பேராசிரியர் டி.கே. சோமசேகரன் பிள்ளை எழுதிய "எமிலியும் , சுபாஷ் மற்றும் அவர்களின் காதல் பிரபஞ்சம்" என்ற புத்தகம்.அக்டோபர் 2024 ல் வெளியிடப்பட்டுள்ளது. நேதாஜியின் ஆத்ம தோழியும் , மனைவியுமான எமிலியின் ஆஸ்திரியா வியன்னாவில் வாழ்ந்தாலும் சுபாஷ் சந்திரபோஸை உரிமை கொண்டாட முடியாமல் வாழ்ந்த வலியின் வாழ்க்கையைப் பற்றி அறியும் முயற்சியாகும் இப்புத்தகம்.
சுபாஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த புரட்சியாளர், புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர். இந்தியா மக்கள் சுதந்திரத்தை விலைக்கு வாங்கக்கூடாது, போராடி வெல்ல வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சுதந்திர போராட்டக்களத்தில் செயல்பட்டவர்.
பேராசிரியர் டி.கே. சோமசேகரன் தனது புத்தகத்தின் மூலம் ஒரு சிறந்த புரட்சியாளரின் அறியப்படாத பக்கமான அவருடைய காதல் வாழ்க்கைக்கு அழைத்து செல்கிறார். இதன் மூலம், இந்த வரலாற்று ஆசிரியர் தனது நிபுணத்துவத்துடன் நடத்திய ஆராய்ச்சிகளும் , அடைந்த தகவல்களும் இந்த புத்தகத்தின் முக்கிய அம்சங்களாகும், இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு கொடுக்கிறது.
காதல் மிகவும் அழகானது, ஏனென்றால் அது இதயத்திலிருந்து வருகிறது. அது ஒரு வகையான அக்கறையும் கூட. அன்பும் காதலும் ஒன்றாக மலர்ந்த சுபாஷ் சந்திர போஸ் மற்றும் எமிலியின் திருமண வாழ்க்கையை பகிர்வதாக உள்ளது இப்புத்தகம்.
எமிலி ஷெங்கல் ஆஸ்திரியாவின் தலைநகரம் வியன்னாவில் 1910 ஆம் ஆண்டு ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். எமிலியும் சுபாஷாவும் முதன்முதலில் 1934 ஆம் ஆண்டு வியன்னாவில் வைத்து சந்தித்தனர்.
சந்திர போஸ் 1934 ஐரோப்பாவில் இருந்து நாடுகடத்தப்பட்டபோது, அவர் "இந்திய போராட்டம்" என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கினார். சுபாஷுக்கு தட்டச்சு செய்யக்கூடிய மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஒரு செயலாளர் ஆக பணியில் அமந்தவர் தான் எமிலி ஷெங்கல் . பிற்பாடு அவர்கள் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு அழகான கிராமமான பேட்ஹாஸில் வைத்து டிசம்பர் 26, 1937 அன்று திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் உள்ளது.
நேதாஜிக்கு எமிலிக்கு தனது முதல் கடிதம் நவம்பர் 1934 இல் ரோமில் இருந்து அனுப்பி உள்ளார். பிற்பாடு சுபாஷ் தனது பயணங்களின் போதும் எமிலிக்கு கடிதங்களை அனுப்பிக்கொண்டே இருந்தார். 1934 முதல் 1942 வரை காலகட்டத்தில் சுபாஷ் 162 கடிதங்களை எமிலிக்கு அனுப்பி உள்ளார்.
சுபாஷ் இவ்வாறு எழுதுகிறார், உங்களுக்கு எழுத நான் சிறிது காலமாக மிகவும் பதட்டமாக இருக்கிறேன். உங்கள் மீது எனக்குள்ள அபரிமிதமான அன்பை அளவிடுவதும் அதைப் பற்றி எழுதுவதும் எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களைப் பற்றி எப்படி நினைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் என் எண்ணங்களில் இருக்கிறீர்கள். என் வாழ்க்கையில் நான் உங்களைப் பற்றி நினைக்காத ஒரு நாள் கூட இல்லை. நீங்கள் தொலைவில் இருந்தாலும், உங்கள் இருப்பை நான் எப்போதும் உணர்கிறேன். உங்களைப் போல நேசிக்க இந்த உலகில் வேறு யாரும் இல்லை. நீங்கள் இல்லாத நேரத்தில், நான் பல நாட்களாக கடுமையான தனிமையை உணர்ந்திருக்கிறேன்.\
ஜனவரி 4, 1938 அன்று, சுபாஷ் எழுதியுள்ளார்: "நான் ஒரு குழுவாக இரவும் பகலும் கடினமாக உழைத்தாலும், நான் எப்போதும் தனிமையின் சிறையில் இருக்கிறேன்."
