பிராமண ஆதிக்கம் பலரை காங்கிரசில் இருந்து வெளியேற வைத்தது. சௌந்திர பாண்டியன் மற்றும் வி.வி ராமசுவாமியால் ‘ தென் இந்திய சுதந்திர அமைப்பு’ துவங்கப்பட்டது. பிற்காலம் இது நீதிகட்சியாக உருமாறினது.
ஆங்கிலேயர்களுடன் இருந்த நட்புறவுடன் நீதிக்கட்சிக்கும் 1920 ல் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டியது நாடார் மகாஜன சங்கம். வடக்கு திருநெல்வேலி, ராம்நாடு மற்றும் மதுரை போன்ற பகுதியில் உள்ள நாடார்கள் நீதிக்கட்சிக்கு தக்கள் ஆதரவை தெரிவித்த போது திருநெல்வேலியில் நாடார் சங்கம், வெள்ளாளர்களின் ஆதிக்கத்தில் இருந்த நீதி கட்சி பக்கம் வர விரும்பவில்லை. வணிகர்கள் ஆன நாடார்கள் அதிகமாக வரி விதித்த ஆங்கிலேய அரசை எதிர்க்கும் விதம் காங்கிரஸ் கட்சிக்கு சேரவே விரும்பினர். ஆனால் அரசு வேலை, மிஷினறிகள் தயவை பெற்ற கிறிஸ்தவ மதம் தழுவிய நாடார்கள் ஆங்கிலேய அரசு மேல் நம்பிக்கை கொண்டு இருந்தனர்.
அதனால் நீதிக் கட்சியில் இருந்தவர்கள் சமூக சமுத்துவம் சுயமரியாதை கோயில் நுழைவு என மும்முரமாக இருந்த போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த எஸ்.டி ஆதித்தன் மற்றும் கெ.டி கோசல்ராம் போன்றவர்கள் அரசியல் பயணத்தில் வேகமாக முன்னேறினர்.
நீதிக் கட்சியின் பரப்புரை 1930 துவங்கி 1936 வரை மிகவும் வேகமாக இருந்தது. சௌந்தர பாண்டியன் , வி.வி ராமசாமி, எம்.எஸ். பி செந்தில்குமர நாடார் மற்றும் உத்தண்டன் பணிகள் நிமித்தம் விருது நகர் பகுதியில் நீதிக் கட்சி வலு பெற்றது.
வி.வி ராமசுவாமி விருதுநகர் நகரசபையின் 1931 துவங்கி 1938 வரை தலைவர் ஆக இருந்தார். 1935 மார்ச்சு 31 ஆம் தேதி தென் இந்திய சுதந்திர அமைப்பு விருதுநகரில் ஒரு கூட்டம் நடத்தின போது நீதிக் கட்சி முன்னின்று நடத்தியது. அக்கூட்டத்தில் வைத்து நீதிக் கட்சி அரசியல் செயல்பாடுகளிலும் சமூகப்பணி சார்ந்த பணியில் சுயமரியாதை இயக்கம் இ.வி ராமசாமி நாய்க்கர் தலைமையில் தொடர வேண்டும் என்று வி.வி ராமசுவாமி பரிந்துரைத்தார். இதே கூட்டம் பல இடங்களில் நடைபெற்றது.
1935 ல் அருப்புக் கோட்டையில் விவி ராமசுவாமி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் வைத்து மாத இதழான ’ விடுதலையை ‘ தினப்பத்திரிக்கையாக மாற்ற பரிந்துரைத்தனர்.
1936 ல் திருச்சியில் வைத்து பழனிச் சாமி பிள்ளை வீட்டில் நடைபெற்றது.
1944 ல் சேலத்தில் நீதிக் கட்சி இ.வி ராமசாமி மற்றும் சி என் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது, அந்த கூட்டத்தில் வைத்து தான் திராவிட கழகம் என பெயர் மாற்றம் பெற்றது.
வி.வி ராமசாமியும் சௌந்திரராஜன் இந்த பெயர் மாற்றத்தில் ஒப்புறவு ஆகவில்லை. ஆங்கிலேயர்கள் கொடுத்த பதவியில் இருந்து அனைவரையும் ராஜினாமை செய்ய இ.வி ராமசாமி சொன்னதுடன் ஆங்கிலேயர்கள் கொடுத்த மரியாதை பெயர்களையும் தவிர்க கூறினார். ஆனால் விவி ராமசுவாமி தனக்கு கிடைத்த ராவு பகதூர் என்ற மரியாதை பெயரை களையவில்லை. மேலும் விருதுநகர் நகரசபையின் தலைவர் என்ற பதவியை துறக்கவில்லை.
