1 Nov 2024

சிவகாசி கலவரம் ஜூன் 6, 1899

 


ஆலய நுழைவு சார்ந்து பல கலவரம் நிகழ்ந்து உள்ளது. அதில் மிகவும் கடுமையான கலவரம் ஆகும் ஜூன் 6 ஆம் நாள் 1899 ல் நடந்த சிவகாசி கலவரம்.

கமுதி சப் கோர்டில் இருந்து ராம்நாடு ஜமீந்தார், நாடார்கள் ஆலயத்திற்குள் பிரவேசிக்க தடை உத்தரவு வாங்கி வைத்து இருந்தார். இது நாடார்களுக்கு மற்றைய இந்துக்கள் மேல் பெரும் எதிர்ப்பு மனநிலையை உருவாக்கி இருந்தது
உள்ளூர் சிவகாசி கோயிலின் பொருப்பாளர்களாக இருந்த நாடார்கள் ஒரு சுமூகமான முடிவை எட்டும் நோக்குடன் 1895 ல் சிருங்கேரி மடகுருவை அணுகி வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 1896 ல் நாடாருக்கு எதிராக, சில இன இந்துக்கள், கிருத்திகை பண்டிகை கொண்டாட்டங்களில் பல இன்னல்களை உருவாக்க நாடார்கள் முயல்வதாக குற்றசாட்டை வைத்து இருந்தார்கள். வெள்ளாளர்கள் தங்கள் கடவுளை எடுத்துக்கொண்டு ஊர்வலம் வரும் போது நாடார்கள் பத்திரகாளி அம்மனை எடுத்துக்கொண்டு வலம் வந்து தங்களுக்கு இடையூறு கொடுப்பதாக முறைப்பட்டு இருந்தனர்.
நாடார்களின் மாரியம்மன் கோயில் பூஜாரிகளை விலக்கி விட்டு கோயம்பத்தூரில் இருந்து அழைத்து வந்த பிராமண பூஜாரிகளை பணிக்கு அமர்த்தி உள்ளதாக 1897 ல் குற்றம்சாட்டி இருந்தனர். மேலும் கோயிலில் நாடார்கள் நுழையாத வண்ணம் பூட்டி வைத்தனர்.
1898 ல் ஜூலை மாதம் 28 தேதி கோயிலுக்குள் நுழைய மறுபடியும் நாடார்கள் முயன்றனர். ஆறுமுகம் என்ற வெள்ளாளர் வியாபாரி நாடார்களை கோயிலுக்குள் நுழைய தடை செய்ததால் எழுந்த பிரச்சினையில் போலிஸ் படையை குவிக்கும் நிலைக்கு ஆங்கிலேய அரசு சென்றது.
அதே வருடம் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி கோயிலுக்குள் நுழைய நாடார்கள் முயன்ற போது ஆகாயத்தை நோக்கி சுடும் அளவிற்கு கலவரம் மூண்டது. அன்றைய திருநெல்வேலி ஆட்சியர் H.G ஹிக்கிங்க்கு பிரச்சினையை பற்றி தெரிவிக்க்ப்பட்டது. ஆனால் பிரச்சினையை சரியாக கையாள ஆங்கிலேய அரசு முயற்சி எடுக்கவில்லை, என்று மட்டுமல்ல இரண்டு பக்க நபர்களையும் அழைத்து எந்த சமாதான பேச்சுவார்த்தைக்கும் முயலவில்லை.
செப் 1898ல் மறுபடியும் ஆலயத்திற்குள் நுழைய நாடார்கள் முற்பட்டனர். அக்டோபட் மாதம் நாடார்களுக்கு எதிரான வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது. இது தங்களுக்கு எதிரான அரசின் பாகுபாடு கொண்ட நடவடிக்கையாக எடுத்துக் கொண்டனர் . இதனால் கோயில் நிர்வாகம் யாரும் கோயிலுக்குள் நுழைய முடியாத வண்ணம் கோயிலை பூட்டி வைத்தனர். இதை நாடார்களுக்கு தங்களுக்கான பாதி வெற்றி என எடுத்துக்கொண்டனர்.
