என் மகன் 9 வகுப்பில் படிக்கின்றான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து இன்னும் சில புதிர்களை தூக்கி போட்டான். தனக்கு 10 வகுப்பு பாடவும் கற்பிக்கின்றார்கள் 10 ஆம் வகுப்பு புத்தகம் வேண்டும் என்பதாகவே இருந்தது. மெட்ரிக் பள்ளி பாடத்திட்ட புத்தகத்திற்க்கு என்றே 3980 ரூபாய் கட்டியுள்ளோம். . ஆனால் பள்ளியில் இருந்து கிடைத்ததோ சமச்சீர் பள்ளி பாடத்திட்ட புத்தகம். மொத்ததில் 21,800 ரூபாய் வாங்கியிருப்பதோ மெட்ரிக் பள்ளி பாடத் திட்டம் கற்பிக்க.
9 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் சும்மா பெயருக்கும் மட்டும் தானாம். நடைமுறை செயல்முறை படிப்புக்கு 10ஆம் வகுப்பு பாடபுத்தகம் வேண்டுமாம். கடைகளில் பழைய இருப்பு இல்லை என்று சொல்லி விட்டனர். இது ஒரு வழியில் சென்று கொண்டிருக்க பழைய புத்தகம் கிடைக்குமா என்று
உறவினர்கள் தெரிந்தவர்களிடம் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இணையத்தில் கண்டு பிடித்து முதல் மாத வகுப்பு தேர்வுக்கான பகுதியை மட்டும் மறுபதிப்பு(print) எடுத்து கொடுத்து விட்டேன். நேற்றைய தினம் 10 வகுப்பு பாடப்புத்தகம் கொடுத்து விட்டனர் என்றான்.
மகன் புத்தகப்பை 30 கிலோவுக்கு மேல் ஏறி விட்டது. தினம் ஒரு மூட்டையை சுமந்து கொண்டு ஒரு தெரு தள்ளி பள்ளி வாகனம் பிடிக்க ஓடிவதை மௌனமாக கண்டு களிக்க வேண்டியது தான்.வீட்டிலும் புத்தகம் அடுக்க ஒரு புது அலமாரை வேண்டும் போலுள்ளது. 9ஆம் வகுப்பு சமச்சீர், மெட்ரிக், 10 ஆம் வகுப்பு சமச்சீர் புத்தகம் 20 க்கு மேலான நோட்டு புத்தகங்கள் என புத்தக வியாபாரி போன்றுள்ளான்!
என் மகன் 9, 10 வகுப்புகளை ஒரே தலைச்சுமடாக சுமப்பதை கண்டு மனம் நொந்து நானும் 9, 10 வகுப்பு வீட்டில் இருந்து படிக்க ஆரம்பித்து விட்டேன். ஐய்யோகோ..... கொடுமை கொடுமை.. தமிழில் 10 இயல். ஒவ்வொரு இயலிலும் இரண்டு பாடம், கவிதை, இலக்கணம், உபபாடக் கதை என நாலு பிரிவு. இந்த கவிதை பக்கங்கள் புறநானூறு, திருக்குறல் என்று ஒரு 14 வயது சிறுவனை எவ்வளவு தமிழால் வதக்க இயலுமோ அந்த அளவு வதைக்கும் படியாக உள்ளது. என்னதான் இனிப்பாக இருந்தாலும் திகட்டும் அளவு கொடுத்து வெறுக்க வைப்பது போல் தான் திருக்குரலை தினித்துள்ளனர். திருவள்ளுவரை திட்டாத மாணவர்களே இருக்க மாட்டார்கள். சரி பிள்ளைகள் உபபாடத்திலாவது சுவாரசியமான சிந்திக்க தகுந்த கதை படிக்கின்றார்களா என்றால் அது ஒரு பெரும் கொலைக்களம்.
இனி சமூகவியல் என்ற பாடங்கள் நோக்கினால் அதன் வடிவமைப்பே மிகவும் கேலிக்குரியது. சரித்திரத்தை வளைத்து உடைத்துள்ளனர். ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலத்தை ஆங்கிலமாக கற்று கொடுக்காது தமிழ் ஆங்கிலமாகத் தான் உள்ளது.
இனி சமூகவியல் என்ற பாடங்கள் நோக்கினால் அதன் வடிவமைப்பே மிகவும் கேலிக்குரியது. சரித்திரத்தை வளைத்து உடைத்துள்ளனர். ஆங்கிலம் சொல்லவே வேண்டாம். ஆங்கிலத்தை ஆங்கிலமாக கற்று கொடுக்காது தமிழ் ஆங்கிலமாகத் தான் உள்ளது.
எனக்கே சந்தேகம் வந்து விட்டது 9 என்ற படியில் கால் வைக்காது பத்தாம் வகுப்பில் தாவி சென்று 2 வருடம் படித்து குறுக்கு வழி வாழ்க்கை கற்று கொடுக்கின்றார்களா?
