தீதி தாமோதரன் மற்றும் எச்முக் குட்டி ஆகியோர் இணைந்து எழுதி, 2026-ல் வெளியான புத்தகம் 'எம்டி ஸ்பேஸ்: பாஷ்பீகிருதயுடெ ஆறாம் விரல்' (Empty Space: Bashpeekruthayude Aaram Viral). புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் முதல் மனைவியான பிரமிளா நாயரை மையமாகக் கொண்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது
இரண்டாவது மனைவியின் மகள் இப்புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் தடை செய்யக்கூடிய அளவில் புத்தகத்தில் ஒன்றுமில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்து, திருமணமான ஒரு ஆணின் வாழ்க்கையில் மற்றொரு பெண் நுழைந்ததால், முதல் மனைவியும் மகளும் எவ்விதம் துன்பத்திற்கு உள்ளானார்கள் என்று நேர்மையாக எழுதும்போது, அது மறைமுகமாக மனுதாரரின் தாயின் பிம்பத்தை பாதிக்கக்கூடும் என்பதே காரணமாக இருக்கலாம்.
மகளின் மனநலம் கருதி ஊரை விட்டு வெளியேறும் சூழலுக்கு முதல் மனைவி தள்ளப்படுகிறார். அவர்கள் ஆசையாகக் கட்டிய வீட்டில், மற்றொரு மனைவி மற்றும் மகளுடன், சமூக அந்தஸ்து, இலக்கிய விருதுகள், அரசு மரியாதையுடன் கணவன் வாழ்கிறார். முதல் மனைவியும் மகளும் சமூகத்தில் தனித்து விடப்பட்டதை இப்புத்தகம் விவரிக்கிறது.
இது வெறும் ஒரு குடும்பக் கதை மட்டுமல்ல. பிரபலமான ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை எவ்விதம் ஒடுக்குகின்றனர், அவர்களுக்கு இருக்கும் இடைவிடாத குடி மற்றும் கெட்ட பழக்க வழக்கங்களை எவ்விதம் ஆண்மையின் அடையாளமாக காட்டுகின்றனர், ஆண் தன் சுய இன்பத்திற்காக புதிய உறவை உருவாக்கும்போது, ஏற்கனவே உடன் வாழ்ந்த பெண்ணின் ஆளுமையை ஒடுக்க எவ்விதம் செயல்படுகின்றனர் என்பதை இப்புத்தகத்தில் உதாரணங்களுடன் விவரித்துள்ளனர். கணவன் எவ்வித சமூக அழுத்தமும் இல்லாது சுதந்திரமாக வாழும்போது, கணவன் உயிருடன் இருக்கும்போதே, தனது மகளின் நல்வாழ்க்கையைக் கருதி பெண் தனித்து வாழும் சூழலுக்குத் தள்ளப்படும் நிலையையும் இது விவரிக்கிறது.
எம்.டி தனது கதைகளில் தார்மீகமான ஆண்மையுள்ள ஆண் கதாபாத்திரங்களைப் படைத்தாலும், நிஜ வாழ்க்கையில் தனது சொந்த மனைவியை ஒடுக்க அவர் கையாண்ட பல யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் மிகவும் தரம் தாழ்ந்தவையாக உள்ளன.
தனது சொந்த மகளின் கல்லூரிப் படிப்புக்கு உதவாமலும், சுயசரிதை எழுதாமல் மற்றொரு நபரை வைத்து வாழ்க்கை வரலாற்றை எழுதச் செய்தும்; முதல் மனைவிக்கு வீடு, ஜீவனாம்சம் கொடுத்தேன், மனைவியின் மரணச் சடங்கில் பங்கு பெற்றேன் என்ற பொய்களை எழுதி நிறுவியுள்ளார்.
