3 Dec 2020

APMC: Agricultural Produce Market Committee (mandis) விவசாய உற்பத்தி சந்தைக் குழு (மண்டி )


APMC: Agricultural Produce Market Committee  (mandis) விவசாய உற்பத்தி சந்தைக் குழு

 ​​விவசாய பொருட்கள்,  மாநிலத்தால் இயற்றப்பட்ட  விவசாய உற்பத்தி சந்தை கீழ் குழு  (ஏபிஎம்சி) சட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.  புவியியலை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் சுமார் 2477 சந்தைகள்  மற்றும் 4843 துணை சந்தை யார்டுகள் இந்தியாவில் அந்தந்த APMC களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

 

மண்டி என்ற பெயரில் இந்த குழு  இரண்டு கொள்கைகளை கொண்டு இயங்குகிறது:

  • விளைபொருட்களை பண்ணை வாயிலில் மிகக் குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்தும் இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்துதல், அனைத்து உணவுப் பொருட்களும் ஒரு சந்தை முற்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் ஏலம் மூலம் விற்கப்பட வேண்டும்.

 

ஏபிஎம்சி மாடல் சட்டம் 2003 இன் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

  • ஒப்பந்த விவசாய மாதிரியை எளிதாக்குகிறது.
  • அழிந்துபோகக்கூடியவற்றுக்கான சிறப்பு சந்தை.
  • விவசாயிகள், தனியார் நபர்கள் சொந்த சந்தையை அமைக்கலாம்.
  •  உரிம விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
  •  ஒற்றை சந்தை கட்டணம்.
  • ஏபிஎம்சி வருவாய் சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும்.

மாநில வேளாண்மை விற்பனை வாரியம் 1977 ல் துவங்கப்பட்டது. 277 சந்தைகள் இயங்குகிறது. இந்த வாரியத்தின் பணிகள் அதிகாரங்கள் இப்படியாக இருக்கும் என இவர்கலுடைய இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

  • விற்பனைக்குழுக்களின் செயல்களும், அபிவிருத்தி பணிகளுக்கும் உதவி புரிதல்.
  • மாநில அளவில் விளைபொருட்கள் விற்பனையை அபிவிருத்தி செய்ய திட்டம் தீட்டுதல்.
  • அனைத்து விற்பனைக்குழுக்கள் அல்லது தேவைப்படும் விற்பனைக்குழுக்களுக்கு பணிகளை மேம்படுத்த உதவிகள் புரிந்திடல்.
  • விற்பனைக்குழுக்கள் மேற்கொள்ளும் கட்டிட பணிகளுக்கு வரை படங்கள் மற்றும் மதிப்பீடு தயாரித்து கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வகுத்து தருதல்.
  • வாரிய விற்பனை நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் செயல்படுத்துதல்.
  • ஆண்டு முடிய நிதிநிலை அறிக்கை தயாரித்து அதில் சொத்துக்கள் விவரம், செலவின விபரம் இவைகளை குறிப்பிட்டு வாரிய உறுப்பினர்களும், அரசிற்கும் தெரிவித்தல்.
  • ஓழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயன் பெறும் பொருட்டு அனைத்து விளம்பரம் மற்றும் பிரச்சார பணிகளை மேற்கொள்ளுதல்.
  • மாநில அளவில் விற்பனைக்குழு பணியாளர்கள், வாரிய பணியாளர்கள், வேளாண்மை விற்பனைத்துறை பணியாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் முதலியவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்க வழிவகைகள் செய்து தருதல்.
  • வாரிய விதிகளின்படி விற்பனைக்குழுக்களுக்கு கடன் மற்றும் மான்யங்கள் தீர்மானித்து வழங்குதல்.
  • வேளாண்மை விற்பனை சம்மந்தமாக கருத்தரங்குகள், விழாக்கள், கருத்துக் காட்சிகள் முதலியவைகளை ஏற்பாடு செய்து நடத்துதல்.
  • விளை பொருட்களை பதப்படுத்தவும், தரம் பிரிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • அங்காடி விலை விபரங்களை பெற்று பின் அனைவருக்கும் தெரியப்படுத்துதல்.
  • விற்பனை புள்ளி விவரங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியிடுதல்.
  • விளைபொருள் விற்பனை புள்ளி விவரங்கள் சேகரிக்கவும், வெளியிடவும் சந்தா தொகை வசூலித்தல்.
  • வேளாண்மை விற்பனை சம்மந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் விற்பனை முன்னேற்ற தரத்தினை கணக்கெடுத்தல்.
  • விற்பனை குழுக்கள் மற்றும் வாரிய சம்பந்தமான முக்கியமான பொதுப்படையான முன்னேற்ற பணிகளை மேற்கொள்ளுதல்.
  • சட்டத்தில் குறிப்பிட்டுள்ள இதர பணிகளை மேற்கொள்ளுதல்.
  • இது தவிர அரசு வாரியத்திற்கு இடும் இதர பணிகளை மேற்கொள்ளுதல்