சுபாஷ் 1941 இல் ஜெர்மனிக்கு வந்தார், 1942 வரை, அவரும் எமிலியும் கிழக்கு பெர்லினில் உள்ள சோஃபின் சென்ட்ரல் சென்ட்ரிசிட்டியில் உள்ள அவர்களின் வீட்டில் ஒரு குடும்பமாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அவர்களின் மகள் அனிதா 1942 நவம்பர் 29 அன்று வியன்னாவில் பிறந்துள்ளார்.
டிசம்பர் 1942 இல், சுபாஷ் தனது அன்பு மகளைப் பார்க்க வந்துள்ளார். பிப்ரவரி 8, 1943 அன்று, ஜெர்மனியிலிருந்து கடல் பயணம் தொடங்கியது. அதன் பிறகு, எமிலியும் சுபாஷும் மீண்டும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை
சிலர், குறிப்பாக வங்காளிகள், சுபாஷின் காதலையும் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ள தயங்கினர். 1947 ஜூன் 22 அன்று, டாக்டர் அகமது, சுபாஷுக்கு எமிலிக்குமான உறவின் சான்றுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு நான்கரை வயதுடைய ஒரு மகள் இருப்பதாகவும், அந்தக் குழந்தை தோற்றத்தில் சுபாஷைப் போலவே இருப்பதாகவும் குறிப்பிட்ட தகவல்களைக் நேருவுக்கு அனுப்பினார். ஜவஹர்லால் நேரு கிடைத்த தகவலை உடனே சர்தார் வல்லபாய் படேலிடம் தெரிவித்து, இந்த விஷயத்தை மேலும் விசாரிக்க தனது நம்பகமான நண்பர் நாதலால் பரிக்ஷாவை நியமிக்கிறார்.
ஆனால் சுபாஷின் சகோதரர் சரத் போஸ் இந்த திருமணச் செய்தியைப் புறக்கணித்தது மட்டுமல்லாது, திருமணச் செய்தியை நம்பவில்லை என்றார். அதுமட்டுமின்றி, நாதலாலை தகவல்கள் சேகரிக்க தனது அனுமதி இல்லாது அனுப்பியது தவறான நடவடிக்கை என்றும், எச்சரித்தார்.
ஆனால் எமிலி மற்றும் வனிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பரீத்தை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து படேலுக்கு ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். 1951 ஆம் ஆண்டு சுபாஷின் திருமணம் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் பரவின.
தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுபாஷின் வாழ்க்கையே தனது வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கும் என்றும், அதை ஒரு மதிப்பாக நிலைநிறுத்துவேன் என்றும் சுபாஷ் முடிவு செய்ததை குறிப்பிட்டு சுபாஷின் நண்பர்கள் ஹேமந்த் குமார் மற்றும் சுபாஷின் சகோதரர்களுக்கு சுபாஷ் திருமணம் முடித்துள்ளார் என்று ஏற்பதற்கு கடினமாக இருந்தது. 24 வயது இளைஞன் சுபாஷுக்கு எழுதிய கடிதத்தில், பிரம்மசரிய கொள்கையே தனது உலகக் கண்ணோட்டத்திற்கு அடிப்படை மதிப்பாக இருக்கும் என்று தெளிவாகக் கூறி உள்ளார். அவ்ரின் கொள்கையான ஒருபோதும் மது அருந்தாதே, இரவு விடுதிகளுக்குச் செல்லாதே, ஒரு பெண்ணுடன் நடனமாடாதே, இந்த மூன்று விஷயங்களை அவருடைய நண்பர்கள் ஆன திலீப் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பின்பற்றியுள்ளனர்.
