும் கூடினர்.  இம்முறை அமெரிக்கரான போப் லியோ கருத்தின் மேல்  பெரும் விவாதம் ஆரம்பித்து இருந்தனர்.  யார் இந்த போப் எனக் கேட்டாள்  கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன  பெண் தெய்வமான ஹிமிகோ (Himiko).  


 உலகின் பெரிய மதமான கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான கத்தோலிக்கரின் தலைவர் என்றாள்,பேரரசியான ஜிங்கூ(Empress Jingū). 


அப்போ பல பிரிவுகள் இருக்கிறதா என வினவினாள்.   உலகின் மகா தாயும் பூமியின் கிரேக்க உருவகமாகவும் இருந்த கயா(Gaia) என்ற பெண் கடவுள்.


ஆம், ஆம்,,, அது பெரிய கதை. கிறிஸ்தவம் வளர்ந்தது  மரியாளின்   ஏழு கவலைகள் ஊடாகவும் தான் என்றாள்  திருமணத்தின்தாய்மைபிரசவத்தின் பாதுகாவலருமான   எகிப்தில் பெண் கடவுளான  ஐசிஸ் (Isis).

 மரியாவின் ஏழு துக்கங்கள்(Seven Sorrows of Mary) 

மகன் பிறப்பது அதுவும் கடவுள் மகனாக பிறப்பது பெருமை தானே . அதில்  என்ன ஏழு கவலைகள் இருக்கிறது என    மெக்சிக்கோவின்  பூமித்தாயாக இருப்பவளும் பாம்புகளைப் பட்டாடையாக அணிந்தவளுமான  கோட்லிகுவே (Coatlicue)  கேட்டாள்.

மரியாவின் ஏழு துக்கங்கள் (Seven Sorrows of Mary) பற்றி பேசுவதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.



  • சிமியோனின் தீர்க்கதரிசனம் வழியாக  தன் மகனுக்கு வரும்  துயரத்தை முன்னதாகவே அறிந்த(லூக்கா 2:25–35)மரியாள், தான் அத்தகைய சூழலில் ஒரு தாய் ஆகவே அச்சம் கொண்டாள்.  மகன் பிறக்கபோவதை, மகிழ்ச்சிக்கு பதிலாக பல அச்சங்களுடன் அணுக வேண்டி வந்த தாய்,  ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்ற நிலையில் ஏற்று கொள்வதை தவிற அவளுக்கு வழியேதும் இருக்கவில்லை. பிற்பாடு ஜோசப் அவளை  ஏற்றுக்கொண்டு கருணையாக நடத்தப்பட்டாலும் எத்தனை பழி பேச்சுக்கு உள்ளானாள் என நினைத்து பொறுமிய மரியாவின் கையை பற்றிக் கொண்டு ஆறுதல் பகிர்ந்து கொண்டு நின்றனர்  இந்திய பெண் தெய்வங்களான  துர்கா , சரஸ்வதி , லக்‌ஷ்மி. 
  • குழந்தை இயேசுவை ஹேரோதேஸிடம் இருந்து காப்பாற்ற  மரியாள் யோசேப்புடன் எகிப்துக்கு தஞ்சம் அடைந்ததை (மத்தேயு 2:13–15) நினைவுப்படுத்தினாள்  யூத மதத்தின் ஒரே கடவுளான யஹ்வே (Yahweh) வின் துணைவியான  அஷேரா (Asherah).   


  • தனது பதின்மவயது மகனை ஆலயத்தில் மூன்று நாட்கள்   இழந்து  துயருற்ற  (லூக்கா 2:41–50) அந்நாளை நினைத்து  துக்கத்தில்   விம்மின மரியாவை ஆறுதல்படுத்தினாள்   வானம் உடைந்தபோது அதை மீண்டும் சரிசெய்தவளாக சொல்லப்படும் சீனாவின் பெண் தெய்வமான நூவா (Nüwa) .  
  •  சிலுவையைச் சுமந்தபடி  வேதனையும் அவமானங்களாலும் நிறைந்தபடி தன் மகன் சென்றபோது மரியாள்  சந்தித்ததை(லூக்கா 23:27–31) நினைத்த போது  துக்கத்தை அடக்க இயலவில்லை. கவலையால் துவண்ட மரியாவை கரம் பற்றி அணைத்து ஆறுதல் சொல்லாள் சீனாவின் கருணையின் உருவமான  குவான்யின்(Guanyin). 

 

  • துயரிலும்  கொடும் துயரான  தன் மகன் சிலுவையில் துன்பப்பட்டு மரணமடைந்ததை காணும் துயரத்தை அனுபவித்தவள்(யோவான் 19:25–30)மரியாள் என்றாள்  சித்தார்த்த கௌதமர் புத்தமதத்தின் “அன்னை” யான பெண் புத்த பிக்குணி சமூகத்தின் நிறுவனர்  பிரஜாபதி கௌதமி. 

 

  • சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட தனது மகன் இயேசுவின் உடலை மரியாள் தன் கரங்களில் பெற்று தன் கரங்களில் தாங்கிக்கொண்டதை(லூக்கா 23:50–54)  நினைத்து கண் கலங்கிய போது மாதாவின் கைகளை பரிவுடன் பற்றி கொண்டாள் சக்தியின் உக்கரத்தில் தனது  எதிராளிகளிடம்  ஆயுதங்களை பாவிக்க தெரிந்த இந்தியாவின் வலிமையான பெண் தெய்வமான துர்க்கை.

 

  • எல்லா துக்கங்களுக்கும் அதி மூர்த்தமாக தன் மகனின் உடல் கல்லறையில் வைக்கப்பட்டதை மரியாள் மனம் துடித்தபடி கண்டாள். தனது மகன் சிலுவையில் அறைந்து படுகொலை செய்யப்பட்ட  அன்று மரியாள் உடைந்தே போயிருந்தார். தனது மகனை   மதவாதிகள் பல நாள் தேடிப் பிடித்து அரசிடம் கொடுத்து விட்டனர் என அறிந்தது முதல் அவள் உள்ளம் உறைந்து போயிருந்தது.  

யேசுவை அன்று மாலையே விசாரணை,  அடுத்த நாள் சிலுவையில் அறைய கொண்டு போயினர்.  மகன் உடன் இருந்த நண்பர்கள் எல்லோரும் ஓடிப்போயினர் என அறிந்து இருந்தாள். தன் மகன் இறந்த பின் மகனின் பெயரால் ஒரு இயக்கம் துவங்கிய அன்று தானும் சில பெண்களும் அங்கிருந்தோம். பின்பு ஒரு பணிக்கும் தங்களை அழைப்பது இல்லை. என்பதை மட்டுமல்ல  அப்படியே பெண்கள் அனைவரையும் ஓரம்கட்டி விட்டிருந்தனர்  என்பதையும்  நினைத்து பார்த்தாள்  மரியாள்

 

ஆனால் இன்றைய பரப்புரை : உலகை இரட்சிக்க மாதாவின் பங்கு இல்லையாம், மாதாவிடம்  இனி பிரார்த்திக்க வேண்டாமாம் வேண்டுமென்றால் மாதாவின் வழி காட்டுதலை மட்டும் நாடிக்கொள்ளலாமாம். மாதா வெறும் தாய்,  கடவுள் யேசுவின் தாய் மட்டும் தானாம். யேசுவின் தாய் என்பதால் யேசுவின் நண்பர்கள் சீடர்களின் தாயும் ஆகிறார்.

 


இதை யார் சொன்னது, ஆண்கள் தானே?   அவர்கள் அப்படி தான் சொல்வார்கள் என்றாள்    மெசப்பொட்டேமியா நாகரிகத்தின்(கிமு5- 3ஆம் நூற்றாண்டு) சுமேர் மக்களின்   சமூக நீதி மற்றும் தீர்க்கதரிசனத்தின் தெய்வமான    நன்ஷே (Nanshe).