ஒன்றும் விளங்க வில்லை. இந்த அரசியலால் பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும் பலிகடாவாகி விட்டனர்.
இப்படி படித்து வரும் மாணவர்களிடம் கல்லூரி வகுப்புகளில் ஒரு சிறு கட்டுரை தமிழில் எழுதி தர கூறும் போது ஒரு அழகும் இல்லாது 100 தவறுகளுடன் எழுதி தருவதை கண்டுள்ளேன்.
இந்த அரசியலால் பெரியவர்கள் மட்டுமல்ல சிறியவர்களும் பலிகடாவாகி விட்டனர்.
ReplyDeleteவணக்கம் பாபா , உங்கள் ஆக்கங்களை தொடராக வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன் , நேரம் கிடைக்கும் பொழுது ஏதாவது எழுதுவேன் ,
ReplyDeleteஉலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் தான் , அவர் இடது சாரிக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தே ஆட்சியைக் கைப்பற்றினார் , அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் எல்லோரும் டாக்டர்களும் பேராசிரியர்களுமே ,அந்தப் புதிய கல்வித்திட்டம் உலகுக்கே முதல் மாதிரியான ஒரு சிறந்த கல்வித்திட்டம்.
பல்கலைக் கழகங்களில் படிக்கத் தொடங்கும் பல விடயங்களை 6 ம் வகுப்பிலேயே மிக எளிமையாகப் புகுத்தினார்கள்.
பல புதிய புத்தகங்களை இலவசமாக வினியோகித்தார்கள்.
சுய உற்பத்தியை ஊக்குவித்தார்கள்.
இறக்குமதியை குறைத்தார்கள்.
பணக்காரர்களில் இருந்து ஏழை வரை எல்லோரும் பாணுக்கு வரிசையில் நிற்க வேண்டி இருந்தது.
ஆனால் வடபகுதி விவசாயிகள் பெரும் பண்க்காரர்கள் ஆகினார்கள் , பல ஓலைக் குடிசைகள் எல்லாம் , மாடிகள் ஆகின.
இந்தக் காலத்தில் , தரப் படுத்தலென்ற சட்டமும் அறிமுகப் படுத்தப் பட்டது , அதன் நோக்கம் , இலங்கையின் எல்லாப் பாகங்களில் இருந்தும் , மக்களைப் பல்கலைக் கழகம் புகச் செய்வதே, தரப் படுத்தல் என்ற சட்டம் வந்த் பின்பே, பின் தங்கிய மாவட்டங்களான, அம்பாறை, மட்டக்களப்பு , திரிகோணமலை , முல்லைத்தீவு , மன்னார் , புத்தளம் போன்ற மாவட்டங்களில் இருந்து தமிழர் முதன் முதலாகப் பல்கலைக் கழகம் போனார்கள்.
ஆனால் இனரீதியான 5%தரப்படுத்தல் யாழ்பாணத் தமிழரை மேலும் பாதித்தது ,(முன்பு யாழ்ப்பாணத் தமிழரும் , கொழும்பு கண்ண்டி வசதி படைத்த சிங்களவ்ருமே பல்கலைக் கழகத்தை நிரப்பினார்கள்) தமிழர் தலைமை , புத்தகச்சுமை , தரப்படுத்தல் , போன்ற காரணங்களை முன்வைத்து , இனக்கலவரங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஐக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. புதிதாக வந்த அரசுக்கோ தமிழத் தலைமைகளுக்கோ அந்த அருமையான புதிய கல்வித்திட்டத்தை விளங்கும் அறிவு ஆற்றல் இருக்கவில்லை..அந்தக் கல்வித்திட்டம் விட்டபடியால், இலங்கை பின்நோக்கி பல ஆண்டுகள் சென்றது , அல்லது பல ஆண்டுகள் தேங்கியது. புத்த்கச்சுமை என்பது எல்லா ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில்ம் உள்ளது தான்.. பிள்ளைகள் பல் புத்தகங்களைப் பாடசாலையில் வைத்து வருவதற்கும் ஒழுங்கு உண்டு...புத்தகச்சுமை தேவையானது தான்...புத்தகச் சுமையை காரணமாக முன் வைத்து உலகிலேயே மிகச்சிறந்த கல்விமுறையை இழந்ததைப் பலரும் இன்னும் , புரியவில்லை, நோர்வேயில் இப்பொழுது , புதிய கல்வித்திட்டம் என்று அறிமுகப் படுத்திகிறார்கள்..அதில் அந்த இலங்கையில் இற்றைக்கு 50 வருடங்களுக்க்முன் அறிமுகப் படுத்திய பல விடயங்கள் இப்பொழுது மீண்டு அவுஸ்திரேலியாவில் இருந்து கடன்வேண்டி அறிமுகப் படுத்துகிறார்கள்..அந்த அவுஸ்திரேலியாவுக்கு எந்த இலன்கையர் சொல்லிக் கொடுத்தார் என்று தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்