1 Nov 2024

தேசிய தலைவர் கெ. காமராசர்

 


தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, தமிழக மக்களின் அரசியல் விடுதலையை நோக்கி பயணித்த போது கேரளத் தமிழர்களில் பிரச்சினையை வெறும் சமூகப்பிரச்சினை என்பதாக பார்த்தனர். கேரளத் தமிழர்களின் பிரச்சினையை பற்றி உரையாட கேரளத் தமிழர்களின், குறிப்பாக நாடார்களின் நலனை காப்பாற்ற 1945 ஆம் ஆண்டு டிராவன்கூர் தமிழக காங்கிரஸ் அமைப்பு துவங்கப்பட்டது.

1938 முதற்கொண்டு மலையாள ஆட்சியாளர்களால் ஆளப்படட கேரளாவில் தமிழர்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருந்தது. பல வகையில் பாகுபாடாக நடத்தப்பட்டனர். குறிப்பாக நாடார்கள் வாழ்க்கை மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது. டிராவன்கூர் தமிழர் காங்கிரஸ் கூட்டமைப்பில் நாடார்கள் ஆதிக்கம் இருந்தாலும் டி எஸ் ராமசாமி பிள்ளை போன்ற பிள்ளை இனத்தவரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் வர்க்கத்தில் இருந்த நாயர்கள் நில உரிமையாளர்களாகவும் நாடார்கள் வெறும் குடியேற்றக்காரர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்பதால் பல அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தனர்.

தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில்; அன்றைய கேரளா முதலமைச்சர் பட்டம் தானம் பிள்ளையால் ஜெயில் குற்றவாளிகள் அடக்கம் மலையாளிகளுக்கு இலவச இடம் கொடுத்து குடியமத்தினார் என்ற குற்ற சாட்டும் உண்டு.

பெருவாரி தமிழர்கள் வாழும் பகுதியில் அலுவலக மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்து இருந்தனர். ஜூலை 1, 1949 ஆம் ஆண்டு மலையாளம் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதிகளை டிவான்கூருடன் இணைத்தனர். மைனாரிட்டிகளாக தமிழர்கள் மாறும் சூழலுடன் தங்கள் உரிமைகளை இழக்கும் நெருக்குதலுக்கு உள்ளானார்கள்.


வழக்கறினர் நேசமணி நாடார், டிராவன்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பு ஏற்றதுடன் தமிழ் மக்கள் போராட்டம் உற்சாகம் பெற்றது. கேரளத் தமிழர்களின் உரிமைகளை பெற்று எடுக்கும் அமைப்பு என பிரகடனம் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் தலைவராக கே. காமராஜ் அவர்கள் இருந்ததால் தமிழர்கள் பிரச்சினையை சரியாக புரிந்து உரிமைகள் பெற்றுத் தர துணைப்புரிவார் என நம்பிக்கை கொண்டனர் தமிழ் மக்கள். அதினால் நாகர்கோயிலில் நடந்த கூட்டத்தில் உரையாற்ற காமராசரை அழைத்தும் இருந்தனர்.
டிராவன்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு, தங்கள் அமைப்பு உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு பணி சார்ந்து கேரளா அரசை அணுகிய போது நேசமணியை தென் இந்திய திருச் சபையில் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வதாக அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் மக்களின் போராடும் வலுவை குறைக்கும், என்பதால் கேரளா அரசின் தந்திரமான போக்கை கண்டு நேவசமணி அரசின் வேண்டுகோளை புரக்கணித்து விட்டார்.
டிவான்கூர் தமிழர் காங்கிரஸ் அமைப்பு தலைவர்களுக்கும், கேரளா காங்கிரஸ் அரசிற்கும் இருந்த முரண்பாட்டை காமராசர் தீத்து வைப்பார் என நாடார்கள் நம்பினார்கள். ஆனால் அது சாத்தியப்பட வில்லை. ஆனால் சட்ட மன்ற தேர்தலில் 18 க்கு 14 இருக்கை பெற்று நேசமணி வலுவான எதிர் தலைவராக உருவாகி இருந்தார்.
ஜூலை 1949, நத்தானியேல் போன்ற நாடார் தலைமைகள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது. காமராசார் நாடார் ஆக இருப்பதால் நாடார்களுக்கு உதவும் விதம் சமரசம் பேசுவார் , தீர்வை எட்ட வைப்பார் என்ற மக்கள் ஆசை நடைபெறவில்லை. காமராசர் தன்னை நாடார்கள் இனத் தலைவர் என முன் நிறுத்த விரும்பவில்லை. ஒரு தேசிய உணர்வு கொண்ட காங்கிரஸ் தலைவராகவே செயல்பட்டார் . அவரால் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை.
நாடார்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே 1952 ல் பொது தேர்தலும் வந்து சேர்ந்தது. நேசமணி , ஆர் பொன்னப்பா நாடார் மற்றும் வில்லியம் போன்றவர்கள் தேர்வாகினர். கட்சியின் தலைவராக சிதம்பநாதன் நாடார் தேர்வானர். ஆனால் நாடார்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் சிதம்பரநாதன் நாடார் கேரளா காங்கிரஸ் மந்திரி சபையில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஆனால் அந்த ஆட்சியை கலைத்ததால் அதிகார பூர்வமாக காமராசரால் நாடார்களுக்கு தீர்வு கொடுக்க இயலவில்லை. 1953 ல் தமிழ்நாடு முதல் அமைச்சராக காமராசர் வந்த போது கேரளா காங்கிரஸ் முதல்வராக இருந்த படடம் தாணு பிள்ளை; காமராசர் தமிழர்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பார் என எண்ணினார். 1954ல் படடம் தாணு பிள்ளை மறுபடியும் காங்கிரஸ் முதல் அமைச்சராக தேர்வாகி வந்த போது நேசமணி தலைமை கொண்ட TTNC இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தது.
1. தமிழர்கள் வாழும் பகுதியில் தமிழ் மொழி அலுவலக மொழியாக இருக்க வேண்டும். அதே போல்
2. தமிழர்கள் பெறுவாரி வசிக்கும் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும்.
காவலர்களின் தடையையும் மீறி நேசமணி மற்றும் சிதம்பரநாதன் இருவரும் மூணார் மக்களிடம் சென்று உரையாடினர். மேலும் உண்ணாவிரதம் இருக்க துணிந்த ராமசாமிபிள்ளை போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். கடுமைவாதியான ஆ. குஞ்சன் நாடார் 11 ஆகஸ்ட் 1954 அன்று தமிழர்களின் விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்தார்.இதனால் புதுக்கடை, மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் கேரளா போலீஸ் துப்பாக்கி சூடு நடந்தது. அடுத்த நாள் குஞ்சன் நாடார் கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வில்லியம் கைதானர். 16 ஆம் தேதி தாணுலிங்க நாடார் கைது செய்யப்பட்டார்.
21 ஆம் தேதி நேசமணி நாடார் நேருவை தில்லியில் சென்று சந்தித்து, காங்கிரஸ் தலைவர்கள் குஞ்சன் நாடார் போன்றவர்கள், கேரளா காங்கிரஸ் காவலர்களால் மோசமாக நடத்தப்படுவதை பற்றி முறையிட்டார்.
25 மே 1954 அன்று தோவாளை, அகஸ்திிஸ்வரம், கல்குளம், விளவன்கோடு , செங்கோட்டை பகுதி, பீர்மேடு , தேவிகுளம், சித்தூர் போன்ற 9 தாலுக்களை தமிழ்நாட்டுடன் இணைக்க காமராசு கோரிக்கை விடுத்து இருந்தார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க உள்ள சூழலை ஆராய ; 1953 ல் இந்திய அரசு நியமித்த கமீஷனில் பெய்ஃசல் அலி தலைவராகவும் H.N கன்ழ்ரு, கே. எம் பணிக்கர் நாயர் போன்றவர்கள் உறுப்பினர்கள் ஆகவும் இருந்தனர். இந்த கமீஷனின் பரிந்துரைப்படி தோவளை, கல்குளம், விளவன்கோடு, செங்கோட்டையின் பகுதி, அகஸ்திஸ்வரம் தமிழகத்துடன் இணைக்க தீர்வானது.

