”லா லா லாண்ட்” டாமியன் சாஸில் (Damien Chazelle) இயக்கத்தில், ரியான் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் . இந்த முறை 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்தப் படத்துக்கு சிறந்த நடிகை (எம்மா ஸ்டோன்), சிறந்த இயக்குர் (டாமியன் சேஸில்), சிறந்த ஒளிப்பதிவாளர் (லினஸ் சான்கிரன்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (டேவிட் வாஸ்கோ, சான்டி ரினால்ட்ஸ்), சிறந்த ஒரிஜினல் இசை (ஜஸ்டின் ஹர்விட்ஸ் - சிட்டி ஆப் ஸ்டார்ஸ்...) சிறந்த ஒரிஜினல் பாடல் (ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாஸக் மற்றும் ஜஸ்டின் பால் - லா லா லாண்ட்) ஆகிய 6 விருதுகள் கிடைத்துள்ளன.. டிசம்பர் 9, 2016 வெளியான இந்த ஹோலிவுட் படம் உள்ளூரில் 50 மிலியன் டாலரும், வெளிநாட்டு வசூலில் 85 மிலியன் டாளரும் தாண்டி விட்டது.
பல போதும் திரைப்படங்கள் அதன் கதை, கருத்தாக்கம் சார்ந்து சமூக பங்களிப்பு என்ற நிலையில் நற் மதிப்பை பெறும். இப்படம் காட்சி அழகியல் என்ற நிலையில் மனதிற்கு இதமான அனுபவத்தைத்தரும் படமாகும். அதன் காட்சிகளும் இசையும் நம் மனதை விட்டு மறையாது, நம்மையும் கற்பனையான உலகில் நடனம் ஆட வைத்த படம் என்றால் மிகையாகாது. இது ஒரு இசை சார்ந்த படம் என்பதால் 15க்கும் மேற்பட்ட பாடல்கள் காதுகிற்கு இதம் என்பதுடன் கருத்துச்செறிவுள்ள வரிகள் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காட்சி அழகியல்
காட்சி அழகியல்
ஒரு மலை உச்சியின் மேல் நடனமாடும் காட்சி தொகுப்பும் அந்த நகரத்தின் விளக்குகள், நச்சத்திரங்களாக காட்சி தருவது ஒரு புது அனுபவத்தை தருகின்றது. அவர்களின் நடன உடலசைவுகள் நடனம் என்ற நிலையில் இருந்து நம்மை மறக்க செய்து கலையின் அதன் உயரிய தன்மையை சென்றடைய செய்கின்றது. காதலிப்பவர்கள் நிஜத்தில் இருந்து கனவில் பறக்க செய்யும் மனநிலையை காட்சிப் படுத்திய விதம்- அழகியல் யுக்தி யாரையும் பிரமிக்க வைப்பது ஆகும். காதலில் உச்சத்தில் மனிதனின் பாரம் குறைந்து பறவையை - புறாவைப்போல் மேல் உயர்ந்து ஒரு நிலையை அடைவதை காட்டியிருக்கும் காட்சி அழகியது.
நடிகர்கள் உடை நிறம், அவர்கள் வசிக்கும் வீடுகள் பயண்படுத்தும் பொருட்கள் அனைத்துமே கலை அழகியல் என்ற நோக்கில் படமாக்கியுள்ளது ஒரு மறக்க இயலாத உன்னத உணர்வை காண்பர்களுக்கு தருகின்றது,
ஒரு நடிகையாக வேண்டும் என்ற ஒரே ஆசையில் ஆறு வருடமாக முயன்று தோற்று கொண்டிருக்கும்; பகுதி நேர வேலை பார்க்கும் மியா என்ற ஒரு இளம் பெண். எதிர்பாராத வகையில் சாலையோர பயணத்தில் ஒரு இளைஞனை காண்கின்றார். பாடகராக பணி செய்யும் ஒரு இரவு கிளப்பில் வேலை பறி போகும் இக்கட்டான சூழலில் நிற்கும் அதே இளைஞரை மறுபடியும் சந்திக்கின்றார். அந்த இளைஞனோ கோபமுற்ற நிலையில் மியாவிடம் பேசுவதை தவிற்து கடந்து செல்கின்றார். மறுபடியும் இவர்களின் எதிர்பாரா சந்திப்பு பல சூழலில் நிகழ்கின்றது.
செபாஸ்டியன் என்ற இந்த இளைஞனோ அழியும் தருவாயில் இருக்கும் ”ஜாஸ்” என்ற இசையின் மேல் தீராத ஈடுபாடு கொண்டவர். மியா தனக்கு ஜாஸ் மேல் விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கின்றார். பின்பு செபாஸ்டியன் மியாவை ஜாஸ் கலை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று அதன் சிறப்பை விளக்குகின்றார். மியாவும் ஜாசை ரசிக்க ஆரம்பிக்கின்றார்.
