காலை 7.30 வரும் பள்ளி வாகனத்தை பிடிக்க வேண்டிய இளைய மகன்; "இன்று உங்கள் பிறந்த நாள் போன்றே எனக்கு தெரியவில்லை. நீங்கள் என் நண்பர்களுக்கு மிட்டாய் வாங்கி தரவில்லை" என்றான். தம்பி உங்களை போன்ற குழைந்தைகள் தான் கொண்டாடுவார்கள் அடுத்த வாரம் உன் பிறந்த நாளை கொண்டாடுவோம். மாலை பள்ளி விட்டு வந்ததும் உனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி தருகின்றேன் என்று சமாதானம் கூறி ஒரு முத்தம் கொடுத்து அனுப்பினாலும் முகத்தில் தெளிவில்லாது திருப்தி இல்லாதே சென்று கொண்டிருந்தான்.
பிள்ளைகள் அனுப்பி விட்டு அத்தானுக்கும் காலை சாப்பாடு எடுத்து கொடுத்தாலும் மனதில் ஒரு நிம்மதி இன்மை, வருத்தம், பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. கடந்த மே 4 தேதிகளில் துவங்கிய மனப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர எடுத்த சில என் நீக்கங்கள் தவறாக எடுக்கப்பட்டு நான் எதிர்பாராத சில இழப்புகளை சந்திக்க வேண்டியாகி விட்டது. கடந்த 60 நாட்களில் என்ன எல்லாம் மாற்றங்கள் வாழ்க்கையில். ஒரு நேர்முகம், வெற்றி, கலகம், உடன் தோல்வி.......நினைத்து பார்க்க பார்க்க விடை தெரியாத கேள்விகளும் வெறுப்பும் தான் இருந்தது.
எல்லா வருடவும் ஆலயம் சென்று வணங்கி வரும் நான், இந்த வருடம் ஆற்றலற்று வீட்டிலிருந்தே கடவுளை நினைத்து கொண்டேன். எந்த இடத்தில் தவறு நிகழ்ந்துள்ளது எனக்கு பிடிபட வில்லை. என் வேலையில் மட்டும் தான் கவனமாக இருந்தேன். அவர் வழியிலே நான் குறுக்கிடவில்லையே. வாழ்க்கை நுணுக்கங்களை, வாழும் கலையை கற்று கொள்ளும் முன் ஒவ்வொரு பிறந்த நாளாக வந்து செல்கின்றதே என்ற வருத்தவும் என்னை விட்ட பாடில்லை.
புதுத்துணி வாங்கி கொடுத்தும் முகம் தெளிவில்லையே என்று கண்ட கணவர் தன்னுடன் வெளியில் வர அழைத்தார். உடன் கிளம்பி விட்டேன். இப்போது அவருடன் சில தூரம் பயணிப்பது தான் சில சிந்தனைகளை விலக்க உதவுகின்றது. எனக்கு பிடித்த புத்தகக் கடைக்கு தான் அழைத்து சென்றார். நிறைய புத்தகங்கள் குவிந்து கிடந்தன. அப்போதிருந்த மனநிலையில் ஓஷோவின் 'எதிர்ப்பிலேயே வாழுங்கள்' என்ற புத்தகம் தான் என்னை கவர்ந்தது.
கடந்த 6 மாதமாக நான் எதிர்க்காமலே கொடும் எதிர்ப்பிலயே வாழும் சூழல். ஏன் அந்த நபர் என்னை எதிர்த்தார் என எனக்கு பிடிபடவில்லை. அவர் எதிர்ப்பு என் அமைதியான மனநிலையை பாதித்து கொண்டே இருந்தது. பல வருட கனவு வேலை, மிகவும் பிடித்த வேலை செய்யும் சூழல், பண்பான அதிகாரிகள் ஆனால் என்னுடன் வேலை செய்யும் பெண்ணால் முதல் நாளே புரக்கணிக்கப்படுகின்றேன். "உங்களுக்கு வேலை கொடுத்ததே செல்லுபடியாகாது பாவம் உங்களை நினைத்து தான் சும்மாதிருக்கின்றேன் இல்லை என்றால் முதல்வரிடம் சென்று உங்களை துரத்தி விடுவேன்". என்றார். எனக்கு இதன் உள்நோக்கம் புரியவில்லை பதில் சொல்லவும் விளையவில்லை. ஆனால் நீங்கள், உங்கள் என்ற வார்த்தைகள் ஆறு மாத முடிவில் இது.. அது..என்று மாறிவிட்டது. என்னை திட்டி கொண்டிருக்க என்னுடன் பணி செய்பவர்கள் அதை கேட்டு கொண்டிருக்க, நான் தொலைகாட்சி செய்தி காண்பது போல் அந்த நபர் முகத்தை பார்த்து கொண்டே இருந்தேன். முறையிட்ட அதிகாரியும் இதை பெரிது படுத்த வேண்டாம் என்ற போது இதை பதிவு செய்து அதினும் மேல் அதிகாரியிடம் முறையிடவும் தோன்றவில்லை எனக்கு!