காமராசர் முதல் அமைச்சார் ஆக இருந்தும் பீர்மேடு, தேவிகுளம், சித்தூர், நெய்யாற்றின்கரா பகுதிகளை தமிழகம் இழந்தது. இதற்காக இதுவரை காமராசரை சிலர் குற்றம் சாட்டுக்கிறனர்.
குஞ்சன் நாடார் பீர்மேடு, தேவிகுளம் போன்ற பகுதிகள் எக்காரணம் கொண்டு இழக்க கூடாது என்பதில் காமராசர் உறுதி பூண்டு இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் சில பகுதிகள் இணைவதால் அல்லது விட்டு போவதால் பெரிய மாற்றம் நிகழப் போவது இல்லை என்ற கருத்தை காமராசர் கொண்டு இருந்தார்.
காமரசரின் அரசியல் வெற்றி நாடார்களால் நிகழவில்லை . அதே போன்று காமராசர் , நாடார்களுக்கு எந்த பலனும் பெற்று தர இயலவில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம் காமராசர், தன் இனம் சார்ந்த அக்கறையை விட தேசிய நலன் காப்பது என்ற கருத்தை முக்கியமாக கொண்டு இருந்தார். தமிழகம் , பீர்மேடு மற்றும் தேவிகுளம் இழக்க காமராசரின் தேசிய கொள்கை காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சில பேனர் கட்சிகள் காமராசரை நாடார் இனத்தலவராக கட்டமைக்க முயன்று வருகின்றனர். காமராசர் என்றும் இனவாதத்தை எதிர்ப்பவராகவே இருந்துள்ளார். அதுவும் சொந்த இனம் என்ற கருத்தாக்கதை அறவே வெறுத்தவர். தலைவர் என்பவர்கள் எல்லாருக்கும் முக்கியமாக நலிந்தவர்களுக்கு ஆக செயல்பட்டவர். மதம், இன உணர்வுகளுக்கு அப்பற்பட்டு மக்கள் செவையை மட்டுமெ முன் நிறுத்தி தேசிய நலனில் அக்கறை கொண்டவர். எல்லா மக்களுக்காக தலைவரை நாடார் தலைவர் என்ற கொட்டிலுக்குள் அடைத்துப் போட சில விஷக் கிருமிகள் முயல்வதை கண்டு வருகிறோம். அவ நிச்சயமாக கண்டிக்க வேண்டியது.
ஆனால் நில அமைப்பை வைத்து கண் கொண்டாலும், தமிழகத்தோடு இணைந்து இருந்தாலும் அப்பகுதி நிலை, இன்றைய மாஞ்சோலை எஸ்டேட் நிலையாகத் தான் இருந்து இருக்கும். காமராசர் ஆட்சிக்கு பின் வந்த திராவிட கட்சிகளால் நாகர்கோயில் இயற்கை வளம் மலைகள் கொள்ளை போகும் நிலையை கண்கூடாக கண்டு வருகிறோம். மேலும் கேரளாவின் அன்னியசலாவணி மற்றும் வருமானம் எஸ்டேட்டுகளை நம்பி இருப்பதை தான் காண்கிறோம்.

23 Oct 2024

நாடார்களின் இயல்பான உழைக்கும் வாழ்க்கை!

