இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழகம் சுற்றுலாவுக்கு தகுந்த இடமாக விளங்குகின்றது. பல்லாயிரம் வருடம் பழமையுள்ள தமிழகத்தை சுற்றி பார்க்க வருடத்திற்க்கு 5கோடி 62 லட்சத்திற்க்கும் மேலான உள் நாட்டினரும், 50 லட்சத்திற்க்கு மேலான வெளி நாட்டினரும் வந்து செல்கின்றனர்.
இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலையாகி உலகை கண்டு ரசிக்கவும் நம்மையும் கடந்து மற்றவர்களின் வாழ்க்கை சூழலை நேரில் கண்டு உணரவும் சுற்றலா உதவுகின்றது. வேலை வேலை என, ஒரே வீட்டில் வசித்தாலும் நிம்மதியாக சந்தித்து ஒன்றாக பேசி மகிழ இயலாத சூழலில் சுற்றலா ஒன்று மட்டுமே குடும்பமாக மகிழ்ச்சியாக பயணிக்கும் வாய்ப்பை தருகின்றது. மன அழுத்தம் மற்றும் வெறுமையான சூழலில் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி தருவதாக சுற்றுலா அமைகின்றது என்றால் மிகையல்ல. வெளிநாட்டினர் வருடத்திற்க்கு ஒரு மாதம் சுற்றுலா என செலவிடுவது போல் நம் சூழலில் சாத்தியம் இல்லாவிடிலும் சுற்றுலா எல்லா மக்களையும் கவரும் ஒரு பொழுது போக்காக மாறி வருகின்றது.

கடல், காடு, மலை, அருவிகள் என எல்லா நிலப்பகுதிகளும் கொண்ட அழகிய பகுதி நம் தமிழகம். ஆனால் பயணம் என புறப்படும் போது நாம் எதிர் கொள்ளும் பிரட்சனைகள் எண்ணில் அடங்காதவை! பராமரிக்காத நிலையிலும் சுத்தம் சுகாதாரம் அற்ற சூழலில் பொறுப்பற்ற அதிகாரிகளால் சுற்றுலா பயணம் நம்மை இன்பத்திற்க்கு பதில் துன்பத்திற்க்கு இட்டு செல்கின்றது.
தரமான உணவு நியாமான விலையில் கிடைப்பதில்லை, வழிப்பயணத்தில் சுகாதாரமான கழிப்பிட வசதி கிடையாது, முகம் கழுவ கூட தண்ணீர் கிடைப்பது இல்லை. இப்படியாக இல்லை இல்லை என்ற பல இல்லைகளை எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. நாம் பயணிக்கும் வாகனம் பழுதானால் சரி செய்ய நம்மை வழி நடுத்த தகுந்த மேலான்மை இல்லாத நிலையிலே சுற்றுலாத்துறை தன் சேவையை வழங்குகின்றது. அரசு விடுமுறை நாட்கள் நாம் பயணம் மேற்கொள்ளும் போது பல சுற்றுலாத்துறை அதிகாரிகள் அன்று விடுமுறை என அறிவிப்பதால் பல பொழுதும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
சிறப்பாக குற்றாலம் பாபநாசம் போன்ற நீர்நிலைகள் பாப-நோய் நிவாரணி என்பது போய் நோய்களை சுமந்து வரும் இடமாக காட்சி அளிக்கின்றது. குளிப்பதற்க்கு என சோப்பு ஷாம்பு, எண்ணைக் குளியல் என இயற்கையை மாசுப்படுத்தும் சூழலே எங்கும் நிறைந்துள்ளது.. பலபொழுதும் மகிழ்ச்சியாக துவங்கும் சுற்றலா பயணம் சோர்வுடனே முடிகின்றதை காணலாம்.
