27 May 2020

ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா

தமிழகத்தில் கடைசியாக பட்டம் கட்டப்பட்டு 21 நூற்றாண்டில் வாழ்ந்து வந்த கடைசி ஜமீன் சிங்கம்பட்டி முருகதாஸ் தீர்த்தபதி ராஜா இன்று காலம் சென்றார்.
முதலாமது பட்டம் கட்டப்பட்டவர் ஆபோதாரணத்தேவர், 31 ஆவது பட்டம் திருமிகு டி என் எஸ் முருகதாஸ் தீர்த்தபதிக்கு அருளப்பட்டது. சங்கர தீர்த்தபதி மகாராஜா, இராணி வள்ளிமயில் நாச்சியாருக்கும் மகனாய் 29-09-31 ல் பிறந்தார்.
இவருடைய தந்தையை சிறுவயதில் இழந்ததால் ஆங்கிலேய அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சிறுவர் காப்பாளர் நீதிமன்றத்தின் பராமரிப்பில் வளர்ந்தவர். பள்ளிப்படிப்பு பாளையம்கோட்டை புனித இன்னாசியார் பள்ளியிலும், உயர் கல்வி சேலம் ஏற்காடு மான்பாட் பள்ளியிலும், மேற்படிப்பு இலங்கை கண்டியிலுள்ள டிரினிட்டி கல்லூரியிலும் முடித்துள்ளார்.
கி. பி1100 வருடங்களுக்கு பின்பு ஆயிரம் வருடம் குறுநில மன்னர்களாகவும், (சிற்றரசர்களாக), பாளையக்காரர்களாகவும், ஜமீன்களாகவும் வாழ்ந்து வந்தவர்கள் சிங்கம்பட்டி ஜமீன்கள்.
பாண்டிய மன்னர்கள் ஆட்சியை வீழ்த்திய நாகநாயக்கர்கள், நிலத்தை 72 பாளையங்களாக பிரித்தனர். அதில் ஒன்று தான் சிங்கம்பட்டி ஜமீன்.
இவர்கள் வீரபராக்கிரமங்களை கண்ட மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தென்னாட்டு புலி என பட்டம் சூட்டி மகிழ்ந்தார். சேரநாட்டு மார்த்தாண்ட வர்மாவிற்கு ஆட்சியை பிடிக்க உதவி புரிந்ததால் சிங்கம்பட்டியாரின் மகன் நெஞ்சில் அம்பு பாய்ந்து இறந்தால் நன்றி கடனாக சேரநாட்டு உமையம்மை ராணி கொடுத்த பட்டம் தான் 'நல்ல குட்டி'.
சேரநாட்டு மன்னர் எங்களுக்காக உங்கள் இளவரசர் வீரமரணம் அடைந்து விட்டார். ஒரு காட்டை தருகிறேன் என்று மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள 80 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியும், 5 கிராமங்களும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளடங்கிய 8 கோயில்கள், 5000 ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் அடங்கிய பகுதியும் கொடுத்துள்ளார்.
ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை சிங்ஙம்பட்டி ஜமீன் இதை அனுபவித்து வந்துள்ளது. இவர்களுக்கு கிடைத்த 80 ஏக்கர் நிலப்பரப்பில் தாமிரபரணி நதி, துணை நதிகளான மணிமுத்தாறு, பச்சையாறு, பாணதீர்த்தம் கல்யாணதீர்த்தம் அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி போன்றவைக்கு அதிபதியான சிங்கம்பட்டி ஜமீனை தீர்த்தபதி என்றும் அழைத்து வந்தனர்.
