விருந்து முடிந்ததும் யேசு நாதர் பிரார்த்தனைக்கு செல்வார். அன்று தன் சீடர்களிடம் இன்று என்னுடன் ஒரு மணி நேரம் விழித்து இருந்து ஜெபிக்க இயலாதா? என்று கேள்வி எழுப்பியிருப்பார். இதை நினைவு கூர்வதுடன் உலக கிருஸ்தவர்கள் இன்று நடு இரவு 12 மணி வரை தூங்காது விழித்து இருந்து ஜெபிக்க பணியப்பட்டிருப்பர். இந்த ஜெப வேளை முடியும் தருவாயில் யூதாஸ் முத்தமிட்டு காட்டி கொடுப்பதாகவும் யேசுவை யூத மதவாதிகளின் தூண்டுதால் பிடிக்கப்பட்டு ரோம அதிகாரிகளால் தூக்கிலேற்ற துக்க வெள்ளி அன்று கொண்டு செல்லப்படுவார் என்று நம்பப்படுகின்றது. பெரிய வியாழன் நிகழ்வு!
அன்று இரவு உணவு இனிப்பு சுவை கலந்த கலவையுடன் புளிப்பில்லாத அப்பவும் கிடைக்கும். நான் ஆலய பாடல் குழுவில் இருந்ததால் குழுவுடன் சேர்ந்து உண்பதாகவே இருந்தது. இருந்தாலும் அம்மாவும் வீட்டில் செய்து தந்துள்ளார்கள். இதை வட்டை அப்பம் என்றே அழைப்பது. புளிக்காத பச்சை அரிசி மாவை இட்லி மாவு பதத்திற்க்கு ஆட்டி கொஞ்சம் ஈஸ்டு, சீனி கலந்து ஒரு எண்ணை தடவிய தட்டில் ஊற்றி; சுவைக்கு கிஸ் மிஸ், முந்திரி பருப்பு தூவி இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து எடுக்க வேண்டும்.
மலபார் கிருஸ்தவர்கள் வீட்டில் ஒரு வீட்டில் செய்யும் வட்டை அப்பத்தைவட்டை அப்பம் செய்யும் முறை! பக்கத்து வீட்டிற்க்கு கொடுத்து பகுத்து உண்டனர்.
0 Comments:
Post a Comment