நவம் 15, 1898 அன்று கோயில் நிர்வாகியாக சங்கரமூர்த்தி முதலியரை நியமத்ததை எதிர்த்து நாடார்கள் மாவட்ட வழக்காடு மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் வழக்கை தள்ளுபடி செய்தது. மட்டுமல்ல நியமனம் கோயில் நிர்வாகம் முடிவு தான் என குறிப்பிட்டும் இருந்தது.
ஏப்ரல் 26, 1899 இரு இனங்களும் மாறி மாறி குடியிருப்புகளுக்கு தீ வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டனர். 45 வீடுகள் கடுமையாக தீக்கு இரையானது. துப்பாக்கி சூட்டில் காயப்பட்டு இருந்தனர். மூன்று நாள் கடந்த நிலையில் ஏப்ரில் 29 தேதி அன்று திருநெல்வேலியில் இருந்து காவல் அதிகாரி வந்து சேர்ந்தனர். மே மாதம் ஆறாம் தேதி எல்லாம் அமைதியாக உள்ளது என ரிப்போர்ட் கொடுத்தனர். கலவரம் நிறுத்தப் பட்டாலும் வெறுப்பு இருபக்கமும் பற்றி எரிந்து கொண்டு இருந்தது. ஆனால் மே 23 முதல் கலவரம் பக்கத்து ஊர்களுக்கும் பரவ ஆரம்பித்தது . ஆனால் உள்ளூர் அதிகாரிகள் இது மக்களின் மனப்பயம் இனி கலவரம் வர வாய்ப்பில்லை என முழுமையாக நம்புவதாக ரிப்போர்ட் கொடுத்தனர்.
மே 23 ஆம் நாள் அன்று இரு பிரிவுகளும் சமரசம் பேச நாகப்பா தலைவனை சந்திக்க மனச்சேரிக்கு சென்றிருந்தினர். ஆனால் அங்கு வைத்து, நாடார்கள் மறுபடியும் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டாலோ பல்லக்கில் பயணித்தாலோ, சிவகாசி கொள்ளையிட காரணமாவார்கள் என மிரட்டப்பட்டனர்
மிரட்டியது போலவே நாடார் தெருவுகள் ஜூின் 6, 1899 ஆம் ஆண்டு கொள்ளைக்கு உள்ளானது. திட்டமிடப்பட்டு, நான்கு திசையில் இருந்தும் அமத்தப்பட்ட கூலிகள் உட்பட 5000 பேர் கொண்ட குழுக்களால் தாக்கப்பட்டனர். முதலில் தபால் நிலையம் சென்று தகவல் பரிமாற்றத்தை தடை செய்த பின்னரே கொள்ளையை ஆரம்பித்துள்ளனர்
கோயில் கோபுரத்தின் மேல் இருந்து அவதானித்துக் கொண்டிருந்த நபரின் கருத்துப்படி காலை 10.30 க்கு கொள்ளை, கடை உடமைகள் அழிப்பு ஆரம்பிக்கப்பட்டது. 500 க்கு மேல் வீடுகள் தீய்க்கு இரையாக்கப்பட்டது.
இந்த கலவரம் பற்றி கிறிஸ்தவ நாடார்கள் முன்கூட்டியே உள்ளூர் பாஸ்ட்ர் ஊடாக அறிந்து இருத்தனர் என்றும், கலவரத்தில் ஏற்பட இருக்கும் தலைவர்களுடன் கிறிஸ்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கிறிஸ்த நாடார்கள் தாக்கப்படாது இருக்க; கிறிஸ்தவ வீடு என வீட்டுக்கு வெளியே எழுதி வைத்து இருந்ததாகவும், அவ்வகையில் நாடார் கிறிஸ்தவர்கள் தங்களை காப்பாற்றி கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
