10 Aug 2012

அம்மா என்ற தோழி!


ஒரு வங்கி வாசலில்  நின்று கொண்டிருந்தேன்.அங்குள்ள  படிகளில் இருந்து விளையாடிக் கொண்டிருக்கும் அம்மா-மகள் கண்ணில் பட்டார்கள். அம்மாவுக்கு 27லிருந்து 35 வயதுக்குள் இருக்கும். ளோ 10 வயது குட்டி பெண்!

அம்மாவின் நான்கு விரல்களை தனது  நான்கு விரல்களுக்கு உள்ளாபின்னி கொள்கின்றாள்.  பின்பு பெருவிலை இருபக்வும் த்து கொண்டு சில வார்த்தைகளை பாட்டு போன்று உருவிடுகின்றாள். பாட்டின் முடிவில் இவள் விரல்களை விடிவிக்க முயல்கின்றாள்!  அம்மா சிறை பிடிக்க முயற்சிக்கின்றார். அம்மா முதலில் தோற்று கொண்டிருந்தாலும்  சில பொழுது சிறை பிடித்து விட்டு நான் ஜெயித்து விட்டேன் என சிரிக்கின்றார். மகள் ஜெயிக்கும் போது அம்மாவிடம் நான் ஜெயித்து விட்டேன் என்று ஆற்பரிக்கின்றாள். இப்படி விளையாட்டு போய் கொண்டிருக்கின்றது. அம்மா சிரித்து கொண்டு ஒரு குழந்தையாகவே மாறி விட்டார். அம்மாவும் குழந்தையும் தோழிளாதன் சுற்றும் முற்றும் றந்து விளையாடி கொண்டிருந்து  பார்க்கவே இன்பமாக இருந்தது.
பின்பு தன் கை முட்டால் தன் அம்மாவின் உள்ளம் கையை நீட்ட சொல்லி பலம் கொண்டு இடிக்கின்றாள். அம்மா கையை பின்னால் இழுத்து கொண்டதும் இந்த விளையாட்டில் அம்மா ஜெயித்து விடுவார் . இப்படியாக   விளையாட்டு சலிக்காது போய் கொண்டே இருந்தது. மகளின் கெக்கல் விட்ட சிரிப்புக்கும் அம்மாவின் வெட்கம் கொண்புன்முறுவல் சிரிப்பும் ரசிக்கும் படியாகவும் சிந்திக்கப் படியாகவும்  இருந்தது. இந்த விளையாட்டு ஊடாக அம்மா மகள் உறவு இன்னும் பலப்படுகின்றது. வாழ்கையில் தோல்வியும் ஜெயவும் ஒரே போல் எடுத்து கொள்ள பழக்கப்படுகின்றாள். தொடர்ந்து ஜெயிக்க போராடுகின்றாள் மகள்.

குழந்தைளுடன் குழந்தையாவிளையாடி கிழும் ங்கள் த்தை நினைவிற்க்கு வந்தார். தேயிலை தோட்டத்தில்  அதிகாரியாக இருந்த  மாமா இடும் டவுருடன்  அத்தை நரியாகவும் நாங்கள் கோழியெனவும்  விளையாடுவோம்.  மாமா வந்ததும் வீட்டில் அமைதி நிலவி விடும். அவர்கள் வசித்திருந்த வீடு எஸ்டேட் நிர்வாத்தால் கொடுக்கப்பட்டிருந்தால் லை உச்சியில்  டுகாட்டில் 7-8 அறைகள் கொண்ட விசாலமான வீடாக இருந்தது . வில் விவிமாவண்டு த்துது,  ரி ளையிடுதை கேட்லாம். அந்த வீட்டில் ஒரு பேய் அறை கூட உண்டு. பேய் போன்று முகத்தை வைத்து கொண்டு பேய் கதை சொல்வார் அத்தை.  அத்தைக்கு இண்டு கள்கள்.  ஒருவள் டித்து கொண்டே இருப்பாள் இன்னொருவள் கொறித்து கொண்டே இருபாள். ங்கள் வீடு பட்த்தில் என்தால் ரோட்டில் வண்டிகள் போகும் த்தம் மட்டுமே கேட்டு ளர்ந்த எங்ளுக்கு வித்தியாமாக இருந்து அத்தை வீடு திங்கள்கிழமை வீட்டுப் பாடம் செய்யாது பள்ளிக்கு செல்வதற்கு  அம்மாவிடம் வெளக்குமார், செருப்பு அடி வாங்கும் வரை விடுமுறை நாட்கள் கொண்டாட்ட நாட்களாக தான் இருந்தது.


