கல்லிடைக்குறிச்சி கல்வெட்டில் இருந்து அறிவது 11-13 ஆம் நூற்றாண்டு வாக்கில் நாடார்க்ள் சேர பாண்டிய நாட்டில் அதிகாரிகள் , படைத் தளபதிகள் மற்றும் கணக்கர்களாக இருந்துள்ளனர்.
பாண்டிய மன்னர்கள் தயவில் தென்காசி பக்கம் குடியேறி உள்ளனர்.பாண்டிய மன்னர்கள் வீழ்ச்சிக்கு பிறகு அரச அதிகார வர்கத்தில் இருந்த நாடார்கள் நிலத்தாரர்களாக சுருங்கியது. பாண்டிய ஆட்சியில் நாடார்கள் படைகளை தலைமை தாங்குகிறவர்களாகவும் இருந்துள்ளனர். கயத்தாரில் விஜயநகர பேரரசின் படைத் தலைவர் விஸ்வநாத நாயக்காவுடன் நடந்த போரில் பஞ்ச திருவாசூதி நாடார்கள் பாண்டிய மன்னர்களுக்காக போரிட்டதாகவும் அந்த போரில் தோன்ற பாண்டியர்களுடன் தெற்கை நோக்கி நகர்ந்தனர். இந்த காலயளவில் முதலியார் மற்றும் பிள்ளைமார் இனத்தின் உதவியுடன் நாடார்களை நசுக்கினார் நாயக்கர்கள். நிறைய பேர் கொல்லப் பட்டனர், அடிமைகளாக விற்க பட்டனர். காயல்பட்டினத்தை சேர்ந்த 800 நாடார்கள் மற்றும் கீழக்கரை சீர்ந்த 100 நாடார்களை நடுக் கடலில் தள்ள இஸ்லாமியர்களிடம் கையளிக்கப்பட்டனர். அதில் சிலர் இஸ்லாம் மதம் தழுவி தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டனர். சிலர் உயிர் பயத்தில் வரண்ட பகுதிக்கு குடி பெயர்ந்தனர். ராமநாதபுரத்தில் குமர வீர மார்த்தாண்ட நாடார் தலைமையில் போராட துணிந்தாலும் ஒடுக்கப்படடனர்.
17 ஆம் நுுற்றாண்டு கடைசியில் சிவகாசியில் இருத்து சில குழு நாடார்கள் திருவனந்த புரம் பக்கம் நகர்ந்தனர். அங்கு வாழை தென்னை விவசாயத்தில் இறங்கினார். சிலர் ஆர்காட் மற்றும் சேலம் பக்கம் தப்பி சென்றனர். அங்கு நாடார் என்ற அடையாளத்தை மறைத்து அங்குள்ள பெருவாரி மக்கள் இனத்தில் செட்டி , கிராமாணி போன்ற அடையாளத்துடன் வாழ முடிவெடுத்தனர்.
தெலுங்கு ஆட்சியாளர்களை பயந்து இன்னும் சிலர் திருசெந்தூர் பக்கம் தேரிக்காடுகளில் அடைக்கலாம் அடைந்தனர். அங்கிருந்த சாணார்கள் இனத்துடன் கலந்து பனை தொழில்கள் மற்றும் கள் வியாபாரத்தில் பிழைத்தனர்.
பிற்பாடு தேரிக்காட்டு பக்கம் இருந்து விருதுநகர் பக்கமும் குடியேறினர். அஞ்சுபத்து நாடார், சித்தன் விளை நாடார், போன்ற அடையாளப் பெயர்களில் வாழ்ந்தனர்.
முத்து கிருஷ்ணபுரம் என்ற காட்டுப்பகுதியில் குதிரை மொழி தேரிப்பக்கம் கிடைத்த 1561 மற்றும் 1639 ஆகள்ண்டு கல்வெட்டுகளில் ஆதிச்ச நாடான், கோவிந்த பணிக்கர் நாடான்,வீரப்ப நாடான், தீத்தியப்ப நாடான், பிச்சை நாடான், அய்யாக்குட்டி நாடான், திக்கெல்லாம்கட்டி நாடான்,நினைத்தடுமுட்டி நாடான், அவதைக்குத்தவை நாடான் குத்தியுண்ட நாடான் போன்ற பெயர்கள் பொறிக்கப்படடுள்ளது.
எலுக்கரை நாடான்கள்
காயாமொழி பக்கம் குடியேறி உள்ளனர். இவர்கள் இதே பகுதியில் இருந்த ஆதித்த நாடார்களிடம் நல்லுறவு பேணவில்லை.
குமுதி, மதுரை,தென்காசி மற்றும் விருதுநகரில் வேம்பார் அய்யனாரை கும்பிடும் வெற்றி நாடங்குளம் நாடார்கள் பரவி உள்ளனர்.
16 ஆம் நூற்றான்டில் தென்காசி பக்கம் இருந்து ஏரல், எப்போதும்வென்றான் பகுதிக்கு குடியேறி உள்ளனர்.
திறமையான வில்லாளி வித்தகர்களாக இருந்த எழுதண்டிக்கரைக்காரர்கள் குறும்பூர் பக்கம் குடியேறி உள்ளனர். இவர்கள் குறும்பூர் நாடார்கள் என்ற பெயரில் குமுதி, அருப்புக்கோட்டை சிவகாசி பக்கம் குடிபெயர்ந்து உள்ளனர்.
11-12 ஆம் நூற்றாண்டில் ஆதித்த நல்லூர் பகுதி சோழர் வசம் இருந்த போது ஆதித்த நாடான் படையில் உயர் பதவியில் இருந்துள்ளார்.சோழர்கள் காலத்தில் தான் ஆதிச்சநல்லூர் என்ற பெயரும் உருவாகி உள்ளது என்கின்றனர். பிற்பாடு 1552-64 களில் பாண்டியர்கள் ஆதிக்கத்தில் வந்த போது ஆதித்த நாடான், கோவிந்த நாடான் போன்ற குடிகள் வருமான வரித் துறையில் முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளது. பிற்காலம் வடுக ஆட்சியாளர்கள் வசம் ஆன போது அவர்களுடனும் இணைந்து பதவிகளில் இருந்துள்ளனர் ஆதித்த நாடான் குடிகள்.ஆட்காட் நவாப் ஆட்சியிலும் வரி வசுுலிப்பாளர்களாக தொடர்ந்தனர். பிற்பாடு ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் ஆதித்த நாடான்கள் தங்கள் அதிகார பிடியை தளர்த்தவில்லை. கிறிஸ்தவம் 18 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ மத மாற்ற அலையிலும் சிக்கி கொள்ளாது அதிகார நிழலில் இருந்தனர் என்பது முக்கியமானது.
0 Comments:
Post a Comment