ஆனால் இந்த வேலைக்கும் என் கனவுகளுக்கும் 20 வருட பழக்கம் இருந்தது. அன்று 11ஆம் வகுப்பு கல்லூரியில் தான் நாங்கள் கற்றோம். மோனாம்மா என்ற பேராசிரியரை கண்டது முதலே என் பேராசிரியை கனவும் சேர்ந்து வளர்ந்தது. மேல் படிப்புகாக வீட்டில் அனுமதி கேட்டதும் நல்ல மாப்பிள்ளை இப்போது வந்துள்ளார், "உங்கள் விருப்பதிற்க்கு நாங்கள் இருந்து விட்டு பின்னால் வருத்தப்பட இயலாது. போகிற வீட்டில் ஆசை உள்ளவர்கள் படியுங்கள்", என்று சொல்லி விட்டார்கள். பின்பு வாழ்க்கை நினைத்து பார்க்காத திருப்பங்களை தந்து விட; விட்ட படிப்பை பிடிக்க சிறிய மகன் முதல் வகுப்பு போகும் மட்டும் காத்திருக்க வேண்டி வந்தது. அவர்கள் பள்ளியில் சென்ற போது நான் பல்கலைகழகம் நிதம் 2 மணி நேரம் பயணித்து 3 வருடத்தில் படிப்பை முடித்து என் வாழ் நாள் லட்சியத்தை அடைந்தேன். என் வாழ்க்கைக்கு நல்ல சில அர்த்தங்கள் கொடுத்த வேலை இது.
ஆக்கபூர்வமான சேவை செய்ய வாய்ப்பு தந்த வேலை என்பதால் இந்த சிறுபிள்ளைத் தனமான "இரு பெண்கள் பொறாமை சண்டை" என மற்றவர்களால் அழைக்கும் இந்த வழக்கை சண்டை சச்சரவு என்று இழுக்காது முகநூல் வழியாக உங்களுக்கும் எனக்கும் புரிதல் தேவை என்று மிகவும் மனித நேயத்துடன் மிகவும் பண்புடன் சகமனிதையாக கேட்டு கொண்டதையே ஒரு பெரும் ஒழுக்க பிரச்சனையாக மாற்றி எனக்கு முட்டுகட்டை இட்டு தன் மனநோயால் வந்த ஆக்ரோஷத்தை தனித்து கொண்டுள்ளார் அந்த பெண்.
முகநூலை மிகவும் ஆபத்தான ஆபாசமாக பார்க்கும் அவளுடைய பார்வையில் சிலுவையில் அறைய கொண்டு போகும் முன் யேசு நாதரிடம் "உண்மை என்றால் என்ன " என்று கேட்ட போது அமைதி காத்த அதே சூழலில் நானும் தள்ளபப்ட்டு விட்டேன் என்று புரிந்து விட்டது. இனி என் நியாயங்கள் எண்ணங்கள் எடு பட போவதில்லை என்பதும் தெரியும்.
வாய் சண்டை இடுபவளிடம் வார்த்தைகளால் ஏன் நட்பு பேணக்கூடாது என்று விளையாட்டாக எடுத்த முடிவு வினையில் முடிந்ததா அல்லது உலக சூக்சுமம் அற்ற என் போக்கு என்னை துயரில் ஆழ்த்தியதா என இன்னும் விளங்க வில்லை. விசாரணை செய்யாது, என் நிலை எடுத்து சொல்லும் வாய்ப்பு தராது தண்டிக்கப்பட்டுள்ளேன்.