இன்று நகர் புற அம்மாக்கள்  லிப்ஸ்டிக் இட்ட சிவந்த உதடுகள் , அசத்தலான மாடன் உடை அணிகலங்கள், அரைகுறை ஆங்கில பேச்சு , சிரிப்பை மறந்த முகம் என ஒரு நாடகத்னம்  அடையாளமாகி விட்ட நிலையில் தங்கள் பெற்ற குழந்தைகளிடமும் இயல்பாக இருக்க தவறுகின்றனர்.

அம்மாக்கள் அளந்து பேச குழந்தைகள் ங்கள் குழந்தைப்ருத்தை வர்கள் அவர்ளாரும் நாட்ளை இழந்து கொண்டிருக்கின்னர்.  குழந்தைகள் னி உகை புரிந்து கொள்ளாபெற்றோர்கள், குழந்தைளை தியார்க்கின்றோம் என்று னி அறைகள் அமைத்து கொடுத்து ங்ளுக்கும் ங்கள் குழந்தைளுக்குமான இடைவெளியை பெரிதாக்கி கொண்டிருக்கின்னர். இதில் டிப்றிவற்பெற்றோர்ளை விட  டித்பெரிவேலையில் இருக்கும் பெற்றோர்களாலே   குழந்தைகளின் ஆளுமை அடிபட்டு போகின்றது.  தங்களை முன் நிறுத்தி, தங்கள் பெருமை பிரஸ்தாபங்களை காட்டி, பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். பெற்றோர்-குழந்தைளுக்காருமையாருங்ளை தொலைகாட்சியும்ரித்து விடுகின்து.

பக்த்து வீட்டிலுள்சின்பெண்ணை னிக்கின்றேன். அளிடம் பேதொலைகாட்சியில் மூழ்கி இருக்கும் அம்மாவுக்கும் நேமில்லை, வள் ஆச்சிக்கும் நேமில்லை. அந்நேரம் அவள் னிப்பாரற்று தெருவில் விளையாடுகின்றாள். அளும் விடியும் முன் ஒவ்வொரு வீடாடி கொண்டிருக்கின்றாள். ளை அதே கிழ்ச்சியாநிலையில் வீட்டில் இருப்வர்ளால் வைத்து கொள்தெரிவில்லை. ங்கள் தொலைகாட்சி நேரம் முடிந்தும் ங்கள் சுத்தை றந்து அக்குழந்தையை குற்றம் சுமர்த்தி அடித்து இழுத்து செல்கின்னர்.

ரு குழந்தை தன் பள்ளி விடுமுறை நாட்ளில் சொன்னாள், வீடு போடிக்கின்து.... ஏன்? என்றேன். வீட்டில் விளையாயாருமில்லை என்றாள். ஆச்சியுடன் விளையாவேண்டிது தானே என்றேன்,
ஆச்சியால் வேமாடக்க இலாது என்றாள் ருத்துடன்.
பள்ளி அடுத்வாரம் திறக்குமே பள்ளிக்கு சென்றாள் போடிக்காது என்றேன்.
ளோ இல்லை இல்லை அங்கு டி டி என்று னக்கு லை லி ருதாசொன்னாள்.  

இன்னும் சில அம்மாக்கள் வீட்டில்  சிரியைளாமாறி அக்குழந்தைக்கு கொடுக்வேண்டினிதாபிமான அடிப்டை ரிமைளை கூறிக்கின்னர்.  என் தோழி சொல்கின்றார் அவள் 2ஆம் குப்பு ளை காலை 5 ணிக்கு எழுப்பி டிப்பிக்கிறாராம். இவு 11 ணி ரை டிப்புக்கின்றாராம். இதுவெல்லாம் என் தோழிக்கு தன் மாமியாருடன் மையல் கட்டில் வேலை செய்யாதிருக்க உலாம் பிள்ளை ளர்ச்சிக்கு உவாது. 

மித்தில் வீடுளில் ஆண் குழந்தைளுக்கு னி னிப்பும் பெண் குழந்தைளுக்கு இன்னொரு னிப்பும் உண்டு. இன்னும் சிவீடுளில் பெண் குழந்தைளுக்கு செல்லம் என்பெரில் அவர்ளின் ளுமை குணம் சாந்ர்ச்சியை பற்றி கண்டு கொள்தில்லை.  வீடுளில் ங்கள் குழந்தைளை அடுத்வர்கள் வீட்டில் நண்பர்கள் வீட்டில் ங்க அனுதிக்கின்னர்.  

