தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை.
தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். வைணவ சமயத்தினர். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத் தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். .
சாயர்புரத்தில் ஜி.யு. போப் கல்லூரி தொடங்கி நடத்தி வந்தார். போப் ஓய்வுக்கு சில காலம் இங்கிலாந்து சென்றபோது, அக்கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை கால்டுவெல் தேடிக் கொண்டிருந்தார். அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவரான இருபத்தைந்து வயது கிருஷ்ண பிள்ளை தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் திறமை கொண்டிருந்ததால் கால்டுவெல் அவரையே 1853ல் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.
1858, ஏப்ரல் 18ஆம் நான் தமது முப்பதாம் வயதில் மயிலாப்பூரில் உள்ள “தூய தாமசு திருச்சபை” யில் திருமுழுக்குப் பெற்றார். இது முதல் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்று அழைக்கப்பட்டார். கிருஷ்ணபிள்ளை சமுதாய மேம்பாடு கருதியோ பொருள் சம்பாதித்தல் கருதியோ கிறிஸ்தவராகவில்லை என்றும் கிறிஸ்து பெருமான் திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினால் கிறிஸ்தவர் ஆனதாக குறிப்பிட்டு உள்ளார். சென்னையில் ஞானஸ்தானம் பெற்ற பின்னர் கிருஷ்ணபிள்ளை பாளையங்கோட்டை திரும்பினார். குடும்பத்தினரும் கிறிஸ்தவராயினர். இவருடைய தம்பி முத்தையா பிள்ளை இவருக்கு முன்னதாகவே கிறிஸ்தவராகியிருந்தார்.
1864-1875 வரையில் சாயர்புரம் கல்விச்சாலையில்
மீண்டும் கிருஷ்ணபிள்ளை பணியாற்றினார் .
1865-ல் வேத மாணிக்க நாடார் இயற்றிய 'வேதப்பொருள் அம்மானை” என்னும் நூலைப் பதிப்பித்தார்,
1886-ல் திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரானார். இக் காலத்தில் மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இங்கு தத்துவப் பேராசிரியராய் விளங்கினார். சுந்தரம் பின்னை மனோன் மணியம் இயற்றி வந்த இதே காலத்தில் கிருஷ்ணபிள்ளையும் இரட்சணிய யாத்திரிகம் இயற்றிவந்தார் என்பது குறிக்கத்தக்கது.
இவர் காலத்தில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தனர்.
பெரும்பாலும் ஆசிரியராக பணியாற்றிய கிருஷ்ணபிள்ளை குற்றாலம் அருகே ஒரு காப்பித் தோட்டத்தை உருவாக்கி நடத்தினார். 1890ஆம் ஆண்டின் தொடக்கத்தில்திருவனந்தபுரத்தை விட்டு விட்டு குலசேகரன் பட்டினம் வந்து உப்பளத் தொழிலில் ஈடுபட்டார். ஓராண்டு நடத்தியும் அது லாபகரமாக இல்லாமையால் கைவிட்டார்
1892-1900 வரையில் (வாழ் நான் இறுதி வரை) கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராய்த் தொண்டாற்றினார். இக்காலத்தில் இவருடைய நூல்கள் பலவும் வெளிவந்தன.
தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.
கிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள்
செய்யுள் நூல்கள்
போற்றித் திருஅகவல் 1884
இரட்சணிய யாத்திரீகம் 1894
இரட்சணிய மனோகரம் 1899
உரைநடை நூல்கள்
இலக்கண சூடாமணி 1883
நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு 1893
இரட்சணிய சமய நிர்ணயம் 1898
தொகுப்பு நூல்கள்
காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
இரட்சணிய குறள்
இரட்சணிய பாலபோதனை
பதிப்பித்தவை
வேதப்பொருள் அம்மானை. வேதமாணிக்கம் நாடார் 1860
பரதகண்ட புராதனம் - கால்டுவெல் 1865
இயற்றிய நூல்கள்
உரைநடை: “இலக்கண சூடாமணி: (1888);
“பாளையங்கோட்டை எச்.ஏ. சிருஷ்ணபிள்ளை கிறிஸ்தவனான வரலாறு: தன் வரலாறு (1893): “
இரட்சணிய சமய நிர்ணயம்: (1898).
செய்யூன்: 'போற்றித் திருஅகவல்: (1884); “
இரட்சணிய யாத்திரிகம்” (1894); '
இரட்சணிய மனோகரம்: (1899).
கிட்டாத நூல்கள்: 'இரட்சணியக் குறள்,” “இரட்சணிய பால போதனை.
தமிழகக் கிறிஸ்தவ இலக்கியத்தில் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணிக்கு அடுத்தபடியாக முக்கியமான நூலாக கருதப்படுகிறது.
கிறிஸ்தவ இலக்கிய சங்கம் பதிப்பித்துள்ள கீர்த்தனை பாடல்கள் தொகுப்பின் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை எழுதிய ‘சத்தாய் நிஷ்களமாய்’ என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. இது ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் போன்றே ஒலிக்கும். இதைத் தொடர்ந்து கடவுள் துதி, கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல், மனித வாழ்வின் எல்லா சூழ்நிலைகள், திருநாட்கள் குறித்த பாடல்களை கொண்டு கடைசியில் இந்திய நாட்டிற்கான வேண்டுதலோடு முடிகிறது.
கிறிஸ்தவக் கம்பர் என அறியப்பட்ட கிருஷ்ணபிள்ளை. கவிஞரின் வாழ்க்கை வரலாற்றினை முதன் முதல் ஓரளவு விரிவாக எழுதிய பெருமை மால் கடம்பவனம் அவர்களையே சாரும்.
கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:
"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."
1853ல் சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியர்.
1876ல் பாளையங்கோட்டை சபை திருத்தொண்டர் கழகக் கல்லூரியில் தமிழாசிரியரானார்.
1886ல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.
1890 வரை அங்கே பணியாற்றினார்.
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராக பணியாற்றினார்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை தனது 73-ஆவது வயதில் பிப்ரவரி 3, 1900 அன்று மறைந்தார்.
0 Comments:
Post a Comment