என் நண்பர்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் என் மனம் இந்த பிறந்த நாள் அன்று மிகவும் துன்புற்று தான் இருந்தது. பாவி செல்லுமிடம் பாதாளம் என்பது போல் இணையவும் சரியாக கிடைக்காது இருந்த நேற்றைய தினம் அதி காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்தின வேல் ஐயா தொலைபேசியில் வாழ்த்துக்கள் அளித்தார்கள். என் நலனில் பெரிதும் விரும்பி நோக்குபவர் ஐயா. பல அரிய புத்தகங்கள் வாசிக்க சொல்லி அனுப்பி தந்துள்ளார். என் ஒவ்வொரு நடைவடிக்ககளும் ஒரு பொறுப்புள்ள தகப்பனாக இருந்து வழி நடத்துபவர். காலை 11 மணிக்கு சுவிஸ்லிருந்து ஸ்ரீ அண்ணா தொலைபேசியில் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்தியது மனதிற்க்கு ஆறுதல் கொடுத்தது. இந்த வருடம் வர இருக்கும் "நான் சொல்வதெலாம் உண்மை "என்ற புத்தகம் வெளியிட பெரிதும் உருதுணையாக வழிகாட்டியாக இருப்பவர் என் சகோதரரும் தோழரும் புத்தக ஆசிரியருமான ஸ்ரீ கந்தராஜா கங்கைமகன்.
இரவு லண்டனில் இருந்து சுபி அக்காள் "ஓ அந்த விடயத்தை தள்ளி குப்பையில் போடுங்கள், பழையது பழையதாக இருக்கட்டும் புதியவையை பற்றி சிந்திக்கள்" என்று அழுத்தி கூறி என் மனப்போராட்டத்திற்க்கு முற்று புள்ளி வைத்தார். தூங்க செல்ல இருந்த வேளையில் லண்டனில் குடியிருக்கும் ஈழ சகோதரி ஜமுனா நதி அக்காள் "நீங்கள் கடந்ததை விடுத்து வருவதை எண்ணுங்கள், உங்களால் முடியும் என வாழ்த்திய போது இன்னும் நம்பிக்கை பிறந்தது நல்ல நல்ல மனித உறவில் மனித வாழ்வில்.
இரவு லண்டனில் இருந்து சுபி அக்காள் "ஓ அந்த விடயத்தை தள்ளி குப்பையில் போடுங்கள், பழையது பழையதாக இருக்கட்டும் புதியவையை பற்றி சிந்திக்கள்" என்று அழுத்தி கூறி என் மனப்போராட்டத்திற்க்கு முற்று புள்ளி வைத்தார். தூங்க செல்ல இருந்த வேளையில் லண்டனில் குடியிருக்கும் ஈழ சகோதரி ஜமுனா நதி அக்காள் "நீங்கள் கடந்ததை விடுத்து வருவதை எண்ணுங்கள், உங்களால் முடியும் என வாழ்த்திய போது இன்னும் நம்பிக்கை பிறந்தது நல்ல நல்ல மனித உறவில் மனித வாழ்வில்.
நான் எதிர்ப்பில் மட்டுமல்ல அல்ல வாழ்கின்றேன் அதை விட நட்பு, பாசம், பண்பானவர்கள் மத்தியில் வாழ்கின்றேன் என்ற மகிழ்ச்சியில் என்னை வரவேற்க்க இன்னும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றது என்று அகமகிழ்ந்து தங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பான நன்றி வணக்கங்கள் தெரிவித்து கொள்கின்றேன்.
முகநூல் வாழ்த்துக்கள்!
பத்மர் அண்ணா வாழ்த்துக்கள்!
T.s. Kandaswami அன்பை
அணையாக்கி. ஒழுக்கமெனும் நீர் தேக்கி, இன்முக வாய்க்கால் வழி, பரிவு எனும்
அமுதூட்டி,சுற்றத்தையும் நட்பையும் பேணிப்பாதுகாக்கும் திருமகளே,
பல்லாண்டு பல்லாண்டு உலகு போற்ற வாழ்வாயம்மா !!
நெகிழ்ந்து விட்டோம்.
ReplyDeleteஎங்கள் இனிய மனப்பூர்வ வாழ்த்துகள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeletevendaam !
ReplyDeletethunpathilirunthu vidai perungal!
kaalam poka koodiyathe!
sokamum appadiye!
உங்கள் வருத்தங்களை ஆதாங்கங்களை, மறந்து பிறந்த நாளா மகிழ்ச்சியாக்க எங்கள் வாழ்த்துக்கள் உதவியதென்றால் மிகவும் சந்தோஷம். நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். முன்னே நீண்ட பாதை தெரிகிறது பயணத்தை தொடருங்கள். நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு துணையாக. மனம் திறந்த பகிர்வு. நன்றி ஜோஸ்.
