தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை.
தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். வைணவ சமயத்தினர். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத் தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். .
கிருஷ்ண பிள்ளையின் பதினாறாவது வயதில் தந்தை மறைந்தார். அதன் பின் 1845-ல் பாளையங்கோட்டை வந்து வள்ளல் வெங்கு முதலியார் என்பவரது வீட்டிலிருந்த தமிழ்ச்சுவடிகளைப் பயின்றார். இக்காலத்தில் தமிழ்ப் புலமை மிகுதியும் பெற்றார். திருப்பாற்கடனாத கவிராயரிடம் கல்வி பயின்றார்.
சாயர்புரத்தில் ஜி.யு. போப் கல்லூரி தொடங்கி நடத்தி வந்தார். போப் ஓய்வுக்கு சில காலம் இங்கிலாந்து சென்றபோது, அக்கல்லூரிக்கு தமிழ் ஆசிரியர் ஒருவரை கால்டுவெல் தேடிக் கொண்டிருந்தார். அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவரான இருபத்தைந்து வயது கிருஷ்ண பிள்ளை தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் திறமை கொண்டிருந்ததால் கால்டுவெல் அவரையே 1853ல் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.
1858, ஏப்ரல் 18ஆம் நான் தமது முப்பதாம் வயதில் மயிலாப்பூரில் உள்ள “தூய தாமசு திருச்சபை” யில் திருமுழுக்குப் பெற்றார். இது முதல் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்று அழைக்கப்பட்டார். கிருஷ்ணபிள்ளை சமுதாய மேம்பாடு கருதியோ பொருள் சம்பாதித்தல் கருதியோ கிறிஸ்தவராகவில்லை என்றும் கிறிஸ்து பெருமான் திருவடிகளைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினால் கிறிஸ்தவர் ஆனதாக குறிப்பிட்டு உள்ளார். சென்னையில் ஞானஸ்தானம் பெற்ற பின்னர் கிருஷ்ணபிள்ளை பாளையங்கோட்டை திரும்பினார். குடும்பத்தினரும் கிறிஸ்தவராயினர். இவருடைய தம்பி முத்தையா பிள்ளை இவருக்கு முன்னதாகவே கிறிஸ்தவராகியிருந்தார்.
1864-1875 வரையில் சாயர்புரம் கல்விச்சாலையில்
மீண்டும் கிருஷ்ணபிள்ளை பணியாற்றினார் .
1865-ல் வேத மாணிக்க நாடார் இயற்றிய 'வேதப்பொருள் அம்மானை” என்னும் நூலைப் பதிப்பித்தார்,
1886-ல் திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரானார். இக் காலத்தில் மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இங்கு தத்துவப் பேராசிரியராய் விளங்கினார். சுந்தரம் பின்னை மனோன் மணியம் இயற்றி வந்த இதே காலத்தில் கிருஷ்ணபிள்ளையும் இரட்சணிய யாத்திரிகம் இயற்றிவந்தார் என்பது குறிக்கத்தக்கது.
இவர் காலத்தில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தனர்.
பெரும்பாலும் ஆசிரியராக பணியாற்றிய கிருஷ்ணபிள்ளை குற்றாலம் அருகே ஒரு காப்பித் தோட்டத்தை உருவாக்கி நடத்தினார். 1890ஆம் ஆண்டின் தொடக்கத்தில்திருவனந்தபுரத்தை விட்டு விட்டு குலசேகரன் பட்டினம் வந்து உப்பளத் தொழிலில் ஈடுபட்டார். ஓராண்டு நடத்தியும் அது லாபகரமாக இல்லாமையால் கைவிட்டார்
1892-1900 வரையில் (வாழ் நான் இறுதி வரை) கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராய்த் தொண்டாற்றினார். இக்காலத்தில் இவருடைய நூல்கள் பலவும் வெளிவந்தன.
தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.