 

பல நூற்றாண்டுகளாக ஆண் குருமார்கள், ஆசான்கள் சொல்லி வந்த கதைகளை கேட்டு வந்த பெண்கள்  எப்படி பொறுமையாக இருக்கின்றனர். என கொந்தளித்துக் கொண்டு இருந்தனர் பெண் தெய்வங்கள்.  பெண்கள் எப்படி சிந்திக்க வேண்டும், எப்படிச்  மனதைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பது யாரோ ஒரு ஆணாக இருப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.  ஆயிரக்கணக்கான தத்துவ நூல்கள், சொற்கள், மொழி, அனைத்தும்  ஆண்களிடம் மனத்திலிருந்து இருந்து வந்தவை அதனால் மறுபேச்சு கூடாது என்று  பெண்கள் வாய்க்கு பூட்டு போட்டு விடுகின்றனர். 

 

இதை கேட்டுக் கொண்டு இருந்தமேற்கு ஆப்பிரிக்கா யொரூபா மதத்தின்  ஒரே பெண் தெய்வமான  ஓஷூனே;  அறிவின் மூலவும் வழிகாட்டிகளாகவும் தனித்த இடம் பிடித்துள்ள நாம் எங்கு  நிற்கிறோம் என்று பாருங்கள் என்று ஆக்கோரஷமாக கூறினாள்!; 


இந்தக் குழப்பத்தின் மத்தியில் தொடர்ந்து அலைந்துஇச்சிதைவில் ஏதாவது புதிதாகப் பெற முடியும் என்று நினைக்கிறீர்களா என்று இந்தியாவில் இருந்து வந்த அறிவின் உருவகம் ஆன சரஸ்வதி தேவியர் ஒரு எதிர் கேள்வி கேட்டாள்  

 

நாம் தேவிகள் நீண்ட காலமாகக் காத்திருக்கிறோம்.  நாம் தான் எல்லா கடவுள் உருவாகும்  நேரத்திற்கு முன்னரே இங்கே இருந்தோம் என்றாள். கடலின் தெய்வமான  மாசு(Mazu).   

 

பண்டைய மரபுகளில் படி உண்மையின் மூலம் அல்லது ஆரம்பம்   அது நடனம்.  தேவி தான் நடனம், நடனமே தேவி  என்றாள் தாமரையில் வீற்று இருக்கும் லக்‌ஷ்மி. 

பெண்கள் இன்று அனுபவிக்கும் புறக்கணிப்பு, சுரண்டல், புறம்தள்ளப்படுதல் என்ற இந்த இருளான இடமே நமது தொடக்கம்.  ஏனெனில் இருள் என்பது தேவிகளின்  உறவிடம் என எண்ணுகின்றனர்ஆனால்  நாம் ஆழங்களில் வாழ்கிறோம், அறியப்படாது  வாழ்கிறோம் என்றாள்ஆதிகால குழப்பத்தின் பெண் தெய்வம் ஆன நின்காசி (Ninkasi) . 

இந்த இருளில் இருந்து நம்மை விடுவித்து நாம் நடனமாடலாம் என்றாள் ஆப்பிரிக்க தேவிகளில் ஒருத்தி ஓஷூன் (Oshun) ........நாம் ஏன் அந்த இருளில் தேவியாக மாறக்கூடாது?  ஏன் அந்த தெய்வீகத்தைக் கைப்பற்றக்கூடாது என்றாள் . 

அது ஒரு உணர்ச்சியான அனுபவம், ஒரு தத்துவம் அல்லஒரு கருத்து அல்ல, அது உடலின் உணர்வுதெய்வீக இருப்பு, தேவிகள்  உடலின் உணர்வாகவே இருக்கிறார்கள். என்றாள். கொரியாவின்    கருணையின் தேவியாக குவான்-ஈஉம் (Gwan-eum)

இடைவிடாத தேடலின் அடையாளமாக ஒரு தீப்பந்தத்துடன் காணப்படும் டெமீட்டர் ; பெண்களின்  தெய்வீகத்தைக் கைப்பற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.  தெய்வத்தின் மூலத்தைதெய்வீக பிறப்பின் பெண் தன்மையையும் மீண்டும் அறிய வேண்டிய நேரம். அதனால் நான் உனக்கு சொல்வது எந்த கதவையும் தட்டாமல், நாம் தெய்வமாகவும், புனிதமாகவும், சுதந்திரமாகவும், சக்தியுடையவராகவும் மாறுவோம் என்றாள்.  

எமது பலனை அனுவவித்து விட்டு எம்  சமுதாயத்தால் தள்ளப்பட்ட ஒருவளாக நான் இங்கு நிற்கிறேன் என்றாள் யேசுவின் தாய் மரியா... ஆனால் இதனிடையில் மரியாவின் நினைவு 16 ஆம் நூற்றாண்டு  மிஷனறிகள் காலம் நோக்கி நகர்ந்தது.  

மரியாவை தெய்வீக பெண்ணுருவாக  உருவாக்கின  மிஷனரிகள்: 

தென்னிந்திய பண்பாட்டு சூழலில் தெய்வமாக காணப்படும் தாய் மரியாள்

ரோமன் கத்தோலிக்க மதத்தில் தாய் மரியாளை தெய்வமாகக் கருதுவது பேகன் மதங்களில் (pagan origin) இருந்து வந்த  கருத்தாக்கமாக பார்க்கப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பேகன் வழிபாட்டு கூறுகளை நேரடியாக ஏற்காத கொள்கைகளும் விதிகளும் இருந்தன. இருப்பினும்கிறித்துவம் உலகெங்கும் பரவியபோது, பல்வேறு சமூக, பண்பாட்டு கருத்தியல்  திருச்சபையின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்தன. அதற்கேற்ப  வெவ்வேறு காலங்களில் புதிய பண்பாடுகளுடன் ஒன்றிணைவதற்காக மிஷனரிகள் பல்வேறு முறைகள் பின்பற்றினர்.

 

தாய் மரியாள் யேசுவின் தாய் என ம்ட்டுமே கிறித்தவத்தின் பெரும்பாலான பிரிவுகளிலும் அறியப்படுகிறார். ஆனால் Eastern, Oriental Orthodox, Anglican, Lutheran, மற்றும் Roman Catholic திருச்சபைகள் மட்டுமே அவளை “தெய்வத்தின் தாய்” (Theotokos) என அங்கீகரித்திருந்தன. பைபிளிள் தாய் மரியாளைப் பற்றிச் சிறிதளவே குறிப்பிடினாலும்உலகம் முழுவதும் மக்கள் அவளை யேசுவின் தாயாக நேசத்துடன்பக்தியுடன் வணங்குகிறார்கள். குறிப்பாக கத்தோலிக்கர்கள் அவளை அசல் பாவமின்றி பிறந்த ஒரே பெண் என்றும்யேசுவின் பிறப்பிற்குப் பிறகும் கன்னியாகவே இருந்தார் என்றும் நம்புகிறார்கள். தெய்வத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான மத்தியஸ்தராக அவளின் பங்கு மரியாளை அனைத்து பரிசுத்தர்களையும் மீறிய இடத்தில் நிறுத்தியது. இருப்பினும் கிறித்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே அவளுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டிருந்தாலும், அது தெய்வத்தோடு சமமான நிலை அல்ல.

 ஆண்மையை பிரதிபலிகும் கிறித்துவம்

 தெய்வத்தை ஆண் வடிவில் காட்சிப்படுத்துகிற மதம் தான் கிறித்துவம்.கிறிஸ்தவம் தெய்வத்திற்குப் கொடுக்கப்பட்டுள்ள பண்புகள் ஆண்மையை பிரதிபலிக்கின்றன. திரித்துவம் (Father, Son, Holy Spirit) என்ற மறைபொருள் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.  

 

அந்த தந்தை தான் தனது மகளைக் அல்லமகனை உலகிற்குக் கொடுக்கிறார்அந்த மகன் மனிதனாகப் பிறக்கும் போது ஆணாகவே பிறக்கிறார், ஆணாக பிறந்தவனை கடவுள் என அழைக்கின்றனர்.

இதனால், தாய் மரியாள் கிறித்துவத்தில் பெண் தெய்வமாகக் கருதப்படவில்லை,  ஆனால் மதத்தையும் பல தெய்வ வழிபாட்டை கொண்ட இந்துக்களின் இந்தியா போன்ற இடங்களில், மரியாளின் பெண் தெய்வத்தின் உருவம் கிறிஸ்தவம் வேகமாக பரவிய வரலாறுடனும் இணைந்துள்ளது.