30 வது ஜமீன் திருமிகு சங்கர சிவ சுப்பிரமணிய தீர்த்தபதி ராஜா; சென்னையில் கல்வி கற்கும் வேளையில் ஒரு கொலைக்குற்றத்தில் மாட்டுப்பட்டார். இந்த வழக்கில் ஏற்பட்ட பணவிரயம் ஜமீனை ஆடச்செய்தது . 8000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடேஸ் கம்பனிக்கு குத்தகைக்கு கொடுத்தனர் அதுவே மாஞ்சோலை எஸ்டேட்.
குத்தகை காலம் முடிந்தாலும் ஆங்கிலேய அரசிற்கு கட்ட பணம் இல்லாததால் எஸ்டேட்டை ஆங்கிலேயர்களிடம் கொடுத்து விட்டார், தற்போது காலம் சென்ற ஜமீன்தார்.
இவர் 50 ஆண்டு காலமாக ஆன்மீக பணியில் இருந்தவர். எல்லா மக்களோடும் அன்பாகவும் கருணையோடும் பழகத் தெரிந்தவர்.
இவருக்கு தென்பொதிகை சித்தர், இந்து ஆலய பாதுகாவலர், சிவஞானச் சித்தர், சித்தாந்த சிகாமணி, சித்தாந்த சிந்தாமணி, மூதறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
முகவை மன்னரும், தாய் மாமாவுமான அப்போதைய காமராசர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து திரு சண்முக இராஜேஸ்வர சேதுபதியின் மகள் இராணி சேதுபர்வதவர்த்தினி இவர் மனைவி ஆவார். இரு ஆண் 3 பெண் பிள்ளைகள்.
எளிமையின் உருவாக வாழ்நது வந்த மன்னர் மக்களின் நேசத்திற்கு உரியவராக 'வாழும் சித்தர்' என அறியப்பட்டு இருந்தார். தமிழும் சைவவும் இரு கண்களாக இருந்தாலும் ஆங்கிலத்தில் தான் மிகவும் சரளமாக கதைப்பார்.
ஒரு முறை, திருநெல்வேலி புகைப்பட குழுமம்
Nellai Weekend
தலைமையில் தமிழ்நாடு புகைப்பட கலைஞர்களுடன் சிங்கம்பட்டி அரண்மனையின் ராஜாவை சந்தித்திருந்தோம்.
எங்களின் ஆவலான பல கேள்விகளுக்கு, சிலரின் ஆர்வக்கோளாறான கேள்விகளுக்கு கூட பொறுமையாக பதிலளித்தார்.
அதில் ஒரு கேள்வி இப்போது நினைவில் உண்டு. எதனால் மன்னராட்சி வீட்சியடைந்தது எனக்கேட்ட போது பெண்களுககு செய்த தீங்கிற்கும் துரோகங்களுக்கும் என பதிலளித்தார். எங்களுக்கு பிஸ்கட் காப்பி வழங்கினார்.
அடுத்த முறை சொறிமுத்து ஐய்யனார் கோயிலுக்கு மாணவர்களுடன் சென்ற போது தன் தனிச்செயலரை அனுப்பி எங்களுக்கான எல்லா வசதிகளையும் வழங்கினார்.
12 புத்தக ஆசிரியர்களில் ஒருவரான என்னுடைய இரண்டாவது புத்தகத்தையும் வெளியிட்டது, ஜமீன் என்பது எனக்கு பெருமை.
கண்ணில் குடிகொள்ளும் நேசவும், கருணையும், நடவடிக்கையில் உள்ள எளிமையும் மேன்மையும் நினைவில் உள்ளது.
தன்னுடைய வாழ்நாளில் மன்னராகவும் பின்பு ஜமீனாகவும், பின்பு அதையும் இழந்து சாதாரண பிரஜையாகவும், ஆனால் மக்கள் மனதில் எப்போதும் மன்னராக வாழ்ந்து மறைந்த ராஜாவிற்கு வணக்கங்களும் அஞ்சலிகளும்.
Photo courtesy: Nellai weekend clickers members,
Madhan Sundhar
,
Muthu Kumar
,
Monsoon Monk
,
Bless Boss
Naren K Narendran, Madhan Sundhar and 130 others
25 comments
37 shares
Like
Comment
Share

0 Comments:

Post a Comment