 

இந்திய  நாட்டில் அமல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் சிறப்பானவையாக இருந்தாலும் இதை அமல்படுத்தும் அதிகாரத்தால்  ஊழல், முறைகேடுகள், லஞ்சம் ஆகிய சிக்கல்கள் உள்ளே நுழைந்தன. பல திட்டங்கள் ஊடாக கொடுக்கப்படும், மானியங்கள், உதவிகள் தகுதியற்றோர் பெற ஆரம்பித்தனர்.

 வேளாண் மக்கள் பயன்பெறக் கூடிய மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தற்போது, மரத்தடியில் படுத்துக் வேலை செய்யாது  பணத்தை வாங்கிச் செல்லும் அறிவற்ற சமூகமாக விவசாயிகள் உருவாக்கப்பட்டு வந்தனர்.  பொய்யான பட்டியலை சமர்பித்து அதிகாரிகள் நிதி உதவியை கைப்பற்றி வந்தனர்.

இதேபோன்று  பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்திலும் முறைகேடு நடந்தது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கிசான் திட்டத்தில் விஞ்ஞான ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.


22 Jun 2020

கத்திரிக்காய்

வீட்டருகில் வரும் கத்திரிக்காய் கிலோ 10 ரூபாய், வெண்டைக்காய் கால் கிலோ 10 ரூபாய், எலுமிச்சை கால் கிலோ 30 ரூபாய் வாங்கி விட்டு 100 கொடுத்தேன். காய்கறி வியாபாரி தன்னிடம் சில்லறை இல்லை நாளை மீதம் 50 ரூபாயை தருகிறேன் என்றார். அடுத்த நாள் காலையில் காய் கறி வாங்கக்க 50 ரூபாயை நினைவுப்படுத்தினால் உங்களுக்கு நான் தர வேண்டியது இல்லை. அந்த வீட்டு அம்மாவிற்கு தான் கொடுக்க இருந்தது என்றார்.
பயங்கர ஏமாற்றமாகி போய் விட்டது.
நான் என் கோபத்தைக் காட்டிக்கொள்ளாது, இல்லை நீங்கள் நினைவுப்படுத்தி பாருங்கோ, நீங்கள் 50 ரூபாய் தர வேண்டியுள்ளது என்றதும் இல்லை, எனக்கு நல்ல நினைவு உண்டு நீங்கள் நினைவுப்படுத்துங்கள் என்றார்.
நான் அன்றைய காய்கறி பணத்தை கொடுத்து விட்டு வீட்டிற்குள் வந்து, மகனாரிடம் 50 ரூபாய் ஏமாந்து விட்டேன் எனக்கூறி என் சோகத்தை தீர்த்துக்கொண்டேன்.
இன்று காலையில் கத்திரிக்கடைக்காரர் மன்னித்துக்கொள்ளுங்கள் . எனக்கு நினைவு வந்து விட்டது எனக்கூறி 50 ரூபாய்க்கு இன்று காய்கறிகள் தந்து விட்டார்.
...........இது படிக்காதவர்கள் உலகம். நினைவு வந்ததும் தங்களது தவறை உணர்ந்து சமரசப்பட்டுக் கொள்கின்றனர்.
இதே போன்று பணம் சம்பந்தமாக, படித்த மேதாவிகளிடம் பேணவேண்டிய சில இடபாடுகளில் எவ்வளவு எளிதா,எந்த கூச்சமும் இல்லாது நம்மை ஏமாற்ற துணிகின்றனர்.
இப்போதெல்லாம் கல்வி கற்றவன் , படித்து பதவிகளில் உள்ளவர்கள் என்றாலே தன்னுடன் ஆயிரம் திருடர்களையும், பதினாயிரம் நம்பிக்கை துரோகங்களையும் வைத்து கொண்டு தான் அலைகின்றனர்.
No photo description available.
Naren K Narendran, Subi Narendran and 78 others
32 comments
2 shares
Like
Comment
Share