கிருஷ்ண பிள்ளை எழுதிய நூல்கள்
செய்யுள் நூல்கள்
போற்றித் திருஅகவல் 1884
இரட்சணிய யாத்திரீகம் 1894
இரட்சணிய மனோகரம் 1899
உரைநடை நூல்கள்
இலக்கண சூடாமணி 1883
நான் கிறிஸ்துவைக் கண்ட வரலாறு 1893
இரட்சணிய சமய நிர்ணயம் 1898
தொகுப்பு நூல்கள்
காவிய தர்ம சங்கிரகம்
கிடைக்காத நூல்கள்
இரட்சணிய குறள்
இரட்சணிய பாலபோதனை
பதிப்பித்தவை
வேதப்பொருள் அம்மானை. வேதமாணிக்கம் நாடார் 1860
பரதகண்ட புராதனம் - கால்டுவெல் 1865
இயற்றிய நூல்கள்
உரைநடை: “இலக்கண சூடாமணி: (1888);
“பாளையங்கோட்டை எச்.ஏ. சிருஷ்ணபிள்ளை கிறிஸ்தவனான வரலாறு: தன் வரலாறு (1893): “
தமிழகக் கிறிஸ்தவ இலக்கியத்தில் எச்.ஏ.கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணிக்கு அடுத்தபடியாக முக்கியமான நூலாக கருதப்படுகிறது.
கிறிஸ்தவ இலக்கிய சங்கம் பதிப்பித்துள்ள கீர்த்தனை பாடல்கள் தொகுப்பின் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை எழுதிய ‘சத்தாய் நிஷ்களமாய்’ என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. இது ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கும் சுந்தரரின் தேவாரப்பாடல் போன்றே ஒலிக்கும். இதைத் தொடர்ந்து கடவுள் துதி, கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல், மனித வாழ்வின் எல்லா சூழ்நிலைகள், திருநாட்கள் குறித்த பாடல்களை கொண்டு கடைசியில் இந்திய நாட்டிற்கான வேண்டுதலோடு முடிகிறது.
கிறிஸ்தவக் கம்பர் என அறியப்பட்ட கிருஷ்ணபிள்ளை. கவிஞரின் வாழ்க்கை வரலாற்றினை முதன் முதல் ஓரளவு விரிவாக எழுதிய பெருமை மால் கடம்பவனம் அவர்களையே சாரும்.
கிருஷ்ண பிள்ளையின் மாணவியாகவும் திறனாய்வாளராகவும் விளங்கிய ஏமி கார்மிக்கேல் அவரது பக்தி உணர்வு கவிதையாக உருக்கொண்ட விதம் குறித்து இவ்விதம் கூறுகிறார்:
"சிந்தனைகளைத் தொடர்ந்து சிந்தனைகளும் சொற்களைத் தொடர்ந்து சொற்களும், இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்ல ஆர்வம் கொண்டு ஓடி வருவது போல வந்தன… சூரியனைப் போல ஒளிவிடும் எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட வானம் திடீரென்று அவருக்கு மேல் திறப்பது போன்று அவை வந்தன."
1853ல் சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியர்.
1876ல் பாளையங்கோட்டை சபை திருத்தொண்டர் கழகக் கல்லூரியில் தமிழாசிரியரானார்.
1886ல் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியில் தத்துவத் துறையில் வேலை செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளையின் நண்பரானார்.
1890 வரை அங்கே பணியாற்றினார்.
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை சென்னையில் பீட்டர் பெர்சிவல் நடத்தி வந்த தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராக பணியாற்றினார்
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை தனது 73-ஆவது வயதில் பிப்ரவரி 3, 1900 அன்று மறைந்தார்.
தஞ்சையைச் சேர்ந்த வேதநாயகம் சாஸ்திரியார், பாளையங்கோட்டையைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை, தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல் ஆகியோர் தமிழ் கிறிஸ்தவக் கவிஞர்களின் முப்படைகளாக அறியப்பட்டனர்.
