10 ஆம் வகுப்பு குழந்தைகள் புரிந்து படிக்கும் காலத்திலுள்ளது. இவ்வேளைகளில் அவர்களுக்கு படிக்க தயாரிக்கும் புத்தகங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் அறம் சார்ந்த வாழ்கைக்கும் உதவும் படியாகவும் கவனமாக வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால் புத்தகங்களை நோக்கினால் அரசியல் நோக்கங்களும் தப்பிதங்களும் மேட்டிமையான எண்ணங்கள் கொண்டு தயாரித்திருப்பதாகவே தெரிகின்றது.
கவிதைகள் பாகத்தில் திருக்குறள் 2 பாகமாக 40 குறள் படிக்க கொடுத்துள்ளனர். தமிழில் கவிதைகளுக்கு அந்தளவு பஞ்சமா என்று தோன்றுகின்றது. கவிதைகள் சமகாலத்தில் எழுதுபவை, சங்ககாலத்தில் எழுதியது என பிரித்து கொடுத்திருக்க்
துணைப்பாடப்பகுதியில் தமிழில் சாகித்திய அக்காடமி அவார்ட்டு வாங்கின எழுத்தாளர்களின் ஒரு சில கதைகளையாவது தேர்ந்து எடுத்திருக்கலாம். சமகால எழுத்தாளர்கள் எழுத்தை பற்றி புரிதலை கொடுக்க விரும்ப்பாத பாடபகுதிகள் எங்கும். தோப்பில் மீரான், வண்ணதாசன், ஜெயமோகன், போன்ற ஒரு எழுத்தாளரும் மதிக்கப்படவில்லை.
செம்மொழி,தொன்மைத் தமிழ்,தமிழ் வளர்ச்சி என குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வைத்துள்ளர்.
10 ஆம் வகுப்பு பாடப்புத்தகம்
இந்த மாதிரி பழம் கால சில ஆசாரங்களை கதையாக வடித்து பாடப்புத்தகம் வழியாக மாணவர்களுக்கு கொடுக்க எப்படி மனம் வருகின்றது என்று தான் விளங்கவில்லை.
இந்த புத்தக வடிவமைத்தலை ஆசிரியர்களிடம் கொடுக்காது இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது. உண்மையில் பல தமிழ் ஆசிரியர்கள், தமிழ் பேராசிரியர்கள் புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதில்லை. ஒரு பேராசிரியருக்கு புத்தகம் ஒன்று வாசிக்க கொடுத்த போது "தப்பா நினைக்காதீங்க வாசிக்கும் பழக்கம் எனக்கு மிகவும் குறைவு" என்று புத்தகத்தை வாங்கவே மறுத்து விட்டார்.
திமுகாவினர்கள் எப்படி70 களில் ஆசிரியர்களாக மாற்றப்பட்டு கொள்கை மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட்டதோ தற்போது பள்ளி புத்தகமாகவே அச்சிட்டு முயன்றுள்ளனர்.
பல மாணாக்கள் ஆங்கிலம் படிப்பது தான் எளிது என்று எண்ணும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளனர்.

பக்கம்45 -
மெல்ல மெல்ல மற
டாக்டர்ம்மா என்ன சொன்னாங்க..............என்று உல்லாசமாக சிரித்தான் கணவன்.
பக்கம் 46-
ஆறுதல் சொல்ல போனாங்க ............வெறும் கழுத்தும் வெறிச்சோடிய நெற்றியுமாக...............................
இந்த மாதிரி பழம் கால சில ஆசாரங்களை கதையாக வடித்து பாடப்புத்தகம் வழியாக மாணவர்களுக்கு கொடுக்க எப்படி மனம் வருகின்றது என்று தான் விளங்கவில்லை.
இந்த புத்தக வடிவமைத்தலை ஆசிரியர்களிடம் கொடுக்காது இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது. உண்மையில் பல தமிழ் ஆசிரியர்கள், தமிழ் பேராசிரியர்கள் புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதில்லை. ஒரு பேராசிரியருக்கு புத்தகம் ஒன்று வாசிக்க கொடுத்த போது "தப்பா நினைக்காதீங்க வாசிக்கும் பழக்கம் எனக்கு மிகவும் குறைவு" என்று புத்தகத்தை வாங்கவே மறுத்து விட்டார்.
திமுகாவினர்கள் எப்படி70 களில் ஆசிரியர்களாக மாற்றப்பட்டு கொள்கை மாணவர்கள் மத்தியில் பரப்பப்பட்டதோ தற்போது பள்ளி புத்தகமாகவே அச்சிட்டு முயன்றுள்ளனர்.
பல மாணாக்கள் ஆங்கிலம் படிப்பது தான் எளிது என்று எண்ணும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளனர்.
ennamo nadakkuthunu irukka mudiyala..
ReplyDeleteungal muyarchikku vaazhthukkal!