 நாய்க்கர் மன்னர் ஆட்சியில் ஒடுங்கி போன நாடார் இனம், கட்டபொம்மன் ஆட்சியிலும் பல துன்பங்களை சந்தித்தது. தேச-காவல் வரி கொடுக்க மறுத்த காரணத்தால் கட்ட,பொம்மன் ஆட்கள் வாழ்வாதாரமான பனை மரங்களை வெட்டி சாய்த்தனர் மேலும் 1780 ல் ஆதித்தன் நாடாருக்கு எதிராக கட்டபொம்மன் நிலை கொண்டார். இப்படி இருந்த நாடார்கள் நிலையில்; ஆங்கிலேயர்கள் வரவோடு, நல்ல வியாபார காலம் பிறக்க ஆரம்பித்தது. ஆங்கிலேயர்கள் உருவாக்கின நல்ல சாலைகள், பொருட்கள் கொண்டு சென்று வணிகத்தில் ஏற்பட நாடார்களுக்கு உருதுணையானது. அதுவரை வழி கள்ளர்களை பயந்து வணிகம் செய்து வந்த நாடார்கள் பேட்டைகள் அமைத்து தங்கள் வணிகத்தை பெருக்கினர். 1716 ஆம் ஆண்டு வாக்கில் 2000 காளை வண்டிகள் புகையில்லை கருப்பட்டி, பருத்தி போன்ற பொருட்கள் கொண்டு செல்ல ஈடுபடுத்தி உள்ளனர். குமுதி போன்ற இடங்களில் நாடார்கள் மட்டுப்பாவு வீடுகள் அமைத்து வசித்து வந்ததையும் குறிப்பிகின்றனர் ஆய்வாளர்கள். சேலம் கோயம்பத்தூர் என பல் வேறு ஊர்களுக்கு கருப்பட்டி வியாபாரம் செய்யும் வாய்ப்பு பெருகியது.

சின்னன் தோப்பில் இருந்து 1830 ல் பொறையார் ஊருக்கு குடியேறின நாடார் மேற்கொண்ட சாராய வியாபாரம் பக்கத்தது மாநிலம் நோக்கியும் விரிவடைந்தது. ஆங்கிலேயர்களுக்கு கடம் கொடுக்கும் அளவிற்கு வளமாகினர். டானிஷ் அரண்மனையை விலைக்கு வாங்கும் அளவிற்கு வளர்ந்தனர்.
அந்த காலயளவில் நாசரேத் தலையிடமாக கருப்பாட்டி வியாபாரத்தில் முன்னில் இருந்தது.
உறவின்முறை, மூலமாக பல பகுதியில் குடியிருக்கும் நாடார்கள் இனத்தால் இணைப்பை உருவாக்கி ஒரு குறிப்பிடட பணத்தை, நெல் அல்லது தானியம்,( மகிமை) ஒவ்வொரு நாடார் வியாபாரிகளிடம் இருந்து தருவித்து நாடார் இனத்தில் நலிந்தவர்களுக்கு உதவும் படி உடை உணவு கொடுக்கவும் பயன்படுத்தினர். இந்த மகிமை என்ற பணத்தால் குளம், கல்யாண மண்டபம் போன்றவை கட்டி சுயசார்பாக வாழவும் திருவிழாக்கள் கொண்டாடவும் பயன்படுத்தி வந்தனர். 24 கிராம த்தை சேர்ந்த நாடார்களை இணைத்து ஒரு உறவின்முறை என்ற அமைப்பை உருவாக்கி இனத்தால் இணைந்து உதவிகள் செய்து வாழ்ந்தனர். உறவின்முறை என்ற திட்டத்தின் ஊடாக , மதுரை விருதுநகர் அருப்புக் கோட்டை நகர்களை இணைத்து பணி செய்யும் விதம் 1813 ல் ஒரு கட்டிடமும் வாங்கினார்.
வணிக நாடார்கள் ஆங்கிலேய அதிகார வர்க்கத்துடன் இணைந்து வியாபாரத்தில் வளர்ந்தனர் .

இன்னொரு பகுதி மதமாற்றம் மிஷினரிகள் அறிமுகம் என தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வேகத்தில் இருந்தனர்.
நாடார்கள் எந்த சூழலிலும் தங்கள் உழைப்பு , ஒற்றுமை ஊடாக ஒரு மேம்பட்ட சிந்தனையுடன் முன்னேறினர். விடாமுயற்சி, சுயமரியாதைக்கு முக்கியம் கொடுத்தனர். தங்களை பாண்டிய சோழ, சேர ராஜவம்ச கதைகளுடன் இணைத்துக் கொண்டு முன்னேறும் மனநிலையை உருவாக்கி கொண்டனர்.

இவர்களின் இயல்பான சுய மரியாதையை உடைக்கும் விதம் கருணை இரக்கம் உதவி என்ற பெயரில் கால்டுவேல் போன்ற மிஷனறிகள் இவர்கள் வரலாற்றை எழுதி பிதுக்கப்பட்டோம் , ஒடுக்கப்பட்டோம், ஏழைகள், பண்பற்றவர்கள், முரடர்கள். நாடார் இன பெண்கள் மந்த புத்திகள், ஐரோப்பிய நாட்டு கறுப்பினத்தை விட கீழ்மையானவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கினார். பிற்பாடு இதை பற்றி கேள்வி எழுந்த போது மதமாற்றியவர்கள் நிலையை இவ்விதம் சொல்லி ஐரோப்பியர்களிடம் இருந்து பண உதவி பெறவே இவ்வாறு கால்டுவெல் கட்டமைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அருமைநாயகம் போன்ற மதமாறிய கிறிஸ்தவ நாடார்கள் போர் குணம் கொண்டு கால்டுவெல் போன்ற மிஷினறி வரலாற்று ஆய்வாளர் எழுத்தை எதிர்த்தனர்..