பேருந்து நிலையங்கள் சாலை ஓரங்கள் எங்கும் சுகாதாரமற்று நாற்றம் கொண்டே காட்சி அளிக்கின்றது. ஒருபுறம் சுற்றுலா தலங்களின் அருகிலுள்ள உணவகங்கள் வியாரக்கடைகள் அசுத்தப்படுத்தலுக்கு காரணம் ஆகின்றது என்றாலும்; சுற்றலா தலங்களுக்கு வரும் பல குடும்பங்கள் இயற்கையின் அழகை ரசிப்பதை விடுத்து உண்ணுவதற்க்கே பிறந்தது போல் தங்கள் கொண்டு வந்த உணவு பொட்டலங்களை உண்ட பின்பு எங்கும் வீசி விட்டு செல்கின்றனர்.
சுற்றலா தலங்களுக்கு வருபவர்கள் அங்கு வரும் மற்று மனிதர்களின் உணர்வுகளை எண்ணி பார்க்காது உல்லாச பானியங்கள் அருந்திய நிலையில் கலங்கிய கண்களுடன் மற்று மனிதர்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்குபடியாக நடமாடுகின்றனர். பெண்களும் தன் நிலை மறைந்து திரைப்படங்களில் காணபது போன்று பொது இடங்களில் ஆடி பாடி உண்மையான பயண மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவிக்கின்றனர்.
சுற்றுலா என்பது ஒரு பயண அனுபவமாக நிகழ வேண்டும் என்றால் ஒருவர் உரிமையை மீறாது அமைதியாக மகிழ்ச்சியான அனுபவங்களை உணர முன் வர வேண்டும். சுற்றுலாத் துறையும் வெறும் பணம் ஈட்டும் துறையாக காணாது தன் மக்கள் மன மகிழ்ச்சிக்கும் உதவும் விதம் சுற்றுலா தலங்களை சிறப்பாக் பாதுகாக்கவும் முன் வர வேண்டும்.
கேரளா அரசின் மேற்பார்வையிலுள்ள பத்மநாப அரண்மனை பாதுகாப்பது போல் நம் சுற்றுலாத்துறை செயல் ஆற்றுகின்றதா என்றால் சந்தேகமே. கோவளம், வேளி போன்ற உலகத்தரம் வாய்ந்த கடலோர பிரதேசங்களை விட அழகான மணப்பாடு, உவரி போன்ற நம்மூர் கடலோர பிரதேசங்கள் கவனிப்பாரற்று கிடைப்பதை அரசு கண்டு உணர வேண்டும்.
அதே போல் அரண்மனைகள், தமிழர்களின் முதல் குடியிருப்பான ஆதிச்சநல்லூர், பாஞ்சாலக்குறிச்சி போன்ற சிறப்பு மிக்க வரலாற்று தலங்கள் நிர்வாக திறன் அற்று கிடப்பதும் வருத்தமே அளிக்கின்றது. பக்தி சுற்றுலாதலங்களும் அந்த அந்த மத தலைமையின் கண்காணிப்புடன் காத்திரமாக பேண முன் வர வேண்டும். உலகச்சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி, திருச்செந்தூர் முருகன் கோயில், கிருஷ்ணன் கோயில் துவங்கி, மக்களிடம் பெறும் காணிக்கைக்கு தரும் பிரதானம் பக்தர்களின் நலனுக்கு தர தவறி விடுகின்றனர் என்பதே நிதர்சமான உண்மை. மத நம்பிக்கையில் பெருமை கொள்பவர்கள் தங்கள் மதநம்பிக்கை சார்ந்த கோயில் குளங்கள், சுற்றுப்புறம் தூய்மையாக பாதுகாக்க தவறுகின்றனர்.

எழுத்தாளரும், மனித நேயரும் சிந்தனையாளரும் சிறந்த பேச்சாளருமான ஆட்சியாளர் இறை அன்புவின் தலைமையில் நிலைகொள்ளும் சுற்றுலாத்துறை அதன் முழுமையான அடையாளத்தை பெறவில்லையே என்பது இன்னும் நமக்கு வருத்தத்தை தான் தருகின்றது. உலக அளவில் நம் கலாச்சாரம், பண்பு, உயர் வரலாற்றுக்கு சாற்றாக அமைய வேண்டிய சுற்றலா தலங்கள், உலகம் நம்மை தூற்றும் நிலைக்கு தள்ளாது இருக்க வேண்டும் என்பதே நம் ஆவல்!
nalla visayam!