இந்தியாவில் கிறித்தவமும் மரியாள் வழிபாடும்

இந்தியாவில்   கிறித்தவ மக்களில் பெரும்பான்மையினரும் ரோமன் கத்தோலிக்கர்களே. இவர்கள் மூன்று பிரிவுகளாக  Syro-Malabar, Syro-Malankara, மற்றும் Latin (Roman Catholic) எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40% கத்தோலிக்கர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வசித்து வருகின்றனர்.

போர்த்துகீசிய மிஷனரிகள் இந்தியாவிற்கு வந்தபோது, அவர்கள் பெரும்பாலும் கடற்கரையோர மக்களை மதமாற்றம் செய்தனர். அவர்களின் பழைய மத வழிபாடுகளை முழுவதும் அழிக்க முடியாது என்பதை உணர்ந்து, அவர்கள் வழிபாடுகளை புதிய கிறித்தவத்தின் கூறுகளாக இணைத்தனர்.  மிஷனரிகள்,  மக்களின் வழிபாட்டு மரபுகளை மாற்றாமல், அவற்றின் வழியே தாய் மரியாளை உள்ளூர் மத உளவியலுடன் இணைத்தனர்.

வேளாங்கண்ணி: புராணமும் பண்பாட்டும் இணைந்த தெய்வம்

வேளாங்கண்ணி” என்ற சொல் தமிழில் “வெள்ளை கன்னி” (White Virgin) என்று பொருள். இங்கு போர்த்துகீசிய மிஷனரிகள் “ஆரோக்கிய மாதா” (Healing Mary) என்ற பெயரில் ஆலயத்தை அமைத்தனர்.

வரலாறு கூறுவதாவது, கடலில் புயலால் சிக்கிய மிஷனரிகள் தாய் மரியாளின் உதவியை வேண்டினர்; அதிசயமாக அவர்கள் கரையோரம் உயிருடன் சேர்ந்தனர். நன்றிக்காக அவர்கள் சிறிய ஆலயம் கட்டினர். இத்தகைய கதை வடிவங்கள், தாய் மரியாளை உள்ளூர் தெய்வங்களோடு இணைக்க மிஷனரிகள் எடுத்த பண்பாட்டுத் தந்திரம் அல்லது மதத்தை பரப்பும் வழி முறையாகும்.

இந்து மதத்தில் “சுயம்பு தெய்வம்” என்ற கருத்து போலவே, மரியாள் வெளிப்பட்டதாகக் கூறும் கதைகள் உருவாக்கப்பட்டன. பால், தண்ணீர், தாய் மற்றும் குழந்தை போன்ற சின்னங்கள் இந்து தெய்வக் கதைகளோடு ஒற்றுமை பெற்றன. இதனால் வெள்ளை / தூய்மை என்ற எதிர்மறை சின்னங்கள் (white/red, pure/impure) மூலம் மரியாளின் உயர்வை நிறுவினர்.

மரியம்மனும் மரியாளும்: தெய்வத்தின் ஒருமை

மாரியம்மன் மற்றும் மரியாள் ஆகிய இருவருக்குமான ஒற்றுமை இயல்பானது அல்ல; அது பண்பாட்டு  தெய்வத்தை ஒரு வெள்ளை, கருணையுள்ள உலகமாதா உருவாக மாற்றும் திட்டமிட்ட முயற்சி ஆகும்மரியாள் நோய்களை குணமாக்கும் தாயாகமாரியம்மன் கோபமடைந்தால் நோய் கொடுக்கும் தெய்வமாகஇதன் மூலம் கிறித்தவ மதத்தின் கருத்தியல் ஆதிக்கம் வெளிப்படுத்தியது.


மிஷனரிகளின் திருவிழாக்களும் பண்பாட்டுச் சேர்க்கையும்

போர்த்துகீசிய மிஷனரிகள் இந்துமதத் திருவிழாக்களின் வடிவை கடைபிடித்தனர். வேளாங்கண்ணி போன்ற இடங்களில் அவர்கள் “தேர்திருவிழா” (Car Festival / Tēr Bavaṉi) நடத்தியனர். இது இந்துக் கோயில்களின் தேரோட்டங்களின் மாதிரி அமைந்தது. இந்த முறையில்பக்தியும் வழிபாட்டு தூய்மையும் கொண்ட இந்திய மதப் பின்னணியில், கிறித்தவம் இயல்பாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் பரவியது.

 

தென்னிந்தியாவில்  சக்தியாக மரியாள் 

மரியாளை சக்தியாக (Śakti) காணும் வழிபாடுதீய ஆவிகளைத் துரத்தும் சடங்குகள் ஆகியவைகத்தோலிக்க மரபில் தடைசெய்யப்பட்டிருந்தாலும்இன்று கூட தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி மாதா மற்றும் கடலோர கோயில்களில் பகுதிகளில் காணப்படுகிறது. கயிறு விற்பது சுர்ருபங்கள், புனித எண்ணை தண்ணீர் என்ற பெயரில் வியாபரமும் பக்தியும் கலந்து செயல்படுகிறது. 

ஒன்றிணைவும் பண்பாட்டு சகித்தன்மையும்

இரண்டாம் வத்திக்கான் பேரவை (Second Vatican Council) பேசுவதற்கு முன்பேதென்னிந்தியாவின் சமூக-அரசியல் சூழல், மதங்களின் இணைநிலை வாழ்வை ஏற்றுக்கொள்வதைத் தொடங்கியது.

முதலில் திருச்சபை வெளிநாட்டு வழிபாடுகளை நிராகரித்திருந்தாலும்,  பின்னர் உள்நாட்டு “மரபை” (inculturation), “உட்கொள்ளுவது” (accommodation) ஆகிய கருத்துகளை ஏற்றுக்கொண்டது.  இதனால்தாய் மரியாள் “தெய்வமாகவும்”குடும்ப தெய்வமாகவும்தனிப்பட்ட நம்பிக்கைகளில் இணைந்து வாழ்கிறதை காணலாம். 

தற்போதைய போப்பின் அழுத்தமான யேசுவின் தாயை பற்றிய கருத்தாக்கம்  

  1. கடவுளின் கட்டளையை  அனுசரித்த மிகவும் அனுசரணையுள்ள ஒரு பெண்மையாக
  2. கடவுளின் கட்டளைக்கு கேள்வி கேட்காத அடிமையாக மட்டுமே பிரதினித்துவப் படுத்துகின்றனர்  
கடவுளின் தாயாக பார்த்த இடத்தில் இருந்து யேசுவின் வெறும் தாயாக யேசுவின் தாய் என்பதால் யேசுவை நம்புகிறவர்களின் தாயாக மட்டுமே பார்க்க பரிந்துரைக்கின்றனர்.  அதீத சக்தியின் உருவகமான பெண் தெய்வத்தை வெறும் தாய் என்று தரம் தாழ்த்துவது  கிறிஸ்தவ ஆண்கள் மன நிலையில் என்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதையே நான் உற்று பார்க்கிறேன்.

சட்டம், ஒழுங்கு, நீதி ஆகியவற்றின் குறியீட்டு  தெய்வமான தெமிஸ் (Themis) கையில்  வாளையும் “உண்மையின் இறகையும்” (Feather of Truth) சூடினவள் எல்லாம் கவனித்துக் கொண்டு நின்றிருந்தாள். 

26 Dec 2025

நாடார் வரலாறு, கிறிஸ்துவம் மற்றும் திராவிட சொற்பொழிவு பற்றிய சூழல் பிரதிபலிப்பு!

 

திராவிட அரசியல் நாடார்களுக்கு எதிராக இருப்பது போன்று தான் இன்றைய கிறிஸ்தவ சபைகள் நாடார் சபையா என திராவிட கொள்கை பரப்பு எழுத்தாணிகளை வைத்து எழுதி வரும் கட்டுரைகள் மற்றும் நேர்முகங்கள்.