பொதுவாக இரு இளம் நபர்கள் என்றால் வழக்கமாக கொள்ளும் காதல் கல்யாணம், பிரிவு என்று இல்லாது இயல்பான இரு நபர்களின் மனித நேசம் கலந்த உறவு தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த எவ்வாறு பயண்படுத்துகின்றனர் என்பதை விளக்கும் படமாகும் இது.
நபர்களின் சந்திப்பு, நட்பு பின்பு காதலாக உருமாறும் போது தங்கள் விருப்பம் சார்ந்து இருவரும் சமரசமற்று நிற்கின்றனர். மியாவுக்கு ஒரு நடிப்பு வாய்ப்பு கிடைக்க உதவும் நோக்கில் செபாஸ்டியன் முனைவதும், செபாஸ்டியன் கனவு நிறைவு பெற மியா நம்பிக்கை தூண்டுவதுமாக கதை நகருகின்றது.
செபாஸ்டியன் தன் நெடு நாளைய நண்பனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகின்றார். நண்பனின் இசைக்குழுவுடன் பணியாற்ற; ஒரு நிரந்தரமான வருமானம் வர ஆரம்பிக்கின்றது. செபாஸ்டியன் தனக்கு த்சொந்தமான ஒரு இசைக்குழுக்வை துவங்க வேண்டும் என்ற ஆசையை தூர தள்ளி வைத்து விட்டு மியாவுடன் வாழ்க்கையில் நிரந்தமாக இணைய தன் இசைவை தெரிவிக்கின்றார். ஆனால் மியாவோ உன் லட்சியத்தை, உன் கனவை நீ அடைய வேண்டும். திருப்தியாகி கொள்ளாதே. என்று கூறுகின்றார். தனக்கு நடிக்க சாதகமான சூழல் அமையாததால் செபாஸ்டியனின் வேண்டுதலையும் மீறி சொந்த ஊர் சென்று விடுகின்றார் மியா.
வாழ்க்கையில் சந்திக்கும் எதிர் மறை நிகழ்வையும் இசைப் பக்கம் திருப்ப, செபாஸ்டியனின் இசை உச்சத்தை நோக்கி நகர்கின்றது. மியாவுடன் ஆன முரண் அதே நிலையில் இருக்க மியாவுக்கு ஒரு நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதை அறிகின்றார். தன் கோப தாபங்களை ஓரம் கட்டி வைத்து மியாவிற்கு செய்தியை கொண்டு சேர்க்கின்றார்.
மியா தான் கனவு கண்டது போலவே மிகவும் பிரசித்தி பெற்ற நடிகையாக உருமாறுகின்றார். சூழலில் வசதியைக்கருதி இன்னொருவருக்கு மனைவியாகி ஒரு குழந்தைக்கும் தாய் ஆகி தன் நடிப்பில் மும்முரமாக இருக்கும் வேளையில் தன் கணவருடன் செபாஸ்டியன் இசையை கேட்கும் சூழல் உருவாகுகின்றது. இருவரும் காதல்பிரிவு மனநிலையில் கடும் துயர் கொண்டாலும் தங்களுக்கான வாழ்க்கைக்கு மரியாதை கொடுத்து ஒரு புன் சிரிப்புடன் விடை பெறுகின்றனர்.
இருவரும் கூடி வாழ்ந்த நேரம் டிசைன் செய்து கொடுத்த இசை அடையாளத்தை செபாஸ்டியன் பயண்படுத்துவதும் இவர்கள் காதலை நினைவுப்படுத்தும் இசையில் தற்போதும் செபாஸ்டியன் ஆழ்ந்து இருப்பதும் மியாவிற்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியேயும் ஒருங்கே தருகின்றது.
காதலி தன் இசை நிகழ்ச்சியை காணும் போது கூரையில் இருந்து ஒரு ஒளி செபாஸ்டியன் மேல் மட்டும் படுவதாகவும் மியா அந்த கூட்டத்தில் கரும் வெளியில் தனியாக காட்சிப்படுத்தியது ஊடாக வாழ்க்கை என்ற ஓட்டத்தில் சாதாரண மனிதர்கள் காதலை தியாகம் செய்து தங்கள் அனுபவிக்கும் பெரும் துயரை சிறு புன் சிரிப்பாக மாற்றி முன் செல்வதை காணலாம். செபாசியனாக நடித்துள்ள முதன்மை காதாபாத்திரம் உரையாடல்கள் மிகவும் குறைவே. சிறிய முகபாவனை உடல் மொழியின் ஊடாகவே தன் நிலையை தன் நிலைப்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு ஆணின் அன்பின் பரிவை, காதலின் மென்மையை தன் முக அசைவிலே வெளிப்படுத்தியிருப்பார் சிறப்பாக.