தரங்கம்பாடியை சேர்ந்த என். சாமுவேல் கும்பகோணத்தில்(18 செப்டம்பர் 1850 பிறதார். பிரபலமான தமிழ் கிறிஸ்தவ கவிஞர் ஆவார். அத்துடன் பேராசிரியர், தமிழ் சுவிசேஷ லூத்தரன் சர்ச் (T.Eஇசைக்கருவிகலபல புத்தகங்களின் ஆசிரியர் என்ற நிலையிலும் புகழுடன் இருந்தார். இவாஞ்சலிக்கல் லூத்தரன் மிஷன் (L.E.L.M.) கவுன்சிலின் முதல் உறுப்பினராகவும் இருந்தார்
தரங்கம்பாடி, பொறையார் மற்றும் பெங்களூரில் உள்ள இறையியல் கல்லூரிகளில் (ஐக்கிய இறையியல் கல்லூரி) முதல் இந்தியப் பேராசிரியராக இருந்தவர் ஆவார் என் சாமுவேல்.
ரெவ. என். சாமுவேல் லூத்தரன் வரலாறு, இறையியல் மற்றும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய பல புத்தகங்களை எழுதினார். குழந்தைகளுக்காகவும் எழுதி உள்ளார். அவர் தமிழ் மற்றும் ஜெர்மன் ஆகிய இரு மொழிகளில் எழுதியுள்ளார், மேலும் பல புத்தகங்களை ஜெர்மன் மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துலள்ளார்.
அவர் எழுதிய நூல்களில்:
தூப கலசம், தூப தூபம்
திரு திரு விருந்தாடி,
பாக்கெட் கம்யூனியன் புத்தகம்
உள்ளத்து நாற்பது புஷ்பா கோதை
ஊர் சாமியாருக்கு துணை
ஜீகன்பால்கின் வாழ்க்கை
டிரான்க்யூபார் மிஷன் வரலாறு
கிராம பிரசங்கங்கள் தொகுதி I
சுவிசேஷ வாக்கிய பிரசங்க புத்தகம்,
சுவிசேஷங்கள் பற்றிய பிரசங்க வேலைகள்
கிராமப் பிரசங்கங்கள் தொகுதி II நிருபா வாக்கிய பிரசங்க புத்தகம்,
நிருபங்கள் பற்றிய பிரசங்கப் பணிகள்
ஒரு எளிய கிறிஸ்தவரின் எளிய பேச்சு
பாக்கெட் பிரார்த்தனை புத்தகம்
மார்ட்டின் லூதர் சாஸ்திரியார்
விவிய சரித்திர சுருக்கம்
எருசலேம் நகர் அழிவு
Yezhu Siru Vaarthaigal
கிறிஸ்தவ பழமொழிகள் மற்றும் மாக்சிம்கள்--
நறு மலர்கொத்து
தரங்கை மிஷன் சரித்திரம் (பெங்கரின் டிரான்க்யூபார் மிஷன் வரலாற்றின் பாணியில்)
புனித ஒற்றுமையில் பங்கேற்பதற்கு ஒரு நல்ல தயாரிப்பாகும்.
புதிய ஏற்பாட்டின் திருத்தப்பட்ட பதிப்பின் மொழிபெயர்ப்புக்கு பொறுப்பானவர்களில் இவரும் ஒருவர்.
.
அவரது பாடல் வரிகளில் மிகவும் பிரபலமானவை,
• En Meetpar Vuyirodirukayilay (என் மீட்பர் உயிரோடிருக்கயிலே)
• Senaigalin Kartharey (சேனைகளின் கர்த்தரே)
• Seerthiru Yegavasthey(சீர்திரி ஏகவச்தே நமோ நமோ) மற்றும்
• Gunapadu Paavi (குணப்படு பாவி)
ஆகஸ்ட் ஹெர்மன் ஃபிராங்கே (1663-1727) மற்றும் பிலிப் ஜேக்கப் ஸ்பெனர் (1635-1705) போன்றவை ஆகும்.
16 ஆம் நூற்றாண்டில் ஹாலில் இறையியலாளர்களால் நடத்தப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பிந்தைய லூதரனிசத்தின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான லூத்தரன் இறையியலில் வேரூன்றி இருந்துள்ளார். மார்ட்டின் லூதரின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் போதனைகளை நன்கு அறிந்திருந்தார்.
ஸ்பர்ஜனின் படைப்புகளை மிகவும் விரும்பி படித்தார் அவரது பல புத்தகங்களை அவரது நூலகத்தில் வைத்திருந்தார். சாமுவேல் தமிழ் ஸ்பர்ஜன் என்று அழைக்கப்பட்டார், ஜேர்மன் மிஷனரிகளீன் லூதரனிசத்தின் கருத்துகளை ஆழ்ந்து அறிந்திருந்தார்.