கெ. டி எ கறுப்பத்துரை( K.D. (a) Karuppu Durai)


பாலுமகேந்திராவின் வீடு திரைப்படத்திலுள்ள தாத்தாவை நினைவுப்படுத்தியது இத்திரைப்படத்திலுள்ள கறுப்பதுரை கதாப்பாத்திரம்

இத்திரைப்படத்தில் நாம் சந்திக்கும் இரு கதாப்பாத்திரங்கள், மகன்களால் கொல்லப்பட இருக்கையில் தப்பித்து வீட்டைவிட்டு வெளியேறி, அனாதமாக சுற்றிக்திரிந்து கொண்டிருக்கும் கறுப்புத்துரை என்ற 80 வயது தாத்தா, பிறந்த போதே அனாதையாக புரக்கணிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வளரும் குட்டி என்ற 8 வயது சிறுவன். இருவருக்குமான உண்ர்வு பூர்வமான உற்வைப்பற்றி சொல்லியத்திறைப்படம் தான் கெ. டி கறுப்பத்துரை ( K.D. (a) Karuppu Durai)

.

தாத்தா மதுரைப்பக்கம் இருந்து தப்பித்து தென்காசி , செங்கோட்டை வந்தடைகிறார் அங்குள்ள ஒரு கோயிலில் தஞ்சம் புகிர்கிறார். அங்கு தான் கரடுமுரடாக வளர்ந்து வரும்  குட்டியும், கறுப்பு துரையும் சந்திப்பதுடன் கதை ஆரம்பமாகிறது. சிறுவனின் துடுக்குத்தனமான பேச்சில் கறுப்பத்துரை ஆள்கொள்ளப்பட்டாலும் சிறுவனின் அடாவடிப்பேச்சை சற்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் பின்பும் ரசிக்கவும் ஆரம்பிக்கிறார்.

 

இருவரும் சேர்ந்து ஒரு குடிசையில் வசிக்க வேண்டிய சூழல் எழுகிறது. பின்பு இவர்களுக்கும் கூத்து கலைஞர் கோழிக்கடைக்காரருக்குமான நட்பு, கூத்துக்காண சிவகிரி போவது, குற்றாலம் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வது, தாத்தாவின் 10 விருப்பம் என கேட்டு எழுதி வைத்து விட்டு ஒவ்வொரு விருப்பமாக செய்து முடிக்க வைக்கும் சிறுவனின் கரிசனை , இப்படியாக கதை சுவாரசியமாக நகர்கிறது.

 

இரு தலைமுறையின் மனநிலை, ஒரே சூழலை இரு தலைமுறையும் எவ்வாறு எதிர்கொள்கிறது என சமகால சமூக சூழல் குழந்தைகள் மனநிலையுடன் கதை சொல்கிறார்கள்.  ஒரு இடத்தில், தாத்தா கேட்பார் "நீ குழந்தையா, இல்லை நான் குழந்தையா எனத் தெரியவில்லையே என்று. பல போதும் குழந்தைகளுடன் நட்பாக பழுகுகிறவர்கள் உணருவதும் இதுவே.

குழந்தைகள் பெரியவர்களை விட பிரச்சினைகளை கையாளுவதில் மிடுக்காக இருப்பார்கள். குட்டியும் அப்படித்தான். தாத்தாவிற்கு தன் பால்யகால ஸ்னேகிதியை காண வேண்டும் என ஆசை துளிர்கிறது. அங்கைய சுவாரசியமான நிகழ்வுகள், வயதாகும் தோறும் மனிதர்கள் தங்கள் பால்ய காலத்திற்குள் போகும் விருப்பம் இதை எல்லாம் கவனமாக அவதானித்து திரைக்கதையில் எழுதப்பட்ட விதம் அதை காட்சி மொழியாக பகிர்வது சிறப்பு.

