27 May 2020

பொதிகை மலை


வடநாட்டிற்கு இமயமலை போன்றது தென்னகத்திற்கு பொதிகை மலை. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி ஆகும்.தாமிரபரணி தோன்றுவதும் பொதிகை மலையில் தான். அகத்தியர் வாழ்ந்ததும் இந்த மலையில் என்கின்றனர். அகத்தியர் மலை, மலையம்,தென்மலை, தொன்மலை, தமிழ்மலை, செம்மலை, சிவன்மலை என பல பெயர்களில் அறியப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிகரம் தொட்டபெட்டாவிற்கு அடுத்தது பொதிகைமலை. அகத்தியருக்கு முருகன் தமிழ் கற்றுக்கொடுத்த மலையும் இதுவே.
இந்த மலையின் ஒரு பகுதி திருநெல்வேலி மாவட்டத்தையும் மற்றொரு பகுதி கேரளா நாட்டையும் சேர்ந்தது. பாண்டிய சேரநாட்டின் எல்கையாகும்.
சித்திர மாதத்தில் மக்கள் இந்த மலையில் பயணம் ஏற்படுகின்றனர்.
பல வகை மூலிகைச்செடிகள்,தேக்கு, கோங்கு , வேங்கை போன்ற மரங்கள், யானை, புலி, கடுவன் , சிங்கவால் குரங்குகள் கரடி போன்ற மிருகங்கள் உண்டு.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6200 அடி உயரத்தில் உள்ள மலை இது.
பழங்குடி மக்களான குறவர்கள், காணிக்காரர்கள், பளியர்களும் இங்கு வாழ்கின்றனர்.
அதே போல் பல சித்தர்கள் வாழ்கின்றனர். கோயில்கள், கோட்டைகள் , அணைகள், நீர் வீழ்ச்சிகள் இங்கு உண்டு. பல நதிகள் இங்கிருந்தே உற்பத்தியாகிறது.
பொதிகை மலையில் ஓராண்டுக்கு 200 மைல் பரப்பளவில் 300 அங்குலம் மழை பெய்வதால் தான் திருநெல்வேலி, துத்துக்குடி பகுதிகள் எப்போதும் வளமையாக உள்ளது.
வருடம் ஒரு முறை, எங்கள் மாணவர்களுடன்; தாமிரபரணி நதிமேல் அக்கறை கொண்ட எழுத்தாளர், ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியின் கவனத்தை உலக அளவில் திருப்பிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசர் வழி காட்டுதலில் பொதிகை மலையூடாக பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
Agasthiyar Falls, Tirunelveli.
பொதிகை மலை நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளது.
வருடம் முழுதும் விழும் நீர் வீழ்ச்சி அகத்தியர் அருவி இங்கு தான் உள்ளது.
இந்த இடத்தில் தான் அகத்திய முனிவருக்கு முருகன் தமிழ் கற்றுக் கொடுத்துள்ளார். இங்கு அகத்தியர் மற்றும் முருகபெருமானின்கோயிலும் உண்டு.
இந்த மலையை பற்றி வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட்டுள்ளது.
இந்த மலை பாண்டிய நாட்டின் மேற்கு எல்லையாகவும் சேரநாட்டின் கிழக்கு எல்லையாகவும் இருந்துள்ளது.
பொதிக மலையை செம்மலை என்று அழைக்கின்றனர். இந்த மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு செவ்வாறு என்றும் அழைக்கின்றனர்.

பாண்டியன் கோட்டை- பாபநாசத்தில் உள்ளது மேலணை. இந்த அணை கட்டும் முன் இருந்த நீலகண்டகசத்தை பற்றிய சுவாரசியமான ஆனால் சோகமான ஒரு கதை உண்டு.
பாண்டிய மன்னர் ஒருவர் எதிரிகளிடம் இருந்து தப்பித்து போய் இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். அவரின் மந்திரி தான் நீலகண்டன். எதிரிகள் உங்களை சுற்றி கொண்டுள்ளார்கள் என்றுள்ளான் மந்திரி. மன்னர் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தானே தன் தலையை கொய்து தன் உயிரை மாய்த்து கொண்டாராம். மன்னருக்கு கொடுத்த தகவல் தவறு என பின்னீடு புரிந்து கொண்ட மந்திரி இந்த கசத்தில் விழுந்து உயிர் விட்டுள்ளார். அதனால் இந்த கசத்தை நீலகண்ட கசம் என அழைக்கின்றனர்.

ஒரு சமூகத்தின், இயற்கையின் பாதுகாப்பு இளைஞர்களிடம் எட்டவைப்பதே கல்வியாளர்களின் கடமை.

0 Comments:

Post a Comment