ReplyDeleteநடந்தவைகளை மறந்து நம்பிக்கையோடு உங்கள் பணிகளைத் தொடருங்கள்.
ReplyDeleteநண்பர்கள் நாம் எல்லோரும் எப்பவும் உங்கள் கூடவே இருக்கிறோம் என்பதை நினையுங்கள்.
மகிழ்ச்சியான புதிய வருடங்கள் காத்திருக்கி்னறன.
ஜோஸபின் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது ஆசைகள்,நம்பிக்கைகள், கனவுகள், பிரார்த்தனைகள் எல்லாம் இந்த பிறந்த நாள் முதல் நீங்கள் நினைத்தபடி நடக்கும் என வாழ்த்தி உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். may all the wishes and dreams you dream today turn to reality. அதனால் கசப்பான சம்பங்களை உடனுக்குடன் மறந்துவிடுங்கள்...உங்களுக்கு நல்ல அன்பான கணவர்,குழந்தைகள், நல்ல நட்புகள் உள்ளனர்.அவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்கள் என்ற நினைப்போடு வாழ்க்கை பயணத்தை தொடருங்கள்.
ReplyDeleteநான் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு கேம்ப் போய்விட்டதால் உங்களுக்கு வாழ்த்தை தெரிவிக்க முடியவில்லை. ஸாரி...........
பேஸ்புக் உங்கள் நண்பன் அல்ல.....அது பலரின் வாழ்க்கையை சிரழிக்கும்...அதில் வேலை சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் பதிவிடாதீர்கள் என்பது எனது கருத்து. பல பேருக்கு அதை எப்படி உபயோகிப்பது என்பதே தெரியவில்லை என்பது எனது கருத்தும் கூட பேஸ்புக்கில் உங்களது சம்பந்தமான எந்த சொந்த தகவல்களை வெளியிடாதீர்கள்.உங்களுக்கு தெரியும் நான் என்னை பற்றி எந்தவித பெர்சனல் விஷயங்களை அதில் ப்ளிக்காக பதிவது கிடையாது அதே நேரத்தில் என்னைப்பற்றிய விபரங்களை நான் மறைக்க விரும்புவதும் கிடையாது, ஆனால் அதை எல்லோரிடமும் பகிர்வது கிடையாது. உங்களை போல விரல் விட்டி எண்ணக்க்கூடிய ஒரு சில நல்ல மனிதர்களுக்கு மட்டும் நான் யார் என்றும் என் குடும்பத்தினர் பற்றியும் சொல்லி இருக்கிறேன்.மற்றவர்களுக்கு நான் இன்னும் ஒரு மதுரைத்தமிழன் தான்
இறுதியாக Count your life by smiles, not tears. Count your age by friends, not years.வாழ்த்துகள்
என் பதிவுக்கு வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டங்களால் வந்து சென்ற நண்பர்கள் தங்கள் அனைவருக்கும் என் நன்றி மகிழ்ச்சிகள்!
ReplyDeleteநண்பர் அவர்கள் உண்மைகள் தங்களுக்கு என் வணக்கம் நன்றிகள். தாங்கள் கூறுவதில் உண்மை உண்டு. இருப்பினும் முகநூல் உதவியால் அரிய நட்புகளை பெற்றேன் நீங்கள் உள்பட. மேலும் என் ஆய்வுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளேன்.
ReplyDeleteமுகநூல் பற்றிய சரியான புரிதல் அற்றவர்கள் தீர்ப்பும் மனித தன்மையே அற்ற கொடும் இருவரால் பாதிக்கப்பட்டுள்ளேன்.
இது சூழ்ச்சி, பொறாமை என பல முகங்கள் கொண்டது. இன்னும் 20 வருடம் காத்திருந்து இதை பற்றி விரிவாக எழுத வேண்டும். என் மனம் இன்னும் பக்குவப்படும்.
என் நோக்கம் முகநூல் சமூகத்தளம் என்பதை சமூக அக்கரை கொண்டவர்கள் ஒரு மாற்று ஊடகமாக பயன்படுத்த வேண்டும் என்பதே.
தங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்.
வணக்கம். தங்கள் பிறந்தநாள் கதை படித்தேன். உங்களுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும் எனவே சமுத்திரத்தில் தள்ளிவிட்டாலும் சந்தோசமாகக் குதியுங்கள். கடல் முத்துக்கள்கூட உங்கள் கைகளில் சிக்கலாம். வாழ்த்துக்கள்.
ReplyDelete