நாடார்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றிய ஆள் கால்டுவெல்.
திருநெல்வேலியை சரியாக உச்சரிக்க தெரியாத கால்டுவெல் திருநெல்வேலி சாணார்கள் என புனைவு எழுதிய மதப்பரப்பாளர்; நெல்லை சைவ பிள்ளைமார் திருநெல்வேலி பாளையத்தார் திருநெல்வேலி மன்னின் குடிகள் இன்னும் பல இனங்கள் பற்றி ஒரு கதையும் எழுதி இருக்கவில்லை எதனால்.
நெல்லையின் அடையாளம் ஆன கோயில்கள் இங்குள்ள நதி நிலைகள் இயற்கை வளங்கள் பற்றி எழுதி இருக்காது சாணார் பற்றி விளாவரியாக ஆராய எழுத காரணம்.என்ன ? மதம்பரப்பும் அன்னிய மதபரப்பாளனுக்கு நாடார்கள் மேல் இத்தனை அக்கறையா என்றும் சிந்திக்க வேண்டி உள்ளது.
வெள்ளைக்காரர்களுக்கு மெருக்கி வேலை வைக்க தகுந்த உடல் உழைப்பு மட்டுமல்ல அறிவு சார்ந்த வேலை செய்ய நல்ல நுணுக்கவும் நாடார்களில் இருந்தது என கண்டு கொண்டனர். கொடுத்த வேலையை முடிக்க ஊர் ஊராக பயணிக்க கூடியவர்கள் என்றும் தெரிந்து வைத்து இருந்தனர். இல்லா விடில் கன்யாகுமரியில் இருந்த நாடார் இனத்தவரை வெள்ளைகாரனால் இடுக்கி போன்ற வனப்பகுதிக்கு கொண்டு வந்து வேலை வாங்கி இருக்க இயலாது.
நாடார் இனம் திடீர் என திரும்ப தாக்க மாட்டார்கள் நாயை போன்ற அதீத நன்றி உள்ள ஜீவிகள் என்பதால் இவர்கள் மதத்திலும் இவர்கள் ஈஸ்டு இந்தியா கம்பனியிலும் அதிகாரி இடங்களை நாடார்கள் கையடக்க அனுமதித்து இருந்தனர்.
இன்னும் சொல்ல போனால் நாய்க்கர் காலம் பாளையத்தார்களால் வியாபாரி நாடார்கள் பல துன்பங்கள் சகித்து வரும் சூழல் இருந்தது. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் வியாபாரத்தில் பிரிட்டிஷாருடைய உதவியுடன் அவர்களால் முன்னுக்கு வர இயன்றது. பொறையார் நாடார்கள் போன்றவர்கள் இதற்கு உதாரணம். சமூுக செயல்பாட்டாளர்களாக பல நாடார்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக ஏழ்மையில் இருந்து மதம் மாறினாலும் அங்கும் கல்வி பெற்று ஆசிரியர்கள் போதகர்கள் என தங்கள்.இடத்தை நிலை நிறுத்தி கொண்டனர்.
நாடார்கள் தலைமையில் சபையில்.ஒரு நெறி இருந்தது. அதை மர்காஸிஸ் ஐயர் போன்றோர் பெரிதும் மதித்தனர். யூத இனத்தை சேர்ந்த மார்காஸீஸ் ஐயரால் நாடார்களை செம்மையாக வழி நடத்தி கல்வியில் விளையாட்டில் தமிழகத்திலே முதன்மை இடத்திற்கு அச்சிறிய கிராமத்தை கொண்டு வர இயன்றது.
கால்டுவெல் என்ற இன மேட்டிமை வெறியனால் நாடார்களை சகித்து கொள்ள இயலவில்லை. சட்டம்பிள்ளை நாடாருக்கும் இன்னொரு இன ஆசிரியருக்கும் சண்டை மூட்டி விட்டார். சட்டாம் பிள்ளை இங்கிலாந்து வரை சென்று கால்டுவெல்லை மன்னிப்பு கேட்க வைத்தார் என்பது மட்டுமல்ல சாகும் வரை கால்டுவெல் இடையன்குடி வரை அனுமதிக்கவும் இல்லை. பிற்பாடு சட்டாம்பிள்ளை நாடார், ஐரோப்பிய மிஷனரிகள் சபைகளுக்கு ஈடாக இந்திய கிறிஸ்தவ சபையை நிறுவி கால்டுவெல்லுக்கு பாடம் புகுத்தினார் .
முதலில் மதம் மாறினவர்கள் பெறுவாரி நாடார்கள் என்பதால் அவர்களுடைய ஆதிக்கம்.அதிகாரம் சபைக்குள் இருந்தது உண்மை தான் . அதுவரை சபைகளில் ஒரு ஒழுக்கமும் இருந்தது . ஆங்கிலேயர்கள் இந்திய சபைகளை இந்தியர்களிடம் கொடுத்து விட்டு சென்றது முதல் ஜாதி கிறிஸ்தவத்தை வளர்க்க ஆரம்பித்தனர்.
தற்போது பெருவாரி நாடார்கள் , கிறிஸ்தவ சபைகளில் வேலை செய்வதை விரும்புவது இல்லை. இயல்பாகவே சபை தலைமை வேற்று ஜாதி கிறிஸ்தவர்கள் கைகளில் போய் விட்டது. கத்தோலிக்கத்திலும் தங்கள் பிள்ளைகளை சாமியார் கன்யாஸ்திரி ஆகுவதை தற்போது நாடார் குடும்பபங்கள் பெருமையாக கருதுவது இல்லை.
இப்போது சபைகளில் நாடார்களுக்கு எதிரான ஒரு அலை உருவாகி உள்ளது. பாதிரிகளை கைக்குள் போட தெரியாத விரும்பாத நாடார்களால் கிறிஸ்தவ நிறுவனங்களில் வேலையை கூட தக்க வைக்க இயல்வது இல்லை.
ஒரு சில நாடார்கள் மதம் மாறினது கூட வரலாற்று பிழை என்ற நிலைக்கு வந்து விட்டனர்.
இன்னிலையில் கால்டுவெல் வாரிசுகளான திராவிட கொள்கை எழுத்தாளர்கள் நாடார் கிறிஸ்தவர்களை கேலி செய்வது போல கிறிஸ்து நாடார் என்று என்ன எழுதினாலும் உழைக்கும் நாடார்கள் கண்டு கொள்ள போவது இல்லை. நாடார்கள் குணத்தை அவதானித்தால் அவன் தொழிலில் தான் கண் கொண்டு இருப்பான். அவனுக்கு அவன் தொழிலுக்கு பின்னுக்கு தான் குடும்பம் உறவு கோயில் சபை இன்ன பிற என்பன கூட.
அதனால் திராவிட எழுத்தாணிகள் எழுத்தை பேச்சை கேட்கும் இடத்தை விட்டு நாடார்கள் நகந்து சென்று விட்டனர். .
யேசு இவர்கள் சொல்வது மாதிரி நாடானுமல்ல, ஆசாரியுமல்ல, மீனவனுமல்ல, கோனாறுமல்ல அவர் யூதர். தன் இன மக்கள்.மீட்புக்காக பிறந்தார் வாழ்ந்தார் ..
சேவியர் பெயரைய வைத்து கொண்டு கால்டுவெல் வளர்ப்பு பிள்ளைகளாக கிறிஸ்தவ ஜாதி வளர்க்கும் ஆட்களை ஏசுக்கு தெரியவும் வாய்ப்பு இல்லை.
நாடார்கள் கிறிஸ்தவத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக கருதினால், அதை மாடலாக எடுத்துக் கொண்டு இந்த திராவிட எழுத்தாளர்கள் கூறும் ஏனைய மக்களும் அதில் பங்குபெற முன்வர வேண்டும் அல்லது அதற்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய வெற்று நக்கலும் திராவிட நையாண்டியும் யாருக்கும் எந்த பலனையும் தராது, வேண்டுமானால் நாடார்கள் மீது இந்த கூலி எழுத்தாளர்கள் கொண்ட வன்மத்தை தீர்த்துக் கொள்ளலாம், அவ்வளவு தான்.
உடனே தினகரன் மோகன் சி லாசரஸ் என கேள்வி கேட்டால் அவர்கள் சபை அல்ல, தனி மத வியாபாரிகள். அவர்கள் முன்னேற்றத்தை நாடார் முன்னேற்றம் எனக்கு கூற இயலாது.


