12 Apr 2012

கற்பனைகளால் வேட்டையாடப்படும் மனிதர்கள்!


 

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க யாருக்கும் உரிமை இல்லாவிடிலும் எதை சுதந்திரம் என பரைசாற்றினாரோ அதை எல்லாம் என் தவறு நான் மாற வேண்டும் என்னை கட்டுப்படுத்த வேண்டும், சுதந்திரம் எனக்கு பாரம் என்று சமூகத்திற்க்கு சொல்லியது வழியாக இதுவரை அவர் எழுதிய அவர் எண்ணங்கள் எல்லாம் பொய்மை என்று சொல்லி விட்டு சென்றுள்ளாரா என்ற வினாக்களை நம்மை சிந்திக்க வைக்கின்றது. 

திடீர் என ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்திம் முன் மொழிந்தார் நான் ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்க்கு மாற போகின்றேன்.  இஸ்லாம் மதம் மட்டுமே பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்பு தருகின்றது. இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தா என்ற உடை மட்டுமே மிகவும் கண்ணியமானது.  எனக்கு தேவையான அன்பு பரிவு எல்லாம் ஹிந்து மதத்தில் கிடைக்கவிலை. என் கணவர் உயிருடன் இருக்கும் போதே இதை பற்றி விவாதித்துள்ளேன், மேலும் எனக்கு இந்துவாக எரிக்கப்பட விருப்பமில்லை இஸ்லாமாக மரிக்கவே விரும்புகின்றேன் எனவும் சொல்லியுள்ளார்.  அல்லாஹுவுக்காக கவிதை எழுதி வாழ்வதை என் லட்சியம் இதற்க்கே அல்லா தன்னை படைத்தாகவும் பரைசாற்றிய இவருக்கு ஹிந்து தீவிரவாதிகளால்  சாதாரண நிலையில் சமூகத்தில் வாழ அச்சுறுத்தல் வர ஆரம்பித்து விட்டது.  கொலை மிரட்டல்கள் மட்டுமல்ல இவரை கண்டால் மக்கள் துப்பும் நிலைக்கும் தள்ளப்பட்டார்.  தன் சொந்த வீட்டுக்கு செல்ல இயலாது தன் முதிர் வயது தாயாரை பார்க்க அனுமதிக்காது துன்புறுத்தப்பட்டார்.  இவருக்கு போலிஸ் பந்தோஸ்து அரசால் கொடுக்கும் சூழலும் உருவாகியது.  

நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவருக்கு  இந்திய நாட்டின் விருதுகள் கொடுக்க முட்டு கட்டையாகியது இவருடைய மத மாற்றம்.  இப்பெண் காதல் கொண்டு ஆட்கொள்ளப்படவில்லை காமம் கொண்டு அலைபவள் என குற்றம்சாட்டப்பட்டு  மதிக்க தகுந்த விருதுகள் இவருக்கு கொடுக்க கூடாது என்று போர் கொடி பிடித்தனர் சில கேரளா மக்கள்! இருப்பினும் கேரளா அரசின் எழுத்தச்சன் விருது சாஹித்திய அக்காதமி விருதுகள் போன்றவை பெற்றுள்ளார்.  (தற்போது பாரத ரத்னா போன்ற விருதுக்கு என் தாயார் தகுதியானவரே என்று இவருடைய இளைய மகன் கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிட தகுந்தது. )

பத்திரிக்கையாளரும் கல்வியாளருமான  இவருடைய முதல் மகனிடம் மாதவி குட்டி வாழ்க்கை, மரணம் பற்றி வினவிய போது "எங்கள் அம்மா சிறந்த தாய். அவருடைய எழுத்தை பற்றி நாங்கள் ஒரு போதும் சிந்திப்பது இல்லை". "அவருடைய எண்ணங்களை துணிவாக கூறியதால் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தார். இருப்பினும் எழுத்துலகில் அவர் ஒரு திரைநட்ச்சத்திரம் போல் விளங்கி வாழ்ந்து மறைந்தவர்.  தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவது மகன்களின் கடமை என்பதால் மதம் மாறும் அம்மாவின் விருப்பத்திற்க்கு மறுப்பு தெரிவிக்கவில்லை" என தன் கருத்து கூறினார். மேலும் என் அம்மா, அப்பா சிறந்த தம்பதிகளாக வாழ்ந்தனர். அப்பா எங்கள் அம்மாவை முகாந்திரம் இல்லாது அவரை அவராகவே நேசித்தார் என கூறியுள்ளார்.


மாதவி குட்டி தன் 65 வயதில் 2 வது திருமணத்ற்க்கு என முடிவெடுத்த போது அவருடைய கொல்கத்தா நண்பர் உங்கள் காதலரை காணலாமா என்ற போது வேண்டாம் உங்களை கண்டால் என் காதலர் பொறாமைப்படுவார் என்று அவருக்குரிய நகைப்பில் கூறினாராம்.  நேர் காணல்! பத்திரிக்கையாளர் சந்திப்பில், உங்கள் சுதந்திரத்திற்க்கு இந்த மத மாற்றம் இடஞ்சல் தராதா என்ற போது எனக்கு பாதுகாப்பு தான் தேவை எனக்கு சுதந்திரம், விடுதலை வேண்டாம் என் வாழ்வை நெறிப்படுத்த வேண்டும். இஸ்லாம் கடவுள் மட்டுமே மன்னிப்பு தருவர் ஹிந்து தெய்வங்கள் தண்டிப்பவையே என்று கூறியிருந்தார். 


