28 Jan 2018

கிறிஸ்தவம் மதமல்ல மனிதநேயம்- ஆமி வில்சன் கார்மைக்கேல்

 சமூக சூழலால் கெடுதிக்குள்ளான  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குழந்தைகளுக்கு  அம்மையாக  இருந்த  ஆமி கார்மைக்கேல்  அம்மாவின்  வாழ்விடம்  கண்டு  வரும்  வாய்ப்பைப்  பெற்றேன்.  டோனாவூர்  ஃபெலோஷிப் என்ற பெயரில் 50 வருடங்கலுக்கு மேலாக தென் தமிழகத்தின் எல்லையருகே  பணங்குடிக்கு  அருகே அமைந்திருக்கும் சிற்றூர்  டோனாவூரை  உலக  பார்வைக்கு எட்ட வைத்தவர்  ஆமி அம்மையார்..

ஆமி கார்மைக்கேல்அயர்லாந்தை சேர்ந்த டேவிட் - காத்தரின் தம்பதியரின் ஏழு பிள்ளைகளில் முதல் குழந்தையாக   செல்வந்த குடும்பத்தில் 1867 ஆம்  ஆண்டு பிறந்து   செல்வச்செழிப்புடன்  வளர்க்கப்பட்டவர்.  கல்விக் கூடங்களை  நம்பி  குழந்தைகளை  படிப்பிப்பதை  விரும்பாமல்;  வீ ட்டில்  ஆசிரியர்களை வருவித்து  இசை, நடனம், குதிரை  ஓட்டம்  மற்றும்  நீச்சல்  பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளார்.

ஆமிக்கு 16 வயதுள்ள போது  துரஷ்டவசமாக, நிமோணியா  காச்சலில்  தந்தையார்  இறந்து  விட  குடும்பம் வறுமையில் பிடியில்  சிக்கி தவித்தது.  இருப்பினும் மூத்த மகளாக, தாய்க்கும் உதவியாக  இருந்து  வந்துள்ளார்.  தனது  24 வது வயதில் கிருஸ்தவ மிஷினரியாக சேவையாற்றும் விருப்பத்தை தன் தாயாரிடம் தெரிவித்தார்.  

ஆங்கிலிக்கன் சபை மிஷனரிகளின் சார்பில் தனது முதல் பயணத்தை ஜப்பான் நோக்கி புறப்பட்டாலும் நரம்பு தளர்ச்சி நோய்  காரணமாக  தன்  சொந்த தேசம் திரும்ப வேண்டிய  கட்டாயம்  வந்தது.  உடல் தேறியதும் சீனா நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஆமி பின்பு சிலோணிலும்  தனது தலைமை  மிஷினரியின் கட்டளைக்கு இணங்கி பங்கலூரில்  தன் சேவையை தொடர்கிறார்.  வெயில் காலத்தில் குன்றூருக்கும் ஊட்டிக்கும் பயணிக்கும் வேளையில் தமிழ் கற்கும் ஆவலில் பண்ணவிளையில் ஊழியம் செய்து வந்த மிஷனரி உவாக்கரை சந்தித்த கார்மைக்கேல் ,  உவாக்கருடைய வேண்டுகோளுக்கு  இணங்க பண்ணைவிளையில் தங்கி தன் சேவையை ஆற்றி வருகின்றார்..

அங்கிருக்கவே  சாயபுரம் மற்றும்  சமீப பிரதேசங்களில்  மதம், பண்பாடு என்ற பெயரில் இருந்த தேவதாசி, குழந்தைத் திருமணம், விதவைகள் நிலை கண்டு அதிற்சியடைகின்றார்.  இந்நிலையில். 1901 ல் கோயில் குழந்தையாக சேர்க்கப்பட்ட ஏழு வயது சிறுமி ப்ரீணா கார்மைக்கேல் இல்லத்தில் தஞ்சம் அடைகின்றார்.  இக்குழந்தைகளைகோயில் பணியுடன் விபசாரத்திலும் ஈடுபடுத்தப்படுவதை அறிந்த ஆமி அம்மையார்  இனி தன் சேவை புரக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கானது என கண்டு கொள்கிறார்.  இக்குழந்தைகளை காப்பாற்றி தன் பொறுப்பில் வளர்க்க முடிவெடுக்கின்றார்


 1913 க்குள் 130 பெண் குழந்தைகள் கார்மைக்கேல் இல்லத்தில் அடக்கலம் புகிர்கின்றனர். குழந்தைகளை பராமரிக்க என்றே கத்தோலிக்கத்தில் சபையில் அருட் சகோதரிகள் கூட்டமைப்பு இருப்பது  போன்று  சகோதரிகள் சங்கம்  என்ற அமைப்பை சீர்திருத்த தெற்கிந்தியா சபையின் அதிகார வரம்பின் கீழ் 1916 ல்நிறுவுகின்றார்தேவதாசிகளாக  பாதிப்படைந்து மீட்கப்பட்ட  பெண்களுக்கு பிறந்த  ஆண் குழந்தைகளுக்கும்  1918 இல்லம் அமைக்கின்றார்.  இங்கிலாந்து அரசியிடம்  பெற்ற நன்கொடை கொண்டு  டோனாவூரில் 400 ஏக்கர் இடம் வாங்கி, இவர்களுக்கு என காப்பகம், கல்வி நிலையம், மருத்துவமனை  அமைத்து . தன் பொறுப்பில் கல்வி மற்றும் கைத்தொழில் கற்று கொடுத்து காத்து வந்துள்ளார்.


1920 வாக்கில் தென்னகத்தின் ராபின் ஹுட் என அறியப்பட்ட வடலிவிளை செம்புலிங்கம், சில வஞ்சகர்களால் சிக்கவைக்கபட்டு, போலிசாரால் தீவிரமாக தேடபட்டவர் . செம்புலிங்கத்தின் (சுயம்பு லிங்கம்) வேண்டுதலுக்கு இணங்க; செம்புலிங்கத்தின் குழந்தைகளையும் காப்பாற்றி தன் பராமரிப்பில் கல்வி கொடுத்துள்ளார்.  செம்புலிங்கம் போலிசில் சரண் அடைந்து அரசால் மன்னிக்கப்பட்டு வாழ முயற்சி மேற்கொண்டும்  நடக்காது போனதில் பெரும் வருத்தம் கொண்டவர் . அரசால் கொடும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டசெம்புலிங்கத்தை;  பாளையம் கோட்டை ஜெயிலிலும், ஒளிந்து வாழ்ந்த போது காடுகளிலும் சென்று சந்தித்து வந்துள்ளார்

சமூகத்தில் பண்பாடு என்ற பெயரிம், மக்கள் பின்பற்றும் வழக்கத்தை எதிர்ப்பதும் இல்லாது  பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு காப்பாற்றி வந்தமையால்  ஆதிக்க  அதிகாரமிக்க மக்களின் எதிர்ப்புகளை சந்தித்துள்ளார். . அரசியல்  குற்றவாளியிடம் பரிவு  காட்ட  ஆங்கிலேய அரசை  பரிந்துரைத்ததால் ஆமி அம்மையார் ஆங்கிலேய அரசின் எதிர்ப்பையும் பல முறை சந்தித்திதுள்ளார்.

தன்னுடைய உடல் உபாதைகள் மத்தியிலும் பெண்கள்  சமூக கெடுதியில் இருந்தும் ஆண்களின் ஆதிக்கத்தில்  இருந்தும்  காப்பாற்றப்பட  வேண்டும் என போராடினவர். தனது 61 வது வயதினில் 1931 ஆம் ஆண்டு  விழுந்தமையால் கால் முறியப்படுகின்றது.  பின்பு எழுந்த நடக்க  இயலா வண்ணம் 20 வருடங்கள் படுத்த படுக்கையிலானார்.
தன்னுடைய உடல் இயலாமையையும்  பொருட்படுத்தாது 1951 ஆம் வருடம் தான்  83 வது வயதில் இறக்கும் மட்டும் 36 புத்தகங்கள் எழுதியுள்ளார்.  அதில் கொள்ளைக்காரர்  செம்புலிங்கத்தை பற்றி எழுதிய ஒரு புத்தகவும் அடங்கும்.

கிறிஸ்தவம் மதமல்ல மனிதநேயம் என வாழ்ந்து காட்டிய பெண்மணியவர். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுவதிலே பெருமை கண்டவர்.  ஆண் குழந்தை என்றால் பெயருடன் ஆனந்த் என்றும் பெண் குழந்தை என்றால் காருண்யா என்றும் சேர்த்து பெயரிட்டு வந்துள்ளார்.  ஆமி அம்மையாரும் தனது உடையாக சேலையை தேர்ந்து எடுத்து அணிந்து வந்துள்ளார்.