A #Contextual Reflection on #Nadar History, Christianity, and #Dravidian Discourse
Historically, Dravidian political thought has often been perceived by sections of the Nadar community as oppositional to their social and economic trajectory.
In a comparable manner, certain contemporary Christian institutional narratives and Dravidian-ideology oriented writers have portrayed Christianity in Tamil Nadu as though it were disproportionately associated with the Nadar community, often framing this association through ideological critique.
Robert Caldwell played a significant role in the early phases of Christian missionary activity among the Nadars. His writings frequently focused on the community, referring to them as “Tirunelveli Shanars.” Notably, his missionary scholarship did not extend with equal attention to the broader cultural identity of Tirunelveli its temples, rivers, ecology, or historical social formations such as Saiva Pillaimars, Palayakkarars, royal lineages, or marginalized communities. This selective focus raises legitimate questions about the motivations and frameworks that guided colonial missionary documentation.
During the British colonial period, Nadars were recognized for both physical labour capacity and organizational aptitude. Their mobility and adaptability made them suitable for various forms of work that required travel across regions. This facilitated their relocation from areas such as Kanyakumari into forested and plantation zones, where colonial labour demands were high.
Prior to British rule, particularly under Nayak and Palayakkarar administrations, Nadar merchant communities experienced sustained social and economic marginalization. Under colonial conditions, however, certain Nadars were able to advance in trade and commerce, often with indirect or direct British support. The rise of trading families such as the Porayar Nadars illustrates this shift. Additionally, conversion to Christianity sometimes driven by economic hardship also opened pathways to education, enabling many Nadars to emerge as teachers, pastors, and social reformers.
Churches under early Nadar leadership were marked by internal discipline and institutional order. Figures such as Missionary Margoschis Iyer played a formative role in shaping educational and sporting excellence within Nadar dominated Christian settlements, elevating small villages to prominence at the state level.
At the same time, tensions existed between European missionaries and emerging indigenous leadership. Conflicts involving Caldwell and leaders such as Sattampillai Nadar reflect deeper disagreements over authority, race, and institutional control. Sattampillai Nadar’s later initiatives to establish Indian led Christian institutions represented a significant assertion of indigenous ecclesiastical autonomy.
It is historically accurate that since early converts were predominantly Nadars, church leadership initially reflected that demographic reality. However, after the departure of British missionaries and the transfer of church administration to Indian leadership, caste based dynamics increasingly shaped Christian institutions, mirroring broader social hierarchies.
In contemporary contexts, many Nadars show limited interest in careers within church institutions. Leadership roles have correspondingly shifted toward other dominant caste groups. Even within Catholic traditions, priesthood and religious life are no longer widely regarded as aspirational paths among Nadar families.
Perceptions of an emerging anti-Nadar sentiment within church administration have also been articulated, particularly regarding employment and institutional inclusion. As a result, some Nadars have begun reassessing their historical relationship with Christianity itself.
In parallel, certain Dravidian-ideology writers continue to deploy satire or critique such as labeling Christianity as “Nadar-centric”which appears to have limited impact on the community. Socio-culturally, Nadars have traditionally prioritized economic activity and occupational mobility, placing religious and ideological debates in a secondary position. This may explain their gradual disengagement from spaces dominated by such discourse.
From a theological perspective, Jesus of Nazareth belonged to the Jewish tradition, and his life and mission were rooted in that historical context. Attempts to reinterpret him through contemporary caste or regional identities risk oversimplification and ideological projection.
If concerns exist regarding disproportionate representation within Christian institutions, constructive engagement and broader participation across communities would offer more meaningful solutions than rhetorical mockery. Satire and polemics may express frustration but contribute little to institutional reform.
Finally, individuals such as Dinakaran or Mohan C. Lazarus represent independent religious enterprises rather than ecclesiastical institutions. Their personal success should not be conflated with the collective social or economic progress of the Nadar community.

22 Dec 2025

கிறிஸ்தவத்தின் உலகளாவிய விரிவு – இந்தியச் சூழல் - பர்த்தலோமியோ ஜீகென்பால்க்


ரோமப் பேரரசின் ஒவ்வொரு மாகாணத்திலும் கிறிஸ்தவம் ஊடுருவி வேரூன்றியிருந்தது. பேரரசின் பரந்த எல்லைகளைத் தாண்டியும் அதன் தாக்கம் விரிந்தது. நாகரிகம் பெற்ற நாடுகளின் சமூகப் பண்புகளை மேம்படுத்தவும், கடுமையான பழங்குடி மக்களை நாகரிகப்படுத்தவும் அது முயன்றது. இவ்வுலகின் தற்காலிக நலன்களை மட்டும் சார்ந்தவை அல்லாத, அதைவிட அளவற்ற மதிப்புமிக்க ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அது மனிதகுலத்துக்குத் தந்ததாகக் எண்ணிக்கொண்டது.

ஆயினும், பத்தாம் நூற்றாண்டு வரையிலும் ஐரோப்பாவின் கிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கிறிஸ்தவம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மேலாதிக்கத்தைப் பெறத் தொடங்கியது. 


இதற்கிடையில், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் துருக்கியர் மற்றும் டார்டர்கள் மேற்கொண்ட வெற்றியாத்திரைகள், அந்தப் பகுதிகளில் நற்செய்தி பரவுவதற்கு வலுவான தடையாக அமைந்தன. மேலும், நடுக்காலத்தின் அறிவு இருளும் ஆன்மீக மந்தநிலையும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் உலகளாவிய முயற்சிகளை முடக்கின.


ராபர்ட் டி நோபிலியும் விமர்சனங்களும்
புராட்டஸ்டன்ட் மிஷன்களின் தொடக்கம்

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசியர்கள் மேற்கொண்ட கடல் வழிக் கண்டுபிடிப்புகள், ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய உலகைத் திறந்து காட்டின. இதன் விளைவாக, கிறிஸ்தவ அறிவைப் பரப்புவதில் உறங்கிக் கிடந்த அவர்களின் ஆற்றல் மீண்டும் எழுச்சி பெற்றது. ரோமின் அதிகாரத்தாலும் மதவெறியாலும் தூண்டப்பட்ட ஸ்பானியரும் போர்த்துகீசியரும், ஆப்பிரிக்கக் கடற்கரை, அமெரிக்கா மற்றும் அதன் தீவுகள், ஆசியாவின் தீவுகள் மற்றும் கடல்சார் மாகாணங்கள் எனப் பல பகுதிகளில் தங்கள் அதிகாரத்தையும் மதத்தையும் நிலைநிறுத்தத் தொடங்கினர்.

ஐரோப்பாவில் சீர்திருத்த இயக்கம் வளர்ச்சி பெற்றதன் காரணமாக, ரோமப் போப்பாண்டவரின் ஆன்மீக ஆதிக்கம் சிதையத் தொடங்கியது. இதனால், உலகின் தொலைதூரப் பகுதிகளில் தங்கள் மதத்தைப் பரப்புவதில் ரோமச் சபையின் ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. இந்த நோக்கத்திற்குத் துணையாக, 1540 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜெசூயிட் சபை, திட்டமிட்டும் தீவிரமுமான முயற்சிகளின் மூலம் புறமத நாடுகளில் ரோமிஷ் திருச்சபையின் எல்லைகளை விரிவுபடுத்த முனைந்தது.

இந்த முயற்சிகளில் போர்த்துகீசிய மதகுருமார்களும் ரோமிஷ் திருச்சபையின் மிஷனரிகளும் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களிடையே மிகவும் புகழ்பெற்றவராக விளங்கியவர் பிரான்சிஸ் சேவியர். போர்த்துகீசிய அரசின் நேரடி செல்வாக்கின் கீழ், கோவா, கிராங்கனூர் (இன்றைய கொடுங்கல்லூர்), மலபார் கடற்கரைத் துறைமுகங்கள் போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் பூர்வீக மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தில் இணைக்கப்பட்டனர். மேலும், மதுரை, மைசூர், மராவா, இலங்கை, கோரமண்டல் கடற்கரை மற்றும் கர்நாடகக் கரையோரப் பகுதிகளில் ஜெசூயிட் மிஷனரிகளின் பணிகள் விரிவடைந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், ரோமிஷ் மிஷனரிகள் கூறிய இந்து மதமாற்றங்களின் எண்ணிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்வது சாத்தியமல்ல. அவர்கள் பயன்படுத்திய கிறிஸ்தவத்திற்குத் தகாத முறைகளும், பெரும்பாலும் வெளிப்புறமானதும் பெயரளவிலானதுமான மதமாற்றங்களிலேயே அவர்கள் திருப்தியடைந்ததும், அவர்களது முயற்சிகளின் உண்மையான மதிப்பை பெரிதும் குறைத்துவிடுகிறது.