கேன்சர் நோயால் இறக்கும் தருவாயில் எம்.டியைக் காண வேண்டும் என விரும்பியும், மனைவியைச் சந்திக்காத எம்.டி, மரணத்தின் கடைசிச் சடங்குகளைச் செய்யாத எம்.டி, ஆண்களின் மிக மோசமான பக்கத்தின் உச்ச நிலையில் உள்ளார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எம்.டி, எம்.ஜி.ஆர் குடும்பத்தில் பிறந்த, வசதி வாய்ப்பும் நல்ல கல்வியும் பெற்று வேலையில் இருந்த ஒரு பெண்ணை, பெற்றோரின் அனுமதியின்றி தன் விருப்பத்திற்கு அழைத்துச் சென்று வாழ்ந்து வந்த நிலையில், தனது இலக்கிய வாழ்க்கையின் முதல் பகுதியில், தனது புத்தகங்களை ஆங்கில மொழியாக்கம் செய்ய வைத்து உலக இலக்கியத்தில் நுழையப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் இலக்கியவாதியாகவும், சினிமா கதை ஆசிரியராகவும், ஊடகச் செயல்பாட்டாளராகவும் ஆன பின்பு முதல் மனைவியை முற்றும் புறக்கணித்த பக்கங்கள் வருத்தத்தைத் தருகின்றன.
பெண்ணிய எழுத்தாளராக இருந்த பிரமிளா நாயரின் வார இதழ்களில் வந்த நாவலை நிறுத்தியதுடன், பிரமிளா எழுத்துலகத்திற்கு வரவே கூடாது என்பதில் அவரின் ஆண் இலக்கிய நண்பர்களும் நிறையவே உதவியுள்ளனர். பெண் எழுத்தாளர்களான மாதவிக்குட்டி போன்றவர்கள் கூட எம்.டியின் பகையைக் கருதி பிரமிளா பெயரை உச்சரிக்காமல் விட்டுவிட்டனர்.
அப்படி வாழ்க்கையிலும் இலக்கிய உலகிலும் தண்ணீரைச் சூடு செய்து ஆவியாக்குவது போல அவர்களை 'பாஷ்பிகரித்து' விட்டனர்.
பிரமிளா பிற்பாடு ஒரு பள்ளி ஆசிரியையாக வாழ்ந்து முடித்துள்ளார். அவருடைய செலவில் இரு நாவல்கள் வெளியிட்டுள்ளார். அவையும் நூலகங்களில் இல்லாத வண்ணம் எம்.டியின் தலையீடு இருந்துள்ளது. ஆனால் எம்.டி சினிமாவில் படைக்கும் பெண் கதாபாத்திரங்களில் பிரமிளா நாயரை முன்னிறுத்தி, அவர் மேல் சேற்றை வாரி இறைத்துள்ளார்.
மிகவும் ஏழைப் குடும்பத்தில் இருந்து வந்த, எம்.டி மகளுக்கு நடனம் கற்பிக்க வந்த சரஸ்வதி, பிற்பாடு எம்.டிக்கு மனைவி என்ற அங்கீகாரம் பெற்று, கேரளா கலாமண்டலம் நடனப்பள்ளியில் முதல்வராகவும் தனது வாழ்க்கையை ஒரு மகளுடன் நிறைவாக முடித்துக் கொண்டார். ஆனால், எம்.டிக்கு அடையாளமும் பணமும் புகழும் அற்ற காலத்தில், எம்.டியை நம்பி வந்த நிலையில், ஒரு இளம் பெண் கிடைத்ததும் 45 வயதை நெருங்கிய பிரமிளாவின் வாழ்க்கையை வெறுமையிலும், துயரிலும், அவமானத்திலும், சூனியத்திற்குள்ளும் தள்ளிய சம்பவங்களைச் சொல்கிறது இப்புத்தகம்.