கல்வியும் வேண்டும் என்ற நோக்கில் முதல் ஷத்திரியா வித்யா சாலை 1889 ல் நாடார்களால் ஆரம்பிக்கப்பட்டது. நாடார் இனத்தின் தனித்துவமான அடையாளம் சிதைக்க மதமாற்றவும் ஒரு காரணம் என்பதை பிற்பாடுள்ள கிறிஸ்தவ நாடார்கள் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆனால் சில துருப்பிடித்த அரசு பரப்புரை எழுத்தாணிகள், கால்டுவேல் பரப்பிய கருத்தை நாடார்கள் மேல் வைத்து நாடார்களின் இயல்பான உழைக்கும் வாழ்க்கை, மன உறுதி , சுய கர்வத்தை சிதைக்க பார்க்கிறது.
தாங்கள் பண்பற்றவர்கள் முரட்டாள்கள். மிஷினறிகள் வராவிடில் காட்டு வாசிகளாக இருந்து இருப்போம் என நம்ப வைக்க பார்க்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் தான் வியாபாரம் செுய்ய வெளியூர் போயினர் என்ற கட்டுக்கதைகளை அவிழ்து விடுகின்றனர்.
பொதுவாக நாடார் இனம் இந்த பொய் பிரசாரத்தை கண்டு கொள்ளாது தங்கள் உழைப்பில், பிழைப்பில் ஆழ்ந்து வாழ்கின்றனர். ஆனால் சுயநலம் பிடித்த புகழ் வெளிச்சத்தை நாடும் சிலர் இது போன்ற ஆணிகளுக்கு குண்டூசி வேலையும் பார்த்து வருகின்றனர்.
எந்த இனவும் எப்போதும் உயரத்திலும் கீழையும் இல்லை. வரலாற்று சக்கிரம் உயரத்திலும் பள்ளத்திலும் வாழ வைக்கும். கடக்க வைக்கும்.
.
ஆனால் நான் சட்டை அணியவில்லை, மிஷினறி தான் அணிவித்தார்கள் , மிஷினறி தான் கல்வி தந்தார்கள், பிதுக்கப்பட்டோம், ஒதுக்கப்பட்டோம் என்ற அடிமை மனநிலையில் கிடந்தால் முன்னேற்றம் இருக்காது. மற்றவர்களை குற்றம் சொல்லி ஏமாற்றி பிழைக்க வேண்டியது தான். . மன அளவில் அடிமைப்படுத்துவது செயல்களை முடக்குவது அது ஆளும் வர்க்கம் செய்யும் நயம். அவ்வகையில் நாடார்களின் அடிமை மனநிலையை வளர்க்க இன்றைய கிறிஸ்தவமும் துணை போகிறதா என சந்தேகம் கொள்ள வைக்கிறது சில பரப்புரைகள்.
வெள்ளைக்காரன் இந்தியாவை வியாபாரம் செய்து கொள்ளையடிக்க வந்தது போலவே மிஷனரிகள் இங்கு வந்தது மதம் மாற்றவே. அதற்கு இங்கைய பண்பாட்டு தளத்தை மதம் என்ற அடையாளத்தால் பிரிக்க வேண்டும் உடைக்க வேண்டும், மதமாற்றத்தையும் கடந்து சில மிஷனரிகள் மக்கள் பணியில் இருந்தனர் என்பதற்கு சாட்சியம் மர்காஸிஸ் ஐயர், ரேனிஸ் ஐயர் போன்றவர்கள் தான். இவர்கள் பெயர்கள் கொண்டாடுவதை விட நாடார்கள் ஈழத்தில் இருந்து வந்தனர் என்று பண்ட்பாடு- ஜாதி கதை எழுதின கால்டுவெல்லுக்கு முக்கிய பங்கு கொடுக்கும் போது தமிழர்கள் சிந்திக்க வேண்டியது மன, உள்ள வலுவை கொள்கைகளால் உடைக்க பார்க்கின்றனர் இங்கைய அரசியல். அதற்கு துணை போகும் பொய் எழுத்தாணிகள்.
x

The Tinnevelly Shannars என்ற கால்டுவெல் புத்தகம் !

 The Tinnevelly Shannars என்ற கால்டுவெல் புத்தகம் 1849 ல் வெளியானது. சம்ஸ்கிருதம், ஹீப்ரு, லத்தீன் மொழி அறிந்த அருமைநாயகம் (நாடார்) (சட்டாம் பிள்ளை) நாசரேத் பள்ளி முதன்மை ஆசிரியராக அமர்த்தப்படிருந்தவர். பள்ளியில் கற்பித்து கொண்டு இருந்த பல்லர் இன ஆசிரியர் உடன் முரண் கொள்கிறார். அந்த சண்டையில் அருமை நாயகத்தை 1850 ல் பள்ளியில் இருந்து Caemmerer வெளியேற்றுகிறார். இதில் வெகுண்ட மன நிலையில் இருந்த அருமை நாயகம் சென்னையில் வைத்து பிஷப் கால்டுவெல் கையேட்டு பிரதி தின்னவேலி ஷானார் கண்டு மிஷனரிகளின் நாடார் மக்கள் மேலுள்ள காள்ப்புணவு கொண்ட மன நிலை கண்டு மிஷனரிகளுக்கு ஏதிராக திரும்புகிறார். நாடார்கள் சார்ந்து வரலாற்றை விளக்கும் 40 புத்தகங்கள் எழுதி உள்ளார். மிஷனரிகள் எதிர்ப்பால் திருமணம் முடிக்க தடை இருந்த உறவுக்கார பெண்ணை பின்பு மணந்தார். ஏக ரட்சகர் சபை என்ற இந்து- கிறிஸ்தவ சபையை உருவாக்கினார்.