ஜாஸ் இசையை காண தன் முன்னாள் காதலி தன் கணவருடன் வரும் போது தன் காதலனுடன் இணைந்திருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என எண்ணி பார்க்கும் மன ஓட்டத்தை ஒரு படத்தொகுப்பால் ஒரு பாட்டின் ஊடாக திரை மொழியில் காட்டியுள்ள இயக்குனரின் திறமை பாராட்டப்பட வேண்டும். உண்மையாக காதல் கொண்ட செபாஸ்டியன் அப்பெண்ணின் வெற்றியும் அவள் நினைத்த இடைத்தை அடைந்ததை எண்ணி பெருமை கொள்கின்றார். நொறுங்கி தவித்த மனம், ஒரு சிறு புன் சிரிப்புடன் விடை கொடுப்பது நல் மனம் கொண்ட ஆண் மனம் மேல் வசியம் கொள்ளவே வைக்கின்றது.
கால ஓட்டத்தில் நினைத்தது-விரும்பினது கிடைக்காவிடிலும் கிடைத்த வாழ்க்கைக்கு உண்மையாக இருக்கும் பண்பையும் காண வேண்டியுள்ளது. இந்த படம் பார்க்கும் போது தமிழ் சினிமாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட தேவர் மகன் என்ற படத்தை ஒப்பிட்டு பார்க்காது இருக்க இயலவில்லை, ஒரு காதல் இருக்க திருமணம் முடிந்த கைய்யோடு இஞ்சி இடுப்பழகா என பாடும் காதலனும், காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து விட்டது என அறிந்தும் வலுகட்டாயமாக முத்தமிடும் தமிழ் கதாப்பாத்திரமும் அதை சமூகம் தெரிந்து விடக்கூடாது என தன் சேலை தலைப்பால் அழிக்க முயலும் தமிழ் கலாச்சாரப்பெண்ணும் கடந்து போகின்றனர்.)
காதலி தன் இசை நிகழ்ச்சியை காணும் போது கூரையில் இருந்து ஒரு ஒளி செபாஸ்டியன் மேல் மட்டும் படுவதாகவும் மியா அந்த கூட்டத்தில் கரும் வெளியில் தனியாக காட்சிப்படுத்தியது ஊடாக வாழ்க்கை என்ற ஓட்டத்தில் சாதாரண மனிதர்கள் காதலை தியாகம் செய்து தங்கள் அனுபவிக்கும் பெரும் துயரை சிறு புன் சிரிப்பாக மாற்றி முன் செல்வதை காணலாம். செபாசியனாக நடித்துள்ள முதன்மை காதாபாத்திரம் உரையாடல்கள் மிகவும் குறைவே. சிறிய முகபாவனை உடல் மொழியின் ஊடாகவே தன் நிலையை தன் நிலைப்பாட்டை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு ஆணின் அன்பின் பரிவை, காதலின் மென்மையை தன் முக அசைவிலே வெளிப்படுத்தியிருப்பார் சிறப்பாக.
சில விமர்சங்கள்
ஜாஸ் இசை கருப்பினத்தவருடையது. பிரதிநிதானத்தப்படுத்தும் நடிகர் ரியான் கோஸ்லிங் ( Ryan Gosling) வெள்ளையராக இருப்பது விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது. மேலும் இரு நபர்களில் உன்னதமான காதல் தங்களுடைய சுய தொழில் வளர்ச்சிக்கு என கண்டு கொள்ளாமல் விடப்பட்டதும் எதிர்மறையான கருத்தை உருவாக்கியுள்ளது. இரு மனிதர்கள் காதலிக்கின்றனர், சேர்ந்து வாழ்கின்றனர் தங்கள் சுய முன்னேற்றம் என்ற நோக்கில் இருவரும் விலகிப் போனது பலரை கேள்வி கேட்க வைத்தது. காதலை கொண்டாடிய ஒரு திரைப்படம் காதலுக்கு தகுந்த மரியாதை தரவில்லையே என்ற ஆதங்கம் பலரை இப்படம் மேல் கோபம் கொள்ள வைத்துள்ளது. சொந்த வெற்றிக்காக மனிதர்களின் உன்னதமான உறைவை கொச்சப்படுத்தப்பட்டுள்ளது என ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர். தற்கால சூழலை மனதில் கொண்டு சுய காதலை கொண்டாடும் படமே இது என்றும் விமர்சிக்கப்பட்டது. பலரால் விமர்சிக்கப்பட்ட இப்படத்தின் முடிவு 1921 ல் வெளிவந்த ஊமைப்படம் ”ஏழாவது சொர்க்கம்” 7th Heaven ஹெலன் என்ற திரைப்படத்தை நினைவுப்படுத்தும் படி என இயக்குனர் தெரிவித்துள்ளார் .மூலம்
பல முறை மியா செபாஸ்டனுடன் இசை நிகழ்ச்சிக்கும் சென்றாலும், செபாஸ்டியனின் இசை நிகழ்ச்சியை கேட்டு உற்சாகப்படுத்தினாலும் மியாவின் நாடகத்தை பார்க்க செபாஸ்டியனால் ஒரு முறை கூட நேரத்திற்கு வர இயலவில்லை.
