தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, தமிழக மக்களின் அரசியல் விடுதலையை நோக்கி பயணித்த போது கேரளத் தமிழர்களில் பிரச்சினையை வெறும் சமூகப்பிரச்சினை என்பதாக பார்த்தனர். கேரளத் தமிழர்களின் பிரச்சினையை பற்றி உரையாட கேரளத் தமிழர்களின், குறிப்பாக நாடார்களின் நலனை காப்பாற்ற 1945 ஆம் ஆண்டு டிராவன்கூர் தமிழக காங்கிரஸ் அமைப்பு துவங்கப்பட்டது.
1938 முதற்கொண்டு மலையாள ஆட்சியாளர்களால் ஆளப்படட கேரளாவில் தமிழர்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. பல வகையில் பாகுபாடாக நடத்தப்பட்டனர். குறிப்பாக நாடார்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது. டிராவன்கூர் தமிழர் காங்கிரஸ் கூட்டமைப்பில் நாடார்கள் ஆதிக்கம் இருந்தாலும் டி எஸ் ராமசாமி பிள்ளை போன்ற பிள்ளை இனத்தவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் வர்க்கத்தில் இருந்த நாயர்கள் நில உரிமையாளர்களாகவும் நாடார்கள் வெறும் குடியேற்றக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்பதால் பல அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தனர்.
தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில்; அன்றைய கேரளா முதலமைச்சர் பட்டம் தானம் பிள்ளையால் ஜெயில் குற்றவாளிகள் அடக்கம் மலையாளிகளுக்கு இலவச இடம் கொடுத்து குடியமத்தினார் என்ற குற்ற சாட்டும் உண்டு.
பெருவாரி தமிழர்கள் வாழும் பகுதியில் அலுவலக மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்து இருந்தனர். ஜூலை 1, 1949 ஆம் ஆண்டு மலையாளம் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதிகளை டிவான்கூருடன் இணைத்தனர். மைனாரிட்டிகளாக தமிழர்கள் மாறும் சூழலுடன் தங்கள் உரிமைகளை இழக்கும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் தலைவராக கே. காமராஜ் அவர்கள் இருந்ததால் தமிழர்கள் பிரச்சினையை சரியாக புரிந்து உரிமைகள் பெற்றுத் தர துணைப்புரிவார் என நம்பிக்கை கொண்டனர் தமிழ் மக்கள். அதினால் நாகர்கோயிலில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற காமராசரை அழைத்தும் இருந்தனர்.
டிராவன்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு, தங்கள் அமைப்பு உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு பணி சார்ந்து கேரளா அரசை அணுகிய போது நேசமணியை தென் இந்திய திருச் சபையில் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் மக்களின் போராடும் வலுவை குறைக்கும், என்பதால் கேரளா அரசின் தந்திரமான போக்கை கண்டு நேவசமணி அரசின் வேண்டுகோளை புரக்கணித்து விட்டார்.
டிவான்கூர் தமிழர் காங்கிரஸ் அமைப்பு தலைவர்களுக்கும், கேரளா காங்கிரஸ் அரசிற்கும் இருந்த முரண்பாட்டை காமராசர் தீத்து வைப்பார் என நாடார்கள் நம்பினார்கள். ஆனால் அது சாத்தியப்பட வில்லை. ஆனால் சட்ட மன்ற தேர்தலில் 18 க்கு 14 இருக்கை பெற்று நேசமணி வலுவான எதிர் தலைவராக உருவாகி இருந்தார்.
ஜூலை 1949, நத்தானியேல் போன்ற நாடார் தலைமைகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது. காமராசார் நாடார் ஆக இருப்பதால் நாடார்களுக்கு உதவும் விதம் சமரசம் பேசுவார் , தீர்வை எட்ட வைப்பார் என்ற மக்கள் ஆசை நடைபெறவில்லை. காமராசர் தன்னை நாடார்கள் இனத் தலைவர் என முன் நிறுத்த விரும்பவில்லை. ஒரு தேசிய உணர்வு கொண்ட காங்கிரஸ் தலைவராகவே செயல்பட்டார் . அவரால் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை.
நாடார்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே 1952 ல் பொது தேர்தலும் வந்து சேர்ந்தது. நேசமணி , ஆர் பொன்னப்பா நாடார் மற்றும் வில்லியம் போன்றவர்கள் தேர்வாகினர். கட்சியின் தலைவராக சிதம்பநாதன் நாடார் தேர்வானர். ஆனால் நாடார்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சிதம்பரநாதன் நாடார் கேரளா காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ஆனால் அந்த ஆட்சியை கலைத்ததால் அதிகார பூர்வமாக காமராசரால் நாடார்களுக்கு தீர்வு கொடுக்க இயலவில்லை. 1953 ல் தமிழ்நாடு முதல் அமைச்சராக காமராசர் வந்த போது கேரளா காங்கிரஸ் முதல்வராக இருந்த படடம் தாணு பிள்ளை; காமராசர் தமிழர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பார் என எண்ணினார். 1954ல் படடம் தாணு பிள்ளை மறுபடியும் காங்கிரஸ் முதல் அமைச்சராக தேர்வாகி வந்த போது நேசமணி தலைமை கொண்ட TTNC இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தது.
1. தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ் மொழி அலுவலக மொழியாக இருக்க வேண்டும். அதே போல்
2. தமிழர்கள் பெறுவாரி வசிக்கும் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும்.
காவலர்களின் தடையையும் மீறி நேசமணி மற்றும் சிதம்பரநாதன் இருவரும் மூணார் மக்களிடம் சென்று உரையாடினர். மேலும் உண்ணாவிரதம் இருக்க துணிந்த ராமசாமிபிள்ளை போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கடுமைவாதியான ஆ. குஞ்சன் நாடார் 11 ஆகஸ்ட் 1954 அன்று தமிழர்களின் விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்தார்.இதனால் புதுக்கடை, மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கேரளா போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. அடுத்த நாள் குஞ்சன் நாடார் கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வில்லியம் கைதானர். 16 ஆம் தேதி தாணுலிங்க நாடார் கைது செய்யப்பட்டார்.
21 ஆம் தேதி நேசமணி நாடார் நேருவை தில்லியில் சென்று சந்தித்து, காங்கிரஸ் தலைவர்கள் குஞ்சன் நாடார் போன்றவர்கள், கேரளா காங்கிரஸ் காவலர்களால் மோசமாக நடத்தப்படுவதை பற்றி முறையிட்டார்.
25 மே 1954 அன்று தோவாளை, அகஸ்திிஸ்வரம், கல்குளம், விளவன்கோடு , செங்கோட்டை பகுதி, பீர்மேடு , தேவிகுளம், சித்தூர் போன்ற 9 தாலுக்களை தமிழ்நாட்டுடன் இணைக்க காமராசு கோரிக்கை விடுத்து இருந்தார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க உள்ள சூழலை ஆராய ; 1953 ல் இந்திய அரசு நியமித்த கமீஷனில் பெய்ஃசல் அலி தலைவராகவும் H.N கன்ழ்ரு, கே. எம் பணிக்கர் நாயர் போன்றவர்கள் உறுப்பினர்கள் ஆகவும் இருந்தனர். இந்த கமீஷனின் பரிந்துரைப்படி தோவளை, கல்குளம், விளவன்கோடு, செங்கோட்டையின் பகுதி, அகஸ்திஸ்வரம் தமிழகத்துடன் இணைக்க தீர்வானது.
குஞ்சன் நாடார் பீர்மேடு, தேவிகுளம் போன்ற பகுதிகள் எக்காரணம் கொண்டு இழக்க கூடாது என்பதில் காமராசர் உறுதி பூண்டு இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் சில பகுதிகள் இணைவதால் அல்லது விட்டு போவதால் பெரிய மாற்றம் நிகழப் போவது இல்லை என்ற கருத்தை காமராசர் கொண்டு இருந்தார்.
காமரசரின் அரசியல் வெற்றி நாடார்களால் நிகழவில்லை . அதே போன்று காமராசர் , நாடார்களுக்கு எந்த பலனும் பெற்று தர இயலவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம் காமராசர், தன் இனம் சார்ந்த அக்கறையை விட தேசிய நலன் காப்பது என்ற கருத்தை முக்கியமாக கொண்டு இருந்தார். தமிழகம் , பீர்மேடு மற்றும் தேவிகுளம் இழக்க காமராசரின் தேசிய கொள்கை காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சில பேனர் கட்சிகள் காமராசரை நாடார் இனத்தலவராக கட்டமைக்க முயன்று வருகின்றனர். காமராசர் என்றும் இனவாதத்தை எதிர்ப்பவராகவே இருந்துள்ளார். அதுவும் சொந்த இனம் என்ற கருத்தாக்கதை அறவே வெறுத்தவர். தலைவர் என்பவர்கள் எல்லாருக்கும் முக்கியமாக நலிந்தவர்களுக்கு ஆக செயல்பட்டவர். மதம், இன உணர்வுகளுக்கு அப்பற்பட்டு மக்கள் செவையை மட்டுமெ முன் நிறுத்தி தேசிய நலனில் அக்கறை கொண்டவர். எல்லா மக்களுக்காக தலைவரை நாடார் தலைவர் என்ற கொட்டிலுக்குள் அடைத்துப் போட சில விஷக் கிருமிகள் முயல்வதை கண்டு வருகிறோம். அவ நிச்சயமாக கண்டிக்க வேண்டியது.
ஆனால் நில அமைப்பை வைத்து கண் கொண்டாலும், தமிழகத்தோடு இணைந்து இருந்தாலும் அப்பகுதி நிலை, இன்றைய மாஞ்சோலை எஸ்டேட் நிலையாகத் தான் இருந்து இருக்கும். காமராசர் ஆட்சிக்கு பின் வந்த திராவிட கட்சிகளால் நாகர்கோயில் இயற்கை வளம் மலைகள் கொள்ளை போகும் நிலையை கண்கூடாக கண்டு வருகிறோம். மேலும் கேரளாவின் அன்னியசலாவணி மற்றும் வருமானம் எஸ்டேட்டுகளை நம்பி இருப்பதை தான் காண்கிறோம்.
0 Comments:
Post a Comment