 

வயதானவர்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்குதல் கூடாது, பெற்றவர்கள் முதியவர்கள் ஆகி விட்டார்கள் என கொல்லும் அதிகாரம் பிள்ளைகளுக்கு இல்லை, இவர்களால் தான் கிராம விவசாயம், பல மனித வாழ்வியிலுக்கான விழுமியங்களை, விவசாயத்திற்கான நுணுக்கங்களை கற்று தர இயல்கிறது. வயதானவர்கள் இளையவர்கள் வாழ்க்கையில் ஆற்றும் பங்கும் வயதானவர்கள் மகிழ்ச்சியான வாழ்விற்கு இளையவர்களின் பங்கும், அதன் தேவையும் பற்றி சொல்லி நகர்கிறது கதை.

 

 

இப்படி இருக்க சிறுவனுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் கறுப்பதுரைக்கு சிறுவனை பிரிய மனமில்லை என்பதால் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லாது தவிக்கிறார்.  ஒரு பக்கம் சிறுவனை சென்னைக்கு அனுப்ப தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர், அதே நேரம் முதியவரையும் கூலிக்கு ஆள் வைத்து சொத்தில் கையெழுத்து வாங்குவதற்கு என  மகன்களும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

 

 

பெரியவரும் சிறுவனும் பிரிகையில் பெரும் துயர் காண்பவர்களையும் பற்றிக் கொள்கிறது.  யாரும் இல்லை என இருந்தவர்கள் தங்களுக்குள் ஒருவராக மாறினதும், அங்கு இரத்த உறவை விட அழகான நேசம் கொண்ட உறவு மலர்ந்ததும் நம்மை நெகிழ்ச்சி கொள்ளச் செய்பவை.

ஒரு வழியாக முதியவரை பிடித்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். மகன்கள் உணர்வுப் பெருக்கான உரையாடல்களை நம்பாது, உங்களுக்கு என்ன தேவை சொத்து, கையெழுத்து போட்டு தருகிறேன் என்பார். கையெழுத்து வாங்கின பின்பு முதியவரை வைத்து பார்த்துக்கொள்வார்கள் என்றால், அப்போதும் கொலை செய்யத்தான் திட்டம் போட்டுக் கொண்டு இருப்பார்கள். முதியவர் தப்பித்து வீட்டைவிட்டு போய் விடுவார்.

 

வீட்டை விட்டு வெளியேறினாலும் அழகான வாழ்க்கை வெளியிலும் உண்டு என முதியவர்களுக்கும் நம்பிக்கையூட்டிய திரைப்படம் இது.

உறவுச்சிக்கலில் வீட்டில் அல்லல்ப்படும் முதியவர்களை வரவேற்கும் படி சமூக தேவை இருப்பதால், காத்திரமான வசதிகளை முதியவர்களுக்கு செய்யவேண்டியது சமூகத்தின் பாரிய கடமையாகும் என உணரவைத்த திரைப்படம் இது.

 

 

பல போதும் திருநெல்வேலியின் நகர்புறங்களை திரைப்படங்களில் கண்ட கண்களுக்கு, திருநெல்வேலியின் முதுகெலும்பான கிராமங்கள், திருநெல்வேலியின் அடையாளமான திருவிழாக்கள், கோயில்கள், கொண்டாட்டங்கள், விவசாய வயல்கள் என கிராமங்களை படம் பிடித்து காட்டிய அருமையான திரைப்படம் இது.

 

 

இது போன்ற படங்கள் தான் சமூகத்திற்கு தேவை. பாரம் போன்ற திரைப்படங்கள் வீட்டிலுள்ள 'முதியவர்கள் கொலை' பற்றிய கதையை மட்டும் சொல்லிய போது முதியவர்களுக்கு நல்ல வாழ்க்கை உண்டு, எப்படி கொலையில் இருந்து தப்பிப்பது, முதியவர்கள் மனநிலை எப்படியாக வகுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு பிரச்சினைக்கான தீர்வையும் முன் வைத்த திரைப்படம் இது.  உறவுகள் என்பது இரத்த பந்ததால் மட்டுமல்ல, அன்பாலும், நேசத்தாலும் புது உறவுகளை மலரச்செய்ய இயலும் எனக்கூறிய திரைப்படம்.