பேருந்தில் கல்லூரிளில் மற்றும் ங்ளை கவனிகின்ரா என்போதையில் பெண் குழந்தைகள் டந்து கொள்கின்னர். இது வர்கள் வீட்டில் கிடைக்கானிப்புளை மூத்தில் தேடி சென்று  இன்னும் பிரச்னையில் விமட்டுமே வும்.  இன்னும் அன்பாக, தோழமையாக,  கவனமாக நம் பெண் குழந்தைகளை வளர்க்க கடமைப்பட்டுள்ளோம். அப்படி வளர்க்கப்படும் ஒரு குழந்தையால் தன் பெற்றோரை ஏமாற்றவோ இந்த உலகத்தால் ஏமாற்றப்படவோ லாது.

3 Aug 2012

மங்களூரில் கலாச்சார காவலர்கள் செய்தது சரியா, தவறா ?!

மங்கலூர் பெண்கள் தாக்கப்பட்ட  விவாதம் இணையத்தில் படு வேகமாக போய் கொண்டிருக்கின்றது. பலர் இது பெண்கள் மேல் ஏவப்பட்ட கொடுமை, உரிமை மீறல் என்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தாலும்; இன்னும் பலர் இந்த பெண்கள் தாக்கப்பட்டது சரியே என வாதிட்டனர். யாரும் அந்த 7 ஆண் பிள்ளைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை பற்றி விவாதத்திற்க்கு இன்னும் எடுத்து  கொள்ளவில்லை. பெண் சங்கங்களும் தங்கள் உரிமையை பற்றி பேசி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 7 ஆண்கள், 5 பெண்கள், 40 அதிகமான கலாச்சார காவலர்கள் உள்பட்டுள்ளனர்.  இது  திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதா என்றும் வினவ வேண்டியுள்ளது. மீடிய தங்கள் காமிரா கண்களுடன் உடனடியாக வந்து சேர்ந்து விட்டனர்.  எப்போதும் போல் உண்மை காவலர்கள்  சம்பவம் நடந்து முடிந்த பின்பே சம்பவ இடத்திற்க்கு வந்து மாணவர்களை காப்பாற்றியுள்ளனர்.

 பிறந்த நாள் விருந்து ஒரு உல்லாச பயணிகள் விடுதியில் ஏற்படுத்தியிருந்துள்ளனர். இது யாருடைய ஏற்பாடு என்றும் அறிய வேண்டியுள்ளது. சமீபத்தில் குடியிருப்பவர்கள் இது மாதிரியான கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு இந்த வீட்டை கொடுப்பதை எதிர்த்திருந்துள்ளனர். வெறும் 12 பேர் தங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு என ஒரு தனி வீடு  தேவையாக இருந்ததா? என்றும் சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது.

பிறந்த நாள் கொண்டாட வந்தவர்கள் ஏன்  கேமராவை கண்டவுடன் முகத்தை மூட வேண்டும். பிறந்த நாள் நிகழ்ச்சியில் கேக்கு வெட்டி சாப்பிடுவதற்க்கு ஏன் இந்த பயம்.  இவர்கள் பெற்றோர் அனுமதி பெற்று தானே கூடியிருப்பர்.  கொண்டாடுவதற்க்கு ஒரு வகுப்பில் இந்த 12 பேர் மட்டும் தான் இருந்தனரா  எனவும் கேட்க வேண்டியுள்ளது.

பெற்றோர் அனுமதி உண்டு எனில் ஏன் பெற்றோர் பொறுப்பற்று விடுதியில் கொண்டாட அனுமதித்தனர். பெற்றோர் மேற்பார்வையில் தங்களளுடைய ஏதாவது ஒரு   வீட்டிலே கொண்டாட அனுமதித்திருக்கலாமே. பெற்றோர் அனுமதித்தே வந்தனர் என்றால் கலாச்சார காவலர்கள் முதலில் அவர்கள் பெற்றோர்களிடம் தங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். 

 கலாச்சாரக் காவலர்கள் எவ்வளவு கேவலமாக அப்பெண்களை கையாளுகின்றனர். ஓட ஓட விரட்டுகின்றனர், தலை முடியை பிடித்து இழுக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு கன்னத்தில் அடி! மாணவனுக்கு அடி! படம் பிடிக்கும் மீடியாக்கள் கூட காப்பாற்ற முன் வரவில்லை. அவர்கள் இதை ஒளிபரப்பி தங்கள் லாபத்தை பெருக்கவே முயல்கின்றனர். முதலில் பெற்றோர், கல்லூரி நிர்வாகம் அல்லது காவத்துறையிடம் புகார் கொடுத்திருக்கலாம். இதுவெல்லாம் விடுத்து 12 இளைஞர்களை காட்டுமிராண்டித்தனத்துடன்  நடத்தியுள்ளனர்.

