இரண்டாம் பாண்டிய தலைநகரம் திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில், சென்னைக்கு தெற்கே அறுநூற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'திருநெல்வேலி' என்ற வார்த்தையின் பொருள் புனித நெல் வேலி என்பதாகும்
பாண்டியர் தலைநகராக மதுரை இருந்ததால், நாயக்கர்கள் காலத்தில் அவர்களின் தென் தலைநகராக திருநெல்வேலி விளங்கியது.
மாணிக்கவாசகரால் தென் பாண்டிய நாடு என்று அழைக்கப்பட்ட, திருநெல்வேலி நகரத்திலிருந்து 1912 ஆம் ஆண்டு வரை நூறு கல்வெட்டுகள் நகலெடுக்கப்பட்டுள்ளன
தேவார மூவர்களால் பாடப்பட்ட பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவஸ்தலங்களில் ஒன்றாகும் திருநெல்வேலி .
முதலில் நெல்லின் ஊர் என்ற அர்த்தத்தில் சாலியூர் என அழைக்கப்பட்டது. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் திருநெல்வேலியை "தென்பொருணை புனைநாடு" என்று குறிப்பிடுகிறார். மனோன்மணியம் நாடகத்தில் சுந்தரம்பிள்ளை திருநெல்வேலியை "பீடுயர் நெல்லை" என்று குறிப்பிட்டு உள்ளார்.
திருநெல்வேலியைப் பற்றிய குறிப்புகள் உள்ள ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாடல்கள் உள்ளன.
திருஞானசம்பந்தர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிற்குவருகை தந்துள்ளார்.
திருநெல்வேலியைக் குறிக்கும் மற்ற சுருக்கமான பெயர்கள் நெல்லை, நெல்லையம்பதி மற்றும் நெல்லையம்பலம் போன்றவை ஆகும்.
திருநெல்வேலியை தென்காஞ்சி என்றும் அழைக்கின்றனர். திருநெல்வேலியின் முந்தைய பெயர் "வேணுவனம்" என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. வேணுவனநாதர் கோயிலை மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னர் ’ நின்ற சீர்நெடுமாறன் இக்கோயில் கட்டினான் என்பது வரலாறு.
களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பாண்டிய மன்னன் ஆவார் இவர். கடுங்கோன். கி.பி. 575 ஆம் ஆண்டளவில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டார்.
இவன் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அரிகேசரி பராங்குசன் என்ற பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளார். 640 ஆம் ஆண்டளவில்.பி. 640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன் என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளார். சைவ துறவியான திருஞானசம்பந்தர் இவருடைய சமகாலத்தவர் ஆவார். அரிகேசரி ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றி வந்திருந்தாலும் திருஞானசம்பந்தரால் சமண மதத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார். வீரவநல்லூருக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமம் இவரால் அரிகேசரிநல்லூர் எனப் பெயரிடப்பட்டது.
நெல்லையப்பர் கோயில் சுவர்களில் பிற்காலச் சோழர்கள் மற்றும், பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன.நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிறிய சன்னதியின் மேற்குச் சுவர் மற்றும் மூலமஹாலிங்கர் சன்னதியின் மேற்குச் சுவரில் காணப்பட்டும் வீரபாண்டியரின் (கி.பி.961) கல்வெட்டு திருநெல்வேலியை கீழ்வேம்புநாடு என்று குறிப்பிடுகிறது.
பாண்டிய நாடு சோழர்களின் கீழ் ஆட்சிக்கு வந்த போது கி.பி 991 முதல் ராஜராஜ வளநாடு என அறியப்பட்டது. கி.பி 1012 இல் ராஜராஜ மண்டலமாக பெயர் மாற்றப்பட்டது. 1022 முதல் ராஜராஜபாண்டியநாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாடு இரண்டாக வல்லநாடு, மற்றும் முடிகொண்டசோழ வளநாடு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. வல்லநாடு பகுதி தற்போது திருநெல்வேலி மாவட்டம் ஆக உள்ளது. வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டு விட்டது.
பிற்கால பாண்டிய பேரரசு முதல் விஜயநகர காலம் வரை நிர்வாக அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருந்தன.
வேணாட்டை ஆட்சி செய்த ரவிவர்மன் திருநெல்வேலியில் சதுர்வேதிமங்கலத்தை நிறுவி உள்ளார். நெல்லையப்பர் கோயிலில் பூஜைகள் செய்யும் விதம் ,அக்ரஹாரம் நிறுவி பிராமணர்களை குடியமர்த்தி இருந்துள்ளனர்.
மதுரா கையெழுத்துப் பிரதிப்படி மதுரை விஸ்வநாத நாயக்கரின் தளவாய் ஆக இருந்த அரியநாதமுதலியார் தான் திருநெல்வேலி சீமை(நகரம்) உருவாவதற்கு காரணமாக இருந்தவர்.
ஆற்காடு நவாப்பிடமிருந்து 1801 இல் ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தினர்.
மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நெல்லையப்பர், மற்றும் காந்திமதி அம்மன் கோயிலைச் சுற்றி திருநெல்வேலி வளர்ந்து வந்துள்ளது
0 Comments:
Post a Comment