ஜப்பான் கட்டிடகலையும் கேரளா கட்டிடக்கலையும் இணைத்து  தன் இருப்பிடங்களை கட்டி முடித்துள்ளார்மார்த்தாண்டத்திலுள்ள பத்மநாபா அரண்மனையை பல முறை சென்று கண்டு,  தனது இல்லத்தையும்  அரண்மனை பாணியில் கட்டியுள்ளார். நமது கலாச்சாரத்தின் அடையாளமான முற்றம் , கொல்லம் ஓடு, அடுக்கு மாடியல்லாது வரிசை வீடுகளாகவே கட்டியுள்ளார். . அவர் கட்டின தேவயவும் பொதுவான கிருஸ்தவ  ஆலய அமைப்பை  விடுத்து  ஜப்பான்  கட்டிட கலையுடனே திகழ்கின்து.

கோயில்  மணி கோபுரத்தில் டுயூப் இசைக்கருவி பொருத்தியுள்ளனர். ஒரு சுற்றிகை போன்ற கட்டையால்  அடித்து இனிமையான  இசை இசைத்தார் மேமா என்சகோதரி.
 அம்மையாரின் வீட்டு முற்றத்தில் தங்களுக்கு வேண்டாத குழந்தகளை தொட்டிலில் இட்டு செல்ல  தொட்டிலும் ஒலி எழுப்ப மணியும் நிறுவியுள்ளார்கள்தொட்டில் குழந்தை திட்டம் கார்மைல் அம்மையார் காலத்தில் இருந்தே இருந்துள்ளது என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. குழந்தை பிறந்ததும் தாய் இறந்தாலோ கவனிக்க ஆள் இல்லாத சூழலில்  குழந்தைகளை  தொட்டிலில் இட்டு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. அக்கா, சித்தி,பெரியம்மா பாட்டி என்ற உறவில் ஒரு முதிய பெண்ணுக்கு 12 குழந்தைகள் என்ற கணக்கில் 1000 குழந்தைகளுக்கு வரை அடக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார்.tube music

இந்தியாவின் தேசிய மலராம் தாமிரைப்பூவிடம்  அலாதி பிரியம் கொண்ட அம்மையார் கோயில் கட்டளை, முன் வாசல் கதவு , முகப்பு, பீடம் என தாமிரையும் அதன் மொட்டுமாக  கொத்தி வடித்து அலங்கரித்துள்ளார்.  தாமிரை மொட்டுக்கள் என்ற புத்தகவும் எழுதியுள்ளார். கோயில் அருகில் அழகான தாமரைக்குளம் உள்ளது. நீலத்தாமரை மலர்களால் நிரம்பி வழிந்த காட்சி கண்கொள்ளா காட்சி ஆகும்க்ஷ்



அம்மாவின் ஏற்பாட்டில் விரும்பின கல்வி பெற்று செவிலயர்களாகவும், ஆசிரியைகளாகவும் வேலையில் இருந்துள்ளனர், திரும வாழ்க்கைக்குள் செல்ல விரும்பினோரை திரும ணம் செய்து வைத்துள்ளார். ஆசிரமத்தில் வளர்ந்து வயோதிக நிலையில் அங்கு மகிழ்ச்சியுடன் வசிக்கும் பல தாய் மார்களை சந்தித்தோம்.காவி சேலை அல்லது நீல சேலை உடை அணிந்து தற்போதும் சேவையாற்றி வருகின்றனர்.

அம்மா, தான் இறந்தால்  தனக்காக  நினைவுச்சின்னம்  எழுப்ப வேண்டாம்  என்றும் பறவைகளின் தாகம் தீர்க்க  ஒரு சிறு தண்ணீர் தொட்டி மட்டும் மைக்க கூறியுள்ளார்.  அதற்கு இணங்க அன்பே உருவான அம்மாவின் நினைவுடன் பறைவகளுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் ஸ்தூபி மட்டுமே அன்பின் அடையாளமாகஅம்மைஎன்ற குறிப்புடன் உள்ளது.

அம்மாவின் காலத்தில் ஆயிரம் பேருக்கும் அடக்கலம் கொடுத்த  இடத்தில்  . தற்போது  400 ஏக்கர் நிலப்பரப்பளவில் 500 பேருடன் 16 குழந்தைகள்  குடியிருப்புகள்  ஒரு மருத்துவ மனை மிஷனரி குழந்தைகளுக்கான உறவிட பள்ளியும் உள்ளது. 1982 க்கு பின்பு அனாதை ஆண் குழந்தைகளுக்கு இடம் கொடுப்பது இல்லை. மிஷனரி குழந்தைகள் மட்டுமே அங்கு தங்கி படித்து வருகின்றனர்.

மக்களின் தேவையும் சூழலும் மாறியிருப்பினும் இப்போதும் அனாதர்களான புரக்கணிக்கப்பட்ட நிலையில் குழந்தைகளும் பெண்களும் தன்னலமற்ற சேவை பெறும் படியே உள்ளனர். தற்போது  500 குழந்தைகளுடன்  ஆமி அம்மையார் இருக்கும் போது அடைக்கலம் கொடுத்த பெண்களுக்கு மட்டுமே சேவை பெறும் இல்லமாக சுருங்கி  போனதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

வெளிநாட்டு மிஷனரிகளின்  இடத்தை  இந்திய வம்சாவளி மிஷனரிகள் பிடித்த போது சேவை இல்லங்களின் சமூக அக்கறையும் நோக்கவும் மாறி போய் விட்ட்தையும் மறுக்கல் ஆகாது.

கிருச்தவம் மதமல்ல யேசுநாதர் மதத்தை உருவாக்கவில்லை  அவர் மனிதத்தையே போதித்து சென்றுள்ளார் . ஆமி கார்மைல் என்ற யேசுவின் சீடையும் செய்த்து அதுவே. அத்தாயின் சேவை கனவு ஆயிரமாயிரம் ஆண்டு தொடர வேண்டும்  என் எண்ணத்துடன்  அழகிய ச்சை தோப்பாக காட்சி ளிக்கும் அந்த பூங்காவை விட்டு, ஏதேன் தோட்டத்தை விட்டு நகர்ந்து வந்தோம்.

ஆசிரமத்தின் முன் பிச்சைக்காரர்கள் கையேந்தும் ஓடு காய்க்கும் மரவும் கண்ணில் பட்டது.  வாழ்க்கை ஒரு பிச்சை தான் என உணர்த்தவோ என்னவோ!

    

27 Jan 2018

திசை மாறி பாய்ந்த 'அருவி'

 சமீபத்தில் வெளி வந்த திரைப் படங்களில் அனைவராலும் கவரப்பட்ட படமாகும் ‘அருவி’.   பாலுமகேந்திரா பட்டறையில் மாணவராகவும் கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உதவி இயக்குனராக  பணிபுரிந்த    அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய திரைப்படம் இது.   எடுத்து சொல்லும்படியாக அதிதி பாலன் எனும் புதுமுக நடிகை அறிமுகமாகி உள்ளார். 

தன்னுடைய மகிழ்ச்சி, விருப்பம், சுதந்திரமான மனநிலையுடன்  வாழ்க்கையை சுவாரசியமாக நகர்த்தும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தால் என்னவானார் என்பதே கதை.

 தோழியுடன் இருசக்கிர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாரா விதமாக வழியில் விழுந்து விட தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள  தெருவோரக்கடையில் இளநீர்  குடிக்க, ஸ்ட்றா வழியாக எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி நோயின் பிடியில் தாக்கப்பட்ட நிலையில்  கதை துவங்குகின்றது. 

தன்முன் இருந்த குடும்பம்,  கல்லூரி படிப்பு, சமூகம் என ஒவ்வொன்றாக  ஒதுக்அவளை புரக்கணித்துத ஒதுக்கி தள்ள; திசைமாறிய  பறவையாக வழிமாறி, தனிமைப்படியில் கோபத்திலும் பின்பு சோகத்திலும்  முடியும் பெண் வாழ்க்கை சமூகத்தின் முன் வைக்கும் சில கேள்விகள் தான் 'அருவி' என்ற திரைப்படம்.

விழிப்புணர்வு படம் என ஒரு சாரார் கூறுகின்றனர். 
எதற்கான விழிப்புணர்வு?
எய்ட்ஸ் என்ற நோய்க்கானதா அல்லது சுயநலவாதிகளான பெற்றோருக்கானதா அல்லது
கேடு கெட்ட இந்த சமூகத்திற்கானதா என்ற கேள்வி எழுகின்றது. ‘மிருகம்’ போன்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு திரைப்படங்களில் எய்ட்ஸ் வரவுது யாருக்கு என துல்லியமாக சொல்லியிருந்தது. 

