முதல் பதிப்பாக 2019 ல் வெளி வந்த ”நாடார் வரலாறு கறுப்பா…? காவியா?” என்ற புத்தகத்தின் ஐந்தாம் பதிப்பு 2021 ல் வெளியாகி உள்ளது.இப்புத்தகத்தின் ஆசிரியர் தி. லஜபதி ராய் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊரில் பிறந்தவர். தற்போது மெட்ராஸ் உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறார்
இப்புத்தகம் ஊடாக நாடார்கள் வரலாற்றில் நடந்த மிக
முக்கிய சம்பவங்கள், நிகழ்வுகள், நாடார் தலைவர்களின் சமூக பங்களிப்பு, நாடார்களின்
கல்வி பண்பாட்டு வழிபாடு சார்ந்த விடயங்கள், நாடார் இனத்தில் நடந்த மதமாற்றம் குறித்து
மிகவும் தெளிவாக பதிந்து உள்ளார். வரலாற்று பூர்வமான ஆக்கபூர்வமான தகவல்கள் தெளிவாக
பதிந்துள்ளார்.
இரண்டாம் பகுதியில் நாடார்கள் பற்றிய 1899ஆம் ஆண்டு வாக்கிலுள்ள ஆங்கிலேய மிஷினறி ஆய்வாளர்களின் தரவுகளை மேற்கோளாக காட்டி சில சம்வங்களை தொகுக்குகிறார்.
18-19 நூற்றாண்டில் தோள் ஆடை அணியும் உரிமை இருந்த
அகஸ்தீஸ்வரம் குமரசுவாமி நாகமணி மார்தாண்டன் நாடார் மற்றும் சுப்ரமணி நாகமணி மார்தாண்டன்
நாடார் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
1855ஆம் ஆண்டு கழுகுமலை ஊரின் மையப்பகுதியியான தோடி தெருக்களில் நாடார்கள் ஊர்வலம் செல்லக்கூடாது என்பதால் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மாறினர் என்ற தகவல் அறிகிறோம்.. தேர்த்திருவிழாவின் போது நடைபெற கலவரத்தில் ஏழு நாடார்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான எட்டயாபுரம் ஜமீனின் பார்ப்பன மேலாளரும் அவரது அடியாட்களும் நாடார்களால் கொல்லப்பட்டனர் என்று அறியத்தருகிறார். 1899ல் இந்து ஒடுக்குமுறையில் இருந்து தப்பிக்க இஸ்லாம் மதத்தை தழுவிகின்றனர் நாடார் இனத்தவர்.
சிவகாசி கலவரத்திற்கு காரணமானவர்கள் பார்ப்பனர்கள்,
வெள்ளாளர்கள் மறவர் சமூகத்தினரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டு
உள்ளார்.
அடுத்த பகுதியில் குமுதி ஆலய நுழைவு முயற்சி பற்றி
குறிப்பு உள்ளது. கோயிலுக்குள் அத்து மீறி நுழைந்த நாடார்கள் 2500 ரூபாய் திரு.பாஸ்கர
சேதுபதிக்கு வழங்க பணிக்கப்படுகின்றனர். அத்துடன்
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் நாடார்கள் தங்களுக்கு என தனிக் கோயில்களைக்
கட்டிக் கொள்ளட்டும் அல்லது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றட்டும் என்று தனது கடிதத்தில்
குறிப்பிடுகிறார் ஆட்சியர். ஆனால் இந்த ஒப்பந்தத்தை பாஸ்கர சேதுபதி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வழக்குகளை நடத்த நாடார்கள் 42 ஆயிரம் ரூபாய்
செலவழித்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த காலயளவில் தான் பாஸ்கர் சேதுபதி இந்து
மதத்தின் பெருமையை சிக்காகோ எடுத்துச்சொல்ல 1893 ல் விவேகானந்தருக்கு பொருளுதவியும்
செய்து இருக்கிறார். இந்த வழக்கில் பாஸ்கர் சேதுபதி சார்பாக 38பார்ப்பன சாட்சிகளும்
நாடார்கள் சார்பில் 23 பார்ப்பன சாட்சிகளும்
சான்றளித்துள்ளனர்.
கமுதி கோயில் நுழைவிற்கு 42 வருடங்களுக்கு பின்
1939 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு
நிகழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
1925 ஆம் ஆண்டு நடந்த வைக்கம் போராட்டம் அதில் பெரியாரின் பங்கு பற்றி குறிப்பிட்டு உள்ளார்
எட்டாவது பக்கத்தில் சாணார்கள் நாடார்களாக மாறிய
நிகழ்வு என்ற பகுதியில், சாணார்கள் திருவாங்கூர் என்ற பகுதியில் மட்டும் சாணார்களாக
பதியப்பட்டத்தை குறிப்பிடுகிறார். அடுத்த பகுதியில் தோழ் சீலை போராட்டம் பகுதியில்
1855 ஆம் ஆண்டு நாடார் பெண்கள் சீலை அணியும் உரிமையை பெறுகிறதை குறிப்பிடுகிறார்.