பதினாறாம் நூற்றாண்டில் மதுரையில் பணியாற்றிய ஜெஸ்யுட் கல்லூரியின் தலைவர் ராபர்ட் டி நோபிலி, சேவியரின் முக்கிய अनुயாயர்களில் ஒருவராவார். அவர் பிராமணர்களின் உடை, பழக்கம், சமூக நடத்தை ஆகியவற்றைத் தழுவி கிறிஸ்தவத்தை முன்வைத்தது, உண்மையான கிறிஸ்தவத்தின் எளிமையையும் உண்மையையும் சமரசம் செய்த முயற்சியாகக் கருதப்படுகிறது. இந்துக்களை ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அணுகுமுறை, அறிவார்ந்ததாகத் தோன்றினாலும், உள்ளார்ந்த முரண்பாடுகளால் நிரம்பியதாக இருந்தது.

அதே தவறான கொள்கையின் அடிப்படையில், அவர் சமஸ்கிருதத்தில் ஒரு நூலை இயற்றினார். அதில் கிறிஸ்தவர்–இந்துவர் உரையாடலாக அமைந்த வாதங்களில், வெளிப்படையாக கிறிஸ்தவமே மேலாதிக்கம் பெறுவது போல இருந்தாலும், அந்த இந்து பாத்திரம் தூய ஒரே இறைநம்பிக்கையை வலுவாக ஆதரிப்பதாக வரையப்பட்டுள்ளது. இந்த நூல் பாண்டிச்சேரியிலிருந்து பாரிஸ் அரச நூலகத்திற்கு சென்றபோது, அதை ஒரு உண்மையான இந்துவின் படைப்பாகவே கருதிய வோல்டெயர், இயற்கை மதத்தின் கோட்பாடுகள் குறித்து ஏற்கனவே அறிவுடைய மக்களிடம் கிறிஸ்தவத்தை வலியுறுத்துவது தேவையற்றது என்ற வாதத்திற்கு இதனை ஆதாரமாகக் கொண்டார்.

மலபார் கடற்கரையில் போர்த்துகீசிய ஆதிக்கம் வீழ்ந்ததும், இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க மிஷனரிகளின் செல்வாக்கும் குறைந்தது. அதே சமயம், டச்சு ஆட்சியின் முன்னேற்றம் குறிப்பாக இலங்கையில் ரோமச் சபைக்கு எதிரான சூழலை உருவாக்கினாலும், நடைமுறை வசதிகளுக்கேற்ற மதக் கொள்கைகளால் அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தச் சூழலில்தான் புராட்டஸ்டன்ட் மிஷன்களின் வருகை நிகழ்ந்தது. 1706 ஆம் ஆண்டு ட்ராங்குபாரில் காலடி வைத்த பர்த்தலோமியோ ஜீகென்பால்க் மற்றும் ஹென்றி ப்ளாட்சோ ஆகியோர், இந்தியாவில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவப் பணியின் தொடக்கமாகக் கருதப்படுகின்றனர். தமிழ் மொழியில் அவர்களுக்குக் கிடைத்த ஆழ்ந்த தேர்ச்சியும், உள்ளூர் சமூகத்துடன் அவர்கள் ஏற்படுத்திய அறிவார்ந்த உரையாடல்களும், இந்தியக் கிறிஸ்தவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கின.

இங்கு மிஷனரிகள் வாரத்திற்கு இரு முறை, போர்த்துகீசியம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தவறாது பிரசங்கங்களை நிகழ்த்தினர். புனிதச் சடங்குகளை ஒழுங்காக நிறைவேற்றுவதற்காக சில கூடுதல் மதகுருமார்களை ஞானஸ்நானம் செய்து பணியில் இணைத்தனர். இதன் விளைவாக, நற்செய்தியின் அடிப்படைக் கொள்கைகளில் நன்கு தயாரிக்கப்பட்டும் பயிற்றுவிக்கப்பட்டும் த மதமாற்றங்களை உள்ளடக்கிய, எண்ணிக்கையிலும் உறுதியிலும் வளர்ச்சியடைந்த ஒரு செழிப்பான தேவாலயத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஆரம்பகால போதனையின் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்த மிஷனரிகள், சிலர் தங்களது சொந்தச் செலவில் ஆடை மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். அதே வேளையில், பூர்வீக தமிழ் குழந்தைகளின் கல்விக்காக ஒரு பள்ளியை நிறுவுவதில் அவர்கள் எந்தத் விருப்பவும் கொள்ளவில்லை. பின்னர், போர்த்துகீசிய மொழிக்கான தனிப்பட்ட பள்ளியையும் தொடங்கி, மொழி மற்றும் மதப் போதனைகளை ஒருங்கிணைத்துப் பரப்பினர்.

இத்தகைய பணிகளின் நடுவே, ஜீகென்பால்க் டேனிஷ் ஆளுநரால் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நியாயமற்றதும் அவமானகரமானதுமான நடவடிக்கையாக இருந்த போது, அவரது மன உறுதியும் ஆன்மீக உற்சாகமும், அவர் எடுத்த  நிலைப்பாட்டின் மூலம் தாங்கிகொண்டார்

இதற்கிடையில், மெஸ்ஸர்ஸ் கிரண்ட்லர், போய்விங் மற்றும் ஜோர்டான் எனும் மூன்று புதிய மிஷனரிகள் வருகை தந்ததன் மூலம், ஐரோப்பாவிலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த பல தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன. அவர்களுடன், மிஷன் பணிக்குப் பயன்படும் வகையில் கணிசமான நிதியுதவியும், பல்வேறு தேவையான பொருட்களும் கொண்டு வரப்பட்டன.

டேனிஷ் குடியிருப்பாளர்களிடமிருந்து நீண்ட காலமாக மிஷனரிகள் அனுபவித்து வந்த துன்புறுத்தல்கள், டென்மார்க் மன்னரின் அதிகாரபூர்வ தலையீட்டின் மூலம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டன. மன்னர், தரங்கபாடி ஆளுநருக்கு தெளிவான கட்டளைகளை அனுப்பி, மிஷனரிகளின் பக்தியுடனான உழைப்புக்கு உதவவும், அவர்களை ஊக்குவிக்கவும் உத்தரவிட்டார். இதே காலகட்டத்தில்தான், சில கடிதங்களின் மொழிபெயர்ப்புகள் மூலம், டேனிஷ் மிஷன் பணி முதன்முறையாக இங்கிலாந்தில் பரவலாக அறியப்பட்டது.

கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, அண்டை பகுதிகளிலும் நகரங்களிலும் உள்ள புறமதத்தினரை அணுகுவதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யும் நோக்கில், 1710 ஆம் ஆண்டு ஜீகென்பால்க் மெட்ராஸுக்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். 

அங்கு தங்கியிருந்த காலத்தில், அந்த நகரின் குடிமக்களின் மதப் போக்குகளை மதித்து, பல்வேறு விசாரணைகளையும் ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். பின்னர் அவர் எழுதிய குறிப்புகளில், “கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கு மெட்ராஸ் மிகவும் சாதகமான இடமாக அமைந்துள்ளது; அங்கு அதிகாரத்தில் உள்ள ஆங்கிலேயர்கள் எங்கள் முயற்சிகளை ஆதரிப்பார்கள், அல்லது கிழக்கில் நற்செய்தியைப் பரப்பும் பணியில் எங்களுடன் இணைவார்கள்” என்று அவர் நம்பிக்கையுடன் பதிவு செய்துள்ளார்.


மெட்ராஸில் சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, ஜீகென்பால்க் தனது நெருங்கிய  சக ஊழியர் கிரண்ட்லருடன் தரங்கம்பாடியில் மீண்டும் இணைந்தார். புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்துடனும் உறுதியுடனும் அவர் தமது கடினமான மிஷன் பணியை மீண்டும் தொடங்கினார். முதற்கட்டமாக, உள்ளூர் இளைஞர்களின் கல்விக்காக ஒரு செமினரியை நிறுவி, அவர்களை மறைக்கல்வி ஆசிரியர்களாகவும் பள்ளி ஆசிரியர்களாகவும் பயிற்றுவித்து பணியமர்த்தினார்.