அதே போன்று சௌந்தர பாண்டியன் மதுரை மாவட்ட அமைப்பின் தலைவர் பதவியில் இருந்தும் விலகவில்லை. ஆனால் திராவிட கழகத்தில் இருந்து விலகியதுடன் நாடார் நீதி கட்சியை சேர்ந்து இருந்தவர்கள் ‘ சுயமரியாதை லீக்’ என்ற அமைப்பை துவங்கினர். அதன் தலைவர்களாக சௌந்தர பாண்டியன் விவி ராமசுவாமி திருமங்கலம் சவுந்தர பாண்டியன் தூத்துக்குடி எம்.எஸ் சிவசாமி போன்றோர் தலைவர்களாக ஆரம்பித்தனர். ஆனால் அந்த அமைப்பு நீடித்து இருக்கவில்லை.
1952 வரை விருதுநகர் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தது. காமராசர் முதலமைச்சர் ஆன பின்பு தான் காங்கிரசில் சேர ஆரம்பித்தனர்.
சுயமரியாதை இயக்கம் சவுந்தர பாண்டியன் மற்றும் விவி ராமசுவாமியால் 1925 ல் துவங்கப்பட்டது. ஜாதியற்ற சமூகம் அனைவரும் ஆலயம் நுழைதல் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
1929 ல் செங்கல்பட்டில் நடந்த முதல் கூட்டத்திற்கு சௌந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைவரும் தங்கள் பெயருடன் இருக்கும் ஜாதி அடையாளத்தை களைய வேண்டும் என முடிவு எடுத்து இருந்தனர்.
1929 ல் எ.வி ராமசாமி தலைமையில் திருநெல்வேலியில் வைத்து நடத்தப்பட்டது.
அடுத்த சுயமரியாதை கூட்டம் இ.வி ராமசாமி தலைமையில் விருது நகரில் வைத்து நடத்த முடிவெடுத்து இருந்தனர்.
நாடார்கள் தங்களுக்கு தானே ஏமாற்றிக்கொள்ளும் இயக்கம் சுயமரியாதை இயக்கம் என்று இந்து பத்திரிக்கை எழுதியது.
1939 ல் அனைவரும் ஆலயம் செல்லும் விதம் ஆலயங்கள் திறக்கப்பட்டு இருந்தது.
தங்களுடைய சமூக வளர்ச்சிக்கு நீதி கட்சி உதவ வில்லை என பல நாடார்கள் நீதிக் கட்சியில் இருந்து விலகி பெருவாரி நாடார்கள் காங்கிரசுடன் தேசிய காங்கிரசில் பணியாற்ற ஆரம்பித்தனர். தேசிய காங்கிரசிற்கு வலு சேர்க்கும் விதம் தேசிய நாடார் கூட்டமைப்பு 1940 களில் துவங்கி இருந்தனர்.
பிராமண பூஜாரிகளை தங்கள் திருமணம் நடத்தி வைக்க அனுமதிப்பது இல்லை என முடிவுடன் இன்னொரு பக்கம் சுயமரியாதை கட்சி கொள்கையும் வளர்ந்தது. குருக்களை வைத்து செய்யும் பல ஆசாரங்களை நாடார்கள் தவிர்க ஆரம்பித்தனர்.
25 ஜூன் 1933 ல் திருப்புவனத்தில் சௌந்தர பாண்டியன் மற்று வி,வி ராமசுவாமி தலைமையில் முதல் விதவை மறுமணம் பாலம்மாள் மற்றும் ரத்தினம் திருமணம் நடந்தது. 1967 ல் சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கியது . காங்கிரஸ் முன்னெடுத்த ஆலய நுழைவு சட்ட வரையரைக்கு நாடார்கள் 50 வருடங்களாக ஏற்பட்டு இருந்த போராட்டம் உருதுணையானது.
வைக்கம் போராட்டத்தில் சிலோண் நாடார் இளைஞர்களும் பங்கு பெற்றதாக குறிப்பிடுகின்றனர்.
பக்கம் 169 முதல்182 the history of the nadars prof. c Sarada Hardgrave L
0 Comments:
Post a Comment