 

பல விருதுகள் பெற்றுள்ள திரைப்படம். இதன் இயக்குனர் சென்னையை பிறப்பிடமாக கொண்டு, சிங்கப்பூர் வாழ்விடமாக கொண்ட மதுமிதா என்ற பெண் என்பது மிகவும் சிறப்பு. இவருடைய நாலாவது படமாகும்.

Asian American International Film Festival மற்றும் Jagran Film Festival ல் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை நாக விஷால் பெற்றுள்ளார்.

UK Asian Film Festival மற்றும்

Indian Film Festival of Cincinnati ல் மதுமிதா சிறந்த இயக்குனர் என்ற விருதை பெற்றுள்ளார்.

Singapore South Asian Film Festival ல் சிறந்தத் திரைப்படம் என்ற விருது பெற்றுள்ளது.

New York Indian Film Festival சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திர விருதிற்கு தேர்வாகியுள்ளது.

கறுப்புதுரை கதாபபாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபல நாடக செயல்பாட்டாளரும் நாடகத்துறை பேராசிரியருமான மு ராமசாமி என்பது சிறப்பு. கறுப்ப துரையாக நடித்த பேராசிரியர் ராமசாமியின் நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவ்வளவிற்கு கதாப்பாத்திரமாகவே உருமாறியிருந்தார்.

இசை கார்த்திகேய மூர்த்தியால் படத்தின் கதைக்கு ஏற்ற முறையில் இசைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு மெய்யீந்திரன் மற்றும் கெம்புராஜ்.

நவம் 2019 ல் வெளியான சிறந்த தமிழ்ப்படங்களில் ஒன்று இப்படம்.