ReplyDeletesutrulaa thalam -
paathukaakka padavendiyathu!
azhakaa sonneenga!
kavalaiyaana-
visayamthaan!
taking oil bath in home is good to our health.but if we take bath in river or sea it will spoil environment.well return essay.i wii publish it any leading magazine
ReplyDeleteநல்ல பேராசை.
ReplyDeleteN.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR. · 196 subscribers
ReplyDeleteஅருமையாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். நமது மக்களின் கடமைகளும், அரசாங்கத்தின் கடமைகளும் இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.
T.n. Shanmugam · St. Thomas High School
ReplyDeleteஒரு நல்ல பதிவு. அரசாங்கம் விழித்தெழ வேண்டும்?
Reply · Like · Follow Post · 12 hours ago
J P Josephine Baba · Top Commenter · Lecturer at St.Xavier's College Palayamkottai · 158 subscribers
தங்கள் பின்னூட்டம் என் கருத்துக்களுக்கு வலு சேர்க்கின்றது. நன்றி வணக்கங்கள்!
Reply · Like · 2 seconds ago
Lourdhu Robin · Subscribed · Accountant at Accountant
nice one
Reply · Like · Follow Post · 12 hours ago
N.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR. · 195 subscribers
ReplyDeleteஅருமையாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். நமது மக்களின் கடமைகளும், அரசாங்கத்தின் கடமைகளும் இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.
சுற்றுலா என்பது ஒரு பயண அனுபவமாக நிகழ வேண்டும் என்றால் ஒருவர் உரிமையை மீறாது அமைதியாக மகிழ்ச்சியான அனுபவங்களை உணர முன் வர வேண்டும்.
ReplyDelete>>
மிகச்சசியான வார்த்தை தோழி
ஒரு ஊரை பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டு கிளம்பி செல்வோம். ஆனால், அங்கு போனால் இல்லாதவைகள் நம்மை டென்சன் படுத்தி ஏண்டா இங்க வந்தோம்ன்னு தோண வச்சுடும். அந்தளவுக்கு இருக்கும் நம்ம சுற்றுலா துறையின் அலட்சியம்.
ReplyDeleteநீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.இந்தியாவுக்கு வந்த பல சந்தர்பங்களில் நான் இதை உணர்த்திருக்கிறேன். இயற்க்கை அழகை ரசிக்க முடியாமல் அசுத்தமும், நீண்ட பயணங்களின் போது, கழிப்பிட வசதி இன்மையும், பிச்சைக்காரரும் என்று நிறைய. சுற்றுலா துறை அவசியம் ஆவன செய்யவேண்டும். பயனுள்ள பகிர்வு. நன்றி தங்கை Jos
ReplyDeleteஅருமையாக சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். நமது மக்களின் கடமைகளும், அரசாங்கத்தின் கடமைகளும் இருக்கின்றன. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு நல்ல பதிவு. அரசாங்கம் விழித்தெழ வேண்டும்?
ReplyDeletenice one
ReplyDeleteமிகவும் தேவையான பதிவு.நான் சென்னையில் இருந்து திருநெல்வேலி வரும்போது ஒரு காடு சார்ந்த பகுதியில் தெருவோரமாக வாகனத்தை நிற்பாட்டி "போகிறவர்கள் போய்வாருங்கள்" என்று சொன்னார்கள். அந்த இடம் பயங்கரமான பாம்பு புற்றுகள் இருப்பதாக பக்கத்தில் இருப்பவர் சொன்னார். இந்தியா இன்னும் உல்லாசத் துறையில் வவளர்ச்சி அடைய வேண்டும்.
ReplyDelete