ஜாதிய நோக்கில் மக்களை பிரிப்பதும் கருத்தை உருவாக்குவதையும் கருத்தில் கொண்டு மிஷனரிகளை எதிர்க்கும் நிலைக்கு சில கிறிஸ்தவ நாடார்கள் சென்றனர். முக்கியமாக இங்கிலாந்து பிரதமர் Gladstone ,க்கு தங்கள் கோரிக்கையை அனுப்பினர்.
செந்திநாதர் ஐயரை பயன்படுத்தி நாடார்களுக்கு வேட்டியே கட்ட தெரியாது என்றும் கால்டுவெல் தான் முன்னேற்றினார் என கதைகள் எழுதினர். செந்நிநாதனுக்கு செருப்படி என்று ஞானமுத்து நாடார் பதில் பிரதி அனுப்பினார். ஷானார்கள் ஷத்திரியர்களா? என்ற ஐயர் கேள்விகளுக்கும் பதில் கொடுத்தனர்.
தமிழ் இனத்தில் அதிகம் மதம் மாறினவர்கள் நாடார்கள் ஆனது எப்படி என கேள்வி எழுந்த போது நாய்க்கர் ஆட்சியாளர்களால் தங்கள் தொழிலுக்கு, சமூக நிலைக்கு பிரச்சினை வந்த போது மதம் மாறினர்
சாணா வரியில் இருந்து தப்பிக்க மதம் மாறினர்.
மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பேட்டைகள்( 1750) தங்கள் வியாபாரத்தை பெருக்க வாய்ப்பு கிடைத்தது.
மேரி பிரகாசம் என்ற ஆய்வாளர் கருத்துப் படி அடிப்படையில் சிறு தெய்வங்களில் நம்பிக்கை வைத்து இருந்த நாடார்கள் மதம், பக்தி என்பதை விட சுயமரியாதை பாதுகாப்பு, சாணாவரி போன்றவற்றில் இருந்து தப்பிக்கவே மதம் மாறினர் என்கிறார். ஆனால் கால்டுவெல் கருத்து ஏழைகள் தங்கள் வறுமையில், அடிமைத்தனத்தில் இருந்து தப்பிக்க மதம் மாறினர் என்கிறார்.
மதம் மாறினவர்கள் பல அச்சுறுத்தலுக்கு உள்ளானர்கள். இவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறம் தங்களுக்கு என தெருவுகள் அமைத்து தடிக்காரர்களை காவலுக்கு அமத்தி ஊர்களை உருவாகினர். அப்படி உருவான முதல் கிருஸ்வ ஊர் தான் முதலூர்.
நாடார்கள் தங்கள் இன அடையாளத்தை களைய வேண்டும் என்று 1898 ல் மெட்ராஸ் பிஷப் கட்டளை பிறப்பித்தார். மார்காசிஸ் ஐயர் போன்ற மக்கள் சேவையில் அக்கறை கொண்ட மிஷனரிகளுக்கு மக்கள் தங்கள் இனம் அடையாளத்தை பேணுவதில் எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. கால்டு வெல் இனம், குணம் என அரசியல் செய்து மத மாற்றத்தில் கருத்தாக இருந்த போது இளம் மருத்துவரான மார்காசிஸ் ஐயர் மக்கள் சேவையில் கவனமாக இருந்தார். அவர் தான் இரயிவே நிலையம் நாசரேத்க்கு வர காரணமாக இருந்தவர். இன்றைய அப்பகுதி வளர்ச்சிக்கு மார்காசிஸ் ஐயராகத் தான் இருக்க முடியும்.

மார்காசிஸ் ஐயருக்கு பல வழியில் தொல்லை கொடுத்தவர் கால்டுவெல் பிஷப்.


இது இப்படி இருக்க தற்போதையை வரலாற்று ஆணிகள் அருமைநாயகம் கல்யாணம் செய்ய சபை மாறினதாகவும் கால்டுவேல் எழுதின ஜாதி வன்ம புத்தகத்தை அறிவு களஞ்சியம் என்றும் எழுதி வருகின்றனர். இப்புத்தகம் ஆங்கிலேய அரசால் தடை செய்யப் பட்டு இருந்தது சில காலம்.



31 May 2024

நெல்லையின் பெருமை !

 















தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ள  திருநெல்வேலி, சென்னைக்கு தெற்கே 602 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும். பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், இரண்டாம் பாண்டிய தலைநகரமாக விளங்கிய திருநெல்வேலி , தென்காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. நாயக்கர்கள் காலத்திலும் அவர்களின் தென் தலைநகராக திருநெல்வேலி விளங்கியது. ஆற்காடு நவாப்பினால் 1801 ஆம் ஆண்டு திருநெல்வேலி கையகப்படுத்தப்பட்ட போது" திருநெல்வேலிச் சீமை" என்று பெயர்பெற்றது. அதன் பிறகு வந்த ஆங்கிலேயர்கள் தின்னவெல்லி என்று பெயரிட்டனர். மாணிக்கவாசகரால் தென் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்ட, திருநெல்வேலி தேவார மூவர்களால் பாடப்பட்ட பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் ஒன்றாகும் .

 

முதலில் நெல்லின் ஊர் என்ற அர்த்தத்தில் சாலியூர் என அழைக்கப்பட்டது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் திருநெல்வேலியை "தென்பொருணை புனைநாடு" என்று குறிப்பிடுகிறார். மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை திருநெல்வேலியை "பீடுயர் நெல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.  திருநெல்வேலியைக் குறிக்கும் மற்ற சுருக்கமான பெயர்கள் நெல்லை, நெல்லையம்பதி மற்றும் நெல்லையம்பலம் போன்றவை ஆகும். திருநெல்வேலியின் முந்தைய பெயர் "வேணுவனம்" என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர் ’ நின்ற சீர்நெடுமாறன் வேணுவனநாதர் கோயிலை  கட்டினான் என்பது வரலாறு. களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவார் இவர். அவரை தொடர்ந்து அவனி சூளாமணி (கி.பி.600 முதல் - 625 வரை) அதன் பின்  அவனி சூளாமணியின் மகனான செழியன்சேந்தன் (620 முதல் 642 வரை) அதன் பின் அவருடைய மகன் அரிகேசரிமரவர்மன் (641 முதல் 670 வரை) பாண்டிய மன்னராக ஆட்சி செய்தனர். இவர் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்ற பட்டயங்களிலும், 640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பெயரிலும் அறியப்பட்டவர்.. அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி வந்திருந்தாலும் திருஞானசம்பந்தரால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.