1864 ஆம் ஆண்டு மற்றைய பெண்களும் சீலை அணியும் உரிமை பெறுகின்றனர். கிறிஸ்தவ மதமாற்றமும்
அக்காலகட்டம் நிகழ்ந்ததை குறிப்பிடுகிறார்.
சுதந்திர இந்தியாவில் இந்து சமய அறநிலையத் துறை
அமைச்சராக பட்டியல் இனத்தபவர் தேர்வானதை குறிப்பிட்டு உள்ளார்.
டபிள்யூ .பிஏ .சௌந்தர பாண்டியன் பணிகளை பட்டியலிட்டுள்ளார்.
முக்கியமாக தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரை
பதிந்துள்ளார்.
1980 ல் கிறிச்தவ மற்றும் இந்து நாடார்களுக்குள்
நடந்த கலவரம், 1981 ல் நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம். அதில் பாதிக்கப்பாட்ட கிறிச்தவ
கத்தோலிக்க மீனவர்கள் மற்றும் இந்து நாடார்கள்
பற்றி குறிப்பிட்டுள்ளார்.
தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கிறிஸ்தவர்கள் மற்றும்
இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்று நாடார்கள் திரள்வதாக குற்றம் சாட்டுகிறார். நாஞ்சில் நாடன் கூறிய ஜாதிதூய்மைவாதத்தில் ஒப்புறவாகுகிறார்
ஆசிரியர் லஜபதிராய்.
கிறிஸ்தவ பணியாளர்கள் பணம் தொண்டு வந்தாக குறிப்பிடுகிறார்.
16 வது பகுதியில் கறுப்பா காவியா என்ற கேள்வியுடன் நாடார்கள் இந்து முன்னனியில் இருப்பதை
வன்மையாக கண்டிக்கிறார் எழுத்தாளர்.
அடுத்த சில பக்கங்களில் கால்டுவெல் போன்ற வெளிநாட்டினர்
பரப்பின பல அவதூறுகளை- நாடார்களின் பரம்பரத் தொழில் பனையேறுவது, பேய்கள் வழிபாட்டில்
இருந்தனர், சாணார்கள் போன்ற வார்த்தை பிரோயங்களை ஆசிரியரும் நிறுவுகிறார். மட்டுமல்ல
பிற்போக்குத் தனமான மாட்டுச்சாண காலகட்டத்திற்கு போகும் என்று இரு முறை குறிப்பிட்டு
கண்டிக்கவும் செய்கிறார் எழுத்தாளர்.
இன்றைய காலசூழலில் நாடார்கள் எதிர்கொள்ளும் பிரச்ச்சினைகளை
குறிப்பிடாது, நாடார்கள் யாருடன் சேர்ந்து
அரசியல் செய்ய வேண்டும் என்பதில் தனது எழுத்து
ஊடாக பரப்புரை செய்கிறார் எழுத்தாளர்.. நாடார்கள் பரம்பரத்தொழில் என்பதை பனையோடு நிறுத்தும்
ஆசிரியரின் தேவை கேள்விக்கு உட்படுத்த வேண்டியது.
.
பிஷப் கால்டுவெல்லை குறிப்பிடும் புத்தக ஆசிரியர்
கால்டுவெல் இப்புத்தகம் வெளியிட்டது வழியாக எதிர்கொண்ட விடயங்களை சொல்வில்லை என்று
மட்டுமல்ல, நாடார்களால் கோடைக்கனாலுக்கு விரட்டப்பட்டு அங்கையே இறந்தார் என்ற செய்தியை
பகிரவில்லை.
முதல் பகுதியில்
சில புகழ் பெற்ற நாடார்களை அறிமுகப்படுத்துகிறார். அதில் சிலர் படம் தவிர்த்து இருக்கலாம்.
கலப்பு ஆட்களை நாடார் என கொண்டு வந்ததும் அரசியலாகத்தான் தெரிகிறது. எந்த ஜாதிக்குள்ளும்
வர விரும்பாத திராவிட கட்சி ஆட்களையும் ஜாதிக்குள் புகுத்துவது தகுமா என்ற கேள்வி எழுகிறது
.