காதலன் உறவில் விரிசல் வந்த பின்பு கேரளாவை விட்டு பூனாவில் சென்று வாழ 2007 ல் முடிவெடுத்தார். பூனாவில் 2009 ல் தன்னுடைய இளைய மகன் வீட்டு அருகில் மரணிக்கும் போதும் காதலன் உடன் இருந்தாக தகவல் இல்லை.   அல்லாவுக்கு முதல் முதலாக புத்தகம் எழுதிய பெண் நான் என்று அவர் சொல்லியது போலவே  ஒரு குடும்பத்தில் இருந்து தனி நபராக கல்லறையில் குடியிருக்கும் பெண்ணும் மாதவிகுட்டியாக மட்டுமே இருப்பார். கடைசி நாட்களில் மதம் மாறியதில் நொந்து கொண்டதாகவும் ஒரு மனிதன் மதம் மாறுவதால் எந்த பயனுமில்லை என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.  


காதலன் வருகை, புது மத நம்பிக்கை, பர்தா, பெண் விடுதலை என எண்ண அலைகளால் நிம்மதியாக வாழ வழியற்று 75 வயதில் இந்த உலகிற்க்கு விடை சொல்லியதும்  துயரே. தன் எழுத்துக்கள், எண்ணம், சிந்தனைகள்  விடுதலை அளித்ததா அல்லது பெண் விடுதலை என்பது எந்த வகையில் எப்படி காண்கின்றார் என  மாதவி குட்டியிடம் யாரும் கேட்டனரா அல்லது பல உண்மைகளை "கமலா சுரைய்யா" என்ற பெயரில் பர்தா வாழ்கையில் அடைக்கி விட்டாரா என்பதும் விடையில்லாத கேள்வியாகவே மாறி விட்டது. 

இன்னும் நெருடலான விடயம் ஒரு பெண் கோடுகளை தாண்டுவது என்பது அன்பற்ற கணவர், ஆதரவற்ற குடும்பம்  என்பது மட்டுமல்ல, சில உளவியல் காரணங்களும் காரணம் ஆகின்றது  என்று அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.

  மாதவிகுட்டியை அவர் கணவர் மகன்கள் அவராகவே  ஏற்று கொள்கின்றனர். அவரை  கட்டுப்படுத்த நினைத்தது இச்சமூகமே! அன்பு எனக்கு வேண்டும் வேண்டும் என கதறிய மாதவி குட்டிக்கு அவரை முழுதுமாக புரிந்து நேசித்த கணவர் இருந்தார் அம்மாவின் குறைகளை காணாது அம்மாவின் நிறைகளை மட்டும் நோக்கிய பண்பான 3 மகன்களும் இருந்தனர். ஆனால் இவரை வேட்டையாடிய சில கற்பனைகளும் இவருடன் பயணித்தது என்றால் அதுவும் மெய் தானே!!

மாதவிகுட்டியை தாங்கிய ஏற்று கொண்ட அளவுக்கு ஒரு சாதாரண பெண்ணை இந்த சமூகம் ஏற்று கொண்டிருக்குமா? பல கொலை தற்கொலைகள் கூட பொருந்தாத சிந்தனை வாழ்க்கைக்கு பரிசாக கிடைப்பது தானே. மாதவிகுட்டியே தன் சிந்தனைகள் தனக்கு உதவவில்லை என்று வாழ்க்கையால் எழுதி வைத்து விட்டு தானே சென்றுள்ளார்?


4 comments:

  1. கவிஞர் கண்ணதாசனின் கடைசிக்காலங்கள்போன்றே மாதவிக்குட்டியின் இறுதிக்காலமும்

    ReplyDelete
  2. முன்னேற்ற சிந்தனையுள்ளவர்.

    ReplyDelete
  3. அவர் பெண் என்பதால் மேலும் அந்த சமூகம் அவரை கொடுமைக்கு ஆளாக்கியது. இதுவே ஒரு ஆண் மதம் மாறி இருந்தாலோ இது அளவுக்கு கொடுமைகளை சந்தித்து இருக்க மாட்டார். காம லீலைகளை ஈடுபட்ட நித்தி போன்ற சாமியார்கள் எல்லாம் சுதந்திரமா வளம் வரும் போது இவருக்கு இழைக்க பட்ட கொடுமைகளை நினைத்தால் உண்மையில் மனம் கனக்கிறது.... மனம் கசக்கிறது இந்த ஆண் வார்க்கத்தை நினைத்து அவமானம் கொள்கிறது. கற்பொழுக்கம் எல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் ஆண்களுக்கு இல்லை என்பது எழுதப்படாத விதியாகி போனது.

    ReplyDelete