Deepika Padukone promotes Lafangey Parindey movie 
இவர்கள் அணிந்துள்ள உடையை பற்றி பலர் விமர்சித்திருந்தனர். தீபிகா படுகோண் மற்றும் தொலைகாட்சி, சினிமா நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிககைகளை எல்லாம் எந்த கலாச்சார பார்வையில் அனுமதிக்கின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு  இந்த வகையார் உடை வாங்கி கொடுத்தவர்கள் அவர்கள் பெற்றோர்கள் தானே? அவர்கள் அப்பா, கூடப்பிறந்த சகோதர்களும் இவர்கள் இந்த துணிமணிகளை அணிந்திருப்பதை பார்க்க தானே செய்கின்றனர். தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் ஒரு ஷாட்டுக்கு வரும் உடையை தங்கள் பெண்களுக்கு வாங்கி கொடுத்து அணிவித்து அதை கண்கூடாக பார்த்து ரசிக்கும் பெற்றோர்களை விடுத்து மாணவர்களை மட்டும் குறை கூறுவது கண்டிக்க தகுந்தது. பெண்களை சமூகம் பொருளாக பார்க்கின்றது என்பதை விட பல பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் தங்கள் நாகரீக வெறியை பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கும் உடுதுணி வழியாக  வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சமூகம் என்று மனிதம் மறந்து விற்பனை உலகமாக மாறியதோ அன்றே துவங்கி விட்டது கலாச்சார சீர் கேடுகளும். இதை கலாச்சார காவலர்களால் சீர் படுத்த இயலுமா. சட்டத்தை குழு குழுவாக கையிலெடுத்தால் போலிஸ் துறை எதற்க்கு சட்டம் பின்பு எதக்கு? இன்னும் சமூகத்தை புரிந்து கொள்ளாத வெறும் பெற்றோர்களின் ஆடம்பரத்தின் நீட்சிகளாக  குழந்தைகளிடம் தங்கள் வன்மத்தை இப்படி வெளிப்படுத்தியிருக்க வேண்டுமா என்றும் கேட்க தோன்றுகின்றது.

இந்த கலாச்சார காவலர்களால் பக்தி என்ற பெயரில் பெண்களை கற்பகிரகத்திலும் மற்றும் நிர்வாணப்படுத்தி அவர்கள் வாழ்கையை சீர்குலைப்பதை தடுக்க இயன்றுள்ளதா?

பொதுவாக இளைஞர்கள் என்றாலே   அவர்கள் எது செய்தாலும் தப்பாக  பார்க்க்கும் பெரும் சமூகம்.  அவர்கள் இதை தான் செய்வார்கள் என்று முன்கூட்டி ஒரு கற்பனையில் அவர்களை மோசமாக சித்திரிகரிக்கும் உலகமே இது. கல்லூரி மாணவர்களுக்கு தாங்கள் பெற்ற கல்விக்கு இணங்க  அறிவும் ஞானவும் பக்குவவும் கொண்டு வளர வேண்டும். கேமரா கண்களுக்கு பயந்தவர்கள் ஏன் தங்கள் மனசாட்சிக்கு பயப்படவில்லை.

அவர்கள் நோக்குவதெல்லாம் சமூகத்தில் நடக்கும் அக்கிரமம், அசிங்கங்கள். பார்லிமென்றில் நீலப்படம் நோக்கும் தலைவர், ஆசிரியர்களின் மோசமான செய்திகள், இவர்கள் மிக அருகில் இருந்து கவனிக்கும் இவர்கள் பெற்றோர்களின் பித்தலாட்ட வாழ்க்கை. இதை கண்டு வளரும் இளைஞர்களை 40 பேர் தாக்குவது அதை படம் பிடிக்கும் ஊடகம் என ரொம்ப மோசமாக போய் கொண்டிருக்கின்றது நம் சமூகம். 

ஆண் நண்பர்களுடன் வீடு எடுத்து கொண்டாடுவது தானா பெண்கள் உரிமைகள் என்ற கேள்வியும் எழாது இல்லை! பெண்கள் ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்பட முன் வரவேண்டியுள்ளது. இப்படி ஓடி ஒளிக்கும் நிலைக்கு செல்வதல்ல பெண் உரிமை!. "உண்மை நிலையே விடுதலையாகும்". பல வீரப்பெண்கள் வாழ்ந்த நாட்டில் தலையணை உதவியுடன் முகம் மறைத்து தங்களை காப்பாற்ற நினைத்த பெண்களை என்ன சொல்வது?

 தாக்கப்பட்ட ஆண்களை பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. அவர்கள் உரிமையை பற்றி யாரும் ஏன் முன் வைக்கவில்லை என  இன்ன பல கேள்விகள் எழாது இல்லை.