பிரமிளா பிற்பாடு தன் குடும்பத்தை சார்ந்து நின்று மகளை வளர்த்து, பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்தார். மகள் ஒரு இலக்கியவாதியின் மனைவியாக கூடாது என்பதில் கவனமாக இருந்துள்ளார். அதே போன்று மகள் அமெரிக்காவில் பெரும் வணிக நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். பிரமிளா, கேன்சரால் கேரளா திரும்பியபோது சகோதரர்களும் தாயும் பக்கபலமாக இருந்துள்ளனர்..
இருப்பினும், காதலில் உருகி நேசித்தவன் தனக்கு இழைத்த துரோகத்தை மறக்க இயலாமல் வாழ்க்கை முழுவதும் போராடிய பிரமிளா, மரணத்தின் கடைசி நாட்களில் ஒரு முறை கண்டுவிட்டாவது மரிக்க வேண்டும் என விரும்பிய ஆசையைக் கூட நிறைவேற்றாத எம்.டி, ஒரு சாதாரண ஆணை விடக் கீழ்மட்டத்தில் இருந்துள்ளார்.
சினிமாவில் வரலாற்றுப் பாத்திரமான உண்ணியாச்சையைத் தவறாகவும், பாஞ்சாலியை விகாரமாகவும், குந்தி தேவியைக் கேலியாகவும் சித்தரித்து இலக்கியம் படைத்து பிரமிளா மேலிருந்த வன்மத்தைத் தீர்த்துக் கொண்டார். அதே மாதிரி சினிமாவிலும் மம்மூட்டி போன்ற அழகான ஆண் கதாபாத்திரங்களை வைத்து, அறிவான அழகான பெண்களை அன்பிற்காகப் பிச்சை எடுப்பவர்களாக மாற்றினார். கணவன் நண்பர்களுடன் குடித்துக் கூத்தாடி வந்தாலும் கைநீட்டி அன்பு செலுத்தும் பெண்களைக் கதாபாத்திரமாகப் படைத்து தன் மேட்டிமையை நிலைநாட்டிக் கொண்டார். நடிகை சீமா போன்ற தைரியமான பெண்மைக்கு அடையாளமான பெண் கதாபாத்திரங்களைக் கூட மம்மூட்டிக்கு வைப்பாட்டியாக வைத்து, மம்மூட்டி கதாபாத்திரத்திற்குப் பணிவிடை செய்ய வைத்திருப்பார். இவை பற்றியும் சில குறிப்புகள் இப்புத்தகத்தில் உண்டு
வாசிப்பவர்களுக்குச் சலிப்பைத் தராது விறுவிறுப்பாக நகர்த்திய புத்தகம். எடிட்டிங்கில் (பிழைத் திருத்தம்) இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சொன்ன விஷயங்களே மறுபடியும் வராமல் தடுத்திருக்கலாம்.
மற்றபடி, இரண்டாம் மனைவியின் மகளுக்குத் தன் தந்தையின் முதல் மனைவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய புத்தகத்தைத் தடை செய்யச் சொல்ல என்ன உரிமை இருக்க இயலும்?
பிரமிளா நாயர் உயிரோடு இருக்கும்போதே இப்புத்தகம் வெளிவந்திருக்க வேண்டும். அல்லது எம்.டி இருக்கும்போதாவது புத்தகம் வெளியிட்டிருக்கலாம். எம்.டியைப் பற்றி வெளிவந்த வரலாற்றுப் புத்தகம் தான் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக அமைந்தது. அதிலுள்ள பிழைகளை இதில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆனாலும் எம்.டி என்ற இலக்கியவாதிக்குப் பதில் சொல்ல வாய்ப்புக் கொடுக்காது இப்புத்தகம் தாமதமாக வெளிவந்தது பெரும் குறைதான். எம்.டி எப்போதும் தன் மேல் வரும் விமர்சனங்களுக்குத் தனது ஆழ்ந்த தீர்க்கமான மௌனம் மூலமாகப் பதில் கொடுத்து வந்துள்ளார். வார்த்தைப் பதிலை விடச் செயலில் மும்முரமாக இருக்கக் கூடியவர். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இப்புத்தகத்தை வெளியிட அனுமதிக்கமாட்டார் என்ற பயமும் இருந்திருப்பதை அவதானிக்கலாம்.