தலையில்லா மனித உடல்கள் தெருவில் பரவி கிடந்ததாக சொல்லப்படுகிறது. பெண்கள் உடல்கள் அரைகுறையாக தீயில் எரிந்து கொண்டு இருந்ததாக குறிப்பிட்டு உள்ளனர். 18 ஆண்கள் கொல்லப்பட்டதுடன் 886 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு இருந்தது, உடைமைகள் களவாடப்பட்டது. நகைகளுக்காக பெண்களும் தாக்கப்படடனர். காயப்பட்ட எட்டு நாடார்கள் மற்றும் துப்பாக்கி சூட்டில் காயமுற்ற 3 நாடார்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கலவரம் சிவகாசியோடு நிற்கவில்லை, திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி மதுரை மற்றும் ட்ராவன்கூர் வரை தாக்கம் இருந்தது. பனைமரம் ஏரியும் அளவிற்கு கலவரம் நடந்தாக சொல்லப்படுகிறது.
கிறிஸ்தவ நாடார்கள் பயந்து நடுங்கி இருந்தாலும் அவர்கள் தாக்கப்பட வில்லை. அதே போல ஆங்கிலேய மற்றும் இந்திய அரசு அதிகாரிகளும் தாக்கப்படவில்லை.
பிற்பாடு தங்களை தானே காத்துக்கொள்ள 30 பேர் கொண்ட குழுக்களாக நாடார் இளைஞர்கள் MOC என்ற குழுவை தங்கள் இன மக்கள் பாதுக்காப்பிற்காக உருவாக்கினர்.
இருப்பினும் இரு இனங்களும் கோயில் பிரவேசம் சம்பந்தமான முறுக்கலில் இருந்து வெளியே வரவில்லை.
ஆலய நுழைவு போராட்டம் என்பது நாடார் இனம் துவங்கி வைத்த போராட்டம். எத்தனை கலவரம் உயிர், உடமை இழப்பு மத்தியிலும் தீவிரமாக தங்கள் சுயமரியாதையை தங்கள் உரிமையை மீட்க தொடர்ந்து போராடி வந்த போராட்டம் இது. சில பேனர் அரசியல் கட்சி தலைமைக்குள் எளிதாக மறைத்து விட இயலாது. இது ஒரு மக்கள் போராட்டமாக பல வருட போராட்டமாக உருத்திரிந்து வந்தது. இதன் வெற்றியில் மதமாற்றம், மிஷனரி பணி என எதனாலும் பங்கு சொல்ல இயலாது. கலவரத்தை தடுக்க இயலாத ஆங்கிலேய அரசு மற்றும் உள்ளூர் கிஸ்தவ மிஷினரிகள் தான் சிவகாசிக்கு தீப்பெட்டி, வெடி வியாபாரத்தை அறிமுகப் படுத்தினர் என்பது முரணாக உள்ளது. அதை இன்றைய சில எழுத்தாளர்கள் எழுதி கருத்தாக பரவ விடுகின்றனர்.

அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வு என நம்பிய நாடார் இனம், ஷத்திரை நாடார் மகாசன சங்கம் பொறையார் நாடார் இரத்தினசாமி தலைமையில் 1910 ல் நிறுவப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் போட்டிக்கு நிற்க முயன்றாலும் சங்கம் வைத்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. இரத்தினசாமி நாடார் மரணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு பின்பு பட்டிவீரன்பட்டியில் இருந்து W.P.A சவுந்தர பாண்டிய நாடார் மக்கள் போராட்டத்திற்கு புது உருவமும், பொருளும், வழிமுறைகளும் கொடுத்தார்
#Hardgrave L p.118
#Vanamamalai N Sivakasi Kalagam
Judicial GO No 949,950,, 529,530

0 Comments:

Post a Comment