ஆனால் என் குழந்தைகள் பத்தரை மாற்று தங்கங்கள் அவர்களை தண்டித்த கலாச்சார காவலர்களை தண்டிக்க வேண்டும் என ஒரு பெற்றோராவது குரல் கொடுத்துள்ளனரா அல்லது காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனரே என்றும் நோக்க வேண்டியுள்ளது.



2 Aug 2012

ஆண் ஆதிக்கம் கொண்ட பெண்கள்!

How to Face Paint Lady Devil Facesநான்கு தினங்களாக  வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.  சில பல மணித்துளிகள் வங்கியில் இருக்க வேண்டிய சூழல்.  என்னருகில் இருக்கும் 70 வயதுக்கு மேலான பெரியவரை கவனித்தேன். உயர் ரக கைபேசியில் அமைதியாக இருந்து கொண்டு முகநூல் பாவித்து கொண்டிருந்தார்.

வங்கி மேலாளர் அறையை உற்று நோக்கினேன். அவர் வெகுநேரமாக ஒரு இளம் பெண் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி கொண்டே இருக்கின்றார்.   பணத்தை சேமிக்க வந்தவர்களாக தான் இருப்பார்கள். பணம் கடம் கேட்டு வருபவர்களுக்கு இந்த மரியாதையும், வசப்படுத்தல் நேரங்களும் கிடைப்பதில்லை,  தர்ம சங்கடத்துடன் வெளியேறுவது தான் தெரிந்தது. 

 மாமி தான் பணக்கூண்டுக்குள் இருகின்றார்.  94 எண் டோக்கன்  நபர் சென்று பணம் பெற்று கொண்டிருந்தார்.  என் டோக்கன் எண்  93! மறந்திருப்பாரோ என்று எண்ணி  என்  டோக்கன் எண் 93  என்றேன். அவர் மூக்கு கண்ணாடிக்கு கீழ் வழியாக நோக்கி கொண்டு டோக்கனா, என்ன? என்றார்.  கேள்வியில் கேலி, நக்கல், விக்கல் எல்லாம் தெரிகின்றது.  இருந்தாலும் காட்டி கொள்ளாது மேடம் என் டோக்கன் எண் 93 என்றேன். மின்சாரம் போய் விட்டது. பணத்தை இருட்டிலா எண்ண இயலும், மின்சாரம் வரும் வரை இருக்க வேண்டியது தானே என்று பள்ளி தலைமை ஆசிரியை மாதிரி சொன்னார். ஆகட்டும்  மின்சாரம் வரும் வரை காத்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு என் இருக்கையில் வந்திருந்த போது, என்னவர் மாமியிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். மாமி  பணத்தை சில நொடிகளில் எண்ணி கொடுத்து விட்டார். ஆணும் பெண்ணும் சமமா என்பதை மாமி படிப்பித்து தந்தார்.

மன்மோகன் சிங்கு போன்று ஒருவர் வாய் திறக்காது,  வெட்டி பேச்சு இல்லாது குனிந்த தலை நிவராது   வேலையில்   மும்முரமாக இருந்தார்.  ஐயா கணணி பயண்படுத்துவதை கண்ட போது தான் வங்கியில் வேகத்தின் காரணம் புரிந்தது. மனிதர்  ஆள் காட்டி விரலை  வைத்து அடித்து கொண்டு நத்தை வேகத்தில் இருந்தார்.

இன்னும் ஒரு நபர் தான் ஓயாது சத்தம் போட்டு பேசி கொண்டு வங்கி பணியாளரா என்று கேட்கும் வண்ணம்  அரசியல் பேச்சாளர் போல் சத்தமாக பேசிக் கொண்டே இருந்தார். 

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற வயதான  ஆசிரியை பாட்டி வந்து  9.5 வட்டி விகிததை 9 % என்று எழுதியுள்ளனர் என்றார். பாட்டியிடம் நாளை வந்து திருத்தி பெற்று செல்ல சொன்னார்கள். வீடு அருகில் இருக்கும் போல்.  பாட்டியும் குடையை  விரிக்க இப்போதே தயார் ஆகி கொண்டு புறப்பட தயார் ஆகினார். பாட்டியிடம்  செய்திபரப்பாளர் போன்று இருந்த வங்கி அதிகாரி; நாங்க கொடுத்தவுடனே பைக்குள்ள வைக்காமே திறந்து பார்த்து சரியா என்று பார்த்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் உரிமையல்லவா? தப்பாக எழுதி கொடுத்து பாட்டியை நடக்க வைப்பதற்க்கு என்ன உரிமை என்று சொல்வதாம் என்று தெரியவில்லை?