ദീദി ദാമോദരനും എച്ച്മു കുട്ടിയും ചേർന്ന് എഴുതി 2026-ൽ പുറത്തിറങ്ങിയ പുസ്തകമാണ് 'എംപ്റ്റി സ്പേസ്: ബാഷ്പീകരിക്കപ്പെട്ടവരുടെ ആറാം വിരൽ'. പ്രശസ്ത സാഹിത്യകാരൻ എം.ടി. വാസുദേവൻ നായരുടെ ആദ്യ ഭാര്യയായിരുന്ന പ്രമീള നായരെ കേന്ദ്രീകരിച്ചുള്ള സംഭവങ്ങളെ ആസ്പദമാക്കിയാണ് ഈ പുസ്തകം രചിച്ചിരിക്കുന്നത്.
രണ്ടാം ഭാര്യയുടെ മകൾ ഈ പുസ്തകം നിരോധിക്കണമെന്ന് ആവശ്യപ്പെട്ടിട്ടുണ്ട്. എന്നാൽ നിരോധിക്കാൻ മാത്രം ഒന്നുമില്ല. ഒരു സ്ത്രീയുടെ ജീവിതം തകർത്ത് മറ്റൊരു സ്ത്രീ വിവാഹിതനായ പുരുഷന്റെ ജീവിതത്തിലേക്ക് കടന്നുവന്നപ്പോൾ ആദ്യഭാര്യയും മകളും അനുഭവിച്ച വേദനകൾ സത്യസന്ധമായി എഴുതുമ്പോൾ, അത് പരാതിക്കാരിയുടെ അമ്മയുടെ പ്രതിച്ഛായയെ ബാധിച്ചേക്കാം എന്നതാവാം കാരണം.
മകളുടെ മാനസികാരോഗ്യം കണക്കിലെടുത്ത് നാടുവിടേണ്ട സാഹചര്യത്തിലേക്ക് ആദ്യഭാര്യ തള്ളപ്പെടുന്നു. അവർ ആഗ്രഹിച്ചു പണിത വീട്ടിൽ മറ്റൊരു ഭാര്യയ്ക്കും മകൾക്കുമൊപ്പം, സാമൂഹിക പദവിയും സാഹിത്യ പുരസ്കാരങ്ങളും സർക്കാർ ബഹുമതികളുമായി ഭർത്താവ് ജീവിക്കുന്നു. ആദ്യഭാര്യയും മകളും സമൂഹത്തിൽ ഒറ്റപ്പെട്ടുപോയതിനെക്കുറിച്ചാണ് പുസ്തകം പറയുന്നത്.
ഇതൊരു കുടുംബകഥ മാത്രമല്ല. പ്രശസ്തരായ പുരുഷന്മാർ തങ്ങളുടെ വീട്ടിലെ സ്ത്രീകളെ എങ്ങനെ അടിച്ചമർത്തുന്നു, അവരുടെ മദ്യപാനത്തെയും ദുശ്ശീലങ്ങളെയും എങ്ങനെ പൗരുഷത്തിന്റെ ലക്ഷണങ്ങളായി ചിത്രീകരിക്കുന്നു, സ്വന്തം സുഖത്തിനായി പുതിയ ബന്ധങ്ങൾ ഉണ്ടാക്കുമ്പോൾ കൂടെയുള്ള സ്ത്രീയുടെ വ്യക്തിത്വത്തെ എങ്ങനെ ഇല്ലാതാക്കുന്നു എന്ന് ഉദാഹരണസഹിതം പുസ്തകത്തിൽ വിവരിക്കുന്നു. ഭർത്താവ് യാതൊരു സാമൂഹിക സമ്മർദ്ദവുമില്ലാതെ സ്വതന്ത്രമായി ജീവിക്കുമ്പോൾ, ഭർത്താവ് ജീവിച്ചിരിക്കെത്തന്നെ, മകളുടെ നല്ല ഭാവി കരുതി സ്ത്രീക്ക് ഏകയായി ജീവിക്കേണ്ടി വരുന്ന സാഹചര്യവും ഇതിൽ വിവരിക്കുന്നുണ്ട്.