இந்தியாவை ஜேர்மன் மிஷனரிகள் வெளியேற வேண்டிய நேரம் வந்தபோது, தலைமையை ஆங்கிலிக்கன் சர்ச் முறையை பின்பற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இது பைபிள் மாதிரியின்படி இல்லை என்று ரெவ. என். சாமுவேல் உணர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். மாற்றம் தவிர்க்க முடியாதது என்பதை அவர் உணர்ந்தபோது, 1921 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர் தனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய T.E.L.C ஐ விட்டுவிட்டு, மிசோரி மிஷனில் சேர்ந்தார். ஆனால் 1927 இல் அவர் இறப்பதற்கு சற்று முன்பு அவர் T.E.L.C-க்கு திரும்பினார்.
சென்னையில் உள்ள குருகுல லூத்தரன் இறையியல் கல்லூரியில் வகுப்பில் கற்பித்து கொண்டு இருக்கும் போது இறந்தார்
இவருடைய சங்கீத அமைப்பு இந்திய பாரம்பரிய இசையோடு கலந்து இருந்தது. தற்போது கிறிஸ்தவத்தில் பின்பற்றி வரும் இசை ஆங்கிலிக்கன், அமெரிக்கன் உள்ளூர் சினிமா குத்து பாடல் ரகத்திற்கு மாறி வந்துள்ளது ஒரு அவலமே.
தற்கால கிறிஸ்தவ தலைமுறை பாரம்பரிய இசை நடனம் சார்ந்து பயணிக்க சங்கீத ஞானம் பெற சாமுவேல் அவர்களின் இசைக் கோர்வை நிச்சயமாக வழி வகுக்கும்.
தற்போது தமிழக கிறிஸ்தவம் இந்திய பாரம்பரிய இசைக்கும் தங்களுக்கும் பொருத்தம் இல்லாதது போல் ஒரு அறிவின்மையில் மூழ்கி உள்ளனர்.
இந்திய இசை இசைக்கருவிகள் கிறிஸ்தவ பாடல்கள் வழியாக மீளூருவம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
மேலும் சாமுவேல் பாடல்கள் இன்னும் முழுதாக தொகுக்கப்படவில்லை. ஐரொப்பிய மிஷினரிகள் வாழ்க்கை வரலாறு போன்று நமது உள்ளூர் ஊழியர்கள் /மிஷினரிகள் பற்றி காத்திரமான தகவல்களும் இல்லை என்பதும் பெறும் குறையாக உள்ளது.
வேதநாயகம்
சாஸ்திரியார் ஒரு தமிழ் கவிஞர், நாடக ஆசிரியர், அறிஞர், இறையியலாளர் மற்றும் பாடலாசிரியர்
ஆவார். பெத்லகேம் குறவஞ்சி (1800) போன்ற நாடகங்கள் மற்றும் அறநதிந்தம் (1837) போன்ற
இறையியல் நூல்கள் உட்பட மொத்தம் 133 நூல்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். தமிழ் கிறிஸ்தவ கீர்த்தனை பாரம்பரியத்தில் இன்றும்
பயன்படுத்தப்படுகிறது.
வேதநாயகம்
1774 ஆம்ஆண்டுசெப்டம்பர் 7 ஆம்தேதி,திருநெல்வேலியை சேர்ந்த தேவசகாயம்மற்றும்ஞானபூஎன்ற பெற்றோருக்கு பிறந்தார்.வேதநாயகம்ஆரம்பத்தில்வேதபோதகம்என்றுஅழைக்கப்பட்டார்.
இவரதுமூத்தசகோதரிக்குசூசையம்மாள்என்றும், தங்கைக்குபாக்கியம்மாள்என்றும்பெயர்சூட்டப்பட்டு இருந்தது. வேதநாயகம்தனதுஐந்தாம் வயதில் இருந்துஇலக்கணம்பயின்றார். அவருக்குஏழுவயதாகஇருந்தபோதுஅவரதுதாயார்இறந்துவிட்டார். 1783 இல்,
அவரதுதந்தைவேதநாயகம்ஒருதனியார்ஆசிரியரின்கீழ்இலக்கியம்மற்றும்கணிதம்கற்கஏற்பாடுசெய்தார்.
