27 May 2020

திரைப்படம் Escape from Sobibor


போலந்தில் இருந்து யூதர்களை சோபிபோர் என்ற இடத்திற்கு கொண்டு வருவதுடன் திரைப்படம் Escape from Sobibor ஆரம்பிக்கிறது. 1987 ல் வெளிவந்த திரைப்படம்.
குடும்பம் குடும்பமாக வந்திறங்கிய யூதர்களில் இருந்து தொழில் தெரிந்த திறமையான (சிறுவர்களையும் முதியவர்களையும் தவிர்த்து) நல்ல வேலை செய்ய திராணியுள்ள பெண்களும் ஆண்களுமாக 600 பேரை தேர்ந்தெடுத்து நாசிகளின் வதைமுகாமில் அடைத்து வேலை வாங்குகின்றனர்.
மீதமுள்ள குழந்தைகள், பெண்கள் முதியவர்களை கொன்று எரிப்பதை தூரத்தில் இருக்கும் தங்கள் முகாமில் இருந்து பார்த்து நொறுங்குகின்றனர். இந்த வதை முகாமில் ( Auschwitz-Birkenau and Treblinka ) மட்டுமே 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
அப்படியான கொடும் வதை முகாமில் இருந்து ஒரு முறை 2 பேர் தப்பித்து செல்கின்றனர். பிடிபட்ட 13 பேரை உன்னுடன் ஜோடியாக சாவதற்கு ஆட்களை நீயாகவே தேர்ந்து கொள் என கொடுமையான நாசி அதிகாரி கட்டளை இடுவான். வேறு வழியற்று அவர்கள் தங்களுக்குள்ளே தேர்ந்தெடுத்து 26 பேர் கொல்லப்படுவார்கள். இந்த நிகழ்வு அவர்களுக்குள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. லியோன் தலைமையில் தப்பித்து போக ஆலோசித்து கொண்டிருப்பார்கள். அந்த காலயளவில் ரஷியாவில் இருந்து யூதர்களை கொண்டு வந்திருப்பார்கள். அந்த கூட்டத்தில் இருந்த சாஷி என்ற ராணுவ வீரனின் வழிகாட்டுதலில் 11 நாசி அதிகாரிகளை கொலை செய்து விட்டு 600 பேர் தப்பிக்க முயன்று 300 பேர் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைவார்கள்.
இந்த திரைப்படம் ஜாக் கோல்டால் இயக்கப்பட்டது. படம்பிடிப்பு யுகோஸ்லாவியாவில் அவலாவில் நடந்துள்ளது. ரிச்சார்டு றாஷ்கீயின் புத்தகத்தை(Richard Rashke's 1983) ஆதாரமாக கொண்டு இதன் திரைக்கதை ரெஜினாட்டு ரோஸால் எழுதப்பட்டது.
இந்தப்படத்தில் சிறந்த நடிப்பிற்கு என க்ளோபன் கோல்டு விருது Hauer க்கு கிடைத்துள்ளது. இந்த வதை முகாமில் இருந்து தப்பித்த Esther Raab இக்கதை வடிவமைப்பிற்கு பெரிதும் உதவியுள்ளார்.
தப்பித்த வரலாறு முதலும் கடைசியுமாக இருந்ததால் ஜெர்மென் அதிகாரிகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தலைமை அதிகாரியாக இருந்த Heinrich Himmler கட்டளைப்படி வதை முகாமை உடைத்து தறைமட்டமாக்கி, மண்ணிட்டு மூடி அதன் மேல் மரங்களை நட்டு வளர்த்தி, கைதிகள் தப்பித்து போன நிகழ்வை மறக்க முயன்றனர் ஜெர்மன் அதிகாரிகள்.
இந்த வதை முகாமில் தான் மிகவும் கொடூர குணம் கொண்ட சென்னாய் என்று அழைக்கப்பட்ட Wagner பணியாற்றி வந்துள்ளான்.போருக்கு பின்னால் வாக்னர் ஆயுள் தண்டனை பெறப்பட்டாலும், பெல்ஜியம் தப்பித்து போய் ஒரு பணக்காரர்கள் வீட்டில் வேலைக்காரனாகவும் , பின்பு பைத்தியக்காரனாகவும் தலைமறைவாக தெருவில் வாழ்ந்து வந்த இவன் தனது 60 வது வயதில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் உண்டு.