എം.ടി തന്റെ കഥകളിൽ ധാർമ്മികബോധമുള്ള പുരുഷ കഥാപാത്രങ്ങളെ സൃഷ്ടിച്ചെങ്കിലും, യഥാർത്ഥ ജീവിതത്തിൽ സ്വന്തം ഭാര്യയെ ഒതുക്കാൻ അദ്ദേഹം സ്വീകരിച്ച പല തന്ത്രങ്ങളും നടപടികളും വളരെ തരംതാണതായിരുന്നു.
സ്വന്തം മകളുടെ കോളേജ് പഠനത്തിന് സഹായിക്കാതിരിക്കുക, ആത്മകഥ എഴുതാതെ മറ്റൊരാളെക്കൊണ്ട് ജീവചരിത്രം എഴുതിച്ച് - ആദ്യഭാര്യയ്ക്ക് വീടും ജീവനാംശവും നൽകി, മരണാനന്തര ചടങ്ങുകളിൽ പങ്കെടുത്തു എന്നൊക്കെയുള്ള നുണകൾ സ്ഥാപിച്ചെടുക്കുകയാണ് ചെയ്തത്.
ക്യാൻസർ ബാധിച്ച് മരണക്കിടക്കയിൽ എം.ടിയെ കാണാൻ ആഗ്രഹിച്ചിട്ടും ഭാര്യയെ കാണാൻ കൂട്ടാക്കാത്ത, മരണാനന്തര ചടങ്ങുകൾ പോലും ചെയ്യാത്ത എം.ടി, പുരുഷന്മാരുടെ ക്രൂരമായ മുഖത്തിന്റെ ഉദാഹരണമാണ്. ഒരു സാധാരണ കുടുംബത്തിൽ നിന്നു വന്ന എം.ടി, എം.ജി.ആറിന്റെ കുടുംബത്തിൽ ജനിച്ച, നല്ല വിദ്യാഭ്യാസവും ജോലിയുമുള്ള ഒരു പെൺകുട്ടിയെ മാതാപിതാക്കളുടെ സമ്മതമില്ലാതെ വിളിച്ചിറക്കി കൊണ്ടുവന്നു. സാഹിത്യജീവിതത്തിന്റെ ആദ്യഘട്ടത്തിൽ തന്റെ പുസ്തകങ്ങൾ ഇംഗ്ലീഷിലേക്ക് വിവർത്തനം ചെയ്യിച്ച് ലോകസാഹിത്യത്തിൽ ഇടംനേടാൻ എം.ടി ഇവരെ ഉപയോഗിച്ചു. എന്നാൽ പിൽക്കാലത്ത് സാഹിത്യകാരനും സിനിമാ തിരക്കഥാകൃത്തും മാധ്യമപ്രവർത്തകനുമായി മാറിയപ്പോൾ ആദ്യഭാര്യയെ പൂർണ്ണമായും അവഗണിച്ചത് വേദനാജനകമാണ്.
സ്ത്രീപക്ഷ എഴുത്തുകാരിയായിരുന്ന പ്രമീള നായരുടെ വാരികയിൽ വന്നിരുന്ന നോവൽ നിർത്തിവയ്പ്പിച്ചു. പ്രമീള എഴുത്തുലോകത്തേക്ക് വരരുത് എന്ന കാര്യത്തിൽ അദ്ദേഹത്തിന്റെ ആൺ സാഹിത്യ സുഹൃത്തുക്കളും സഹായിച്ചു. മാധവിക്കുട്ടിയെപ്പോലുള്ള പെൺ എഴുത്തുകാർ പോലും എം.ടിയുടെ പക ഭയന്ന് പ്രമീളയുടെ പേര് പരാമർശിക്കാൻ മടിച്ചു.