வேறொரு கூண்டுக்குள் இருந்து ஒரு பெண் அதிகாரி தமாஷ் பேச்சுடன்  இன்னொரு பணியாளருடன் செல்ல சண்டையில் இருந்தார்!  அம்மணி அப்படியே நடந்து வந்து புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் ஒரு இளம் பெண் பின்னால் நின்று கொண்டு வேலை செய்யும் விதத்தை பார்த்து கொண்டு நலம் விசாரித்து கொண்டிருந்தார். இந்த இளம் பெண் ஒரு வித பய உணர்வில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் கண்களில் அப்படியொரு மிரட்சி. பக்கத்து இருக்கையில் இருப்பவர் சொல்வதும் அவளுக்கு புரிந்தது மாதிரியும் இல்லை. சீனியர் பெண் அதிகாரியின் பேச்சில், சிரிப்பில்; எள்ளாடல், கிண்டல் எல்லாம் நிறைந்து நிற்கின்றது. அந்த இளம் பெண் தன் இருக்கையில் இருந்து தர்மசங்கடத்துடன் நெளிகின்றாள்.




இது போன்று பல பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்பதை அறிந்தேன்.  கல்வி கற்று சுதந்திரம், தனி உரிமை எல்லாம் தெரிந்து கொண்டு, இவ்விதமான ஆதிக்க மனோபாவமான ஜென்மங்களிடம் வேலை இடங்களில் மாட்டி தவிப்பது இன்று பல படித்த பெண்களுக்கு சொல்ல இயலாத பிரச்சனையே. இது போன்றவர்கள் ஆண்களாக இருந்தால் ஆண் ஆதிக்கம் என்று குரல் கொடுக்கலாம், இந்த வகை பெண்களை எப்ப்படி  சமாளிப்பது. இவர்கள் ஆசை நிறைவேற  அழுது கண்ணீர் விடுவது மட்டுமல்ல, தோள் பையை எடுத்து தன் சித்து வித்தைகளை கையிலெடுத்து கொண்டு கோள் மூட்டி திரியவும் தயங்குவது இல்லை.

பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் மூன்று வயது குழந்தையின் தாயான என் தோழியும் இதே நெருக்கத்தில் தான் வேலை செய்து வருகின்றார். காலை 8 மணி பேருந்தை பிடிப்பவர் மாலை 6 மணிக்கும் வீட்டிற்கு வரவிடாது மாலை சிறப்பு வகுப்பு நடத்தியே செல்ல வேண்டும் என கட்டளை இடுகின்றாராம் அவருடைய துறைத்தலைவியான பெண்.  ஆனால் துறைத் தலைவி முதல் பேருந்தில் வீட்டுக்கு போய் விடுவாராம்.

போலிஸ் மனைவியான இன்னொரு தோழியும்  இந்த கொடூரத்திற்க்கு விதிவிலக்கல்ல. உயர்த்தர வகுப்பு ஆசிரியையான தோழி பெறும் ஊதியம்  6 ஆயிரம் ரூபாய்.  ஆனால் பள்ளி நிர்வாகம் விதிக்கும் விதிகள், வேலையை வேண்டாம் என துறக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. 

ஒன்று சீனியராக  அல்லது அரசுத்துறையில் பணிபுரிய வேண்டும். தனியார் துறையில் வேலை செய்யும் பெண்கள் நிலை சொல்ல இயலாத துன்பம் கொண்டு பெண் மேல்- அதிகாரிகளால் காவு வாங்கப்படுகின்றது.

28 Jul 2012

நவீன பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!

பெண்கள் கல்வியறிவு பெற்று விட்டால் நாட்டில் எல்லா துன்பங்களும் துயர்களும் நீங்கியது போல் பிரசாரம் செய்யப்படுகின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் பெண்கள்  அரசியல் அதிகாரத்தில் வந்து விட்டால் நம் இந்தியா வல்லரசு ஆகி விட்டது என்றும்  கதையளக்கின்றனர். ஆனால்  அரசியலில் வந்த பெண்களால் அரசியல் என்னவானது?  ஆண் தலைவர்கள் வாய் கட்டி, வங்கி கணக்கை மட்டும் உயர்த்த ஆரம்பித்து விட்டனர். அடிமட்ட பஞ்சாயத்து தலைவிகள் கூட அடி தாதாக்களாக மாறினர்!  நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவி கூட  பெண் கையில் சென்ற போது விதிவிலக்காகவில்லை இன்னும் கேலிக்குரியது .