பல முறை மியா செபாஸ்டனுடன் இசை நிகழ்ச்சிக்கும் சென்றாலும், செபாஸ்டியனின் இசை நிகழ்ச்சியை கேட்டு உற்சாகப்படுத்தினாலும் மியாவின் நாடகத்தை பார்க்க செபாஸ்டியனால் ஒரு முறை கூட நேரத்திற்கு வர இயலவில்லை.
சூழலில் கைதிகள் அல்ல பெண்கள்
மியா தோழிகளுடன் ஒரு களியாட்ட நிகழ்ச்சிக்கு செல்கின்றார். அவரவர் தேவை சார்ந்து மதுவுடனும் ஆண்களுடனும் பெண்கள் மயங்க கதாநாயகியோ இசையின் ஓசையை தொடர்து செல்கின்றார். பெண்கள் சூழலில் கைதிகள் அல்ல தங்கள் நோக்கங்களில் தங்கள் லட்சியப்பாதையில் நடந்து செல்பவர்கள் என்ற உயரிய கருத்தும் சொல்லப்படுகின்றது. நடிகை வாய்ப்பு கேட்கும் சூழலில் ஆண்களுடன் பேசும் சூழலில் தன் பாதுகாப்பை தன் வசம் வைத்திருக்கும் பாங்கையும் ஒரு காட்சியூடாக விளக்குவார், அந்த இரவில் அழகிய சூழலில் ஒரு இளைஞனுடன் பேசி ஆடும் காட்சியில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான அழகான மெல்லிய இடைவெளியை இருவரும் உருவாக்கி வைத்து கொண்டு ஆரோக்கியமான கருத்துரையாடல் நிகழ்த்துவதை அந்த முதல் பாடலிலே காணலாம்.
இசை தான் இப்படத்தின் பலம் என்பதற்கு இணங்க சிறியதும் பெரிதுமான 15 பாடல்களின் தொகுப்பே இப்படம்.
இயக்குனர் டாமெய்ன் சாஸெல்லி( director Damien Chazelle') தன்னுடைய விப்பிளாஷ் ( Whiplash) என்ற திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியின் ஊக்கத்தில் ’லாலா லாண்ட்’ உருவாக்கியிருப்பார். தன்னுடைய சினிமா வாழ்க்கையும் கனவு உலகமான ஹாலிவுட் வந்தடைய தான் சந்தித்த உண்மையான சம்பவங்களும் இக்கதையின் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.
அனைவரும் பார்த்து ரசித்து உணரவேண்டிய படம் லா லா லாண்ட். லட்சியமா? எப்படியும் வாழும் வாழ்க்கையா அல்லது தான் கனவு கண்ட வாழ்க்கையா என்ற கேள்விக்கு பதில் தான் லாலா லாண்ட். கதாநாயகன் ரியான் கோஸ்லிங் க்கு விருது கிடைக்கவில்லையே என மனம் வருந்தி கொண்டு தான் இருக்கின்றது.
‘
சுவாரஸ்யம்....
ReplyDeleteComprehensive Review... Superb!!!
ReplyDeleteYes.. You are right... The hero deserves an Oscar too..
Comprehensive Review... Superb!!!
ReplyDeleteYes.. You are right.. The hero deserves an Oscar too...
ஆஸ்கார் விருதுகள் அளிக்கப்பட நிகழ்வை நியூஜெர்சியில் நேரலையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தப் படத்திற்கு விருதுகள் உண்டு என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் எதிர்பார்த்த இனங்களில் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அமெரிக்கர்களிடையே தெரிந்தது. படத்தை இன்னும் பார்க்கவில்லை. உங்கள் விளக்கமான விமர்சனம் சுவையாக உள்ளது. சென்னை திரும்புவதற்குள் படத்தைப் பார்த்துவிடவேண்டும்.
ReplyDelete-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து