தேவசகாயத்திற்கு
கத்தோலிக்க
சபை தேவாலயத்தில்ஏற்பட்டபிரச்சனையால், 1785 ஆம்ஆண்டுதனதுகுழந்தைகளுடன்தஞ்சாவூருக்குகுடிபெயர்ந்தார். அங்குஜெர்மன்லூத்தரன்மதபோதகர்கிறிஸ்டியன்ஃபிரெட்ரிக்ஸ்வார்ஸின்செல்வாக்கின்கீழ்புராட்டஸ்டன் சபையைஏற்றுக்கொண்டனர்.
சுமார்பத்துவயதில்இருந்த
போதேசிலுவைபற்றியதெளிவானபார்வைவேதநாயகத்திற்கு இருந்தது.
நான்கு
மாதங்கள்கழித்து, தஞ்சாவூரில்இருந்து
திருநெல்வேலிக்குத்திரும்பினார்
வேதநாயகத்தின் தந்தையார். 1786 ஆம்ஆண்டில், ஜெர்மன்மிஷனரி, ரெவ. கிறிஸ்டியன்ஃபிரடெரிக்ஸ்வார்ட்ஸ் திருநெல்வேலிக்குவந்து, வேதநாயகத்தைதரங்கம்பாடியில்உள்ளலூத்தரன்செமினரியில்இறையியல்கற்க தன்னுடன்தஞ்சைக்குஅழைத்துச்சென்றார்அப்போதையதஞ்சாவூரின்மராட்டியமன்னரானதுல்ஜாஜியின்மகன்இளவரசர்செர்போஜி
(பின்னர்மன்னர்செர்போஜி II)
ஸ்வார்ஸின்மாணவராக இருந்தார்.
வேதநாயகத்துடன்சர்போஜிவாழ்நாள்நட்பைவளர்த்துக்கொள்ள இந்த பாடசாலை நட்பு காரணமாக அமைந்தது.
தரங்கம்பாடியில்உள்ளலூத்தரன்இறையியல்செமினரியில்பேராசிரியர்களானடாக்டர்ஜான், டாக்டர்கம்மரர்மற்றும்ரெவ். ஜோஹன்பீட்டர்ரோட்லர்ஆகியோரிடம் 1789-91 இல்,
வேதநாயகம்பயின்றார்.
ஜெர்மன்மற்றும்ஆங்கிலமொழிகளிலும்புலமைபெற்றார். தனது 19 வதுவயதில், தஞ்சாவூரைச்சுற்றியுள்ளஊர்களில்நற்செய்திபள்ளிஆசிரியராகப்பணியாற்றி, இலக்கியம், கணிதம், நெறிமுறைகள்கற்பித்தார்.
பின்னர்தஞ்சாவூர்வேதாகமக்கல்லூரியின்முதல்வரானார். இக்காலத்தில்பராபரன்மாலை (இறைவனைத்துதிக்கும்மாலை), ஞானஎட்டப்பாட்டு
(ஞானப்பாடல்கள்), ஞானவழி (தெய்வீகவழி), ஆதிஆனந்தம், பரமநீதிபுராணம் (இறைநீதியின்கதை) போன்றநூல்கள்இயற்றப்பட்டன.
பேச்சுவழக்குதமிழில்எழுதப்பட்டிருந்ததால், மாணவர்கள்எளிதில்புரிந்துகொள்ளக் கூடியதாகஇருந்தது. 133 புத்தகங்களைஎழுதியுள்ளார். ‘பெத்லகேம்குறவஞ்சி’
மிகவும்பிரபலமானபடைப்பு ஆகும்.சென்னை,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் வேதநாயகம் கிறிஸ்தவ மதத்தை போதித்து வந்துள்ளார்.
அவரதுமுன்னாள்வகுப்புத்தோழரானஇளவரசர்செர்போஜிதஞ்சையின்அரசரானதும், வேதநாயகத்தைஅதிகாரப்பூர்வநீதிமன்றக்கவிஞராகநியமித்ததும்அவரதுவாழ்க்கையில்ஒருதிருப்புமுனையாகஅமைந்தது..