അങ്ങനെ ജീവിതത്തിലും സാഹിത്യലോകത്തിലും വെള്ളം തിളപ്പിച്ച് ഇല്ലാതാക്കുന്നതുപോലെ അവരെ 'ബാഷ്പീകരിച്ചു' കളഞ്ഞു.
പ്രമീള പിന്നീട് ഒരു സ്കൂൾ അധ്യാപികയായി ജീവിച്ചു. സ്വന്തം ചെലവിൽ രണ്ട് നോവലുകൾ പ്രസിദ്ധീകരിച്ചു. അവ ലൈബ്രറികളിൽ പോലും എത്താതിരിക്കാൻ എം.ടി ശ്രദ്ധിച്ചു. എന്നാൽ എം.ടി സിനിമയിൽ സൃഷ്ടിച്ച പല സ്ത്രീ കഥാപാത്രങ്ങളിലും പ്രമീള നായരെ മുൻനിർത്തി, അവരുടെ മേൽ ചെളിവാരിയെറിയുകയായിരുന്നു.
വളരെ സാധാരണ കുടുംബത്തിൽ നിന്ന്, എം.ടിയുടെ മകൾക്ക് നൃത്തം പഠിപ്പിക്കാൻ വന്ന സരസ്വതി പിന്നീട് എം.ടിയുടെ ഭാര്യയായി, കേരള കലാമണ്ഡലം പ്രിൻസിപ്പലായി, ഒരു മകളോടൊപ്പം സംതൃപ്തമായ ജീവിതം നയിച്ചു. എന്നാൽ എം.ടിക്ക് പണവും പ്രശസ്തിയും ഇല്ലാതിരുന്ന കാലത്ത് അദ്ദേഹത്തെ വിശ്വസിച്ചു കൂടെ വന്ന പ്രമീളയെ, 45-ാം വയസ്സിൽ ഒരു യുവതിയെ കിട്ടിയപ്പോൾ എം.ടി ശൂന്യതയിലേക്കും അപമാനത്തിലേക്കും തള്ളിയിട്ടു.
പിന്നീട് പ്രമീള സ്വന്തം കുടുംബത്തെ ആശ്രയിച്ച് മകളെ വളർത്തി. മകൾ ഒരു സാഹിത്യകാരന്റെ ഭാര്യയാകരുത് എന്നതിൽ അവർക്ക് നിർബന്ധമുണ്ടായിരുന്നു. മകൾ അമേരിക്കയിലെ ഒരു വലിയ കമ്പനിയിൽ ഉദ്യോഗസ്ഥയായി. പ്രമീള ക്യാൻസർ ബാധിച്ച് കേരളത്തിൽ തിരിച്ചെത്തിയപ്പോൾ സഹോദരങ്ങളും അമ്മയും തുണയായി നിന്നു.
എങ്കിലും, താൻ ഉരുകി സ്നേഹിച്ച പുരുഷൻ ചെയ്ത ചതി മറക്കാനാവാതെ ജീവിതകാലം മുഴുവൻ പ്രമീള നീറിപ്പുകഞ്ഞു. മരണത്തിന് മുൻപ് ഒരു തവണയെങ്കിലും കാണണമെന്ന ആഗ്രഹം പോലും സാധിച്ചുകൊടുക്കാത്ത എം.ടി സാധാരണ പുരുഷന്മാരേക്കാൾ താഴെയാണ്.