ஆனால் இந்த படத்திலோ எய்ட்ஸ் வந்தது ஒரு வழியோர இள னிக்கடைகாரனிடம் இருந்து என்பது நெருடலாகத்தான் உள்ளது. கல்லூரி இளைஞசர்கள் என்றாலே ஹைபை, பஃப், மாலுகள்,  கோக் பார்ட்டி என விரும்பும் சூழலில் அவசரத்திற்கு வழியோரம் குடித்த இளனிக்கடைக்காரனிடம் இருந்து  ‘எய்ட்ஸ்’ தாக்கினது என்பது கொஞ்சம் அதீத கற்பனை தான். உயிர்கொல்லியாக 86 களில் எய்ட்ஸ்  தமிழகத்தை தாக்கி கொண்டிருந்த வேளையில் பல கட்டுக்கதைகள்  நாம் கேட்டிருப்போம்.

எய்ட்ஸ் பிடியில் மனிதன் சிக்க பல வலுவான காரணங்கள் பல இருக்க, ஏழை இளனிக்கடைக்காரன் தலையில் எய்ட்ஸின் காரணத்தை வைத்தது எவ்வகையான விழிப்புணர்வு கொடுக்கும் என சிந்திக்க வேண்டியுள்ளது.

‘முழுமையான அறிவே இந்நோயை ஒழிக்க துணை செய்யும். பாதுகாப்பு இல்லாத உடலுறவு மூலம் எ.ய்.ட்ஸ் பரவுவது; சுத்தம் செய்யாத ஊசி போன்ற பொருட்கள், பாதிக்கப்பட்டவரின் இரத்தம், பரிசோதிக்காமல் செலுத்துவது, தாயிடம் இருந்து குழந்தைக்கு ஆகிய நான்கு வகையில் மட்டுமே பரவும்.  வேறு இது காரணங்களால் பரவாது’ என மருத்துவர்கள் பரிந்துரைக்க இளனிக்கடைக்காரனை பலிகாடனாக மாற்றாது இருந்திருக்கலாம்.

இவ்வகையில்  முழு நேரப் திரைப்படம்
 லாஜிக்கை விட்டு நகர்ந்து சென்றதை  தடுத்திருக்கலாம்.  பணம் படைத்தவனுக்கான உலகம்’ என்பதை நீண்ட வசனத்தால் தோலுரிக்கும் காட்சி "பேஷ், பேஷ்" என உச்சு கொட்டலாம். ஆனால் இப்படத்தின் கதையோட்ட சட்டத்தில் இந்த கதைவசனம் எவ்விதம் வலு சேர்த்தது, கதைக்கு எவ்விதம் தேவையானது என சிந்திக்க வேண்டியுள்ளது.

ஒரு
துப்பாகியை கையாளத்தெரிந்த கூர்மையான பெண் தன் நியாயத்தை பெற எதனால் டுபாக்கூர் நிகழ்ச்சியையும் நிகழ்ச்சி தொகுப்பாளரையும் நம்பி வந்தார்?  பிற்பாடு தனது முழு விமர்சனத்தையும்  தொலைக்காட்சி நிகழ்ச்சியை பகுந்தாய்வது ஊடாகவே நகருகின்றது. 

எய்ட்ஸ்
நோயாளிக்கு தேவையான சிகித்சை தரத்தை பற்றியோ கொடுக்க வேண்டிய சுகாதார சூழலை பற்றியோ சொல்லாது ‘பணம், பணம்’ என டயலோக்கை முடித்திருப்பது லாஜிக்கை கெடுக்கிறது.

நமது சமூக நியதிப்படி ஒரு பெண் தான் பாதுகாப்பாக இருப்பது,  நம்புவது தன்னுடைய குடும்பத்தை தான். அந்த குடும்பத்தின் புரக்கணிப்பை நேரடியாக சாடாது, ஏதோ சொல்ல வந்து எது எதையோ சொல்லி விட்டு சென்றது போல் உள்ளது. 

குடும்பம் என்ற அமைப்பில் குடி கொள்ளும் தாய், தந்தை என்ற தெய்வங்கள், மகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் உருதுணையாக இருந்த அன்பே வடிவான அப்பா!  ஒரு மனசாட்சியும் இல்லாது எந்த காரணத்தையும் அறிய விளையாது "வீட்டை விட்டு போ" என விரட்டி வெளியேற்றுகின்றனர். அந்த தாயின் ஒவ்வொரு உடல் மொழியும் தாய்மையில் விஷம் கலந்த சமூகத்தையே பிரதிபலிக்கிறது. தன் பெத்த பெண்ணை பற்றி தன் மகனிடன் அவதூறு பரப்பும் தாய்! ஒரு பெண்ணுக்கு வாழ் நாள் முழுக்க  உறுதுணையாக இருக்க வேண்டிய சகோதரன் என்ற உருவகம்.  நல்ல வேளை தம்பியாக பிறந்தான். சொல்லால் சாகடிக்கின்றான், அண்ணனாக பிறந்திருந்தால் ‘எங்க குடும்ப கவுரம்’ எனக்கூறி அருவாளால் ஒரே போடு போட்டு படத்ததையே பாதியில் முடித்திருப்பான்.  ஒரு பிரச்சினை என்றதும், பல்லும் நகவும் கொண்டு அவளை துரத்துகின்றனர்.  

சொந்த குடும்பத்தில் இவ்வளவு சொள்ளைகளை வைத்து கொண்டு, ஒரு சமூகத்தில் இருந்து நியாயத்தை எதிர்பார்க்க இயலுமா?  . குடும்பம் என்ற அமைப்பை கேள்விக்கு உள்ளாக்காது; அடுத்த கட்டத்தில் சமூக நிலையில் இருந்து தன்னை துன்புறுத்திய கதாப்பாத்திரங்களை சாடுவதால் என்ன பலன்?


அந்த சோபாவில் முதல் நபராக அப்பா -அம்மாவை இருத்தியிருக்க வேண்டும். பெற்ற பிள்ளையை தன் குடும்பமே கரிசனையாக நடத்தாத போது சமூகவெளி பொறுப்பாக்க  இயலுமா? 

மேம்போக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர், தொகுப்பாளர் , பணம் என பல சமூக குற்றத்தை விளாசிய பெண்மை, தன் குடும்பம் என்றதும், அப்பாவை காணவேண்டும், எனக்கும் பிள்ளை பெத்து வளக்கனும் என்ற 80கள் பெண்ணாக மாறி உருகுவது நெருடலாக உள்ளது.. அந்த இடங்களில் பிரமிப்பான அருவியை, ஊர் மத்தியிலிருக்கும் சாதாரண குளமாக மாற்றி விட்டனர். 

பிறப்பு என்று ஒருவனுக்கு இருக்குமானால்  இறப்பு நிச்சயம். எய்ட்ஸ் இல்லாவிடில்  கான்சர் இப்படி ஏதோ ஒன்று மரணத்தை தரத்தான் போகிறது.  இந்நிலையில்  வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த பெண்ணின் மரணத்தை  கொடூரமாக; நேசம், பாசம் என்ற பெயரில் ஆறுதலும் தேறுதலும் தேடும் பரிதாபத்துகுறிய கதாப்பாத்திரமாக மாற்றி, அழு வைத்து  உருக வைத்து படத்தை முடித்திருப்பது முற்போக்கான சிந்தனையல்ல. மரணத்தை விழாவாக கொண்டாடும் மனநிலையை உருவாக்க வேண்டிய படங்கள்  நம்பிக்கையற்ற, இரக்கத்தை கெஞ்சும், பயமுறுத்தும் வகையில்   மரணத்தை சித்தரித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். 
தஞ்சமென தோழியின் வீட்டில் குடிபுகிர்கின்றாள். அங்கு ஒரு கேடு  கெட்டவன்   தோழியின் அப்பா உருவத்தில். இதில் கவனிக்கதக்க விடயம் என்னவென்றால் அப்பாவும் மகளும் சியர்ஸ் அடித்து வைன் குடிக்கின்றனர். சிகரட் அடிக்கின்றனர்.  அந்த அப்பனின் பெயர்  ஜோசப்! தமிழ்படங்களில் காலா காலமாக கிருச்தவ குடும்பங்களை  மேற்கத்திய கலாச்சாரத்தை தழுவிய அமைப்பாகவே காட்டப்பட்டு வருகிறது. இப்படத்திலும் ‘ஜோசப்’ என்ற பெயருள்ள மனிதன் தன் மகள் வயதொத்த பெண்ணை கற்பழிக்கின்றார். 

‘ஏழையான வழியோரக்கடை இளனிக்கடைக்காரனுக்கு எய்ட்ஸ் இருக்கும்’ என்ற  ஒரு வகையான மைனாரிட்டி தாக்குதல் போன்றது தான் இதுவும் என்பதை கவனிக்காது இருக்கலாகாது.


தொகுப்பாளரும், நடிகையும் திரைப்பட இயக்குனருமான லஷ்மி ராமகிருஷணனை தாக்குவது போல் பல காட்சிகள் அமைத்திருப்பது பெண்ணை பெண்மையை போற்றிய படத்தில்; அது சமகாலத்தில் உயிருடன் இருக்கும் பெண்ணை இந்த அளவு இகழ்ந்துருக்க வேண்டியதா என்பதையும் சிந்தித்திருக்க  வேண்டும்.

\
எச்.அய்.வி. யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மருத்துவ வசதி அளிக்க வேண்டும். தொண்டு நிறுவனத்திடம் பொறுப்பை கொடுத்து விட்டு ஒதுங்கி இருக்கல் ஆகாது. கருணையும் இரக்கவும் உன் கண்ணீரும் அல்ல; சமநீதி கொண்ட உரிமையும் மனிதவுமே தேவை என்பதை  தெளிவு படுத்தியிருக்கலாம். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சுத்தம் சுகாதாரமான மனித நேயமுள்ள அணுகதல் தேவை என வலியுறுத்திரயிருக்கலாம்.

திரைக்கதையில் முதல் பாதியில் இருந்த விருவிருப்பு அடுத்த பகுதியில் குறைந்து சில இடங்களில்  கிழிந்து தொங்குகின்றது. 

மிகச்சிறந்த ஒளிப்பதிவு. படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்திருப்பது ஒளிப்பதிவு என்றால் மிகையாகாது. ஒளிப்பதிவாளராக புதுமுகம் ஷெல்லி காலிஸ்ட் அறிமுகமாயுள்ளார்.  படத்தொகுப்பும், புது முகம் அதீதியின் நடிப்பும் சிறப்பு. பின்ன்னி இசையும் குட்டி ரேவதியின் பாடல் வரிகளும் படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தவை.

‘அன்பால் இணைக்கப்பட்டு மனிதர்களாகும்’ கடைசி சீன்  மலையாளப்படம் ‘சார்லி’யின் கடைசி சீனை நினைவுப்படுத்துகின்றது. 



அருவி சிறப்பான காட்சி விருந்தாகவும் சிந்தனை சக்தியாகவும் இருப்பதுடன் முற்போக்கான சிந்தனையுடன் இன்னும் அழகாக பரிணமித்திருக்கலாம்.






22 Jul 2017

செல்வபாபா நினைவு சொற்பொழிவு- Selvababa Memorial endowment Lecture-Rtn Senthil Kannan

வாழ்க்கையை மிகவும் சுவாரசியமாக ரசித்து வாழ்ந்தவர்தூங்கும் நேரம் தவிர்த்து வேலை செய்து கொண்டிருக்கும் வழக்கம் கொண்டவர்மாதம் ஐந்து நாட்களாவது எங்களுக்காக(தன் குடும்பத்திற்காக) ஒதுக்கும் இனிமையான மனிதர். அவர் எங்களை விட்டு, அவர் அலுவலகம்,வேலை; அவர்  கனவை விட்டு, கடந்து விட்டாரா? இன்னும் நம்ப இயலவில்லை. ஒவ்வொரு நொடியும் என்னை வதைக்கும் அவர் நினைவுகளை ஆக்கபூர்வமான செயலாக்கத்துடன் இணைக்க வேண்டும் என்பது என் கடமையாகி விட்டது கட்டாயமாகியது.


செல்வபாபாஇயல்பாகவே இளகிய மனம் படைத்தவர், ஈர நெஞ்சம் கொண்டவர். என்றும் இளமையுடன் இளைஞராக இருக்கவே விரும்பினவர். சுதந்திரமான வளர்ச்சியை பெரிதும் விரும்பினவர். அத்தானுடன் பயணிக்கும் போது ஒரு முறை அவருடைய துறைத்தலைவருடன் பேசினதும்  எனக்கும் அறிமுகம் செய்து  தந்ததும் நினைவு இருந்துஇருவரும் பல்கலைகழகம்
சென்ற போது அவருடைய பேராசிரியை சிந்தியா அவர்களும் முனைவர் பட்டம் பெற வந்திருந்தார். என்னை படிக்க வைத்து பட்டம் வாங்க வைத்திருந்தை அறிந்தும்தன்னுடைய மாணவரான என்னவர் தன்னுடைய படிப்பை முழுமையாக முடிக்க அறிவுறுத்தி  கொண்டிருந்தார்.


செல்வபாபா தன் உழைப்பால் தன்முனைப்பால் வளர்ந்தவர் உயர்ந்தவர். பல வருடங்கள் மற்றவர்களுக்கு கணக்காளராகவும் தணிக்கையாளராகவும் சேவையாற்றினாலும் கடந்த  ஏழு வருடமாக தன் சொந்த தொழிலில் கால் பதித்து வெற்றி கண்டவர்.




தன்னுடைய கல்லூரிக்கு செல்ல வேண்டும். தன் துறை சார்ந்த மாணவர்ளுக்குடாலிபோன்ற கணக்கு சார்ந்த கணிணி மென்பொருள் கற்று கொடுக்க வேண்டும் என்று பல முறை என்னிடம் கூறினது ஞாபகம் வந்தது. அவ்வகையில் செல்வபாபாவிற்கு மிகவும் பிடித்த, அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த ஊரில், அத்தான் படித்த கல்லூரியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற ஆவலில்; வருடா வருடம் வருமான வரி அல்லது தணிக்கை பாடத்தில் முதல் இடம் வரும் மாணவருக்கு ஒரு சிறு பரிசு கிடைக்கும் வண்ணம் சில ஏற்பாடுகளை செய்ய முன் வந்தேன்.  இந்த கல்வியாண்டு துவங்கிய, சூழலில் அத்தான் படித்த துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு சிறப்பு விரிவுரை ஏற்பாடு செய்ய மனம் கூறியது. துறைத்தலைவரிடம் என் விருப்பம் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்திருந்தேன். உடனடியாக என்னை உற்சாகப்படுத்தியதுடன் வாய்ப்பையும் வழங்கினார்.

என்னவர் செல்வபாபா கடந்த 24 வருடம் கணக்கு தொழில் சார்ந்து இயங்கினவர்.  தனது பட்டப்படிப்பு முடித்த உடனே  சென்னை அடையாரில்  ராகவன் என்ற ஆடிட்டரிடம் ஆடிட்டிங்  பயிற்சியாளராக தன் தொழிலை துவங்கினார். பின்பு பெற்றோரின் வற்புறுத்தலால் ஆர்.பி.டி’ என்ற தேயிலை தோட்த்தில் ஆடிட்டிங் உதவியாளராக வேலையில்  சேர்ந்தார். ராணுவத்தில் இருந்து வந்த முரளிதர மேனோன்  என்ற மேலாதிகாரியின்  கீழ் தன் வேலையில் நிபுணராக வளர்ந்தார்.  2000 வாக்கில் ஏற்பட்ட உலகாலாவிய சூழல் மாற்றத்தில்   தாக்குப்பிடிக்கா இயலா  தேயிலைத்தோட்டம் வேலை வாய்ப்பு சரிய தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்லில் தணிக்கையாளராக சேர்ந்தார்ஒரு நிறுவனத்தில் இருந்து தனி பெரும்  முதலாளிகள் கீழ் வேலை செய்யும் போது பல சிக்கல்களை எதிர் கொண்டார். இருப்பினும் பத்து வருத்திற்குள் ஜாம்பெர்ட், ராஜா ஏஜென்ஸி, போன்ற முதலாளிகளிடன் வேலை செய்துள்ளார்.  முதலூரை சேர்ந்த ரே அவர்களின் கானடா நாட்டில் இயங்கும் ஒரு கணக்கு நிறுவனத்தில் வேலை கிடைத்த போது பாளையம்கோட்டையை நோக்கி நகர்ந்தோம். பின்பு கொக்கரைக்குளம்சூசி ஆட்டோ ஸோண்பைக் விற்பனை நிலையத்தில்  புருஷோத்தமன் சாரிடம்  கணக்கு மேலாளராக வேலை நோக்கினார்.  முதலாளியின் ஆதரவு அவரை ஆக்க பூர்வமாக நகத்தியதுபின்பு நாகர்கோயிலை சேர்ந்த  கல்லூரி கணக்கு அலுவலகத்தில் சில வருடங்கள் வேலை செய்த பின்  சுயமாக அக்கவுண்ட் சொலுஷன்என்ற நிறுவனத்தை துவங்கினார்.






மற்றவர்களிடம் வேலை செய்வதும் சொந்தமாக செய்வதும் என இரு நிலையை கடந்தவர். மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட தன் சுய சம்பாத்தியம் என்பதையே பெருமையாகவும் விருப்பமாகவும் கொண்டிருந்தவர். அவ்வகையில் அவர் பெயரில் நிகழும் முதல் விரைவுரை  சுயதொழில் அல்லது  தொழில்  முகவோர் சார்ந்து இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்து, துறைத்தலைவர் ஜிஎஸ்டி  பற்றி விரிவுரை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற சொல்லுக்கு இணங்க விரிவுரையாளரை வினவி கொண்டிருந்தேன்



நண்பர் பத்திரிக்கையாளர் பாலமுருகன் உதவியால் விவிடி & சன்ஸ் தேங்காய் எண்ணை குடும்பத்தை சேர்ந்த ரோட்டரியன் டி. செந்தில் கண்ணன் அவர்கள் முதல் விரிவுரை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்து.   லயாளா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். உலகலாவிய வியாபாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தாரணி ஏற்றுமதி  இறக்குமதி சேவை நிறுவனம் ஊடாக ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். ’பாம்ஸ்என்ற பயிற்சி நிறுவனத்தை நத்தி வருகின்றார். ’பாம்ஸ் பிளஸ்என்ற மாதந்திர பத்திரிக்கையும் நடத்தி வருகின்றார். வியாபார நிறுவனக்களின் தலைமையும் பல விருதுகளும் பெற்றுள்ளர்.  25-நாடுகளுக்கு மேல் பயணம் மேற்கொண்டுள்ளார். ’சிந்தனையில் உலகலாவியலாகவும் செயலில் உள்ளூர் உணர்வுடனும் செயலாற்றுகஎன்ற நோக்கில் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயலாற்றி வருபவர்

வியாபாரத்தில் தமிழகத்தில் இரண்டாவது இடமும் தமிழகத்தில் இரண்டாவது இடவும் பெற்ற விவிடி தேங்காய் எண்ணைய் குழுமத்தில் ஒருவரான மதிப்பிற்குரிய டி செந்தில் கண்ணன் அவர்களின் சிறப்புரை கடந்த வெள்ளி அன்று நடைபெற்றது.


கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் முனைவர் பாஸ்கர் ராஜகோபால், கல்லூரி நிதி அதிகாரி முனைவர் அருள்ராஜ், முனைவர் சிந்தியா  மற்றும் துறையின் அத்துனை பேராசிரியர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
 பங்கு கொண்ட 250க்கிற்கும் மேற்பட்ட மாணவர்களில் யாரேனும் எதிர்காலத்தில் தொழில் தேடுபவராக இல்லாது தொழில் முகவர்களாக/ கொடுப்பவர்களாக உருமாற, புதிய தகவல்கள் தெரிந்து கொள்ள, சுயநம்பிக்கையில் முன்னேற செல்வபாபா சிறப்பு விரிவுரை உதவினது என்றால் செல்வபாபா நிச்சயம் மகிழ்வார் என நம்பிக்கை கொள்கின்றேன்.


மற்றவர்கள் வளர்ச்சியில் அத்துனை ஆர்வம் கொண்டவர், நேரம் காலம் பாராது உழைப்பை மட்டும் நம்பி சுயமாக சுதந்திரமாக வாழ விரும்பினவர்சுயஒழுக்கம் தன்னம்பிக்கைக்கு நிகரானவர். அவருடைய நினைவாக அவர் எப்போதும் விரும்பும் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆசைப்பட்ட  பணியை தொடர வேண்டும் என்ற என் நோக்கத்தை நிறைவேற்றின அத்துனை நல் உள்ளங்களுக்கும், என் நன்றிகள். சிறப்பாக சிறப்பு விரிவுறை நிகழ்த்திய செந்தில் கண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் வணக்கங்கள். தான் மட்டும் தொழில் அதிபராக இருந்தால் போதாது வரும் தலைமுறையும் திறம் கொண்டு வளரவேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றுபவர் என்னவருடைய முதல் சிறப்பு விரிவுரையை துவங்கி வைத்தில் பெருமை கொள்கின்றேன்.



என்னவர் செல்வபாபா 27 வருடம் முன்பு நடமாடின, மகிழ்ந்த கல்லூரி வளாகத்தில், என்னவரின் மாணவப்பருவத்தில் செலவழித்த துறையின் வளாகத்தில் அவருக்கு பிடித்த அவர் ஆசிரியர்களுடன் கல்லூரி ஆலயம் அருகாமையில், நூலக சாலையில் அங்கு கண்ட ஏதோ ஒரு மரத்தடியில் அத்தான் உள்ளதாகவே உணர்ந்தேன்.

நாங்கள் நிகழ்ச்சியை முடித்து திரும்பினபோது அத்தான் போஸ்டரில் இருந்து ஒரு கணம் உயிரோடு வந்து என்னை நோக்கியது போல் கண்டேன். என்னை உருவாக்கினர் என்னை மேற்கல்விக்கு அனுப்பி கல்லூரி ஆசிரியையாக  உயர்த்தினவருக்கு கல்வியின் ஊடாகவே என் நன்றியை செலுத்தி விட்டேன் என்ற திருப்தியுடன் திரும்பினேன்.

என் வேண்டுகோளுக்கு இணைங்க நிகழ்ச்சியை படம் பிடித்து தந்த என் மாணவர்கள் ஜெனா , வல்லிகண்ணன் மற்றும் ராஜாவுக்கு என் நன்றிகள் மகிழ்ச்சிகள்.







11 Jun 2017

Teachers make difference – ஆசிரியர்கள் உருவாக்கும் மாற்றங்கள்.



Teachers make difference என்ற தலைப்பில் ஜூன் 3, 4  இரண்டு நாட்கள் நடந்த கருத்தரங்கில் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றேன்.  நிகழ்ச்சி ஒருங்குணைப்பாளர் நண்பர் பால முருகன் அவர்கள் வாயிலாக அறிந்து, பங்கு கொண்ட நிகழ்வாகும்.

 தூத்துக்குடி றோட்டறி கிளப்பு மற்றும் விவேகானந்தா  தொண்டு நிறுவனத்தின்  தலைமையில் நடந்த பட்டறையாகும். கோயம்பத்தூரை சேர்ந்த குழந்தை மேம்பாட்டு வல்லுனரான திருமதி பி. ஜெயஸ்ரீ   பயிற்சி பட்டறையை நடத்தினார்கள்.

வீட்டிலிருக்கும் மகன்களுக்கு பழ ரசம், சாப்பாடு என தயார்ப்படுத்தி வைப்பதற்குள்; காலை 7 மணிக்கு எங்கள் வீட்டு அருகாமையில் வரும் பேருந்தை பிடிக்க இயலாது போய் விட்டது.  ஒரு பர்லாங்கு நடந்து சென்றுஅடுத்த பேருந்தை பிடித்து புது பேருந்து நிலையம் வந்து  சேர்ந்து தூத்துக்குடி பேருந்தில் இருக்கையை பிடித்து விட்டேன்.  தூத்துக்குடியில் இருந்து இன்னும் சில மைல்கள் பயணித்தால் அன்னம்மாள் கல்லூரி வந்து அடையலாம்அதன் எதிர்புறத்தில் விவேகானந்தா தொண்டு நிறுவனம் செயலாற்றுகின்றது. தூத்துக்குடியின் எந்த நெரிசலும், அலம்பும் இல்லாது அமைதியான பகுதியில் அமைந்து இருந்து  ஆசிரமம் .  நான் செல்லும் போது நிகழ்ச்சி ஆரம்ப நிகழ்வு நடந்து கொண்டிருந்து. நிகழ்ச்சியின் நோக்கம் கல்வி மாற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு பற்றி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் கருத்தை முன் வைத்து பேசினர். காமராஜ் கல்லூரி தலைவர் பட்டறையை துவங்கி வைத்தார்.


அடுத்து பயில வந்த நாங்கள் அனைவரும் எங்களை அறிமுகப்படுத்தி கொண்டோம்.  மழலை பள்ளி ஆசிரியர்கள் துவங்கி கல்லூரி பேராசிரியர்கள் வரை  பட்டறையில் பங்கு பெற்றோம் என்பதே சிறப்பம்சம் ஆகும். சொந்தமாக டூயூஷன் நடத்தும்   கல்லூரி மாணவர்கள் இருவரும்  பங்கு கொண்டனர். மாணவர்களின் பார்வையில் கல்வி சூழல் பற்றி தங்கள் ஆணித்தரமான கருத்தை ஒவ்வொரு நிலையிலும் எடுத்துரைத்தனர். பொறியியல் பட்டதாரியான,  போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் நிறுவனம் நடத்தும் ஆசிரியரும் பங்கு பெற்றார். இவர் தன்னை அறிமுகப்படுத்தும் வேளையில் தமிழக  கல்வி தரத்தை பற்றியும் கல்வி திட்டத்தை பற்றி பல விமர்சங்கள் அடுக்கினார்.  அரசு அலுவலகத்தில் இருந்து மனிதவளத்துறையை சேர்ந்தவரும் பங்கு பெற்றார்.  உயர் பள்ளி வகுப்பு ஆசிரியரும் பங்கு பெற்றார். கல்வியல் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பங்கு பெற்றனர்.


அரசு கல்வி , மத்திய , தேசியபல வகையான கல்வித்  திட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும், எந்த கல்வி திட்டத்தில் படித்தாலும் எல்லா மாணவர்களும் மேற்கல்விக்கு வந்து சேரும் பல்கலைகழக திட் டத்தின் கீழ் இயங்கும்  கல்லூரி பேராசியர்கள்  என எல்லோரும் ஒரே இடத்தில் ஒருமித்து மாணவர்களை நாட்டின் வளமாக மாற்ற வேண்டிய தேவையும் அதில் ஆசிரியர்கள் பங்கைப்பற்றி விவாதித்தோம் .

 கருத்தாக்க விவாதம்., அதன்  பலன் எவ்வாறாக இருக்க வேண்டும் என்பதை வெறும் சொற்பொழிவு பேருரை என்று இல்லாது விளையாட்டு, குறும் கேள்வி , குறிப்பிட்ட நிகழ்வை சிறு குழுவாக விவாதித்து முடிவிற்கு வருவது என ஒரு நாள் பட்டறை சிறப்புற  நடந்து முடிந்தது.

எனக்கு ஒரு நாள் பங்கு பெறும் நோக்கமே இருந்தது. அதனால் ஜெயஸ்ரீ மேடம், ஒருங்கிணைப்பாளர் பாலா சாரிடம் நாளை வர இயலாதுஎன்று அனுமதி பெற்று விடை பெற்றேன். நீங்கள் நாளையும் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் எனக்கூறி விடை தந்தனர்.


வீடு  இரவு 9 மணி வந்து சேர்ந்தேன். சோர்வு ஒரு புறம். அடுத்த நாள் காலை 5 மணிக்கே விழிப்பு தட்டியது. இன்றைய வகுப்பை இழந்தால் நேற்றைய வகுப்பின் அர்த்தம் அற்று போகும் என வேலையை விரைவாக முடித்து வைத்து பேருந்தை பிடித்து பயிற்சி இடம் வந்து சேர்ந்தேன்.

ஒரே கேள்வியை வைத்து குழுவாக கருத்து உருவாக்கம், ஒரே பிரச்சினைக்கு  தனி நபர்களின் அனுபவம் சார்ந்த சிந்தனை, விளக்கம் மற்றும் தேர்வு, கல்வி என்பதை எந்த நோக்கத்தில் மாணவர்களை அணுக வேண்டும். படிப்பித்தல் என்பதையும் கடந்து மாணவர்களை நாட்டின் வளமாக உருவாக்குவது, வகுப்பறைகள் என்பது தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து  படித்தல், தெரிதல், புரிதல், ஆராய்தல், என்ற நிலைக்கு கொண்டு செல்லுதல், மாணவர்கள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக வரும் சூழலை உருவாக்குதல், ஆசிரியர்களும் மகிழ்சியாக வருதல் என பல நிலைகளில் கல்வி சூழலை பற்றி ஆராய்ந்து கலந்து ஆலோசித்தோம்.


சோர்வு தட்டும் போது குழு விவாதம், குழு விவாதம் நிறைவடையும் போது விளையாட்டுகள் என இரண்டு நாள் பயிற்சி பட்டைறை மிகவும் நிறைவாக; விருவிருப்பாக உபயோகமாக இருந்ததுஆசிரியர்கள் என்ற தோரணையை, நிலையை மறந்து மாணவர்களை போல்  மீன் குளம், கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் நாங்கள் விளையாடினது, மாணவர்களை சோர்வில்லாது எவ்வாறு  வழி நடத்தலாம் என போதித்தது. ஸ்மார்டு பலகை, சாக்கு பீஸ் பலகை, உரையாடும் கற்பித்தலையும் கடந்து அட்டைகள் வழியாக அர்த்தங்களை விளக்கும் சூழல் இன்னும் சுவாரசியமாக இருந்தது

   
மாணவர்கள் கல்வி கற்பதில் பெற்றோரின் பேராசை, பெற்றோரின் பேராசையை காசாக்க துடிக்கும் தனியார் கல்வி சூழல், பொறுப்பற்ற அரசு பள்ளி சூழல் இதன் மத்தியில்  கற்றல் ஆசையை மாணவர்கள் பக்கம் எட்ட வைக்க ஆசிரியர்களின் பங்கு அளவிட இயலாதது. 2 வயது ஆகும் முன்னே பள்ளியில் சேர்க்கும் பெற்றோர், மூன்று வயது ஆகும் முன் தன் பிள்ளை எழுத வேண்டும் என அடம் பிடிக்கும் பெற்றோர், பல பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவ சமுதாயத்தை கற்பதில்  ஆக்க பூர்வமாக நகர்த்துவோம் என உறுதி பூண்டு கல்வி சூழலை அச்சத்திற்கு உள்ளாக்கும் தனியார் கல்வித்துறை, அரசின் லாபநோக்கான கல்வி நயங்கள், மாணவர்களின் உள-மன நலனில் அக்கறை இல்லாது முன் செல்ல கல்லூரி எட்டும் மாணவர்கள் கல்வியோடு மட்டுமல்ல கல்வி சூழல் கல்வியாளர்கள் மேல் வெறுப்பு கொண்டு இருக்கின்றனர் என எல்லா பரிமாணங்களை பற்றியும் விவாதித்தோம்

கல்லூரி விடுமுறை நாட்களில் ஒரு பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றதும் எங்கள் மாணவர்களை வழி  நடத்த இந்த பட்டறை வழியாக நாங்கள் பெற்ற ஊக்கவும்  உற்சாகவும்    மிகவும் பெரிது.

சிறந்த ஆசிரியையாக மதிப்பிற்குரிய திவ்யா டீச்சரும் சிறந்த ஆண்பால் ஆசிரியாராக ராஜாவும் தேர்வாகி   பரிசு பெற்றனர். நிகழ்வை பற்றிய எங்கள் கருத்தை ஆசிரியர்களை பிரதினித்துவப்படுத்தி நான் நன்றியையும் வாழ்த்துதலையும் எங்கள் கருத்தையும் தெரிவித்தோம். அதே போல் காமராஜ் கல்லூரி கார்ப்பரேட் துறைத் தலைவரும் பயிற்சி பட்டறையை பற்றிய நல்ல செய்திகளை பகிர்ந்தார்.

அறிமுகமே இல்லாது ஒருமித்த  நாங்கள் 23 பேரும் பட்டறை முடியும் தருவாயில் நட்பில் இணைந்து இருந்தோம். நிகழ்ச்சி முடிவில் சாற்றிதழுடன் சில புத்தகங்களும் பரிசாக பெற்று விடை பெற்றோம்.

பட்டறையை நடத்திய ஜெயஸ்ரீ அவர்களின்  கல்வி மற்றும் குழந்தைகள் மனநலம் பற்றிய பல கருத்துக்களை பகிர்ந்தார். ஒரு பட்டறையை சிறிதும் சோர்வற்று மிகவும் ஆக்கபூர்வமாக நடத்தி சென்ற அவருடைய திறமை அளபரியாதுஒரு கருத்தை மிகவும் நுட்மாக ஒவ்வொருவர் மனதிலும் பதிய வைத்த ஜெயஸ்ரீ அவர்கள் பாராட்டுதலுக்குரியவர். அவருடைய கருத்தாக்கங்கள் கல்வி நலனுடன் சமூக அக்கறையும் பொதிந்து இருந்தது. 

இந்த பட்டறையில்  அரசு ஆசிரியர்கள் பங்கு பெறாதது கவனிக்கப்பட வேண்டியது. மிகவும் குறைவான ஊதியம் பெற்று மிகவும் கடினமான வேலைப்பழுவுடன் இயங்குபவர்களே தனியார் கல்விக்கூட  ஆசிரியர்கள். வேலை ஸ்திரதையும்  மிகவும் குறைவு. இருப்பினும் தங்கள் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற உந்துதலில் தனியார் ஆசிரியர்கள் கூடி பயிற்சி பெற்ற நிகழ்வு எடுத்து சொல்லக்கூடியது.. 

15 Apr 2017

லா லா லாண்ட்- ஒரு திரைப்பார்வை


லா லா லாண்ட்” டாமியன் சாஸில் (Damien Chazelle) இயக்கத்தில், ரியான் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் . இந்த முறை 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.  இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்தப் படத்துக்கு சிறந்த நடிகை (எம்மா ஸ்டோன்), சிறந்த இயக்குர் (டாமியன் சேஸில்), சிறந்த ஒளிப்பதிவாளர் (லினஸ் சான்கிரன்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (டேவிட் வாஸ்கோ, சான்டி ரினால்ட்ஸ்), சிறந்த ஒரிஜினல் இசை (ஜஸ்டின் ஹர்விட்ஸ் - சிட்டி ஆப் ஸ்டார்ஸ்...) சிறந்த ஒரிஜினல் பாடல் (ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாஸக் மற்றும் ஜஸ்டின் பால் - லா லா லாண்ட்) ஆகிய 6 விருதுகள் கிடைத்துள்ளன.டிசம்பர் 9, 2016 வெளியான  இந்த ஹோலிவுட் படம் உள்ளூரில் 50 மிலியன் டாலரும், வெளிநாட்டு வசூலில் 85 மிலியன் டாளரும் தாண்டி விட்டது.

பல போதும் திரைப்படங்கள் அதன் கதை,    கருத்தாக்கம்  சார்ந்து  சமூக பங்களிப்பு என்ற நிலையில் நற் மதிப்பை பெறும்.  இப்படம் காட்சி அழகியல் என்ற நிலையில் மனதிற்கு இதமான அனுபவத்தைத்தரும் படமாகும்.   அதன் காட்சிகளும் இசையும் நம் மனதை விட்டு மறையாது, நம்மையும் கற்பனையான உலகில் நடனம் ஆட வைத்த படம் என்றால் மிகையாகாது. இது ஒரு இசை சார்ந்த படம் என்பதால் 15க்கும் மேற்பட்ட பாடல்கள் காதுகிற்கு இதம் என்பதுடன் கருத்துச்செறிவுள்ள வரிகள் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காட்சி அழகியல்
ஒரு மலை உச்சியின் மேல் நடனமாடும் காட்சி தொகுப்பும் அந்த நகரத்தின் விளக்குகள், நச்சத்திரங்களாக காட்சி தருவது ஒரு புது அனுபவத்தை தருகின்றது. அவர்களின் நடன உடலசைவுகள் நடனம் என்ற நிலையில் இருந்து நம்மை மறக்க செய்து கலையின் அதன் உயரிய  தன்மையை சென்றடைய  செய்கின்றது.   காதலிப்பவர்கள்   நிஜத்தில் இருந்து கனவில் பறக்க செய்யும் மனநிலையை காட்சிப் படுத்திய விதம்-  அழகியல் யுக்தி யாரையும் பிரமிக்க வைப்பது  ஆகும்.  காதலில் உச்சத்தில் மனிதனின் பாரம் குறைந்து பறவையை - புறாவைப்போல் மேல் உயர்ந்து  ஒரு நிலையை அடைவதை காட்டியிருக்கும் காட்சி அழகியது. 

நடிகர்கள் உடை நிறம், அவர்கள் வசிக்கும் வீடுகள் பயண்படுத்தும் பொருட்கள்  அனைத்துமே கலை  அழகியல் என்ற நோக்கில் படமாக்கியுள்ளது ஒரு மறக்க இயலாத உன்னத உணர்வை காண்பர்களுக்கு தருகின்றது,

ஒரு நடிகையாக வேண்டும் என்ற ஒரே ஆசையில் ஆறு வருடமாக  முயன்று தோற்று கொண்டிருக்கும்; பகுதி நேர  வேலை பார்க்கும் மியா என்ற ஒரு   இளம் பெண். எதிர்பாராத வகையில்  சாலையோர பயணத்தில்   ஒரு இளைஞனை காண்கின்றார். பாடகராக பணி செய்யும் ஒரு இரவு கிளப்பில் வேலை பறி போகும் இக்கட்டான சூழலில் நிற்கும்  அதே இளைஞரை   மறுபடியும் சந்திக்கின்றார். அந்த இளைஞனோ கோபமுற்ற நிலையில்  மியாவிடம் பேசுவதை தவிற்து கடந்து செல்கின்றார். மறுபடியும் இவர்களின்  எதிர்பாரா சந்திப்பு பல சூழலில் நிகழ்கின்றது.  

செபாஸ்டியன் என்ற இந்த இளைஞனோ அழியும் தருவாயில் இருக்கும் ”ஜாஸ்” என்ற இசையின் மேல் தீராத ஈடுபாடு கொண்டவர்.   மியா தனக்கு ஜாஸ் மேல் விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கின்றார்.  பின்பு செபாஸ்டியன்  மியாவை ஜாஸ் கலை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று அதன் சிறப்பை விளக்குகின்றார். மியாவும் ஜாசை ரசிக்க ஆரம்பிக்கின்றார். 

பொதுவாக இரு இளம் நபர்கள் என்றால் வழக்கமாக கொள்ளும்   காதல் கல்யாணம், பிரிவு என்று  இல்லாது இயல்பான இரு நபர்களின் மனித நேசம் கலந்த உறவு தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த எவ்வாறு  பயண்படுத்துகின்றனர் என்பதை விளக்கும் படமாகும் இது. 

நபர்களின் சந்திப்பு, நட்பு பின்பு காதலாக உருமாறும் போது தங்கள் விருப்பம் சார்ந்து இருவரும் சமரசமற்று நிற்கின்றனர்.   மியாவுக்கு ஒரு நடிப்பு வாய்ப்பு கிடைக்க உதவும் நோக்கில் செபாஸ்டியன் முனைவதும், செபாஸ்டியன் கனவு நிறைவு பெற மியா நம்பிக்கை தூண்டுவதுமாக கதை நகருகின்றது. 

செபாஸ்டியன் தன் நெடு நாளைய நண்பனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகின்றார். நண்பனின் இசைக்குழுவுடன் பணியாற்ற; ஒரு நிரந்தரமான வருமானம் வர ஆரம்பிக்கின்றது. செபாஸ்டியன் தனக்கு த்சொந்தமான ஒரு இசைக்குழுக்வை துவங்க வேண்டும் என்ற ஆசையை தூர தள்ளி வைத்து விட்டு மியாவுடன் வாழ்க்கையில் நிரந்தமாக இணைய தன் இசைவை தெரிவிக்கின்றார். ஆனால் மியாவோ உன் லட்சியத்தை,  உன் கனவை நீ அடைய வேண்டும். திருப்தியாகி கொள்ளாதே. என்று கூறுகின்றார். தனக்கு நடிக்க சாதகமான சூழல் அமையாததால் செபாஸ்டியனின் வேண்டுதலையும் மீறி சொந்த ஊர்  சென்று விடுகின்றார் மியா.

வாழ்க்கையில்   சந்திக்கும் எதிர் மறை நிகழ்வையும் இசைப் பக்கம் திருப்ப, செபாஸ்டியனின் இசை  உச்சத்தை நோக்கி நகர்கின்றது. மியாவுடன் ஆன முரண் அதே நிலையில் இருக்க  மியாவுக்கு ஒரு நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதை அறிகின்றார். தன் கோப தாபங்களை   ஓரம் கட்டி வைத்து மியாவிற்கு செய்தியை கொண்டு சேர்க்கின்றார். 


மியா தான் கனவு கண்டது போலவே மிகவும் பிரசித்தி பெற்ற நடிகையாக உருமாறுகின்றார். சூழலில் வசதியைக்கருதி இன்னொருவருக்கு மனைவியாகி ஒரு குழந்தைக்கும் தாய் ஆகி தன் நடிப்பில் மும்முரமாக இருக்கும் வேளையில் தன் கணவருடன் செபாஸ்டியன் இசையை கேட்கும் சூழல் உருவாகுகின்றது. இருவரும்   காதல்பிரிவு   மனநிலையில் கடும் துயர் கொண்டாலும் தங்களுக்கான வாழ்க்கைக்கு மரியாதை கொடுத்து ஒரு புன் சிரிப்புடன் விடை பெறுகின்றனர்.