இறையியல், வானியல், கணிதம், உடலியல்
மற்றும் சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளில் அவருக்கு அறிவு இருந்தது. அவருக்கு ஞானதீப
கவிராயர் (தெய்வீக ஒளியின் கவிஞர்களில் மன்னர்) வேதசாஸ்திரிகள், ‘சுவிசேஷகவிராயர்’ எனப்பல்வேறுபட்டங்கள்வழங்கப்பட்டன உட்பட பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரின்
இறுதி மராட்டிய மன்னரான இரண்டாம் செர்போஜியின் அரசவைக் கவிஞராக 1829-32 இல், பணியாற்றினார்.,
தனதுதந்தைமற்றும்ஸ்வார்ஸின்விருப்பத்தின்படிதனதுஉறவினர்வியாகம்மாளை 1795 இல்,
வேதநாயகம்மணந்தார். ஆனால்ஒருவருடத்தில் பிரசவத்தின்போதுவியாகம்மாள்இறந்துவிட்டார். பிப்ரவரி
13, 1798 இல்ஸ்வார்ஸ்இறந்தார். அடுத்தஆண்டு, யாழ்ப்பாணத்தில்வைத்து வேதனாயகம் தந்தை தேவசகாயம்நோய்வாய்ப்பட்டுஇறந்தார். இந்தமரணங்களுக்குஇரங்கல்தெரிவித்துவேதநாயகம்இயற்றியபாடல்கள்பராபரன்மாலை, ஜெபமாலைமுதலியவற்றில்காணப்படுகின்றன.
1798 இல்தஞ்சாவூரின்மன்னராகமுடிசூட்டப்பட்டஇரண்டாம்செர்போஜி, வேதநாயகத்தைதனதுமூத்தசகோதரனாகக்கருதினார்.
கிறித்தவத்தைஎதிர்க்கும்அணுகுமுறைஅரசவைகளில் இருந்தபோதிலும், வேதநாயகம்மேல்
தனதுநம்பிக்கையைவைத்து இருந்தார். இந்தகாலகட்டத்தில்அவர்தெலுங்கு, சமஸ்கிருதம்மற்றும்லத்தீன்மொழிகளிலும்அறிவைப்பெற்றார்.
1832 இல், செர்போஜி
II இறந்தார். அவரதுவிருப்பப்படி, வேதநாயகம்தனதுபையரால்ஒருபாடலைஇயற்றிபாடியபின்னரேஅவரதுஉடல்கொண்டுசெல்லப்பட்டது. செர்போஜியின்மகனும்வாரிசுமானதஞ்சாவூரைச்சேர்ந்தசிவாஜி, வேதநாயகத்தைஆதரிப்பதில்அவரதுதந்தையைப்பின்பற்றவில்லை.
எனவே, வேதநாயகத்தின்சீடர்கள்கலைந்துசென்றுதாங்களாகவேஊழியத்தைத்தொடர்ந்தனர். வேதநாயகம்பணப்பற்றாக்குறையால்அவதிப்பட்டுவந்தார். இருப்பினும், அவரதுபாடல்களைப்பாராட்டியபிரபுக்கள்மற்றும்செல்வந்தர்கள்அவருக்குபரிசுகளைஅனுப்பினர்.
பிரிட்டிஷ்அதிகாரிடேவிட்ஓக்டர்லோனியின்கீழ்சிலஜெர்மானியர்கள்அவருக்குபணப்பரிசுகளையும்வழங்கினர்.
வேதநாயகத்திற்குமூன்றாவதுமனைவிவரோடயம்மாளுடன், மூன்றுகுழந்தைகள்இருந்தனர்: நோவாஞானதிக்கம் (1830-1902), எலியாதேவசிகாமணி
(1834-1908) என்றஇரண்டுமகன்கள்மற்றும்மனோன்மணிஎன்றமகள். எலியாதனதுதந்தையின்காலக்ஷேபங்களில்பாடல்களைஇயற்றுவதன்மூலமும், மதச்சொற்பொழிவுகள்செய்வதன்மூலமும்உதவினார். நோவாஞானதிக்கம்மனைவி
அருளம்மாள் மகன் வேதநாதம்ஆவர்.