சுபி அக்கா மல்லிகைச் செடி


நேற்று, சுபி அக்கா அனுப்பி தந்தார்கள் ஒரு மல்லிகைச்செடி படத்தை. பின்பு உற்சாகமாகி விட்டேன். செடியை கண்ட மகிழ்ச்சியில் நடை போனேன் , என் கல்லூரித் தோழியை கண்டேன், மகிழ்ச்சியாக துங்க போனேன்
இந்தச் செடிககும் எனக்குமான தொடர்பு 22 வருட கால பழக்கம். பூப்போன்ற மனதுடன் புதுப் பெண்ணாக, மனமெல்லாம் ஆசையுடன் மாமியார் வீடு புகுந்த காலம்.
நினைத்தது போல என்னை காத்துக் கிடக்கவில்லை மாமியார் வீட்டு வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள், விசர்கள்.... ஆனால் என்னை ஒவ்வொரு நாளும் புத்துணர்வாக வைத்தது இந்த மல்லிகைச் செடி தான்.
அது ஒரு காடு,கொடும் வனம். பல மாதங்கள் மழை, பனி தான். யார் நட்டு வைத்த மல்லிகையோ வீட்டு வேலியாக இந்த மல்லியை மூங்கில் கம்புகளால் கட்டி, நல்ல பலமான செடி வேலியாக வைத்திருந்தனர்.
பல மாதங்கள் பூக்கும். அதன் வாசனை ஆகா .....மறக்கவே ஏலாது. வசந்தகாலம் என எழுதிவைத்தது போல் ஊரே பூக்களை பார்த்து பார்த்து போகும்படி இருந்தது..
எனக்கு செடியில் பூவைப் பார்க்கதான் ஆசை. ஆனால் சில எளிய பெண்கள் வந்து "இந்த அம்மாவிற்கு பூக்கள் பிடிக்காது " எனக்கூறி பறித்து செல்வார்கள்.
யாராரோ பறித்து செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில், நானும் பறித்து பூக் கட்டினாலும்,ஒழுங்காக பூ கட்ட தெரியாததால் பூ நழுவி கீழை விழும் . வாழை நாரு வைத்து, துணி நூல் வைத்தும் கட்டிப்பார்த்தாச்சு. பூவைப் பறித்து ஊசி நூலால் கொருத்தாலும் ஐய்யோ.... அதன் காம்பு என்ன வேதனைப்பட்டிருக்கும் என அதையும் விட்டு விட்டேன்.
அதன் பின் வட்டப்பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பூக்களை அதில் மெதக்கவிட்டு அழகு பார்த்துக்கொண்டு இருந்தேன்.
காலவும் ஓடினது. அந்த ஊரை விட்டு வெளியேற முடிவெடுத்தோம். இயற்கை, மலை, மழை , அருவிகள், என ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த ஊரை விட்டு விரட்டியது உலக மயமாக்கல். 2002 தூத்துக்குடி வந்து சேர்ந்தோம். பனியில் இருந்து தீயில் போட்டது மாதிரி ஆகி விட்டது அடுத்த வாழ்க்கை.
350 கிலோ மீட்டர் பயணித்து தெரியாத ஊர் வந்து சேர்ந்த போது மகனுடன் எடுத்து வந்தது இந்த மல்லிகைச்செடியையும் தான்.
பின்பு 8 வருடத்தில் 12 வாடகை வீடு மாறியிருப்போம். சில வீடுகளில் உப்பு தண்ணீர், சில வீடுகளில் செடி வைக்க இடமில்லை, சில வீடுகளில் செடி வைக்க அனுமதி இல்லை. இருந்தும் இந்தச் செடியும் எங்களுடனே பயணித்தது.
சொந்த வீடு வந்த பின்பு அதற்கும் நிலையான ஒரு இடம் கிடைத்தது. வீட்டுப்பிராணிகள் போன்றே செடிக்கும், அதை வளர்க்கும் மனிதர்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு . சில வருடங்களாக நான் செடியை கவனிக்கவில்லை. பின்பு மறுபடியும் இணைந்துள்ளோம்.
சுபி அக்கா என்னிடம் பெற்றுக் கொள்ளும் ஒரே பொருள் செடி மட்டுமே. அப்படித்தான் இந்த செடியில் இரு கம்புகளை வெட்டி கொடுத்திருந்தேன். 7500 கி.மீ பயணம் செய்து லண்டனை அடைந்தது.
இந்த வெயில் பழகின செடி லண்டனில் வளருமா , பூக்குமா என பல அச்சப்பாடுகள் இருந்தாலும்; அக்கா பூவில்லாத செடியை கூட தனது அன்பால் பூக்க வைத்து விடுவார்கள்.
நேற்று முதல் பூவுடன் செடியின் படத்தை அனுப்பியிருந்தார்கள்.
அக்கா கை பட்டதும் செடி அதன் அழகிலும், நளினத்திலும் பூத்து நிற்பதை கண்டதும் மகிழ்ச்சிக்கு மட்டில்லை.
என் உலகம், பூக்களால் , இலைகளால் நிரம்ப ஆசைப்பட்ட உலகம்.
அக்காவை பற்றி கூறினால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த கொரோனாக் காலத்தில் , எங்கள் இருவருக்கும் விடுமுறை என்பதால் வாரம் ஒரு முறை கதைக்க இயல்கிறது.
செடிகளை பற்றி,செடி வளர்ப்பை பற்றிக்கதைக்கிறோம். அக்காவின் ரோஜா பூந்தோட்டம் முன் ஊட்டி, மைசூர் ரோஜா தோட்டங்கள் அருகே வர இயலாது. "அக்கா, நீங்கள் இலை இல்லா பூக்களுக்காக என்ன மேஜிக் செய்கிறீர்கள் என்பேன்.
ஒவ்வொரு காலசூழலுக்கு இணங்க செடிகளை இடம் மாறி வைப்பது , செடிகளை வெட்டிக்கவனிப்பது, அக்காவை மாதிரி யாராலும் நேசிக்க இயலாது.
தமிழகம் வந்தாலும் நாங்கள் விரும்பிச்செல்லும் இடம் பூந்தோட்டங்களும் தான்.
அக்கா வீட்டில் பூத்த மல்லியை நினைத்து பூரித்து பூரித்து இன்னும் நிறைய எழுதலாம். செடி தரும் மகிழ்ச்சி அதிவல்லது‌.
Naren K Narendran, Gladwin Moses and 80 others
22 comments
1 share
Like
Comment
Share