நாடார்களில் கள்ளிறக்கிறவர்கள் குறிக்கும் வார்த்தைகளை
அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்; 8,9 10, 11 நூற்றாண்டுகளில் பயன்படுத்திய வார்த்தைகளை சான்றுகளாக வரிசைப்படுத்துகிறார். சான்றோர் போன்ற வார்த்தைகளை
தவிர்ப்பது கேள்வி எழுப்புகிறது.
நாடார்களில் கள்ளிறக்கிறவர்கள் குறிக்கும் வார்த்தைகளை
அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்; 8,9 10, 11 நூற்றாண்டுகளில் பயன்படுத்திய வார்த்தைகளை சான்றுகளாக வரிசைப்படுத்துகிறார். சான்றோர் போன்ற வார்த்தைகளை
தவிர்ப்பது கேள்வி எழுப்புகிறது. வெள்ளைத்தேவன்
கொலையுண்ட போது எழுதப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களில் நாடார்கள் என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது.
நாடார், கிராமணி, சாணார் போன்ற வார்த்தைகள் உருவானதற்கான
காரணங்கள் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை என்று கூறி எளிதாக கடக்கிறார்.
1903 ஆம் ஆண்டில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில்
நடந்த வழக்கு ஒன்றில்; சாணார்கள் தாழ்ந்த ஜாதியினர் என்பதால், மரக்கட்டையில் பிணைக்கலாம்
என்ற தீர்ப்பை எடுத்து கூறி நாடார்கள் தாழ்ந்தவர்கள் தான் என்று நிறுவ முயல்கிறார்
எழுத்தாளர். ஐரோப்பியர்களின் ஜாதி ரீதியான தீர்ப்பை ஒரு சான்றாக எடுத்துக் கொள்வது நெருடலாகத்தான் உள்ளது.
தென்னிந்தியாவின் ஆன்மீகப் போராளியான 1809-1851 காலயளவில் வாழ்ந்த அய்யா வைகுண்டர்
பற்றொறி சில குறிப்புகள் உள்ளன.இந்து நாடார்கள் மதம் மாறும் அவலமான சமூக நிலையை மாற்ற அய்யா வைகுண்டர் பாடுபாட்டார்
என்று மட்டுமல்ல, கிறிஸ்த மதமாற்றத்தை எதிர்த்தார் என்ற தகவலை மறைத்து விட்டார் ஆசிரியர்.
வடக்கன் குளத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் சூழல் அதிர்ச்சியை
தருகிறது வாசிப்பவர்களுக்கு. சனாதன இந்துக்கள் அடக்கு முறையில் இருந்து வெளியேறின இந்து
நாடார்கள் கிறிஸ்தவர்கள் ஆன போது 1752 ல் கட்டிய ஆலையத்தில் தென்பகுதி சூத்திர ஜாதியினருக்கும்
அமரவும் வடபகுதி நாடார் உட்பட பட்டியில் இன மக்களுக்கும் ஒதுக்கப்பட்டதுடன் நடுவே சுவர்கள்
எழுப்பப்பட்டுள்ளன. 1910 ஆம் ஆண்டு யேசு சபை பாதிரியார் கௌசானல் அவர்கள் பிரிவினைச்
சுவரை இடித்தெறிந்து சமூகநீதி பக்கம் நின்ற சபையை குறிப்பிடும் எழுத்தாளர், நடுச்சுவர்
கட்ட அனுமதித்த வெளிநாட்டு கிறிஸ்தவ ஆலய தலைமையை
பற்றி சொல்லாது விட்டுள்ளார்.
முக்கியமாக வெள்ளைக்கார மிஷினரிகளில் தர்ஸ்டன்,
சாமுவேல் பட்டீர், ஜெ. சார்க் போன்றோரின் ஆராய்ச்சிகளை
மேற்கோள் காட்ட ஆர்வம் கொள்கிறார் என்பதை கவனிக்கலாம். நாடார்கள், தங்களை சாணார்கள் என்று அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள்
என அறிந்தே வைத்துள்ளார் தாஸ்டன்.
முன் அட்டை கமுதி ஆலய நுழைவு காட்சி, பின் அட்டையில் நங்கேலி முலவரி சார்ந்த சித்திரம்.
நங்கேலி வரலாறு ஒரு புனைவு என்று நிரூபிக்கப்பட்டதை வரலாற்று ஆசிரியர் கண்டு கொள்ளாது
தனது பின் அட்டையாக வைத்ததை தவிர்த்து இருக்க வேண்டும்.
ஒரு சிறப்பான வரலாற்று எழுத்தாக ஆரம்பித்த புத்தகம்
பரப்புரை எழுத்தாக முடிவு பெற்றது இப்புத்தகத்தின் பெரும் குறை தான்.
0 Comments:
Post a Comment