സിനിമയിൽ ചരിത്ര കഥാപാത്രമായ ഉണ്ണിയാർച്ചയെ മോശക്കാരിയായും, പാഞ്ചാലിയെ വികൃതമായും, കുന്തിയെ പരിഹാസ്യമായും ചിത്രീകരിച്ച് പ്രമീളയോടുള്ള പക എം.ടി തീർത്തു. അതുപോലെ സിനിമയിൽ മമ്മൂട്ടിയെപ്പോലുള്ളവരുടെ കഥാപാത്രങ്ങൾക്കുവേണ്ടി, അറിവും സൗന്ദര്യവുമുള്ള സ്ത്രീകളെ സ്നേഹത്തിനായി യാചിക്കുന്നവരായി മാറ്റി. ഭർത്താവ് കൂട്ടുകാരോടൊപ്പം മദ്യപിച്ച് കൂത്താടി വന്നാലും കൈനീട്ടി സ്വീകരിക്കുന്ന സ്ത്രീകളെ സൃഷ്ടിച്ച് അദ്ദേഹം തന്റെ ആണ്മാപ്പ് നിലനിർത്തി. നടി സീമയെപ്പോലുള്ള ധീരരായ സ്ത്രീ കഥാപാത്രങ്ങളെപ്പോലും മമ്മൂട്ടി കഥാപാത്രത്തിന് സേവ ചെയ്യുന്നവളായി (അവിഹിത ബന്ധത്തിൽ) അദ്ദേഹം അവതരിപ്പിച്ചു. ഇവയെക്കുറിച്ചുള്ള പരാമർശങ്ങളും ഈ പുസ്തകത്തിലുണ്ട്.
വായനക്കാർക്ക് മടുപ്പുളവാക്കാതെ ആവേശത്തോടെ വായിക്കാവുന്ന പുസ്തകമാണിത്. എഡിറ്റിംഗിൽ കുറച്ചുകൂടി ശ്രദ്ധിച്ചിരുന്നെങ്കിൽ ആവർത്തനങ്ങൾ ഒഴിവാക്കാമായിരുന്നു.
അതല്ലാതെ, തന്റെ പിതാവിന്റെ ആദ്യഭാര്യയുടെ ജീവിതകഥ പറയുന്ന പുസ്തകം നിരോധിക്കാൻ രണ്ടാം ഭാര്യയുടെ മകൾക്ക് എന്ത് അവകാശമാണുള്ളത്?
പ്രമീള നായർ ജീവിച്ചിരിക്കുമ്പോൾ തന്നെ ഈ പുസ്തകം പുറത്തുവരേണ്ടതായിരുന്നു. അല്ലെങ്കിൽ എം.ടി ഉള്ളപ്പോഴെങ്കിലും. എം.ടിയുടെ മരണശേഷം അദ്ദേഹത്തെക്കുറിച്ച് വന്ന ചരിത്രപുസ്തകമാണ് (ജീവചരിത്രം) ഈ പുസ്തകമെഴുതാൻ പ്രേരണയായത്. അതിലെ പിശകുകൾ ഇതിൽ ചൂണ്ടിക്കാണിക്കുന്നുണ്ട്.
എങ്കിലും എം.ടി എന്ന സാഹിത്യകാരന് മറുപടി പറയാൻ അവസരം നൽകാതെ ഈ പുസ്തകം വൈകി വന്നത് വലിയൊരു കുറവാണ്. വിമർശനങ്ങൾക്ക് മൗനം കൊണ്ടാണ് എം.ടി മറുപടി നൽകിയിരുന്നത്. വാക്കുകളേക്കാൾ പ്രവർത്തിയിലായിരുന്നു അദ്ദേഹത്തിന് വിശ്വാസം. ഒരുപക്ഷേ അദ്ദേഹം ജീവിച്ചിരുന്നെങ്കിൽ ഈ പുസ്തകം വെളിച്ചം കാണാൻ അനുവദിക്കില്ലെന്ന ഭയം ഉണ്ടായിരുന്നിരിക്കാം
.jpg)

0 Comments:
Post a Comment