கமுதி கலவரம் 1898
சட்டம் XX- 1863 ப்படி கோயில்களை பராமரிக்கும் பணியை தனியாருக்கு அல்லது அமைப்புகளுக்கு கொடுக்கும் முடிவை ஆங்கிலேய அரசு எடுத்தது. தஞ்சாவூர் பகுதியில் பொறையார் நாடார்களால் கோயில் நிற்வாகத்தின் பொறுப்பை ஏற்க இயன்றது. ஆனால் தென் தமிழகம் திருநெல்வேலி , விருதுநகர் சங்கரன்கோயில், சாத்தூர், மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அவ்வகை சமூக சூழல் இருக்கவில்லை.
திருச்செந்தூர் கோயிலில் நுழைந்தனர் என்ற காரணம் கூறி பிராமணர்கள் மற்றும் வெள்ளார்கள் ஏழு நாடார்களுக்கு எதிராக ஒரு வழக்கை 1872 ல் தொடுத்தனர். அப்போதைய நீதிபதி எ.டி அருண்டெயில், கோயில் கொடிமரம் வரை வண்ணார், மறவர், வன்னியர் மற்றும் நாசுவர் செல்லலாம் என்றால் நாடார்களும் அதுவரை செல்லலாம். நாடார்கள் சென்றதனால் மட்டுமே அசுத்தமாகாது என்று கூறி ஏழு நாடார்களையும் விடுதலை செய்தார். (Wide Appendix XXV)
இரண்டு வருடம் கடந்த நிலையில் 1874 ல் மூக்க நாடார் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தார் எனக்கூறி அவர் கழுத்தை பிடித்து வெளியேற்றினர் கோயில் நிர்வாகிகள்.
1876 ல் அதே மாதிரி திருதங்கள் கோயிலில் நுழைந்தற்காக தண்டம் கட்ட வைக்கப்பட்டனர் நாடார்கள். இன்னிலையில் அருப்புக்கோட்டை நாடார்கள் 1877 ல் தங்களுக்கான அமுதலிங்கேஸ்வர் கோயிலை கட்டி வந்தனர். ஆனால் கோயில் கட்டுவதற்கு எதிராக ராம்நாடு ஜமீந்தார் 1893 ல் மானமதுரை வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து கோயில் வேலையை நிறுத்தி வைத்தார். அதன்பின் 1896 ல் அதே ராம்நாடு ஜமீன்கள் கோயில் பணியை தொடரவும் அனுமதித்தனர்.
இதன் மத்தியில் இருளப்பன் நாடார் ஆறு பேருடன் சேர்ந்து காவடி எடுத்து கமுதியில் உள்ள மீனாக்ஷி சுந்தர்ரேஸ்வர் கோயிலுக்குள் நுழைந்து கோயில் பிரசாதம் கேட்க பூஜாரிகள் கொடுக்க மறுக்க அவர்களே எடுத்து கொண்டார்கள். மேலும் கோயிலின் கற்பகிரகத்தில் பிரவேசித்து சாமியை தொட்டு கும்பிட்டார் என்ற குற்றசாட்டு எழுந்தது. இவர்கள் தொட்டதால் கோயிலின் பரிசுத்தம் கெட்டு விட்டதாக கூறினர் மறவர்கள். மூன்று வேளை நடக்கும் பூஜை நிறுத்தி வைக்கப்பட்டு, கோயிலை சுத்தப்படுத்தும் பூஜையும் செய்தனர். கோயிலின் மதிப்பை கெடுத்து விட்டார்கள் என்ற காரணம் கூறி ராமநாதபுரம் மன்னர் இழப்பீடாக 2508 ரூபாயும், மரியாதையை கெடுத்ததற்காக 1500 ரூபாயும், கோயிலை சுத்தப்படுத்த 1000 ரூபாய் என்ற கணக்கில் நாடார்கள் பணம் செலுத்த வேண்டும் என்று பணிக்கப்பட்டது. விசாரணை 140 சாக்ஷிகளிடம் மேற்கொண்டனர். விசாரணை முடிவில் 121 பக்கம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிற்பாடு இதை தொடர்ந்து நடந்த கமுதி கலவரத்தில் -1898 இருபக்க இன மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் இரண்டு போலிஸ்காரர்களும் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு பின் நாடார்கள் தங்கள் மத உரிமையை விட வணிக பலன் பற்றி சிந்தித்து உணர்ந்து செயலாற்ற ஆரம்பித்தனர்.
0 Comments:
Post a Comment