மனோன்மணிதன்தந்தையின்சொற்பொழிவுகளின்போதுபாடல்களைப்பாடுவதும்பைபிளைப்படிப்பதும்வழக்கம். 24 வயதில்மாசிலாமணியைமணந்துவேதசாஸ்திரம்என்றமகள் உள்ளார். ஆங்கிலம்மற்றும்தமிழ்கற்பிக்கும்ஆசிரியையாக பணியாற்றி வரும் போது 1861
இல்நாகப்பட்டினத்தில்இறந்தார்.
தனது
20வதுவயதில்ஊழியத்தைஆரம்பித்த
துரைராஜை சபை மக்கள்மூன்றாம்சாஸ்திரியார்என்றுஅழைத்தனர். 25 வயதாகஇருந்தபோது , அவரதுதந்தைஜெயசீலன்வேதநாயகம்சாஸ்திரியார், திருநெல்வேலிமாவட்டம்வடகன்குளத்தைச்சேர்ந்ததிருமானுவல்பிள்ளையைஅணுகி,
தனதுமகன்துரைராஜுக்குத்தன்மகள்சுசீலாவைத்திருமணம்செய்துவைக்கக்கோரினார். வழக்கப்படிதிருமணம்நிச்சயிக்கப்பட்டது. துரைராஜின்மாமனார்திரு.மானுவல்பிள்ளை
I.E.L.C லூத்தரன்சபையின்போதகராகஇருந்தார்.
துரைராஜின்மனைவிசுசீலாதனதுஆசிரியர்பயிற்சியைமுடித்திருந்தார்,
மலேசியா,
சிங்கப்பூர்
வளைகுடாநாடுகள், புருனே, சிரிலங்காமற்றும்சிலஐரோப்பியநாடுகளான
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்துமற்றும்லண்டன்உள்ளபல்வேறுதேவாலயங்களில்இசைமூலம்கடவுளின்வார்த்தையைபகிர்ந்துகொண்டார்.
வண்ணாரப்பேட்டைகிறிஸ்துசபையின்சபையினர்அவருக்குகாலட்சேபத்தைத்தொடங்கசிலநேரங்களில்அணியும்பட்டத்தைநினைவுகூரும்வகையில்அவருக்குதலைக்கவசம்அளித்தனர். 1988 ஆம்ஆண்டுஉலகத்தமிழ்கிறிஸ்தவப்பேரவையால் 'நற்செய்திச்செல்வர்' என்றபட்டமும்அவருக்குவழங்கப்பட்டது, ஆகஸ்ட் 2003 இல்கல்கத்தாசேரம்பூர்பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டசென்னைகுருகுலபைபிள்மற்றும்ஆராய்ச்சிக்கல்லூரி "கிறிஸ்தவா" என்றபட்டத்தைவழங்கிக்கௌரவித்தது. சங்கீதரதனா" மற்றும் "ஈரைசைசெம்மல்". செப்டம்பர்
10, 2005 அன்று, இந்துஸ்தான்பைபிள்செமினரிஅவருக்கு
"டாக்டர்ஆஃப்டிவைனிட்டி" விருதைவழங்கியது.
இவர்இசையமைத்தபாடல்கள்கேசட்டுகளாகவும், குறுந்தகடுகளாகவும்பதிவுசெய்யப்பட்டுவெளியிடப்படுகின்றன. துரைராஜ்இசையமைத்துள்ளார் பாடல்களைஇவராலும்இவரதுமகன்கிளமென்ட் https://www.jeyamohan.in/182474/வேதநாயகம்சாஸ்திரியாலும்பாடியுள்ளனர். கிளமெண்ட் புகழ்பெற்ற வேதநாயகம் சாஸ்திரியாரின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர். தந்தை துரைராஜ் வேதநாயகம் சாஸ்திரியாருக்குப் பின் கிளமெண்ட் அடுத்த வேதநாயகம் சாஸ்திரியார் என பட்டம் பெற்றுள்ளார்.