ஆங்கிலப் பெண்களை காதல் செய்து இந்தியாவின் செல்வத்தையும், அதிக திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வீணாக்க வேண்டாம் என்று சுபாஷ் இந்திய மாணவர்களை எச்சரித்ததாகவும், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்கான திறன்களைப் பெற இங்கிலாந்து வந்ததாகவும் திலீப் கூறியுள்ளார்.சுபாஷின் ஆளுமை உருவாக்கத்தில் சிறு வயதிலிருந்தே ஆன்மீகம் ஒரு முக்கிய சக்தியாக இருந்துள்ளது . இந்திய இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிடத்தக்க ஒன்றைச் சொன்னார்: நமது சகோதரிகள் சமூகத்தில் அனைத்து சுதந்திரத்துடனும் பணியாற்றும் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு பெண்ணையும், செயல் அல்லது வேறுவிதமாகவோ துன்புறுத்தவோ அல்லது சித்திரவதை செய்யவோ துணிபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். .
1972 அன்று வீக்லியில் வெளியிடப்பட்ட, ஷரத்தின் மருமகள் கிருஷ்ணபோஸ் எழுதிய ஒரு கட்டுரையில், எமிலி சுபாஷின் திருமணம் நடந்த ஆண்டு 1942 என்றும், திருமணம் இந்து சடங்குகளின்படி நடந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
1960 சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா இந்தியா வந்தார். 1960 இல் அனிதா இந்தியா வந்தபோது, நேதாஜியின் சகோதரர்கள் பலர் இறந்துவிட்டனர். உயிருடன் இருந்த நேதாஜியின் சகோதரர்களில் ஒருவரான சுரேஷ் போஸ், சுபாஷ் சந்திர போஸின் மகளின் இந்திய வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனா டெல்லியில் பிரதமர் நேரு தன்னுடன் தங்குமாறு அனிதாவை அழைத்தார். அனிதா அழைப்பை ஏற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அனிதாவை இளம் ராஜீவ் காந்தி வரவேற்று அழைத்து வந்துள்ளார்.
"எனது முதல் காதலும், எனது அன்பும் என் நாட்டிற்கானவையே என்று சுபாச் தனது மனைவி எமிலிக்கு எழுதினது வருத்ததை தந்தாலும் எமிலி ஒரு தேசியவாதியை போராளியை இணையாக பெற்றதில் பெருமை கொள்கிறார். சுபாஷில் விடுதலைப்போராட்ட வாழ்க்கைக்கு எங்கும் தடையாகவோ, சுபாஷை தனக்கான ஒருவராக மட்டும் இருக்க ஒரு போதும் எமிலி கேட்டுக் கொள்ளவும் இல்லை. எமிலி அவர்கள் காந்தர்வ முறையில் திருமணம் செய்து கொண்டதை சொல்ல தயங்கவில்லை, சோர்வடையவில்லை, வாதிடமில்லை. இலட்சிய அரசியலின் உருவகமாக இருந்த சுபாஷின் வாழ்க்கையின் நோக்கம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக மட்டுமே என்பதை எமிலி சரியாகவே அறிந்திருந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நெருங்கிய தோழியாக துணைவியாக இருந்த அவர் ஒரு துணிச்சலான பெண்மணி ஆகவும், சிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரருக்கு புரட்சிகர உற்சாகத்தை ஊட்டியவராகவும் "எனது அன்பு முழுவதும் என் இந்தியாவுக்காகவே" என்று கூறிய நேதாஜிக்கு உத்வேகமாகவும் இருந்துள்ளார். சுபாஷின் ஜப்பானில் இருக்கும் பஸ்மம் இந்தியா கொண்டு வரவேண்டும் என்பது அவருடைய வேண்டுதலாக இருந்தது. நரசிம்ஹ அமைச்சரவை முயன்றாராலும் கடைசி நேரம் அது இயலாது போனதில் எமிலி சங்கல் மிகவும் வருந்தி உள்ளார்.
சுபாஷும் நாடு மேல் தான் என் முதல் அன்பு என்று சொல்லியிருந்தாலும் இவர்கள் திருமணம் பற்றி 1942 ல் சகோதரனுக்கு கடிதம் ஊடாக தெரிவித்து உள்ளார். தங்கள் சகோதரனின் அடையாளம் ஒரு தனி மனித பிரம்மசரிய போராளியாக இருக்க வேண்டும் என்பது அவரது சகோதரர்கள் குடும்பத்தினர் விருப்பமாகவும் இருந்து உள்ளது.
அதை தனது வாழ்க்கையால் நிரூபித்தும் ஆஸ்திரியாவில் ஒரு இந்திய பண்பாட்டு ஈர்ப்பிலே சுபாஷின் ஈர்ப்பில் வாழ்ந்து வந்த எமிலி மார்ச்சு 1996 இல் மறைந்தார்.
.jpeg)


.jpeg)




0 Comments:
Post a Comment