இந்த படத்தின் தேவையும் முக்கியவும் யூத மக்களின் ஆக்கபூர்வமான நம்பிக்கையான மனநிலையாகும்.
மரணத்தின் பிடியிலும் உழைப்பாளிகளாக சிந்தனை தெளிவுள்ளவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் ஒற்றுமையை பேணும் படி இருப்பார்கள். தங்களுக்குள்ளான மகிழ்ச்சிக்கும் பாடலுக்கும் நடனத்திற்கும் இடம் கொடுத்திருப்பார்கள்.
ஒருவருடைய மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டு விடுவார்கள். தான் தப்பிப்பதே எதிராளிக்கு செய்யும் பகைமீட்டல் எனக்கூறி தங்கள் உயிரை தற்காத்து கொள்ள தன் குடும்பம் குழந்தைகள் கணவரை இழந்த பெண் நம்பிக்கை கொடுத்து உணவை உண்ண நிர்பந்திப்பாள்.
ஒரு இடத்தில் தானே தன்னுடன் கொல்லப்பட ஆட்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழல் வரும். முதலில் மறுப்பார்கள். மரணத்தின் பிடியில் கூட அடுத்த குடும்பங்களை ஈடாக்காது தங்கள் குடும்பத்தினரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒரு முக்கிய பெண் பாத்திரம். தப்பிக்கும் திட்டத்தில் சாஷிக்கு காதலியாக நடிக்க வேண்டும். உண்மையாகவே காதலில் ஆட்பட்டு விடுவார். ஆனால் சாஷியோ தனக்கு மனைவி, மகள் உண்டு எனக்கூறி அக்காதலை ஏற்க இயலாதவராக இருப்பார்.
அப்பெண் அவருக்கு பரிசளித்த சட்டை தற்போதும் வதைமுகாம் நினைவாக ம்யூசியத்தில் உண்டாம்.
வதை முகாமிலுள்ள தையல் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண் தன் கைக்குழந்தையை காப்பாற்ற பெரும்பாடு படுவார். அக்குழந்தையும் தாயும் கண்டுபிடிக்கப்பட்டு வாகனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
வதைமுகாம் கைதிகள தப்பிக்க தலைமை தாங்கிய லியோன் பெஃட்ஹென்லெரின் சாதுரியம் இப்படத்தில் லியோனாக நடித்த நடிகர் அலனின் நடிப்பும் இயல்பானது.
அலன் தப்பித்து போலண்டு சென்று, மறைவு வாழ்க்கையின் போது இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு முன்பே தன் நாட்டு எதிர் அரசியல்வாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார் என்ற செய்தி துயரை தருகிறது.
இப்படியாக பெற்றோரை இழந்து காதலர்களை இழந்து தன் குழந்தை, குடும்பம் மனைவியை இழந்த துயர்களை சந்தித்து மீளாத்துயரிலும் மீண்டு எழுந்த யூதர்களை நினைத்து பார்ப்பது நமது வாழ்க்கைக்கும் அர்த்தம் தருவதே.
படத்தின் சிறப்பே அதை எடுத்த விதம் தான். இயல்பு மாறாது இரண்டாம் உலகப்போர் வதைமுகாமுக்குள் நம்மை சென்று விட்டனர். எல்லோரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சிறப்பாக, போர் மேல் தீராத மோகம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம். பல அறன்களை போதிக்கும் படவும் கூட.
https://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGIhttps://www.youtube.com/watch?v=_A-_Q68fKGIQ68fKGI



0 Comments:

Post a Comment