1896 ஆம் ஆண்டு பொறையார் நாடார் , தரங்கபாடியை சேர்ந்த பண்டாரசன்னிதியை சேர்ந்த திருவாடுதுரை, S.A சாமிநாத ஐய்யர் மற்றும் சிவசாமி உடையார் இணைந்து வியாபாரம் வளர்சியை கண்கொண்டு; மயுூரம் மற்றும் தரங்கப்பாடியை இணைக்கும் இரெயில் பாதை வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
26 நவம் 1900 அன்று திருநெல்வேலிக்கு வர இருந்த வைஸ்ராய் கர்சன் துரையை வரவேற்கும் குழுப் பொறுப்பில் ஆறுமுகநேரி எஸ். பொன்னய்யா நாடார் இருந்தார் .அக்டோபர் 1900 ஆம் ஆண்டு கூடிய சங்க கூட்டத்தில், உப்பு மற்றும் கருப்பட்டி ஏற்றுமதி செய்ய உதவும் விதம் திருநெல்வேலி- தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி- நாகரக்கோயில் இரயில் பாதை அமைத்து தரும்படியான வேண்டுதல் வரவேற்பு உரையில் இருக்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
ஒரு வழியாக இரெயில் பாதை வந்து சேர்ந்தது. குறிப்பாக நாடார் மக்களின் வியாபாரம் மேலும் தளைக்க உதவியது.
திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் ஊர்களை இணைக்கும் விதமாக மார்ச் 23, 1903 இல் நடைபெற்ற 'ஜில்லா வாரியக் கூட்டம்' இரு நகரங்களுக்கு இடையே ரயில் பாதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது . 10 ஆண்டுகால நீடித்த முயற்சியின் பயனாக, பிப்ரவரி 23, 1923 அன்று முதல் ரயில் சேவை கொடியசைக்கப்பட்டது.
இரெயில் பாதை அமைய காரணமான மறைந்த ஆறுமுகநேரி பொன்னையா நாடார் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை நினைவு கூறுவது அவசியம் ஆகிறது.
ஒரு ஊரின் வளர்ச்சி என்பது உள்ளூர் மனிதர்களின் தேவை, அக்கறை, ஊக்கம் சார்ந்து அமைகிறது. வெறுமென ஆங்கிலேய ஆட்சி தான் காரணம் என்பதை விட உள்ளூர் மக்களின் தொலைநோக்கு பார்வையும் காரணமாகிறது.
0 Comments:
Post a Comment