சிறிது காலத்திற்குப் பின்னர், கிறிஸ்தவ அறிவை மேம்படுத்துவதற்கான சங்கத்தின் ஆலோசனையின் பேரிலும், திரு ஸ்டீவன்சனின் துணையுடனும், மெட்ராஸ் ஆளுநரின் ஒப்புதலுடன், சென்னை மற்றும் கடலூரில் தமிழ் மற்றும் போர்த்துகீசிய மொழிகளில் கற்பிக்கும் பள்ளிகள் நிறுவப்பட்டன. இதன் மூலம் மிஷன் பணி கல்வி வழியாகவும் ஆழமடைந்தது.

1717 ஆம் ஆண்டில், தரங்கம்பாடியில் இருந்த தேவாலயம் கடும் வெள்ளத்தால் பெரிதும் சேதமடைந்தது. இதனால் மிஷனரிகள் இரண்டாவது தேவாலயத்தை அமைத்தனர். பழைய தேவாலயம் மறைக்கல்வி ஆசிரியர்களின் பயிற்சிக்காகவும், இறந்தவர்களின் அடக்கச் சடங்குகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்த காலகட்டமெங்கும், ஜீகென்பால்க் தமிழ் மொழியில் பைபிளை மொழிபெயர்ப்பது, அண்டை மாவட்டங்களுக்கு மதப் பத்திரிகைகளுக்கு அனுப்புவது, மேலும் இந்துக்கள் மற்றும் முகமதியர்களுடன் மத விவாதங்களில் ஈடுபடுவது என இடைவிடாத உழைப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.

1718 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், இந்த அசைக்க முடியாத மனிதனின் உடல்நலம் மெதுவாக சீர்குலையத் தொடங்கியது. கடும் பலவீனமும் வேதனையும் மத்தியில்  பயணத்தால் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கடற்கரை வழிப் பயணத்தை மேற்கொண்டார். கடலூரை அடைந்த பின்னர், தனது இறுதி நேரம் நெருங்கி வருவதை உணர்ந்த அவர், நண்பர் கிரண்ட்லரை வரவழைத்தார். அவர் வந்தபோது, அமைதியான மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார்.

தனக்கு விருப்பமான ஒரு லூத்தரன் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டு, 1719 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று, ஜீகென்பால்க் அமைதியாக இவ்வுலகிற்கு  விடை பெற்றார்.

அவரது ஆழ்ந்த பக்தி, தீவிரமான ஆன்மீக ஆர்வம், மென்மையான மனப்பான்மை மற்றும் ஒழுங்கான நடத்தை ஆகியவை, அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் ஈர்த்து சமரசப்படுத்தும் வல்லமை பெற்றவையாக இருந்தன. அதே சமயம், அவரது செயல்திறன், பொறுமை மற்றும் விடாமுயற்சி, எதிர்கொண்ட எண்ணற்ற தடைகளையும் தாண்டி, மிஷன் பணியை உறுதியான அடித்தளத்தின் மீது நிலைநிறுத்த உதவின.

தமிழில் புதிய ஏற்பாட்டு பைபிளை மொழிபெயர்த்தது ஒன்றே , அவரது பெயரை வரலாற்றில் அழியாததாக நிலைநிறுத்துவதற்கு போதுமான சாதனையாக அமைந்தது.

ஜீகென்பால்கின் இழப்புக்குப் பின்னர், அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில், மெஸ்ஸர்ஸ் ஷுல்ட்ஸ், டேனியல் (Dnhl.) மற்றும் கெயிஸ்டென்மாச்சர் ஆகிய மூன்று புதிய மிஷனரிகள் குறுகிய பயணத்திற்குப் பிறகு தரங்கம்பாடி வந்தடைந்தனர். இதன் மூலம், அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் ஒரு அளவிற்கு நிரப்பப்பட்டு, இந்தியாவில் புராட்டஸ்டன்ட் மிஷன் பணி தொடர்ச்சியுடன் முன்னேற வழி வகுக்கப்பட்டது.



ஒன்பதாவது மாநாடுஃ பிராமணர் விடுதியில் ஒரு விவாதம்
நாள்ஃ மார்ச் 5,1708

இடம் திருவையாறு  பிராமணர் விடுதிக்கு அருகில் ஒரு தோட்டம்.

 

  • பர்த்தலோமியோ ஜீகென்பால்க்ஃ ஒரு ஜெர்மன் மிஷனரி.
  • மதிப்பிற்குரிய முதியவர்  ஒரு உள்ளூர் மூப்பரும் அறிஞரும்.
  • மணிகண்டன்  மாவட்டத்தின் ஆளுநர்.



ஜீகென்பால்க்ஏராளமான பூசாரிகள் மற்றும் பிராமணர்களிடம் உரையாற்றுகிறார் நண்பர்களே, இந்த அழகான கட்டிடங்களையும், உங்கள் மன்னர்  கட்டிய அரண்மனையையும் பாருங்கள். ஆனால் அவற்றுக்குள் இருக்கும் சிலைகளையும் பாருங்கள். எல்லாவற்றையும் படைத்த உண்மையான கடவுளைத் தேடுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். செதுக்கப்பட்ட சிலைகளை-கேட்கவோ, பார்க்கவோ, புரிந்து கொள்ளவோ முடியாத பொருட்களை-நீங்கள் தொடர்ந்து வணங்கினால், நீங்கள் தவிர்க்க முடியாத தண்டனையை எதிர்கொள்வீர்கள். இன்று நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், அவர் உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு இரக்கம் காட்டுவார்.

முதியவர்  ஒரு உள்ளூர் மூப்பரும் அறிஞர்:  மெதுவாக , ஐயா, கடவுளின் ஆசீர்வாதங்கள் மற்றும் எங்கள் சொந்த நன்றியற்ற தன்மை பற்றி நீங்கள் சொல்வதில் பெரும்பாலானவை உண்மைதான். ஆனால் எங்கள் தெய்வங்கள் பொய்யானவை என்பதை நீங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. நீங்கள் கிறிஸ்தவர்கள் எங்களை "புறமதத்தினர்" என்று அழைக்கிறீர்கள், ஆனால் நாங்கள் ஒரு பண்டைய தேசம். நமது மதம் உலகத்தைப் போலவே பழமையானது. நமது தெய்வங்கள் மாபெரும் அற்புதங்களைச் செய்துள்ளன. நமது கடவுள் விக்னேஸ்வரரை (விநாயகர்) பாருங்கள்-அவரே நமது பெரிய கோயிலைக் கட்டி, இதே இடத்தில் நம்மிடையே வசித்தார். அவர் ஒன்றுமில்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்?

ஜீகென்பால்:  என் நண்பரே, பதினேழு நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவில் இருந்த எனது சொந்த மூதாதையர்களும் புறமதத்தவர்களாக இருந்தனர். உங்களைப் போலவே அவர்கள் விக்கிரகாராதனையும் செய்து வந்தனர். ஆனால் நற்செய்தி அவர்களை அடைந்தபோது, அவர்களின்  கண்கள் திறக்கப்பட்டன. உங்கள் அறியாமையை நான் கேலி செய்யவில்லை, ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எனது மக்கள் அதே துயரமான நிலையில் இருந்தனர்.

முதியவர்  : அப்படியானால் நாம் ஏன் இப்போது மாற வேண்டும்?

ஜீகென்பால்க்: காரணம் இது தவறு என்று உங்களுக்குச் சொல்கிறது! ஒரு சிந்தனைமிக்க மனிதன் ஒரு பன்றி, ஒரு மீன் அல்லது எட்டு கைகளால் ஒரு அசுரனின் வடிவத்தில் செதுக்கப்பட்ட ஒரு மரம் அல்லது கல்லை எடுத்து அதை "கடவுள்" என்று எப்படி அழைக்க முடியும்? ஒரு மனிதனை சமூக ரீதியாக புறக்கணிக்கும் தெய்வங்களிடமிருந்து நித்திய மகிழ்ச்சியை நீங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அழிவதற்கு முன் நீங்கள் மனந்திரும்ப வேண்டும்.

மணிகரன் (ஆளுநர்)  சொல்லுங்கள், அந்நியன்-எங்கள் கடவுள்களைப் பற்றிய இந்த விவரம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? அவர்களின் பெயர்களும் அவர்களின் தரவரிசைகளும் கூட உங்களுக்கு எப்படித் தெரியும்?

