13 Apr 2012

தெருவு நாயும் தெருவோரக் கடைக்காரர்களும்!


சமீபத்தில் தெரு நாயை கட்டுப்படுத்த நடைபாதை கடைகளை ஒழிப்பது அல்லது நெறிப்படுத்துவது நல்லது என தினமணி தலையங்கம் எழுதியிருந்தது. தெரு நாய் தொல்லை! தெருநாயை கட்டுப்பட்டுத்த எத்தனையோ வழிகள் உள்ள போது தெருக்களில் கடை வைத்திருக்கும் மனிதர்களை தெருநாயுடன் இணைத்து வந்த பத்திரிக்கை செய்தி மனித நேயமற்றதும் கண்டனத்திற்க்கு உரியதும் என்பதில் மறுப்பில்லை. இந்த தலையங்கம் எழுத பெரிய உணவக முதலாளிகள் பத்திரிக்கையாளர்களுக்கு இனாம் கொடுத்திருப்பார்களோ என்று சந்தேகம் வலுக்கின்றது. ஆனால் இதை மெய்ப்பது என்று நெல்லையில் ஜங்ஷன் சுற்றி இரவு நேரக் கடைகள் அனுமதிப்பது இல்லை என்பது அரசு சட்டமாக வந்துள்ளது  என்பது சமீபத்திய செய்தி. 


நெல்லையை பொறுத்தவரை  பெரிய கடைகளில் கிடைக்கும் இட்லியை விட நியாயமான விலையில் தெருவோரக் கடைகளில் கிடைக்கும்.  பெரிய கடை என நாம் எண்ணும் பல கடைகள் சுத்தமாக பேணுவதில்லை.  இங்கு பெண் வேலையாட்கள் மலிவாக கிடைக்கின்றார்கள் என்பதற்க்காக துடப்பம், எச்சில் வாளியுடன் ஹோட்டல் மேஜைக்கு மேஜை பெண்களை நிறுத்தியிருப்பார்கள். சாப்பிட்டு முடிக்கும் முன்னே வாளியுடன் அருகில் வந்து நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.  மேலும் புளித்த சாம்பாறு கெட்டு போன சட்டிணியை வாசிக்கையாளர்களுக்கு பரிமாறி விட்டு நம் முகபாவத்தை தூரத்தில் நின்றே அவதானித்து கொண்டிருப்பார்கள். கை துடைக்க  செய்தித் தாள், வாய் கொப்பிளிக்க சுத்தம் இல்லாத தொட்டிகளே பல உணவகங்களிள் உள்ளது. பரிமாறும் மனிதர்கள் கூட சுத்தமாக நிற்பதில்லை.
இதனாலே பல வீடுகளில் தெருவோர கடைகளில் இருந்து பார்சல் ஆக வாங்கி வீட்டில் சென்று உண்ணும் வழக்கம் உள்ளது. மேலும் தெருவோரக் கடைகள் வழியாக பல ஏழைகள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். 



ஜங்ஷனின் தெருவோரக் கடை வைத்திருக்கும் பெரும் பகுதியான மக்கள் மீனாட்சிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் வசித்து வந்தனர். சமீபத்தில் இவர்களை நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் குடியிருப்புகள் அமைத்து வலுக்கட்டாயமாக குடியமத்தினர்.  இம்மக்கள் தங்கள் வியாபாரத்திற்க்கு என மாலை 5 மணி பேருந்தில் சென்று இரவு 10 மணிக்கு திரும்பி வரவேண்டியுள்ளது .   பேருந்து கட்டணம் போய் வர 24 ரூபாய் செலவு ஆகும். டவுண் அருகிலுள்ள குடியிருப்புகளை பிடுங்கியதும் போக  கடைகள் நடத்தவும் அனுமதிக்காது இருப்பதால் இவர்கள் வாழ்வு ஆதாரம் கேள்விக் குறி ஆகி விடும்.  இவர்களும் மற்று மனிதர்களை போல் உயிர் வாழ வேண்டும்; தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.  இச்சூழலில் தற்கொலை அல்லது பட்டிணி மரணம்  ஒன்று மட்டுமே சாத்தியம் ஆகும். ஆனால் அரசு உதவி என்று இனாம் கொடுத்து தன்மானமாக வாழும் உரிமையும் பறிக்கின்றது.

தெருவோர கடைகளால் சுகாதாரம் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என மறுப்பதற்க்கில்லை. இதை நெறிப்படுத்தாது  கடைகளே கூடாது என்பதில் நியாயம் தெரியவில்லை. பல தெருவோரக கடைகள் ஆயிரங்கள் வாடகை கொடுத்தே தெருவில் கடை நடத்துகின்றனர். மேலும் போலிஸ், தெருவு ரவுடிகளுக்கும் இவர்கள் கப்பம் கட்ட வேண்டியுள்ளது.  இந்நிலையில் சட்டத்தால் இவர்களை அச்சுறுத்துவதும் சில நோக்கங்கள் கொண்டு  மட்டுமே.  இவர்கள் குரல்களையும் ஒலிக்க செய்ய வேண்டிய ஊடகவும் இவர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது  ஜனநாயகத்திற்க்கு செய்யும் துரோகமே.

பத்திரிக்கை, அரசு எல்லாம் ஒன்று சேர வசதி படைத்தவர்கள் பக்கம் நின்று கதைப்பதால் ஏழைகள் என்ன செய்ய கூடும். ரஷியா-புரட்சியில் நடந்தது போன்று  மந்திரிகைகள், பணக்காரர்கள் தெருவுக்கும் தெருவோர மக்கள் தெருவுகளில் இருந்து அவர்கள் வீடுகளுக்கும் குடியேறும் நாட்கள் நெருங்கி வருகின்றதா?

6 comments:

  1. தெருவோர கடைகள் குறித்து நியாயமான மனிதாபிமான முறையில் எழுதப்பட்டுள்ள நல்ல பதிவு..அரசு அதிகாரிகளுக்கு திடீர் திடீர் என்று இந்த ஞானோதயம் ஏன் ஏற்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே..இந்த தெருவோர மனிதர்கள் அவர்களை அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு "கவனிக்க" முடியாதே

    ReplyDelete
  2. தெருவோர கடைகள் குறித்து நியாயமான மனிதாபிமான முறையில் எழுதப்பட்டுள்ள நல்ல பதிவு..அரசு அதிகாரிகளுக்கு திடீர் திடீர் என்று இந்த ஞானோதயம் ஏன் ஏற்படுகின்றது என்பது யாவரும் அறிந்ததே..இந்த தெருவோர மனிதர்கள் அவர்களை அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு "கவனிக்க" முடியாதே

    ReplyDelete
  3. unmai !
    sakothari!

    kavalai tharum-
    seythi!

    ReplyDelete
  4. Subi Narendran · Good Shepherd Convent KotehenaMay 23, 2012 10:25 pm

    நல்ல சமூகப் பார்வை. அரசாங்கம் கடைகளை நெறிப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம். ஏழைகள் பயனடைவார்கள். சம்மந்தப் பட்டவர்கள் ஆவன செய்யவேண்டும். நல்ல பகிர்வு ஜோஸ் நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete