வாழ்க்கையை
மிகவும் சுவாரசியமாக ரசித்து வாழ்ந்தவர்.
தூங்கும் நேரம் தவிர்த்து வேலை செய்து கொண்டிருக்கும் வழக்கம்
கொண்டவர். மாதம் ஐந்து
நாட்களாவது எங்களுக்காக(தன் குடும்பத்திற்காக) ஒதுக்கும் இனிமையான மனிதர். அவர் எங்களை விட்டு,
அவர் அலுவலகம்,வேலை; அவர் கனவை விட்டு, கடந்து விட்டாரா?
இன்னும் நம்ப இயலவில்லை. ஒவ்வொரு நொடியும் என்னை
வதைக்கும் அவர் நினைவுகளை ஆக்கபூர்வமான செயலாக்கத்துடன் இணைக்க வேண்டும் என்பது என்
கடமையாகி விட்டது கட்டாயமாகியது.
செல்வபாபாஇயல்பாகவே இளகிய
மனம் படைத்தவர், ஈர நெஞ்சம் கொண்டவர். என்றும்
இளமையுடன் இளைஞராக இருக்கவே விரும்பினவர். சுதந்திரமான வளர்ச்சியை
பெரிதும் விரும்பினவர். அத்தானுடன் பயணிக்கும் போது ஒரு முறை
அவருடைய துறைத்தலைவருடன் பேசினதும்
எனக்கும் அறிமுகம் செய்து தந்ததும் நினைவு இருந்தது. இருவரும்
பல்கலைகழகம்
சென்ற போது அவருடைய பேராசிரியை சிந்தியா அவர்களும் முனைவர் பட்டம் பெற வந்திருந்தார். என்னை படிக்க வைத்து பட்டம்
வாங்க வைத்திருந்ததை அறிந்தும்; தன்னுடைய மாணவரான என்னவர் தன்னுடைய
படிப்பை முழுமையாக முடிக்க அறிவுறுத்தி
கொண்டிருந்தார்.
செல்வபாபா தன் உழைப்பால் தன்முனைப்பால் வளர்ந்தவர் உயர்ந்தவர். பல வருடங்கள் மற்றவர்களுக்கு கணக்காளராகவும் தணிக்கையாளராகவும் சேவையாற்றினாலும் கடந்த ஏழு வருடமாக தன் சொந்த தொழிலில் கால் பதித்து வெற்றி கண்டவர்.
தன்னுடைய கல்லூரிக்கு செல்ல வேண்டும். தன் துறை சார்ந்த மாணவர்ளுக்கு ’டாலி’ போன்ற கணக்கு சார்ந்த கணிணி மென்பொருள் கற்று கொடுக்க வேண்டும் என்று பல முறை என்னிடம் கூறினது ஞாபகம் வந்தது. அவ்வகையில் செல்வபாபாவிற்கு மிகவும் பிடித்த, அவர் பிறந்து வளர்ந்த, வாழ்ந்த ஊரில், அத்தான் படித்த கல்லூரியுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற ஆவலில்; வருடா வருடம் வருமான வரி அல்லது தணிக்கை பாடத்தில் முதல் இடம் வரும் மாணவருக்கு ஒரு சிறு பரிசு கிடைக்கும் வண்ணம் சில ஏற்பாடுகளை செய்ய முன் வந்தேன். இந்த கல்வியாண்டு துவங்கிய, சூழலில் அத்தான் படித்த துறையை சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு சிறப்பு விரிவுரை ஏற்பாடு செய்ய மனம் கூறியது. துறைத்தலைவரிடம் என் விருப்பம் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்திருந்தேன். உடனடியாக என்னை உற்சாகப்படுத்தியதுடன் வாய்ப்பையும் வழங்கினார்.
என்னவர் செல்வபாபா
கடந்த
24 வருடம் கணக்கு தொழில் சார்ந்து இயங்கினவர். தனது பட்டப்படிப்பு முடித்த உடனே
சென்னை அடையாரில் ராகவன் என்ற ஆடிட்டரிடம் ஆடிட்டிங் பயிற்சியாளராக தன் தொழிலை துவங்கினார்.
பின்பு பெற்றோரின் வற்புறுத்தலால் ’ஆர்.பி.டி’ என்ற தேயிலை தோட்டத்தில் ஆடிட்டிங் உதவியாளராக வேலையில் சேர்ந்தார். ராணுவத்தில் இருந்து
வந்த முரளிதர மேனோன் என்ற மேலாதிகாரியின் கீழ் தன் வேலையில்
நிபுணராக வளர்ந்தார். 2000 வாக்கில் ஏற்பட்ட உலகாலாவிய சூழல் மாற்றத்தில் தாக்குப்பிடிக்கா
இயலா தேயிலைத்தோட்டம் வேலை வாய்ப்பு
சரிய தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்லில் தணிக்கையாளராக சேர்ந்தார். ஒரு நிறுவனத்தில் இருந்து தனி
பெரும் முதலாளிகள் கீழ் வேலை
செய்யும் போது பல சிக்கல்களை எதிர் கொண்டார். இருப்பினும் பத்து
வருத்திற்குள் ஜாம்பெர்ட், ராஜா ஏஜென்ஸி, போன்ற முதலாளிகளிடன் வேலை செய்துள்ளார். முதலூரை சேர்ந்த ரே அவர்களின் கானடா
நாட்டில் இயங்கும் ஒரு கணக்கு நிறுவனத்தில் வேலை கிடைத்த போது பாளையம்கோட்டையை
நோக்கி நகர்ந்தோம். பின்பு கொக்கரைக்குளம் ’சூசி
ஆட்டோ ஸோண்’ பைக் விற்பனை நிலையத்தில் புருஷோத்தமன் சாரிடம் கணக்கு மேலாளராக வேலை நோக்கினார்.
முதலாளியின் ஆதரவு அவரை ஆக்க
பூர்வமாக நகத்தியது. பின்பு நாகர்கோயிலை சேர்ந்த கல்லூரி
கணக்கு அலுவலகத்தில் சில வருடங்கள் வேலை செய்த பின் சுயமாக ’அக்கவுண்ட் சொலுஷன்’
என்ற நிறுவனத்தை துவங்கினார்.
மற்றவர்களிடம் வேலை செய்வதும் சொந்தமாக செய்வதும் என இரு நிலையை கடந்தவர். மற்றவர்களிடம் வேலை பார்ப்பதை விட தன் சுய சம்பாத்தியம் என்பதையே பெருமையாகவும் விருப்பமாகவும் கொண்டிருந்தவர். அவ்வகையில் அவர் பெயரில் நிகழும் முதல் விரைவுரை சுயதொழில் அல்லது தொழில் முகவோர் சார்ந்து இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்து, துறைத்தலைவர் ஜிஎஸ்டி பற்றி விரிவுரை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற சொல்லுக்கு இணங்க விரிவுரையாளரை வினவி கொண்டிருந்தேன்.
நண்பர் பத்திரிக்கையாளர்
பாலமுருகன் உதவியால் விவிடி & சன்ஸ் தேங்காய் எண்ணை குடும்பத்தை
சேர்ந்த ரோட்டரியன் டி. செந்தில் கண்ணன் அவர்கள் முதல் விரிவுரை
நிகழ்த்த வாய்ப்பு கிடைத்து. லயாளா கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்றவர். உலகலாவிய
வியாபாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தாரணி ஏற்றுமதி இறக்குமதி சேவை நிறுவனம் ஊடாக ஏற்றுமதி
இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். ’பாம்ஸ்’ என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். ’பாம்ஸ் பிளஸ்’ என்ற மாதந்திர பத்திரிக்கையும் நடத்தி வருகின்றார். வியாபார
நிறுவனக்களின் தலைமையும் பல விருதுகளும் பெற்றுள்ளவர். 25-நாடுகளுக்கு
மேல் பயணம் மேற்கொண்டுள்ளார். ’சிந்தனையில் உலகலாவியலாகவும் செயலில்
உள்ளூர் உணர்வுடனும் செயலாற்றுக’ என்ற நோக்கில்
தத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயலாற்றி வருபவர்
வியாபாரத்தில்
தமிழகத்தில் இரண்டாவது இடமும் தமிழகத்தில் இரண்டாவது இடவும் பெற்ற விவிடி தேங்காய்
எண்ணைய் குழுமத்தில் ஒருவரான மதிப்பிற்குரிய டி செந்தில் கண்ணன் அவர்களின் சிறப்புரை கடந்த வெள்ளி அன்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் முனைவர் பாஸ்கர் ராஜகோபால், கல்லூரி நிதி அதிகாரி முனைவர் அருள்ராஜ், முனைவர் சிந்தியா மற்றும் துறையின் அத்துனை பேராசிரியர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
பங்கு கொண்ட 250க்கிற்கும் மேற்பட்ட மாணவர்களில் யாரேனும் எதிர்காலத்தில்
தொழில் தேடுபவராக இல்லாது தொழில் முகவர்களாக/ கொடுப்பவர்களாக
உருமாற, புதிய தகவல்கள் தெரிந்து கொள்ள, சுயநம்பிக்கையில் முன்னேற செல்வபாபா
சிறப்பு விரிவுரை உதவினது என்றால் செல்வபாபா நிச்சயம் மகிழ்வார்
என நம்பிக்கை கொள்கின்றேன்.
மற்றவர்கள் வளர்ச்சியில் அத்துனை ஆர்வம் கொண்டவர், நேரம் காலம் பாராது உழைப்பை மட்டும் நம்பி சுயமாக சுதந்திரமாக வாழ விரும்பினவர். சுயஒழுக்கம் தன்னம்பிக்கைக்கு நிகரானவர். அவருடைய நினைவாக அவர் எப்போதும் விரும்பும் இளைஞர்கள் மத்தியில் அவர் ஆசைப்பட்ட பணியை தொடர வேண்டும் என்ற என் நோக்கத்தை நிறைவேற்றின அத்துனை நல் உள்ளங்களுக்கும், என் நன்றிகள். சிறப்பாக சிறப்பு விரிவுறை நிகழ்த்திய செந்தில் கண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் வணக்கங்கள். தான் மட்டும் தொழில் அதிபராக இருந்தால் போதாது வரும் தலைமுறையும் திறம் கொண்டு வளரவேண்டும் என்ற நோக்கத்தில் செயலாற்றுபவர் என்னவருடைய முதல் சிறப்பு விரிவுரையை துவங்கி வைத்ததில் பெருமை கொள்கின்றேன்.
என்னவர் செல்வபாபா 27 வருடம் முன்பு நடமாடின, மகிழ்ந்த கல்லூரி வளாகத்தில், என்னவரின் மாணவப்பருவத்தில் செலவழித்த துறையின் வளாகத்தில் அவருக்கு பிடித்த அவர் ஆசிரியர்களுடன் கல்லூரி ஆலயம் அருகாமையில், நூலக சாலையில் அங்கு கண்ட ஏதோ ஒரு மரத்தடியில் அத்தான் உள்ளதாகவே உணர்ந்தேன்.
நாங்கள் நிகழ்ச்சியை
முடித்து திரும்பினபோது அத்தான் போஸ்டரில் இருந்து ஒரு கணம் உயிரோடு வந்து என்னை நோக்கியது
போல் கண்டேன். என்னை உருவாக்கினர் என்னை மேற்கல்விக்கு அனுப்பி
கல்லூரி ஆசிரியையாக உயர்த்தினவருக்கு
கல்வியின் ஊடாகவே என் நன்றியை செலுத்தி விட்டேன் என்ற திருப்தியுடன்
திரும்பினேன்.
என் வேண்டுகோளுக்கு
இணைங்க நிகழ்ச்சியை படம் பிடித்து தந்த என் மாணவர்கள் ஜெனா , வல்லிகண்ணன் மற்றும் ராஜாவுக்கு என் நன்றிகள் மகிழ்ச்சிகள்.
0 Comments:
Post a Comment