இருவரும் கூடி வாழ்ந்த நேரம் டிசைன் செய்து கொடுத்த இசை அடையாளத்தை செபாஸ்டியன் பயண்படுத்துவதும் இவர்கள் காதலை நினைவுப்படுத்தும் இசையில் தற்போதும் செபாஸ்டியன் ஆழ்ந்து இருப்பதும் மியாவிற்கு  ஆச்சரியத்தையும்   மகிழ்ச்சியேயும்  ஒருங்கே தருகின்றது.

ஜாஸ் இசையை காண தன் முன்னாள் காதலி தன் கணவருடன் வரும் போது தன் காதலனுடன் இணைந்திருந்தால்  வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என எண்ணி பார்க்கும் மன ஓட்டத்தை ஒரு படத்தொகுப்பால்  ஒரு பாட்டின் ஊடாக திரை  மொழியில் காட்டியுள்ள இயக்குனரின் திறமை பாராட்டப்பட வேண்டும்.   உண்மையாக காதல் கொண்ட செபாஸ்டியன் அப்பெண்ணின் வெற்றியும் அவள் நினைத்த இடைத்தை அடைந்ததை எண்ணி பெருமை கொள்கின்றார்.   நொறுங்கி தவித்த மனம்,  ஒரு சிறு புன் சிரிப்புடன் விடை கொடுப்பது   நல் மனம் கொண்ட  ஆண் மனம் மேல் வசியம் கொள்ளவே வைக்கின்றது. 

கால ஓட்டத்தில் நினைத்தது-விரும்பினது கிடைக்காவிடிலும் கிடைத்த வாழ்க்கைக்கு உண்மையாக இருக்கும் பண்பையும் காண வேண்டியுள்ளது. இந்த படம் பார்க்கும் போது தமிழ் சினிமாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட தேவர் மகன் என்ற படத்தை ஒப்பிட்டு பார்க்காது இருக்க இயலவில்லை, ஒரு காதல் இருக்க திருமணம் முடிந்த கைய்யோடு இஞ்சி இடுப்பழகா என பாடும் காதலனும், காதலனுக்கு    வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது என அறிந்தும் வலுகட்டாயமாக முத்தமிடும் தமிழ் கதாப்பாத்திரமும் அதை சமூகம் தெரிந்து விடக்கூடாது என தன் சேலை தலைப்பால் அழிக்க முயலும் தமிழ் கலாச்சாரப்பெண்ணும் கடந்து போகின்றனர்.)

காதலி தன் இசை நிகழ்ச்சியை காணும் போது கூரையில் இருந்து ஒரு ஒளி செபாஸ்டியன் மேல் மட்டும் படுவதாகவும் மியா அந்த கூட்டத்தில் கரும் வெளியில் தனியாக காட்சிப்படுத்தியது ஊடாக வாழ்க்கை என்ற ஓட்டத்தில் சாதாரண மனிதர்கள்  காதலை   தியாகம் செய்து தங்கள் அனுபவிக்கும் பெரும் துயரை சிறு புன் சிரிப்பாக மாற்றி முன் செல்வதை காணலாம். செபாசியனாக நடித்துள்ள முதன்மை காதாபாத்திரம் உரையாடல்கள் மிகவும் குறைவே. சிறிய முகபாவனை உடல் மொழியின் ஊடாகவே தன் நிலையை தன் நிலைப்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.  ஒரு ஆணின்  அன்பின் பரிவை, காதலின் மென்மையை தன்  முக அசைவிலே வெளிப்படுத்தியிருப்பார் சிறப்பாக.

சில விமர்சங்கள்
ஜாஸ் இசை கருப்பினத்தவருடையது.  பிரதிநிதானத்தப்படுத்தும் நடிகர் ரியான் கோஸ்லிங் Ryan Gosling) வெள்ளையராக இருப்பது விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது. மேலும் இரு நபர்களில் உன்னதமான காதல் தங்களுடைய சுய தொழில் வளர்ச்சிக்கு என கண்டு கொள்ளாமல் விடப்பட்டதும் எதிர்மறையான கருத்தை உருவாக்கியுள்ளது. இரு மனிதர்கள் காதலிக்கின்றனர்,  சேர்ந்து  வாழ்கின்றனர் தங்கள் சுய முன்னேற்றம் என்ற நோக்கில் இருவரும்  விலகிப்  போனது  பலரை கேள்வி கேட்க வைத்தது. காதலை கொண்டாடிய ஒரு திரைப்படம் காதலுக்கு தகுந்த மரியாதை தரவில்லையே என்ற ஆதங்கம் பலரை இப்படம் மேல் கோபம் கொள்ள வைத்துள்ளது. சொந்த  வெற்றிக்காக  மனிதர்களின் உன்னதமான உறைவை கொச்சப்படுத்தப்பட்டுள்ளது என ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர்.  தற்கால சூழலை மனதில் கொண்டு சுய காதலை கொண்டாடும் படமே இது என்றும் விமர்சிக்கப்பட்டது.  பலரால் விமர்சிக்கப்பட்ட இப்படத்தின் முடிவு 1921 ல் வெளிவந்த ஊமைப்படம் ”ஏழாவது சொர்க்கம்” 7th Heaven ஹெலன் என்ற திரைப்படத்தை நினைவுப்படுத்தும் படி என  இயக்குனர் தெரிவித்துள்ளார் .மூலம்

பல முறை மியா செபாஸ்டனுடன் இசை நிகழ்ச்சிக்கும் சென்றாலும், செபாஸ்டியனின் இசை நிகழ்ச்சியை கேட்டு உற்சாகப்படுத்தினாலும் மியாவின் நாடகத்தை பார்க்க செபாஸ்டியனால் ஒரு முறை கூட நேரத்திற்கு வர இயலவில்லை.  


சூழலில் கைதிகள் அல்ல பெண்கள்

மியா தோழிகளுடன் ஒரு  களியாட்ட நிகழ்ச்சிக்கு  செல்கின்றார். அவரவர் தேவை சார்ந்து மதுவுடனும் ஆண்களுடனும் பெண்கள் மயங்க கதாநாயகியோ இசையின் ஓசையை தொடர்து செல்கின்றார். பெண்கள் சூழலில் கைதிகள் அல்ல தங்கள் நோக்கங்களில் தங்கள் லட்சியப்பாதையில் நடந்து செல்பவர்கள் என்ற உயரிய கருத்தும் சொல்லப்படுகின்றது. நடிகை வாய்ப்பு கேட்கும் சூழலில் ஆண்களுடன் பேசும் சூழலில் தன் பாதுகாப்பை தன் வசம் வைத்திருக்கும் பாங்கையும் ஒரு காட்சியூடாக விளக்குவார், அந்த இரவில் அழகிய சூழலில் ஒரு இளைஞனுடன் பேசி ஆடும் காட்சியில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான அழகான மெல்லிய இடைவெளியை இருவரும் உருவாக்கி வைத்து கொண்டு ஆரோக்கியமான கருத்துரையாடல் நிகழ்த்துவதை அந்த முதல் பாடலிலே காணலாம். 

இசை தான் இப்படத்தின் பலம் என்பதற்கு இணங்க சிறியதும் பெரிதுமான 15 பாடல்களின் தொகுப்பே இப்படம். 

Image result for (Damien Chazelle
இயக்குனர் டாமெய்ன் சாஸெல்லி(  director Damien Chazelle') தன்னுடைய விப்பிளாஷ் Whiplash)   என்ற திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியின் ஊக்கத்தில் ’லாலா லாண்ட்’ உருவாக்கியிருப்பார். தன்னுடைய சினிமா வாழ்க்கையும் கனவு உலகமான ஹாலிவுட் வந்தடைய தான் சந்தித்த உண்மையான சம்பவங்களும் இக்கதையின் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது. 

அனைவரும் பார்த்து ரசித்து உணரவேண்டிய படம் லா  லா லாண்ட். லட்சியமா? எப்படியும் வாழும் வாழ்க்கையா அல்லது தான் கனவு கண்ட வாழ்க்கையா என்ற கேள்விக்கு பதில் தான் லாலா லாண்ட். கதாநாயகன் ரியான் கோஸ்லிங் க்கு விருது கிடைக்கவில்லையே என மனம் வருந்தி கொண்டு தான் இருக்கின்றது.