பொதுவாக  தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே காண்கிறோம்.  மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி உயரமான மரங்களை வணங்கி வந்த வழக்கம் இருந்து வந்துள்ளது.   அதன் நீட்சியாக உயரமான கோயில்கள், மற்றும் கோயில் கோபுரங்கள்  உருவாக்கி வைத்து இருந்தனர்.  பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம் என  ஸ்தலவிருக்‌ஷங்கள்   நிலைநாட்டினர். அவ்வகையில் மூங்கில் செடி கோயிலில் ஸ்தலவிருக்‌ஷமாக உள்ள, தாமிரபரணி நதிக்கரையில் வீற்று இருக்கும் மிக முக்கிய கோயில்  மட்டுமல்ல, மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529 – 1564) காலத்தில் தென் மாகாணத்தின் தலைமையகம் திருநெல்வேலி ஆனது. மதுரா கையெழுத்துப் பிரதிப்படி மதுரை விஸ்வநாத நாயக்கரின் தளவாய் ஆக இருந்த அரியநாதமுதலியார் தான் திருநெல்வேலி சீமை(நகரம்) உருவாவதற்கு காரணமாக இருந்தவர். ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 இல் ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர். மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெல்லையப்பர், மற்றும் காந்திமதி அம்மன் கோயிலைச் சுற்றி திருநெல்வேலி வளர்ந்து வந்துள்ளது.

 

இக்கோயிலை சுற்றியே சமூககட்டமைப்பு வளர்ந்து உள்ளது.

நெல்லையப்பர் ஆலயம் கட்டின காலம்  பற்றி ஒரு திடமான தகவல் இல்லை என்றாலும்  இலக்கியம் மற்றும் பக்தி புத்தகங்களில் உள்ள தகவல் மற்றும்  கட்டிட கலையின் அமைப்பை வைத்தும் ;  இக்கோயிலின் கற்பகிரகத்திலுள்ள சிறு விக்கிரகம்  மற்றும் அரைமண்டபம் , ஏழாம் நூற்றாண்டில் சேந்தன் மாறன் உருவாக்கியுள்ள ’மலையாண்டி குறிச்சி’ கோயில் மாதிரி இருக்கிறது என்பதால் இதன் கட்டுமானம்  ஏழாம் நூற்றாண்டில் எனக்  கணக்கில் கொள்கின்றனர்.  ஏழாம் நூற்றாண்டில்  மூல மகாலிங்கத்தை  இக்கோயிலின் மூர்த்தியாக  வணங்கி வந்துள்ளனர். 13 ஆம் நூற்றாண்டில்,  மூங்கில் காட்டுக்கு  இடையில்  இருந்து வந்ததால் வெய்முத்தார் அல்லது வேணு வனநாதர் என்றும் அழைக்கப்பட்டு உள்ளார். திருவிளையாடல் மற்றும் ரெட்டை புலவர் வெண்பாவில், இக்கோயிலின் மூல மூர்த்தி; மூங்கில்களின் முத்து  என்ற பொருளில் வெய்முத்தார் என்றே குறிக்கப்பட்டு  உள்ளது.  இக்கோயில் மூர்த்திக்கு அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஒரு தங்க கிண்ணம் கொடுத்தாக  குறிப்பு உள்ளது . 17 வது நூற்றாண்டில் எழுதப்பாட்ட ’கிளை வீடு தோது’ என்ற குறிப்பிலும் வெய்முத்தார் என்றே குறிப்பிட்டு இருந்தனர்.

 இன்று அழைக்கும்  நெல்லையப்பர் என்ற பெயர் ஒன்றவது  சுந்தர பாண்டிய  குறிப்பில்  உள்ளது. மற்றைய பல குறிப்புகளில் இம்மூர்த்தியை  திருநெல்வேலி தேவர், திருநெல்வேலியுடைய தம்புரான், திருநெல்வேலியுடைய நாயனார், வேணுவனனேஸ்வரர், வ்ரிகிவரிஸ்வரர், மற்றும்    திருகம்மகொட்டடு ஆளுடைய நாச்சி என்றும் அழைத்துள்ளனர்.


நெல்லையப்பர் கோயில் சுவர்களில் பிற்காலச் சோழர்கள் மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.  நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிறிய சன்னதியின் மேற்குச் சுவர் மற்றும் மூலமஹாலிங்கர் சன்னதியின் மேற்குச் சுவரில் காணப்பட்டும் வீரபாண்டியரின் (கி.பி.961) கல்வெட்டு திருநெல்வேலியை கீழ்வேம்புநாடு என்று குறிப்பிடுகிறது.  பாண்டிய நாடு சோழர்களின் கீழ் ஆட்சிக்கு வந்த போது 991 முதல் ராஜராஜ வளநாடு என அறியப்பட்டது.  1012 இல் ராஜராஜ மண்டலமாக பெயர் மாற்றப்பட்டது. 1022 முதல் ராஜராஜபாண்டியநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   17 வது நூற்றாண்டில் ஆட்சி செய்த மாறவர்’’மன் பொன்னின் பெருமாள்’ என்றும்  அழைத்துள்ளார்.  மாறவர்மன்  சுந்தர பாண்டியன் குறிப்பில் ’பூசம் பிரண்ட திருனெல்வேலி பெருமாள் ’என்று அழைத்துள்ளனர். அவ்வகையில் நெல்லையப்பர் காந்திமதி என்ற  பெயர்கள் பிற்பாடு வந்தது என்றே முடிவாகுகிறது.