பெண்களுக்கு என்ற சில குணங்கள் உண்டு. அது அவர்கள் மன உளவியலும் உடல் அமைப்பும்  சார்ந்து வருவதே. அவ்வகையில் பெண்களால் விசாலமாக சிந்திக்க இயலாது. கருணை, பரிவு கொண்டவர்கள் தான் என்றாலும்  தன் குடும்பம் கடந்து தான் அடுத்த தளத்தில் வருவார்கள். அதே போல் பழகுவதில் ஆண்களை போன்று பெரும்தன்மையாக இருப்பதில்லை. வைராக்கியம், வன்மம் கொண்டு ஒரு தொடர் கலவர சூழலில் நிர்வாகத்தை கொண்டு செல்கின்றனர். தன்னை சீண்டியவர்களை காத்திருந்து அழிக்க துடிக்கும் மனம் அவர்களுடையது. ஆனால் ஆண்களால் மன்னிக்க, மறக்க இயலும் இது ஆண்கள் சிறப்பு அல்லஅவர்கள் இயல்பு, அவர்கள் மூளை அமைப்பே அப்படி தான் அமைந்துள்ளது. இப்படி எல்லாம் எழுதினால் சில பெண்கள் நினைப்பார்கள் பெண்களுக்கு எதிராக இன்னொரு பெண் எழுதுகின்றார் என்று. ஆனால் அதுவே கசக்கும் உண்மை.

ஆண் ஒரு கோடியில்  என்றால் பெண் மறு கோடியில் நிலை கொள்கின்றனர். பாஸ்ட்டிவ்-நெகட்டீவ் மின் கம்பிகள் இணைந்து  மின்சாரம் இயங்குவது போல்  இரு வெவ்வேறு துருவங்கள் சரியான வகையில் இணைந்து செயல்படுவாதல்  மனித குலம் செழிக்கின்றது.  

அதிகார மட்டத்தில் மட்டுமல்ல கல்வியறிவு பெற்ற  பெண்கள் மத்தியிலும் பெண்கள் படித்தால் எல்லாம் சுபமாகி விட்டது என்றால் அது பொய்க்கு ஒரு முகமூடி இட்டது போன்றதே. இன்று பல பொறியியல் கல்லூரிகளில் ஆண்களுக்கு நிகராக படித்து வேலைக்கு போகவுள்ளோம் என்று போட்டி போட்டு படிக்கும் பெண்களில் எத்தனை பேர் வேலைக்கு செல்கின்றனர் என்று கணக்கெடுத்தால் தெரியும், அரசு கொடுக்கும் பல ஆயிரம் ரூபாய் மானியம் விரயமாக்கப்படுகின்றது இவ்வழியாக. 



நடுத்தர வயது அம்மாக்களின் நிலை இன்னும் பரிதாபமாக செல்கின்றது.  குழந்தை எழும் முன் வேலைக்கு போய் அடைந்த பின்பு வீடு வந்து சேருகின்றனர்.  குழந்தைகள் பெற வேண்டிய உளைவியலான நெருக்கம், பாசம், அன்பு மறுக்கப்பட்டு முரடர்களாக வளர்கின்றனர். பல குழந்தைகள் குடியிருப்புகளில் பூட்டியிடப்பட்ட அறைகளில் தனிமையில் வளர்கின்றனர், விளையாடுகின்றனர், வாழ்கிகின்றனர்.அம்மாக்களும் வேலையிடங்களில் மன அழுத்ததுடன் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
பெண்கள் வேலைக்கு போவதால் நாடு- வீடு செழிக்கும் என்று மேல் போக்காக கூக்கிரலிடும் சமூகம் அடுத்த தலைமுறையின் வளமையான எதிர்காலம் பற்றி உண்மையாக சிந்திக்க தவறி விடுகின்றனர். பழைய பல வீடுகளில் பாட்டிகளாவது பேரக்குழந்தைகளுடன் சுகமாக இருந்தனர். ஆனால் இன்று பென்ஷன் வாங்கும் பல பாட்டிகள் தங்கள் தனி அறைகளில் தொலைகாட்சி பெட்டியுடன் முடங்கி விட்டனர். இவர்களால் தங்கள் நிலையை விட்டுக்கொடுக்கவும் இயலவில்லை ஒத்து போகவும் இயலாது கொடிய துன்பத்தில் வாழ்கின்றனர்.  பாசத்தை கொடுக்க நேரமில்லாது வேலை வேலை என்று ஓடி  குடும்பத்தை பணத்தால் உயர்த்தியவர்கள் இன்று மாளிகைகளில் மனித வாசமற்று தனிமையில் அல்லாடுகின்றனர்.