ஜீகென்பால்க்:ஐயா. உங்கள் சொந்த புத்தகங்களைப் வாசிப்பதிலும் படிப்பதிலும் நான் என் நேரத்தை செலவிட்டேன். நான் கேள்விப்பட்ட வார்த்தைகளின் அடிப்படையில் பேசவில்லை; நீங்கள் எழுதியவற்றிலிருந்து பேசுகிறேன்.

முதியவர்  : ஐயா, நீங்கள் உங்களை ஒரு புனித மனிதராக முன்வைக்கிறீர்கள். ஆனால் மற்றவர்களின் கடவுள்களைத் துஷ்பிரயோகம் செய்வது ஒரு புனித மனிதனின் செயலா? உண்மையான பக்தி எந்தவொரு நபரையும் அவர்களின் மதத்தின் காரணமாக வெறுக்காது. நாங்கள் மலபாரியர்கள்(தமிழர்கள்) நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதற்காக உங்களை கண்டிக்கவோ வெறுக்கவோ இல்லை. நீங்கள் ஏன் எங்களுக்கு அதே மரியாதையைக் காட்ட கூடாது?

ஜீகென்பால்க் நான் உங்கள் நபர்களை வெறுக்கவில்லை, உங்கள் கலாச்சாரத்தில் பாராட்டத்தக்கவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் உண்மையைப் பற்றிய உங்கள் அறியாமையை நான் கண்டிக்க வேண்டும். உங்கள் மீதான அன்பின் காரணமாக, உங்கள் நித்திய மகிழ்ச்சிக்குச் சொந்தமானதைப் பற்றி நான் அமைதியாக இருக்க முடியாது, நான் சாதாரணமாக பேசுவதை "மோசமான நடத்தை" என்று நீங்கள் கண்டாலும் கூட. நான் உங்களுக்குக் கட்டளையிடுவது கடவுளின் கட்டளையாகும்.  இன்று உங்களுக்கு வழங்கப்படும் இரட்சிப்பைப் புறக்கணிக்காதீர்கள்.



பர்த்தலோமாஸ் ஜீஜென்பால்க்
ஜூலை 10,1682 ஜெர்மனியின் பல்ஸ்னிட்ஸில் பிறந்தார் 
1694 , அவருக்கு 10 வயதாக இருந்தபோது அவரது தாயும், அவருக்கு 12 வயதாக இருந்தபோது அவரது தந்தையும் இறந்தனர். மூத்த சகோதரி அன்னாவால் வளர்க்கப்பட்டார்.
1698 கோர்லிட்ஸில் உள்ள பள்ளியில் பயின்றார். 
 1702 பெர்லினில் உள்ள எஃப். வெர்டர் உயர்நிலைப் பள்ளியில் ரெவ். ஜோச்சிம் லாங்கே. ஹீப்ரு, கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
 1703 ஆம் ஆண்டில் லீப்சிக், விட்டன்பெர்க் மற்றும் ஜெனா ஆகிய இடங்களுக்கு பயணம் செய்தார்.
1704  ஹாலே பல்கலைக்கழகத்தில் வகுப்புகளில் கலந்து கொள்கிறார். 
அக்டோபர் 1705 பெர்லினில்  டேனிஷ் மிஷனரியாக அழைக்கப்படுகிறார். 
1705 8 நாள் பயணத்திற்குப் பிறகு நவம்பர் 11 அன்றுடேனிஷ் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அரச மிஷனரிகளாக நியமிக்கப்பட்டார்
 ஜூலை 6,1706 டிரான்கெபார் தரங்கபாடி வந்தடைகிறார். 
செப்டம்பர் 2,1706 உள்ளூர் பள்ளி ஆசிரியர்  மூலம் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது.
• அக்டோபர் 16,1706 போர்த்துகீசிய மொழியிலும், கிறிஸ்தவத்தின் முக்கிய குடியிருப்புகள் குறித்து தமிழிலும் ஒரு பகுதியை நிறைவு செய்கிறது.
• நவம்பர் 6,1706 போர்த்துகீசிய மொழியில் உள்ளூர் மக்களை மறைக்கல்வி கற்பித்தல் தொடங்குகிறது. ஒரு தமிழ் அகராதியை உருவாக்கத் தொடங்குகிறார்.
• டிசம்பர் 29,1706 டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் சீயோன் தேவாலயத்தில் பிரசங்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.
• ஜனவரி 22,1707 ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் உள்ளூர் மக்களை தமிழில் கற்பிக்கத் தொடங்கியது. லூத்தரின் சிறிய மறைக்கல்வி நூலை தமிழில் மொழிபெயர்க்கிறார்.
ஜூன் 14,1707 ஜெருசலேம் தேவாலயத்தைக் கட்டுவதற்கான வேலையைத் தொடங்குகிறது.
• டிசம்பர் 28,1707 அன்று வீட்டில் பள்ளியைத் திறந்து தமிழில் கற்பித்தல் தொடங்குகிறது.
அக்டோபர் 17,1708 புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கியது.
நவம்பர் 19,1708 அன்று கவர்னர் ஹாசியஸால் கைது செய்யப்பட்டு மார்ச் 26,1709 அன்று விடுவிக்கப்படும் வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 8,1710 பிராமணர்களை சென்றடையும் முயற்சியில் அண்டை கிராமத்தில் வீட்டைக் கட்டினார். உள்ளூர்வாசிகள்  வீட்டை அழிக்கின்றனர்.
மார்ச் 28,1711 புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்தார். 
 1711இல் ஜெர்மனிக்குத் திரும்பினார். பின்னர் ஜெர்மனியில் ஒரு திருச்சபை போதகர் ஆனார்.
ஜூன் 9,1712 ஆங்கிலம் மற்றும் லத்தீன் வகை அச்சகத்தின் வருகை  சீகென்பால்க் பின்னர் டிரான்கு டிராங்க்பார் பகுதியில் ஒரு முன்னாள் ஜெர்மன் பள்ளி ஆசிரியரான ஜோனாஸ் ஃபிங்கேவை பத்திரிகைகளை நடத்துவதற்கும் கிறிஸ்தவ பொருட்களை அச்சிடுவதற்கும் பணியமர்த்துகிறார். 
 1712ஆம் ஆண்டின் இறுதியில், ஜெருசலேம் திருச்சபையின் ஞானஸ்நானம் பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 117ஐ எட்டியது.
ஜூலை 16,1713 
ஜீகென்பால்கின் அறிவுறுத்தல்களிலிருந்து இரண்டாவது அச்சகத்தின் வருகை.
ஏப்ரல் 7,1713 அவரது நூலகத்தில் மதம் (இந்து மற்றும் இஸ்லாம்) மருத்துவம், கவிதை மற்றும் தத்துவம் குறித்த 237 உள்ளூர் தமிழ் மற்றும் போர்த்துகீசிய புத்தகங்கள் இருப்பதாக தெரிவிக்கிறது.
அக்டோபர் 26,1714 பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்கத் தொடங்குகிறது. தமிழ் இலக்கணத்தை எழுதுகிறார். 
 பிலிப் ஜேக்கப் ஸ்பெனரின் உறவினரான மரியா டோர்ட்டீயா சால்ஸ்மேனை மணந்தார். இருவரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவுக்கு புறப்படுகிறார்கள். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். 
 ஆகஸ்ட் 10,1716 அன்று மெட்ராஸை அடைந்தது.
அக்டோபர் 23,1716 எட்டு இந்திய மாணவர்களின் செமினரி அறிவுறுத்தலைத் தொடங்குகிறது.
• பிப்ரவரி 9,1718 புதிய தேவாலயத்திற்கு மூலக்கல்லாக அமைக்கப்பட்டது. அக்டோபர் 11,1718 அன்று புதிய ஜெருசலேம் தேவாலயத்தை அர்ப்பணித்தார்.
ஜனவரி 1,1719 புதிய ஜெருசலேம் தேவாலயத்தில் தனது கடைசி பிரசங்கத்தைப் பிரசங்கித்தார்.
பிப்ரவரி 11,1719 லார்ட்ஸ் சப்பர் பெறுகிறது; வயிற்று நோய்க்கு பல வாரங்கள் தோல்வியுற்ற சிகிச்சைக்குப் பிறகு இறந்தார். அவர் இறக்கும் போது மதம் மாறியவர்களின் மொத்த எண்ணிக்கைஃ சுமார் 250.