 அதே போல கோவிலில் கட்டிட அமைப்பை அவதானிக்கையில் அரமணிமண்டபம் வரை ’நிற சீர் நெடுமாறன்’ கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மணிமண்ட இசை தூண்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தையது .  1484 முதல்  1503 வரை வேணாட்டை ஆட்சி செய்த ரவிவர்மன் திருநெல்வேலியில் சதுர்வேதிமங்கலத்தை நிறுவி உள்ளார். நெல்லையப்பர் கோயிலில் பூஜைகள் செய்யும் விதம் , அக்ரஹாரம் நிறுவி பிராமணர்களை குடியமர்த்தி இருந்துள்ளார்.

பாண்டிய காலம்  ஒரு சிறு மூர்த்தியுடன்  ஆரம்பிக்கப்பட் கோயில் நாயகக்க காலத்தில் நிறைவு பெற்றுள்ள நெல்லையப்பர்  கோவிலின் முழு சுற்றளவு  850 நீளம் 756 அகலம் ஆகும்.  காந்தியம்மை மற்றும் சிவனுக்கும் என  சமமாக பிரிக்கப்பட்ட இரட்டை கோயில் உள்ள தலமாகும்.  

ஆலய கட்டிட அமைப்பு என்பது, மக்களின் கலாச்சாரம் மற்றும் காலநிலை காரணிகளும்   மற்றும் நிகழ்த்தப்படும்  சடங்குகளும் உள்ளடங்கும். இந்தியாவின் கோயில்களின் கட்டிடக்கலைப்  நாகரா, வேசரா மற்றும்தமிழ் கட்டிடக்கலை என மூன்று வெவ்வேறு பாணிகளை பின்பற்றபடுகிறது. ந்தியாவின் வடக்கு பகுதிகளில் நாகரா மற்றும் வேசரா கட்டிடக்கலைப் பாணி பேணப்படுகிறது போல தென் பகுதிகளில் தமிழ்ப் பாணி கட்டிடக்கலை  பின்பற்றப்பட்டது.  தமிழ் கட்டிடக்கலை, வேத காலத்துக்கு முந்தையது என நம்பப்படுகிறது. தமிழ் கோயில் கட்டிடக் கலைகளின் சிறப்பம்சம் ஆக கருதப்படுவது  கருவறையுடன் கட்டப்படும் கோயில்கள்,  அதன் செறிவான வளையங்கள் கொண்ட சுற்றுப் பாதைகள் மற்றும், நீண்டு செல்லும் தாழ்வாரங்கள்,  கோவில் குளம்(தெப்பக்குளம்), திறந்த வெளிகள் (நந்தவனம்) போன்றவை ஆகும்.

கோவிலின் முழு சுற்றளவு 850 அடிக்கு 756 அடி கொண்டது. கோவிலின் பிரதான நுழைவாயில் ராஜகோபுரத்துடன், கிழக்குப் பக்கமாக உள்ளது. கோவிலை அணுகும் நான்கு  திசைகளிலும் நுழைவாயில்கள் உள்ளன.

நெல்லையப்பர் கோவில் தெற்கு மாடவீதியில், கொடிமர  மேடு, கொட்டகை மற்றும் களஞ்சிய அறைகள் அமைந்துள்ளன. இந்த நடைபாதையில் உள்ள தூண்கள் அழகாக செதுக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டுள்ளவை. நடைபாதையின் தென்மேற்கில் வடமலையப்பபிள்ளை காலம் வரையுள்ள நாயக்கர் ஆட்சியாளர்கள் உருவங்கள்  உள்ளன.

கிழக்கு தாழ்வாரத்தில் உள்ள நந்தி, கி.பி 1155 இல் கட்டப்பட்டது. நந்திமண்டபத்திற்கு அருகில் நந்தியும், கொடிமரமும் மற்றும் சூரியதேவர் பவளக்கொடி, அல்லி, மன்மதன், என மிகவும் கவர்ச்சிகரமான உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




















நந்திமண்டபத்திற்கு அடுத்தபடியாக வேணுவனநாதர் கோவிலின் தெற்கு மாடவீதியில்; நான்கு சைவ  சிற்பங்களின் திருவுருவங்கள் உள்ளன. சந்தனாச்சாரியார், சப்தமாதாக்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள், பொல்லாப்பிள்ளையாரும், கைலாசபர்வதத்தை கையிலேந்திய படி  ராவணனும் உள்ளனர்

ராஜராஜ பள்ளிகொண்ட பெருமாள் சுயம்புலிங்கம் தெற்கு திசையில் சாய்ந்த நிலையில் கட்டப்பட்டு உள்ளது.  இதன் வாயிலில் வலம்புரிப்பிள்ளையார், சந்திரசேகரர் மற்றும் தட்சிணாமூர்த்தி, பிக்ஷாந்தர் வேடத்தில் சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோரின் உருவங்களும் காணப்படுகின்றன. மேலும் தொடர்ந்தால்,  இந்த கோவிலின் மூலவிக்கிரகம் என்று கூறப்படும் பிட்லிங்கம் அல்லது திருமூல  நாதர் உருவங்களை காணலாம்.

ஊஞ்சல் விழா. 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்ட திருகல்யாணமண்டபம் அல்லது திருமண மண்டபம்  இந்த அம்பாள் கோயிலின் மற்றொரு அழகிய அமைப்பு ஆகும்.   ஐப்பசி மாதத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாளின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கொண்டாடப்படுவது  ஊஞ்சல் விழா.  எனவே இந்த மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபம் தீவிர பக்தரான சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையின் அன்பளிப்பாகும். 