என் உறவினர் வீட்டுக்கு சென்ற போது எதிர்வீட்டில் ஒரு வயதான பெண்மணி மாடியில் இருந்து கொண்டு சன்னல் வழியாக வெளியே நோக்கி கொண்டு நின்று கொண்டிருந்தார்.  அவ்வீட்டு குழந்தைகள் பள்ளி விட்டு ஆட்டோவில் வந்தன, பையிலிருந்து சாவியை எடுத்து நுழைவு வாயிலை திறந்து தங்கள் வீட்டிற்க்குள் செல்கின்றனர்.  அப்பாட்டியும் பேரக்குழந்தைகளை நோக்கவில்லை அக்குழந்தைகளும் பாட்டியை தேடவில்லை.  


 இன்னொரு வீட்டில் வேலை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான வயதான பெண்மணிக்கு எக்காரணம் கொண்டும் கல்லூரி பேராசிரியையான தன் மருமகளுடன் ஒத்து போக இயலவில்லை. தன் பெட்டியும் படுக்கையும் எடுத்து கொண்டு கட்டனம் செலுத்தி வசதி வாய்ப்பாக தங்க கூடிய அனாதை ஆஸ்ரம் சென்று விட்டார். வீட்டு விசேஷங்களுக்கு மட்டுமே  பங்கெடுத்து சென்று கொண்டிருக்கின்றார். சமீபத்தில்  மருமகள் ஒரு விபத்தில் இறந்து விட சிறு பிள்ளைகள்   தங்கள் வீட்டில் அனாதர்களாக வளர்கின்றனர்.

ஆண்களுக்கு  பெண்கள் படித்து வேலைக்கு போவதால் நல்லது  என்றால் அவர்கள் நிலை பெரும் கவலைக்குறியதாக மாறிவிட்டது. காலை, நேரமே எழுந்து சமையல் செய்து வேலைக்கு கொண்டு விடுவதிலிருந்து தன் அலுவல் முடிந்து பேருந்து நிலையத்தில் காத்து  நின்று, மனைவியும் அழைத்து கொண்டு வீடு வந்து சேர்வது வரை போராட்டம் ஓயவில்லை.   நிம்மதியாக மனம் விட்டு பேசிக்கொள்ள நேரம் கிடைக்கின்றதா என்றால் இல்லை என்ற நிலையே.


இதற்க்கு மத்தியிலும் சந்தேகச் சண்டை, நானா நீயா என்ற சண்டை, பணத்தை வங்கியில் போடுவது, எடுப்பது, எடுத்து செலவழிப்பது என எல்லாம் சண்டையில் முடிகின்றது.  பிள்ளைகளும் தேவைக்கதிகமான பொருட்கள் வாங்கி பயண்படுத்தி  நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கி விடுகின்றனர்.


இளம் பெண்கள் தான் நிம்மதியாக இருக்கின்றார்கள் என்றால் படிப்பு படிப்பு என்று பட்டிணி-பசியோடு கல்லூரி படிப்பை முடிக்கும் பெண்கள்; பின்பு வேலையிலும் போதிய விடுமுறை கிடைக்காது மன-உடல் அளவில் அழுத்தத்தில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். பல அலுவலங்களில் அவர்களுக்கான சுகாதாரமான கழிவறை வசதிகள் கூட இல்லை. சமீபத்தில்   இளம் பெண்கள் ஐடிநிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்திலே  தன் தகப்பன், தாயை விட பல மடங்கு டாலராக ஊதியம் வாங்கினர். வீட்டில் வந்தால் பெற்றோர்கள் பூச்சி புழுபோல் தெரிந்தனர். கல்யாணம் முடித்த போதோ கணவர்கள் நெளியும் புழுவாக தெரிந்து வாழ்கையை தொலைத்தவர்கள் பலர். அப்பாவை அப்பா என்று அழைத்து வளர்ந்த பல மகள்கள் போ, வா நீ என்று அழைத்தும் அவ மரியாதை செலுத்தினர். 

திருமணம் பின்பு நிம்மதியாக இருந்தனரா என்றால் வேலை நிரந்தரம், உயர்வு விடுமுறை என எல்லாம் நோக்கி  வாழ்க்கையை ரசித்து வாழாது ஒரு வித அலுப்பிலே நாட்களை கடத்தி சென்றனர். ஒரு திரைப்படம் கண்டு வரக்கூட நேரம் இல்லாது அல்லாடினர். பல பெண்கள் குழந்தை பேறு கோளாறுகள், பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் அற்று பிறந்தது, என பல சவால்களை எதிர் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.  


இதுவெல்லாம் படித்த பெண்கள் கொண்ட துன்பம் என்றால் படிக்காது கூலி வேலைக்கு  சென்ற பெண்கள் கொண்ட துயர் வேறு ஒரு விதமாக இருந்தது.

அதை அடுத்த பதிவில் நோக்குவோம்.....................