ஊஞ்சல் மண்டபத்திற்கு வடக்கே புனிதமான தொட்டி, அதன் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன. இக்கோயிலில் கருமன் குளம் என்ற மற்றொரு குளம் உள்ளது. பெரும்பாலான திராவிடக் கோவில்கள் போன்றே நெல்லையப்பர் கோயிலிலும் இரண்டு கோவில் குளங்கள் (தெப்பக்குளம்) உள்ளன. இவை தேவையான சடங்குகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  முக்கியமாக  காற்றின் திசையில் உள்ள  தெப்பக்குளம், லேசான காற்றை உருவாக்கி உள்ளூர் காலநிலையை மிதப்படுத்தி  மேம்படுத்தி வைத்துள்ளது. கோயில் தெப்பக்குளங்கள் வற்றாதவை மட்டுமல்ல  பல்வேறு தாவரங்களுக்கு  அடைக்கலம் கொடுக்கும் படி உள்ளது.  மேலும் மழைநீர் சேகரிப்புக்கும் பயன்படுகிறது.

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இசைத் தூண்கள் மணிமண்டபத்தில் உள்ளன. ஒற்றைக்கல் ஒத்ததிர்வு அமைப்பில் செதுக்கப்பட்ட இசைத் தூண்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த இடத்தை நடனம் ஆடுவதற்கு நடனக் கலைஞர் அல்லது தேவதாசிகள் பயன்படுத்தி உள்ளனர். மணிமண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாற்பத்தெட்டு தூண்களின் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் தேவதாசியின் உருவம் உண்டு. இந்த மண்டபம் திறந்த வெளி நடன அரங்கத்துடன் அமைந்துள்ளனர்.

இருவரும் இணைபிரியா தம்பதிகள் என்றாலும்  சுதந்திரமானவர்கள்        என்பதற்கு இணங்க நெல்லையப்பர் மற்றும் அம்மனுக்கு வெவ்வேறு சன்னதி வளாகத்தில்   உள்ளன.   இவையை சங்கிலி மண்டபம் இணைக்கிறது. திருமலைநாயக்கர் காலத்தில் 1647ல் திருநெல்வேலியின் ஆளுநரும் சிறந்த சிவபக்தருமான வடமலையப்பப்பிள்ளை இந்த மண்டபத்தை கட்டினார்.  சங்கிலி மண்டபம் தூண்களின் மீது யாழிகளின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.  பச்சை வடிவேல் காசிவிஸ்வநாதர், அனுமன், அர்ஜுனன் மற்றும் பீமன் வைத்துள்ளனர். 
குமரன் கோயில் சங்கிலி மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

 

நவராத்திரி மற்றும் கார்த்திகை மாதங்களில் சோம வார திருவிழா கொண்டாடப்படுகிறது. கல்லாலால் ஆன பீம்களும்  ரதி, குறவன் மற்றும் குறத்தி பிரதிகள் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் மேற்கே வன்னியடிசத்தனாரின் உருவங்கள் மற்றும் பைரவரும், மற்றும் யாகம் செய்யும் திருத்தலமும் காணப்படுகின்றன. வீரபத்திரன், அர்ஜுனன், கர்ணன், விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரின் சிற்பங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தோற்றத்தை உருவாக்குகின.


தமிழ் கட்டிடக்கலைப்படி,  வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முக்கிய பங்கு கொள்கிறது. நெல்லையப்பர் கோயிலின் மற்றொரு சிறப்பு, ஒளி வரும் சாளரங்களின் அமைப்பாகும்.  தேவைப்படும் இடங்களில்  தெளிவான சாளரங்கள் வழங்கப்பட்டுள்ளன. திறந்த நடைபாதைகள், உட்புற இடைவெளிகளில் ஒளி ஊடுருவ அனுமதிக்கிறது.  கோவிலின் மையப்பகுதியான  கற்பகிரகத்தின் அமைப்பு  சூரிய கதிர்வீச்சின் தீவிரத்தை வடிகட்டி குறைந்த ஒளியை மட்டுமே  நுழைய அனுமதிக்கும் முறையில்  உள்ளது.

ஒரு பக்கத்தில் தோட்ட இடைவெளிகளில் திறக்கும் ஜன்னல்கள் மற்றும் மறுபுறம் கோவில் குளங்கள். கருவறையைச் சுற்றிலும் நிரம்பிய நடைபாதைகள், நடன அரங்கம் (தாமிரசபை) என கலைப்படைப்பின் உச்சமாகும் நெல்லையப்பர் கோயில்.

கோயில் வளாகம் மொத்த பரப்பளவில் 72% கட்டப்பட்ட இடங்கள் ஆகவும் பொது இடங்கள்  28% திறந்தவெளிகள் கொண்டவை ஆகும்.த்கொண்ட திறந்தவெளிகள் ஆகும்.  திறந்தவெளிகள் தோட்ட இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோயில் சடங்குகளுக்குப் பயன்படுத்தும் மலர்கள் இந்தத் தோட்டத்தின் மண்டபத்தின் மறுபுறம் நன்கு பராமரிக்கப்பட்ட இன்பத் தோட்டத்தில் இருந்து பெறுகின்றனர்.  இந்தத் தோட்டத்தை வடிவமைத்தவர் திருவேங்கட கிருஷ்ண முதலியார். 

1756 இல் நூறு தூண்களுடன் கூடிய சதுர வசந்தமண்டபம் இதன் நடுவில் கட்டப்படுகிறது. இந்த வசந்த மண்டபத்தில் நீர் சொட்டும் சிவபெருமானின் திருவுருவங்கள், அகஸ்திய முனிவர் மற்றைய முனிவர்கள் உள்ளது சிறந்து விளங்கும்  கட்டிடக் கலைஞரின் பணித் திறனின்  எடுத்துக்காட்டுகள் ஆகும். கோவில் யானை  வடக்கு மாடவீதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

நெல்லைக்கு அழகு மட்டுமல்ல, நெல்லையின் அடையாளமாக பாரம்பரியமான நெல்லையப்பர் கோயிலை சுத்தம் சுகாதாரமாக பண்பாட்டு தளமாக பாதுக்காக்க வேண்டியது  நமது கடமை ஆகும்.